Tuesday, May 31, 2022

கலைஞர் ..
நினைக்கிற போதெல்லாம் நெஞ்சில் ரீங்காரமிடும் தமிழ் ..
கொள்கை உறுதி, பகைக்கஞ்சா வீரம், எதற்கும் அசராமல், பகையை பதறவைக்கும் விவேகம் .. ஒவ்வொரு நொடியும் தன்னைச் சுற்றியே இந்திய அரசியலை இயங்கவைத்த பேராளுமை..
இத்தனை வல்லமை படைத்த தலைவன்  வேறு இனத்தில் உண்டா.. கொண்டாடி கொண்டாடி தீர்க்கவேண்டிய கடன் நமக்கு உண்டு .. அரசியல்,கலை, இலக்கியம் பேச்சு என தொட்டதெல்லாம் சுவைமிகுந்ததாய் தர வாய்க்கபெற்றவர் யாரேனும் உண்டோ, 
அறிவாண்மை கொண்ட
செங்கோன்மை தவறாத  தலைவனை வேறெங்கும் கண்டதுண்டா
இவ்வையகத்தில்..
எத்தனை எத்தனை வர்ண கோலங்கள் சொல்லிலா பொருளிலா சுவை கூடியதென திகைப்பே மிஞ்சும்..  வார்த்தைக்கட்டி விளையாடினால் மயங்கி நிற்குமே தமிழ்ச்சமூகம் 
எதிரிகளும் இனப் பகைவரும் கூட நாவின் தமிழிசையில் சொக்கிபோய் நின்றனரே..
..
தலைவனாய் எதையும் நேர்நின்று திமிரோடும் துணிவோடும் எதிர்கொள்ளும் பேரழகு இங்கே வேறு எவரிடமும் காணேன் .. எதிரிகளை ஒவ்வொரு நாளும் கதறவிடல் கலைஞருக்கு மட்டுமே சாத்தியமானதெப்படி ..  எதிலும் தெளிவு, எதையும் ஆய்ந்தறிந்து செயலாக்கும் ஆற்றல், நல்லதை நினைத்து நன்மைபயக்குமா என எண்ணி, துணிந்து தொலைநோக்கோடு சமரசமின்றி 
யாரெல்லாம்  எதிர்ப்பார்கள் இதனால் யாருக்கு பயன் தரும் என துள்ளியமாக கணக்கிட்டு எளியவன் மீது அக்கறையோடு, செய்து முடிக்கும் பேராற்றல் இந்திய தலைவர்களிடம் யாருக்காவதுண்டா..?
..
வந்து விழும் வார்த்தைகளில் நேர்மை, அரசியலில் அறமெனும் சொல்லிற்கு இலக்கணம், பொதுவாழ்விற்கு வர நினைப்போருக்கு பாடமாய் இருக்கும் ஒரே தலைவன்.., விளிம்புநிலை மக்களின் குரலாய், பள்ளத்தில் நிற்போருக்கு ஏணியாய், அடக்குமுறைக்கு ஆளாவோருக்கு அரணாய், ஒடுக்கபடுவோருக்கு உறுதுணையாய், ஒரு தலைவன் ..
வளர்த்துவிட்டவன் வேலேந்தி புறம்நின்று குத்துகிறான் .. எதிர்நிற்க துணிவின்றி என்றறிந்தும் புன்முகத்தோடு களம்கண்ட தலைவன் .. 
இனப் பகைவர்கள் அறிந்தளவு இனத்தவன் தம்மை அறிந்திருக்கவில்லை என அறிந்தும் உழைப்பது தம் கடமை என்றேனும்
ஒருநாள் உணர்வான் என ஓயாதுழைத்த நிகரில்லா பெருந்தலைவன் ..
பலமுனையில் நின்று பகைவரும், எதிரியும் துரோகிகளும் துளைத்தெடுத்தபோதும்  கண்ணுயராமல் பெருஞ்சுவராய் இனத்தை
நம்மை காத்துநின்ற பேரருளாளன் .. இவரைப்போல் யாருண்டு
..
வியந்து நிற்கிறேன் ..
இவன் பேரழகு கண்டு ..
சொல்லெடுத்து ஆடினால் தேனுண்ட வண்டுபோல் மயக்கம் வரும்..
எதிரியை வீழ்த்த 
இலக்கியத்தை துணைக்கழைத்த பேரறிவு கண்டு..
தூற்றும் போதும் தூயத்தமிழ்ச் சொல்லி தீப்பிழம்பாய் சுட்டெறிக்கும் ஆற்றல் கண்டு ..
எளியவரிடம் கருணையோடும் 
இயலாதோரிடம் அக்கறையோடும் 
பகைவரோடு அஞ்சாமையோடும் 
பெரும்படையோட்டம் கண்ட பேராசான் துணையோடு 
என்பதாண்டு பொதுப்பணியில் 
சீரோடு வாழ்ந்த எம்மான் ..
கலைஞரை எண்ணி வியக்கிறேன் 
அவர் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்தேன் .. அவரோடு இணங்கிநின்றேன் ..கைகாட்டிய திசையில் பெரும்படையில் சிப்பாயாய் நின்றேன் என எண்ணும் போது உள்ளம் துள்ளி மகிழ்கிறது .. இப்போதும் உன் பெயரை உச்சரித்தால் பகைவர்கள் குலைநடுங்குகிறார்கள் தலைவா..
நீ.. சமைத்ததுதான்  எல்லாம் 
நவீன தமிழகத்தின் சிற்பியே
உம்மை கொண்டாடி மகிழ்கிறோம் 
..
தலைவா..
வற்றாத நதியாய்..
தமிழர் நெஞ்சில்
நிலைத்து நிற்கும் 
பேரருளாளனே..
திராவிடப் பெருஞ்சுவராய் 
இனத்தை காத்த நின்ற 
திராவிடப் பேரரசனே..
..
ஜூன் 3 ..
99 வது அகவை தினம் 
வாழும் நின் புகழ் 
வையகம் உள்ளவரை 
..
கலைஞருக்கு
புகழ்வணக்கம் 
..
ஆலஞ்சியார்

Saturday, May 28, 2022

Welldone mks 
நீண்டநாட்களாக நாம் கேட்டுக்கொண்டிருந்த விடயம் 
ஏன் இல்லை, எங்கே தொலைத்தோம் ,எப்படி நடந்தது என நாம் யோசிக்க வைத்தது ..
பாசறை இல்லையென்றால் படைவரிசை இல்லை என்றார் நம் அண்ணா ..
..
ஆம் .. தெருமுனையில், திண்ணையில், சிகையலங்கரா நிலையங்களில், பேசுபொருளாக இருந்த திராவிடம் .. இனத்தை மொழியை பண்பாட்டை அசைபோட்டு அடுத்ததலைமுறைக்கும் சேர்த்து பயிற்சி தந்தது .. வெற்றியும் இனி திராவிடத்தை யாரும் எதுவும் செய்திட முடியாதென்ற அசட்டுத்தனமும் கூட வர அயர்ந்து போன நேரத்தில் காத்திருந்த பகை நம் குரல்வலையை கடிக்க நாம் வளர்த்தவர்களை கொண்டு ஏவி விடுகிறது ..  மதவெறியை பரப்பி சமூகத்தை பரப்பரப்பாக வைக்க முனைகிறது .. அதற்கு தோதாய் திராவிட பேசிய போலிகளை, அடிமைகள் தோல் உதிர்ந்த கோழியைப்போல நடுநடுங்கி நிற்கிறார்கள் .. பணத்திற்கு சிலர் பிணமாய் கிடக்கிறார்கள் .. விலைக்கு போன வீணர்களால் திராவிடம் பெற்ற உரிமைகள் பறிபோகின்றன ..
அஞ்சாமை எமதுடமை என்ற சமூகம் இன்று கோடாரிகளால் பிளக்கபடுகிறது ..
..
மதவாத நச்சுவிதைகளை தூவிட எத்தனிக்கும் தேசவிரோத சக்திகளையும் அதற்கு துணைப்போகும் அடிமைகளையும்
விலை போகும் வீணர்களையும்  அடையாளங்காட்டி  அவர்களிடமிருந்து தாய்த் தமிழ்நாட்டை எந்தவித சேதாரமுமின்றி பாதுக்காத்திட புதிய பட்டாளத்தை உருவாக்க வேண்டுமென மேதகு முதலமைச்சர் திராவிடத்தின் நான்காம் தலைமுறை தலைவன் அறிவித்திருப்பது மிக மகிழ்ச்சி தருகிறது ..குறிப்பாக இளைஞர்கள் மாணவர்களிடம் பெருமளவில் சமூகநல்லிணக்கங்களையும் சமூகநீதியை திராவிட இயக்கத்தின் அடிப்படை சித்தாந்ததமான எல்லாருக்கும் எல்லாம்  எல்லோரும் சமம்  என்ற உயர்நோக்கை கொண்டு செல்லவேண்டும்.. அதை முனைப்போடும் வேகத்தோடும் செய்திட மாவட்ட செயலாளர் முனைந்திட வேண்டும்..
..
குறிப்பாக பள்ளி கல்லூரிகளை ஆர்எஸ்எஸ் பயிற்சி களமாக மாற்ற முந்தைய அடிமை அதிமுக அரசு துணைப்போனது அதன் வீக்கம் இப்போது புரிய தொடங்கியிருக்கிறது .. மாணவர் சமூகத்திடையே நல்ல விதைகளை விதைக்க வேண்டிய பெரும் பொறுப்பு நமக்கு இருக்கிறது .. விஷமேறிய நச்சுத்தன்மையை நீக்கும் நல்லவைகளை இந்த மாநிலம் சமத்துவத்தை ,சகோதரத்துவத்தை வேற்றுமையிலும் இணக்கத்தோடும் செயல்படுவதை உறுதி செய்யும் பெரும் பொறுப்பும் நமக்கிருக்கிறது .. 
..
பதவி பொறுப்பு இதையெல்லாம் கட்சிக்கென்று சில கடமைகள் உண்டு .. திராவிடம் நீர்த்துபேகாமல் காத்திடவேண்டும்..
பகைவர் நன்கு அறிந்து நீண்டநாட்கள் காத்திருந்து அதிகாரம் கைக்கு வந்ததும் ஆட்டம் போடுகிறார்கள் .. நம் உரிமையை நம்மில் முதுகொடிந்து போன கோழைகளை விலைப்போன வேசிகளை கொண்டு பறித்தார்கள் .. நல்வாய்ப்பாய் மக்கள் நம்மிடத்தை அதிகாரத்தை தந்ததால் மிச்சமிருந்தது களவாடாமல் காத்துநின்றோம் .. வரும் தலைமுறை சரியான பாதையில் செல்லவும் .. நல்லிணக்கத்தோடும் நல்லுறவோடும் இந்த சமூகம் வாழவும் காக்கும் கடமையை உணர்ந்தே #முத்துவேல்கருணாநிதிஸ்டாலின்  சரியான முடிவெடுத்து பாசறைக் கூட்டங்களை நடத்தி விழிப்புணர்வை ஏற்படுத்த முனைகிறார் .. 
..
திராவிடமாடல் ஒன்றே மனிதசமூக மேம்பாட்டிற்கு உகந்தது நாட்டிற்கு கேடுவிளைவிக்காமல் மக்கள் நிம்மதியோடு மத சாதி சண்டையில்லாமல் வெறுப்புணர்வில்லாமல் வாழ வகைசெய்யும் அறிந்து இளைஞர்களிடத்தில் வளரும் தலைமுறைய நல்லதாய் கட்டியெழுப்ப தொடங்கியிருக்கிறார்..
பகைவெல்ல படைவரிசை தேவை 
அது பாசறையால் உருவாக்க வேண்டும் ..
நல்லதே நடக்கும் என நம்பிக்கை பிறக்கிறது ..
நன்றி M. K. Stalin 
..
ஆலஞ்சியார்

Thursday, May 26, 2022

பிரதமரை மேடையில் வைத்துக்கொண்டு நீட் விலக்கு வேண்டும் தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய நிலுவைத்தொகையை உடனடியாக தரவேண்டும் ஒன்றிய வளர்ச்சியில் தமிழ்நாட்டின் பங்கு  மற்ற மாநிலங்களை விட அதிகம் ஆனால் தரவேண்டியதை தர மறுப்பது ஏன் .. இந்த மாநிலம் சமத்துவத்தை போதிக்கும் சமூகநீதியின் அடித்தளம் என தமிழ்நாட்டின் முதலமைச்சர் #முத்துவேல்கருணாநிதிஸ்டாலின் பேசினார் .. இவர்தான் தைரியமான முதலமைச்சர்.. முன்பு அடிமைகளை கண்டவர்கள் இப்போது  சரியான ஆளுமையை பார்க்கிறார்கள் ..
பிரதமரின் முகம்  காண ரசிக்கதக்கதாய் இருந்து🤣..
..
பிரதமரைPAM வரவேற்ற தமிழகம்  
மோடியை வைத்து செய்தது .. GOBACKMODI டிரெண்ட்னானது .. 
இதற்கு பின்னால் தேசவிரோதிகள் என எல்.முருகன் சொல்வதை கேட்க சிரிப்பு வருகிறது.. ஆம் இந்துத்துவ தேசவிரோதிகள் .. முருகன் முதல்வர் பெயரை உச்சரித்தபோது ஏற்பட்ட ஆரவாரம் அடங்க நேரம் பிடித்தது.. இது இயல்பாக வரவேண்டும்  வலுகட்டாயமாக வரவழைக்க முடியாது ..  மோடியின்  பெயரை, ஆர்.என்.ரவியின் பெயரை உச்சரித்த போது வராத கரவொலியொசை தளபதி பெயரை சொன்னவுடன் எழுகிறதே.. அதுதான் உழைப்பவனுக்கு  உண்மையானவருக்கு நல்ல தலைவனுக்கு கிடைக்கும் மரியாதை.. 
..
நெஞ்சில் கனமில்லை அதனால் பயமில்லை .. பொய்ச்சொல்லி அரசியல் செய்வில்லை.. வாயால் வடை சுடவில்லை .. ஏமாற்றவில்லை .. 56 இன்ச் என விடைக்கவில்லை .. எதுவெல்லாம் இயலும் என ஆய்ந்து மக்களுக்கு எது தேவை என உணர்ந்து நாட்டின் நிலை மக்களின் பரிதவிப்பு, அவர்களின் இன்னல்களை களைய எதை செய்யவேண்டும்  எதை  அவசரமாக செய்யவேண்டும் என ஆட்சி நடத்துகிறார் முத்துவேலர் பெயரன் கலைஞரின் மகன் .. அதனால்தான் மக்கள் கொண்டாடுகிறார்கள்..
..
மக்கள் அவதியுரும் போது கொஞ்சமும் சஞ்சலபடாமல் லிங்கத்தை தூக்கிகொண்டு அழுகிய அரசியல் செய்வோருக்கு எப்படி மக்களாட்சி செய்யவேண்டும் என பாடம் நடத்தியிருக்கிறார் .. தகுதியற்றவர்களை அமைச்சராக்கி நாட்டை புதைக்குழிக்கு கொண்டு செல்லும் மதமேறியமடையர்களுக்கு திராவிடமாடல்" குறித்து வகுப்பெடுத்திருக்கிறார் தமிழ்நாட்டின் முதலமைச்சர்..
..
திராவிட மாடல் என்றால் என்ன..?  நல்ல வகுப்பெடுத்தார் .. இங்கே பேதமில்லை,  என்ன ஆடை உடுத்தவேண்டுமென கட்டாயமில்லை, விருப்பான உணவை உண் யாரும் தடுக்கவோ தடைபோடவோ மாட்டார்கள் .. சமத்துவம் சமூகநீதி பிரதானம் .. ஹிஜாப் அணிந்தும் பரிட்சை எழுதலாம், பெண்கள் கல்வி மிக முக்கியம் இரண்டு மீட்டர் கூடுதல் துணிக்காக 20,000 பெண் குழந்தைகளின் கல்விக்கு தடை போடமாட்டோம், இங்கே எல்லோரும் சமம் .. பள்ளத்தை இருப்போரை உயரத்திற்கு கொண்டுவர பகுத்தறிவுத் துணைக்கொண்டு உழைப்போம், கல்வி கட்டமைப்பை உலகம் வியக்குமளவு உயர்த்திகாட்டுவோம்,  மதவெறிக்கு இங்கே இடமில்லை அண்ணன் தம்பி மாமன் மச்சானாய் மகிழ்ந்து வாழ்வதே திராவிடம் சமைத்தது என பொட்டில் அடித்தாற்ப்போல் சொல்லாமல் சொன்னார் ..
..
இவர் 
#முத்துவேல்கருணாநிதிஸ்டாலின் 
இந்திய ஒன்றியத்திற்கே வழிகாட்டி ..
பெருமைக் கொள்கிறது தமிழ்நாடு 
அண்ணனை,தம்பியை,அடுத்தவீட்டுகாரனை அறியணையேற்றியதைப்போல கொண்டாடுகிறது தமிழ்நாடு ..
தளபதி தமிழர்கள் தவம் ..
..
ஆலஞ்சியார்

Tuesday, May 24, 2022

நாளுக்கு நாள் மெருகேறுகிறார் மெருகேற்றுகிறார்  ..
தமிழ்நாட்டின் முதலமைச்சர் #முத்துவேல்கருணாநிதிஸ்டாலின்
..
நிதானமாக மிக தெளிவாக தமிழகத்தின் வளர்ச்சியை நோக்கிய நகர்வு .. சிறந்தவர்களை துறை வல்லுநர்களை கொண்டு ஒவ்வொரு அடியும் உயரத்தை நோக்கியதாக இருக்கவேண்டுமென்று செயல்படுகிறார் .. வீண் செலவுகள் குறைக்கபடுகின்றன, மாநிலத்தில் வருவாய் பெருக்கம், பணவீக்கத்தை இந்திய ஒன்றியம் 8% விழுக்காடு  ஆனால் தமிழகம் 5% விழுக்காடாக குறைகிறது பற்றாகுறை 60 ஆயிரத்திலிருந்து40 ஆயிரமாக குறைகிறது ..
எப்படி சாத்தியமானதென மூளை கூட சுமையாக கருதும் சீதாராமன்கள் 
வியக்கிறார்கள்..
..
நீங்கள் இடிக்க கற்றுதருகிறீர் நாங்கள் ஆக்க கற்று தருகிறோம் அவ்வளவுதான் .. கல்வியறிவில் சிறந்து விளங்கினால் மக்களிடையே மதமோ சாதியோ பெரும் தாக்கத்தை ஏற்படுத்தாது.  படி எனச் சொல்வது தான் இயக்கத்தின் தலையாய பணி ..
அதற்காகதான் தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கையில் 36 ஆயிரம் கோடி ஒதுக்கபட்டிருக்கிறது இந்திய துணைக்கண்டத்தில் எந்த மாநிலமும் ஒதுக்காக தொகையை 
ஒதுக்கி கல்வியில் சிறந்த நாடாய் உயர திராவிட மாடல் அரசு முயல்கிறது ..
..
தலைவர் தளபதி.ஸ்டாலின் அவர்கள்
திராவிட மாடல் என்பது 
எதையும் இடிக்காது உருவாக்கும் 
எதையும் சிதைக்காது 
சீர் செய்யும்
யாரையும் பிரிக்காது 
ஒன்று சேர்க்கும்
யாரையும்  
தாழ்த்தாது சமமாக நடத்தும்
யாரையும் புறக்கணிக்காது
அரவணைக்கும்  இது ஒரு கட்சியின் ஆட்சி அல்ல 
ஒரு இனத்தின் ஆட்சி  என்றார் 
எவ்வளவு தெளிவு ..
நூற்றாண்டு கண்ட இயக்கத்தின் அடிப்படையை, திராவிடப் பெருச்சுவராய் காத்துநின்ற அய்யா அண்ணா கலைஞர் போன்றோரின் உழைப்பில் கட்டமைக்கபட்ட கொள்கையை யாரெல்லாம் திராவிடத்தை நசுக்கிவிடலாம் என பார்த்து ஏமாந்து நிற்போருக்கும் பலநூற்றாண்டு வன்மத்தோடு நம்மை ஏளனம் செய்யும் திமிர்பிடித்த பாசிச கோமாளிகளுக்கு பாடம் எடுத்திருத்திருகிறார்
..
நாங்கள் பிறமத வழிப்பாட்டுதளங்களை இடிப்பவர்கள் அல்ல கல்விசாலைகளை உருவாக்குபவர்கள்..  மக்கள் மத்தியில் வெறுப்பை வளர்த்து நற்குணத்தை சிதைப்பவர்கள் அல்ல எதையும் சீர் செய்து அழகு பார்ப்பவர்கள்.. ஏற்றதாழ்வைச் சொல்லி பிரிப்பவர்கள் அல்ல சமத்துவத்தை சொல்லி சக மனிதனை மானத்தோடும் நேர்மையோடு உரிமையோடும் வாழ வழி செய்பவர்கள் ..  கொள்கையில் மாறுபட்டிருந்தாலும் அறிவிலி கூட்டமாய் நின்றாலும் முட்டாள்த்தனமாக மூடநம்பிக்கை கொண்டிருந்தாலும் பல்லக்கில் தான் செல்வேன் என அடம்பிடித்தாலும் அரவணைத்து அழைத்துச் செல்லும் சுயம் தெளியும் வரை என சொல்லி திராவிடத் தலைவனாய் தலைநிமிர்ந்து நிற்கிறார் ..
..
இத்தனை பக்குவத்தோடு ஒரு தலைவனை காண பெரும் மகிழ்ச்சி .. நாடு கண்ட நல்ல தலைவர்கள் வரிசையில் முன்னிலை நிற்கிறார் .. பல்துறை வித்தகர்கள் பன்மொழிப்புலமை கொண்டவர்கள் நிர்வாகத்தில் தன்னை சாணக்கியன் என்றவர்கள் சில நேரங்களில் கொள்கையில் கூட சமரசம்  செய்தவர்கள் உண்டு .. சிலருக்கு காலம் வாய்ப்பை நீண்டகாலம் தரவில்லை தந்த வாய்ப்பை சில காரணங்களுக்காக தாமதபடுத்தி செயல்படுத்தியவர்கள் உண்டு .. (அண்ணா கலைஞர்) ஆனால் நீண்ட அரசியல் அனுபவம் தளபதி ஸ்டாலின் அவர்களை தெளிவாக செயல்பட வைக்கிறது .. கலைஞரிடம் பயின்ற வித்தைகள் 
அவரை மெருகேற்றி மிளிர வைக்கிறது .. நிதானம் பேராயுதம் என்பதை உணர்ந்து எப்போது சுழற்றவேண்டும் என்பதை உணர்ந்து செயல்படும் முதலமைச்சர் .. எதிரிகளின் பெருங்கூச்சலும் பகைவரின் பதற்றமும் நமக்கு நல்ல தலைவர் இவரென அடையாளம் காட்டுகிறது முதிர்ந்து தருவைப் போல  நிழல் தருகிறார் பலன் தருகிறார்
..
மௌலானா ரூமி அவர்கள் சொன்னதைப்போல
ராஜாளிபோல் முனைப்புக் கொண்டு
அட்டகாசமாய் வேட்டையாடுகிறார்
சிறுத்தை போல் கம்பீரம் கொண்டு எதையும் 
போராடி வெற்றி பெறவேண்டும் எண்ணுகிறார்
குயில்களுடனும் மயில்களுடனும்
நேரத்தை வீணடிக்காமல்
ஒன்று வெறும் சத்தம்,
இன்னொன்று வெறும் நிறம்.. என்பதை உணர்ந்து செயல்படுகிறார்..
தளபதி அவர்கள் 
செயல், காரியகாரர் நம்பிக்கையாளர், நல்ல தலைவர் 
மக்கள் விரும்பும் தலைவர் 
..
ஆலஞ்சியார்

Friday, May 20, 2022

#நெஞ்சுக்குநீதி..
தீண்டாமை பாவச் செயல் 
தீண்டாமை தண்டனைக்குரிய குற்றம் பாடபுத்தகத்தோடு மறந்து போகிற சமூகம் நிலை.. 
இதைப்போல நிறைய படங்கள் வந்திருக்கின்றன இதுவொரு புலனாய்வு திரைப்படம் என்பதை தாண்டி நிறைய பேசியிருக்கிறது ..
..
ஒவ்வொரு சாதிக்கும் தனி குணம் இருக்குன்னு என் தாத்தா சொல்வார் இப்ப மட்டும் உயிரோடிருந்தால் போயா மசிருன்பேன்  என்கிற  வசனம் சுடுகிறது .. சாதீய உணர்வை மங்காமல் பார்த்துக்கொள்வதில் அப்பன் தாத்தனின் வழிமுறைகளும் செயல்முறைகளும் முக்கிய பங்குவகிப்பதை மறுக்கவியலாது 
உணர்வுபூர்வமாக மெல்ல நம் ரத்தத்தில் ஏற்றபடுகிற "வெறி" தொடர்ந்து நம்மை குதிரைக்கு போடபடும்"கடிவாளம்" போல ஒரே எண்ணத்தில் ஓட வைக்கிறது .. 
"எல்லோரும் சமம்னா யாருதான் சார் ராசா" கேள்வியில் விடையறியா "மூலம்" நம்மை  வேட்டையாடும் எல்லோரும் சமம் என நினைப்பவர் தான் ராசா என்றாலும் கேள்வி வேர் எந்தளவு ஊடுறுவியிருப்பதை புரிந்துக்கொள்ளமுடியும் 
..
சாதிசங்கங்களையும் தலையில் கொட்டி நமக்காக பேசுவான் என நினைத்தால் மத்தவனுக்கு செருப்பா இருக்கிறான் என்று உரைக்கிறமாதிரி பேசுவதும் படிச்சு பெரியாளா வந்தா நமக்காக எதுவும் செய்றதில்லை என்ற யதார்த்தத்தை போகிற போக்கில் சொல்கிறது திரைப்படம்.. காவல்துறையில் சாதிய நிலை
எந்தளவு புரையோடி இருக்கிறதென்பதும் "அதுங்க" என்ற சொல்லாடல் உணர்த்துகிறது ..
நான் FC சார் ..அவரும் நீங்களும் ஒண்ணா ..இல்லை சார் அவரும் அய்யர் சார் நமக்கெல்லாம் மேலே..
நீங்க SC யா என கேட்க ஆமாம்சார்.. அவுங்க  எங்களுக்கு கீழே சார் என்பதிலிருந்து தீண்டாமையின் கொடூரம் அது எந்தளவு வேரூன்றியிருக்கிறதென்பதை காட்டியிருக்கிறார்கள் ..
..
தமிழகத்தில் இத்தனை ஆண்டுகள் பகுத்தறிவு பிரசாரம் மேற்கொண்ட போதும் இன்னமும்  பெருநகரங்கள் தவிர்த்து மற்ற இடங்களில் சிற்றூர்களில் சாதீய கோரதாண்டவம் இருப்பதை ஒப்புக்கொள்ளவேண்டும் .. பட்டியிலின மக்களிடையே கூட படித்தவுடன் "மேட்டிமைதன்மை " குடியேறி சொந்த இனமக்களை கூட புறக்கணிக்கிற/ தவிர்க்கிற நிலைதானிருக்கிறது.. 
படம் முழுக்க சாதிய படிநிலைகளை அதன் வேரின் விஷத்தை தோலுரித்து சட்டத்தின் முன் அனைவரும் சமமென சொல்கிறது ..சட்டம் நீதி எல்லாநேரமும் கைகொடுப்பதில்லை நியாயம் பேசுவதில்லை.. அதன் கட்டமைப்பு சாதீய அடுக்குநிலையில் உருவானது.. சாமனியனால் பெறமுடியாது .. 
மிருகபலம் கொண்டது பணம் புகழ் சாதி மதம் இவை காவல்துறை  நீதித்துறைகளில் வேரூன்றி அசைக்கமுடியாமல் இருப்பதை 
நாம் ஒப்புக்கொள்ளதான் வேண்டும் ..
..
Article 15 நமக்கு தந்த உரிமை மற்றவர்களையும் சமமாக மதிக்கவேண்டும் 
இனம் மொழி சாதி மதம் பாகுபாடு பார்க்க கூடாதென்பதை உறுதி செய்தாலும்.. 
வளரும் தலைமுறையினரிடையே 
சமத்துவத்தை எல்லாரும் சமம் என்பதை "சரியாக" போதிக்கவேண்டும் .. "பிறபொக்கும் எல்லா உயிர்க்கும்" பேசுபொருளாக மாறவேண்டும் சாதிசங்கள் அது சமுதாய வளர்ச்சிக்கல்ல என்பதையும் மக்கள் உணரும் வகையில் தொடர் நடவடிக்கைகள் ஏற்பட்டால் தான் அது 
"நெஞ்சுக்கு நீதி" 
..
உதயநிதிக்கு நல்ல படமாக அமைந்திருக்கிறது ..இயல்பான நடிப்பும் மிகைப்படுத்தாத திரைக்கதை நகர்வும் யதார்த்தமான வசனங்களும் ஒரு
நல்ல சினிமாவை தந்திருப்பதில்  மகிழ்ச்சி
..
ஆலஞ்சியார்

Wednesday, May 18, 2022

பேரறிவாளன் விடுதலையும் 
தமிழக அரசின் அதிகார வரம்பும் 
இங்கே உறுதியாகியிருக்கிறது 
31 ஆண்டுகள் தொடர்ந்து சிறை தூக்குத்தண்டனை ரத்து செய்யபட்டு அது ஆயுள்தண்டனையாக மாறியும் சட்டபோராட்டங்களும் நிறைய வினாக்களுக்கு விடை கிடைத்திருக்கிறது இது முக்கியமான வழக்காக வரும் காலங்களில் பேசபடும் இந்த தீர்ப்பு தொடர்ந்து சிறைகளில் வாடும்  எளியவரின் விடுதலைக்கு முன்னுதாரமாக எடுத்துக்கொள்ளபடும் ..
..
ஒரு தாய் தன் மகனுக்காக நீண்ட 
போராட்டம் வரலாற்றில் பேசபடும் ..
அந்த தாய்  அதிகார வர்க்கத்தையும் ஆட்சியாளர்களையும் மாறி மாறி  கருணைக் காட்டுங்கள் என தட்டியது வீண்போகவில்லை கதவு திறந்தது .. ஆரம்பகாலங்களில் அவரை சில  ஈழப்பிணந்திண்ணிகள் தவறாக வழிநடத்தியதையும் நாம் பதிவு செய்யவேண்டியிருக்கிறது ..
..
நீண்டநாள்கள் சிறைவாசம் என்பது கொடுமையான தண்டனை .. இந்த தீர்ப்பு சொல்லும் சேதி விசாரணை கைதிகளாக நெடுநாட்கள் சிறையில் கழிப்போருக்கு நம்பிக்கையை தந்திருக்கிறது  மாநில அரசின் அதிகாரவரம்பில் குடியரசு தலைவருக்கு  தலையிட அனுமதியில்லை ஆளுநர் தன் அதிகாரவரம்பை மீறகூடாது அவர் கேபினட் தீர்மானத்தை முன்மொழிய வேண்டுமே தவிர தனியாக கருத்து கூற கூடாதென தீர்ப்பு மாநில சுயாட்சியை வலியுறுத்துவதும் மாநில அரசே நீண்டநாள் சிறைவாசிகளை  விடுதலை செய்யலாம் என சொல்லியிருப்பது பெரும் நம்பிக்கையை விதைக்கிறது 
..
கோபால் கோட்ஸேவை முன்னிறுத்தி 
பேரறிவாளன் விடுதலை வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் கடுமையான சில வாதங்களை தமிழ்நாடு அரசு வைத்தது. தமிழ்நாடு அரசு வைத்த வாதங்கள் பேரறிவாளனுக்கு ஆதரவாக இருந்ததோடு, வழக்கிலும் பல திருப்பங்களை ஏற்படுத்தியது. இந்த ஒரு வழக்கு என்று இல்லாமல்.. மொத்தமாகவே ஆளுநரின் அதிகாரத்தை கேள்வி எழுப்பும் வகையில் தமிழ்நாடு அரசு சில முக்கிய வாதங்களை இந்த வழக்கில் வைத்தது..
சட்டப்படி ஆயுள் தண்டனை பெற்ற கைதிகளை விடுவிக்கும் சக்தி குடியரசுத் தலைவருக்கு கிடையாது அது மாநில அரசுக்கு மட்டுமே உள்ளது.. 
..
ஆளுநர் தனது கடமையை செய்யவில்லை. அவர் தன்னை மட்டுமின்றி இந்த விவாகரத்திற்கு உள்ளே குடியரசுத் தலைவரையும் கொண்டு வந்துள்ளார்..
ஆளுநர் விருப்பு, வெறுப்புகளை தாண்டி செயல்பட வேண்டும். மாநில அமைச்சரவை எடுக்கும் முடிவுகளில் ஆளுனர் தனது தனி முடிவுகளை எடுக்க கூடாது. யாரை விடுக்க வேண்டும், விடுவிக்க கூடாது என்று முடிவெடுக்க அமைச்சரவைக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. அதில் ஆளுநர்  முடிவெடுக்க  முடியாது..
ஆளுநர் அமைச்சரவை முடிவிற்கு கட்டுப்பட்டவர்..
..
அரசியல் சாசன ரீதியாக மிகப்பெரிய பிழையை ஆளுநர் செய்துவிட்டார். ஆளுநர் அமைச்சரவை முடிவை ஏற்கவில்லை. அவர் இப்படி செய்தது பிழை.. 
குடியரசுத் தலைவரை 161 சட்ட விதிக்கு கீழ் கொண்டு வர முடியாது. அது ஆளுநருக்கு இருக்கும் அதிகாரம். அதில் அவர்தான் அமைச்சரவை முடிவிற்கு கட்டுப்பட்டு முடிவு எடுக்க வேண்டும்..  அமைச்சரவையின் முடிவை குடியரசு தலைவருக்கு அனுப்பாமல் கூட்டாட்சி தத்துவத்தின் அடிப்படையை கவர்னர் மீறிவிட்டார் .. காந்தியை கொன்ற கோட்சேவின் சகோதரர்
 (ஆயுள்தண்டனைகைதி) 14 ஆண்டுகளில் விடுவிக்கபட்டார் என தமிழ்நாடு அரசின் வழக்கறிஞர் ராகேஷ் திவேதி வாதிட்டார் 
..
இந்தநேரத்தில் நளினியின் தூக்குத்தண்டனையை ஆயுளாக குறைத்து தொடக்கம் குறித்த #பேரருளாளன்_கலைஞரை நினைவுகூற வேண்டும் ..
நல்ல ஆட்சியை தந்த மக்களுக்கும்
தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின்
Chief Minister of Tamil Nadu M. K. Stalin 
 அவர்களுக்கும் நன்றி!..
எழுவர் விடுதலையில்லாமல் எம் இனத்தின் விடுதலை இல்லை 
தொடர்ந்து முயற்சிப்போம் 
#முத்துவேல்கருணாநிதிஸ்டாலின் 
செய்து முடிப்பார் 
..
ஆலஞ்சியார்

Saturday, May 14, 2022

தி.மு.கழகம்..
நிறைய பேருக்கு கழகத்தின் கொள்கை ,இயக்கம் நடந்துவந்த பாதை எதற்காக தொடங்கபட்டது ஏன் தொடரவேண்டும் என்றெல்லாம் தெரியாது.. கலைஞரை பிடித்திருக்கிறது ஸ்டாலின் செயல்பாடுகள் பிடிக்கும் என் அப்பன் காலத்திலிருந்து திமுக அதனால் தொடர்கிறேன் என்போரே அதிகம் .. 
..
தி.மு.கழகம் எல்லோரையும் அரவணைக்கும் அது கடமையும் கூட ஆனால் தொடர்ந்து இந்திய ஒன்றியத்தில் மக்கள் தொண்டாற்ற இவ்வியக்கம் நிலைக்க வேண்டுமெனில் மக்களிடம் செல்லவேண்டியது அவசியம்.. ஆனால் பதவி கிடைத்தால் போதும் என குறுகிய வட்டத்திற்குள் செயலாற்றுகிற கூட்டம் பெருக்கெடுத்துநிற்கிறது .. உதயநிதி படத்தை பெருசா போடு.. அவர்களின் கடைக்கண் பார்வை கிடைக்காதா என சிலர் நடித்துக்கொண்டிருக்கிறார்கள் .. சின்னவரின் வழியில் செயல்படுவோமென பாட தொடங்கியிருக்கிறார்கள் இந்த காரியகாரர்கள் .. ஆபத்தான போக்கு இது .. 
நான் யார் வரவேண்டுமென சொல்வதற்கு வரவில்லை இயக்கம் தனக்கான தலைவனை தயார் செய்யும் .. ஆனால் அதற்காக இப்போதே துதிபாடுவது தலைமைக்கே சங்கடத்தை தரும்..
இன்னொன்று உண்டு இதில்.. இவர்களிடம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் ..
..
நூற்றாண்டு கண்ட இயக்கம் மக்களிடம் செல்வதை குறைத்துக்கொண்டதோ என அஞ்சவேண்டியிருக்கிறது .. தகுதியற்றவர்களின் தரமற்ற பேச்சுகள் மக்களிடம் சலிப்பை தரும்.. இயக்கத்தின் அடித்தளத்தையே அசைத்து பார்க்க பாசிசம் நம் கைகளையே தயார் செய்கிறது .. ஆர்எஸ்எஸ் விரும்பிகள் மெல்ல ஊடுறுவலாம்..
நம் மெத்தனபோக்கு பெரும் விரிசலை தரலாம்.. கொள்கை தெளிவற்ற கோமாளிகள் கட்சியின் முகத்தை சிதைக்கலாம் இந்த இயக்கத்தின் வரலாறு தெரியாதவர்கள் எல்லாவற்றிக்கும் தலையசைத்து ஜனநாயகத்தை நீர்த்துபோக செய்வதும் ஜால்ராக்களின் ஓசை செவிப்பறையை கிழிப்பதும் காணும் போது அறிவுடைச் சமூகத்தை வளர்க்க வேண்டியதன் அவசியம் புரிகிறது ..
..
இந்த இயக்கம்  மேலாதிக்கத்தை ஒழிப்பதற்கும், அனைவரையும் சுயமரியாதையோடும் சமமாக நடத்தவும் அவர்களின் எல்லா உரிமைகளையும் (கல்வி,வேலைவாய்ப்பு) பெற்றுதரவும் சமுதாயத்தில் ஏற்றதாழ்வற்ற சமநிலையை கொண்டுவரவும் அறிவுடைச் சமூகமாக தமிழினத்தை உயரத்தில் நிறுத்திடவும், தமிழர் வாழ்வு பண்பாடு கலாச்சாரத்தை உலகறிய செய்யவும், தொடங்கபட்டது .. நோக்கம் அறிவோம் இலக்கும் அறிவோம் பகைவர் யாரென அறிவோம் .. ஆனால் தொடர்ந்து நம்மை அழுத்திவரும் பாசிசத்தை இணக்கமாக செல்ல தமிழகத்து இளைஞர்கள் தயாரானது எப்படி .. எங்கே நாம் சறுக்கினோம் .. எதற்காக நம்மோடு இருந்தவர்கள் பகைவர் முன் பல்லிளிக்கிறார்கள் நாம் செய்ய மறந்தது எது என ஆய்வு செய்யவேண்டிய நேரம் வந்துவிட்டது ..நம் கைகளை கொண்டே நம் கண்களை பறிக்க முயல்கிறார்களே எங்கே தவறு என இயக்கம் உணரவேண்டியது அவசியம் .. எழுத்தும் பேச்சும்,கலந்துரையாடலும், ஆய்வரங்க கூட்டங்களும் தெருமுனை விளக்கங்களும்,திண்ணை பிரசாரமும் கிராமங்களை தேடி நம் தலைவர்கள் இயக்கத்தின் இளைஞர்படையினர் கருத்து பிரசாங்களை செய்ய வேண்டியது அவசியம் .. சின்னவர் வழியில் என செம்படிக்காமல் ஊர்தோறும் மக்களோடு கலந்துரையாடல்களை நடத்தவேண்டும் .. மக்களோடு செல் மக்களோடு பழகு மக்கள் சொல் கேள் இதுதானே அண்ணனின் அருள்வாக்கு..  அதை செய்ததால் தானே இன்றைக்கும் உயிர்ப்போடு 
தி.மு.கழகம் இருக்கிறது .. கருத்துரிமைக்கு மதிப்பு தந்த இயக்கம் வா இந்த பக்கம் போவோம் என்றால் ஏன் இந்த பக்கம் போக வேண்டுமென கேள்வி எழுப்புவார்கள் என் தம்பிகள் என்றார் அண்ணா .. தனக்கு வரும் எதிர்கருத்துகளையும் அது கட்சியினரிடமே இருந்து வந்தாலும் அதை இன்முகத்தோடு கேட்டு மறுத்தோ ஏற்றோ செயல்பட்டவர் கலைஞர் .. ஆம் கலைஞரைப்போல சிறந்த ஜனநாயகவாதியை இந்திய ஒன்றியத்தில் காண முடியாது
..
தலைவனை இயக்கம் கண்டெத்தும் அதற்கான வரையறைகளை வகுத்து தரும் நாம் மக்களிடையே செல்வோம் இன்னமும் இந்த
இயக்கத்தின் அவசியத்தை  மக்களிடையே எடுத்து வைப்போம் .. பாசிசம் நம்மிடையே பிரிவினையே செம்மையாக செய்ய தொடங்கியிருப்பதறிந்து முளையிலேயே கிள்ளியெறிவோம் 
..
 தி.மு.கழகம் பகுத்தறிவு இயக்கம் 
மக்கள் இயக்கம் .. நம்பிக்கையாளர் மறுப்போர் அனைவருக்குமான இயக்கம் .. "தமிழ்நாடு,தமிழர் நலன்,தமிழர் வாழ்வு உயர்வு" மட்டுமே இலக்கு ..
தொடர்ந்து பணிசெய்வோம் 
தலைவரின் கரம் பிடித்து ..
Chief Minister of Tamil Nadu 
M. K. Stalin 
..
ஆலஞ்சியார்