Saturday, August 5, 2017

இழிபிறவி..

sc என்ற இழிவு பட்டியலிருந்து... வெளியேற்ற வலியுறுத்தி போராட்டம்.. பள்ளர் இனத்தலைவர் என சொல்லிக் கொள்ளும் கிருஷ்ணசாமி.. .. இவர் வெளியேறி உயர்ஜாதி அய்யர் அய்யங்காராக கூட மாறி கொள்ளட்டும் அதற்காக sc பிரிவை பட்டியலினத்தை இழிஜாதி என சொல்ல இவருக்கு என்ன யோக்கியதை இருக்கிறது . இவரை மீது வன்கொடுமை சட்டத்தில் கைது செய்யவேண்டாமா.. .. அதாவது தாழ்த்தபட்டவர்கள் இழிவானர்கள் போன்ற தோற்றத்தை ..இதுவரை தாழ்த்தப்பட்டவனாக இருந்தவன் என சொல்ல வருகிறாரா.. தரம் தாழ்ந்து பேசுகிற வார்த்தை உண்மையில் இவரின் தரத்தை நமக்கு வெகுகீழாக காட்டுகிறது.. மிக மோசமான விமர்சனம் இது .. அதைவிட இவரின் மனநிலை ஏதோ தான் உயர்ந்தவன் மற்றவன் தாழ்ந்தவன் என்கிற போக்கை வெளிபடையாக காட்டுகிறது.. இவர் பட்டியலினத்தவன் என சொல்லிதான் மருத்துவம் பயின்றார்.. அப்போதெல்லாம் தெரியாதா..இதே பட்டியலினத்தவர் தொகுதியில் நின்றுதான் சட்டமன்றம் சென்றார் அப்போதே பொது தொகுதியில் நின்றிருக்கவேண்டியதுதானே.. வாக்கிற்கு மட்டும் தனி தொகுதி வேண்டியிருந்ததா..இப்போது ஏன் கசக்கிறது.. .. உண்மையில் மற்றவரை தாழ்வாக எண்ணும் மனநிலை கொடூர மனப்பான்மை உள்ளவர்களால் மட்டுமே முடியும் சக மனிதனை தாழ்த்தியும் தம்மை உயர்த்தியும் பிடிப்பவர்கள் மனநிலை பாதிக்கபட்டவர்களாகவே பார்க்கவேண்டும்.. உண்மையில் மதவெறி கொண்டு அலைபவன் கொடூரமானவர்கள் என்றால் அதைவிட தன் ஜாதியை உயர்த்தியும் பிற ஜாதியை கீழாகவும் பார்க்கிறவர்கள் வக்கிரமான மிக கொடூரமான மனநிலை பாதிக்கபட்டவர்கள்.. மதவெறியை தூண்டிவிடுகிறவனின் முதல் ஆயுதம் ஜாதியில் நீதான் உயர்ந்தவன் மற்றவர்கள் உன்னிலும் தாழே என புத்திசலவை செய்வதுதான் பிறகுதான் பிற மதங்களின் மீது குதிரை ஏறுவார்கள்.. .. என்னதான் sc பட்டியலினத்திலிருந்து bc/ mbc பிற்படுத்தபட்ட மிகவும் பிற்படுத்தபட்ட வகுப்பிற்கு சென்றாலும் ஏற்கனவே அங்குள்ளவர்கள் உங்களை இழிவாகவே பார்பார்கள்.. நீங்கள் பட்டியல் இனத்தவர் தாழ்ந்தவராக பார்த்தால் உம்மை பாப்பான் இழிபிறவியாக தான் பார்ப்பார்கள் அதைதான் எங்கள் #பேராசான்_பெரியார் உயர்ஜாதிக்காரர்களுக்கு நம்ம (sc st bc mbc) எல்லாருமே சூத்திரன் தான் என்பார்.. . முதலில் மனிதனை சக மனிதனாக சமமானவனாக உயர்ச்சி தாழ்ச்சியற்ற பிறவியாக பார்க்க தொடங்குங்கள்..மனிதம் தானாய் வரும்..இல்லையேல் மனிதாய் பிறந்தும் ஏதும் பயனில்லை.. .. #மனிதாய்_வாழ_பழகு.. .. தோழர். ஆலஞ்சி

Friday, August 4, 2017

நீட்..

காலம் தாழ்ந்து முறையிட்டதால் நீட் தேர்விலிருந்து விலக்களிக்க முடியாது பொன்.ராதா.. .. ஆரம்பம் முதலே தமிழகம் நீட்தேர்விற்கு எதிர்ப்பதை பொன்.ராதா அறிந்திருக்கவில்லையா.. திமுக தொடர்ந்து எதிர்ப்பதும் ஏன் முதலமைச்சராக இருந்தவரை ஜெயலலிதா மிக கடுமையாக எதிர்த்ததும் இந்த மரமண்டைக்கு தெரியாதா.. தமிழகத்தின் சார்பாக வெற்றி பெற்று சென்று கேரளாவிற்கு சாதகமாக பேசியவர்தானே இவர்.. .. தமிழக மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறி ஆக்கிவிட்டு தன் எஜமானர்களுக்கு ஆதரவாக பேசி திரிகிறார்.. முலைவரி கட்டமுடியாதென கூறி அறுத்துவிசியவளின் பேரன் காலில் விழுந்து கும்பிட்டு தன் குலத்திற்கே கேடாய் நிற்கிறான்.. இதோ மோடியின் சூழ்ச்சி இப்போது வெளிபட்டிருக்கிறதே என்ன பதில் சொல்ல போகிறார்.. அகில இந்தியளவில் மொத்த 28000 இடங்களில் ... 11020 இடங்களை குஜராத் மாணவர்கள் அதாவது ஏறக்குறைய 40% விழுக்காடு வெற்றி பெற்றிருக்கிறார்களே இது மற்ற மாநிலங்களை சேர்ந்த மாணவர்களின் உரிமையை பறிக்கும் செயலாகாதா.. குஜராத் மாநில மாணவர்களுக்கு எளிய கேள்வியை கேட்டு பெருமளவில் தேர்வாக வழி செய்தது அயோக்கியத்தனமில்லையா .. இதையெல்லாம் கேட்காத கண்டிக்காத அடிமைத்தனத்தில் ஊறிப்போன மரத்துப்போன ராதா அவர்கள் தமிழகம் காலம் தாழ்த்தி முறையிட்ட சொல்வது என்ன நியாயம் .. ஏன் இவருக்கு அந்த பொறுப்பில்லையா தமிழக மாணவர்களின் நலனை பாதிக்கிற நீட் தேர்வு இவர் தனது அதிகாரத்தை பயன்படுத்தி தடுத்திருக்ககூடாதா (அதிகாரம் இருந்தால் தானே) அல்லது மோடியிடம் சொல்லி இது எதிர்வினையாற்றும் என விலக்களித்திருக்கலாமே.. .. தமிழக அரசு காலம் தாழ்த்திருக்கலாம் அனுப்பிய நீட்தேர்வு மசோதா எங்கிருக்கிறதென்றே தெரியவில்லையென்ற பாப்பாத்தி திமிரில் பேசிய நிர்மலாவை கண்டித்து உடன் வழிவகை செய்திருக்கவேண்டாமா.. இவருக்கு தார்மீக பொறுப்பில்லையா..? வண்டிக்காரன் இல்லாததால் மாடு தாறுமாறாக ஓடிக்கொண்டிருக்கிறது.. தெரியாமல் வண்டியை ஓட்டுக்கிறவனோ திசை தெரியாமல் நிற்கிறான்.. இதெற்கெல்லாம் காலம் தரும் விடையாய் தீர்வாய் திமுகவை அறியணை ஏற்றுவதுதான் .. ஓரே வழி.. அதுவரை இவரை போன்ற அரைகுறைகள் துள்ளிகுதிக்கட்டும்.. கடைசியில் பலியாடாய் போவர்.. .. தோழர். ஆலஞ்சி

Thursday, August 3, 2017

கண்ணாடி..

கண்ணாடிக்கு வயதாகிவிட்டதோ.. முன்புபோல் அழகாய் இல்லை.. .. அம்மா தலைவாரிய போது அவளோடு சேர்ந்து சிரித்து நின்ற போது எத்தனை அழகாய் இருந்தது இந்த கண்ணாடி.. பள்ளிக்கு செல்லும் போது நான் பார்த்த அதே கண்ணாடி.. எத்தனை அழகாய் இருந்தது.. அரும்பு மீசை வர.. அண்ணனின் மல்லுவேட்டியை அவனுக்கு தெரியாமல் கட்டி நின்ற போது ஆஹா.. எவ்வளவு அழகு இந்த கண்ணாடிக்கு.. பெருநாள் திருநாளில் புத்தாடை உடுத்தி பூரித்து நின்றபோதெல்லாம் நல்ல ரசமாக இருந்தது இந்த கண்ணாடி காதல் வந்து தலையை சீவி..சீவி.. சிங்காரம் செய்த போதெல்லாம் எத்தனை பிரகாசமாய் .. ஜொலித்திந்த கண்ணாடி.. கல்யாண மாப்பிள்ளையாய் நலுங்கு தேய்த்து குளித்து நறுமணம் பூசி.. நின்ற போது பிரமித்து நின்ற கண்ணாடி.. கரம் பிடித்தவளை கழுத்தோடு சேர்த்தணைத்து காரியமாய் கிசுகிசுத்தை கண்டும் காணாமல் கள்ள மௌனம் காத்த கண்ணாடி.. .. நான் வரைந்த ஓவியம் என் கழுத்தை கட்டிக்கொண்டு கண்ணத்தில் முத்தமிட்டு தாடி குத்துத்துப்பா என்ற போது.. பேரழகாய் பெருமையாய் கர்வத்தோடு ஜொலித்த கண்ணாடி. .. என்னவாயிற்று இந்த கண்ணாடிக்கு ரசம் போனதோ.. முன்பு போல் அழகாய் இல்லை.. என் மீது பொறாமையோ என் அழகை பார்த்து பார்த்து புளித்துப்போனதோ .. ஆனால் ஒன்று சொல்வேன்.. ஏய்.. கண்ணாடியே.. நீ ... முன்பு போல் இல்லை புறத்தை பார்த்து பார்த்து புறத்தை காட்டி காட்டி உன் புறமும் மங்கிப்போனது இனியேனும்.. அகத்தை காட்டு அது .. பேரழகாய் மின்னும். .. தோழர். ஆலஞ்சி

Wednesday, August 2, 2017

அன்புமணி...

ஸ்டாலினிடம் கேட்டால் துரைமுருகன் பதில் தருகிறாரே.. அன்புமணி.. உண்மையில் துரை கூட பதில் அளித்திருக்க தேவையில்லை மாவட்ட செயலரே போதும்.. பதில் அறிக்கையில் இது துரைமுருகன் எழுதியதா என கேள்வியும் திமுக செய்த துரோகங்கள் என்றெல்லாம் சொல்கிறவர் திமுக செய்த போராட்டங்கள் அறிக்கைகளோடு பாமக போராட்டங்களையும் அறிக்கைகளையும் பட்டியலிடமா என கேட்கிறார். .. திமுக ஒரு போராட்டத்தை அறிவித்தால் அது எந்தளவிற்கு தாக்கத்தை தருமென மக்களுக்கு தெரியும் தினம் தினம் தெரு கோடியில் நின்று கத்துவதால் பலனில்லை எந்த போராட்ட வடிவமும் மக்களிடையே ஆதரவையும் ஆளும் அரசிற்கு சங்கடத்தையும் தரவேண்டும் இதுவரை பாமக அறிவித்த போரட்டங்கள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறதா.. யாராவது சட்டை செய்கிறார்களா நாலோடு ஐந்தாக நின்றால் யார் கவனமும் வராது.. இதில் நாங்கள் தான் எதிர்க்கட்சியை போல செயல்படுகிறாராம்.. தேர்தலில் கட்டிவச்ச காசை கூட திரும்ப பெற வக்கில்லாதவர் நான் தான் சிறந்த மக்கள் செல்வாக்கு பெற்றவரென சொல்வது நகைச்சுவையாக கூட இல்லை.. .. என்னை பார்த்து காப்பி அடிக்கிறார் ஸ்டாலின் அடிக்கடி சொல்லும் வார்த்தை .. தமிழகத்திற்கே #அரசியல்_சொல்லி_கொடுத்தவரின் நிழலொட்டி வந்தவர்கள் நாங்கள் எதை எப்படி எங்கே செய்வதென அறிவோம்.. அடிக்கடி கூச்சல் போடுவதால் அரசியல்வாதியாகி விட முடியாது ஸ்டாலினைப்போல இவரும் நெடும்பயணம் செய்கிறார் என சொல்கிறோமா இல்லையே.. இவர் வன்னியர் அதிகம் வாழும் பகுதியில் புல்லட்டில் போகலாம் அது கூட அதே வன்னிய சமூகம் கைவிட்டதை மீண்டெடுக்க என்பதும் பெருவாரியான அந்தசமூகமக்களிடம் ஆதரவில்லையென்பதும் அறிவோம்.. முதலில் அரசியல் செய்ய கற்றுக்கொண்டு வரவேண்டும் ஒன்டிக்குகொன்டி வரியான்னு வேலைவெட்டி இல்லாதவன் வேணும்ன்னா சொல்லிக்கிட்டு திரியலாம்.. ஆனால் தளபதி அப்படியில்லை அவர் செயல்தலைவர் மட்டுமல்ல பொறுப்புள்ள எதிர்க்கட்சித்தலைவர்.. அவர் பதிலளிக்காததிலிருந்தே உமது மதிப்பும் யோக்கியதையும் புரிந்திருக்கும்.. தளபதி பதில் சொல்லவேண்டுமென்றால் முதலில் அதற்கான தகுதியை வளர்த்துக்கொள்ள வேண்டும்..அல்லது குறைந்தபட்சம் எம்எல்ஏ தேர்தலில் டெபாசிட் வாங்கியாவது இருக்கவேண்டும்.. அல்லது குறைந்த பட்சம் சிறியளவிலாவது மக்களின் மதிப்பை பெற்றிருக்கவேண்டும்.. திருமா கூட கட்டிவச்சகாசை பெற்றார்.. .. துரைமுருகன் பதிலளித்திருக்காரே என நினைக்கலாம்.. ரொம்ப சவுண்ட் அதிகமா போனா ஆப் பண்ணற சுவ்ட்ச் அண்ணன் கிட்டதான் இருக்கு அவர் கிண்டலா பதில் சொன்னாதான் சிலருக்கு உரைக்கும் அதனால சொன்னார்.. உனக்கு என்ன கேள்வி கேட்கணுமோ மறந்திடாமா எழுதிக்கிட்டு வா.. தம்பி பிரசன்னா போதும் அவர்கிட்ட பேசி ஜெயிட்டு..பிறகு வட்ட ..மாவட்டம்ன்னு பேசி ஜெயிட்டு பிறகு தளபதியை அழைக்கலாம்.. முதலில் கடைநிலையில் கட்சிக்காக உழைக்கிற திமுககாரனிடம் விவாதிக்க முடியுமா என்று பாருங்கள்.. .. என்னிடம் ஆட்சியை கொடுங்கள் ஒரே வாரத்தில் ஓஎன்ஜிசியை தமிழகத்தை விட்டே அனுப்புகிறேன் .. இதெல்லாம் மேடைபேச்சுக்கு சரி.. எம்ஜிஆர் தான் ஓஎன்ஜிசி க்கு அனுமதி தந்தார்.. ராஜஸ்தான் போன்ற மாநிலங்கள் அனுமதி மறுத்த போது இங்கே அழைத்துவந்தார் அரியலூர் போன்ற மாவட்டங்கள் வறண்டுபோக இதுவும் ஒருகாரணம்.. ஓஎன்ஜிசியை வெளியேற்ற வேண்டுமெனில் வழக்கு பேச்சுவார்த்தையென பலவருடங்கள் ஆகும் இதுகூட தெரியாமல் தன்னை சிறந்த நிர்வாகியென அவரே சொல்லிக்கொள்கிறார்.. #காலக்கொடுமை .. #முதலில்_தவழ_பழகுங்கள்.. .. தோழர். ஆலஞ்சி

அத்வாலே ..நிர்மலா..

திருநங்கைகள் சேலை அணியக்கூடாது மத்திய அமைச்சர் அத்வாலே.. பிச்சை எடுத்து தின்பவர்களுக்கு கேஸ் மானியத்தை நிறுத்தவில்லை பாப்பாத்தி நிர்மலா... .. திருநங்கைகளை இப்படிதான் உடையணியவேண்டுமென சொல்ல இவர்களுக்கென்ன உரிமை இருக்கிறது.. உ.பி.யை சேர்ந்த குடியரசு கட்சி தலைவர் மத்திய இணை அமைச்சர் அத்வாலே பேசியிருக்கிறார் முதலில் திருநங்கைகள் என அழைப்பதையே விரும்பாமல் கொச்சையாக பேசி திரிந்ததவர்களை கலைஞர் தான் திருநங்கைகளென அழைத்து அவர்களையும் இந்த சமூகம் மதிக்கவேண்டுமென செய்தார்.. ஹார்மோன்களில் ஏற்படும் மாற்றங்களால் ஆண் பெண்ணாக... அதை இந்த சமூக கொஞ்சம் இரக்கமின்றி வசைபாடுவதும் தொடர்ந்து கொண்டுதானியிருக்கிறது.. ஆண் பெண் இருபாலினங்களை அடுத்து மூன்றாம் பாலினம் என அழைக்கலாமென நீதிமன்றம் வலியுறுத்தியும் அவர்களுக்குரிய இடத்தை தர இந்த சமூகம் தொடர்ந்து மறுத்துவருகிறது.. இதில் இப்போது ஆண்களைப்போல உடையணிய வேண்டுமென அமைச்சரே பேசுவது முட்டாள்தனமானது அவர்களின் தனி மனித உரிமைகளை மட்டுமல்ல அவர்களின் விருப்பங்களுக்கெதிரானதும் கூட... திருநங்கை மட்டுமல்ல யாரையும் எந்த உடையணியவேண்டுமென நிர்பந்திப்பது அநாகரீகமானசெயல்.. நாளை பெண்கள் ஜீன்ஸ் போட கூடாதென்று கூட சொல்வார்கள்.. எவருடைய சுதந்தரத்திலும் தலையிட அரசுக்கோ ஆட்சியாளர்களுக்கோ உரிமை இல்லை.. .. பிச்சையெடுத்து தின்கும் கோவில் குருக்களுக்கு மானியம் ரத்து இல்லையென்கிறாரா.. ? நிர்மலா சமீபகாலமாக திமிரோடு பேசிவருகிறார் பிச்சையெடுத்து உண்பவர்களென யாரை சொல்கிறார்.. அர்ச்சனை தட்டை ஏந்தி நிற்கிறானே ஏழை குருக்கள் அவர்களை சொல்கிறாரா.. மனு ஸ்மிருதி பிராமணர் என்பவர் யாசித்தே உண்ண வேண்டும் என்கிறது கீதை.. அதைதான் சொல்கிறாரா..ஏனெனில் பார்பனர்களிலும் நிறைய உட்பிரிவுகள் உண்டு .. குருக்கள் வீட்டிலோ சாவுக்கு சடங்கு செய்யும் (திதி) பார்பான் வீட்டில் அய்யங்காரெல்லாம் சாப்பிட கூட மாட்டார்கள் பிச்சையெடுப்பவர்களிடம் பிடிங்கவில்லை என்ற திமிர்பேச்சு .. நேர்மையான முறையில் மக்களை சந்தித்து ஆதரவு பெற்று பதவிக்கு வந்திருந்தால் மக்களை மதிக்க தெரிந்திருக்கும்.. திறக்கப்படாத கதவுகளையே தங்களின் ஆயுதமாக்கி பதவிக்கு வந்தவர்களிடம் வேறென்ன எதிர்ப்பார்க்க முடியும்.. புறவாசல் வழியாக வருகிறவர்கள் பிச்சைகாரர்களை விட கேவலமானவர்கள்.. .. விடுதலை கிடைத்தும் இன்னும் மக்களை பிச்சைக்காரர்களாக வைத்திருப்பதை எண்ணி வருந்தப்படவேண்டாமா...என்ன காரணம் அனைத்து உயர்பதவிகளையும் ஒரு குறிப்பிட்ட சமூகமே அனுபவித்து மற்றவர்களை அவர்களிடம் அடிமையாக நடத்தியது யார்.? தொடர்ந்து மக்களை ஏழைகளாகவே வைத்திருந்தது யார் குற்றம்..? ஆட்சி அதிகாரமிருக்கிறதென்பதற்காக எதையும் செய்யலாம் எதைவேண்டுமானாலும் பேசலாம் எப்படி வேண்டுமானாலும் நடந்துக்கொள்ளலாம் என நினைத்தால் மக்கள் திருப்பி பதிலடி தருகிறபோது இருக்குமிடம் தெரியாமல் போவீர்கள்.. .. தோழர். ஆலஞ்சி

Tuesday, August 1, 2017

கேடுகெட்டவர்கள்

அமைச்சர் விஜயபாஸ்கர் சொத்துகள் முடக்கம்.. வருமானவரித்துறை சோதனையும் அதை தொடர்ந்து அவரது குவாரி மற்றும் சொத்துகளை முடக்கியிருக்கிறது வருமானவரித்துறை... .. ஊழலுக்கெதிராக பொங்குகிற மோடி அரசு அமைதுகாக்கிறது.. என்ன காரணம் தமிழக அரசும் முதல்வர் எடப்பாடியும் இதுகுறித்து கருத்தேதும் சொல்லவில்லையே ஏன்.. 2ஜி வழக்கில் விசாரணை நடக்கும் போதே விலக சொன்ன நடுநிலைகளும்.. துருவி துருவி விசாரித்தும் ராசாவிடம் ஒரு பைசா கூட அதிகமாய் முறைகேடாய் சொத்து சேர்த்ததாக கண்டெத்த முடியவில்லை.. ஆனால் கோடி கோடியாய் பணமும் சொத்து ஆவணங்களும் கண்டெத்தி அதை முடக்கிய பிறகும்.. ஊழலுகிகெதிராக பொங்குகிறவர் நவதுவாரங்களையும் மூடிக்கொண்டிருக்கிறார்களே ஏன்.. எத்தனை விழுக்காடு கமிஷன் என விகிதம் வைத்து பிரித்துக்கொண்டார்களா அல்லது குருமூர்த்திகளிடம் சரண்டர் ஆகிவிட்டார்களா.. .. அதிமுக அமைச்சர்களை முறையாக விசாரித்தால்.. இன்னும் நிறைய பேர்களின் சொத்துக்களை முடக்கநேரிடும்.. ஆம் அக்கட்சியின் தலைவியே ஊழல் செய்து முறைகேடாக சொத்து சேர்த்தாரென்றுதான் முதல்வர் பதவியை பிடிங்கி கொண்டு சிறைக்கு அனுப்பபட்டார்.. அவரின் வாரிசுகள் இது கூட செய்யவில்லையென்றால் எப்படி.. இதில் ஜெயகுமார் வேறு திமுக தான் முதன்முதலாக ஊழலுக்காக கலைக்கப்பட்டதாக சொல்லி திரிகிறார்.. திமுக கலைக்கப்பட்டகற்கு ஊழல் அல்ல காரணம் எமர்ஜென்சி.. அப்போது குறிறம் சாட்டிய எம்ஜிஆர் நீதிமன்றத்தில் பத்திருக்கையில் வந்ததைதான் நானும் சொன்னேன் என்று பல்டி அடித்ததெல்லாம் ஜெயகுமாருக்கு தெரியாது.. ஊழலுக்கு ஒருமுறையல்ல இரண்டுமுறை பதவி நீக்கம் செய்யப்பட்டவர் இந்தியாவிலேயே ஜெயலலிதா தான் ஒரு முறை உச்சநீதிமன்றமும்..ஒரு முறை விசாரணை நீதுமன்றமும் பதவியை பிடிங்கிகொண்டு சிறையில் தள்ளியது இதெல்லாம் தெரியாமல் அல்ல உயிரோடிருந்த போது காலில் விழவைத்த ஜெயலலிதாவை இப்போதாவது காரி உமிழவேண்டுமென்பதற்காக பேசுகிறார் போலும் .. .. ஊடகங்கள் திமுகவென்றால் நிரூபிக்க முடியாமல் போனாலும் தொடர்ந்து விமர்சனம் செய்வதும் ..அதிமுக என்றால் நிரூபிக்க தண்டனை வழங்கப்பட்டாலும் வாய்மூடி நிற்பதும் கேவலமான செயல்.. இதே நிலையைதான் சிலர் மனநோய் பாதிக்கப்பட்டவர்கள் போல திமுகவை தொடர்ந்து ஆதாரமில்லாமல் வசைபாடிக்கொண்டே இருப்பார்கள்.. .. மத்திய அரசும் அதிமுகவை மிரட்டி பணியவைக்க அவர்களின் தவறுகளை ஊழல்களை பயன்படுத்துகிறது அதன் மூலம் தாங்கள் நினைத்ததை சாதித்துக்கொள்கிறார்கள்.. ஐம்பது வருடங்களாக எதையெல்லாம் இழந்தார்களோ அதையெல்லாம் முறைகேடாக அடைய அதிமுகவினரை பயன்படுத்துகிறார்கள்.. .. #கேவலமானஆட்சியும்_கேடுகெட்டவர்களும் .. தோழர். ஆலஞ்சி

நக்கி குடிப்பாய்

நக்கி குடிப்பாய் அதையே நல்லதென்றே சொல்வாய் .. புரட்சிக்கவிஞர் பாவேந்தர் .. கிருஷ்ணசாமிக்கு எவ்வளவு பொருந்துகிறது பாருங்கள் .. நீட் தேர்வுக்கு ஆதரவாக போராட்டம் நடத்துகிறார்..இதில் கொடுமை என்னவெனில் இதனால் ஆதாயம் அடைகிறவன் அமைதியாக இருக்கிறான்.. பாதிப்பிற்குள்ளாகிறவன் போராடுகிறான் அதுவும் வேண்டாமென்று.. போராடுவது அவரின் தனிப்பட்ட விருப்பமாக இருக்கட்டும் அதற்காக அவர் சொல்லும் காரணம் நம்மை சிரிக்கவைக்கிறது .. ஐந்து லட்சம் செலவு செய்து நீட் தேர்வு பயிற்சி எடுத்த மாணவர்களுக்காக இவர் பரிதாபப்பட்டு நீட் தேர்வை வேண்டாமென்கிறாராம்.. .. எனக்கு தெரிந்தவரை இவரின் சமூகத்தில் ஒரு சிலர் வேண்டுமானால் கொஞ்சம் வசதியாக இவரைப்போல இருக்கலாம் ஆனால் ஒட்டுமொத்தமாக கணக்கில் கொண்டால் வறுமையின் நிழலில் வாழ்வோரே அதிகம்.. தினக்கூலிகாக .. விவசாயத்தை நம்பி இருப்பவர்களாக சற்று வசதியாய் அரசுபணிகள் இருப்பவர்கள் அதாவது நடுத்தர குடும்பங்கள் இவர்கள் யாரும் ஐந்து லட்சம் செலவு செய்து நீட்தேர்வுக்கு தயாராக கோச்சிங் எடுக்கவில்லை.. இவர் சார்ந்த சமூகமென்றில்லை ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்கள் ஐந்து லட்சம் செலவு செய்ய (மருத்துவ நுழைவுதேர்வுக்காக) தயாரில்லை என்பதைவிட வழியில்லை என்பதுதான் நிஜம்.. .. சமீபகாலமாக கிருஷ்ணசாமியின் நடவடிக்கைகள் ஆள்வோருக்கு அதிக வெண்சாமரம் வீசுகிற செயலாக இருக்கிறது ஏதோ ஆதாயத்திற்காக இவர் இப்படி செயல்படுவதாகவும் .. அதற்காக தான் சார்ந்த சமுகத்தை பலிகடாவாக்க கூட தீர்மானித்து விட்டார் எந்தளவிற்கு வேண்டுமானாலும் இறங்கி வந்து நக்கி பிழைக்க தயாரென விமர்சனங்கள் வருகிறது.. ஒன்றை புரிந்துக்கொள்ளவேண்டும்.. கிருஷ்ணசாமி தமிழக அரசியலில் எதையுமே சாதித்துவிட முடியாது தென்மாவட்டங்களில் வசிக்கும் பள்ளர்களின் செல்வாக்கை கூட இழக்க நேரிடும்.. மத்திய மாவட்டங்களிலோ வடமாவட்டத்திலோ அவர் சார்ந்த சமூக மக்களிடம் பெரியதாக செல்வாக்கோ வரவேற்போ இல்லை.. இருப்பதையும் கெடுத்துக்கொண்டு நடையை கட்டவேண்டும்.. ஆனால் நடையை கட்டும் போது நன்றாக செழித்திருப்பார்.. ஆனால் அவரது சமூகம் இன்னும் ..கீழே போயிருக்கும்.. .. நக்கி குடிப்பாய் அதையே நல்லதென்று சொல்வாய்.. .. தோழர். ஆலஞ்சி