Thursday, April 6, 2017

தெங்கதிரோன்..எங்கள் தளபதி..

#தெளிவளிக்க இருட்கதவை உடைத்தெறிந்தான் பரிதி! திசைமகளை அறிவுலகில் தழுவுகின்றார் மக்கள்; ஒளியுலகின் ஆதிக்கம் காட்டுகின்றான்; வானில் உயர்கின்றான்; உதயசூரியன் வாழ்க நன்றே! ... என்றார் எங்கள் #புரட்சிக்கவிஞர்_பாவேந்தர். .. ஆம்.. உதயசூரியனாய் தளபதி.. பணத்தை காட்டியும் பிணத்தை காட்டியும் அரசியல் செய்கிற நிலையிலும்..நேர்மையான அரசியலை முன்னெடுக்கிற.. அனைத்து தரப்பினரும் விரும்புகிற நேசிக்கிற தலைவனாக மிளிர்கிறார்.. .. சவப்பெட்டியில் ஜெயலலிதா பிண பொம்மையை வைத்து கீழ்தரமான அநாகரீக அரசியல் செய்யும் கட்சி.. பணத்தை கண்டக்டரிடமும் ஷேர் ஆட்டோவிலும் வைத்து விநியோகம் செய்யும்..நவீன நாகரீகமாக செயல்படும் கட்சிகளிக்கிடையே.. மாணவர்களையும்.. மீனவர்களையும் முக்கிய பிரமுகர்களையும் சந்தித்து கலந்துரையாடி.. பிரச்சனைகளை எப்படி தீர்க்கமுடியும் வெற்றி தந்தால் எப்படி திமுக செயல்படும் என பேசி.. தேர்தலை சநிதிக்கும் நேர்மை ..தமிழகத்தில் இன்னும் ஜனநாயகம் செத்துவிடவில்லை என்பதை பறைச்சாற்றுகிறது.. .. வெற்றி பெற வேண்டுமென்பதற்காக பிணத்தை ஊர்வலமாக கொண்டு நடக்கும் கேடுகெட்ட கயமைகளை கண்டு மக்கள் முகம் சுளிக்கிறார்கள்.. பதவிக்காக யாரை வேண்டுமானாலும் காட்டிக்கொடுக்கும் கயவாளித்தனம் ஒருபுறம்.. பதவியை எப்படியும் அடைந்தே தீரவேண்டுமென்று பணத்தை வாரி இறைத்து .. அதிகாரிகளையும் அரசு ஊழியர்களையும் களத்தில் இறக்கி.. அதிமுகவை கைப்பற்ற கத்திகுத்து நடத்தி கொலைக்கஞ்சா கொடூரத்தை கையிலெடுக்கும்.. துரோகிகள் .. நயவஞ்சகர் கூட்டம் ஒருபுறம்.. மததுவேசத்தை மண்ணில் விதைக்க .. நம்மவரை கொண்டே நம்மை குத்தி குதறும் பாசிசவெறியர்கள் ஒருபுறமும்..சுற்றிநிற்க.. நிமிர்நடையும் நேர்கொண்ட செயலுமாய் நெஞ்சில் நன்மை ஏந்தி.. செத்துக்கொண்டிருக்கும் ஜனநாயகத்திற்கு பிராணவாயுவை தந்து.. இன்னமும் மக்களை நம்பி களம்காணும்.. தளபதி.. யார் வேண்டுமென மக்கள் தேர்வு செய்யட்டும்.. .. ஆனால் மக்கள் பணியில் தொய்வின்றி மக்களோடுமக்களாய் அவர்தம் பிரச்சனையை தோளில் சுமந்து .. இந்த தமிழ்மண்ணில்.. சமூகநீதியை நிலைநாட்ட.. தமிழக மக்களின் இன்னல்கள் கலைந்து உயர்நோக்கோடு..தொண்டாற்றும் நம் தளபதி.. நிச்சயம் மக்கள் தங்களின் தளபதியாய்.. தமிழகத்தின் தளபதியாய் தேர்வு செய்யும் காலம்..வெகுவிரைவில் வரும்.. .. உலகமிசை உணர்வெழுப்பிக் கீழ்திசையின் மீதில் உதித்துவிட்டான் செங்கதிரோன். என்ற பாவேந்தரின் வரிகள் நியாபகம் வருகிறது.. ஆம்.. .. #உதித்துவிட்டான்_செங்கதிரோன்_தளபதியாய்.. தோழர் ஆலஞ்சி...

Wednesday, April 5, 2017

கிரண்பேடி..

ரப்பர் ஸ்டாம்ப் போல் என்னால் இருக்கமுடியாது புதுவை துணைநிலை ஆளுநர்.. கிரண்பேடி.. புதுச்சேரி மாநில நிலையை பெறாததால் தொடர்ந்து மத்திய அரசின் கீழ் செயல்பட வேண்டியிருக்கிறது.. ஆனால் இதுவரை இருந்த ஆளுநர்கள் அரசு நிர்வாகத்தில் நேரடியாக தலையிட்டதில்லை. ஆனால் கிரண் பேடி தலையீடு அதிகரிப்பதுடன் அதை விளம்பரப்படுத்தி.. தன்னை நல்லவராக காட்டிக்கொள்ள முனைகிறார்.. டெல்லியில் கூட இந்த கூத்து நடந்தது மாநில (அந்தஸ்து ) தகுதிநிலையை பெற்ற பிறகும் கூட காவல்துறை அரசின் கட்டுபாட்டில் இல்லை டெல்லி தலைநகர் என்பதால் அதை கவனத்தில் கொள்ளலாம்.. .. கிரண் பேடி காவல் அதிகாரியாக இருக்கும் போதே தன்னை விளம்பரபிரியராகவே காட்டிக்கொண்டார்..முதல் ஐபிஎஸ் என்ற நிலையில் சில சவுகரியங்கள் அவருக்கு கிடைதத்தும் அதை தன் வளர்ச்சியின் நோக்கிற்கு வலுவாக பயன்படுத்திக்கொண்டவர்.. ஓய்விற்குப்பின் அண்ணாஹசாரேவோடு..ஊழல் எதிர்ப்பில் முன்னிலைப்படுத்தி பின் அர்விந்த் ஜெஸ்ரிவாலோடு ஏற்பட்ட பிணக்கம் டெல்லியில் முதல்வர் வேட்பாளராக நின்று தோற்று பாஜகவின் தயவில் கவர்னரானார்.. மக்களின் ஆதரவில் நின்று வென்று அதிகாரத்தை செலுத்தமுடியாததால் மறைவில் அமர்ந்துக்கொண்டு தேர்தெடுக்கப்பட்ட அரசின் செயல்பாட்டில் தலையிடுகிறார்.. .. தங்களுக்கு எதிரான அரசின் செயல்பாட்டில் தலையிடும் பாஜகவின் கொள்கையை .. தங்களுக்கு வழங்கி நிற்காத மக்களின் அரசை தங்களின் அசைவிற்கு தகுந்தாற்ப்போல் நடத்த எண்ணும் பாசிச சிந்தனையை நடப்பாக்க மத்திய பாஜக அரசு கிரண் போன்றவர்களை பயன்படுத்துகிறது.. எதற்கும் தலையாட்டும் அதிமுக அரசை கவனிக்க கூட கவர்னரை அனுப்பவதில்லை காரணம் இந்த அடிமைகள் தாமாக முன்வந்து பாஜக கேட்காமலேயே எதற்கும் தயாரென எழுந்துநிற்பார்கள்.. .. கிரண் அவர்களே.. மக்களால் தேர்தெடுக்கப்பட்ட அரசை செயல்படவிடுங்கள்.. கண்காணிக்க கூட அருகதையில்லை..மக்கள் பிரதத்துவ சட்டம் தெளிவாக சொல்லியிருக்கிறது..மக்களால் தேர்தெடுக்கபடுகிறவரே அதிகாரம் பெற்றவர்.. அவரை மாற்ற வேண்டுமெனில் மக்கள் தான் முடிவு செய்யவேண்டும்.. தலையீடு என்பது சரியான நெறிமுறையல்ல இதுபோன்று தலையீடுகள் வரும் என்பததால்தான் அண்ணா அப்போதே சொன்னார்.. #ஆட்டுக்கு_தாடிஎதற்கு.. .. மக்கள் பிரதிநிதியை செயல்படவிடுங்கள்.. .. தோழர் ஆலஞ்சி..

ச.ம.ஸ்டாலின்..சமஸ்

ச.ம.ஸ்டாலின் சமஸ் கட்டுரை படித்தீரா என்றார்..நண்பர் சிரிப்போடு.. கொஞ்சம் கவனம் இடுப்பில் கத்தியை சொருகிறார் என்றேன் நான்.. .. திராவிடத்திற்கு பதில் தமிழ் என்று ஆரம்பிக்கும் போதே அவர் யாரின் ஊதுகோலாக பேசவருகிறார் என்பது புரியாமல் இல்லை.. பிராமணர் எதிர்ப்பு கோசம் போட்ட பெரியாரே 100% விழுக்காடு இடஒதுக்கீட்டில் பிராமணர்களுக்கு 3% விழுக்காடு வேண்டுமென்றார்..என்றும் நீதிக்கட்சி ஆட்சியில் தெலுங்கு நியோகி பிராமணர்கள் 40 பேர் அதிகாரத்தில் இருந்தனர் ஆனால் திராவிட கட்சி வந்தபிறகு பிராமணர்கள் புறக்கணிக்கப்பட்டதாக / வெளியேறியதாக கண்ணீர் வடிக்கிறார்.. கூடவே.. இடைசாதியை துணைக்கழைத்து.. தலித்களையும் இஸ்லாமியர்களையும் அரவணைக்கும் நேரம் வந்துவிட்டது.. என்று புலம்பியிருக்கிறார்.. 234 சட்டமன்ற உறுப்பினர்களில் ஒருவர் தான் பார்பனர் இது அநீதி இல்லையா என தான் வாங்கும் சம்பளத்திற்கு விசுவாசமாக இருக்கிறார்.. .. முதலில் சமஸ் போன்றவர்கள் ஒன்றை புரிந்துக்கொள்ளவேண்டும்.. நூறு விழுக்காடு இடஒதுக்கீடு வந்தால் பார்பனர்களுக்கு 3% விழுக்காடு கொடுப்பது தான் சரி என்றுதான் சொன்னார் பெரியார்..ஆனால் நெஞ்சை தொட்டு சொல்லட்டும் இன்று வரை உயர்பதவிகளில் 54% சதவிதிகம் வரை பார்பனர்கள் ஆக்ரமித்திருக்கிறார்கள் அவையெல்லாம் யாருக்கு வழங்கப்படவேண்டிய இடங்கள்.. நூற்றாண்டு பின்னிட்டும்.. அதிகாரத்தில் நேரடியாக இல்லை (ஜெயா தவிர்த்து) என்பதை ஆனால் மறைமுகமாக பார்பனர்கள் ஆதிக்கம் செலுத்துவதை அறியாதவரா.. சமஸ்.. திராவிடத்தை நீர்த்துபோக செய்ய ராஜாஜி காலத்திலேயே நிறைய #கோடாரிகளை பார்த்துவிட்டோம்.... .. சமீபகாலமாக நாங்களும் திராவிடர்கள் தான் என புவியியல் Geography நாங்களும் இங்குதான் வசிக்கிறோம் என்று ராகவன் போன்ற பார்பனர்கள் பேச முற்ப்பட்டிருப்பதை கவனித்தில் கொண்டால் புரியும்.. வசிப்பிடத்தை மட்டுமே கொண்டு வரையறுக்க முடியாதென்பதும் இனம் சார்ந்தும்..அவர்களின் பழக்கவழக்க பண்பாட்டு கலாச்சாரத்தையும் கணக்கில் கொள்ளவேண்டுமென்று அறியாதவரா.. இந்த கீழ்தஞ்சை கள்ளர் இன பெருமகன் சமஸ்.. .. இந்துத்துவ கொள்கைகளை வளர்த்தெடுப்பதில் சங்பரிவாரைவிட வஹாபிகள் (முஸ்லிம்களில் ஒரு பிரிவினர்) முனைப்போடு செயல்படுகிறார்கள் என்கிறார் அவரது வாதத்தை எளிதில் கடந்து செல்ல முடியாதுதான்.. மற்றபடி அவரின் ஒட்டுமொத்தமாக பார்பனர்களுக்கு வக்காலத்து வாங்கவே அதிகம் முயன்று தோற்று இருக்கிறார்.. .. ச.ம.ஸ்டாலின் அவர்களுக்கு தங்களைப்போல் நிறையபேரை கடந்துதான் வந்திருக்கிறோம்.. #திராவிடம்_அஞ்சாது_தோழனே.. .. தோழர் ஆலஞ்சி

ஜெயலலிதா குற்றவாளி..

Re-review petition.. ஜெயலலிதாவின் ₹100 கோடி அபராதத்தை எப்படி வசூலிப்பதென்ற மனுவை தள்ளுபடி செய்திருக்கிறது.. சில ஊடகங்களும் ஆதரவாளர்களும் ஜெயலலிதா குற்றவாளி இல்லை என்று நீதிமன்றம் சொன்னதைப்போல சித்தரிக்க முயல்கிறார்கள்.. மிக தெளிவாக தீர்ப்பில் எந்த திருத்தமும் செய்ய முடியாதென திட்டவட்டமாக சொல்லிவிட்டது.. இறந்தவரிடம் எப்படி பணத்தை வசூலிப்பது என்ற கேள்வியே தவறு .. இறந்தவர் என்பதால் குற்றவாளியாக கருதி சொத்தை பறிமுதல் செய்ய முடியாது.. இறந்து போனவரை குற்றவாளியாக அறிவிக்கவோ/கருதவோ சட்டத்தில் இடமில்லை.. மரணம் எப்படி காப்பாற்றுகிறது பாருங்கள்... .. நீதியரசர் குன்ஹா தீர்ப்பை நடைமுறை படுத்த வேண்டுமென்ற நீதுமன்றம்.. அதாவது ஜெயலலிதா உட்பட நால்வரும் குற்றவாளிகள்.. ஆனால் செத்தவரை தண்டிக்கமுடியாது என்பதால் #தண்டனையோ_தண்டமோ தேவையில்லை.. அதுதான் தீர்ப்பில் சொல்கிறது.. உடனே ஜெயலவிதாவை புனிதராக்க சிலர் முயல்வதும் .. கெட்டவன் இறந்தால் நல்லவனாக பதிவு செய்வதும் சரியல்ல.. .. வரலாற்றில் இரண்டுமுறை சட்டத்தால் தண்டிக்கப்பட்டவர் .. உயிரோடிருந்திருந்தால் பெங்களுரூவில் சிறைப்பறவையாக நான்குவருடம் கழிக்கவேண்டி வந்திருக்கும்.. மரணம் அவரை சிறைக்குள் வாழ்வை கழிக்கவிடாமல் காப்பாற்றியிருக்கிறது.. ஒருவகையில் மரணம் ஜெயாவை காப்பாற்றியிருக்கிறது.. .. #ஜெயலலிதா கிரிமினல் என்பதை மாற்றமுடியாது..தண்டனைதான் இல்லை.. இறந்துபோனதால்.. உச்சநீதிமன்றம்.. .. #A1criminal_miss_Jayalalithaa.. .. தோழர் ஆலஞ்சி

Tuesday, April 4, 2017

தமிழின விரோதிகள்

கருப்புமையை எடுத்து மைல் கற்களில் பூசுவதைவிட முகத்தில் பூசிக்கொள்ளுங்கள் மாண்பிமை பொன்.ராதாகிருஷ்ணன்.. தமிழ் எதிர்ப்பு போராட்டம் நடத்துவோம்.. எச்.ராசா.. .. பாஜக தலைவர்கள் எப்போதுமே எதிர்மறை அரசியலைதான் செய்கிறார்கள்..என்ன.. பொய்யோடு கலந்து.. திரு.பொன்னர் டி ஆர்.பாலு தான் இந்தியில் எழுதும் அரசாணையை பிறப்பித்தார் அவரை கட்சியை விட்டு நீக்கிவிட்டு பேசுங்கள் என்கிறார்.. திரு. டி.ஆர்.பாலு அவர்கள் அரசாணையை படித்துவிட்டு வரட்டும் என்றார்.. மாநில மொழி..அடுத்து ஆங்கிலம் பிறகுதான் இந்தியில் எழுதவேண்டும்.. அதுவும் ஒன்றாவது மூன்றாவது ஏழாவது மைல்கல்களில் தான் இந்தி எழுத வேண்டும் எல்லாம் கற்களிலும் அல்ல அதுவும்..ஆங்கிலத்தை அடித்துவிட்டு அல்ல.. இது முன்பே உள்ள அரசாணைதான் ரயில்வேகளில் பார்க்கலாம்.. எதையுமே அரைகுறையாகதான் பொன்னர் பேசுவார்.. காரணம் பாஜக அடுத்து என்ன செய்யபோகிறதென்று அவருக்கே தெரியாது... நாள்தோறும் பொய்கள் .. பொன்னர் ஒன்றை உணரவேண்டும் என்ன கத்தினாலும் ..மக்களின் ஆதரவோடு நின்று வென்றாலும்.. உங்களைவிட நோகாமல் #நிர்மலாசீதாராமனும் .. #இல_கணேசனும்தான் அதிகம் பலன் பெறுவார்கள். மக்களை சந்திக்காத நிரமலாவிற்கு தனிபொறுப்போடு கூடிய அமைச்சர்பதவி... பொன்னருக்கோ துணை அமைச்சர்தான். அதுதான் இனியும் நடக்கும்.. இனியாவது அதிகம் உளறி மாட்டிக்கொள்ளாதீர்கள். .. தமிழ் எதிர்ப்பு போராட்டம் .. வரவேற்கிறோம் நேரடி துணிவிருந்தால் நடத்தட்டும் பாஜக ஆட்சிக்கு வந்ததிலிருந்தே தமிழுக்கெதிரான போக்கை கொண்டிருக்கிறது. தமிழின் தொன்மையை பறைசாற்றும் #கீழடி_ஆய்வை கூட நிறுத்தியது.. இந்தியை திணிப்பதின் மூலம் தமிழ் மொழியின் வளத்தை சிதைத்துவிட நினைக்கிறது.. பார்பனர்கள் வடமொழி கலந்து பேசி .. தமிழின் மொழியில் இடைசொருகலை மிக கச்சிதமாக சேர்த்துவிட்டதை நாம் நம்மை அறியாமல் பேசியும் எழுதியும் வருகிறோம்.. மலையாள மொழியில் நிறைய வட சொற்கள் புகுத்தி #கைரளியர்களின் மொழி வளத்தை ஏறக்குறைய இல்லாதாக்கினார்கள் இதிலும் பார்பனர்கள் பங்கு அளப்பரியது.. தென்னிந்திய மொழிகளில் (திராவிட மொழிகளில்) தமிழ் உட்பட வடமொழி சொற்களை தான் கையாள்கிறோம்..இந்தியை திணிப்பதின் மூலம் நிறைய தனித்தமிழ் சொற்களை மறந்தோ அல்லது சிதைந்து போகலாம்.. .. எச்.ராசா போன்றவர்கள் தமிழ் எதிர்ப்பை கையிலெடுக்கவேண்டும் அப்போதுதான் தமிழ்மொழி மீதான பற்று அதிகமாகும் .. குறிப்பாக இளைஞர்களிடையே மொழியறிவு அதன் தாக்கமும் முன்னெப்போதுமில்லாத அளவு வீரியம் பெறும்.. தனித்தமிழில் பேச எழுதவேண்டுமென்று தோன்றும்.. தமிழ்விரோதிகளை இனம் கண்டு வேரறுக்க முடியும்..தமிழர்களை ஒன்றுமைபடுத்தவாகினும் .. எச்.ராசா தன் தாய்மொழி மீதான பாசத்தை கையிலெடுத்து தமிழ் எதிர்ப்பை காட்டவேண்டும். அப்போதுதான் எச்.ராசா போன்ற எச்சைகள் தமிழகத்திருந்து விரட்டபடுவார்கள்/புறக்கணிக்க படுவார்கள் .. தோழர் ஆலஞ்சி..

Sunday, April 2, 2017

வாக்கு சீட்டு முறை

மத்திய பிரதேச பிந்த் நகர் இடைதேர்தலில் வைப்பதற்காக விவிபெட் வாக்கு மெசினை பரிசோதனை செய்த போது சமாஜ்வாடியின் சைக்கிளுக்கு வாக்கு அளித்தால் வாக்கு சீட்டில் பாஜகவின் தாமரை சின்னம் பதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.. பதவான சீட்டை வெளியே எடுத்துச்செல்ல அனுமதி மறுத்தும் வெளியே சொன்னால் விபரீதம் நடக்குமென அதிகாரிகள் மிரட்டியிருக்கிறார்கள்.. காங்கிரஸ் கட்சி தேர்தல் ஆணையத்தை அணுகியிருக்கிறது.. மாநில தேர்தல் ஆணையத்தை கடுமை சாடி விளக்கம் கேட்டிருக்கிறது தேர்தல் ஆணையம்.. .. ஆரம்பம் முதலே வாக்கு பதிவு இயந்திரத்தில் நம்பிக்கையில்லை அதில் நிறைய குளறுபடிகள் நடக்க வாய்ப்பிருக்கிறதென.. அரசியல் கட்சிகள் பாஜக உட்பட அச்சம் தெரிவித்திருந்தன.. எந்த முறைகேடும் செய்ய முடியாதென்றும் மிகவும் பாதுகாப்பானதென்றும்.. உச்சநீதிமன்றத்தில் தேர்தல் கமிஷன் உறுதியளித்திருந்தது.. ஆனால் சமீபத்தில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு இதற்காக பெரியளவில் தேர்ந்த வல்லுநர்களை களத்தில் இறக்கி விவிபெட் மிஷினில் முறைகேடுகளை வெளியிலிருந்தே இயக்க மாற்றியமைக்க திட்டமிட்டிருப்பதாக பகுஜன் உட்பட சில கட்சிகள் கவலை தெரிவித்திருந்தன அப்போது கூட ஆணையம் வாக்கு இயந்திரத்தில் நம்பலாமென்றுதான் சொன்னது.. இப்போது அதிகாரிகள் முன்னில் நடந்த சோதனையில் எந்த பட்டன் அழுத்தினாலும் அது பாஜகவிற்கு வாக்காய் விழுகிறது.. .. பகுஜன் தலைவர் மாயவதி கூறுவதை போல பாஜக பின்புலமில்லாமல் இப்படியொரு முறைகேட்டை செய்திட முடியாது மத்திய அரசு பொறுப்பேற்றதிலிருந்து இவர்களின் அடாவடிகளும் எப்படி ஜெயித்துவிடவேண்டுமென்று செய்கிற தில்லுமுல்லுகளும் இப்போதுதான் வெளிச்சத்திற்கு வர தொடங்கியிருக்கின்றன.. ஜனநாயகத்தின் மக்கள் யாருக்கு வாக்களிக்கிறார்கள் என்பதை.. மாற்றி அரசோ கட்சியோ தீர்மானிப்பது சரியான முறையல்ல மீண்டும் பழையது போல் வாக்கு சீட்டை பயன்படுத்த வேண்டும்.. வளர்ந்த நாடுகளில் கூட (அமெரிக்காஉட்பட) வாக்குசீட்டு முறைதான் செயல்படுத்த படுகிறது.. .. இயந்திரங்களில் தில்லுமுல்லு செய்யலாம் என்றால் எதற்காக தேர்தல் .. எவ்வளவு செலவு.. யார் வெற்றிபெற வேண்டுமென்று பாஜகவோ அரசோ தீர்மானிக்குமென்றால் .. எதற்காக தேர்தல் நடைமுறை.. தி இந்து கூட இந்த நிகழ்வை அவ்வளவு எளிதாக எடுத்துக்கொள்ள முடியாது என்கிறது.. ஆம் .. அவ்வளவு எளிதாக எடுத்துக்கொள்ளமுடியாது.. .. #தேவை_வாக்குசீட்டுமுறை.. .. தோழர் ஆலஞ்சி

Saturday, April 1, 2017

இஸ்லாமிய இயங்கங்கள்..

#அனைத்து இஸ்லாமிய இயக்கங்களும் தடை செய்யப்படவேண்டும்... நண்பர் Sabar Khan .. நீண்டநாட்களாகவே இதுகுறித்து பேசப்படவேண்டும் விவாதிக்கப்பட வேண்டுமென எண்ணியதுண்டு.. குறிப்பாக தமிழகத்தில் எங்குமில்லாத (பிறமாநிலங்களில்) அளவிற்கு இஸ்லாமிய கட்சிகளின் எண்ணிக்கை அதிகம்.. பெயர் தெரியாத கட்சிகள் கூட தேர்தல் நேரங்களில் திடீரென முளைத்து விடுகிறது.. யார் அவர்கள் என்ன பின்னணி என தெரியவில்லை.. .. முதலில் IUML இந்திய யூனியன் முஸ்லிம்லீக் தனது பணியை இந்தியா முழுக்க எடுத்த செல்லவில்லை.. குறிப்பிட்ட மாநிலங்களுக்குள் சுருங்கிப்போனது.. பிற மாநிலங்களில் புதிதுபுதிதாய் இஸ்லாமிய கட்சிகள் தோன்றி மறைந்தன.. கேரளாவை தவிர மற்ற மாநிலங்களில் குறிப்பிட்ட சொல்லகூடிய வளர்ச்சி இல்லை.. இப்போது காலம் அவசியத்தை உணர்த்தியிருக்கிறது.. IUML தனது பணியை இந்தியா முழுக்க கவனம் செலுத்தி கடமையாற்றவேண்டிய நேரம் வந்திருக்கிறது.. .. நாம் தமிழகத்தை ..பார்ப்போம்.. என்பதுகளின் இறுதிகளில் பழனிபாபாவின் உணர்ச்சி மிகு பேச்சால் இளைஞர்கள் தறிகெட்டவண்டியைப்போல செயல்பட தொடங்கினார்கள் திடீரென்று அவரின் மரணம் ஒரு வெற்றிடத்தை இளைஞர்கள் மத்தியில் கொண்டுவந்தது.. குறிப்பாக அரபுநாடுகளில் பணிபுரிவோரிடம் அவர்களின் ஒய்வு நேரம் ..பெரிய பொழுதுபோக்கோ.. அல்லது சட்டென்று குடும்பத்தாரோடு தொடர்பு கொண்டு கதைத்துவிட கூடிய தகவல்தொடர்போ இல்லாத காலம்.. ஒரு வெறுமை மனதோடு கழித்தவர்களிடம் இஸ்லாம் பற்றிய தகவல்களும்.. அதுகுறித்து பேச்சுகளும் சட்டென்று மனதில் பதிந்தது..சொல்லவரும் சேதியின் பொருளை உணர்வதற்குள் மற்றொரு சேதியை தரும் முளைச்சலவை யுக்தி கையாளபட்டது.... இதனால் ஏற்படும் பின்விளைவுகளை பற்றியோ.. இது முஸ்லிம்களை பிரதானமாக எதிர்க்கும் இந்துத்துவா அமைப்பினருக்கு வலு சேர்த்துவிடுமென்று யோசிக்காமல் அதில் கவனம் செலுத்தினார்கள்.. .. முஸ்லிம்லீக் கின் அதிகார சண்டையில் அந்த கட்சி பிரிந்து செயல்பட தொடங்கியபோதுதான்..இஸ்லாமிய இயக்கங்கள் பெயரில் புதிய கட்சிகள் தோன்றின.. நாங்கள் தான் தமிழக முஸ்லிம்களை காக்க வந்தவர்கள் எங்களால்தான் தமிழக முஸ்லிம்களின் உரிமைகளை பெற்று தரமுடியுமென கூறி போராட்டங்க வடிவங்களை கையிலெடுத்தார்கள்..குருவி அமர்ந்ததால் பழம்விழுந்த கதையாக என்னால்தான் என சொல்லி முஸ்லிம்களிடையே குறிப்பாக இளைஞர்களை ஈர்த்தார்கள்.. கொஞ்சம் வளர தொடங்கியதும் தலைமைக்கு யார் என்பதிலும் அதிகார மோகமும் தனித்தன்மையை காட்டவேண்டுமென்பதிலும் கவனம் செலுத்த .. இன்று எண்ணில் அடங்கா இயங்கங்கள்.. .. களையப்பட வேண்டியவர்கள்.. இவர்கள்.. புற்றைப்போல் இஸ்லாமிய சமுதாய இளைஞர்களை அழித்துக்கொண்டிருக்கிறார்கள்.. இடஒதுக்கீட்டில் கூட இவர்கள் கேட்கும் 10 சதவிகிதம் எப்படி வழங்கமுடியும் பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் பரிந்துரைந்த.. சி்றுபான்மையனருக்காக விழுக்காடு 7.5 % மட்டுமே அதுவும் முஸ்லிம் கிருஸ்துவ ஜெயின்.. போன்ற தமிழகத்தில் வாழும் சிறுபான்மையினருக்கானது.. இவர்கள் நோக்கம் இடஒதுக்கீட்டை இல்லாமல் ஆக்குவதுதான் ஏறக்குறைய ஆர்எஸ்எஸ் வேலையை சுலபமாக்குவதை கூட அறியாமல் செயல்படுகிறார்கள்.. நிறைய சொல்லலாம்.. .. நண்பர் சபர்கானின் கருத்தில் உடன்பட வேண்டியிருக்கிறது.. ஒரே குடையில் கீழ் இவர்கள் வராதவரை.. புறக்கணிக்கபடும் சமூகமாகதான் இருப்பார்கள்.. ஒற்றுமை எனும் கயிற்றை பற்றிப்பிடித்துக்கொள்ளுங்கள்.. குழப்பம் விளைவிப்பது கொலைக்கு சமம் என்கிறது வேதம்.. இவர்களின் செயல் குழப்பம் செய்வது மட்டுமே இவர்களின் பலம் அதுதான்.. அது பலவீனமென்று அறிந்தே தப்பு (தவறை) செய்கிறார்கள்.. #குழப்பவாதிகள்.. .. தோழர் ஆலஞ்சி...