Wednesday, August 31, 2016
அடிமைகளின் தர்பார்
கொலைகொள்ளைகள் மற்றமாநிலத்தைவிட குறைவாக இருப்பதாக தந்திடிவி ..
..
எந்த அளவுகோல் என்றால் வடமாநிலங்கள் குறிப்பாக உபி,பீகார், மத்திய பிரதேசம்... இந்தமாநிலங்களில் இன்னமும் சாதீய வெறியும் குறிப்பாக தாழ்த்தப்பட்டமக்கள் எந்த நிலையில் வைக்கப்பட்டிருக்கிறார்கள் மாநிலங்களின் மக்கள் தொகையென்ன என கணக்கிட்டு பார்த்தால் மிக மோசமான மாநிலமாகதான் தமிழகம் இருக்கிறது இவர்கள் கணக்கில் கேரளா,கர்நாடக ஆந்திராவைவிட தமிழகம் மிக மோசமாக இருப்பதை மறைக்கமுயல்கிறார்கள்..
ஊடகங்கங்களின் தார்மீக பொறுப்பே அரசின் அராஜக அலட்சிய போக்கை மக்களிடம் கொண்டுசெல்வதும், அரசை இடித்துரைப்பதும்தான்..
..
இந்த மாநிலத்தில்தான் காதலித்தற்காக சுவாதியும் காதலிக்க மறுத்தற்காக பிரான்ஸினாவும் கொல்லப்படுகிறார்கள்.. தினம் குறைந்தது கொள்ளை கொலை இல்லாமல் பொழுது விடிவதே இல்லை.. அரசின் தலைமைக்கு பக்கத்து மாநிலத்தில் அணைகட்டுவது கூட தெரியாமல் இருக்கிறது.. யாரோ பின்னால் இருந்து இயக்குவதாக சசிகலா புஷ்பா வெளிப்படையாக குற்றம் சாட்டுகிறார்.. தானாக இயங்க முடியாத தலைமை என்கிறார்.. இந்திய நாடாளுமன்றத்திலேயே மாநில முதல்வர் கட்சிதலைவர் தன்னை அடித்ததாக குற்றம் சாட்டுகிறார்.. ஒரு எம்பியே உயிருக்கு பயந்து மத்திய அரசு பாதுகாப்போடு தான் தமிழ்நாட்டிற்குள் வரமுடிகிற அவலம்.. இதுதான் தமிழக சட்டஒழுங்கு..
..
சட்டமன்றத்தை பாட்டிபாடும் கச்சேரி மேடையாக்கியதும் ஏதாவது கேட்டால் பதில் சொல்ல வக்கில்லாமல் எதற்கெடுத்தாலும் முந்தைய திமுக ஆட்சியை குறைகூறுவதும்..
ஏதேனும் ஒரு தொலைநோக்கு திட்டங்களோ சமுதாயத்தில் அடிதட்டில் வாழும் மக்களின் மேம்பாட்டிற்கான திட்டங்களோ இல்லை.. இட்லிகடையும் ,பூங்காவும் வாழ்வியல் வளம் சேர்க்க உதவாது..
காவிரியில் என்னால்தான் முடிந்தது என பொய்யுரைத்து பட்டமெல்லாம் வாங்கியவர்.. இப்போது சிறுவாணியில் யார் மீது பழிபோடலாமன நினைக்கிறார்.. தமிழக உரிமைகள் பறிபோக ஜெயலலிதாதான் காரணம்
#காவிரித்தாய் பட்டத்தை திரும்பபெற வேண்டும்
..
அசோகரைவிட அதிக திட்டங்களை கொண்டுவந்தவர் ஜெயலலிதா என தனபால் புகழ்வதும் தான் கேவலத்தின் உச்சம் சபாநாயகரின்
தகுதியை மீறிய உளறல்..
வீதிதோறும் மரம் நட்டான் அசோகன்.. வீதிதோறும் சாராயக்கடை.. ஜெயலலிதாவின் புகழ்பாடும்..
..
ஜெயலலிதா அரசின் லட்சணம்.. அமைச்சர் பாட அடிமைகள் தாளம் போட.. ஆஹா..
சட்டமன்றம் கூத்து கட்டும் சபையானது..
அடிமைகள் என்றாலே.. #அதிமுகவினரை காட்டுகிற குகூள்.. இதுதான் ஜெயலலிதாவின் ஆட்சிசெய்யும் விதம்..
..
வாழைமர தோரணங்கள் எல்லாம்கட்டி கடைசியில் இழவு வீடான கதைதான்..
#நூறுநாட்கள்..
..
ஆலஞ்சி மன்சூர்
கமல்
கமல்..
கமலின் கருத்துக்களோடும் செயல்களோடும் நிறைய கருத்துவேற்றுமை உண்டு.. அவரின் தனிப்பட்ட நடவடிக்கைகளை தவிர்த்து அவரின் பெரியாரிய கருத்தின் நிழலில் இருப்பதை போன்ற தோற்றத்தை தருவதில் நிறைய விமர்சனங்கள் உண்டு.. ஆனால் சினிமா கலைஞனாக அவர் தந்த படைப்புகள், ஏற்றுக்கொண்ட கதாபாத்திரத்தில் சிறந்ததொரு நடிப்பை தருவதிலோ யாருக்கும் எந்த விமர்சனமோ எதிர்ப்போ இல்லை..
..
அவரின் போலித்தனமான அரசியல் நடவடிக்கைகளில் யதார்த்தத்தை மீறி வெளிபாடு உண்டு மறுப்பதற்கில்லை.. எனக்கு தெரிந்து சினிமாவில் சமரசமே செய்துக்கொள்ளாத பகுத்தறிவாளன் இலட்சியநடிகர் எஸ்எஸ்ஆர் மட்டுமே.. கலைவாணர் தொடங்கி எம்ஆர்ராதா வரை நடிப்பில் சமரசரத்தை ஏற்றிருக்கிறார்கள்.. கொள்கையை நடிப்பில் தேவையான போதுமட்டுமே எடுத்துரைப்பதும் அந்த கதாபாத்திரம் ஆன்மீகம்..? பேசினால் அதோடு ஒன்றிபோவதுமாக இருந்தது..
..
கமல்
சினிமா கலைஞனாக நிச்சயமாக சிறந்ததொரு பங்களிப்பை தமிழ்திரைக்கு ஏன் இந்திய திரைக்கு தந்திருக்கிறார் என்பதில் யாருக்கும் இரண்டாம் கருத்தில்லை.. அவரை பிரான்ஸ் நாட்டின் உயரிய செவாலியே விருது கிடைத்ததை தமிழகம் பெரிதாக கொண்டாடவில்லையென்பது வருத்தம்தான் தமிழ் திரைஉலகம் கூட ஏதோ வாழ்த்துச்சொல்லி முடித்துக்கொண்டது.. ..
நேற்றைய கமலில் பேட்டி பெரிதாக பேசபடுகிறது தமிழக அரசோ முதல்வரோ தமிழ்கலைஞன் உயரிய விருதை பெற்றதற்கு வாழ்த்தவில்லை..
மலையாளகரை அதை கொண்டாடுகிறது கேரள முதல்வர் வாழ்த்துகிறார்.. கமலில் தன்னை மலையாளியாக அடையாளப்படுத்திக்கொள்கிறார்..
எதிர்வினையாற்றுகிறார்..
..
கமலில் திரைபயணத்தின் தொடக்ககாலங்களில் கேரள திரைஉலகம்தான் அவரை தூக்கிவிட்டது..நிறைய மலையாளபடத்தில் நடித்திருக்கிறார் பிளேபாயாக.. அந்த இளமை பருவத்தில் கைகொடுத்ததென்னவோ மலையாள சினிமாதான் அந்த உணர்வில் சொல்லியிருக்ககூடும்..
..
கமல் தமிழக கலைஞன், தமிழ்நாட்டுக்காரன் என்றுதான் அடையாளப்படுத்தபடுவார்..
அவரின் சினிமாவை தவிர்த்து வேறெதும் போற்றுதலுக்குரியதில்லை எனினும் சினிமாவிலேயே தன் வாழ்வியலை கழித்த /தொலத்த மகாகலைஞன் என்பதை கொண்டாடியே தீரவேண்டும் .. தமிழகம்..
..
#தாகம்தீராத_கலைஞன்_கமல்
..
ஆலஞ்சி மன்சூர்
Tuesday, August 30, 2016
எறும்பு...
காலுக்கடியில்
சிறு எறும்பு நகர்ந்துசெல்கிறது
நசுக்க மனமில்லை..
நான் யார்
அதை தொந்தரவு செய்து கொல்ல..
..
குளத்துநீரில்
மரக்கிளையிலிருந்து
தவறிவிழுந்தது
எறும்பு..
எடுத்து தரையில் விட்டேன்..
அப்படியே சாகவிட ..மனமில்லை..
..
குளித்து முடித்து
துண்டை கட்டி புறப்பட்டேன்
இடுப்பில் கடித்து
நன்றி சொன்னது எறும்பு
திரும்பவும் பிடித்து
தரையில் விட்டேன்..
..
டப்பாவில் போட்டுவைத்த
வெல்லக்கட்டியை
எறும்பு தின்றது..
எடுத்து வெளியே விட மனமில்லை..
..
அம்மா கட்டிதந்த
சக்கரை பொங்கலில்
எறும்பு கிடந்தது செத்து
தூக்கியெறிந்தேன்..
சிறுது நேரத்தில்
எறும்பு கூட்டம்
பல்லக்கில் தூக்கி சென்றது..
..
எறும்பை போல் வாழவேண்டும்..
..
ஆலஞ்சி மன்சூர்
விலையென்ன?
மாணவர்களிடம் கல்விக்காக பெற்ற #நன்கொடையை..? திருப்பி தர சம்மதம் பச்சைமுத்து என்கிற பாரிவேந்தர்
..
எல்லாரும் இடத்தை காலி பண்ணுங்க..
திருடியதை, ஏமாற்றி அபகரித்ததை, அது குற்றம் என்று தெரிந்தும் செய்ததை, அதற்கு அரசு அதிகாரத்தை பயன்படுத்தியதை .. அதுவும் தவறென்று தெரிந்தே பயன்படுத்தியதை( miss use) நாட்டின் மாநில முதல்வராக இருந்துக்கொண்டே செய்ததை அதற்காக தண்டனை பெற்றதை.. எல்லாம் மறந்து உச்சநீதிமன்றம் டான்சி வழக்கில் சொத்தை திருப்பி அரசிடமே ஒப்படைக்க தயாரென்று நீதிமன்றத்தில் வாக்குமூலம் பதிவு செய்து பிரதான பத்திரத்தை சமர்பித்து .. விடுதலையாக முடிகிற திருநாட்டில்
பச்சைமுத்துவிற்கு 70 கோடிகள் பெரிய விசயமா என்ன.. பிச்சை காசை தூக்கியெறிந்துவிட்டு பச்சைமுத்து வெளியே வந்து கல்வியில் புரட்சியாளராக வலம் வருவார்..
..
எதற்கும் முன் உதாரணமாக உச்சநீதிமன்ற தீர்ப்பை காட்டி சர்வசாதாரணமாக வெளியே வரலாம் .. ஜெயலலிதாவிற்கு ஒரு நீதி .. பச்சைமுத்துவிற்கு நீதியா என கேள்வி கேட்கலாம்..
அரசு பதவியையோ அல்லது அரசு சம்பளத்தை பெறுகிறவர் இல்லை.. அல்லது ஒரு ரூபாய் சம்பளம் வாங்குகிற ஏமாற்று வேலை செய்யவில்லை.. சுயநிதி பல்கலைகழக நிறுவனர்.. பழசையெல்லாம் கிளறி சாராய காய்ச்சியதையெல்லாம் எடுத்தால் நாங்களும் தோண்ட வேண்டியிருக்கும்..
..
பணமும் அதிகாரமும்... தவறென்று தெரிந்தும் சட்டத்தை தங்களுக்காக வளைத்தொடித்து .. அதற்கு உச்சநீதிமன்றம் போன்ற நீதிபரிபாலன உச்சசபையை பயன்படுத்துகிற கேடுகெட்டநிலை தொடருமேயானால்.. நீதியை இவ்வளவு விலைக்கு தரப்படும் அல்லது ஏலம் விடப்படுமென அறிவிப்பை வெளியிட்டுவிடலாம்.. எல்லா தவறையும் நியாயப்படுத்த ஜெயலலிதாவின் வழக்குகளே போதுமானது.. வருமானத்திற்கு சொத்துசேர்ப்பது எப்படி குற்றமாகும் என்கிற நீதிசபையில்..
பச்சைமுத்துக்களை ஒரு மயிரும் புடுங்கமுடியாது..
..
நீதியே விலையென்ன..
#JUSTICE_for_sale..
..
ஆலஞ்சி மன்சூர்
சட்டமன்றம்..
சண்முகநாதனுக்கு பதில் மாபா.பாண்டியராஜ்
முதல்வர் தனக்கு பிடித்தமானவரை அல்லது தேவையானவரை அமைச்சரவையில் சேர்த்துக்கொள்வது அவர் விருப்பம்.. மாற்றுகருத்தில்லை ஆனால் ஏன் ஒருவர் அமைச்சரவையிலிருந்து மாற்றப்படுகிறார் என்பதற்கு குறைந்தபட்சம் விளக்கமாவது தரவேண்டும்.. ஒருவரை தொடர்ந்து சிலகாலம் ஒருதுறையில் வைத்திருந்தால்தான் அவர் அந்த துறைப்பற்றிய அறிவை பெற முடியும்..
அடிக்கடி மாற்றுவதால் துறைசார்ந்த வேலைகள் /பணிகள் தேக்கமடையும் இவையெல்லாம் அறிந்தும் அடிக்கடி அமைச்சர்களை மாற்றுவது.. சிறந்த நிர்வாகத்தை தராது..
..
நிறைய மரபுகள் மீற படுகின்றன புதிய உறுப்பினரின் கன்னிப்பேச்சில் குறிக்கிடுவது கூடாது ஆனால் அன்பில் மகேஷின் பேச்சில் அமைச்சர் பன்னீர் செல்வம் குறிக்கிடுகிறார்..
சட்டமன்றம் நடக்கும் போது அறிவிப்புகளை சட்டமன்றத்தில் தான் அளிக்கவேண்டும் அதுவும் துறைசார்ந்த விவாதத்தில் ஆனால் விவாதம் முடிந்தபின் மற்றொரு விவாதத்தில் குறிக்கிட்டு முடிந்துபோன மான்ய விவாதத்தின் அறிவிப்புகளை செய்யகூடாது அது உபரியாகவோ அல்லது கூடுதல் நிதிநிலை அறிக்கையாகவோ தரவேண்டும் இதெல்லாம் மரபு மீறியசெயல்கள்.. அதைவிட கொடுமை சட்டமன்றம் நடந்துக்கொண்டிருக்கும் போதே அமைச்சரவை மாற்றம் ..
மரபுகளை மீறுவது ஜெயலலிதாவிற்கு புதிதல்ல என்றாலும்.. அமைச்சரவை மாற்றம் என்பது அழகல்ல ..
..
ஜெயலலிதா அறிந்தே தவறுகளை செய்வதும் அதை நியாயப்படுத்தி ஊடகங்கள் ஜால்ரா அடிப்பதும் காலக்கொடுமை..
..
#வாசல்கோணல்..
..
Monday, August 29, 2016
ஜெயலலிதா எனும் மாயபிம்பம்
காவிரி பிரச்சனையில் அனைத்துக்கட்சி கூட்டத்தை ஏன் கூட்டவில்லை கலைஞர்..
..
ஜெயலலிதா எந்த விடயத்திலும் /பிரச்சனையிலும் அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டமாட்டார்.. ஆணவம் அகம்பாவம் தான்தோன்றிதனமாக நடக்கிறார் என்பதைவிட.. தனக்கு எல்லாம் தெரியும் என்று நம்பவைக்க முயற்சிக்கிறார் என்பதை விட..
உண்மையான காரணம் வேறு இருக்கிறது..
இதை எதிர்கட்சிகள் ஏன் திமுக கூட பேசுவதில்லை..
..
முக்கியமான பிரச்சனையில் கூட ஜெயலலிதா அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டுவதில்லை.. எந்த பிரச்சனை/ விடயமானாலும் கலந்துக்கொள்ளும் கட்சிகள்/அமைப்புகள் அந்த விடயத்தில் அனுபவமுள்ள திறமையானவர்களை, புள்ளிவிபரத்தோடு பேசகூடிய நபர்களை தான் அனுப்புவார்கள்.. நதி நீரென்று வைத்துக்கொண்டால் திமுக துரைமுருகனை தான் அனுப்பும் அதே பிற கட்சிகளும் அதில் ஆரம்பம் முதலே பங்கெடுக்கிற எல்லா விசயங்களையும் விரல்நுனியில் வைத்திருக்கிற சாதகபாதகங்களை விரிவாக அலச கூடியவர்களை தான் அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு அனுப்பும்..
எந்தவித அடிப்படை அறிவு கூட இல்லாமல் அடுத்தவர் எழுதிக்கொடுப்பதை படித்துவிட்டு துறை செயலர்களின் கருத்தை அப்படியே மொழிகிறவராகதான் ஜெயலலிதா இருப்பார் அவரால் பிற கட்சியினரின் கேள்விகளுக்கோ கருத்துகளுக்கோ ஆலோசனைகளுக்கோ பதில் சொல்லவோ, மறுத்து பதிலளிக்கவோ தெரியாது..
அவர் மற்றவர்கள் எழுதி தருவதை படிக்கிற கூட்டத்தை சேர்ந்தவர் சுயமில்லாதவர்..
..
ஜெயலலிதா என்கிற மாய பிம்பம் பாசிசம் பேசுவோரால் கட்டமைக்கப்பட்டது அவர்களுக்கு ஒரு ஆள் தேவைப்பட்டார் அதனால் அவரை கொண்டுநடக்கிறார்கள்.. சோ வார்த்தையில் சொல்லவேண்டுமானால் ராஜாஜிக்கு பிறகு #வராதுவந்த_கண்மணி அவ்வளவு தான் ஜெயலலிதாவின் தகுதி..
..
பொதுக்கூட்டங்களிலேயே அடுத்தவர் எழுதிக்கொடுப்பதை பேசியும் சட்டமன்றத்தில் திமுகவினரோடு விவாதிக்க பயந்து மொத்தமாக வெளியேற்றிவிட்டு தனக்குதானே பேசுவதும் தான் ஜெயலலிதா அறிந்தது..
ஜெயலலிதா மிகப்பெரிய அறிவார்ந்தவர் intelligent என ஒரு மாயையை, இரும்புமனுசி என்ற போலியான தோற்றத்தை மீடியாக்கள் உருவாக்கியதே தவிர உண்மையில் பேசவோ செயல்படவோ சரியானதை அறிந்து விளக்கவோ சிறிதும் திறமையில்லாதவர்..
மொத்தத்தில் #தகுதியில்லாதவர்..
..
#காற்றடைத்த பலூன்..
..
ஆலஞ்சி மன்சூர்
சிறுவாணி
#சிறுவாணி..
பழைய தமிழக எல்லையான பாலக்காட்டுக்கருகில் மேற்குதொடர்ச்சி மலையில் உற்பத்தியாகிற ஆறு..
சுவைகூடிய நீர்.. மேட்டுபாளையம் அருகிலும் பவானி ஆற்றோடு கலக்கிறது.. கோவைக்கு குடிதண்ணீரின் ஆதாரமாக விளங்குகிற ஆறு..கோபி நீர்வீழ்ச்சி .. கோவை பாலக்காட்டு மக்களின் சுற்றுலாதளம்..
..
சரி விசயத்திற்கு வருவோம்
கேரள அரசு சிறுவாணி ஆற்றின் குறுக்கே அணைகட்டுகிறது.. முறைப்படி மத்திய அரசின் அனுமதியை கேட்கிறது மத்திய அரசும் தமிழகத்திற்கு கருத்துகேட்டு கடிதம் எழுதிஅதற்கு பதில் வராததால் அனுமதியளித்திருக்கிறது..
ஜெயலலிதாவிற்கு யாராவது சொன்னால்தான் எதுவுமே தெரியும் போலியிருக்கிறது.. அவதூறு வழக்கில் கூட உச்சநீதிமன்ற நோட்டீஸ் கிடைக்கவில்லை என பொய் சொல்லியவர்..
ஆறுமாதமாகவே சிறுவாணியில் குறுக்கே அணைகட்டபோவது எல்லா ஊடகங்களும் வந்திருந்தது.. ஜெயா செய்திகளில் கூட பார்த்ததாக ஞாபகம்.. எனவே ஜெயலலிதாவிற்கு தெரியாமல் இல்லை அலட்சியம்..
காசு வாங்கிக்கொண்டு ஓட்டுபோடுகிறவனுக்கு எதற்காக உழைக்கவேண்டும் ..அவனுக்காக அவன் தேவைகளுக்காக ஏன் செயல்படவேண்டுமென்ற ஜெயலலிதாவின் சிந்தனை சரியானதுதான்..
விற்றபின் உரிமை கோரமுடியாது..
..
நதிநீர் பிரச்சனையில் ஜெயலலிதா எப்போதுமே தும்பைவிட்டு வாலை பிடிக்கிறவர் .. திமுக மீது குற்றம் சாட்டியே காலத்தை கடத்துகிறவர்.. காவிரியில் சன்டிவிக்காக கலைஞர் தயங்குவதாக குற்றம் சாட்டினார்.. ஆனால் காவிரி நடுவர்மன்றம் அமைத்தபோது அதை எதிர்த்தார்.. நடுவர்மன்ற தீர்ப்பு வந்தபோது குறைச்சொன்னார் ஆனால் அரசிதழில் வெளியிடும் போது ஜெயலலிதா ஆட்சி இருந்தது காவிரித்தாய் பட்டம் மட்டும் வாங்கிக்கொண்டார் காவிரிக்காக ஒரு சிறு துரும்பை கூட அசைக்காதவர்.. முல்லை எம்ஜிஆர் காலத்தில்தான் அணையை உயர்த்தவேண்டாமென்ற யோசனையை தன் இன பாசத்திற்காக விட்டுகொடுத்ததும் பின் கலைஞர் ஆட்சிக்கு வந்தபிறகு வழக்குபதிவே நடந்தது..
..
இப்போது கூட சிறுவாணி பிரச்சனையில் நித்திரை கலையாமல் மத்திய அரசு மீது பழிபோட்டு தப்பிக்க நினைக்கிறார்.. எல்லாவற்றுக்கும் நீதிமன்றம் மூலமே தீர்வை கண்டுவிட முடியுமென்கிற அறியாமையை விட்டபாடில்லை.. கச்சேரிக்கு போனா உள்ளதும் போகும் என்பார்கள்.. கொங்கில் ஒரு சொல் உண்டு.. வரப்பிற்காக வயலும் போச்சு என்பார்கள்.. நீதிமன்ற தீர்ப்பை கர்நாடகாவும் கேரளாவும் மதிக்காது ..
ஏன் ஜெயலலிதாவே தன் சொந்த வழக்குகளில் எவ்வளவு காலதாமதத்தை ஏற்படுத்தினார் என்பது எல்லோருக்கும் தெரியும்..
..
கலைஞர் ஆட்சியிலிருந்தபோது கர்நாடகாவோடு பேசி தொடர்ந்து தண்ணீரை பெற்று தந்தார்.. ஜெயலலிதாவின் அகம்பாவத்தால் எதெற்கெடுத்தாலும் நீதிமன்றத்தை நாடுவதால் காலவிரயமாகி டெல்டா மாவட்டமே பாலைவனமாகிறது..
ஜெயலலிதா தயவில் டெல்டா மாவட்டம் வறண்டுபோனது இனி..
மேற்கு மாவட்டங்கள் வறட்சி மாவட்டமாகலாம்..
..
#தகுதியில்லாத_தலைமை…
ஆலஞ்சி மன்சூர்
Subscribe to:
Posts (Atom)