Wednesday, March 7, 2018
பெரியாரெனும் பெருந்..தீ
பெரியார்..
இந்த மண்ணில் .. சாதீய ஒழிப்பை முன்னெடுத்து அதற்கு தடையாக இருக்கிற மதம் கடவுள்.. அதிகாரவர்க்கம் ...எல்லாவற்றையும் போட்டுடைத்தவர்... இந்த மண்ணில் பெண்களின் மீது திணிக்கபட்ட கொடுமைகளை அநீதிகளை களைய வேண்டி அவர்களும் ஆண்களைப்போல எல்லா உரிமைகளையும் பெறவேண்டுமென ..குறிப்பாக பெண்கள் கல்வி கற்று யாரையும் சாராது தன்னம்பிக்கையோடு நிற்கவேண்டுமென விருப்பியவர்.. அதற்காக போராடியவர் .. அவரே சொல்கிறார் உங்கள் ஆண் குழந்தைகளை படிக்கவைக்காவிட்டாலும்
பெண் குழந்தைகளை படிக்கவையுங்கள் அதற்கான வசதி உங்களுரில் இல்லையென்றால் வெளியூர் சென்று கூலி வேலைபார்த்தாவது படிக்கவையுங்கள் என்றார் அந்தளவிற்கு ஆண்களைவிட பெண்கள் கல்வி கற்க வேண்டுமென்பதிலே கறாராக இருந்தார்..
அதனால் தான் இன்று பெரியாரின் சிலையை உடைப்பேனென சொன்னவுடன் அதிகளவில் பெண்கள் தங்கள் கருத்துக்களை பதிவிட்டிருக்கிறார்கள்..
..
அவர்தான் வருத்தம் தெரிவித்துவிட்டாரே என சப்பை கட்டுகிறார்கள்.. முதலில் அவர் தான் அதை செய்யவில்லை எனது அட்மின் செய்தாரென சொல்ல கூட நாடோட வேண்டியிருக்கிறது ..பெரியாரை கடவுள் மறுப்பாளராக மட்டும் மதிப்பிட்டு பாஜக களமிறங்க அவரின் பன்முகம் இப்போது அவர்களுக்கு உணர்த்தியிருக்கிறது.. பெண்ணடிமைக்கு எதிரான களமாடியவர்.. சாதி ஒழிப்பு.. சமூக விடுதலை சமூக நீதி...அனைவருக்கும் சமமான உரிமை..
விளிம்பு நிலை மக்களுக்காக..
பிற்படுத்தபட்டோரின் உரிமைகளை பாப்பான் சுரண்டுவதற்கு எதிராக..சுயமரியாதையோடு வாழ சொல்லி தந்ததென பல்வேறு முகங்கள்/களங்கள்..அவரின் தொலைநோக்கு காலங்கடந்தும் பேசிக்கொண்டே இருக்கிறது..
..
இப்போது கூட வருத்கம் தெரிவிக்கும் போது தேவரை துணைக்கழைத்து வருகிறார்.. அவருக்கே தெரியும் அவர் இனத்தில் துணைக்கு வர எவனும் இல்லையென்று உண்மையிலேயே அவருக்கு தேவர் மீது அக்கறை இருக்குமானால் உயர்க்கல்வியில் OBC க்கு வழங்கபட்ட 27% இடஒதுக்கீட்டை ரத்து செய்ததற்கு கண்டனத்தை ஏன் பதிவு செய்யவில்லை போராடவில்லை.. அந்த OBC தானே தேவரினமும் வருகிறது.. எப்போதெல்லாம் ஆபத்து வருகிறதோ அப்போது அவர் எடுக்கும் தற்காப்பு தானே தவிர வேறொன்றும் அக்கறையில்லை.. எப்போதெல்லாம் தங்களுக்கு ஆபத்து வருகிறதோ.. தங்கள் சித்தாந்ததிற்கு ஆபத்தோ அப்போதெல்லாம் அவர்கள் துணைக்கழைப்பது சாதீயம் தான் ..
இப்போது வருத்தம் தெரிவித்தது கூட தெரியாமல் நடந்ததற்காக அல்ல.. மக்கள் வெகுண்டெழுந்ததும்.. குண்டர் சட்டத்தில் கைது செய்யவேண்டுமென்ற குரல் ஓங்க தொடங்கியதும் மடைமாற்று செய்ய தேர்ந்தெடுத்த வழி.. ஓடியொளிதல்..
..
இறுதியாக எந்த வடிவில் வந்தாலும் இங்கே பெரியாரின் தந்து விட்டு சென்ற நெருப்பு கனல்..
அணையாமல் தனத்துக்கொண்டே தான் இருக்கும்.. தீ.. பிடித்தெறிய தொடங்கினால் சாம்பல் கூட மிஞ்சாது.. பெரியாரின் பெருந்தீ..ஆம்
தீ..தின்றுவிடும்..
..
Aalanci Spm
Tuesday, March 6, 2018
பேராசான் பெரியார் சிலை.. மீது கை வைத்தால்..
பெரியார் ..
தனிநபரென்று நினைத்தாயோ மூடனே..
தொட்டு பார் தெரியும்... உன் இனமே இங்கிருந்து குடிபெயரவேண்டிவரும்..
எம் தயவில் வாழ்ந்துக்கொண்டே
எம் இன பெருந்தலைவனை .. எங்கள் பேராசான் சிலையை..
இங்கிருந்து அகற்ற நினைத்தால்..
தேசிய நீரோட்டத்தில் புதிய பாதை வகுக்க நேரிடும் ..
..
பாவம் பார்பனர்கள்.. இந்த எச்சை நாலு செக்யூரிட்டியோட வலம் வருகிறார்.. அவர்கள் தனியே நடமாட வேண்டுமல்லவா.. எதிர்வினை கடுமையானால் வடக்கு நோக்கி நகரவேண்டிவரும் என்பதை புரிந்து பார்பனர்களே இந்த எச்சையை கண்டிக்கவேண்டும்.. தொட்டுபார் என தளபதியே சொல்லிவிட்ட பிறகு.. இனி தொடுவானா.. ஒன்றை புரிந்துக்கொள்ள வேண்டும் வெறும் சிலையல்ல.. அது எங்கள் சித்தாந்தம் திராவிட பெருந்தலைவனின் சிலை மீது சிறிய சிராய்ப்பு ஏற்பட்டால் கூட விளைவுகள் கடுமையாக இருக்கும் அதனால் பார்பனர்கள் எச்சையை வாயடக்க சொல்லுங்கள்..
..
உடைப்பவனை விட அதற்கு தூண்டுகிறவன் மிக பெரிய பயங்கரவாதி அரசு உடனடியாக தேசிய பாதுகாப்பிலோ குண்டர் சட்டத்திலோ .. சமூகத்தில் பதட்டத்தை உண்டாக்கி கலவரத்தை தூண்டும் வகையில் நடந்துகொண்டதால் உள்ளே தள்ளவேண்டும்... அரசு அமைதியாக இருந்தால் அதன் பிறகு நடக்கும் சம்பவங்களுக்கு பதில் சொல்ல வேண்டிவரும்..
..
திரிபுராவில் லெனின் சிலையை அகற்றியதாலேயே அதே பாணியில் தமிழகத்தில் நடத்தலாமென்று தப்புகணக்கு போட்டுவிட்டார்.. பாவம் அடித்த அடி பலமாக விழ வழக்கம் போல பதிவை நீக்கி ஒளிந்துக்கொண்டார். லெனினுக்கும் இந்தியாவிற்கு என்ன சம்பந்தமென கேட்கும் ராசா .. ஆரியர்களுக்கும் இந்த மண்ணுக்கும் என்ன சம்பந்தம் என்பதை விளக்குவாரா.. பாஜக மத்தியில் ஆட்சிக்கு வந்ததிலிருந்து எச்சை பாப்பானின் துள்ளல் அதிகமாகியிருக்கிறது.. சுளுக்கெடுத்தாலே சரியாகும்.. கௌளத்தூர் மணி சொன்னதைப்போல .. பார்பனர்கள் நடமாட வேண்டுமா என்பதை அவர்களே முடிவு செய்துகொள்ளட்டும்..
..
பெரியார் மீது செருப்பை வீசினார்கள் .. செருப்பிற்கொரு சிலை முளைக்குமென்றான் புரட்சிகவிஞன்.. செருப்பு வீசிய இடத்திலேயே பெரியாருக்கு சிலை வைத்தார் கலைஞர்.. எச்சையின் செயலால்.. ஆயிரம் கணக்கான சிலைகள் தோன்றும்.. பெரியார் மண்..
விதைக்க விதைக்க முளைப்பதெல்லாம் அறிவுடையதாய் இருக்கும்..
பாப்பானுக்கு முன் புத்தியே கிடையாதென்றார் பெரியார்..
பெரியார் தனி மனிதரல்ல ..எங்கள் கோட்பாடு..
..
மானம் கெடுப்பாரை
அறிவைத் தடுப்பாரை
மண்ணோடு பெயர்த்த கடப்பாரை!
வானம் உள்ள வரை
வையம் உள்ள வரை
யார் இங்கு மறப்பார் பெரியாரை..
..
தொட்டு பார் தெரியும்..
எரியும் தீக்கனலென்று..
நெந்து போவாய்..
எரிந்து சாம்பலாவாய்.
..
எச்சரிக்கை..
..
Aalanci Spm
Monday, March 5, 2018
எளிமை
திரிபுரா முன்னாள் முதல்வர் மாணிக் சர்க்கார் மிக எளிமையாக வாழ்ந்தாரென சொல்லி அவரோடு காமராஜரையும் துணைக்கழைத்து .. காமராஜருக்கு பிறகு எளிமையானவரென புகழ்கிறார்கள் ..
இருவருக்குமான வேறுபாடுகளை கணக்கில் கொள்வதில்லை .. காமராஜர் வாழ்ந்த காலமும் காமராஜருக்கு குடும்பமில்லை என்பதையும் மறந்து கடந்து போகிறார்கள்...
..
முதலில் காமராஜரை பார்ப்போம்.. காமராஜருக்கென்று தனி திறமைகளோ.. அதாவது வேறேதாவது துறைகளில் ஆளுமையுடையவரோ அல்லது பொருள் ஈட்டும் திறமையோ அவருக்கு இருந்ததில்லை பொதுவாழ்வு வந்தபிறகு அதிலிருந்து வரும் வருவாயை தவிர வேறு வருவாய் இல்லை.. அதோடு அவருக்கு குடும்பமென்று மனைவி மக்கள் வழியே வருவாய் இருந்ததில்லை.. அதனாலேயே அவர் வாழ்வு மிக எளிமையாக இருந்தது.. ஆனால் மாணிக் சர்க்காரின் வாழ்வின் பொருளாதாரம் அவரது மனைவியின் சம்பாத்தியமும் சேர்ந்தது கட்சி அவருக்கு வழங்கும் சம்பளத்தில் குடும்பம் நடத்தினார்..
..
முதலில் அரசியல் தலைவர்கள் தொழில்களில் ஈடுபட கூடாதென்றோ அல்லது அவர்களுக்கு இருக்கும் இன்னும் பிற திறமைகள்.. எழுத்தாற்றல் தங்கள் குடும்பத்தினரின் வருவாய்.. தங்களின் முதலீடுகளிலிருந்து வரும் வருவாயெல்லாம் சரியான முறையில் வருமானவரி செலுத்தி நேர்மையான முறையில் சேர்க்க யாரும் தடுக்கவில்லை.. மாறாக முறைகேடாக சேர்த்தால் மட்டுமே தவறே தவிர..
யாரையும் பொருள் ஈட்டவேண்டாமென யாரும் தடுக்கவில்லை.. எளிமை என்பது எவ்வளவு பொருளீட்டினாலும் அமைதியாக... நிறைகுடத்தைப்போல ஆர்பாட்டாமில்லாமல் வாழ்வது.. எந்தவழியிலும் சம்பாதிக்க தடையில்லை ஆனால் அது சட்டத்திற்கும் நியாயத்திற்கு உட்பட்டதாக .. தவறாகவோ மோசடி செய்தோ .. அதிகாரத்தை பயன்படுத்தியோ இல்லாததாக இருத்தல் வேன்டும்.. அவ்வளவுதான்..
..
இன்றைய காலகட்டத்தில் விஞ்ஞானம் தந்த தொடர்புகளை பயன்படுத்தமாட்டேன் என்பது அறிவீனமே தவிர.. எளிமையல்ல.. e.mail இல்லை சமூகவலைத்தளங்களிலே கணக்கில்லை என்பதை எளிமையாக சொன்னால் அது நகைப்புக்குரியது.. சமூகவலைத்தளங்களில் வரும் செய்திகள்/கருத்துகள் சாமானிய மக்களின் பிரதிபலிப்புகள்.. அவனின் கோபம் குறை எதிர்பார்ப்பு எதிர்ப்பு எல்லாம் தெரிந்துக்கொள்ளாமலேயே இருப்பதென்பது.. கண்ணை மூடிக்கொண்டு உலகம் இருட்டென்பதைப்போல.. நாட்டுநடப்பை நமக்கு வேண்டியவர்கள் மூலமும் கட்சிகாரர்கள் அதிகாரிகள் வழியே தெரிந்து கொண்டால் போதுமென்பது சரியான அணுகுமுறையாகாது..
எதையும் ஏற்றுக்கொள்ளாத பழைமைவாதத்தைப்போல.. மாற்றங்களை ஏற்றுக்கொள்ளாமல் போனால் தோல்வியே மிஞ்சும் .. குறிப்பிட்ட வட்டத்திற்குள் தான் வாழ்வேன் என்பதும் செயல்படுவேன் என்பதும் எளிமையல்ல அறிந்துகொள்ளாமை அடக்கமல்ல அறிவின்மை..
..
அரசியலில் காமராஜர் மிக சிறந்த தலைவரைப்போல சித்தரிக்கிறார்கள்.. நல்லவர் என்பதில் உடன்பாடுண்டு.. சிறந்த நிர்வாகியா என கேட்டால் நிறைய பேசவேண்டிவரும்.. விவசாயிகள் வீடுதேடி வந்து நெல்மூட்டைகளை அரசே அள்ளிக்கொண்டுபோன கொடுமையெல்லாம்.. எம்மை போன்ற விவசாயிகளிடத்தில் கேட்டால் தெரியும் வீட்டுக்கு இவ்வளவுதான் வைத்துக்கொள்ளவேண்டுமென.. சொல்லி விதை மூட்டையை கூட தூக்கி கொண்டு போனா்கள் அவ்வளவு அரிசி பஞ்சம் வந்தது ..
இந்திய அரசியலில் மிக சிறந்த ஆட்சியை .. தொலைநோக்கோடு கூடிய திட்டங்களை.. காலம் கடந்தும் பேசபட கூடிய வகையில் செயல்படுத்தி காட்டி .. இந்தியாவிற்கே வழிகாட்டியது திராவிட ஆட்சிதான்.. கலைஞரின் ஆட்சிதான்.. இதுவரை திமுக மீது சொல்லபட்ட குற்றசாட்டுகளில் ஒன்றை கூட நிரூபிக்க முடியாமல் காலம் கடந்து தவறை உணர்கிறநிலையில் தான் உள்ளோம்..
..
#கையேறுநிலை..
..
Aalanci Spm
Sunday, March 4, 2018
ரௌத்திரம் பழகுவோம்
நாடாளுமன்றத்தில் பிரதமரின் உரைக்கான வாய்ப்பு வரும்போது எத்தனைக் கூச்சல்கள் இடை மறித்தாலும் ‘தம்’ கட்டி, பேச நினைத்ததை முடித்துவிட்டுத்தான் உட்காரும் மோடியை பார்த்திருக்கிறோம். அதேசமயம் நாடாளுமன்ற விவாதங்களில் கலந்துகொண்டு எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கும் புகார்களுக்கும் பதில் சொல்லும் சவாலை இதுவரை ஏற்றுக் கொண்டவர் இல்லை மோடி..
காவிரி மேலாண்மை வாரியம் : மவுனமே மோடியின் ஆயுதம் என்கிறது இந்தியன் எக்ஸ்பிரஸ்..
..
விவாதங்களுக்கு பயந்த ஒரு பிரதமர் மோடி மட்டும் தான் .. பொதுமேடைகளில் 56 இன்ச் மார்பை விரித்து .. உரத்தகுரலில் கதைக்கிறவர் நாடாளுமன்றத்தில் விவாதித்தால் ஓடி ஒளிந்துக்கொளிகிறாரே ஏன்.. நாடாளுமன்றத்தில் கூட யாரையும் எதிர்கேள்வி கேட்கவிடாமல் பேசி முடித்துவிட்டு அமர்ந்ததைதான் இந்தியன் எக்ஸ்பிரஸ் குறிப்பிட்டு சொல்கிறது.. மேடைபேச்சிற்கு நாம் என்ன பேசவேண்டுமென தயாரித்து வந்துவிடலாம். ஆனால் விவாதங்களில் எதிர்கேள்வி கேட்பானே குறிக்கிட்டு தவறை சுட்டிகாட்டுவானே .. இதெல்லாம் கைதட்டி ரசிக்கும் மேடை பார்வையாளனான மக்களிடம் இருக்காது .. அப்படி அவன் கேள்வி கேட்டால் கலாட்டா செய்ததாக அவன் மீது குண்டர் சட்டமே பாயும்..
..
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் பிரதமரின் மௌனம் வாக்கு அரசியலை மையமாக கொண்டது ஏப்ரல் மே மாதங்களில் கர்நாடக தேர்தலை காரணம் காட்டி தடுத்திட நினைக்கிறார்.. உச்சநீதிமன்ற தீர்ப்பையெல்லாம் மாநில அரசு மீறினால் அதன் மீது நீதிமன்ற அவமதிப்போடு மட்டுமல்லாமல் .. அரசை கலைக்ககூட அதிகாரம் இருக்கிறது அதாவது செயலிழக்க செய்து .. அதிகாரிகளை கொண்டு தீர்ப்பை நடைமுறை படுத்தலாம்.. ஆனால் இங்கே உச்சநீதி மன்றத்தின் மௌனத்தில் கள்ளம் உள்ளது.. இப்போது அறிவித்தால் அங்குள்ள தமிழர்கள் பாதிக்கபடுவார்களென சிலர் பதிவிடுகிறார்கள். தேர்தல் முடிந்து காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தாலும் போராட்டங்கள் நடக்கதான் செய்யும் .. அதை சட்டத்தை கொண்டு அடக்கலாம்.. தமிழகத்தில் பந்த் General strike பொது வேலை நிறுத்தம் செய்தால் சட்டப்படி குற்றமென உயர்நீதிமன்றம் சொல்லிம் போது கர்நாடகாவில் கேரளாவில் நடக்கும் போது இந்த வார்த்தை பிரயோகங்களை நீதிமன்றங்கள் பயன்படுத்துவதில்லை..
எதிர்க்கட்சி தலைவர் சொன்னதைப்போல ஒட்டுமொத்த எம்பிக்களும் பதவி விலகலாம்.. ஒட்டுமொத்தமாக தமிழகமே ஸ்தம்பிக்க உறைந்துப்போக Paralyzed செய்யலாம்..
இப்போதைய நிலையில் யாரும் எந்த கட்சியும் பாஜகவை தவிர்த்து அதை எதிர்க்க முடியாது ..
பாஜகவை தனிமைப்படுத்த இது உதவும் ..
மோடியை இனியும் நம்புவதென்பது தலையில் மண்ணை வாரி போட்டுக்கொள்வதற்கு ஒப்பானது.. அதிமுக அரசும் மோடியை பகைத்து கொள்ள மனமில்லாமல் தான் .. சந்திக்க மறுத்ததை கூட .. மறுக்கவில்லை துறை அமைச்சரை பார்க்க சொன்னார் என்கிறார் அமைச்சர் ஜெயகுமார்.. ஏற்கனவே முடியாதென்வரிடமே பேச சொல்லும் திமிர் .. இந்த அடிமைகளால் எதுவும் செய்துவிட முடியாதென்கிற நிலையை உணர்ந்திருக்கிறார்கள்.. பிரச்சனையை பிரதான எதிர்க்கட்சி கையிலெடுக்கவேண்டும் அப்போதுதான் அது இந்தியளவில் பேசபடும்..
..
உச்சநீதிமன்றம் நதி எந்த மாநிலத்திற்கும் சொந்தமில்லை யாரும் உரிமை கோர முடியாதென்ற பிறகு கர்நாடகவையோ தமிழகத்தையோ கேரளாவையோ பாண்டியையோ கேட்க வேண்டியதில்லை மத்திய அரசே நியமிக்கவேண்டும் அது சட்டபூர்வமாக அட்டவணையில் வரவேண்டும் அப்போதுதான் மீதமுள்ள காவிரி படுகையை.. நிலங்களை வயல்களை காப்பாற்ற முடியும்... இனியும் அமைதி காப்பதென்பது .. டெல்டா விவசாயிகளுக்கு மட்டுமல்ல தமிழகத்திற்கு செய்யும் அநீதி
விரைந்து கொஞ்சம் கடுமையான போராட்ட வழிமுறைகளை கையிலெடுப்போம்..
ரௌத்திரம் பழகுவோம்..
..
அரசியல் செய்வோம்..
..
Aalanci Spm
Saturday, March 3, 2018
திரிபுரா சொல்லும் சேதி
திரிபுரா சொல்லும் சேதி..
இனியும் மக்கள் பாஜகவை நம்புகிறார்கள் என்றா.. ஒரு உறுப்பினர் கூட இல்லாத சிறு மாநிலத்தில் .. ஒரேயடியாக அதிகாரத்தில் எத்தியது எப்படி.. மிக சாதூர்யமாக பிரகாஷ்காரத்தை .. ம.கம்யூனிஸ்ட் தலைமைக்கு அனுப்பிய போதே.. இன்னொரு கோர்பசேவ் என அப்போதே சில பழம்பெரும் பொதுவுடைவாதிகள் எச்சரித்தார்கள். நவீன படுத்தபடுத்தபட்ட தங்கள் சித்தாந்தம தோல்வியாக இவர்களே மிக கச்சிதமாக காய் நகர்த்துகிறார்கள்.. மதசார்பின்மையை கட்டிகாக்க இவர்கள் தவறியதும்.. காங்கிரஸ் எதிர்ப்பை மட்டுமே முன்னெடுத்து .. அது பாசிசத்திற்கு வழி வகுக்கும் என அரசியல் பாலபாடம் படிப்பவர் கூட அறிந்திருக்கும் போது.. விவேகமற்று எதிர்ப்பென்ற பெயரில் பாஜகவை வளர்க்க தங்கள் கட்சியை பலிக்கொடுக்கிறார்கள்..
..
வங்கத்தில் என்ன நடந்தது.. காங்கிரஸை எதிர்ப்பதாக சொல்லி காய் நகர்த்த மம்தா காங்கிரஸை விட்டு வெளியேறி தனிகட்சி கண்டதும் எல்வாம் இலகுவாகுமென நினைத்தார்கள்..ஆனால் மம்தா தன் நிலைபாட்டை உறுதி செய்து மக்களின் தலைவராக வலம் வந்தார்.. இப்போது கம்யூனிஸ்ட் மூன்றாமிடத்திற்கு தள்ளபடுகிற சூழல்.. இப்போது திரிபுரா..
..
திரிபுராவில் நிறைய உள்குத்தும் .. காங்கிரஸ் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கியும் கம்யூனிஸ்ட்களிடம் பேரம் பேசபட்டும் .. அதோடு வாக்கு இயந்திர செயல்பாடும் கச்சிதமாக வெற்றி பெற உதவியிருக்கிறது.. வழக்கம் போல் பொலிட்பீரோ விவாதிக்குமென பருப்புவடையையும் மசாலா டீ யையும் குடித்துவிட்டு வழவழ அறிக்கையொன்றை தருவார்கள்.. மிச்சமிருக்கும் கேரளாவையும் தாரை வார்த்துவிட்டு கம்யூனிஸத்திற்கு இறுதி சடங்கை செய்யலாம்
..
பெரியார் மிக சிறந்த தொலைநோக்கு பார்வை கொண்டவர்.. கம்யூனிஸ்ட் கட்சி ஏற்கனவே பிராமணர்கள் கையில் தான் இருக்கிறது அவர்களை மீறி எதுவும் நடக்காது என்றார்.. இப்போது நடக்கும் நிகழ்வுகளை பார்த்தால் பெரியாரின் பார்வை எவ்வளவு சரியென்று புரியும்.. கம்யூனிஸ்ட் கட்சியில் மிகப்பெரிய பொறுப்புகளில் தொடர்ந்து பார்பனர்கள் இருப்பதும் தொடர்ந்து பொலீட் பீரோ வின் முடிவுகள் பாஜகவிற்கு பலம் சேர்ப்பதும் கூர்ந்து கவனிக்கவேண்டிய விடயம்..சட்டென்று ஒருநாளில் நிகழ்ந்துவிடவில்லை சில பத்தாண்டுகாலமாய் மெல்ல மெல்ல பாசிம் வளர ஒருவகையில் கம்யூனிஸ்ட்களே காரணமாகி இருக்கிறார்கள்.. காங்கிரஸை வீழ்த்தவேண்டுமென்று சொல்லி சொல்லியே அறிந்தே பாஜகவை வளர்த்து வந்திருக்கிறார்கள்.. காலில் தரையில் இல்லையென்பதை உணராமலேயே.. கம்பு சுத்துகிறார்கள்.. இனி மிச்சமிருப்பது கேரளம் தான் அதையும் காவு கொடுத்துவிட்டால் அவர்களுக்கு கொடுக்கபட்ட வேலை முடிந்துவிடும்..
..
பாசிசத்தை வளர்தெடுத்ததில் பெரும்பங்கு பொதுவுடைமை போர்வையில் ஒளிந்திருக்கும் பார்பனர்களே காரணம்....
//
பேதைமை என்பதொன்று யாதெனின் ஏதங்கொண்டு
ஊதியம் போக விடல்..
என்றான் வள்ளுவன்..
கேடு விளைவிப்பது எது? நன்மை தருவது எது? என்று தெளிவடையாமல் நன்மையை விடுத்துத் தீமையை நாடுவதே பேதைமை
..
நாட்டின் நன்மையை நாடாது தீமைக்கு துணை போவது அறிவுடையோர் செயல் அல்ல அறிக பொதுவுடைமைகளே..
..
கடைசியாக ..
திமுகவினருக்கு..
மிக சரியாக திட்டமிடாமல் எப்போதும் போல பழைமை பேசிக்கொண்டு திரிந்தோமேயானால்.. கட்சியை செப்பனிடாமல் கயவர்களை இனம் காணாமல் உள்முரண்பாடுகளை களையாமல்
காலம் தருமென நம்பி வீற்றிருந்தால் தமிழகத்திலும் அச்சம் தரும் செய்தியை நாளை காணவேண்டிவரும்.. திமுக கடைசி நம்பிக்கையாக இருப்பதை .. எந்த விலைகொடுத்தும் எந்த அளவிற்கு இறங்கியும் பாஜக களமாற்றும்.. கவனம்.. இங்கே விழித்தெழும் நேரம் வந்துவிட்டதென்பதை நமக்கு உணர்த்துவதே திரிபுரா சொல்லும் சேதி..
..
Aalanci Spm
Friday, March 2, 2018
சர்வாதிகாரம்.. தளபதிக்கு வழங்கவேண்டும்
“கட்சியின் வளர்ச்சிக்காக தன்னை சர்வாதிகாரமாக செயல்பட அனுமதி கொடுக்க வேண்டும்...மு.க.ஸ்டாலின்
..
இது சரியா என வினவும் போது பட்டென்று ஒரு மிகப்பெரிய ஜனநாயக இயக்கத்தில்.. அதிக அதிகாரம் கொண்ட தலைவருக்கு இணையான செயல்தலைவர் பதவியில் இருந்தாலும் தலைவரின் கடந்தகால ஜனநாயக போக்கை அவர் கட்சியை நடத்திட்ட வழிமுறைகளை ..கொஞ்சம் சரி செய்யவேண்டுமென்ற கோரிக்கையை ஏற்பது அது ஒருவித சர்வாதிகார திமிரில் கொண்டுபோய் விடுமோ என்கிற அச்சம் ஏற்படதான் செய்யும்.. ஆனால் நீண்டநாட்களாக களையெடுக்காமல் போன பயிர் விளைந்தாலும் பயனற்று போகுமென்ற யதார்த்தம் நாம் உணரவேண்டும்..
..
திராவிட முன்னேற்ற கழகம் மட்டுமே ஜனநாயகநெறிமுறைகளோடு பயனிக்க இயக்கம் கொஞ்சம் மேலோட்டமாக பார்த்தால் ஒருவரின் கீழ் இயங்கும் கட்சியைப்போல தோன்றினாலும் எந்தவொரு முடிவும்.. செயற்குழு மற்றும் பொதுக்குழு அங்கீகாரம் பெற்றே தீரவேண்டும்.. அப்போதுதான் அதற்கான முழு அங்கீகாரம் கிடைக்கும்..
எனவேதான் தொடர்ந்து ஏற்படும் தொய்வுகளுக்கு காரணமாகிறது...
..
தெளிவான புரிதலோடு கூடிய பாதையை வகுக்கும் போது சில முட்புதர்களை அகற்றி சமன் செய்திடவேண்டும் அதற்கான அதிகாரத்தை தான் திரு.ஸ்டாலின் கேட்கிறார்
எதுவும் எல்லை மீறாதவரை.. ஜனநாயக வரம்புகளுக்குட்பட்ட அதிகார குவியலை.. அது இந்த இயக்கத்திற்கு சமூதாயத்திற்கு நல்லதை தருமென்கிற போது .. குறிப்பிட்ட வரையறைக்குள்ள சர்வாதிகாரம் சிறந்தது..
மக்களுக்கான இயக்கம் இது இந்த இனத்தின் ..இன மக்களின் மொழியின் அதன் மேம்பாட்டிற்காக.. இந்த சமூகத்தின் ஏற்றதாழ்விற்கெதிராக பின்னப்படும் வலைகளை அறுத்தெறிய.. தொடர்ந்து ஒரு இயக்கத்தின் சுணக்கம் அது இந்த சமுதாய மக்களுக்கு வாழ்வில் மிகப்பெரிய அநீதியை நம் இன பகையால்... இன துரோகிகளைக் கொண்டு சூழ்ச்சி வலைப் பின்னப்படும் காலக்கட்டத்தில் .. எழுச்சியோடு கூடிய புதியதொரு தாக்குதலுக்கு இயக்கத்தை தயார் செய்ய... நான்காம் தலைமுறையின் நவீனபடுத்தபட்ட செயல்திட்டங்களுக்கேற்ப .. செயல்படும் அதிகாரத்தை தளபதி அவர்களுக்கு வழங்க வேண்டும்.. அப்போதுதான்.. இன்னமும் வேகம் கூடிய விவேகத்தின் சரியான பாய்ச்சலில் இயக்கத்தை செலுத்தமுடியும்..
..
நாகரீகமாக செயல்படும் தளபதியாரின் மிக சாதூர்யமான செயல் திட்டங்கள் புதிய அரசியல் உக்தியை .. அது இந்த மக்களுக்கான உரிமைகளுக்காக .. பயன்படும் வகையில் இருத்தல் அவசியம்.. இதோ இப்போது கூட காவிரி பிரச்சனையில் முதல்வர் நம் தளபதியோடு ஆலோசிக்க முடிவெடுத்திருப்பது.. காலத்தின் கட்டாயம்.. திமுக மட்டுமே மிக சிறந்த வழிகாட்டுதலை இந்த தமிழக மக்களுக்கு காட்டமுடியுமென மக்கள் நம்ப தொடங்கியிருக்கும் தருணமிது.. இக்காலகட்டத்தின் அவசியம் கருதி தளபதி அவர்கள் விரைந்து செயல்பட .. எல்லைக்குட்பட்ட சர்வாதிகார செயல் நல்லது.. விளங்கும்படி சொல்லவேண்டுமெனில்.. பொம்மலாட்டமாக இல்லாமல் கட்டத்திற்குள் நின்றாடும் பாண்டியாட்டமாக விளங்கிட வேண்டும்..
..
வாழ்த்துக்களோடு .. அதிகார வரம்பை உயர்த்தி வழங்கி செயல்பட செய்வோம்..
நம்புங்கள் தளபதியை நல்லதே செய்வார்..
..
Aalanci Spm
Thursday, March 1, 2018
ஸ்ரீதேவி எனும் தேவதை
ஸ்ரீதேவி..
மரணம் நிறைய பேசபடுகிறது.. ஆரம்பத்தில் அய்யகோ என்றவர்கள் அவர் இரத்தத்தில் ஆல்கஹால் இருந்தது அறிந்து நிறைய பொங்கிவிட்டார்கள்..
அவரது உடலுக்கு தேசியகொடியா என கேள்வியில் முடிந்தது ஸ்ரீதேவியெனும் கலைஞியின் பயணம்..
..
முதலில் ஒரு தனிமனுஷியின்.. வாழ்வில் நடந்தேறிய விடயங்களை நாம் கேள்வி கேட்க முடியாது அவரின் அன்றாட பழக்கவழக்கங்கள் நம்மை சமூகத்தை பாதிக்காதவரையில் நாம் யார் அவரின் சொந்த விடயங்களைப் பற்றி பேச கருத்திட ..
ஐம்பது வருடங்களுக்கு முன் ஒரு சாதாரண கிராம பின்னணியில் பிறந்து .. பார்பனர்கள் ஆதிக்க நிறைந்த சினிமாலில் நுழைந்து தன் மழலை மொழியில் நம்மை கட்டி போட்டு .. தனித்துவத்தோடு நிலைநின்று .. கன்னியாய் அறிமுகமாகிய போது கவர்ந்திழுக்கும் அழகும் அதோடு சிறந்த நடிப்பு திறனும் ..அன்றைய முன்னணி நடிகர்களின் படங்கள் வெற்றிக்கு பெரிதும் உதவியது.. ஸ்ரீதேவி என்ற நடிகையின்
உழைப்பும் திறமையும் மட்டுமே சில நடிகர்களை சூப்பர் அந்தஸ்திற்கு உயர்த்தியதென்றால் அது மிகையில்லை..
..
ஒரு பெண் ..சாதாரண குடும்பத்திலிருந்து மிகப்பெரிய சினிமா தொடர்பில்லாத சூழலில் திரை உலகில் நுழைந்து அசாத்திய திறமையால் வென்ற கதை.. நிறைய வெற்றி படங்களுக்கு தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் இந்தியென.. முக்கிய காரணிய திகழ்ந்தவர்..
கதாநாயனுக்கு இணையாக கட்அவுட் வைக்கப்பட்டதெல்லாம் ஸ்ரீதேவிக்குதான்.. அவரின் திறமையை சரியாக அங்கீகரிக்காத அரசு.. அவரோடு இணைந்து நடித்தவர்களை உயர்த்திப்பிடித்ததெல்லாம் நாடறிந்த கதை..
ஸ்ரீதேவியின் இந்தி நுழைவு அதுவரை தென்னகத்திலிருந்து சென்ற சில நடிகைகளைப்போல அல்லாமல் மிகப்பெரிய திருப்பத்தை தாக்கத்தை ஏற்படுத்தியது.. வசூலில் புதிய உச்சத்தை தொட்டதெல்லாம் அப்போது பேசபட்டது..
..
நம்மை மகிழ்வித்த கலைஞர்.. அசாதாரண சூழலில் இருந்து உச்சத்தை தொட்ட பெண்.. அழகும் கவர்ச்சியும் மட்டுமே உயரத்திற்கு கொண்டுபோகாது மாறாக அசாத்திய திறமை மிக முக்கியம்.. அந்த திறமையாளருக்கு அரசு செய்கிற மரியாதை..
சில அரசியல் தலைவர்களை போல ..பொய்பேசி திரியவில்லை மக்கள் பணத்தை கொள்ளையடித்து அதை நியாயபடுத்தவில்லை..
எத்தனையோ தலைவர்கள் மது அருந்திவிட்டு.. கவர்னர் மாளிகையிலேயே கூத்தடித்திருக்கிறார்கள் அவர்களுக்கெல்லாம் அரசு மரியாதை செய்திருக்கிறது..
ஆனால் ஸ்ரீதேவிக்கு செய்வதை மட்டும் நாம் விமர்சிப்போம்..
..
காலம் கடந்தும் சினிமா உலகம் பேசும் பெண்மணி ஸ்ரீதேவி..
..
Aalanci Spm
Subscribe to:
Posts (Atom)