Wednesday, February 23, 2022

கருணையிலும் இரக்கத்திலும் சூரியனைப் போல் இரு.. 
பிறருக்கு உதவுவதிலும் நதியைப் போல் இரு.
என்றார் மௌலானா ரூமி ..
..
மாநகராட்சி,  நகராட்சி, பேரூராட்சி  தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்தை கூறிய தமிழ்நாட்டின் தலைவர் 
மாண்பிமை முதலமைச்சர் 
#முத்துவேல்கருணாநிதிஸ்டாலின் எந்த தவறுக்கும் இடம் தராமல் வாக்களித்தவர்களுக்கு உழையுங்கள் .. தவறு செய்தால் தூக்கியெறியபடுவீர் சும்மா இருக்கமாட்டேன் எச்சரித்திருக்கிறார்..
நாடாளும் தலைவரின் உயர்நோக்கை கருத்தில் கொண்டு தேர்ந்தெடுக்கபட்டவர்கள் செயலாற்றவேண்டும்..
ஆம் நதியைப்போல..
..
நேற்றைய தினம் ஒரு புகைப்படம் தூங்கவிடாமல் செய்தது .. பேரறிஞருக்கு மாலை அணிவித்துவிட்டு பெண்கள் இறங்கும் காட்சி .. இதைதான் பேராசான் பெரியார் கனவுகண்டார் .. பெண்களும் அதிகாரத்தில் வரவேண்டும் தீட்டென்று ஒடுக்கிவைத்த காலம் போய் அதிகாரத்தில் அமர்கிறார்கள் .. பெண்களுக்கெதுக்கு அரசியல் என்கிற நிலையை மாற்றி இதோ பெரும் எண்ணிக்கையில் பெண்கள் வரிசைகட்டி வருகிறார்கள் .. தெருவிற்குள் நடமாடவே கூடாதென்ற தடுத்து நிறுத்தி வேறுவழியில் செல் என அகங்காரத்தோடு ஆச்சாரத்தோடு குரலுயர்த்தியவர்கள் இதோ மேயராகி செங்கோலோடு வரும் போது எழுந்துநின்று வணக்கம் வைக்க செய்ததே அதுதான் திராவிடம் இம்மண்ணின் நிறைந்து நிலைத்து நிற்பதற்கு காரணம்
..
இளம் வயதினர் பலர் களம்கண்டு வென்றிருக்கிறார்கள்  புதியதொரு தொடக்கம் இது ..
பொதுவாழ்வில் புதிய இரத்தம் சமூகத்தை படிப்பதற்கும், பணிசெய்வதற்கும் படிப்பினைப் பெறுவதற்கும், திராவிடப் பெருஞ்சுவராய் காத்துநின்ற பேராசான்களின் எண்ணத்தை நிறைவேற்றிடவும், பொதுவாழிவில் தூய்மை நேர்மை எளியவர்களுக்கு உதவும் தொண்டு என அறம்சார்ந்து கற்றுக்கொள்ள பலனளிக்கும்.. நிறைய படிகள் உண்டு உண்மையாய்,கடுமையாய்,நேர்மையாய், உழைத்தால் விண்ணை தொடலாம் .. கொள்கை தெளிவோோடு சமூகநீதியை நிலைநாட்ட  நெஞ்சுறுதியோடு செயல்படுங்கள் .. வேறெங்கும் காண தேவையில்லை நம் தலைவர் 
#முத்துவேல்கருணாநிதிஸ்டாலின்  இருக்கிறார் ,அவரை கண்டு படியுங்கள் ஒய்வில்லா உழைப்பு நல்லதை செய்திடவேண்டும் அதை  காலம்தாழ்த்தாமல் செய்திடவேண்டும் நேர்மையோடு அப்பழுக்கற்று செய்திடல் வேண்டும், அனைவரையும் அரவணைக்கும் உயர்பண்பு , எனக்கு வாக்களிக்காதவர்களும் சேர்ந்தே உழைக்கிறேன் அவர்கள்  வாக்களிக்காமல் போய்விட்டோமே என வருந்துமளவிற்கு உழைப்பேன் அவர்களும் எனக்கு வாக்களிப்பார்கள் என்றார்..
அதுதான் நடந்தது..
..
வெற்றியைக் கண்டு கர்வம் கொள்ளவில்லை மாறாக பொறுப்பு கூடி இருக்கிறதை உணர்கிறேன் மேதகு.மு.க.ஸ்டாலின்..
ஆம் 
கருணையிலும் இரக்கத்திலும் சூரியனைப் போல் இருந்தார் 
தமிழ்நாட்டின் தலைவர் தளபதியார்.. 
அவரிடம் கற்றுக்கொள்ள நிறையிருக்கிறது .. 
இளம்படையே ..
தளபதியை பார் 
அவரைப் படி 
அவரை பின் தொடர் 
நிச்சயம் உயரத்தை தொடலாம் 
..
ஆலஞ்சியார்

Tuesday, February 22, 2022

வெற்றி!..
மகத்தான வெற்றியை மக்கள் தந்திருக்கிறார்கள் .. நல்ல தலைவன் நாடு பெற்றிருக்கிறென்ற  நிம்மதியோடு தளபதியார் கரத்தை பலபடுத்தியிருக்கிறார்கள் .. இழிசொல் இல்லை, பொய் இல்லை ,வீண் புகழாரமில்லை, விரயமில்லை .. சொன்னதை செய்யும் திறனும் நல்லதை செய்வாரென்ற நம்பிக்கையும் 
மாபெரும் வெற்றிக்கு வித்தாகியிருக்கிறது..
..
தலைவனின் பெருங்குணம் 
மக்களுக்காக உழைத்தல், மக்களை கூர்ந்து கவனித்தல், மக்களுக்கு தலைவணங்குதல் 
இவை உயரத்தில் நிறுத்தியிருக்கிறது .. 
பகையறிந்து  போரிடும் பேராற்றல், எளியவரிடம் காதோர்க்கும் நற்குணம் .. செயல் ஒன்றே கரைசேர்க்கும் என்ற தெளிவு ஒரு தலைவனை கொண்டாட வைத்திருக்கிறது..
அதிகம் பேசுவதில்லை அளவோடு கதைத்தாலும் மக்கள்தொண்டில் குறைவைப்பதில்லை .. அண்ணாவைப்போல் கலைஞரைப்போல பேச்சாற்றல் இல்லை ஆனால் உழைப்பு உண்டு தொண்டாற்றும் எண்ணமுண்டு .. 
அரசியல் முதிர்வும் நீண்ட அனுபவமும் இயக்கத்தை கட்டிக்காக்கும்  என்ற நம்பிக்கை மக்களிடையே வியந்து பார்க்கவைத்திருக்கிறது ..
..
திமுக மக்களுக்கான இயக்கம் அதன் தலைவராய் வருகிறவர் சமநீதி கொண்ட காவலனாய் இருத்தல் வேண்டும்.. எதிரிக்கும் வாழ்வளிக்கும் குணம் வேண்டும் ஜனநாயக மாண்பை எப்போதும் உயர்த்திபிடித்திட வேண்டும் நம் தலைவர் #முத்துவேல்கருணாநிதிஸ்டாலின் அனைத்தும் ஒருங்கேபெற்றவராய் திகழ்கிறார்..
கொள்கை தெளிவுண்டு பகையறிந்து படையோட்டம் நடத்தும் ஆற்றலுண்டு, பகைக்கஞ்சா திமிருண்டு எதிரிக்கு தலைவணங்காத போர்குணம் ..மக்கள் முன் வணங்கிநிற்கும் பேரரசனாய் எம் தலைவர் இருக்கிறார்..
..
நல்லாட்சிக்கு மக்கள் தந்த ஒப்புதல் .. இப்படியொரு தலைவனைதாம் இத்தனை நாளாய் தேடிக்கொண்டிருந்தோம் என சொல்லாமல் சொன்ன சேதி.. தமிழர் நலன், தமிழ்மண் வளம்,
இனப்பற்று,சமூகநீதி, உரிமையை விட்டுகொடுக்காமல், எதற்கும்அஞ்சாமல், தாழ்பணிந்துநிற்காமல், தமிழனின் தன்மானத்தை உயர்த்தி பிடித்து இந்திய ஒன்றியமே வியக்கும் ஒப்பற்ற ஆட்சியை தந்து வழிகாட்டும் விளக்காய் திகழும் #முத்துவேல்கருணாநிதிஸ்டாலின் ஆட்சிக்கு மக்கள் தந்த வரவேற்பு ..எதிரிகளே வேறுவழியில் செல்லுங்கள் .. பகையே ஓடி ஒளிந்துக்கொள்
..
திராவிட மாடல் ஆட்சி அதுவே 
இந்திய ஒன்றியத்திற்கு தேவை அதற்கான முன்னெடுப்பை செய்யவேண்டிய காலத்தின் கட்டாயம் .. 
காலம் தந்த மாபெரும் தலைவர் 
மு.க.ஸ்டாலின் 
நேர்மை,நெஞ்சுரம்,அஞ்சாமை ,அரசியல் முதிர்ச்சி, திறனறிந்து செயலாற்றும் அறிவு, அனைவரையும் அரவணைக்கும் மாண்பு, கொண்டகொள்கையில் உறுதி, மக்களின் பேரன்பு இவையாவும் ஒருங்கேபெற்ற உன்னத தலைவர்
#முத்துவேல்கருணாநிதிஸ்டாலின்..
கரத்தை பற்றிக்கொள்வோம் 
நாடு செழிக்கும் மக்கள் வாழ்வும் செழிக்கும்
..
ஆலஞ்சியார்

Saturday, February 19, 2022

உள்ளாட்சி..
வெகுமக்களிடையே அதிகார பகிர்வை தரவேண்டியும் மக்களே தங்களின் தேவைகளை உணர்ந்து அதை சரிசெய்யவும் மக்களாட்சி எனும் ஜனநாயக மாண்பின் அடிப்படை கூறுகளை உள்ளடைக்கிய தேர்தல் .. பலம், தெரிந்த முகம், சாதிய வேர்களின் பிடிமானம், கட்சி அரசியல், இவையெல்லாம் தாண்டி மக்களாட்சியை உறுதிசெய்யும் மகத்தான தேர்தல் 
இங்கே சாதி கோரதாண்டவமாடும் பணமும் செல்வாக்கும் அதிகாரதிமிரும் நடனமாடும் ஆனாலும் மக்களின் தேர்வுகள் ஜனநாயகத்தை உரக்க சொல்லி வேர்கள் அழுகிவிடாமல் காத்துநிற்கும்..
..
நகர்புற உள்ளாட்சி தேர்தலில் சில சம்பவங்கள் முகம் சுளிக்கவைத்தாலும் பெருவாரியமக்களின் மனம் சரியானதையே தேர்வு செய்யும் .. சின்னசின்ன சேதிகள் வரம்புமீறியதாகவும் பாழாய்போன மத சாதிய வெறியாட்டம் அடுத்தவரின் உரிமையை பறிப்பதாகவும் இருப்பது கவலைக்குரியது ஆரம்பத்திலேயே களையவேண்டியவைகள் .. வேலூர் சொல்லும் சேதி ஒரு எச்சரிக்கை மணி .. தெரிந்த முகம் நீண்டநாட்களாக பழகிய முகம் தன் கொடூரத்தை காட்ட தொடங்கியிருப்பது  எந்தளவு மதவெறியர்கள் மெல்ல ஊடுறுவியிருக்கிறார்கள் என்பதை காட்டுகிறது.. பணம் பதவிஆசை செய்த தப்பிலிருந்து பாதுகாப்பு தொடர்ந்து கொள்ளையடிக்க ஏன் கொலை கூட செய்தாலும் சட்டத்தின் முன் தப்பித்துக்கொள்ளலாம் என்ற நிலை ஆபத்தான பாதையை உருவாக்கியிருக்கிறது .. கடந்த நான்காண்டில் அடிமைகள் செய்த தீமைகள் இன்று ஒவ்வொன்றாய் கோரமுகத்தை காட்ட தொடங்கியிருக்கிறது .. பயிரை காக்க களையெடுக்கவேண்டிய அவசியத்தை உணர்த்துகிறது..
..
மக்கள் தெளிவாக இருக்கிறார்கள் யார் நமக்கானவர் யாரை நம்பவேண்டும் .. யாருக்கு வாக்களித்தால் நம் வருங்காலம் ஆபத்திலிருந்து காக்கபடும் .. நமது  பிள்ளைகள் எதிர்கால கனவுகள் நிறைவேறவேண்டும் அதற்கு யாரெல்லாம் எதிரானவர்கள், யாரால் முடியுமென்று அறிவார்கள் .. சாதியோ சமயமோ மதமோ தங்களை காக்காதென அறிவார்கள் .. எதையும் பகுத்தாயும் அறிவும் அது தரும் தெளிவும் தான் சனாதனவாதிகளை கலங்கடிக்கிறது .. அவர்கள் பொய்கள் வடமாநிலத்தில் கைகொடுப்பதைப்போல இங்கே நடப்பதில்லை நொடியில் அவர்களின் முகம் கருத்துபோகிறது முகமூடிகள் கிழிக்கபடுகின்றன .. 
திராவிடப் பேராசான்கள் தமிழ்நாட்டை சரியான பாதையை வகுத்துதந்ததே காரணம் .. பாரினிலே 
"நல்ல நாடு" தமிழ்நாடென ஒன்றியம் வியக்கிறது ..
..
நல்லதை விதைப்போம் ..
இடையிடையே வளரும் களைகளை பிடிங்கியெறிவோம்
நல்ல விளைச்சலை அறுவடைச் செய்வோம் ..
..
ஆலஞ்சியார்

Tuesday, February 15, 2022

சமீபத்திய எ.பழனிசாமியின் பேச்சுக்கள் விரக்தியை காட்டுகிறது .. ஜனநாயக நடைமுறைகளை கற்றோ தெரிந்தோ அரசியலுக்கு வந்தவரில்லை.. ஒரு கொலைவழக்கு அதை தொடர்ந்து ஈரோடு முத்துசாமியின் தயவு அவரை அரசியலுக்கு கொண்டுவந்தது .. 
விசுவாசமாக இருப்பதைப்போல நடித்து கொள்ளையடித்ததை சரியாக உடையவரிடம் ஒப்படைத்து காத்திருந்து காலில் விழுந்த விபத்தாய் முதல்வராகி செய்த தப்பிற்கு தண்டனைக்கு பயந்து முழுமையாக தன்னை அடிமைபடுத்திக்கொண்டு எம்ஜிஆரும் ஜெயலலிதாவும் கூட செய்ய தயங்கியதை நிறைவேற்றி பாஜகவின் கடைக்கண்ணில் தப்பித்துநிற்கிறவர் .. எங்கே எப்போது சிறைகதவுகளில் அடைபட நேரிடுமோ என்ற அச்சஉணர்வுமேலிட உளறுகிறார்..
..
அமாவாசைகள் வந்துபோகும் இனி நிரந்தரம் என்ற சொல்லின் பொருள் விளங்கும் .. ஒரே நாடு ஒரே தேர்தல் என அரசியல் அறியாமையில் இருக்கிறார்.. திமுகவின் வரலாற்றை ஒருமுறை படிக்கலாம் .. அண்ணாவிற்கு பிறகு அதிகம் படித்தவனென்ற தற்பெருமைபேசி திரியும் சேக்கிழாரின் கம்பராமாயணத்தை கற்ற ஞானி  வரலாற்றை தெரிந்துக்கொள்வது நல்லது .. கொள்கையில் சமரசம் செய்துகொள்ளாத இயக்கமிது கொஞ்சம் கண்சிமிட்டினால் போதும் அனைத்தும் கிடைக்கும் ஆனால் சமூகநீதியை அடகுவைத்து பெற தேவையில்லை என்ற நேர்மை .. இல்லாதோர்கான இயக்கமிது .. வண்டிகாரன் கூட மன்னரை வீழ்த்த முடியுமென்ற வரலாற்றை எழுதிய இயக்கம் .. 
carry on but remember people is watching you என நாடாளுமன்றத்தில் பேரறிஞர் அண்ணா முழங்கிய வரலாறு உண்டு..  சமூகநீதி என்பது அடித்தட்டுமக்களுக்கும் சரியான உரிமையை பெற்றுதருவதில் இருக்கிறதென அருந்ததியருக்கும் உள்ஒதுக்கீடு தந்து அதை தலையில் தூக்கிவைத்து கொண்டாடுகிறேன் என கலைஞரால் சபையில் உரக்க ஒலிக்க முடிந்தது ..
..
திமுகவிற்கு நீங்களெல்லாம் ஒரு பொருட்டே அல்ல பழனிசாமி அவர்களே.. நாங்கள் இனபகையோடு மோதிக்கொண்டிருப்பவர்கள் சாக்கடைப் புழுக்களை கண்டுக்கொள்வதில்லை.. ஆனால் சமூகம் நாற்றடிக்க கூடாதென்பதற்காக சுத்தம் செய்யவேண்டிவரும் .. எச்சரிக்கை .. இனபகைவரோடு கைகோர்த்து நிற்பதால் உளறிக்கொட்டுகிறீர் .. நிற்பதற்கு காலில்லாதவன் அதிமுகவெனும் பொய்காலில் ஆடுகிறான் உண்மையில் அதிமுகவின் கால்கள் வலுவிழக்க காரணமாவதும் காலொடிந்து போகும் காலம் வெகுதொலைவில் இல்லை என்கிற உண்மை  விளங்குகிறபோது சிறையில் காலம்கழிப்பீர் ..
..
எச்சரிக்கை எடப்பாடி.பழனிசாமியே.
கழிவுகளை காலம் சுமப்பதில்லை..
நேர்மையும் நெஞ்சுரமும் கடின உழைப்பும் கொள்கை தெளிவும் இனப்பற்றும் கொண்டவர்கள் வீழ்வதில்லை..
ஆம் 
 #முத்துவேல்கருணாநிதிஸ்டாலின்.. 
நேர்மையும் நெஞ்சுரமும் கடின உழைப்பும் கொள்கை தெளிவும் இனப்பற்றும் கொண்டவர்..
என்றும் 
அறம் வெல்லும்..
..
ஆலஞ்சியார்

Tuesday, February 8, 2022

எங்கும் அல்லாஹூ அக்பர் என உரக்க கேட்கிறது.. சங்கிகள் திட்டம் போட திருப்பி அடிக்கிறார்கள் இந்து பெருமக்கள் .. தங்கள் மகள்களுக்கு சகோதரிகளுக்கு ஹிஜாப் அணிவித்து மகிழ்கிறார்கள்.. எதை தொடவேண்டுமென தெரியாமல் சங்கிகளும்.. தொட்டுபாரென பொது சமூகமும் களமறங்கி பாஜக ஆர்எஸ்எஸ் திட்டத்தை போட்டு உடைக்கிறார்கள்.. பிராமண சகோதரர் என் மகன் திருநீறு பூசிக்கொண்டு பள்ளிக்கு செல்கிறான் தடுப்பீர்களா என கேள்வி எழுப்புவது இந்திய சமூகம் வேற்றுமையில் ஒற்றுமையில் நிற்பதன் அடையாளம் ..
..
ஹிஜாப் அணிந்து பள்ளிக்கு வருவதும் எதோ இப்போதுதான் நடப்பதைப்போல பேசுவது கவலையளிக்கிறது.. திடீரென தடுப்பதும் அதை கல்லூரி முதல்வரே சொல்வதும் காரணம் புரியாமல் இல்லை .. ஹிஜாப் அணிவதால் எந்த தொந்தரவும் இல்லை என்கிறபோது அதை காரியமாக்க தேவையில்லை.. உடனடியாக செய்யவேண்டியது முதல்வரை நீக்குவதும் கல்வித்துறையில் பணிபுரிய வாழ்நாள் தடைசெய்வதும் தான்.. சில நடுநிலைகள் முற்போக்கு பேசும் சங்கிகள்  அவரும் அல்லாஹூ அக்பர் என்றுதானே சொன்னார் அதைதான் அவர்களும் எதிர்பார்த்தார்கள் என்கிறார்கள்.. ஜெய்ராம் என கத்தி கூச்சல் போட்டு பயமுறுத்த நினைத்தால் திருப்பி  அல்லாஹூ அக்பர் என முழங்கி தான் கொண்ட நெறியை விளக்கியிருக்கிறார் .. சிறு கூட்டத்தை கண்டு பயந்தோ அல்லது ஒழிக என எதிர்முழக்கமோ செய்யாமல் தேவையில்லாத ரோமத்திற்கு தரும் மதிப்பை கூட தரமறுத்து நடைபோட்டு இந்திய ஒன்றியத்தையே துணைநிற்கவைத்ததுதான் இந்திய பெண்களுக்கே உள்ள மனஉறுதி..

..

கடவுள்  நம்பிக்கை இல்லாதவர்கள் கூட நேர்மையோடு அதை சொல்லி அல்லாஹூ அக்பர் என எழுதுகிறார்கள் .. அந்த பெண்ணின் உறுதியையும் அஞ்சாமையையும் தங்கள் மகளுக்கு கற்றுகொடுக்கவேண்டும் என்கிறார்கள் .. அல்லாஹூஅக்பர் என்பது இறைநம்பிக்கையிலிருந்து மாறி அது எதற்கும் தளர்ந்துவிட கூடாது என்பதற்கும் .. எத்தனை பகை நேர்நின்றாலும் உறுதிகுலையாமல் துணிந்து செல் என்பதையும் .. உன் உரிமையை விட்டுகொடுக்காதே அச்சுறுத்தலுக்கு அஞ்சாதே எதற்கும் எவனுக்கும் எக்காரணம் கொண்டும் அடிபணியாதே என கற்றுகொடுத்திருக்கிறது ..
..
அறிவிலிக்கூட்டம் கத்துகிறது 
அறிவுடை சமூகமோ அறம் சார்ந்த அந்த மகளின் கூட நிற்கிறது ..
இந்திய சமூகத்தின் வேர் பன்முகதன்மையின் சாற்றில் பட்டுபோகாமல் நிற்கும்..
..
ஜெய்ராம் என கூச்சலிட்டவன் வெளியில் நிற்கிறான் .. ஆனால் 
மகளோ அஞ்சாமல் வகுப்பறைக்குள் நுழைகிறாள் .. 
தடையை உடை 
எது தடுத்தாலும் கல்வியை விடாதே அது கரை சேர்க்கும்
என்ற உண்மையை உணர்த்துகிறது அந்த காட்சி..
..
ஆலஞ்சியார்

Saturday, February 5, 2022

நீட் தேர்வு திரும்ப பெற வலியுறுத்தும் மசோதாவை திருப்பி அனுப்பி ஆளுநர்.. செய்தது தவறென பலரும் சரியென சிலரும் நிலைபாட்டை எடுத்தபோது ஒரு அடிமைக் கூட்டம் கள்ளமௌனம் காத்து மிகப்பெரிய துரோகத்தை மீண்டும் செய்திருக்கிறது .. நாடாளுமன்ற மேலவையில் எதிர்த்து வாக்களித்திருந்தாலே நீட் வந்திருக்காது .. அன்று செய்த தவறை திருத்திக்கொள்ள வாய்ப்பு வந்தும் அடிமை அதிமுக மீண்டும் வரலாற்றுப்பிழையை செய்திருக்கிறது ..
..
அனைத்துக்கட்சி கூட்டத்தில் அதிமுக அடிமைகளும் பாஜகவிலிருக்கும் தமிழர்துரோகிகளும் கலந்துக்கொள்ளாமலேயே சட்டமன்ற அவசரக்கூட்டத்தை வரும் 8ந்தேதி கூட்டி மீண்டும் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைக்கபடும் இம்முறை திருப்பி அனுப்ப முடியாது .. ஆளுநர் திருபிபி அனுப்பியதில் இவர்கள் நிஜம் மக்களுக்கு விளங்கியிருக்கிறது .. அடிமைஅதிமுகவின் துரோகம் மக்கள் உணர்ந்திருக்கிறார்கள் ..
..
வானதி சீனிவாசன் கவர்னரென்ன தபால்காரரா என்கிறார் .. ஆம் தபால்காரர்தான் ..  தமிழ்நாடு அரசு இயற்றும் சட்டங்களை இந்திய குடியரசு தலைவருக்கு கொண்டு செல்லும் ஊழியர் .. அவ்வளவு தான் அவரது அதிகார வரம்பு வேலை .. அதனால் தான் ஆட்டிற்கு தாடி எதற்கு  என அண்ணா கேட்டார் .. ஓய்வு பெறும் வயதில் பகட்டான வாழ்வு வாழ ஒரு பதவி அவ்வளவுதான் ..  இன்னொரு கூமுட்டை  2010 டிசம்பர் 21 ல் காந்திசெல்வன் நீட் மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ததாக உளறுகிறது .. நாடாளுமன்றம் நடக்காத தேதியில் நடந்ததாக சொல்வதும் அதை ஊடகம் வெளியிடுவதும் காலக்கொடுமை (ஜூனியர்விகடன்)..
..
எதிரிகளையும் துரோகிகளையும் எதிர்கொண்டு நீட் தேர்விற்கு எதிரான போரில் தமிழகம் வெல்லும் என மாண்பிமை முதலமைச்சர் #முத்துவேல்கருணாநிதிஸ்டாலின் உறுதியளித்திருக்கிறார் .. நிச்சயம் தமிழ்நாடு வெல்லும் தமிழ்நாடு  ஸ்டாலின் பின்னே செல்லும் .. பகைவரும் துரோகிகளும் மக்கள் முன்  உரிக்கபடுவார்கள்.. ஜெயலலிதா நோயுற்றுயிருந்தபோது யாருக்கும் அறிவிக்காமல் நீட் தேர்விற்கு ஆதரவான கையெழுத்திட்டதால் வந்தவினை .. அடிமைகளால் ஏற்பட்ட அழிவை சரிசெய்ய போராடவேண்டியிருக்கிறது .. 
..
சமரசமில்லை என உறுதியோடு சண்டைபோடுவோம் .. வெற்றி பெறும் வரை போராடுவோம்.. ஸ்டாலின் எனும் கேடயம் தமிழ்நாட்டை காக்கும் .. கரம் கோர்ப்போம் ஸ்டாலின் கரத்தை பற்றிக்கொள்வோம் பலப்படுத்தோம் வெற்றி பெறுவோம்..
#முத்துவேல்கருணாநிதிஸ்டாலின்  நமக்கான தலைவர் நமக்கான பாதுகாவலர்.. ஆம் நமக்கானவர் ..
..
ஆலஞ்சியார் 

Wednesday, February 2, 2022

சாம்ராஜ்யங்களால் எங்களை ஆள முடியாது பேரறிஞர் அண்ணா .. அதைதான் ராகுலின் நாடாளுமன்ற உரையில் பார்க்கமுடிந்தது.. ஆம் அண்ணா எனும் தீர்க்கமான அரசியல்வாதியை இந்திய ஒன்றியம் இதுவரை கண்டதில்லை.. தெளிவு நேர்த்தியான உரை அனைவரையும் அரவணைக்கும் மாண்பு .. மக்களிடமே அதிகாரத்தின் சாவி இருக்கிறதென்ற உண்மையை உணர்த்தி மக்களிடமே செல் அவர்களோடு பழகு அவர்களிடமே கற்றுக்கொள் என்ற பொதுவாழ்வின் இலக்கணத்தை தெளிவாக உள்வாங்கி செயல்படுத்தி அனைவருக்கும் பாடமாய் வாழ்ந்துகாட்டியவர்.. 
..
அண்ணா எனும் மந்திரகோல் செய்த /செய்யும் லீலைகளை 
வடவருக்கு என்றைக்கும் பயத்தை பீதியைதான் தரும் .. 
அண்ணா சமகாலத்தில் வாழ்ந்த அறிவுசார் அரசியல்வாதிகளின் 
களஞ்சியம் .. உண்மை உழைப்பு நம்பிக்கை கொள்கை தெளிவு
இயல்பாகவே அமைந்த "பெருந்தகை" அண்ணாவை மறந்து மறுத்து இங்கு எவராலும் அரசியல் செயதிட இயலாது ..
அண்ணா எனும் மக்கள் தலைவன் இனி உருவாகுவது எளிதல்ல.. ஆனால் அண்ணாவை முழுமையாக உள்வாங்கி அவர் தந்த வழியில் பயணித்தாலே  லட்சியத்தை அடையலாம் ..அதை தான் கலைஞர் எனும் பேரரக்கன் செய்தார் அதன் தொடர்ச்சியாய் தளபதி ஸ்டாலின்..
அதனால் தான் இந்திய ஒன்றியத்தை ஒருங்கிணைக்க முடிகிறது ..  அண்ணாவை சரியாக உள்வாங்கியதால் தான்  
தலைமைத்துவம் வந்தது ..
..
அண்ணாவை எளிதாக அணுக முடிந்தது .. திராவிட நாடு கோரிக்கையை கைவிடுவதாக சொன்னபோது அண்ணாமலை பல்கலைகழக மாணவர்களால் நேர்நின்று கேள்வி கேட்கமுடிந்தது.. ஆம் 
எளியவர்களின் குரல் கேட்க ஒருவரிருக்கிறாரென்ற நம்பிக்கையை விதைத்தார்.. இன்று அதேபோல் தளபதி விதைக்கிறார்..
சாலையில் நின்று CM Sir Help me என்று கேட்கவும்  அதற்கு செவிசாய்க்கவும் துயர் களையவும்  தளபதி 
நானிருக்கிறேன் என்ற நம்பிக்கையை விதைக்கிறார் ..
இப்போதும் அண்ணாதான் ஆள்கிறார்..
..
ஜனநாயகம் ஒரு அரசுமுறை மட்டுமல்ல வாழ்க்கை  நெறி 
மேம்பாடு உடையதாக்கவல்ல மார்க்கம் என தன் தம்பிகளை நெறிபடுத்தினார் ..
அதனால் தான் கலைஞரால் வாழ்நாள் முழுவதும் ஜனநாயகதன்மையோடு அரசியல் செய்யமுடிந்தது 
இன்றும் தளபதியார் 
ஜனநாயகத்தின் வேர் அழுகாமல் காத்து கட்சியை இயக்கத்தை காத்துநிற்கிறார் ..
பேரறிஞர் அண்ணாவை
தமிழ்நாடு என்றும் நன்றியோடு நினைவு கூறும் ..
அரசியல் ஆட்சி அதிகாரம் என எதிலும் நேர்மை எளிமை ஜனநாயம் என வாழ்ந்துகாட்டி 
நமக்கெல்லாம் ஆசானாய் அறிவு சுரங்கமாய் அமைந்த அண்ணா 
காலம் உள்ளவரை தமிழர் நெஞ்சில் நிலைத்திருப்பார்
..
ஆலஞ்சியார்