Tuesday, October 4, 2016
நடுத்தெருவில்.. அவமானப்பட்டு
பிரதமரை சந்திக்க சென்ற அதிமுக எம்பிக்களை சந்திக்க மறுத்திருக்கிறார்.. முதலில் கடும் கண்டனங்களை பதிவு செய்வோம்.. அவர் மறுத்தது அதிமுக எம்பிகளையல்ல மாறாக அவர்களை தேர்தெடுந்து அனுப்பிய மக்களை அவமதித்திருக்கிறார்.. தன்னால் எதுவும் செய்திட முடியாது என நினைத்திருந்தால் கூட அவர்கள் சந்தித்து தன் இயலாமையை அல்லது தன்பக்கத்து நியாயத்தை சொல்லியிருக்கவேண்டும்.. மாறாக தமிழக அதிமுகவினரை காண மறுத்தது ஜனநாயக அயோக்கியத்தனம்..
Democratic Dishonesty..
..
முதலில் அதிமுகவினர் அரைவேக்காட்டுதனமான செயல்களிலேயே காலத்தை கழிக்கின்றனர்..எதையுமே எப்படி அணுகுவது என்பதை அறிந்திருக்கவில்லை.. பிரதமரை சந்திப்பதற்குமுன் அனைத்துகட்சி கூட்டத்தை கூட்டி கலந்தாலோசித்து அதை தீர்மானமாக ... அனைத்துகட்சியை சேர்ந்தவர்களோடு தமிழக பாஜக உட்பட சந்திக்க நேரம் ஒதுக்க வேண்டுமென அழுத்ததந்திருப்பார்களேயானால் பிரதமரும் சந்திக்க நேரம் ஒதுக்கவேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகியிருப்பார்.. அதிமுக மட்டும் தன்னிச்சையாக திடீரென்று செய்ற்கை சுவாத்தில் இருக்கும் முதல்வர் ஆணைக்கிணங்க சந்திப்பதாக சொல்லி
கடைசியில் அவமானப்பட்டு நிற்கிறார்கள்.. அடிமைகளுக்கு மானம் அவமானமெல்லாம் இல்லை ஆனால் நமக்கிருக்கிறது.. அதனால் தான் தமிழக மக்களின் பிரதிநிதிகளை சந்திக்க மறுத்த பிரதமருக்கு கடும் கண்டனத்தை பதிவு செய்கிறோம்..
..
பிரதமருக்கு தலைமைசெயலர் கடிதம் எழுதுகிறார்.. இது ஜனநாயக விரோதம்..#Undemocratically.
முதல்வர் உடல்நிலையை காரணம் சொன்னாலும் மக்கள் பிரதிநிதிகள் தான் ஆட்சி செய்யவேண்டுமே தவிர அதிகாரிகள் அல்ல.. துறை அமைச்சர் கடிதம் எழுதலாமே தவிர அரசுஅதிகாரிகள் அல்ல. தமிழகஅரசின் நிர்வாகம் கேட்பாற்று கிடக்கிறது..
மிக மோசமான விளைவுகளை தரும்.. அதிகாரிகளின் அரசு நடப்பதென்பது
ஜனநாயகத்திற்கு பேராபத்து..Democratic calamity.. இதெல்லாம் களையப்படவேண்டுமெனில் மக்கள் சிந்தித்து சரியானவர்களை தேர்வு செய்யவேண்டும்.. அரைகுறைகளை, சொற்ப பணத்திற்காக தேர்வு செய்து அனுப்பியதால்.. ஜனநாயகம் செத்து, சொரணையற்று ,அவமானப்பட்டு தலைகுனிந்து மரியாதையற்று நிற்கிறோம்.
இனியேனும் கவனம் கொள்வோம்.. இல்லையேல்..
..
#நடுத்தெருவில்..
..
ஆலஞ்சி மன்சூர்
Monday, October 3, 2016
ஜெயலலிதா.. உண்மைநிலை
#முரண்கள்..
முதல்வர் அபாயநிலையை தாண்டிவிட்டார்
மயிலாப்பூர் மாலினி பார்த்தசாரதி.. நன்றியும் மகிழ்ச்சியும்..
..
ஆனால் இதுவரை அப்போலோ நிர்வாகம் முதல்வர் அபாயநிலையில் இருந்தார் என்பதை நாட்டுமக்களுக்கு அறிவிக்கவில்லையே ஏன்..
அரசோ அரசு நிர்வாகமோ முதல்வர் அபாயநிலையில் இருந்தார் என எந்த அறிக்கையிலும் விளக்கவில்லையே ஏன்.
அப்போலோ மீதான நம்பிக்கையை பொய்யாக்கியிருக்கிறது.... அப்படியெனில் ஏன் மூடிமறைக்கவேண்டும்.. இதுவரை காய்ச்சல் நீர்சத்து குறைவு என்று பொய்யான தகவலை தந்து யாரை ஏமாற்றுகிறார்கள்..
..
பார்த்தசாரதிகளால் பார்க்க முடிகிற முதல்வரை ஏன் அரசின் தலைவர் என அறியபடுகிற ஆளுநரால் சந்திக்கவோ /பார்க்கவோ முடியவில்லை.. முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் கூட பார்க்க அனுமதியில்லை என கூறப்படுகிறது.. சிகிச்சை எடுத்துக்கொள்வது பெண் என்பதால் ஆண்கள் அனுமதியில்லையென்றால் சோ மட்டும் வந்து சென்றாரே எப்படி..
..
இன்னமும் கூட நிறைய ஊகங்களை தான் ஊடகங்களும் வேண்டப்பட்டவர்களும் தருகிறார்கள். உண்மை நிலையை வெளிப்படையான அறிக்கை மூலம் யாரும் தருவதில்லை.. தினம் தினம் தவறான தகவல்கள் மக்களை குழப்பத்தில் ஆழ்த்துகிற வகையில் உலவும் போதும் .. இல்லை முதல்வர் நல்லநிலையில் இருக்கிறார்.. உணவருந்தினார் அரசு அதிகாரிகளோடு கலந்தாலோசித்தார்.. காவிரி விடயத்தில் ஆலோசனைகளை வழங்கினார் என செய்திகள் தொலைகாட்சிகளிலும் நாளிதழ்களில் வந்ததே அதெல்லாம் பொய்யா.. முதல்வர் ஆலோசிக்காமல் அதிகாரிகள் அமைச்சர்கள் யாரிடம் ஆலோசனை பெற்றனர்.
இன்னும் நிறைய கேள்விகள் இருக்கிறது..
முதல்வர் உடல்நிலையை காரணம் காட்டி யாரோ திரைமறைவில் களிக்கின்றனர்..
யார் அவர்கள்.. முன்னுக்குப்பின் முரணான தகவலை பரப்புகிறார்கள்..
என்பதை அறிந்துக்கொள்ள தமிழ்நாட்டு மக்களுக்கு உரிமை இருக்கிறது..
..
என்ன நடக்கிறது..
நாடகமாடுவது யார்..
..
ஆலஞ்சி மன்சூர்...
காவிரி மேலாண்மை கனவு
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கமுடியாது மத்திய அரசு .. சிலர் பச்சை துரோகம் என செய்திகளை வெளியிடுகிறார்கள்..
எப்போது மத்திய அரசு நடுநிலையோடு செயல்பட்டது.. மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு காவிரியில் தமிழகம் உரிமை கோரமுடியாது என்ற போது நடுநிலையோடு நடந்து கொண்டாரா அல்லது மத்தியஅரசு அவரை கண்டித்து தன் நடுநிலையை பறைசாற்றியதா என்ன..?
தமிழகத்தை சேர்ந்த ஸ்ரீரங்கத்து நிர்மலா சீதாராமன் கர்நாடக எம்பிகளோடு சேர்ந்து நிர்வளத்துறை அமைச்சரை சந்தித்தாரே அப்போது தெரியாதா இந்த தமிழ்பேசும் ஆரியச்சிக்கு ..நடுநிலையோடு செயல்படவேண்டுமென்று...
இருமாநிலத்தை சேர்ந்தவர்களோடு பேசி ஒரு முடிவுக்கு வாருங்கள் என உச்சநீதிமன்றம் சொன்னபோது நீர்வளத்துறை அமைச்சர் உமாபாரதி கர்நாடக முதல்வரின் அறிக்கையை வாசித்து கைவிரித்தபோது தமிழகமும் இந்தியாவில்தானியிருக்கிறது என்ற உண்மையை மறந்து போனாரா..
..
ஏற்கனவே இவர்களின் செயல்கள் நாம் அறிந்ததுதான் எப்போதும் போல் நாடகமாடுவது பாஜக அரசிற்கு கைவந்த கலை போட்டோஷாப் அரசு நடத்துபவர்களிடம் வாய்ச்சொல் வீரர்களிடமும் இறையாண்மையை எதிர்பார்க்கமுடியாது.. இதே நேரம் திமுக ஆட்சியில் இருந்தால் எம்.பிக்களை வைத்து அழுத்தம் தந்திருக்கும் .. இப்போதிருக்கிற அரசிற்கு பெரியளவில் நாட்டமில்லை.. தங்கள் மீதுள்ள வழக்குகளிலிருந்து எப்படி உருவி வெளியேறலாம் என்றுதான் நினைக்கிறது..
50 எம்பிக்கள் தமிழகத்திற்கான திட்டங்கள்/உரிமைகள், தேவைகள் எல்லாவற்றையும் நிறைவேற்ற/அடையமுடியும்.. என்ன செய்வது
விவரகேடுகளை அனுப்பியிருக்கிறோம்
..
#அடிமாடுகள்_உழவிற்குஉதவாது..
..
ஆலஞ்சி மன்சூர்..
Sunday, October 2, 2016
ஊடக ஊகம்..
ஊகங்களை நாம் பெரிதுபடுத்துவதில்லை..
சிலநேரம் உண்மையை விட ஊகங்கள் வெகுவிமர்ச்சையாக கொண்டாடபடுகிறது..
வெகுஜன ஊடகம் என அறியப்படுகிற நாளிதழ்களும் தொலைகாட்சிகளும் மௌனமாய் இருக்கிற போதும் சில வார இதழ்கள் மௌனம் கிழித்து சில விடயங்களை வேகமாக கொண்டுவந்துவிடும்..
மலையாள பத்திரிக்கையாளர் மோகனன்
முன்பு asianet ல் இருந்தபோது உடனுடக்குடன் செய்திகளை தருவது தர்மம் அது உண்மையாக இருக்க வேண்டுமா என்பதில் பெரிய காரியமில்லை செய்தி வந்தது சொல்கிறோம் தவறெனில் அதையும் சொல்வோம் என்றார்..
அது ஒருவகையில் சரி.. வதந்தியென எப்போது அறிவோம் அது உண்மையில்லை என்பதுவரை அதுவரை அதுவும் சேதிதான்.. வரும் சேதியில் உண்மையில்லை என உரக்க சொல்லவேண்டியது சம்பந்தப்பட்டவரின் கடமையும் கூட.
..
அதிமுக அமைச்சர்களை அப்போலோ அழைத்து கலந்தாலேசித்ததாகவும் இப்போது சசிகலா அதிமுக உறுப்பினர்களை சென்னைக்கு வரும் படி உத்தரவிட்டு இருப்பதாகவும் செய்திகள் வருகின்றன.. உண்மையா அல்லது இதுவும் மறைந்து போகும் ஊகமா அறிவில்லை.. ஆனால் நமக்கு சிலவற்றை விளக்கவேண்டிய பொறுப்பு அரசிற்கு இருக்கிறது..
முதல்வரின் உடல்நிலை குறித்த முன்னுக்குபின் முரணான தகவல்கள் வரும் போதும் அவரை இதுவரை சந்தித்தாக சொல்லப்படுகிற.. பெரியமனிதர்கள்..? உடனான புகைப்படம் ஏன் வெளியிடவில்லை.. உடனே பெண் என்றெல்லாம் சொல்லாதீர்கள் ஜெயலலிதா முதல்முதலில் சட்டமன்றத்தில் நடத்திய #கையாங்களி... அடுத்தநாள் ஆஸ்பத்திரியில் படுத்துக்கொண்டே புகைப்படம் வெளியிட்டிருந்தார்.. அப்போதும் பெண்தான் .. நிறைய ஆளுமையாளர்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் புகைப்படங்கள் ஊடகங்களில் வந்திருக்கிறது ..
நோயாளிகளை அவர்கள் புகைப்படம் வரகூடாது என எந்த தடையுமில்லை பின் ஏன் எந்த படங்களையும் தரவோ அல்லது அவர்கள் வெளியிடவோ கூடாது.. தங்களுக்குள் இரும்புதிரை அமைத்து அவர்கள் நடத்து கூத்து நிறைய சந்தேகங்களை Doubts விதைக்கும் / விதைக்கிறது..
..
கட்ஜூ போன்றவர்கள் பெண்கள் புகைப்படத்தை வெளியிட கோரகூடாது என்கிறார்.. நிறைய பெண்களின் புகைப்படங்கள் செய்திதாள்களில் வெளியாகியிருக்கிறது அப்போதெல்லாம் எவரும் கேள்விகேட்கவில்லை தவறென்றும் சொல்லவில்லை....
..
ஆனால் ஒன்று மட்டும் உண்மை #என்னமோநடக்குது_மர்மாயிருக்குது.
..
ஆலஞ்சி மன்சூர்
Saturday, October 1, 2016
காமராஜர் நினைவு
#காமராஜர்..
எளிமை அரசியலில் யாவரையும் அனுசரிக்கும் அழகு.. காமராஜரை முதல்வராக விடாமல் ராஜாஜி போன்றோர் முட்டுகட்டையாக இருந்த போது பெரியார் தான் அவரை குடியாத்தத்தில் நிற்க வைத்து வெற்றிபெற வைத்தார் அப்போது அவரை திமுகவும் இ.யூ. முஸ்லீம் லீக்கும் ஆதரித்தது.. அப்படியாகதான் பிராமணர்கள் பிடியிலிருந்த தமிழக காங்கிரஸை/ அரசை சாமானியன் கைகளுக்கு கொண்டுவந்தார்.. காமராஜரை கடைசிவரை ஆதரித்த /பின்துணைத்தவர் பெரியார்.. இன்னும் பத்தாண்டுகள் காமராஜரை விடாமல் பிடித்துக்கொள்ளுங்கள் ..தமிழகத்தை தமிழர்கள் வாழ்வை சிறந்ததாக மாற்றும் வல்லமை உள்ளவர் என்றார்..
..
அரசியலில் எதிரெதிராக களம் கண்டாலும் கடுமையாக விமர்சித்தாலும்..கலைஞர் மீது காமராஜரும் காமராஜர் மீது கலைஞரும் தீராத காதல்/அன்பு கொண்டிருந்தனர் சட்டமன்றத்தில் காமராஜரை எதிர்த்து கடுமையான விவாதம் செய்துவிட்டு வருகிறார் வரும் வழியிலேயே தன் தாயார் அஞ்சுகம் அம்மையார் இறந்த சேதி வருகிறது வீட்டுக்கு விரைகிறார் வீட்டுவாசலில் காமராஜர் நிற்கிறார் காமராஜரை பார்த்தவுடன் கண்கலங்கி கரைந்தார்.. காமராஜர் மறைந்தபோது கலைஞர் அவர்கள் தன் மூத்த சகோதரனுக்கு செய்வதைப்போல அனைத்து காரியங்களையும் கூட இருந்தே பார்த்துக்கொண்டார்.. என்றார் பெருந்தலைவரின் உதவியாளர் வைரவன்
..
நிறைய எழுதிக்கொண்டே போகலாம்..
நீங்களும் நானும் நம் சந்ததியும் படிக்கவேண்டும் என்று நினைத்து இலவசமாய் கல்விதந்தானே .. அந்த பெருந்தலைவனை நினைவுகூற வேண்டாமா
கிழட்டு சிங்கம் எங்கள் #பெருங்கிழவன் சொன்னதை நினைவுகூறுகிறேன்
கல்வியியல் நிகழ்ச்சிகளில் கடவுள் வாழ்த்துக்குபதில்
காமராஜர் வாழ்த்துபா பாடவேண்டும்
பொன்நாடார்
பொருள்நாடார் என்ற கண்ணதாசன்வரிகளே போதும் ... காமராஜர் புகழ்பாட...
..
கல்விகண்திறந்த காமராஜரை நினைவுகூர்வோம்
..
#அக்டோபர்2_
..
ஆலஞ்சி மன்சூர்
இன்னாசெய் தாரை...கலைஞர்
#கருணாநிதியை மூட்டையாகக் கட்டி, அந்த மூட்டையை விமானத்திலிருந்து இறக்கி, ஆம்புலன்சில் படுக்க வைத்து கொண்டு போவதற்கு நேரமாகிவிட்டது” - 2009ல் கோவை பொதுகூட்டத்தில் ஜெயலலிதா பேசியது..
..
எனக்கும் அவருக்கும் கொள்கையில் வேறுபாடுகள் இருந்தாலும் அவர் விரைந்து நலம் பெற்று எப்போதும் போல் பணிகளை தொடர வேண்டுமென்றே விரும்புகிறேன்.. #மேதகு_கலைஞர்...
..
இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயஞ் செய்து விடல்.
இப்போது சொல்லுங்கள்
#மேன்மக்கள்_மேன்மக்களே..
..
ஆலஞ்சி மன்சூர்
சசிகலா ஆளுமை
நான் முற்றிலுமாக மாறுபட்டவன் இவரின் செயல்கள் கொள்கைகள் எதிலும் எனக்கு உடன்பாடில்லை
ஆனாலும் சொல்கிறேன்..சிறந்த ஆளுமை இவர்..
#சசிகலா..
கடந்த பத்து நாட்களாக முதல்வரை சசிகலா தவிர யாரும் பார்க்கவில்லை என தந்தியின் பாண்டே ஒப்புதல் வாக்குமூலம் தருகிறார்..
யாரும் இவரை கேள்வி கேட்கவில்லை.. அமைச்சர் தொடங்கி ஆளுநர் வரை யாரும் இவர் யாரென கேள்வி எழுப்பவில்லை..
..
இந்த மன்னார்குடி தமிழச்சியின் ஆளுமை கண்டு உண்மையில் மகிழ்ச்சி.. ஒருவேளை தஞ்சாவூர்காரன் என்பதாலா என கேட்டால் பதில் இல்லை..
கொஞ்சம் பின்னோக்கி செல்லவேண்டும்..
திராவிட இயக்கம் தங்கள் சித்தாந்தத்தை சிதைத்துவிடுமென அஞ்சி மிக சாதூர்யமாக மகோரா வை இயக்கத்திற்குள் புகுத்தினார்கள் அவரின் கவர்ச்சியால் மெல்ல சிதைத்து திராவிட கொள்கைகளில் சிறு சலசலப்பை உண்டாக்கி மெல்ல காலூன்றுவதே அவர்கள் எண்ணம்.. அது ஒருவகையில் கைகூடியது.. மகோராவிற்கு பின் தங்கள் இனம் சார்ந்தவரை அனுப்பி முழுவதுமாக தங்கள் கட்டுபாட்டிற்குள் கொண்டுவரவேண்டுமென்பதே அவர்களின் திட்டமாக இருந்தது அதுவும் செயலானது.. மெல்ல ஜெயலலிதாவை தங்கள் கட்டுக்குள் கொண்டுவந்து தங்களின் எண்ணம் சித்தாந்தம் கொள்கையை .. நிலைநாட்ட எண்ணி செயல்பட்டார்கள்.. அதில் தான் இடிவிழுந்தது...
ஜெயலலிதாவின் நிழலாய் பின் தொடர்ந்து சசிகலா எனும் பிம்பம் விஸ்வரூபமெடுக்குமென யாரும் எதிர்பார்க்கவில்லை.. இடையில் சிலர் தலையிட்டு சசிகலாவை ஜெயலலிதாவிடமிருந்து பிரித்தனர்..
சோ போன்றோரின் பெரும் முயற்சி சிறிது பலனளித்தது அது நீண்டகாலம் தொடர முடியவில்லை. மீண்டும் சசிகலா.. ஜெயலலிதாவோடு சேர்ந்தார்.. மொத்தத்தில் முழுகட்டுபாடு என்ற தங்களின் விருப்பம் சிதைந்து போனது..காரணம் எல்லாவற்றையும் விழுங்கும்
#திமிங்கலம் என அறியாமல் போனார்கள்..
..
ஒருவகையில் மகிழ்ச்சி.. ஜெயலலிதா பேர் சொல்லி எங்கே #சோ போன்ற பாசிசத்தின் கையில் அதிகாரம் செல்லாமல் .. மன்னார்குடி அத்தாச்சியின் விரலசைவில்/கட்டுபாட்டில் கட்சியும் அரசும் அமைச்சர்களும் இருப்பதில் மகிழ்ச்சி..
நமக்கு விரும்பமில்லையெனினும்,. அதை கடுமையாக எதிர்ப்பவர்கள் நாம்... அதிமுகவின் கொள்கை செயல்திட்டங்கள். . அமைச்சர் முதல் அடிமட்ட தொண்டன் வரை மூடர்களாகவே/ அடிமைகளாக வைத்திருக்கும் செயல் ..எல்லாவற்றையும் வெறுத்தும் எதிர்த்தும் நின்றாலும்... ஜெயலலிதா உடல்நிலையை காரணம் காட்டி .. எங்கே ஆர்எஸ்எஸ் சித்தாந்தவாதிகளின் கையில் அதிகாரம் செல்லாமல் காத்து நிற்கிறார்..சசிகலா..
..
சசிகலாவின் கண்ணசைவில் தான் காரியங்கள் நகர்கின்றன.. கட்சியின் முழு கட்டுபாட்டையும் கையில் வைத்திருக்கிறார் அவரை மீறி அரசின் அமைச்சர்கள் கூட செயல்படமுடியாது.. யாரும் கேள்வி கேட்க முடியாது..மொத்தத்தில் அவர்தான் #அதிமுகவின்_ஆளுமை Personality
..
சிறிய தகவல்.. சசிகலா நடராஜன் திருமணத்தை கலைஞர்தான் நடத்திவைத்தார்.
..
ஆலஞ்சி மன்சூர்
Subscribe to:
Posts (Atom)