Sunday, September 29, 2019
கலைஞர்
கலைஞர் தமிழரில்லை என்று சிலர் பேசுகிறார்கள் பலமுறை சொன்னதுதான் 1951 ல் அரசு சாதி குறித்த கெஜட் வெளியிட்டது ராகவாச்சாரி தொகுத்து வந்ததில் "சின்னமேளம் "பிரிவினர் தமிழ் மரபினர் என்றும்.. அவர்கள் பெருமளவில் கீழிதஞ்சை மாவட்டத்தை பூர்வீகமாக கொண்டவர்கள் என பதிவாகியிருக்கிறது ..
உண்மை இதுதான் .. பெரிய மேளம் பிரிவினர் தான் தெலுங்கை தாய்மொழியாக கொண்டவர்கள் இசைவேளாளரில் பெரிய மேளத்தின் ஆதிக்கமிருந்தது.. இன்னும் சொல்லபோனால் அவர்கள் தாயின் பெயரை தான் தங்கள் இன்ஷியலாக வைத்துக்கொள்வார்கள் .. ஆனால் சின்னமேளம் பிரிவினர் தந்தையின் பெயரை தான் இன்ஷியலாக வைத்துக்கொள்வர் .. முத்துவேலர் கருணாநிதி இதெற்கெல்லாம் பதில் சொல்லும் ..
தெலுங்கு கீர்த்தனைகளை பாடி கோவிலில் சேவகம் செய்வதுதென்பது கட்டாயமானதால் தெலுங்கில் பாடினார்கள்
சின்னமேளம் பிரிவினர் பெரிய சபாக்களில் கோவில் திருவிழாக்களிலோ பாடமுடியாது அதை "பெரியமேளம்" பிரிவினரே ஆதிக்கம் செலுத்தியதாக ராகவாச்சாரி சொல்கிறார் அவர்களுக்கு உறுதுணையாக பக்க வாத்தியங்களை இசைத்ததாக குறிப்பிடுகிறார்
..
கலைஞரை புறக்கணித்து தமிழ் தேசியம் என்பது கடைந்தெடுத்த அயோக்கியத்தனம் நண்பர் தமிழ் மறவன் மொழியில் சொல்லவேண்டுமெனில் திருட்டு அரசியல் .. கலைஞரைப்போல தமிழுக்கு தொண்டாற்றிய அரசியல் தலைவர்கள் யாருமில்லை வாழும் வரை தமிழை மூச்சாக கொண்ட மாபெரும் ஆளுமையை இழிவுபடுத்தயெண்ணி தங்களின் தெளிவின்மையை காட்டுகிறார்கள் .. கலைஞரை தமிழரில்லை என சொல்லும் அறிவற்றவர்கள் பார்பனீயத்திற்கு ஒத்தூதுவதைதான் பார்க்கலாம் இப்போது கூட கீழடி ஆய்வில் முடிவுகள் தமிழர்களின் கலாச்சாரத்தை தெளிவுபடுத்தியுள்ளது. ஆனால் பெ.மணியரசன் திராவிட நாகரீகம் என்று சொல்வதற்கான எந்தவொரு இலக்கிய ஆதாரமும் இல்லை என்கிறார் . தமிழ்..தெலுங்கு..மலையாளம் ..கன்னடம் ஆகிய மூன்றும் தமிழ் மொழிதான்.
ஆனாலும் தமிழ் தேசியமும் , திராவிடமும் தொடர்ந்து மோதல் போக்கை கையாளுகிறது என்பது தான் உண்மையாகும்.. தந்தை பெரியார் தெலுங்கில் மலையாளத்தில் கலந்துள்ள சமஸ்கிருத சொல்லை நீக்கிவிட்டால் அது தமிழாகதான் இருக்கும் என்றார் ஆம்
தமிழின் கிளை மொழிகள் வட்டாரவழக்கில் தோன்றியவை.. அதெல்லாம் இருக்கட்டும் தமிழ் தேசியம் பேசுகிறவர்கள் தமிழரின் அளவுகோலை எதில் கணக்கிடுகிறார்கள் சாதியை வைத்து தானே தவிர வேறெதும் அவர்களிடத்தில் இல்லை .. ஆனால் தமிழரின் வரலாறு மதத்திலோ ஜாதி பிரிவிலோ இல்லை அதற்கான எந்த ஆதாரமும்
சங்கநூல்களிலோ அல்லது கல்வெட்டுகளிலோ தொல்பொருள் ஆய்விலோ கிடைக்கவில்லை இயற்கையாய் வாழ்ந்தவன் இயற்கையை வணங்கி நின்றவன் சாதி மதம் அவனிடத்தில் ஆரிய வரவிற்கு பிறகே வந்தது .. அதோடு கல்வி மறுக்கபட்டதும் தீண்டாமை தீண்டியதும்
கலாச்சாரம் சிதைக்கபட்டதும் வரலாற்றை திரித்தெழுதியதும் ஆரிய வருகை பிறகுதான் என்ற உண்மையை உணராமல் பேசுகிறார்கள்..
..
கலைஞரை மறுத்த தமிழின் பெருமை தமிழனின் வரலாறென்பது மடத்தனம் இந்த அரைகுறைகள் எதற்கோ ஆசைபட்டு அல்லது பயந்து உளறுவதை கணக்கில் கொள்ள தேவையில்லை..
..
#கலைஞர்_செந்தமிழ்
..
ஆலஞ்சியார்
Monday, September 23, 2019
அறிவிலிகள்
கே.டி.ராஜேந்திர பாலாஜி..
உண்மையிலேயே எப்படி இவரை மந்திரியாக்கினார்களென தெரியவில்லை
தமிழனை முட்டாளாக சித்தரிக்கவேண்டும் என்பதற்காக தமிழனுக்கு அறிவில்லை இவ்வளவுதான் தமிழனின் "தரம்" என பறைசாற்ற
வேண்டுமென்று இவரை கொண்டுவந்ததாகதான் எண்ணுகிறேன் .. நான் அப்பலோவில் இருந்தபோது அம்மா கசாயம் போட்டு கொடுத்தனுப்பியதாக சொன்னபோது கூட ஜெயலலிதாவின் "பெருமை" சொல்லவேண்டுமென்ற ஆசையில் அடித்துவிடுகிறாரென்று என்றுதான் நினைத்தோம்
மோடி எங்கள் டாடி என்ற போது பயத்தில் சொல்லி வைக்கிறார் பாவம் என்றிருந்தோம் ராகுலுக்கு தாய்மாமன் மடியில் தான் காது குத்தியிருப்பாங்க எனக்கு என் தாய்மாமன் மடியில் தான் காது குத்தினார்கள் என்ற போது அறியாமையில் உளறல் என்றிருந்தும் நகைச்சுவையாக கடந்துபோனோம்
நெறியாளர் வாய்பொத்தி நக்கலாய் சிரிக்கிறார்
அமைச்சரும் அதுபுரியாமல் ..?
ஸ்டாலின் வெள்ளை அறிக்கை கேட்டபோது பச்சை அறிக்கை தருகிறோம் .. வெள்ளை அறிக்கை என்றால் என்ன ..? வெளிப்படையான அறிக்கை என்றதும் நான் பச்சையாக சொல்ல சொல்கிறேன் என்று தன் அறிவிலித்தனத்தை கண்டு
நாடோ சிரிக்கிறது.. இவரின் அரசியல் மேடை பேச்சும் நாகரீகமற்றதாக ஒருமையில் விளித்தே பேசும்தன்மை அவரின் தரத்தை பறைசாற்றும்..
..
இவரென்றில்லை ஒட்டுமொத்த அதிமுக கூடாரமும் அடிமைகளையை பொறுக்கி உருவாக்கியது கொள்கையே அடிப்படை சித்தாந்ததமோ தெளிவான அரசியல் புரிதலோ அற்ற கட்சி ..இதில் கவர்ச்சியை மூலதனமாக கொண்டு திமுகவை பிளவுபடுத்த கருணாநிதி எனும் ஆளுமையை சிறுமைபடுத்த ஆரம்பிக்கபட்டு கடைசியில் இவரை போன்ற அறிவிலிகளால் அசிங்கபட்டுநிற்கிறது. ஊடகங்களுக்கோ கொண்டாட்டம் இவரை வைத்து அதிமுக எனும் "இமேஜை" கண்ணாபின்னாவென சிதைக்கிறார்கள் நோக்கம் இதுதான்
பார்பனர்களை புத்திசாலிகளென நம்பவைக்க இவர்கள் போன்ற அரைகுறைகளை பெரிதுபடுத்தினால் போதும் என்றெண்ணுகிறார்கள் .. அதுதான் அவர்களுக்கு கொடுக்கபட்ட வேலை அதை திறம்பட செய்கிறார்கள் அதை உணராமல் அடிமைகள் உளறிக்கொட்டுவதுதான் கொடுமை
..
அதிமுக நிறுவனரே தன் ரசிகர்களை பாதுகாப்புகாக கத்தி வைத்துக்கொள்ள சொன்னவர்தான் .. அன்றைக்கு பார்பனர்களின் அரசியல் குரு சோ தன் துக்ளக் பத்திரிக்கையில்
இரண்டு சிறிய பெரிய அளவிளான கத்தியை காட்டி அமைச்சர் திருநாவுகரசரிடம் எதை வைத்துக் கொள்ள சொன்னாரென கேட்டதெல்லாம் வரலாறு இவ்வளவுதான் இவர்களின் அரசியல் .. தனித்திறமையோ அரசியல் புரிதலோ கொள்கையோ நாட்டின் மீதும் நாட்டுமக்கள் மீதும் நலன்சார்ந்த அக்கறையோ இருந்ததில்லை
எந்தவொரு தொலைநோக்கு திட்டமும் வகுத்ததில்லை/ செயல்படுத்தியதில்லை சமூகநீதியை நிலைநாட்டியதில்லை .. கவர்ச்சியை மட்டுமே நம்பி அவர் விதைத்தெல்லாம் சொத்தையாய் நிற்கிறது இவர்களிடத்தில் வேறெதை எதிரிபார்க்கமுடியும்..
..
ஆலஞ்சியார்
Saturday, September 21, 2019
கீழடி
#கீழடி..
..
கீழடி சொல்லும் சேதி இதுதான்
தமிழன் எந்த மதங்களையும் கடவுள்களையும் தூக்கி சுமக்கவில்லை.. 2600 ஆண்டுகளுக்கு முன்பே நாகரீக வாழ்வியலுக்கு சொந்தகாரன் கட்டிடக்கலையிலும் சிறந்து விளங்கியதும் தெரிகிறது .. தமிழன் வரலாறு மிக தொன்மைவாய்ந்தது அவன் பேசிய மொழியே முதல்மொழியாக இருக்ககூடும் மொழி வழக்கம் வருவதற்கு முன்பு சைகை ஒலியெழுப்பல் சில நூற்றாண்டு பின்னோட்டு இருந்திக்கவேண்டும்
கீழடியில் வெளிவரும் உண்மை இந்திய கலாச்சாரம் இந்து கலாச்சாரமென்பதென்லாம் பொய் என்பதை உணர்த்தியிருக்கிறது .. தமிழனின் வரலாறு என்பது
"புராணங்களை" போல கட்டிசமைத்ததல்ல என்பது தெளிவாகிறது ..
..
கீழடி மற்றொரு விடயத்தை நமக்கு சொல்கிறது இந்திய துணைகண்டத்தில் முதல் நாகரீக வாழ்வை வாழ்ந்தவன் என்பதும் ஆரிய வரவிற்கு முன்பே
செமையா வாழ்ந்தவன் என்பது சாதி பேதம் வர்ணகோட்பாடு மதம் என எதுவுமில்லாத இயற்கையை போற்றி வாழ்ந்ததும் தெளிவாகிறது ..
கீழடி சொல்லும் மற்றொரு சேதி திராவிட சித்தாந்தம் சொல்லும் சாதி மதம் எல்லாம் கட்டுகதைகள் மனிதனை பிரித்து தங்களை முன்னிலை படுத்த ஆரியர்கள் செய்த சதி என்பதும் புலனாகும் ..எலும்புகளால் செய்யப்பட்ட எழுத்தாணி, தந்தத்தில் செய்யப்பட்ட சீப்பு, அரவைக் கல், பானை ஓடுகள் சதுரங்கக் காய்கள், பகடைக் காய், மண் குடுவை, சூதாட்டத்தில் பயன்படுத்தப்படும் பவள மணிகள், சுடு மண் வார்ப்பு, காளையின் தலை, மனித உடல் பாகம், மனித தலை உருவம் போன்றவைகளும் கண்டறியப்பட்டுள்ளன.. மண் பானை, கறுப்பு சிவப்பு நிறப் பானை, கூர்முனைக் கொண்ட எலும்பு கருவிகள், நூல் நூற்கும் தக்களிகள் (ஆபரண மணிகளைக் கோர்க்கும் கருவி) , தங்க அணிகலன்கள், மணிகள் போன்றவையும் கண்டறியப்பட்டுள்ளன..
மதம் சார்ந்து கடவுள் சிலைகளோ குறியீடுகளோ கிடைக்கவில்லை .. இதிலிருந்தே தமிழ்குடியின் தொன்மை விளங்கும் மதம் சார்ந்தில்லை என்பதும் புரியும்..
..
இந்த மாதம் 30ந்தேதி
ஐந்தாம் அகழாய்வு நிறைவு பெறுகிறது.. இன்னும் நிறைய தகவல்கள் வெளிவரலாம் வேகவேகமாக ஆய்வுபணிகளை முடிக்க நினைக்கிறது அரசு தமிழனின் பெருமையை யாராலும் அழித்துவிடவோ மறைத்துவிடவோ முடியாது.. தொல்லியல் கண்காணிப்பாளர் அமர்நாத்
ஒருவிடயத்தை சொல்கிறார் நாம் 10% விழுக்காடு தான் ஆய்வு செய்திருக்கிறேன் 110 ஏக்கரில் 10 ஏக்கர்தான் அதுவும் 10 அடி தான் ஆய்வு செய்திருக்கும் இன்னும் ஆழபடுத்தினால் இன்னும் நிறைய கிடைக்கலாம் என்கிறார் ஆம் இன்னும் தமிழர்களின் நாகரீக வரலாற்றைப்பற்றிய தரவுகள் கிடைக்கும் அரசு தொடர்ந்து ஆய்வு செய்யவேண்டும் ..
..
#கீழடி_எமது_தாய்மடி ..
..
ஆலஞ்சியார்
Friday, September 20, 2019
திமுக..
திமுக போராட்ட அறிவிப்பிற்கு பின் அமித்ஷாவே விளக்கமளிக்க நேர்ந்ததை மறைக்க திமுகவின் மீதும் தலைவர் தளபதி மீதும் பயத்தின் காரணமாக
பின்மாறியதாக பிரச்சாரம் செய்கின்றன ..
நாட்டின் உள்துறை அமைச்சர் பயத்தின் காரணமாக விளக்கம் தந்ததாக ஏன் விவாதம் நடத்தவில்லை
ஊடகங்களில் வலதுசாரிகள் என்ற போர்வையில்
பாஜக ஆதரவு "நடுநிலைகள்" திமுக பயந்து நடுங்கியதாக உளறுகின்றன வேறெந்த கட்சியை சொல்லியிருந்தாலாவது நம்புவார்கள் ..
போராட்டம் என்றாலே மஞ்சள்பையில் சட்டை வேட்டியை எடுத்துக்கொண்டு தயாராக செல்கிற கூட்டத்தை பார்த்து பயந்துவிட்டதாக சொல்வது நகைப்பிற்குரியது ..
..
மிசாவிற்கு அஞ்சாதவர் ..அடுக்குமுறை உச்சத்தில் இருந்தபோதே கொஞ்சமும் நடுக்கமின்றி இருந்தவர் காங்கிரஸ் கூட்டணியிலிருந்து திமுக வெளியேறிய போது வருமானவரித்துறை ரெய்டு வந்தபோது நடைபயிற்சி சென்றிருந்த தலைவர் வீடுவந்ததும் உதயநிதியை அழைத்துக்கொண்டு வரித்துறை அலுவலகம் சென்று HAMMER வாகனத்தை வெளியில் நிறுத்தியிருக்கிறேன் .. நான் இல்லாதபோது வீட்டிற்கு அதிகாரிகள் வந்ததாக சொன்னார்கள் உங்கள் விசாரணை முடிந்து வாகனத்தை கொண்டுவந்தால் போதும்
என்று நெஞ்சுயர்த்தி சொன்னவர் ..
பயமென்பது எங்கள் அகராதிலேயே இல்லையென அறியாதவர்கள் இல்லை ஆனாலும் இவர்கள் நோக்கம் அமித்ஷாவின் முகம் கருத்துப்போனதை அறியாமல் செய்யவேண்டுமென்பதே..
..
திமுகவின் மீது வீண்பழியை சுமத்தவதென்பது தொடர்ந்து பாசிசவாதிகளால் அவர்கள் அடிமைகளால் செய்துவருவதுதான் எம்ஜிஆர் தொடங்கி இன்று வரை தொடர்ந்து குற்றசாட்டுகளும் பழிகளையும் கண்டுவருகிறோம் ஒவ்வொன்று மீண்டு பழி துடைத்து "தங்கமாய்" மிளிர்கிறோம்,.. இதோ இப்போது ராமதாஸ் திமுக மீது கொலைப்பழி சுமத்தி அரசியல் செய்கிறார் குருவின் குடும்பத்தாரிடம் கேட்டால் இவரின் நிஜம் தெரியும் .. தன் மகனுக்காக அரசியல் எந்தநிலைக்கும் தாழ்ந்து சுயமரியாதை இழந்து நிற்கும் அவலநிலையிலும் தற்போதைய "எஜமானுக்காக " வாலாட்டுகிறார்..
..
நிறைய பார்த்தாயிற்று வீண்பழிகள் ஊழல்குற்றசாட்டுகள் மிரட்டல்கள் எல்லாவற்றையும் நீதிமன்றம் மூலம் வென்று இதோடு முடிந்தது திமுக சகாப்தம் என்றவர்களுக்கு எழுந்துநின்று துணிவிருக்கிறதா என கேட்கும் ஆற்றல் எமது இயக்கத்திற்கும் தலைவர்களுக்கு உண்டு .. பகுத்தறிவு வழியில் அறிவின் துணைக்கொண்டு ஆற்றல் மிகு தலைமையில் இந்த இயக்கம் செயல்படும் .. சலசலப்பிற்கெல்லாம் அஞ்சுவதில்லை "யாம்"
தமிழர்களின் தேவை ஆம்
தமிழ் மண்ணின் தமிழர்களின் கவசம் திமுக
..
ஆலஞ்சியார்
Wednesday, September 11, 2019
எடப்பாடி
திமுக தடுப்பணைகளை கட்டியதுண்டா என சேக்கிழார் புகழ் எடப்பாடி கேள்வி கேட்கிறார் .. ஊர்பெயரை கூட உச்சரிக்க தெரியாமல் ஊர்ச்சுற்றி வந்தவர் .. அறியாமை தவறில்லை
அறிந்துக்கொள்ள முயற்சி செய்யாமை தான் தவறு .. ஒரு பேட்டியில் அண்ணாவிற்கு பிறகு நான் தான் அதிக புத்தங்களை படித்தவன் என்று சொன்னவர் இந்த எடப்பாடி..
உண்மையில் கேவலமாக இருக்கிறது முட்டாள்கள் கூட்டத்திடம் சிக்கி திணறிக்கொண்டிருக்கிறோம்.. ஒட்டுமொத்த கூட்டமும் மடையர்களாக இருந்தால் என்ன செய்வது வெள்ளை அறிக்கை கேட்டால் மஞ்சள் அறிக்கை கூட தருவோம் என அறிவிலி ஒன்று உளறுகிறது .. எதற்காக வெளிநாடு பயணமென்று அவருக்காவது தெரியுமா என்றால் இல்லை ..
..
தலித் பிணம் எடுத்துச்செல்ல தடுக்கபட்டு வேலூர் பாலத்தில் கீழிறக்கபட்ட சம்பவத்தை தாமாக முன் வந்து உயர்நீதிமன்றம் வழக்கு பதிவு செய்ததது .. அந்த வழக்கில் தமிழக அரசு தலித்களுக்கு தனி சுடுகாடு ஏற்படுத்தபடுமென அறிக்கை சமர்ப்பித்திருக்கிறது .. இந்த கேடுகெட்டவர்களிடம் வேறெதை எதிர்பார்க்க முடியும் .. எதை செய்கிறோம் எதை சொல்கிறோமென்ற அறிவுகூட இல்லை கடும்கண்டனத்தை பதிவு செய்வோம் ..
..
அரசியலில் கொஞ்சம் கூட தெளிவோ அறிவோ இல்லாதவர்கள் முன்பிருந்த ஆட்சியாளர்கள் செய்த நலத்திட்டங்கள் மக்கள் நலப்பணிகள் செயல்படுத்தபட்ட விபரங்களை அரசு அதிகாரியிடம் கேட்டு அறிக்கையோ பேட்டியோ தரலாம் கலைஞர் ஆட்சியில் 42 தடுப்பணைகள் கட்டபட்டிருக்கிறது அதுமட்டுமல்ல நீர்வளம் பற்றிய அறிவும் தெளிவும் நீர்மேலாண்மை பற்றிய அனுபவமும் தமிழக ஆட்சியாளர்களிடையே கலைஞரைப்போல தெளிவும் ஞானமும் வேறு எவருக்குமிருந்ததில்லை என்பதுதான் உண்மை ..
எதையாவது சொல்லி வைப்போம் ஊடகங்கள் கேள்வி கேட்கவா போகிறதென்று நினைக்கிறார் எடப்பாடி
..
உண்மையில் தமிழகம் கண்ட கேடுகெட்ட ஆட்சி
துளி கூட அரசியல் தெளிவற்ற, அறமற்றவர்களிடம் சிக்கி சீரழிகிறது
கால சக்கரம் சுழலும் போது எழவே முடியாதவாறு புதைந்து போவார்கள் ..
தமிழர்களுக்கு தலைகுனிவை ஏற்படுத்துகிறார்கள் இந்த கோமாளிகள் ..
..
சிரிப்பாய் சிரிக்கிறது ..
..
ஆலஞ்சியார்
Tuesday, September 10, 2019
திராவிடமே தேவை
பாஜகவின் நடவடிக்கைகளுக்கு எதிராக கேரளாவின் கண்ணன் கோபிநாத்,தமிழ் நாட்டின் சசிகாந்த் செந்தில்,அருணாச்சல பிரதேச கோஷ் மிட்டல்,நிதித்துறை செயலாளர் சுபாஷ் கார்ங் ஆகியோர் ராஜினாமா செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர்கள் அனைவரும். ஐ ஏ எஸ் அதிகாரிகள் ..
இந்த பட்டியல் நீள கூடும் அரசுதுறையில் அதிகாரமிக்க பதவிகளில் மூன்று விழுக்காடு அத்துமீறி மூக்கை நுழைப்பதும் அதிகார மையம் நாக்பூரை சுற்றி இயங்குவதால் மீறபடுகிற மரபுகள் சட்டங்கள் எல்லாம் மநுவின் பார்வையில் சரியாகும் என்பதால் நேர்மையான அதிகாரிகள் விலக தொடங்கியிருக்கிறார்கள் ..
..
நீதிமன்ற செயல்பாடுகளில் பாசிசம் அத்துமீறி நீதியை வளைத்தொடிக்கிறது .. மிரட்டுகிறது தொடர் இடைஞ்சலை தந்து தானாகவே பதவி விலக வைப்பதன் மூலம் தங்கள் இனத்தவர் அல்லது தங்களுக்கு வேண்டபட்டவர் ,தலையாட்டுகிற பொம்மைகளை கொண்டு நிரப்பப்படலாம் ..
உயர்நீதிமன்ற நீதிபதியே தாமாக பதவி விலகும் அவலம் .. எத்தகைய மனஅழுத்தம் வெறுப்பு பயம் இருந்திருந்தால் விலகி இருப்பார் என்பது புரிகிறது .. முற்போக்காளர்கள் ,துறைசார்ந்த வல்லுநர்கள்,மண்ணை நேசிக்கிற மனிதநேயமிக்கவர்கள், வேட்டையாட படுவது இந்த ஆட்சியின் அவலத்தை படம்பிடித்துகாட்டுகிறது ..
..
36 வது நாளாக கஷ்மீரில் இயல்புநிலை திரும்பவில்லை தந்தை மகனை பார்க்க மகளை பெற்றோரை பார்க்க உச்சநீதிமன்றம் அனுமதிக்க வேண்டியிருக்கிறது .. ஜனநாயகம் கொடூரம் .. மிருகபலத்தோடு ஆட்சியாளர்கள் செயல்படும்போது ஜனநாயகத்தின் குரல்வளை நசுக்கபடுவது இயல்பு ..மிக சிறந்த ஜனநாயகவாதிகள் மட்டுமே பொறுப்புணர்ந்து செயல்படுவர் அதை பாசிசத்திடம் எதிர்ப்பார்க்கமுடியாது .. பொருளாதார மந்தநிலைக்கு ப.சி யை காரணம் காட்டி ஒளியலாமென்ற நிலைக்கு வந்திருக்கிறார்கள் .. ஆட்டோமொபைல் வீழ்ச்சிக்கு OLA uber நிறுவனம் வந்ததுதான் காரணம் என்ற அறிவார்ந்த நிதியமைச்சரை பெற்றது நமது பாக்கியம் ..
..
இன்னும் நிறைய சோதனைகள் வரும்.. அதற்குள் நமக்கு பழகிவிடும் சொற்ப பணத்திற்கு வாக்கை விற்று யாராண்டால் என்ன என்று நாம் கடந்து போவோம் ..
நாளைய தலைமுறைக்கு மண்ணை கூட நஞ்சாக்கிவிட்டு நமக்கென்ன என்று இருப்போம்.. வாக்குபதிவு இயந்திரமும் தேர்தல் ஆணையமும் நீதிமன்றமும் பாசிசபிடியில் ..
எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைய வேண்டும் ..
மக்களே இந்த ஜனநாயக கேடுகளை கண்டு சிவந்தெழ வேண்டும் ஜனநாயகத்தின் வேர்களில் இன்னமும் ஈரமிருக்கிறது .. இந்த நாட்டிற்கு பெரியாரிய மொழியே தேவை ..
அதுமட்டுமே சரியான நீதியை சமநீதியை சமூகநீதியை தரும்.. ஒருங்கிணைந்த இந்தியாவின் இன்றைய தேவை பெரியார் ..
திராவிட சித்தாந்தம் அதுவே ஒருமுகபடுத்தும் உயர்விற்கு வழிவகுக்கும் ஏற்றதாழ்வுகளை களையும் சுயமரியாதையை கற்பிக்கும் ..
..
ஆலஞ்சியார்
Friday, September 6, 2019
மதம் தவிர்ப்போம்
இந்த படம் நிறைய கதைக்கிறது ..
நம்பிக்கை பயம் தெய்வபக்தி சாஸ்திரம் அதெல்லாம் ஒரு இழவுமில்லை .. கொண்டாடி தீர்க்க ஒரு பண்டிகை அவ்வளவுதான் ..
இந்த பண்டிகை என்றில்லை எல்லா மத விழாக்களும் பண்டிகைகளும் மூடத்தனத்தில் என்பதை மக்கள் அறிவார்கள் ஆனாலும் கொண்டாட ஒரு விழா அவ்வளவுதான் ஆனால் இதை வைத்து மதவெறியர்களும் மதத்தை வைத்து பிழைப்போரும் அரசியல்வாதிகளும்
மதத்தின் பெயரில் கலகமூட்டுவோரும் தங்கள் நிலைநிறுப்பை தக்கவைக்க மக்களிடையே மதத்தின் மீதான பார்வையை கூர் தீட்டுகிறார்கள் ..
..
தனிமனித வாழ்வில் பண்டிகைகள் மகிழ்ச்சி தருவதை விடுத்து பொருளாதார ரீதியாகவும்
மதத்தின் பெயரிலும் அழுத்தத்தை தந்து வழிகேட்டில் நிறுத்துகிறது.. எந்த மத பண்டிகையும் மனிதனுக்கு பயனுள்ளதாக அமைந்ததே இல்லை அவனை மூடத்தின் வாயில் நிறுத்தி வெறியேற்றுகிறதே தவிர வேறெதுவும் சாதிக்கவில்லை வேறு பயனுமில்லை .. ஆனால் மண்சார்ந்த விழாக்கள் கலாச்சாரத்தை முன்னெடுக்கும் விழாக்கள் இனத்தின் மொழியின் பண்பாட்டின் மேன்மையை உணர்த்துவதோடு இன மொழி மத வேறுபாடுகளை கலைந்து மனிதனுக்கு நேசிக்க கற்று தருகிறது .. ஆனால் எல்லா மத விழாக்கள் பண்டிகைகள் மனிதனை சிந்திக்க விடாமல் ஒருவித பயம்/பக்தியில் நிறுத்தி கடைசியில் அவனே சடங்குகளை மீறுகிற நிலைக்கு அல்லது அவனுக்கு சௌகரியத்திற்கு ஏற்றாற்ப்போல் மாற்றிக்கொள்ள/ மாறிக்கொள்ள வழிவகுக்கிறது இதிலிருந்தே நம்பிக்கை என்பது பொய் என சொல்லலாம் அல்லது சடங்கு சம்பிரதாயங்கள் எல்லாம் ஒன்றுமில்லை என்பதை உணரலாம்
..
இனம் மொழி மண் சார்ந்த விழாக்கள் (பொங்கல் போன்ற விழாக்கள்) சகோதரத்துவத்தை நன்றியோடு வாழ வேண்டுமென்பதை உழைப்பவனை நேசிக்க வேண்டுமென்பதை விடுமுறையை பயனுள்ளதாக்க கலாச்சார மேடைகள் கூத்துகள் என பழங்கதைகளை பேசி மண்ணின் பெருமையை பறைச்சாற்றி நல்வாழ்வு வாழ போதிக்கிறது .. வெறிச்செயல் இல்லை பகையோடு திரியவில்லை அடுத்தவரை அடைக்கியாள சொல்லவில்லை .. பிரித்து பேசி வர்ணம் பூசவில்லை சாதிமதமில்லை .. இயற்கையோடு வாழ்ந்த வாழ்வை.. வாழும்நெறியை உணர்த்துகிறது ..
ஆனால் மதசாயம் பூசபடும் எந்த நிகழ்வும் விழாவும் பண்டிகைகளும், உண்மையில் வேற்றுமையை பகையை வளர்க்கிறது ..
பணேபாட்டை போதிக்கவில்லை..
..
மதம் தவிர்த்து மனிதம் சமைப்போம்
..
ஆலஞ்சியார்
Subscribe to:
Posts (Atom)