Thursday, April 21, 2022

எல்.ஜி..
தஞ்சை தந்த திராவிட தீரர் 
கழகத்தின் கண்மணியாய் கலைஞரின் கரம்பற்றி ஒரத்தநாட்டை கோட்டையாக்கியவர் .. 
குறிப்பாக தஞ்சை மேற்கில் செல்வாக்கோடு கழகத்தை பட்டிதொட்டியெல்லாம் கொண்டு சேர்த்தவர் 
மாணவர் பருவம்தொட்டு அண்ணாவின் பேச்சால் கழகத்தில் தன்னை இணைத்துக்கொண்டு கலைஞரின் போர்படை தளபதியாய் எதிரிகளை மிரளவைத்தவர் ..
மொழிப்போர் வீரராய் இளைஞர்களிடையே மாணவர்களிடையே செல்வாக்கோடு திகழ்ந்தவர் .. உள்கட்சி விடயங்களில் ஏற்றதாழ்வு வந்த போதும் கழகத்தின் தலைவரின் நம்பிக்கைக்குரியவராக திகழ்ந்தவர் .. கலைஞர் தந்த அரவணைப்பின் கதகதப்பில் மிளிர்ந்தவர் 
கட்சியை எப்படி மக்களிடையே கொண்டு சேர்க்கவேண்டுமென அவரிடம் பாடம் கற்கவேண்டும் 
துளிகூட சளைக்காமல் செயலாற்றுவார் .. அவரது பேச்சில் தொலைநோக்கு சிந்தனை இருக்கும் .. தெளிவான உரைநடை மிணுக்காத சொற்கள் எஃகு போன்ற உறுதியோடும் துடிப்போடும் கழகம் வளர்த்த மாவீரர் ..
..
ஏப்ரல் 24 ல்
அகவை 88 ல் காணும் 
மாவீரர் எல்.ஜி அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்..
..
ஆலஞ்சியார்

Wednesday, April 20, 2022

இந்தியாவில் இஸ்லாமியர்களாக வாழ்வதற்கு அவன் ஒவ்வொருமுறையும் தன்னை சமாதான புறாவென நிரூபிக்க வேண்டியிருக்கிறது.. தென் இந்தியாவில் கேரளம் தமிழகம் தவிர்த்து வடமாநிலங்கள் உட்பட மிக நெருக்கடியான சூழலே நிலவுகிறது .. கேரளம் தமிழ்நாடு இரண்டிலும் மெல்ல படர துவக்குவது ஆபத்தானது.. ஒவ்வொருமுறையும் படர நினைக்கும் போது வெந்நீரை ஊற்றி அழித்துக் கொண்டிருந்தாலும் திடீரென சிலரின் வரவு கண்டு இவரா என வியப்பூட்டும் வகையில்  நம் நம்பிக்கையில் கரிபூசுகிறார்கள் 
நல்ல வாய்பாக தமிழகத்தை திமுக ஆட்சி செய்கிறது .. இம்முறையும் அதிமுக தொடர்ந்திருந்தால் மோசமான அனுபவங்களை வரலாறு பதிவு செய்திருக்கும் ..
..
நாடு எங்கே போகிறது ..
முஸ்லிம்களுக்கு வாடகைக்கு வீடு இல்லை என்றார்கள் .. இஸ்லாமியன் கடையில் பொருள் வாங்காதே என்றார்கள் அவர்கள் கல்விக்கு முட்டுகட்டை போட ஹிஜாப் அணியாதே என்றா்கள் மசூதிகளில் காவி கொடியேற்றுவேன் தடுத்தால்  வீடு தரைமட்டமாகும் உச்சநீதிமன்ற தீர்ப்பெல்லாம் கால் மசுருக்கு சமம் என செவிசாய்க்க மறுக்கிறார்கள் .. பொது சமூகம் மெல்ல மௌனமாய் மூர்ச்சையாகியிருக்கிறது .. காய்ந்தநிலத்தில் சிறுதுளிநீர்விழ முளைத்தெழுவதைப்போல மனிதாபிமானவர்கள் அக்கறையோடு கேள்வி எழுப்புகிறார்கள் ஆனால் நீதிமன்றமே சொன்னாலும் கேட்பதில்லை எனும் போது பேரிறைச்சிலில் முனகல்கள் வெளிவராமல் போகிறது..
..
அரசதர்மத்தோடு நடந்துக்கொள்ளுங்கனென மோடியை பார்த்து குஜராத்  கோத்ரா ரயில் எரிப்பை தொடர்ந்து நடத்தபட்ட இன படுகொலைகளை கண்டு 
அன்றைய பிரதமர் வாஜ்பாய் அவர்கள் சொன்னதை இன்றுவரை கருத்தில் கொள்ளவில்லை.. ஒரு மதத்தவர்களுக்காக அல்லது குறிப்பிட்ட சாதியினருக்காக குறிப்பிட்ட மாநில வளர்ச்சிக்காக மட்டுமே ஒன்றியத்தின் பிரதமர் செயல்படுவது  அழகல்ல.. தொடர்ந்து முஸ்லிம்கள் மிரட்டபடுவதும் உடமைகளை இருப்பிடத்தை புல்டோசர் வைத்து உடைப்பதும் மிகபெரிய மதசார்பற்ற ஜனநாயக நாட்டில் நடைபெறுவது சர்வதேச சமூகம் இந்தியா மீது கொண்ட பார்வை மாற தொடங்கவதும் அழிவின் அடையாளமாகும் ..ஒன்றுமை சிதைந்ததால் ஒன்றியம் இல்லாமல் போகும் .. இவ்வளவு அநீதிக்கு பிறகும் உள்துறை அமைச்சரோ,பிரதமரோ வாய்மூடி இருப்பது அவர்களின் நிஜ முகத்தை காட்டுகிறது ..
..
தேசம் இருளடைய தொடங்கியிருப்பது இதுவரை இல்லாத பேதம் தலைதூக்குவதும் கல்விசாலைகளை திறக்காமல் சிலைகளை நிறுவி மதபோதையை ஏற்படுத்தி, வரும் சமூகத்தையும்,வளரும் சமூகத்தையும் இருட்டில் நிற்கவைத்தால் அறிவெனும் ஒளியை இல்லாதாக்கினால் இவர்கள் விரும்பும் "சனாதன ராமராஜ்யம் " அமைக்கலாம் .. அது ஆபத்தான விளைவுகளையே தரும் ஒருசாரார் தவிர வெகுமக்கள் புறக்கணிக்கபடும் நிலை உருவாகும் ..
..
நாம்
விழித்தெழுந்திட வேண்டும் இருள்நாக்க சூரியனின்  சுடரில் 
இந்திய ஒன்றியமே "திராவிடமாடலை" பின்தொடர வேண்டும் .. எல்லோருக்கும் கல்வி இருப்பிடம் அவரவர் நம்பிக்கைக்கு கேடுவராமல் அடுத்தவர் உரிமையில் தலையிடாமல் நன்னெறியோடு நல்லாட்சி வேண்டும்..
யாரும் கேள்வி கேட்க கூடாதென்ற நிலையை மாற்றி  இங்கே எல்லோரும் சமமாய்,சமத்துவமாய், சமூகநீதியோடு வாழ இந்த வீணர்களை வீழ்த்த பாசிச பாஜகவை சாய்க்க வேண்டி
நல்லதொரு தொடக்கத்திற்காக காத்திருக்கிறது தேசம் ..
எதிர்க்கட்சிகள் தங்கள் நலனை மறந்து நாட்டின் நலன் கருதி விட்டுகொடுத்து அனைவரையும் அரவணைத்து ஒருங்கிணைத்தால் பாசிசம் வீழும் ..
..
வீழ்ந்துதானே ஆகவேண்டும் 
அநீதி வீழ்ந்துதானே ஆகவேண்டும் 
அநீதி வீழும் அறம் வெல்லும்
..
ஆலஞ்சியார்

Sunday, April 17, 2022

டெல்லியில் கலவரம் 
அனுமன் ஜெயந்தி ஊர்வலத்தில் இருபிரிவினரிடையே கலவரம் கல்வீச்சு தொடர்ந்து போலீஸ் தடியடி காயம் .. 
யார் காரணம் அறிவோம் ..
இந்திய தலைமை அமைச்சர் உள்துறை அமைச்சர் மௌனம் காப்பது ஆபத்தானது 
எதிரிக்கட்சிகள் கூட்டறிக்கை இந்தியாவின் முகம் மாறி கிடப்பதையும் பிரதமரின் மௌனம் கலவரபடுத்துவதாக சொல்லியிருக்கிறார்கள் ..
.. 
வடநாட்டில் குறிப்பாக பாஜக ஆளும் மாநிலங்களில் மட்டும் கலவரம் குறிப்பாக இஸ்லாமியர்களுக்கெதிராக திட்டமிடபடுவதும் வெட்டவெளிச்சமாக தெரிகிறது 
ஊர்வலம் செல்லும் பாதையில்  முஸ்லிம்கள் கடைகள் மட்டும் அடித்து நொறுக்கபடுவதும் கொளுத்தபடுவதும் மசூதிகளில் 
காவி கொடியை கட்டுவதும் தொடர்கிறது ஆளும்தரப்பு பதில் சொல்வதில்லை அவர்கள் கைது செய்யபட்டாலும் உடன் பிணையில் வருகிறார்கள் வழக்கின்தன்மை கடினமான பிரிவுகளில் இல்லை.. ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் சனாதன தர்மம் நிலைநாட்டபடும் ராமராஜ்யம் அடைந்தே தீருவோம் அதற்காக பலிகொடுப்போம் என வன்முறையை தூண்டுகிறார் ஒன்றிய அரசே பிராமண கட்டுபாட்டில் இயங்கும் ஆர்எஸ்எஸ் என்ற பிராமண இயக்கம் சொல்வதுதான் சட்டம்.. 
இது எங்கேபோய் முடியும்
..
தமிழகத்திலும் மீனாட்சி வைகையில் இறங்கினாள் .. எவ்வளவு அமைதி 
ஆனந்த கூத்தாடினர் மக்கள் .. 
பேதமில்லை வன்மமில்லை 
மாமன் மச்சானாய் கலந்து  மகிழ்ந்தனர் .. இது ஏன் இந்துத்துவ வெறியர்களுக்கு புரியவில்லை உன் மதம் என் மதம் அவரவர் வழிபாடுதானே தவிர வாழ்வியல் முறையல்லவே 
இங்கே பசித்தவன், ஏழை, பொருளீட்டுகிறவன், செல்வந்தன்,  நம்பிக்கையாளன் மறுப்பாளன் எல்லோரும் அவரவர் வேலையை செய்துக்கொண்டுதானே இருக்கிறார்கள் இல்லாதவனுக்கு ஈந்தும், தனக்கானதை அடைந்தும் மகிழ்வோடு வாழ்கிறார்கள்.. மதம் மண்டையில் ஏறவில்லை மனிதாபிமானம் தலையில் அலங்கரிக்கிறது ..  
மனிதாய் வாழ்கிறார்கள் இதையும் கெடுக்க முயற்சிக்கும் போதெல்லாம் #தடி கொண்டு மக்கள் தலையில் அடிக்கிறார்கள்..
..
சித்பவ பிராமணர்களால் நடத்தபடும் அமைப்பு மீன் ஆடு மாடு உண்ணும் இந்துக்கள் இந்த அமைப்பிஸ் தலைமையேற்க முடியாது  ..
இங்கேதான் தெளிவான  திட்டமிடலோடு பயங்கரவாத சம்பவங்கள் அரங்கேறுகின்றன அது அரசிற்கு தெரியும் ஆனால்  நாட்டில் நடக்கும் மத கலவரங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல என ஒதுங்கிக்கொள்வார்கள் மூன்றுமுறை தடைசெய்யபட்ட இயக்கம் இந்த தேசத்தை வழிநடத்துவது தான் காலக்கொடுமை
..
சர்வதேசநாடுகள் அஹிம்சை தேசத்தை கலவரத்தோடு பார்க்கிறது.. மனிதசமூகத்தின் மீது நடத்தபடும் தாக்குதல் ஒருநாள் பதில் சொல்ல நேரிடும் இந்திய ஒன்றியம் பகைமை மறந்து பன்முகத்தன்மையில் இந்து முஸ்லிம் கிருஸ்துவர் என அடையாளபடுத்தாமல் "இந்தியன்"  என்ற பெருமிதம் அடையாளமாய் வாழவகை செய்தல் வேண்டும் ..
மத கலவரத்தை திட்டமிடுவோர் தூண்டுவோர்,பரப்புவோர் அதை மிகைபடுத்தி ஒருசாராரய் பழிச்சொல்லும் ஊடகங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் 
..
இந்திய ஒன்றியம் நமக்கானது இங்கே பிரிவில்லை பேதமில்லை உயர்வு தாழ்வில்லை 
..
ஆலஞ்சியார்

Thursday, April 14, 2022

அண்ணல் அம்பேத்கரை மோடியோடு ஒப்பிட்டு இளையராஜா எழுதியது வைரலாகிறது ..
வியக்க ஒன்றுமில்லை இசை தெரிந்தளவிற்கு இயல் தெரியவில்லை ..
..
அம்பேத்கர் 
இந்திய அரசியலின் பிதாமகன் 
ஒடுக்கபட்ட மக்களுக்காக மட்டுமல்ல அழுத்தபடும் செயலுக்களுக்கெதிராக சமதர்மம் வேண்டுமென்பதில் தெளிவோடு போராடி கடைசிவரை இந்தியா பார்ப்பனபிடியிலிருந்து மீள முடியாது இயலாதென அறிந்து 
பௌத்தம் தழுவியவர் .. இந்துவாக பிறந்தேன் இந்துவாக சாகவிருப்பவில்லை..
தீண்டதாகாதோர் யார் சூத்திரர்கள் யார் சாதியை அழித்தொழிக்கும் வழி என்ன ..நான் இந்துவாக சாகமாட்டேன்
என அறைகூவலோடு வெளியேறியவர் 
இந்திய அரசியல் சாசன சட்டத்தை எழும்போது அவர் அனுபவதித்த இடைஞ்சல்கள் என் கைகளில் பற்றிக்கொண்டு பார்பனீயம் எழுதியதென பகிரங்கபடுத்தி ஒடுக்கபட்ட மக்களுக்கு கல்வி வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு மட்டுமே தீர்வு தரும் என தீர்க்கமாய் உணர்ந்து பெற்று தந்தவர் .. 
..
இந்திய சனாதனவாதிகள் எவ்வளவு கொடூரமான மனநிலையை கொண்டிருந்தார்கள் என்பதற்கு ஒர் உதாரணம் .. இந்திய விடுதலைக்கு முன்பு 1946 ல் இந்திய அரசியல் நிர்ணயசபைக்கு காங்கிரஸ் சார்பில் மராட்டியத்தில் நிறுத்தபடுவாரென எதிர்பார்க்கபட்டது ஆனால் காங்கிரஸில் இருந்த சனாதனவாதிகள் அவர்பெயரை இடம்பெற செய்யாமல் பார்த்துக்கொண்டனர் .. எல்லோருக்கு அதிர்ச்சி அப்போது முஸ்லிம்லீக் அவரை வங்கத்தில் நிறுத்தி தேர்வு செய்தது இதெல்லாம் வரலாறு 
..
குஜராத் இனபடுகொலை .. கோத்ரா ரயில் எரிப்பு தொடர்ந்து முஸ்லிம்கள் கொலை உடமைகள் எரிப்பு கர்ப்பணிபெண் வயிற்றை கிழித்த கொடுமை .. எதிர்வினை இப்படிதானியிருக்கும் என பேசியவர் அப்போதைய பிரதமர் வாஜ்பாயே "அறத்தோடு அரச தர்மத்தோடு நடந்துக்கொள்ளுங்கள் " என மோடிக்கு அறிவுரையை சொல்லியதெல்லாம் அறியாமல் ஒப்பீடு செய்கிறார் .. முத்தலாக் பற்றிய போதிய அறிவுமில்லை அதை அச்சமூகமே அக்கறைக்கொள்ளவில்லை தவறாக பயன்படுத்துவதாக அறிவர் .. ஒருவேளை தன் மகனின் மதமாற்றம் அவரை பேசவைத்திருக்கலாம் ..
..
இசைக்கு ராசாவாக இருந்து தொலைத்திருக்கலாம்.. சனாதனத்தின் கொடுமையை அதிகம் உணர்ந்தும் பாவவிமோசனம் தேடுவதாக சொல்லி அதினுள்ளே வீழ்ந்து கிடப்பவர் .. அவரின் இசை "இன்றைக்கும் என்றைக்கும்" 
நம் நெஞ்சில் ரீங்காரமிடும் 

"புதுராகம் படைப்பதாலே நானும் இறைவனே" கொண்டாடலாம் 
மற்றபடி ..
..
ஆலஞ்சியார்

Wednesday, April 13, 2022

நாவின் துடைப்பத்தைக் கொண்டு புழுதியை கிளறாதே..
என்றார் மௌலானா ரூமி அவர்கள் 
..
சிலர் வெண்சாமரத்திற்கு மயங்கிகிடக்கிறார்கள் ..
தன்நிலை அறிபவனே சிறந்த மனிதன் .. 
பூப்பதெல்லாம் கடவுளின் காலடியில் விழுவதில்லை அதைவிட மங்கையின் கருங்கூந்தலில் அழகு செய்வதே சிறந்தது வந்ததின் பயன் அது..
..
சாமானியன் அறிவுச் சுரண்டல் 
வளரவிடாமல் தடைபோடல் மதமெனும் மயக்கத்தில் தொடர்ந்து அழுத்தி அவனை கரைசேரமுடியாமல் காவல் நிற்பது பாசிசத்தின் பிரதானவேலை.. ஒரு மதம் அதை வைத்து கலவரம் ஏழைகள் உரிமை உடமை அடித்து நொறுக்கபடுவதும் ஆளும் தரப்பு வழிகேட்டில் திரியும் இளஞர்களை விலைபேசி சமூகத்தை மிரட்டி வருவதும் 
பார்த்து பார்த்து மனம் சலிப்படைகிறது ..
..
பெருபான்மை என்பது எண்களில் இல்லை.. வெகுமக்களின் ஆசை வேற்றுமையில் ஒற்றுமை .. ஆனால் அதிகார மயக்கம் உயரத்தில் நிற்க வேண்டும், தங்களுக்கு கீழே பெரும்கூட்டம் தலையசைக்க வேண்டும் .. வர்ணவேறுபாட்டைச் சொல்லி வயிறுவளர்க்கவேண்டும் .. எல்லாம் எமக்கே வேண்டும் என்று ஒருசாரார் நீண்டநாள் அதிலேயே பயணித்துவிட்டதால் 
வழிவிட மறுத்ததை எங்கே அறிவு வந்துவிட்டால் கேள்வி எழுப்புவானென அவனை கீழே நிறுத்தி வாளெடு கொடிபிடி கூச்சல்போடு உனக்கு சன்மானம் உண்டென வழிகெடுக்க பாவம் இடை,கடைகள் வழிதவறிய ஆடுகளாய் ..
..
வெறும் கூச்சல் புழுதியை கிளப்புகிறது .. அதனால் சிறுபான்மை அச்சம் கொள்கிறது கண்களில் நீர் .. வாய் திறந்து உரக்க அழ கூட முடியவில்லை எங்கே எதிர்வினையாற்றுவதாய் இருப்பிடத்தை இடித்து தரைமட்டமாக்கிவிடுவானோ என்ற பீதி .. கரிசனமாய் பேச யாருமில்லை .. கண்ணீர் துடைக்க கரங்களில்லை .. அரவணைக்கவோ,அக்கறைகாட்டவோ ஆள்வோர் தயாரில்லை அடுத்த தேர்தலில் வெற்றிக்கான வழியை எப்படி தடுக்கமுடியும் 
தயாரித்தவனே தடுக்கவா முடியும் ..
..
பெரும் மக்கள் வாய்மூடி மௌனம் காப்பது ஆபத்தானது
வாழ்நாளில் செய்கிற மிகப்பெரிய தப்பு.. மதம் சாதி பிரிவினை என பிளவுபட்டு நின்றால் கடைசியில் இடம்தெரியாமல் போவீர்கள் 
சிலர் வெண்சாமரத்திற்கு ஆசைபட்டு வீணாய் போகாதீர்..
கடவுள் காலடியில் பட்டுத்துணியென மூளைச்சலவைக்கு ஆளாகி வீதியில் கலவரத்திற்கு தயாராகாதீர்..
..
உன் வருங்காலமும் உன் சந்ததிகளில் வருங்காலமும் நல்லதொரு வாழ்வியலாய் இருந்திட வேண்டுமெனில்  மூளைகெட்ட மூடர்களில் மதமேறிய அயோக்கியர்களில் சொற்களில் மயங்காமல் இளைஞனே சீர்படு .. 
கல்வி உனை உயர்த்தும் அதை தேர்ந்தெடு ..மதமோ சாதியோ உனை கரைசேர்க்காது கல்வி ஒன்றுமட்டுமே காலம் தாண்டியும் உன் புகழ்பாடும் 
..
ஆலஞ்சியார்

 

Saturday, April 9, 2022

தமிழணங்கே!..
சிலருக்கு எரிச்சலை தருகிறது ..
அகோரமாக சித்திரம் வரைந்திருப்பதாக புலம்புகிறார் ஒருவர்.. இவரின் ஜகத்குரு தமிழை நீசபாஷை என்ற போது வராத கோபம் இப்போது வருகிறது .. திராவிட இயக்கம் வளர தொடங்கியதற்கு முன்பு வரை தமிழர் தமிழ் என்ற அடையாளம் பார்பனர்களை மட்டுமே முன்னுறுத்திருந்தது .. தமிழ் நாட்டின் சிறப்பை சொல்லும்போதெல்லாம் குடுமிகளை முன்னுறுத்தி சமஸ்கிருதம் கலந்த தமிழை முன்னெடுத்து விளம்பரம்படுத்தியவர்கள் இன்று தனித்துவிடபட்டப்பின் அலறுகிறார்கள் ..
..
சரியான நேரத்தில் எதிர்வினையாற்றுவதில் எப்போதும் தயங்காமல் செவ்வனே செய்கிறார் ஏ.ஆர்.ரகுமான் .. தமிழன் என்று தன்னை அடையாளபடுத்துவதை தவறுவதுமில்லை தன்மானத்தை விட்டுகொடுப்பதுமில்லை .. ஹிந்தியை முதன்மைபடுத்த நினைக்கிறபோதெல்லாம் வாள்தூக்கி நிற்கிறார் .. 300 ஆண்டுகள் மட்டுமே பழக்கமுள்ள இலக்கணறிவில்லாத
ஒருமொழி மூவாயிரமாண்டு சீரிளமையோடு இருக்கும் தமிழோடு அடிக்கடி உரசிபார்ப்பது வாடிக்கையாய் நிகழ்வது வேடிக்கையாய் தெரிகிறது ..
..
உருதுவிற்கு போட்டியாக உருவாக்கபட்ட மொழி இலக்கணமில்லா பிறமொழிகளின் கலப்படத்தில் ஹிப்ரு மொழி வளத்தையும் வடமாநிலமொழிகளின் அழிவில் அதன் சுரத்தையும் கொண்டு கட்டமைக்கபட்டது .. செத்த சமஸ்கிருதத்தை தூக்கிநிறுத்த முடியாதென அறிந்து பிறமொழிகளோடு கலப்படம் செய்தும் குறிப்பாக தென்னிந்திய மொழிகளான திராவிட மொழிகளில் தமிழிலிருந்து பிரிந்து வட்டார சொல்லடையில் மலர்ந்த மொழிகளில் ஆதிக்கம் செலுத்தியும் தமிழ்மொழியில் கிளைகள் தனித்தன்மையை மீட்டெடுக்க தொடங்கியதும் ஹிந்தியை முன்னிறுத்த தொடர்ந்து முயற்சிப்பதும் தென்னிந்திய மாநிலங்கள் எதிர்ப்பதும் வாடிக்கையாகிறது ..
..
வடஇந்திய மொழிகளான குஜராத்தி மராட்டி பீகாரிய மொழிகள் வழக்கொழிந்து போகும் அவலநிலைக்கு இந்தியை பிரதானபடுத்தியதே என அவர்களும் உணர்கிறார்கள் .. மொழியாளுமை என்பது இலக்கண இலக்கியத்தில் மட்டுமில்லை .. வழக்கிலும் அது தன் சிறப்பை பறைசாற்றவேண்டும்.. வெகுமக்கள் பேசாமல்  போனால் மொழி ஆரோக்கியமிழக்கும் ..
பிறமொழி திணிப்பு அல்லது பிறமொழி மீதான கரிசன பார்வை தாய்மொழியை அழிக்கவே உதவும் .. மொழி என்பது தேவைக்குரியதே தவிர திணிப்பிற்குரியதல்ல..
..
ரகுமான் இந்திபாடல்களுக்கு இசையமைக்கவில்லையா முக்காபலா என்றெல்லாம் இசை வடிக்கவில்லையா என அறிவிலித்தனமாக கேள்வி எழுப்புகிறார்கள் .. தொழில்சார்ந்து எது தேவவையென கேட்கிறார்களோ அது தருவதுவே அவரது கடமை.. அதேவேளை தன் சுயத்தில் எப்போதும் மேடையேறி கூட அதை தவிர்க்காமல் நிலையோடுநிற்பவர் .. அதெல்லாம் இரண்டாம் போரில் ஜெர்மனிய பாஷை கற்றுக்கொண்ட பச்சோந்திகள் சொல்ல அருகதையற்றவர்கள் .. தமிழனின் அடையாளமாக பீற்றிக்கொண்டு திரிந்தவர்களிடமிருந்து பிடுங்கி அவர்கள் ஆரியர்கள் அவர்கள் பாஷை வேறு என வெளிச்சம்போட்டு காட்டியதில் பெரும் திராவிட தீரர்களுக்கு உண்டு ..
..
ஒற்றை மொழி ஒரே நாடென்பதல்லாம் ஒருமைபாட்டிற்கு ஊறு விளைவிக்குமென தமிழ்நாட்டின்
தலைவர் #முத்துவேல்கருணாநிதிஸ்டாலின் தெளிவாக பொட்டில் அடித்து சொல்லியிருக்கிறார் .. தென்னிந்திய மாநிலங்கள் தன்மானத்தோடு தலைநிமிர தொடங்கியிருப்பதன் அடையாளம் தெலுங்கான கர்னாடகம் எதிர்வினையாற்றியிருக்கிறது.. 
மானமிகு கனிமொழி கருணாநிதி எங்கே ஆங்கிலம் படித்தால் அறிவு வளர்ந்துவிடுமோ என அமித்ஷா அஞ்சுவதாக சொல்லியிருப்பதில் உண்மை உண்டு .. வடவர்களில் பெரும்பான்மையினரை படிப்பறிவற்றவர்களாக வைத்திருப்பதுதான் பாசிச பாஜகவின் வெற்றியின் ரகசியம் .. மக்களின் அறிவுக்கண் திறந்து விழித்தெழுந்தால்  பாஜக பாதாளத்தில் விழும் எழவே முடியாது .. மதமும் சாதியும்  புராணகதைகளும் பொய்யும் அவர்களது ஆயுதங்கள் .. அதை அறிவுக்கொண்டு வேரறுப்போம்
..
இன்பத்தமிழ் எங்கள் உயிர்..
மற்றதெல்லாம்...
..
ஆலஞ்சியார்

Tuesday, April 5, 2022

ஸ்டாலினை பளு தூக்கும் போட்டிக்கு அனுப்பலாம் என நகையாடுகிறார் .. அடிமைத்திலகம் எடப்பாடி பழனிசாமி .. 
விமர்சனம் செய்வதற்கும் தகுதி வேண்டும் அது உம்மிடம் அறவே இல்லை .. உமது பேச்சு எரிச்சலின் வெளிபாடு .. அரசியலில் காலம் செய்த கோளாறாய் வாய்பொத்தி 
சசிகலாவிடம் காலில்விழுந்து பெற்று அந்த நன்றியை கூட உடன்மறந்து பொதுவாழ்வில் கழிசடையாய் திரியும் உமக்கு 
#முத்துவேல்கருணாநிதிஸிடாலின் அவர்களில் நிழலை கூட விமர்சிக்கும் அருகதை இல்லை..
..
அரசியல் விபத்தாய் வந்த நீர் ..
வரலாறு தந்த மாபெரும் தலைவனை வெற்றியை பெரும் செல்வாக்கை கண்டு எரிச்சல் அடைவது தெரிகிறது ..  அரசியலில் குழிபறித்து முன்னேறினால் விழும் போது அடிபலமாகதான் விழும் .. இனி எழவே முடியாது டெல்லி பாதுஷாக்கள் நம்பி  நீச்சல் தெரியாமல் குளத்தில் இறக்குகிறீர் ஆழமறியாது முழ்க வேண்டும்.. சாதீய சூழலும் மதவெறியின் மாயையும் காக்குமென நம்புகிறீர் இருக்குமிடம் தெரியாமல் போவது நிச்சயம் ..
..
யாரை விமர்சிக்கிறீர் தெரியுமா
அறிஞர் அண்ணாவே "அப்பனைப்போல பிடிவாதகாரன் " என்ற ஸ்டாலினை தாம்.. உழைப்பின் மறுபெயர் ஸ்டாலின் என கலைஞர் சொன்னதெல்லாம் வெறும் புகழ்ச்சியில்லை நாட்டுமக்கள் நிம்மதியோடு அதைவிட தன்மானத்தோடு பெருமிதமாய் எண்ணுகிறார்கள்.. அடிமை கோமாளிகளால் இழந்த தமிழ்நாட்டின் பெருமையை மீட்டெடுக்கவந்த மாவீரென புகழ்கிறார்கள்  தமிழர் மானம் காத்து பகைமைகாத்துநிற்கும் காவல்தெய்வமென மகிழ்கிறார்கள் .. பகைவருக்கு தெரிகிறது 
Stalin is more dangerous than Karunanidhi என்று அடிமை உமக்கு தான் புரியவில்லை ..
..
ஒன்றிய இந்துத்துவாவாதிகளுக்கு சேவகம் செய்து கால்பிடித்து நக்கி பிழைத்துக்கொள்ளலாமென நினைத்து  எதைவேண்டுமானாலும் பேசலாம் என நினைத்தால் எச்சரிக்கை ..
மக்கள் உம்மை எழவே அரசியலில் முடியாதவாறு புதைத்துவிடுவார்கள் ..
அரசியலில் அரைகுறை அறிவோடு பொய் பித்தலாட்டம் கால்பிடித்தல் வடவருக்கு வெண்சாமரம் வீசுதல் என கேலிக்குள்ளான நீர் யாரை விமர்சிக்கிறீர் தெரியுமா..
திறம்பட ஆட்சி நடத்தி, நேர்மை அஞ்சாமை,துணிவோடு பகை இதுவென அறிவித்து நேர்மையோடு களம் காணும் போர்வீரனை.. நல்லதை மட்டுமே கொண்டு நடக்கும் செயல்வீரன், தெளிவான பாதை இதுதான் அது பெரியாரின் பாதை என
 ஊருக்கு உரக்கச் சொல்லி  நேர்மையோடு ஆட்சி நடத்துகிறவர் .. இதோ ‌‌கொஞ்சமும் சமரசமில்லாமல் கவர்னரை திரும்பி  கவனஈர்ப்பு தீர்மானத்தை கொண்டுவந்திருக்கு தைரியம் இதெல்லாம் உமக்கு வராது தெரியாது .. தலையாட்டிக்கொண்டே தமிழனை தலைகுனிய வைக்கும்  அரைவேக்காடு 
அஞ்சாநெஞ்சன் தளபதியாரை  பகடி செய்வதை ஏற்க முடியாது 
கோபுரகலசம் மீது எச்சில் இலை பறந்தமர்ந்தாலும்  கலசத்தின் பெருமை குறையாது ..
..
"கோபத்திலும் சீற்றத்திலும் பிணத்தைப் போல இரு.
பணிவிலும் அடக்கத்திலும் பூமியைப் போல இரு
தாங்கிக்கொள்வதில் கடலினைப் போல இரு..     என்றார் 
மௌலானா ஜலாலுத்தீன் ரூமி அவர்கள்..
ஆம் 
#முத்துவேல்கருணாநிதிஸ்டாலின் அப்படிதானிருக்கிறார் 
அது உயர்வு தந்த பணிவு அதற்காக எள்ளிநகையாடுவதையும் பகடி செய்வதையும் ஏற்க முடியாது .. 
பொறுமைக்கும் எல்லை உண்டு 
..
ஆலஞ்சியார்