Wednesday, November 30, 2016
எச்சரிக்கை
டெபிட் கார்டை வைத்து டீக்கடை டீ குடிக்கலாம் எஸ்வி சேகர்.. அதிமேதாவிதனமாக எண்ணிக்கொள்ளும் காமெடியன்..
தொலைக்காட்சியில் வந்து மோடிக்கு வக்காலத்து வாங்கும் ராமசுப்ரமணியன் போன்றோர் ஒன்றை விளக்குவது நல்லது..எஸ்விசேகரின் நண்பரும் காமெடியனுமாகிய ஓய்ஜி மகேந்திரன் குடும்பம் நடத்தும் பாரதி வித்யாலயாவிலோ அல்லது ராம்சுப்ரமணியன் நடத்தும் பள்ளியிலோ கல்விக்கட்டணத்தை வரைவோலை demand draft மூலம் வாங்குகிறார்களா என்றால் இல்லை..
எனக்கு தெரிந்து சென்னையில் SBOA பள்ளியில் மட்டும்தான் வரைவோலையில் மூலமே பணம் செலுத்த முடியும்..எனது மகன் அங்குதான் படித்தார் அதனால் அறிவேன் ஒவ்வொருமுறையும் SBT பேங்கில் டிராப்ட் எடுத்து செலுத்த வேண்டும் எல்லாம் வெளிப்படைதன்மையாக இருந்தது..
ஆனால் பத்மாவில் தனியாக எந்த கணக்கிலும் வராமல் நன்கொடையாக பெரும் தொகையை கொடுக்கவேண்டிவரும் ..எனக்கே அந்த அனுபவம் வந்தது. சிபாரிசு கடிதத்தோடு சென்றபோதும் சிபாரிசு சீட்டிற்கு தானே தவிர நன்கொடை செலுத்த வேண்டும் என கட்டாயபடுத்தினார்கள்..
இது அங்கு பிள்ளைகளை படிக்கவைக்கும் அனைவரும் அறிந்தது...
இனி பத்மா ஷேசாத்ரி பள்ளியில் கல்வி கட்டணம் வெளிப்படையாக நடக்கும் என உறுதியளிப்பார்களா இந்த தேசபக்தர்கள்..
..
இன்று அரசுஊழியர்கள் சம்பளத்தை குறிப்பிட்டளவே எடுக்கவேண்டுமென உத்தரவு வழங்கியிருக்கிறார்கள்.. எத்தனைபேர் வாடகை வீடுகளிலே இருப்பார்கள் அவர்களை காலி செய்ய சொல்லி வீட்டுஓனர்கள் வலியுறுத்துவார்கள் அவர்கள் கணக்கில் பணம் போடுகிறேன் என சொல்லி பாருங்கள் போட்டு எடுக்கமுடியாம இருக்கவா என்பார்கள்.. சிறிய தொகையை கூட எடுக்கமுடியாமல் மக்கள் அவதியுறுகிறார்கள் ..
மேல்தட்டுமக்களின் சிந்தனையை மற்றவர்கள் மீது திணிக்கும் செயலை நீண்டகாலம் பொறுத்துக்கொள்ளமாட்டார்கள்.. கேரளாவில் மூன்று வங்கி கிளைகள் மக்களே பூட்டுபோட்டுவிட்டார்கள்.. இது தொடரும் ஆபத்து..
..
பணமில்லா பரிவர்த்தனையை நோக்கி மக்களை நகர்த்துவதற்குமுன் அதற்கான ஏற்பாடுகள் செய்யபட்டிருக்கவேண்டும் கருப்புபண ஒழிப்பு என்பதெல்லாம் சும்மா ஒரு நாடகம் ஏற்கனவே கருப்பு வெள்ளையாகி தேசபக்தர்கள் கையில் சிரித்துக்கொண்டிருக்கிறது.. cashless பாசிலியை நோக்கி நகர்த்த இவர்கள் நடத்திய நாடகம் தான் கருப்புபணம் ஒழிப்பு என்பது தெரியவருகிறது.. மோடி மக்களுக்கு உரையாற்றியது கூட நேரலையில் இல்லையென்றும் அது முன்கூட்டியே பதிவு செய்யபட்டது recordred என்ற உண்மை வெளியே வந்து மோடியின் முகமூடியை கிழித்திருக்கிறது..
..
மனைவியின் பிணத்தோடு வங்கி வாசலில் பணமெடுக்க தவம் கிடக்கிறான் .. ஆனால் இவர்களுக்கு மட்டும் தடையின்றி பணம் வந்ததெப்படி என்று தெரியவில்லை .. குருமூர்த்தி நராமசுப்ரமணி, எஸ்விசேகர்,மகேந்திரன் வகையறாக்கள் மட்டும் ATM பக்கமே காணோமே..
இவர்களின் தேசபக்தி வாஜ்பாய் ரகம்..
எப்போதுவேண்டுமானாலும் மாற்றிக்கொள்ளும்/மாறிக்கொள்ளும் வகை..
இவர்கள் மிக மோசமான சந்தர்பவாதிகள் இவர்களுக்கென்கிற போது பொங்குவார்கள்.சுவாதி கொலையில் தான் பார்த்தோமே...மற்றவர்கள் பிரச்தனையெனில் தேசபக்தி என்றெல்லாம் பேசுவார்கள்..
..
#எச்சரிக்கை
..
ஆலஞ்சி மன்சூர்
Tuesday, November 29, 2016
ஸ்டாலின் தலைவராகிறார்
தற்போது அரசியலில் விலகி இருக்கிறேன்
மு.க.அழகிரி..
காலம் கடந்த ஞானமெனினும் நன்று..இன்று மற்றொரு அறிவிப்பு வருகிறது மெல்ல கசிந்து கட்சியின் அடுத்த தலைவர் ஸ்டாலின் .. முதன்மை செயலர் துரைமுருகன் ..
இரண்டுமே சரி..
கையிலுள்ள பிரம்பிற்கு வேலை கொடுக்காவிட்டால் மகன் கூட பகைவன் ஆவான் என்கிறது #பைபிள்
ஆம்.. இரண்டுமுறை கலைஞரை சந்தித்ததின் விளைவு அழகிரியின் ஞானோதயம்.. இனியேனும் ஊடகங்கள் அழகிரியை பின்தொடராதிருந்தால் போதும்..
..
முன்பே திரு.ஸ்டாலினிடம் பொறுப்பை தந்திருக்கவேண்டும் இனியும் காலம் கடத்தாமல் தலைவர் பதவிக்கு பரிந்துரை செய்யலாம் அதை தலைவர் செய்தால் அதைவிட பேறு வேறில்லை..
துரைமுருகனின் பேச்சு கலைஞரின் எண்ணவோட்டத்தை பறைசாற்றுகிறதென்றே நினைக்கிறேன் உடல் ஒத்துழைக்காததும் முதுமையும் சுழன்று பணி செய்ய இயலாமல் ஆலோசனைகளை மட்டுமே வழங்கி வழிநடத்தலாம்
..
திரு.ஸ்டாலின் தற்போது ஏறக்குறைய எல்லா பொறுப்புகளையும் சுமந்து அதைவிட உணர்ந்து செயல்படுகிறார் பக்குவப்பட்ட பேச்சும், அனைவரையும் அரவணைக்கும் செல்லும் பண்பும்,தந்தைப்போல ஓய்வில்லா உழைப்பு கொண்டிருக்கிறார்.. தமிழகம் நம்புகிற விரும்புகிற தலைவராக நிச்சயம் வலம் வருவார்.. ஸ்டாலினுக்கு இடைஞ்சல் உள்ளிருந்தே தவிர வெளியில் இல்லை இப்போது அதுவும் மெல்ல விலகுகிறது எதிர்த்துநின்று வெல்லமுடியாமல் ஒதுங்கி நின்று வேடிக்கை பார்க்கிறது.. இது அழகிரிக்கு மட்டுமல்ல
கலைஞரின் (பின்ஜாமின்கள்) வாரிசுகள் என்று வரிந்துகட்டும் எல்லோருக்கும் பொருந்தும்.. ஏனெனில் ஸ்டாலினை இயக்கமும் தொண்டர்களும் மக்களும் ஏற்றுக்கொள்ள தொடங்கிய கலைஞரின் மகன் என்பதால்மட்டும் அல்ல..தொடர்ந்து வெற்றி தோல்வி என எல்லாநேரமும் மக்களுக்காக உழைக்கிற இரண்டையும் ஒன்றாக கருதுகிற தொடர்ந்து 50 ஆண்டுகள் பொதுவாழ்வில் உழைத்த உழைப்பை மதித்து மக்கள் விரும்புகிற நிலையை அடைத்திருக்கிறார்.. மக்களின் விரும்பமில்லையென்கில் கலைஞரின் மகன் என்றாலும் உயரத்தை எட்டமுடியாதென்பதற்கு அழகிரியே போதும்.. இது #பிறருக்கும் பொருந்தும்..
..
வாருங்கள் வழிநடத்துங்கள் தளபதி அவர்களே..
#வைகறை_வெளுக்கிறது
..
ஆலஞ்சி மன்சூர்
என் மாமன் கம்பீரம்
என் மாமன்..
என் இளம்வயதில் பிரம்பிப்பாகவும் கம்பீரமாகவும் வலம் வந்தவர்.. மிடுக்குநடை நேர்த்தியான ஆடை
அதிகம் பேசாத அன்பும் கண்டிப்பும் அளவிலா பிரியமும் கொண்டவர்.. mas மாஸ் தாஜூதீன் என்றழைக்கப்பட்ட #மாமாராவுத்தர்_தாஜூதீன்
..
மிகசிறந்த ஆன்மீகவாதி.. வருடந்தோறும் ஊரில் நடக்ரகும் முஹையத்தீன் ஆண்டவர்கள் கந்தூரிவிழாவிற்கு வந்துவிடுவார்.. ஊர் நல்லது கெட்டதுகளில் கலந்துகொள்வார்.. மலேசியாவிலிருந்து திரும்பி ஊரோடு தங்கியபிறகு பள்ளிவாசல் நிர்வாக சபை செயலாளராக இருந்தார் அவர் மரணம் வரை செயலாளராகவே இருந்து கடைசி நிமிடம் வரை பொதுவாழ்வில் தூய்மையோடும் நேர்மையோடு செயலாற்றிவிட்டு சென்றுவிட்டார்..
..
நிறைய விடயங்களில் நல்லதொரு ஆலோசனைகளை வழங்கிய ஆசான்.. மனதில்பட்டதை சரியோ தவறோ ஏற்றுக்கொள்கிறார்களோ இல்லையோ தனக்கு சரியென நினைத்ததை தைரியமாக சொல்லிவிடுவார் ஒவ்வொருமுறையும் அவர் சொல்வதுதான் சரியாக இருக்கும்..
ஒருமுறை என் மூத்த சகோதரியை திட்டிவிட்டேன் சிறிதுநேரத்திற்கு மாமனை அழைத்துக்கொண்டு வீட்டுக்கே வந்துவிட்டார்.. என்னமாமு என்பதற்குள் சும்மா பார்த்திட்டு போகலாமென்று வந்தேன் இவளும் வரேன்னு சொன்னா என்றார்.. அவ்வளவுதான் எதை எப்படி செய்யவேண்டும் சொல்லவேண்டும் என்ற நெளிவு தெரிந்தவர்.. அடுத்தவர் உரிமையில் தலையிடாமல் அதேவேளை நம் தவறை நாம் உணரசெய்துவிடுவார்..
..
எதையும் அளவோடு செய்யவேண்டும்.. அதைநேரம் சரியான நேரத்தில் சரியாதை சரியான அளவில் செய்யவேண்டும்.. அடுத்தவருக்கு ஈவதை யாரும் அறியாமல் செய்யவேண்டும் .. அடுத்தவரின் சொந்தவிடயங்களில் நாம் சம்பந்கமில்லாமல் தலையிட கூடாது என்ற நெறியான ஒரு வாழ்க்கையை வாழ்ந்துகாட்டிவிட்டு போன பெரியமனிதர்.. Straightforward யாரைக்கும் முகம் நோக்கி வளைந்தில்லை..
..
என் தாயாரின் குடும்பத்தில் எல்லோருமே பூ போல போய்விடுவார்கள் என் தாயாரும் சரி என்தாயாரின் சகோதரிகள் இதோ இப்போது மாமன்.. ஒருநொடியில் யாருக்கும் சிரமம் தராமல் .. போய்விட்டார்
போய் வா மாமனே..
..
நீ..
எனது கம்பீரம்
..
#you_are_my_Majestically_magnificence…
..
ஆலஞ்சி மன்சூர்
Saturday, November 26, 2016
கணக்கில் பிழை
பிற பாடங்களில் சிறிய பிழைகள் வந்தால் மதிப்பெண்ணை குறைத்து வழங்குவார்கள் ஆனால் கணக்கு பாடத்தில் சிறிய தவறென்றால் கூட முழு மதிப்பெண்ணும் கிடைக்காது..
இந்திய ரிசர்வ் வங்கி அடித்த ₹500 ல் 9 தவறு இருக்கிறது.. என்று ரிசர்வ் வங்கியே சொல்கிறது அதுவும் அவசரத்தில் அடித்ததால் தவறுகள் நிகழ்ந்துவிட்டதாக வங்கியின் அறிக்கை சொல்கிறது..
..
எல்லாம் அள்ளிதெளித்த அவசரகோலம் எந்தயொரு திட்டமிடலும் நிறைய கருத்து பரிமாற்றம் ஆலோசனைகள்.. சம்பந்தபட்ட துறை வல்லுநர்களின் வழிகாட்டல் இதெல்லாம் இல்லாமல் யாரோ அதிமேதவியாக தன்னை காட்டிக்கொள்ள நடத்தப்பட்ட திட்டம்..
பணம் பதுக்குவோருக்கு பணத்தை நகர்த்த transit/ move மிக சுலபமாக்கிய ₹2000 நோட்டுக்கள்.. எளிமைபடுத்திய அதிபுத்திசாலித்தனம்.. பெரும் முதலாளிகளுக்கு முன்கூட்டியே தெரியபடுத்தி பலகோடிகள் கருப்பு வெள்ளையானது .. மீதியுள்ள பெரும் முதலைகள் 37% கமிஷனில் அமிர்ஷாவிடம் மாற்றியாகிவிட்டது.. பாவங்களும் நடுத்தரவர்க்கத்தினரும் கால்கடுக்க வரிசை நின்று பணமாற்றம் செய்யவேண்டும் அதுவும் சரியாக அச்சிடபடாத தவறுகளால் ஆன பணம்.. உண்மையில் இது தான் செல்லாத பணம்..
தவறுகள் நிறைந்தவைகள் எப்படி சரியாகும்..
..
cashless பாலிசியில் ஊழல் லஞ்சம் ஒழிந்துவிடுமா..
அரசு ஊழியர்கள்... காவல்அதிகாரிகள் நம்ம ஏட்டைய்யாக்கள் எல்லோரும் இனி கையூட்டை கார்டை தேய்த்தோ அல்லது மொபைல் வழியாகவோ பெறுவார்கள் என நம்புவோம்..
..
90% மக்கள் ஆதரிக்கிறார்கள் என்ற பொய் இப்போது பேச ஆரம்பித்திருக்கிறது.
மக்கள் கோவம் நீறுபூத்திருக்கிறது..என்பதைதான் பாஜக எம்பியை தாக்கியதை காட்டுகிறது.. இது மக்கள் விட்ட எச்சரிக்கை இதுசரியான முறையல்ல என்றாலும் எவ்வளவுதான் சகித்துக்.கொள்வான் .பொதுஜனம்....கஷ்டத்தை பொறுத்துக்கொண்டவனை ஆதரிக்கிறான் என்றதும் கோவம் கொண்டான்
..
அறிவிலா செயலால் அவதியுறும் குடிமக்கள்..
..
ஆலஞ்சி மன்சூர்
Friday, November 25, 2016
விவரங்கெட்ட..
நேற்றைய தினம் திரு.மன்மோகன்சிங் நாடாளுமன்ற உரையை தொடர்ந்து நாடெங்கும் மக்களிடம் மாற்றம் வர தொடங்கியிருக்கிறது..
முன்பு சரியென்று பேசியவர்கள் இப்போது தவறான செயலாக்கம் என பேச தொடங்கியிருக்கிறார்கள்..
இந்நிலையில் ஜெட்லி 2ஜி ஊழல் இல்லையா என கேட்டு திசை திருப்பபார்க்கிறார்..
முதலில் ஒன்றை தெளிவுபடுத்தவேண்டும் ஜெட்லி இப்போது அதிகாரத்தில் இருக்கிற நீங்கள் ஏன் வழக்கை விரைந்து முடிக்காமல் வாய்தா வாங்கிக்கொண்டே இருக்கிறீர்.. சிபிஐ தொடர்ந்து காலஅவகாசம் கேட்கிறதே தவிர குற்றம் சாட்டபட்டவர்கள் தைரியமாக வழக்கை சந்திக்கிறார்கள்.. தாங்கள் நிதியமைச்சராக பொறுப்பேற்றவுடன் சிஏஜி அறிக்கையை அரசியலாக்கவேண்டாம் அது ஊழலல்ல இழப்பு என்று பாராளுமன்றத்திலேயே சொன்னீர்கள் ஆனால் அதே இழப்பை 2ஜியில் ஊழல் என்கிறீர்..
ஊழல் என்றே வைத்துக்கொள்வோம் ஏன் சரியான ஆதாரத்தை நீதிமன்றத்தில் சமர்பிக்கமுடியவில்லை.. சமீபத்திய தங்களின் பேச்சு..
குண்டியை கழுவ சொன்னா அவன் குண்டியில ஒட்டியிருக்கு அதை கழுவசொல்லுங்கற மாதிரியிருக்கு..
..
நாடாளுமன்றத்தில் மோடி ஏன் பேசவேண்டுமென சிலர் பேசுகிறார்கள் மன்மோகன் பேசினாரா என துணை கேள்வி வேறு .. அப்போது சம்பந்தப்பட்ட அமைச்சர் நாடாளுமன்றத்தில் விளக்கம் அளித்தார் பிரதமர் செய்தியாளர்களை சந்தித்து ஒன்றரை மணிநேரம் பேட்டியளித்தார்.. நிதியமைச்சர் இறுதியில் பிரதமரும் விளக்கம் அளித்தார்.. மக்களை ஏற்றுக்கொள்ளாத போது ராசா பதவியை ராஜினாமா செய்துவிட்டு வழக்கை சந்தித்தார்..
எந்தயொரு பாஜக அமைச்சரும் ஏன் ஜெயலலிதா கூட குற்றசாட்டிற்கு ஆளானபிறகு பதவியை ராஜினாமா செய்துவிட்டு வழக்கை எதிர்க்கொள்ளவில்லை இதற்கு பின்னால் இருக்கிற ஜாதிய அரசியல் தெரியாமல் இல்லை..
..
கருப்புபணம் ஒழிப்பு என்ற பெயரில் இருக்கிற பணத்தையும் பிடிங்கிக்கொண்டு ஓட்டாண்டியா நிற்கவைத்துவிட்டு சமாதானம் சொல்கிறீர்.. அதுவும் சம்பந்தமே இல்லாத மொழியில்.. புண் புறையோடிபோயிருக்கிறது அதற்கு கீறி சீழ் அகற்றி மருந்திட வேண்டுமே தவிர விரலை அகற்றகூடாது..
வீக்கத்திற்கு விரலை வெட்டின கதையாயிருக்கு #விவரங்கெட்டவன்..
..
நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்கவேண்டும் இதன் பின்னில் உண்மையான அக்கறையிருக்கிறதா அல்லது அதானி அம்பானி.. பியானிகளின் கையிருக்கிறதா என்று... மக்கள் மாளாதுயரில்..அவதியில்
..
#சீரழவில்..
..
ஆலஞ்சி மன்சூர்
Thursday, November 24, 2016
Dr மன்மோகன் சிங்... ஆணியடித்தார்
சிறந்த பொருளைதார மேதைகள் நிறைந்த நாட்டில்
நாம் அரைகுறையோடு அலைகிறோம்..
தெளிவின்மை மதம் சொல்லி மயக்கும் வித்தையறிந்ததால் நாமெல்லாம் குரங்காட்டியின் கையில் சிக்கிய குரங்கானோம்....
உலகமே பொருளாதார வீழ்ச்சி கண்டபோதும் நாம் மட்டும் நிலையானதொரு பணவீக்கத்தில் இருந்தோம். மேதையின் திட்டமிடல் சரியான கணிப்பும் நம்மை நம் பொருளாதாரத்தை வீழ்ந்துவிடாமல் காத்துநின்றது..
காசாப்புகடைக்காரனை நம்பிய ஆடுகள் போல நாம்
தெருவில் பனியில் கடும் குளிரில் ஏடிஎம் முன் உறங்கி கிடக்கிறோம்..
..
சிறு வணிகர்களை நசுக்கினால் மிகப்பெரிய சரிவைதான் தருமென்று திரு.எம்.எம்.எஸ் (மன்மோகன்சிங்) அவர்கள் நாடாளுமன்றத்திலே ஆணியடித்தார்..உண்மை. உலகளாவிய அளவில் வீழ்ச்சி கண்டபோதும் நாம் மட்டும் நிலையாக நின்றதன் பின்னணியில் கிராமபுற வியாபாரமே இருந்தது காய்கறிக்கடை மளிகைக்கடை சிறு தட்டுவியாபாரிகளிடம் பொருள்வாங்கும் சாமானியனால் தாக்குபிடிக்க முடிந்ததால் பொருளாதார சரிவை/வீழ்ச்சியை 69% தடுத்த நிறுத்த முடிந்ததாக அப்போதே திரு.மன்மோகன்சிங் சொன்னார்..
அந்த கிராமபுற வியாபாரத்தை தான் சிலரின் நன்மைக்காக ஒழித்துக்கட்டும் நடவடிக்கையில் இறங்கியிருக்கிறார்..
..
சரியாக திட்டமிடாததும் நீண்டகாலத்திற்கு பின் பலன்தருமென்பதும் நிஜமல்ல என பொருளாதார வல்லுநர் நீண்டகால அனுபவம் கொண்டவர் நாடாளுமன்றத்திற்குவந்து தன் உடல்நிலை முடியாதபோதும் மிக சிறந்த அறிவுரையை வழங்கியிருக்கிறார். திட்டமிட்ட கொள்ளை சட்டபூர்வ திருட்டு நிர்வாக தோல்வி..என்று நாட்டின் பொருளாதாரத்தை படுகுழியில் தள்ளும் என உண்மையை நாகரீகமாக சொல்லிவிட்டு போயிருக்கிறார்..
..
திரு.மோடி அவர்களே சகதியில் கால்வைத்துவிட்டீர்.. தவறென்று தெரிந்தும் சகதியோடே அலைவேன் என பிடிவாதம் பிடித்தால் நாற்றமெடுத்துபோகும்.
..
நாட்டுமக்கள் தவறை உணர தொடங்கிவிட்டார்கள்..
மம்தா சொன்னதைப்போல Honest ஆக இருந்தால் ராஜினாமா செய்துவிட்டு தேர்தலை சந்கிக்கட்டும் மக்கள் கோவம் அப்போது தெரியும் Photoshop ல ஆட்சியை பிடித்தவர்களுக்கு பொருளாதாரத்தை பற்றி என்ன தெரியும்..
Thank you Dr.Manmohan Singh ....shab
..
#Modi_Go_back…
..
ஆலஞ்சி மன்சூர்
Wednesday, November 23, 2016
நடிகர்கள்...
₹500₹1000 திரும்ப பெற்றதற்கு ஆதரவாக திரையுலகினர்.. ஆச்சர்யமாக இருக்கிறது..
அதிகம் கருப்பு பணம் புழங்குகிற இடமாக சினிமா இருப்பதை அனைவரும் அறிவர்..காரணம் சினிமாவை தொழிலாக அங்கீகரிக்காமல் கேளிக்கையாகவே அரசு வைத்திருப்பதால் அது சார்ந்த பிற தொழில்களில் எவ்வளவு முதலீடு செய்யபடுகிறதென்றே தெரியாது.. நடிகர்களின் சம்பளம் எவ்வளவு என்ற வெளிப்படையாக யாரும் சொல்வது கிடையாது முன்பு மார்ட்ன் தியேட்டர்ஸ் காலத்தில் நடிகர்களுக்கு தொழில்நுட்பவல்லுநர்களுக்கு அப்போது எக்ஸ்ட்ரா என்றழைக்கப்பட்டு இப்போது ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் போன்றவர்களுக்கு மாத சம்பளம் அல்லது தினக்கூலியை வரையறுத்து அதை பத்திரத்தில் எழுதி கையெழுத்து வாங்கும் அதாவது ஒப்பந்த பத்திரம் வழக்கம் இருந்தது.. எம்ஜிஆர் கூட மந்திரிக்குமாரிக்கு மாதம் ₹150 சம்பளத்தில் ஆறுமாதம் நடிக்கவேண்டும் என்ற ஒப்பந்தம் செய்யப்பட்டார்.. அந்தபடத்தில் தாவகட்டையில் பள்ளம் இருப்பதால் மார்டன் முதலாளி சுந்தரம் அவர்கள் எம்ஜிஆரை அந்த வேடத்திற்கு நிராகரித்தார் கதைவசனம் எழுதிய கலைஞர்தான் சிறிதாக தாடி ஒட்டிக்கொள்ளலாம் எனச்சொல்லி முதலாளியை வற்புறுத்தி சேர்த்துவிட்டார் இதை எம்ஜிஆரே அன்றைக்கு கருணாநிதி மட்டும் பிடிவாதம் செய்யவில்லையென்று சொன்னால் நான் திரையுலகிற்கே வந்திருக்கமுடியாது என்றுசொன்னார்....
..
விசயத்திற்கு வருவோம்..
முறையான வரையறுக்கப்பட்ட வருவாய் இல்லை ஆனாலும் பெறுகிற சம்பளத்தை சரியாக கணக்கில் கொண்டுவருவதில்லையென்பதுதான்நிஜம்..
தமிழில் பேர்வைத்தால் வரிவிலக்கு என்ற ஒன்றைவைத்துக்கொண்டு இவர்கள் நடத்தும் வரிஏய்ப்பு எவ்வளவு தெரியுமா.. ₹60 அச்சிட்ட சினிமா டிக்கெட்டை முதல்நாளுக்கு ₹300 ₹400 என்று விற்கிறார்கள் இதையெல்லாம் யாரும் எந்த அரசும் கண்டுக்கொள்வதில்லை.. கேளிக்கைவரிதான் ரத்தே தவிர சினிமா தயாரிப்பாளர் வரும் வரிமானத்திற்கு வருமானவரி செலுத்தவேண்டும்.எல்லோரும் நஷ்ட கணக்கைாதான் காட்டுகிறார்கள்.. அல்லது குறைவாகதான் காட்டுகிறார்கள்..
ஏனெனில் ஒழுங்காக தொழில்முறையில் பணபரிவர்த்தனை நடப்பதில்லை.. அதனால் எவ்வளவு வசூல் என்றெல்லாம் வருமானவரித்துறையால் கணக்கிட முடியாது
சினிமா டிக்கட்டில் அச்சிடப்பட்ட ரூபாய்க்கு மட்டுமே
வரிசெலுத்தபடும். .. சினிமா சினிமா தியேட்டர்களில் சம்பந்தமே இல்லாமல் கள்ள டிக்கெட் கூட அச்சிடுகிறார்கள்.. கருப்பு பண நடமாட்டம் அதிகம் நடக்கும் துறையை சார்ந்தவர்கள் ஏதோ தங்களை தூய்மையானவர்களாக காட்டிக்கொள்ள போடும் வேடம் இது..
..
திரு.ரஜினி தொடங்கி மோகன்லால் வரை...ஒழுங்காக வரிகட்டுகிறவர்கள் என்று நம்புவோம் முறையாக எல்லா வருமானத்திற்குமா என்றால் இல்லை.. இவர்களின் சம்பளம் என்னவென்று இவர்களுக்கே தெரியாது பாவம்..
பாஜக காரர்கள் மோடிக்கு மல்லுகட்டுவதை கூட ஏற்றுக்கொள்ளலாம் காரணம் அது அரசியல்.. ஆனால் இந்த சினிமாகாரர்கள் முட்டுக்கொடுக்கிறார்கள் பாருங்கள் அதுதான் படுகேவலமாக இருக்கிறது..
நடிகர்களே...
#நடியுங்கள்_திரையில்மட்டும்...
..
ஆலஞ்சி மன்சூர்
Subscribe to:
Posts (Atom)