Tuesday, July 7, 2020

ஊடகம்

ஏன் கதற வேண்டும் ..
பத்திரிக்கை செய்தித்துறையில் #அவர்கள் மட்டுமே ஆண்டுவந்தது தகரும்போது வரும் இயல்பான கோபம் அதைகூட தைரியமாய் சொல்வதற்கு வக்கற்று மாரி மதன்களை களம் இறக்குகிறார்கள் ..நேர்மையாக நெஞ்சுயர்த்தி பேசுவது பண்டே
பழகமில்லாத ஆரிய கூட்டம் #குணசேகரன்களை கண்டால் பதறி அழுகிறார்கள் ..
ஊடகங்களின் அவாள்களின் ஆதிக்கம் இப்போதும் முழுமையாக குறைந்திடவில்லை எனினும் நம்மவர்களின் வளர்ச்சி எரிச்சலை தருகிறது.. 
தொலைக்காட்சி ஊடகத்தின் தேவையை  முழுமையாக புரிந்துக்கொண்ட முதல் தமிழன் மாறன் .. சன்டிவியின் வளர்ச்சியும் அதன் வேகமும் பதறவைத்தது இத்தனைக்கும் அது ஒரு கட்சியின் டிவியாக தான் இருந்தது .. மாறன் மறைவிற்க்கு பிறகு மல்லிகாக்கள் கையில் வந்ததும் தன் நிறத்தை மாற்றியது ஆனாலும் நாம் கலங்கவில்லை வீரபாண்டியன்களை உருவாக்கி வைத்திருந்தோம்..தொலைக்காட்சி ஊடகம் பரிணாம வளர்ச்சியடைந்த போது நிறைய செய்தி ஊடகங்கள் நம்மவர்களால் கையாளபடுதலால் அவர்கள் கோபபடுவது இயல்புதானே..
..
நம் வீட்டு பிள்ளைகள் செய்தியாளராக, செய்தி ஆசிரியராக,செய்தி நிறுவனத்தை நிர்வகிப்பவராக வந்ததும் பொறுக்கமுடியாமல் புலம்பகிறார்கள் அதிலும் இரவல் குரலில் ..
இந்த நிலைக்கு திராவிடம் முக்கிய காரணம் 
நம் பிள்ளைகளை குலக்கல்விக்கு விடாமல் 
கல்வி தந்தது முதல்பட்டதாரிக்கு கல்விக்கட்டணத்தை ரத்து செய்தது நீ விரும்புகிற துறையில் உன் திறமையை காட்ட களம் அமைத்து தந்தது ..  ஆனாலும் திமுகவை விமர்சித்துதான் பெரும்பாலான ஊடகங்கள் ஆனால் திமுக கதறவில்லை,பதறவில்லை தன் கடமையை செவ்வனே செய்கிறது.. ஆனால் மோடியை  பாஜகவை,சனாதனத்தை பிராமணத்தை விமர்சிக்கும் போது
அவர்களுக்கு உதறல் வருகிறது.. 
..
என்ன சொல்ல வருகிறார்கள் 
ஊடகம் ஆளும்கட்சிக்கு ஆதரவாக செயல்படவேண்டுமென்றா.. பாசிசத்திற்கு வால்பிடிக்கவேண்டுமா.. இவர்கள் செய்யும் அலுச்சாட்டியங்களை கண்டுக்கொள்ளாமல் கைதட்டவேண்டுமா .. மோடியையும் பாஜகவையும் பார்பனீயத்தையும் கொண்டாட வேண்டுமா.. ஊடகத்தின் குரல்வளையை நெறித்து ஊசலாடிக்கொண்டிருக்கும் ஜனநாயக மூச்சை நிறுத்தவேண்டுமா.. இவையெல்லாம் இங்கே நடத்திடமுடியாது 
சனாதனத்திற்கெதிரான திராவிட மண்ணில் கொஞ்சம் புளிக்கும்.. பெரியாரின் உழைப்பு திராவிட இயக்கம் பலனால் நேடிய கல்வியால் சமூகநீதியை பேசுவதை தொடர்ந்து எவ்வளவு முயற்சித்தும் பொய்யை பரப்பியும் கலவரத்தை தூண்டியும் மதவெறியை சாதிவெறியை நடத்தியும் அவர்களால் இறுதியில் வெற்றிபெற முடியாமல் போவதற்கு சிறதேனும்,காரணிகளில் இன்றைய முதல்தலைமுறை ஊடகவியலாளர்கள் ..
பின்னே கோபம் வரத்தானே செய்யும். 
..
இவர்கள் குற்றம்சாட்டும் ஊடகவியலாளர்கள் 
நேர்மையோடு நடக்கவில்லைதான் .. எதையும் அறநெறியோடு அணுகவில்லைதான் இன்னும்,சொல்லபோனால் திமுகவின் வெற்றியை தடுப்பதில் தடைபோடுவதில் 
முனைப்போடு செயல்பட்டவர்கள் தான் ஆனாலும் அவர்கள் மீது பாசிசவாதிகளின் வன்மம் நிறைந்த குற்றச்சாட்டை பழியை அவர்கள் மீது எரியும் தனலை பார்த்துக்கொண்டும் கேட்டுக்கொண்டும் இருக்கமுடியாது ஏனெனில் இவர்கள் நம் பிள்ளைகள் 
இவர்களை உயரத்தில் ஏற்றதான் திராவிடம் பாடுபட்டது இனியும் தொடர்ந்து உழைக்கும்..
..
ஆலஞ்சியார்

Friday, June 19, 2020

ராகுல்

ராகுல் 
மதிப்பிற்குரிய தலைவராக உயர்ந்துநிற்கிறார் 
பதவிக்காக எதையும் செய்யும் அரசியல் அறியாத மிகவும் பக்குவபட்ட தலைவராக வலம் வருகிறார் ..நாட்டை உண்மையாக நேசிக்கிறவர் .. பொய் அறியாதவர் தன்னை தேடி பதவி வந்தபோதும் மன்மோகன் எவ்வளவோ வற்புறுத்தி ஏற்காதவர் .. அன்று பதவியை ஏற்றிருந்தால் Dominate செய்கிறார் அதிகாரத்தில் தலையிடுகிறாரென பெயர் வந்திருக்கும் ..  இவர் மீது வைக்கபட்ட விமர்சனங்கள் அவதூறுகளை கண்டுகொள்ளாமல் பயணிப்பவர் .. இத்தாலி குடியுரிமை வெளிநாட்டில் காதலியென கதைவிட்டு பார்த்தும் பொதுவெளியில் மோடியை போல கண்ணீர்விடவில்லை ..
நல்ல தலைவனுக்கு தகுதி கற்றுக்கொள்ளல் அது ராகுலிடம் காணமுடிகிறது.. மிகச் சிறந்த தலைவர்களை காலம் தரும் .. 
இளைஞராக இந்நாட்டின் நாட்டுமக்களின் நம்பிக்கையாக வலம் வருவார்.
..
நாடகம் நடத்தவில்லை மார்பை விரித்து வீரவசனம் பேசவில்லை அடுக்கடுக்காய் பொய்பேசி திரியவில்லை அழுது புலம்பவில்லை, மதவெறியை தூண்டி கலவரம் செய்ய தெரியவில்லை சாதிவெறியூட்டி கீழானவர்கள் என விசவிதையை தூவி தாக்கவில்லை மாட்டிறைச்சி வைத்திருந்தவனை கொன்றவனுக்கு மாலை அணிவிக்க சொல்லவில்லை .. முன்பிருந்த ஆட்சியாளர்கள் மீது பலிபோடவில்லை .. 
இந்திராவையும் ராஜீவ் மரணத்தையும் வைத்து 
அரசியல் செய்ய தெரியவில்லை.. தொடர்ந்து தன்னை கேலி செய்தும் தரந்தாழ்ந்து தனிநபர் விமர்சனத்தை செய்ய தெரிவில்லை.. கண்ணீர் வடித்து என்னை தீக்கிரையாக்கிவிடுங்கள்  என நடிக்கவில்லை .. பாவம் வடஇந்திய அரசியலை அறியாதவராகிப் போனார்..
..
நேர்மையாக பேசி நல்ல நெறியோடு கூடிய அரசியல் அறத்தை அறிந்திருந்தார் .. தனக்கு தெரியாத துறைகளில் தெளிவு பெற அந்தந்த துறைசார்ந்த வல்லுநர்களை கலந்தாலோசிக்கிறார் .. மக்கள் அவதிபடும் போது கைதட்ட சொல்லாமல் தானே நேரில் சென்று புலம்பெயர் மக்களோடு பேசுகிறார் .. 
எளிமையாக தன்னை முன்னிறுத்துகிறார் .. நீண்டகாலமாக காங்கிரஸில் இருந்த ஆர்எஸ்எஸ் பிராமணர்களின் துரோகத்தால் தனது அரசியல் பயணம் கேள்விக்குறியான போதும்.. ஊடகத்துறை ராகுலை ஏதோ தகுதியே இல்லாதவர் போல் போலி பிம்பத்தை உருவாக்கிய போதும் கலங்காமல் மக்கள் பணியை செய்கிறவர் .. 
..
நாடாளுமன்ற தேர்தலின் போது திமுக தலைவர் தளபதி.முக.ஸ்டாலின் ராகுல் பெயரை முன்மொழிந்தார் ஆனால் பதவி ஆசை/வெறிப்பிடித்த மாநில தலைவர்கள் ஏற்க மறுத்ததின் விளைவு .. சில இஸ்லாமிய கட்சிகள் உ.பி. கர்நாடகா போன்ற மாநிலங்களில் வாக்கை பிரித்து பாஜகவிற்கு துணைப்போனது இவையெல்லாம் இன்றைய 
துயரத்திற்கு காரணம் ..
திரு.ராகுல் அவர்களே .. 
நீண்ட பயணம் காத்திருக்கிறது .. அரசியல் ஆசான் கலைஞரை படியுங்கள் ..இந்த பாசிச கூட்டம் எப்படி தொடர்ந்து தொந்தரவு செய்தது ஊழல் வழக்கு உதிரிக்கட்சிகளை பிரித்தது 
திமுகவை உடைக்க மகோராவை முன்னெடுத்தது அடுத்தடுத்து தோல்விகள் வீழ்ச்சிகள் துரோகங்கள் என தொடர்ந்து அழுத்தபட்டபோதும் "அறம் வெல்லும் " என்ற துணிவோடு அரசியல் செய்தவர்..இன்று வரலாறு  புகழ்கிறது .. நேர்மையும் நெஞ்சுரமும் விடாமுயற்சியும் எதிரிகளின் சூழ்ச்சி அறிந்த வீயூகமும் துரோகிகளை இனம்கண்டு தூரத்தே நிறுத்தி செயலாற்றுங்கள் .. மக்களை சந்தியுங்கள் "நமக்குநாமே " நல்ல முன்னுதாரணம் .. மக்களிடம் செல்லுங்கள் 
மக்கள் என்றைக்கும் கைவிட மாட்டார்கள் பெருந்துயரத்தில் இருக்கும் அவர்கள் எதிர்பார்ப்பது பொய் சொல்லாத நல்ல நிர்வாகத்தை தருகிற நேர்மையானவரை ..
நாணயமான நல்ல அரசியல் தலைவரை தான்..
நம்புங்கள் மக்களிடமே ஜனநாயகத்தின் உயிர்நாடி இருக்கிறது ..

வாழ்த்துகள் ராகுல்
..
ஆலஞ்சியார்

Tuesday, May 12, 2020

தவைவர்

தொழிலாளர்கள் சாலைகளில் நடப்பது எனக்கு வேதனை அளிக்கிறது - மோடி கண்ணீர்..
ஆம் அதற்காக  என்ன செய்தீர்கள் புலம்பெயர் தொழிலாளர்களின் வண்டி கூலி கேட்டவர் தானே இப்போது நீலிக்கண்ணீர் வடிக்கிறீர்..
கொரோனாவோடு வாழ பழகிக்கொள்ளுங்கள் என்கிறீர்..  உலகமெங்கும் கொரோனாவோடு போராடி வாழ பழகி கொண்டார்கள் ஆனால் பசியோடு வாழ தான் மக்கள் இன்னும் அறியவில்லை .. நடந்தே வீடு திரும்பும் 4 வயது சிறுமி சாப்பிட்டு இரண்டுநாளாகிறதென்கிறாள் கும்பி எரிகிறது.. சைக்கிளில் 1400 கிலோமீட்டர் பயணிக்கிறான் இந்தியாவின் எதிர்கால இளைஞன் சாப்பிட வழியில்லை .. ரயிலில் அடிப்பட்டு குடும்பத்தோடு இறந்து போவதெல்லாம் எசமானர் அறிவாரா தெரியவில்லை .. 
குஜராத் மாடல் என "பொய்" சொன்னதாக தான் இதுவரை அறிந்திருந்தோம் இப்போதுதான் தெரிகிறது நீலிக்கண்ணீர் பசி போக்கும் நம்ப வைக்கும் அழுதுக்கொண்டே சொன்னால் நம்பிவிடும் இளகிய மனம்படைத்த மக்கள்.. முடியாமல் போனால் மதம் பேசி மயக்கலாம் இதுதான் குஜராத் மாடல் .. வளர்ச்சிபாதை தெரியாது நிர்வாக திறமை அதெல்லாம் தேவையில்லை வாய்கிழிய வீரவசனம் பேசி திடீரென கரைந்து கூனிகுறுகி மக்கள் முன் நின்றால் கடந்ததையெல்லாம் மறநிதுவிடுவார்கள் என்ற சூத்தரம் நன்கு அறிந்ததால் பிரதமராய் இருக்கிறீர் ..
..
மக்கள் நிம்மதி இழந்து வெகுநாட்களாகிவிட்டது.. சமயம் சமூகம் சார்ந்த தாக்குதல்கள் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை வேட்டையாடுதல் .. வறுமைக்கோட்டிற்கு கீழுள்ளவர்களை எப்போதும் கண்டுக்கொள்ளாத ஆரிய சமாஜன கூப்பாடுகளுக்கு செவிசாய்த்து ஆட்சி நடத்துகிறீர் .. சில பெரும் முதலாளிகளின் பார்வைமட்டும் உம் கண்ணுக்கு தெரியும் .. சிறுதொழில்களை முடக்கி முதலாளியாய் வலம்வந்தவனை தொழிலாளியாக்கிய பெருமை வேறெந்த பிரதமருக்கும் வாய்க்கவில்லை .. வீழ்ந்த பொருளாதாரத்தை நிமிர்த்த வல்லுநர்கள் சொல்லை செவிசாய்க்காமல் மீண்டும் மீண்டும் அகலபாதாளத்தில் நிறுத்திவைத்துதான் சாதனை .. ஆட்சியில் இருக்கும் போதே வெறுக்கபடுகிறவராக இருப்பது அறியாமல் இல்லை .. இதுவரை முதலமைச்சர்களிடையே கலந்துரையாடல் செய்து என்ன சாதித்தீர் ..பிரதமரோடான கலந்துரையாடல் வீண் என கேரள முதல்வர் வெளிப்படையாகவே சொல்லிவிட்டு தன் பணிகளை செய்ய தொடங்கினார் இந்தியாவில் கொரோனாவை கட்டுக்குள் கொண்டுவந்த மாநிலமாக கேரளம் திகழ்கிறது இந்தியாவிற்கே Excellent Paradigm 
சிறந்த முன்னுதாரணமாக திகழ்கிறது ..
பிரதமரோ வழக்கம் போல சுயசார்பில் வென்றுகாட்டுவோம் எனச் சொல்லி வாழபழக சொல்கிறார்.. ஊடரங்கை நீட்டித்து வாழ பழகிக்கொள்ளுங்கள் என்கிறார்
..
மாநிலத்தில் ஒரு எதிர்க்கட்சி எப்படி செயல்பட வேண்டுமென திரு.ஸ்டாலின் தன் நிர்வாகத்தால் செய்துகாட்டுகிறார் பசியோடு யாரும் உறங்க செல்ல கூடாதென்ற உயர்பண்பு .. உதவி என கேட்போருக்கு உடனடியாக அந்தந்த மாவட்ட வட்ட பிரதிநிதிகளை கொண்டு உதவிட செய்தல் .. புற்றுநோய்க்கு மருந்து கிடைக்கவில்லை என்றவுடன் உடனே ஏற்பாடு செய்கிற நாடாளுமன்ற உறுப்பினர் .. கேட்டதும் கிடைக்கிறது என மக்கள் மனதிருப்தி கொள்கிறார்கள் ஒவ்வொருநொடியும் மக்களைப் பற்றிய சிந்தனை மக்கள் நலன் காக்க தவறிய அரசை கண்டித்துவிட்டு சும்மா இருந்துவிடாமல் உடனடியாக தானே களத்தில் இறங்கி அனைத்து தரப்பினரையும் காணொளியில் அழைத்துப் பேசி அவர்களின் துயர்துடைக்கும் கரமாய் திகழ்கிறார் .. பொதுவாழ்விற்கு வந்துவிட்டபிறகு அதிகாரம் அளிக்கவில்லையென்றாலும் மக்கட்பணி செய்து கிடப்பதே அறம் என செயல்படும் தலைவர் .. தலைவர்கள் எப்படி 
செயல்படவேண்டமென்ற இலக்கணத்தை எங்கள் #பேரருளாளன்_கலைஞரிடம் படித்தவர் 
நல்ல தலைவனை கொண்டாடுவோம்..
மாநிலத்திற்கு மட்டுமல்ல இந்தியாவிற்கே வழிகாட்டும் பெருந்தலைவராய் திகழ்கிறார் .. அன்று ராகுலை முன்மொழிந்த போது சில மாநில கட்சிகள் பதவி ஆசை கொண்ட சுயவிரும்பிகள் எதிர்த்தார்கள் அன்று அனைவரும் ஏற்றிருந்தால் இன்று இந்த நிலை வந்திருக்காது .. 
..
#தலைவர்_ஸ்டாலின்
..
#MISSION_MKS2021

#MISSION_DMK2021
..
ஆலஞ்சியார்

Monday, May 11, 2020

வழிபாடு

வழிபாட்டுத்தளங்களை திறக்க வேண்டுமென ஜலீல் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்திருக்கிறார் .. வழிபாட்டுதளங்கள் என்பது கோயில் மசூதி தேவாலயம் அடங்கியது தான் ஆனால் வழக்கை தொடர்ந்திருப்பவர் ஜலீல் .. கேட்கவே வேண்டாம் ஏற்கனவே தப்லீக் ஜமாத்தை சேர்ந்தவர்கள் உலகெங்கும் கொரோனா தாக்கம் வெகுவாக பரவி வரும் வேளையில் தப்லிக்ஜமாத் கூட்டத்தை நடத்தி .. அதை நாகபட்டினம் சட்டமன்ற உறுப்பினர் அன்சாரி ஜாவஹிருல்லா போன்றவர்கள் தவிர்த்திருக்கலாம் என பேசினார்கள் .. இவர்களால் தான் பரவியதென இந்துத்துத்வாவும் ஊடகங்களும் வெகு விரைாக பரப்பி அண்ணன் தம்பி மாமன் மச்சானை போல வாழ்ந்தவர்கள் தெருவிற்குள் வராதவேறு தடுப்பக்களை எல்லாம் ஏற்படுத்தி மனதில் மெல்லிய பிரிவை ஏற்படுத்தினார்கள் ..  இன்னும் 13 நாட்களே பெருநாளைக்கு மிஞ்சி உள்ளநிலையில் நீதிமன்றம் இருதினங்களுக்குள் பதிலளிக்க உத்தரவிட்டிருக்கிறது .. ஏற்கனவே இஸ்லாமிய இளைஞர்கள் சில அமைப்புகளால் சரியான பாதையிலிருந்து வழிமாற்றம் செய்யபட்டு உணர்ச்சி பிழம்பில் திரிகிறார்கள் .. வெள்ளிக்கிழமை ஜூம்மா வை தெரியாமல் தொழ முற்பட காவல் துறை வந்து தடியடியெல்லாம் நடந்தது .. இந்தியாவில் கொரோனா தாக்கம் அதிகரிக்க தொடங்கியிருக்க நிலையில் ..அரசாள்வோரின் திறமையற்ற நிர்வாகத்தால் எண்ணிக்கை அதிகரிக்கிற சூழலில் பெருநாள் தொழுகையை காட்டி வழக்கு தொடர்ந்திருப்பது 
உண்மையில் இவர்களின் நோக்கம் என்ன என்பதை கேள்விக்குறியாக்கியிருக்கிறது ..
..
உலக இஸ்லாமிய நாடுகள் எல்லாம் வீட்டுக்குள்ளேயே தொழுதுக்கொள்ளுங்களென அறிவுறுத்தி பள்ளிவாசல்கள் காலவரையின்றி மூடபட்டு 
கொரோனைவை விரட்ட எல்லா கொண்டாட்டங்களையும் விலக்கி/தவிர்த்து செயல்படும் போது தமிழகம் மட்டும் இஸ்லாமிய நெறிமுறைகளுக்கு காப்பிரைட் எடுத்ததை போல செயல்படுவது அறிவீனம் 
ஏற்கனவே இஸ்லாமியர்கள் மீது சட்டென்று அவதூறை பரப்ப தயாராக இருக்கும் ஊடகங்கள் சங் அமைப்புகள் இதை கொண்டாடுவார்கள் .. வழிபாடு என்பது அவரவர் விருப்பம் அதை பிற சமூக மக்களுக்கும் சொந்த சமூகத்திற்கு இடைஞ்சல் செய்து நடத்துவதை தவிர்க்கவேண்டும் பேரிடர் காலங்களில் நோக்கம் நோயை விரட்டுவதாக இருக்கவேண்டும் ..
..
மனுவில் வழிபாட்டுதளங்கள் என்கிற போது எல்லா மதத்திற்கும் பேசுவதை போல தெரியும் ஆனால் ஊடகங்கள் அதை ரம்ஜான் பெருநாளுக்காக தொடரபட்டதாக பேசும்.. உண்மையில் அமைதியாக இந்த ரமலானை கடந்து போவதுதான் அறிவுடை செயல் . வரும் 15 ,16 தேதிகளில் தமிழக அரசு முடிவெடுக்குமென நீதிமன்றத்தில் தெரிவித்திருக்கிறது எதுவாகினும் தவிர்த்து கொள்ளல் என்பதே சமூதாயத்திற்கும் நாட்டுக்கும் செய்கிற நல்லவிடயம் .. இது தேவையில்லாத வழக்கு .. உலகெங்கும் தெய்வங்களின் ஆலயங்கள் மூடபட்டு மருத்துவத்தின் துணையோடு மக்கள் போராடி வென்று வரும் வேளையில் சில சமூக புல்லுறுவிகள் இக்கட்டான சூழலை உருவாக்குகிறார்கள் உண்மையில் இவர்களுக்கு அக்கறையெல்லாம் இல்லை ..
பெயரெடுப்பதற்கும் வீம்புக்கும் செய்கிறார்கள் ..
ஏற்கனவே தமிழக உலமா சபை இந்த வருட தராவிஹ் தொழுகை பெருநாள் தொழுகையெல்லாம் தவிர்க்க சொல்லியிருக்கும் போது சில சமூகவிரோதிகள் இதுபோன்ற காரியங்களில் ஈடுபடுவதை சமுதாயம் கண்டிக்க வேண்டும் 
..
ஆலஞ்சியார்

Saturday, May 9, 2020

தலைவர்

'பெட்ரோல், டீசலை 'சீப்பா'கொடுத்தால் வண்டி வாகனம் அதிகமாகி விடும்'_
எம்.எல்.ஏ. செம்மலை!..
"குடி"பிரியர்களின் கோரிக்கையை  ஏற்று மதுகடை திறப்பு செல்லூரார்..
..
சுற்றி முட்டாள்களை வைத்துக்கொண்டால் தான் புத்திசாலியாக தெரிவோம் என்று சொல் உண்டு .. அதை மிகவும் சரியாக கடைப்பிடித்தார் ஜெயலலிதா ஆனால் பாருங்கள் ஜெயலலிதாவை மிகசிறந்த ஆளுமையை போல ஊடகங்களும் நடுநிலைகளும் கடைசிவரை கட்டிகாத்து நின்றன .. சிறந்த நிர்வாகியாகவோ நேர்மையாளராகவோ ஜெயலலிதாவை சொல்லமுடியாது .. தொலைநோக்கோடு எதையும் செய்திடவில்லை .. ஆனால் காழ்ப்புணர்ச்சியில் நல்ல திட்டங்களை செயல்படாமல் நிறுத்தியதும் சரியானததென்று கடைசிவரை உணராமல் போனதும்தான் நடந்தது சமச்சீர் கல்வியை தடுத்திட என்னவெல்லாமோ செய்ததும் நாம் கண்டதும் தான் ..சிறந்த நிர்வாகியாக இருந்ததுமில்லை நீதிமன்றம் பல்வேறு வழக்குகளில் தலையில் கொட்டியும் ரத்து செய்தும் இவரின் நிர்வாகத்தை கண்டித்துமிருக்கிறது .. டான்சி வழக்கில் தண்டனையிலிருந்து தப்ப சொத்தை திருப்பி தருகிறேன் என நீதிமன்றத்தில் எழுத்துபூர்வமாக சொல்லி தண்டனையிலிருந்து மீண்டதெல்லாம் வரலாறு .. தான் இட்ட கையெழுத்தையே போலி என்றவர் .. கடைசிவரை சசிகலாவின் "கீ"கொடுத்த பொம்மையாக இருந்தார் ஒருகட்டத்தில் செயலிழந்தும் போனார் .. தன்வாழ்வை சரியாக அமைத்துக்கொள்ள தெரியாத, தன் பொதுவாழ்வை கூட நேர்மையோடு கட்டமைக்க தெரியாதவர் தான் ஆனால் அவரை இந்த சமூகம் கொண்டாடியது தான் விந்தை .. 
..
இவரின் அமைச்சரவையில் முன்பிருந்தவர்கள் கூட நாவலர் போன்ற முன்னோடிகள் கூட ஒருகட்டத்தில் தங்களின் "திறமையை" வெளிகாட்டி தலைகுனிந்து நின்றார்கள் சிறந்த நிர்வாகியாகவோ ஆளுமையாகவோ அவர்களின் பங்களிப்பு இருந்ததா என்றால் வியப்பே மிஞ்சும்.. இப்போதைய அமைச்சர்கள் 
சொல்லவே வேண்டாம் முதல்வராக இருப்பவருக்கே அதற்கான தகுதி இல்லையென்கிற போது என்ன சொல்ல .. அண்ணாவிற்கு பிறகு அதிகம் புத்தகம் படித்தவன் நான் என்றபோது கடைசியாக படித்த புத்தகத்தின் பெயரை கேட்டபோது அது..வந்து.... உள்ளே இருக்கு என வடிவேலு காமெடியை ஞாபகபடுத்தியவர் ..சேக்கிழாரின் கம்பராமாயணத்தை கரைத்து குடித்தவரின் அமைச்சர் பெருமக்களின் பெருமைகளை சொல்லவேண்டுமா என்ன..? 
..
இவர்களை போன்றவர்களை உயர்த்தி பிடித்ததில் பாசிச சிந்தனையாளர்களுக்கும் பெரும்பங்குண்டு அவர்களுக்கு திராவிடம் ஆட்சியில் இருப்பதை பொறுக்கமுடியவில்லை அதற்காக எதைவேண்டுமானாலும் உயர்த்தி பிடிக்கலாம் சகதியை கூட சந்தனம் எனலாம்..
அறுவறுப்பை அழகென்கலாம்.. முட்டாளை அறிவாளியாக்கி திருடர்களை தேவதூதர்கள் ஆக்கலாம் .. திமுகவை தவிர்க்க வேண்டும் அதற்காக எந்த கழிசடைகளையும் ஆதரிக்கலாம் .. நீதிமன்றத்தால் "திருடி " என தீர்ப்பு தரபட்டாலும் "புண்ணியம் கோடி செய்த புனிதர்"என பெயர் சூட்டலாம்  .. அரசை கொண்டே #திருடிக்கு மணிமண்டபம் கட்டலாம் .. அரசு இயந்திரத்தை தவறாக பயன்படுத்தி கூட்டுக்கொள்ளை அடித்தாலும் .. திராவிடத்தை வீழ்த்த வேறு ஆள் கிடைக்காதென்பதால் கொண்டாடுவோம் .. 
..
தமிழகம் கண்ட மோசமான அவல ஆட்சி நடக்கிறது தன்மானமில்லாத கேவலமானவர்களை கொண்டு சதியை அரங்கேற்றுகிறார்கள் .. 50 ஆண்டுகாலம் போராடி பெற்றதெல்லாம் பறிபோகிறது ..வெளிப்படையான கொள்ளை .. ஊழல் சர்வசாதாரணம்.. கொஞ்சமும் கூச்சமின்றி பொய்யை சொல்லி ஏமாற்றும் அயோக்கியத்தனம் .. நிர்வாக குளறுபடிகள் நாளை என்ன நடக்கும் முதல்வருக்கே தெரியாது ..அதிகாரிகள் யாரும் முதல்வரை பொருட்டாகவே மதிப்பதில்லை .. தமிழகம் பேரிடரில்/பேராபத்தில் .. இவர்கள் ஏறியபடவேண்டியவர்கள் இவர்கள் கொள்கை சித்தாந்தம் எரிக்கபடவேண்டியவை .. நல்லதொரு தலைமையை நாம் தவறவிட்டதன் விளைவை அனுபவிக்கிறோம் ..மாற வேண்டும் ..
சில அரைகுறைகளின் இனம் மொழி பகை என உளறுதல் கேட்கும் ..அவையாவும் பாசிசத்தின் புதிய குரல்கள் அவைகளை புறக்கணிப்போம் ..
..
மக்கள் அவதியுறும் போதும் அருகில் நின்று காத்தருளும் கனவான்கள் ..ஒருங்கிணைவோம் வா என குரல் கொடுக்கும் தயை உள்ளம் .. அரசியல் நேர்மை அயராத உழைப்பு அனைவரையும் நேசிக்கும் பண்பு .. சிறந்த தலைமை நேர்மையான நிர்வாகம் பொறுப்புணரிச்சியோடு அணுகும் ஆற்றல் அனைவரையும் அரவணைத்து வழிநடத்து பேராளுமை இவையெல்லாம் ஒருங்கிணைந்த தலைவர் திரு.ஸ்டாலின் ..
#நாம்_பெற்ற_பேறு..
அறியணையேற்றுவோம் 
கொண்டாடுவோம் 
முட்டாள்களிடமிருந்து நாட்டை மீட்டெடுப்போம் ..
தலைவர்.ஸ்டாலின் #காலம்_தந்த_கொடை ..
..
ஆலஞ்சியார்

Friday, May 8, 2020

துயரம்

வெளிநாடுகளிலிருந்து 30 லட்சம் இந்தியர்கள்
 நாடு திரும்ப தூதரகத்தில் பதிவு செய்திருக்கிறார்கள் அவர்களை  மோடி திரும்ப அழைத்து வருகிறாரென பத்திரிக்கைகள் 
மோடியை ரட்சகன் ரேஞ்ச்க்கு புகழ்கிறது இதெல்லாம் நாம் பார்த்ததுதான் ..
கொரோனா தொற்றின் தாக்கம் பல நாடுகளில் வேலைவாய்ப்பை வெகுவாக பாதித்ததும் நாடு விட தயாராக இந்திய சமூகம் .. இவர்களின் பெரும்பாலோனார் சுற்றுலா விசாவில் வந்தவர்கள்  பணிநீக்கம் செய்யபட்டவர்கள் விசா காலாவதியானவர்கள் பொருளாதார நெருக்கடியில் குடும்பத்தை நாட்டிற்கு அனுப்புகிறவர்கள் .. இவர்களை இந்திய அரசு சொந்த செலவில் அழைத்துவர வில்லை மாறாக விமான செலவை அவர்களே ஏற்க வேண்டும் அதோடு தாயகம் வந்தவுடன் அவர்களின் பரிசோதனை மற்றும் தனிமைபடுத்துதல் செலவையும் அவர்களே ஏற்க வேண்டும் .. இதுதான் இவர்கள் ஆட்சியின் லட்சணம் .. 
..
காங்கிரஸ் ஆட்சிகாலத்தில் இதுபோன்ற பேரிடர் காலங்களில் உகாண்டா வியட்நாம் கம்போடியா குவைத் போன்ற நாடுகளிலிருந்து தம் மக்களை அழைத்துவந்த போது அப்போதைய அரசு பெருமை பீத்திக்கொள்ளவில்லை மாறாக எந்த தொகையும் பெறாமல் அழைத்துவந்து தங்கள் இருப்பிடம் செல்லும் வரை ரயில் பயணத்தையும் ஏற்பாடு செய்தது ஆனால் மக்கள் சொந்த செலவில் வருவதை கூட "காப்பாளன் மோடி" என கதைவிடுகிறார்கள் ..
இவர்கள் லட்சணம் இப்போதுதான் நாட்டுமக்கள் அறிய தொடங்கியிருக்கிறார்கள்  நடந்தே தங்கள் ஊருக்கு 600, 700 கிலோமீட்டர் குழந்தை குட்டிகளோடு சாப்பிட கூட வழியில்லை சொந்த மண்ணை பார்த்துவிட வேண்டுமென நடந்தே வருகிறார்கள் இன்று தரை வழி மார்க்கமாக சென்றால் இடையூறுகளை அதிகாரிகள் செய்வார்களென ரயில் பாதையில் வந்தவர்கள் சிதறி கிடக்கிறார்கள் கேட்கவே நடுங்குகிறது .. இவர்களை எல்லாம் சொந்த மாநிலத்தில் 
கல்வியை வேலைவாய்ப்பை  தராமல் மதவெறியையும் அடிமைத்தனத்தையும் ஊட்டி இன்று அல்லல்பட காரணமானவர்கள் .. குஜராத்தை வியக்கதக்க மாற்றம் செய்திருப்பதாக பொய்கதை பேசி நாட்டை/மாநிலத்தை குடிடிசுவராக்கி வைத்திருக்கிறார் இவரை தான் இந்த ஊடகங்கள் வானளாவி புகழ்ந்தன ..
..
நாடெங்கும் அபயகுரல்கள் மெல்லியதாய் கூட ஆள்பவர்கள் காதில் விழவில்லை .. புலம்பெயர் மக்களை கூட காசு கொடுத்து ரயில் பயணம் செய்ய சொன்னவர்கள் ..  காங்கிரஸ் தலைவர் 
சோனியா அவர்கள் வீடு திரும்ப ஆகும்செலவை காங்கிரஸ் ஏற்கும் என்றவுடன்  
மத்திய மாநில அரசு ஏற்குமென்றார்கள் .. 
மதுக்கடைகளை திறந்து மக்களை மகிழ்விக்கிறார்கள் இனி எவனும் கொரோனாவால் செத்தான் என சொல்ல கூடாது .. கர்நாடகம் ₹45 கோடியா தமிழகம் ₹150கோடி வசூல் .. நீண்ட வரிசை சரக்குகளை பள்ளிகூடங்களில் வைத்து விநியோகம்.. வீட்டிலிருந்து பணத்தை எடுத்துக்கொண்டு அப்பன் குடிக்க போனான் .. அம்மாவும் மகளும் தீக்குளித்தார்கள் .. நல்லவேளை கொரோனா உயிரிழப்பில்லை .. நாம் எங்கே போகிறோம் நம் ஆட்சியாளர்கள் அதிகார வெறிப்பிடித்தவர்கள் நாட்டை சூறையாடுகிறார்கள் .. சொல்லமுடியாமல் மக்கள் துயரத்தில் .. இக்கட்டான காலகட்டத்தில் கூட இவர்கள் ஆட்சியாளர்களாக இல்லை வியாபாரிகளாக கொள்ளையடிப்பவர்களாக 
எரிகிற பிடிங்கியது வரை லாபம் என செயல்படுகிறார்கள் .. வெளிநாடுவாழ் இந்தியனும் சொந்த மண்ணின் வாழ்பவன் எவருமே இந்த அரசுகளால் நிம்மதியாக இல்லை துயரமே அடைகிறார்கள் ..
..
ஆலஞ்சியார்

Wednesday, May 6, 2020

தளபதி தலைவர்

செயல்படாத அரசும்
செயல்படும் எதிர்க்கட்சி தலைவரும் ..

கொஞ்சமேனும் இருந்த நம்பிக்கைகள் பொய்த்துபோய்விட்டனவோ என ஆளும் கட்சி பிரமுகர்களே கவலைக்கொள்கிற நிலையில் தமிழக அரசு நிர்வாகம்.. யாருக்கும் இந்த அரசின் மீது நம்பிக்கை இல்லாமல் போய்விட்டது அரசு அதிகாரிகள் கூட முதல்வரை மதிப்பதில்லை என்பது அவர்கள் தரும் மரியாதையில் தெரிகிறது.. எதை செய்ய வேண்டும் எதை செய்ய கூடாதென்ற அறிவு கொஞ்சமும் இல்லை .. இன்றைய அவலநிலைக்கு முழுகாரணமும் எடப்பாடியின் தலைமையிலான அரசு என்றால் மிகையில்லை .. அரசு இயந்திரம் சரியாக செயல்படாததும் அதிகாரிகள் எடப்பாடியை மதிப்பதில்லை என்பதும் வெளிப்படையாக தெரிகிறது ..முன்கூட்டியே எதிர்க்கட்சி தலைவர் எச்சரித்தும் அதை கண்டுக்கொள்ளாமல் வயதானவர்களுக்கு தான் வருமென கிண்டல் செய்தவர்கள் இன்று கைபிசைந்து நிற்கிறார்கள்.. சொல்வதை ஏற்பதில்லை சுயசிந்தனையும் இல்லாத முட்டாள்கள் கையில் காலம் நம்மை சிறை செய்திருக்கிறது .. திடீரென முழு ஊரடங்கென அறிவித்து மக்கள் ஒன்றுகூடலை செயற்கையாக ஏற்படுத்தி இன்று அதீத பரவலுக்கு காரணமானதும் மக்களின் பசி தீர்க்க முடியாமல் ஒரு அரசு இயங்குவதும் காலகொடுமை என்பதை தவிர சொல்வதற்கொன்றுமில்லை .. இக்கட்டான கால கட்டத்தில் மதுபானகடைகளை திறந்து 
மேலும் சங்கடத்தை ஏற்படுத்துவது தேவையில்லாதது ..
..
இந்த அரசை நம்பி பலனில்லை என முடிவெடுத்து மிக சிறந்த நிர்வாகத்தை அரங்கேற்றியிருக்கிறார் .. ஒரு அரசு பேரிடர் காலங்களில் எப்படி செயல்படவேண்டுமென மிக அழகான வடிவமைப்போடு திட்டங்களை செயல்படுத்துகிறார் #மாண்பிமை_எதிர்க்கட்சித்தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் .. #ஒருங்கிணைவோம்_வா… 
மக்களின் குறைகளை தேவைகளை தீர்க்க வேண்டிய அரசு வருவாயை அதிகரிக்கும் செயல்களில் கவனம் செலுத்துகிறது இலவசமாக உணவு தருகிறோம் என்றவர்கள் அம்மா உணவகத்தில் காசுக்கு சோறு என்றார்கள் ..ஆனால் திமுகவோ நாளொன்றுக்கு லட்சம் பேருக்கு உணவு என்ற இலக்கோடு சமையல் கூடங்களை இயக்குகிறது .. தொலைபேசியில் அழைத்து குறைச்சொன்னால் சொன்னவன் யாரென்றெல்லாம் பார்க்காமல் தேவையான பொருட்களோடு கதை தட்டுகிறார்கள் .. கேட்டால் கிடைக்கும் என நம்பிக்கையை விதைக்கிறார்கள் .. பல்வேறு ஊடகங்கள் பலசார்பு அமைப்புகள் எதிர்கருத்தை கொண்டவர்கள் பரமவைரியாக நினைத்தவர்கள் கூட தளபதி.ஸ்டாலின் செயல்பாடுகளை  பாராட்டுகிறார்கள் 
புகழ்கிறார்கள்.. மக்களின் தேவையறிந்தவனே சிறந்த தலைவனாக முடியும் மக்களோடு எப்போதும் இணைந்து செயல்படுபவனே ஆள தகுதியானவன் ..
..
பல்வேறு அமைப்புகள் வணிகர்கள் தன்னார்வலர்கள் என அவர்களின் குறைகளை தேவைகளை கேட்டறிந்து #ஒருங்கிணைவோம்  என செயல்படுகிறார்.. நல்ல தலைவன் தன்னலமற்ற சேவையை முன்னெடுப்பான்  
குறைகளை அறிதலோடு முடிந்துவிடவில்லை எப்படி தீர்ப்பதென்று  எண்ணி அதை நிறைவேற்றும் கடமை தமக்குண்டு என வியக்கதக்கவகையில் செயல்படும் தலைவர் 
உண்மையில் கலைஞரை நினைவில் கொள்கிறேன் .. விவசாய கடனை தள்ளுபடி செய்தபோது உடனிருந்தவர்கள் அதிகம் அதிமுககாரர்கள் தான் பயனடைகிறார்கள்  என்ற போது அவர்களை நான் விவசாயிகளாக பார்க்கிறேன் என்றார் அந்த பெருமகன் .. 
..
ஆம் இப்போது கூட சிலர் உண்மையில் உதவி கரம் நீட்டுகிறார்களா என சோதித்தும் பார்க்கிறார்கள் .. கேட்பவன் யார் என்று பார்பதில்லை  உதவி கேட்பவனின் நிலையை உணர்ந்து தாயுள்ளத்தோடு செயல்படுகிறார் 
தளபதி .. இன்னல்பட்டு அழும்குரலை அறிந்து உதவும் பேரன்பாளராய் ஓடிவந்து உதவும் உன்னதராய் தெரிகிறார் .. ஆம் 
#தளபதி_தாயுமானவர் ..
..
இதிலிருந்து யாரிடம் 
நம்மை ஒப்படைக்க வேண்டுமென நாம் 
அறிந்துணர வேண்டும் நம்மை ஆள தகுதியானவர் யாரென்று நாம் தான் தீர்மானிக்க வேண்டும்..

#அறிந்தாற்றிச் செய்கிற்பாற்கு அல்லால் வினைதான்
சிறந்தானென்று ஏவற்பாற் றன்று.. 
என்றான் வள்ளுவன் 

ஆய்ந்தறிந்து செய்து முடிக்கும் ஆற்றல் உள்ளவர்களை அல்லாமல் வேறொருவரைச் சிறந்தவர் எனக் கருதி ஒரு செயலில் ஈ.டுபடுத்தக் கூடாது.. அது நம்க்கே வினையாகும் .. 
..
#தளபதி_தலைவர்
..
ஆலஞ்சியார்