Friday, February 2, 2018
பட்ஜெட் கமல்..
விவசாயிகள், கிராமங்கள் பக்கம் பார்வையை திருப்பியுள்ள பட்ஜெட்..
நாம் பல காலமாக புறக்கணிக்கப்பட்டுதான் இருக்கிறோம். இருப்பினும் இந்த பட்ஜெட்டில் உள்ள நன்மைகளைப் பார்க்கலாமே.. மத்திய பட்ஜெட் மூலம் மத்திய அரசு விவசாயிகள், கிராமங்களின் பக்கம் பார்வையை திருப்பியுள்ளது. அதிகமாக திருப்பியுள்ளது .
திரைப்பட நடிகர் கமல் ..
இவர்தான் பணமதிப்பிழப்பை கடைசிவரை முட்டுகொடுத்தவர் .. கடைசியில் பேரடி விழுந்தவுடன் தவறை உணர்வதாக சொன்னார்..
..
வெளிப்படையாக ரஜினியைப்போல ஆன்மீகம் பேசாமல் நாத்திகன் போர்வையில் நமக்கு மணியாட்ட வந்த அய்யங்கார்.. ஏறைக்குறைய எல்லா பொருளாதார நிபுணர்களும்.. கடைசிவரை மோடிக்கு வக்காலத்து வாங்கி வந்தவர்கள் கூட கையொழிய தொடங்கிய நிலையில் இவர் சப்பைகட்டுகிறார்..
விவசாயிகளுக்கான உரத்திற்கான மான்யம் குறைக்கபட்டிருக்கிறதா..?
ஈடுபொருள்களின் GST குறைத்தபாடில்லை விவசாய கடன் தள்ளுபடி பற்றி வாயே திறக்கவில்லை ஆனால் மேம்போக்காக விவசாயிகளுக்கான பட்ஜெட் என்பது கண்தெரியாதவன் யானையைப்பற்றி கதை சொன்னதைப்போல இருக்கிறது.. இவர்கள்தான் டிராக்டரை வாகனங்கள் பட்டியலுக்கு கொண்டுபோனவர்கள் .. திமுகதான் அதை விளக்கி விவசாயம் சார்ந்த வாகனபட்டியலில் மீண்டும் சேர்த்தது இதுதான் பாஜகவின் விவசாய நலன் பற்றிய அறிவு..
..
அரசியல் அறிவென்பது படித்தறிதல் அல்ல பட்டறிதல் என்று யாராவது இந்த கோமாளிகளிடம் சொல்லுங்கள்... மக்களோடு மக்களாக கலந்து கதைத்து .. அவன் துக்கங்களில் மகிழ்ச்சிகளில் முன்னின்று.. அவனின் தேவைகளை அறிந்து செயல்பட்டு.. இவனை நம்பலாமென நம்பிக்கையை பெறுதல் .. பத்திரிக்கைகளில் எழுதி பேசி குளுகுளு அறைக்குள் அமர்ந்து திட்டம் வகுப்பதில்லை.. நாற்பதாண்டுகளுக்கு முன்பே கலைஞர் அறிவித்ததை சொன்னதை செய்துகாட்டியதை இப்போதுதான் செயல்படுத்த போவதாக சொல்கிறார்களே இதிலிருந்தே புரியவில்லை மக்களோடு இரண்டற கலக்காதவர்களுக்கு எது தேவையென பிடிகிட்டவே பல ஆண்டுகளாகும்.. அதே நிலைதான் கமல் போன்ற அரிதாரத்தை நம்புகிறவர்களின் நிலை ..
..
ஊரக விவசாய சந்தையையும் இயற்கை விவசாயத்தில் பெண்களுக்கு நிதி உதவியையும் கமல் சொல்கிறாரென எண்ணுகிறேன் .. உழவர் சந்தையாகவும், மகளிர் சுயஉதவிக்குழுக்காகவும் தமிழகத்தில் ஏற்கனவே கலைஞர் கொண்டுவந்துவிட்டார்.
ஏற்கனவே வளரும் நாடுகளில் சரிவை நோக்கி செல்கிற இந்தியா எல்லாதுறைகளிலும் பின்னோக்கி செல்கிற நிலை.. எல்லோரும் சொல்லிவைத்தாற்போல இது கடைசி பட்ஜெட் என்கிறார்கள் .. ஆமாம்..
இனியும் இவர்கள் கையில் நாடிருந்தால் நாசமாகிபோகும்.. பக்கோடா போடுகிறவரை தொழிலதிபராக பார்க்கிற பார்வை தான் இவர்களின் பொருளாதாரம் பற்றிய அறிவு
மிக சிறந்த நிதியமைச்சர்களில் ஒருவரான மன்மோகன் பட்ஜெட் குறித்து
"2022க்குள் விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்க முடியாது.. என்கிறார் ..
ஆனால் கமல் போன்ற மேதைகள்..? விவசாயிகளுக்கான பட்ஜெட் என்பது அறியாமையின் வெளிபாடு அன்றி வேறில்லை..
இன்னும் நிறைய படிக்கணும்.. கமல் ஆம் கலைஞரை கண்டு படிக்கணும்..
முதலில் அரசியல் செய்யவருகிறவர்கள் கலைஞரை படியுங்கள்.. அவரை மீறிய ஒன்றும் இந்தியாவில் இல்லை.. அவரே அரசியல் ..
#பக்கோடா_பட்ஜெட்..
..
Aalanci Spm
Thursday, February 1, 2018
அரசியல் தத்துவஞானி
கலைஞர் தொலைநோக்காளர்..
பெரியாருக்கு பிறகு எந்தவொரு செயல்பாட்டிலும் தொலைநோக்கை கொண்டிருந்தவர் திராவிடத்தலைவன் கலைஞர் மட்டுமே.. .கை ரிக்சா ஒழிப்பு தொடங்கி எந்த திட்டமானாலும் அது காலம்கடந்தும் பயன்தரும்..
பேசபடும்.. இன்றைக்கு இந்தியாவிற்கே திட்டம் தீட்டுவதாக சொல்வோர் .. கலைஞரை கண்டு படித்ததின் விளைவு .. மூன்றுமாவட்டத்திற்கு ஒரு மருத்துவக்கல்லூரியாம்...பத்தாண்டுகளுக்கு முன்பே மாவட்டம் தோறும் மருத்துவக்கல்லூரி என்று செயல்படுத்திகாட்டினார்.. பத்தாண்டுகளுக்கு முன்பே விளைவித்தவனே விலை நிர்ணயம் செய்து நேரடியாக விற்கும் உழவர்சந்தை .. இப்போதுதான் மோடி வகையறாக்களுக்கு புத்திக்குள் வருகிறது.. முப்பது வருடங்களுக்கு முன்பே கைரிக்சாவை ஒழித்தவர் கலைஞர் .. வரணாசியில் இப்போதுதான் கைரிக்சாவை வழங்கி .. இன்னும் நாங்கள் வளரவே இல்லையென்கிறார்கள்..
..
எப்படி கலைஞரால் மட்டும் சாத்தியமானது.. விடை இதுதான்.. கலைஞர் பெரியாரின் நேரடி சீடர். அதனால்தான் கலைஞர் கொண்டுவந்த அனைத்து திட்டங்களிலும் பெரியாரின் சிந்தனை இருக்கும்.. பெண்களுக்கு சொத்தில் சமஉரிமை என்று இந்தியாவிற்கே வழிகாட்டியவர் .. பெண்களுக்கான இடஒதுக்கீட்டை உள்ளாட்சிகளில் 50% விழுக்காடென்று அறிவித்தவர்..
மோடி வகையறாக்களே நீங்கள் இன்னும் கலைஞரை கண்டு படிக்கவேண்டியிருக்கிறது..
ஒரு ஆட்சியாளன் எப்படி இருக்கவேண்டும் எப்படி சிந்திக்கவேண்டும் எப்படி செயல்படவேண்டும் என்பதற்கான "சிலபஸ்" syllabus கலைஞர் தான்.. அரசியல் தலைவன் எப்படி சிந்தித்து செயல்படவேண்டுமென்பதற்கும் அவரே தலைசிறந்த உதாரணம்.. இந்திய துணைக்கண்டம் கண்ட தலைவர்களில் ஆக சிறந்த தலைவர்.. கொஞ்சம் மிகைப்படுத்துவதைப் போன்று தோன்றும்..உண்மையில் அவரது சிந்தனை ஒடுக்கப்பட்ட மக்களின் மேம்பாட்டிற்கானதாகவே இருந்தது இந்தியா போன்ற வளரும் நாடுகளில் எல்லா உரிமைகளும் எல்லோருக்கும் என்பது இயலாமல் போகுமென்பதால் தான் சிலவற்றை இலவசமாக தந்தார்.. இலவச மின்சாரம்.. உயர்கல்வியில் முதல் பட்டதாரிக்கு கட்டணமில்லை.. இப்படி நிறைய.. அடிதட்டுமக்களின் கனவுகளை மெய்பிக்க அவர்தம் வாழ்வாதாரங்களை உயர்த்த அவர் தந்த திட்டங்கள் இன்று இந்தியா முழுவதும் பேசபடுகிறது..
..
ஒரு அரசன்/ஆட்சியாளன் குடிமக்களின் எண்ணங்கள் உள்கொண்டே ஆட்சி செய்யவேண்டும்.. அவர்களின் அன்றாட பிரச்சனைகள் .. எதை செய்தால் காலம்கடந்தும் அவனால் துணிந்து நிற்கமுடியுமென்ற சிந்தனை வேண்டும் கல்வி மேம்பாடு அதை எல்லோருக்கும் கிடைக்கவேண்டுமென்பதற்காகதான்.. ஒரு சிலரே கல்வியில் மேம்படுவதை தவிர்த்து சாமானிய ஏழைக்குடும்பத்திலிருந்து வந்தவர்களுக்கும் கிடைக்கவேண்டுமென்பதற்காகதான் .. நுழைவுதேர்வை ரத்து செய்தார் இன்றைக்கு எதிர்க்கிற கூட்டம் பெருபான்மை மக்களின் விரோதத்திற்கு ஆளாகி தானாகவே நடைமுறைபடுத்தும் காலம் வரும்.. ஏனெனில் நேற்றுவரை அவர்களது சிந்தனைக்கு வராமல் அல்லது எதிராக இருந்த திட்டங்கள்/ செயல்கள் இன்று அவர்களே அறிவிக்கிறார்களெனில்.. கலைஞர் பெருமகன் செயல்படுத்தியவையே .. இந்தியா முழுக்க தேவைபடுகிற நிலை உருவாகும்..
கலைஞரின் இந்தியாவிற்கே வழிகாட்டி..
..
கடைசியாக சுயமாக சிந்திக்க தெரியாதவர்களே.. நீங்கள் தவறியேனும் ஆட்சிக்குவந்தால் உடனே கலைஞரின் "நெஞ்சுக்குநீதி" யை படியுங்கள்.. ஒர் அரசியல்வாதியின் பயணம் எல்லா படிதளங்களும் எப்படி பயணிக்கவேண்டுமென்பதற்கான பாடதிட்டங்கள் syllabus அங்கே கிடைக்கும்..
அறிவுசார் சிந்தனையும் தொலைநோக்கு பார்வையும் மக்கள் நலன் எனும் மேம்பாடும்..
அதோடு மக்களுக்கான அரசிற்கான செயல்திட்டங்களும் எதை எப்படி கையாள்வது என்ற சூத்திரமும் எதையெல்லாம் தவிர்க்கவேண்டும் என புரியம்படியாக வாழ்ந்தும் ஆட்சிசெய்தும் காட்டியவர்..ஒரு அரசியல்வாதியின் வெளிப்படைதன்மை எல்லோரிடமும் இருப்பதில்லை கலைஞர் தெளிந்த நீரோடையைப்போல எல்லா நிகழ்வுகளையும் உள்ளடக்கிய அறிவு கருவூலம்.. கலைஞரே அரசியல் தத்துவம்..
Political philosophy
..
yes
Kalaignar is a syllabus of Indian's political theory..
..
#கலைஞர்_இந்தியஅரசியலின்_ஞானி ..
..
Aalanci Spm
Wednesday, January 31, 2018
தளபதி
தளபதி..
கட்சியின் செயல்தலைவராய் நிறைய தடைகளை கடந்து நிமிர செய்யும் பணியில் தன்னை விரைந்து ஈடுபடுத்திக்கொண்டிருக்கிறார்..
தளபதி மிளிர்கிறார்..
மிகவும் பக்குவப்பட்ட உரையாடல்களும் நடத்தையும் அவரை மேலும் மேலும் உயரத்திற்கு கொண்டுவருகிறது.. நிதானமாக செயல்படுவோர் நெடுகாலம் நிலைத்து நிற்பர்..
தளபதியாரின் சமீபத்திய நடவடிக்கைகள் கூர்ந்து கவனியுங்கள்.. மிகவும் கண்ணியமான நாகரீக அரசியலை வளர்த்தெடுக்க முற்படுகிறார்.. அரசியல் தலைமையென்பது அரவணைத்து செல்லும் பெரும்பணி என்பதை உணர்ந்து மாவட்டவாரியாக தொண்டர்கள் கருத்தறிந்து கட்சியை வடிவமைக்க.. இடையில் முளைத்த களைகளை பிடிங்கியெறிய தாமே நேர்சென்று .. யாரையும் துணைக்கழைக்காமல் தொண்டரின் நாடியை பிடித்து உணர்வதென்ற நோக்கம் நல்ல செழுமையை தரும்..
..
ஏதோ இன்றைக்கு தான் ஸ்டாலின் இந்த நல்ல போக்கை கடைப்பிடித்ததாக தோன்றும்..அவரை தொடர்ந்து கவனிக்கறவர்களுக்கு அவரின் பண்பு நன்கு விளங்கும்.. முதல்முதலில் இளைஞர் அணி செயலாளராக பொறுப்பேற்றவுடன் நடந்த முதல் கூட்டம் பாபநாசத்தில் ஏற்பாடு செய்திருந்தோம்.. ஒருமரத்தை நட்டு குடைபோல் மேடை அமைத்திருந்தோம்.. பேசும் போது ஸ்டாலின் என்னை நம்பி இளைஞர்அணி பொறுப்பை தந்திருக்கிறீர்கள் இந்த மேடையை கூட ஒற்றை மர குடைப்போல் வடிவமைத்து இருக்கிறீர்கள் இங்கு பேசியவர்கள் என்னிடம் பொறுப்பு வழங்கப்பட்டிருப்பதை சொன்னார்கள்..அவர்களுக்கு ஒன்றை சொல்லிக்கொள்கிறேன்..உங்கள் அனைவரின் ஆதரவு இல்லாமல் என்னால் தனித்து செயல்பட முடியாது உங்கள் துணைக்கொண்டு வெற்றிகரமாக
கலைஞரும் பேராசிரியரும் என்னை நம்பி ஒப்படைத்த பொறுப்பை செய்வேன் என உறுதியளிக்கிறேன் என்றார்.. அந்த தன்மைதான் இந்தளவிற்கு உயர்த்தியிருக்கிறது.. இதோ நான்தான் தலைவன் என்றவர்கள் விலாசம் தெரியாமல் போனதற்கு இந்த எளிய பண்பில்லாமல் போனதே காரணம்..
..
எப்போதும் கூடவே இருப்பவர்கள் எதையாவது மறைக்க கூடும் மனம் கஷ்டபடுமே என பிறகு சொல்லிக்கொள்ளலாமென தவிர்க்ககூடும் .. அதனால் மூத்த செயல்பாட்டாளர்களை கூட தவிர்த்து தானே நேரடியாய் சென்று கருத்தை கேட்பதும்... நேரில் சொல்ல முடியாத விசயங்களை எழுதி பெட்டியிலே போடசொல்லி அதை மிக நாணயமான நேர்மையான தியாகராஜன் பழனிவேலை கொண்டு பதிவேற்றி முழுவதுமாக அறிந்துகொள்ளுதல் சரியான பாதை வகுக்க பெரிதும் பயன்படும்..
கடந்தால தவறகளிலிருந்தும் அல்லது பிழைகளிலிருந்து பாடம் படித்தலே..சிறந்துவிளங்க உதவும்.
தமிழகத்தின் நம்பிக்கை தளபதி அவர்கள்
எதிரிகளும் வாயடைத்து போய்நிற்கிற இவரின் நேர்மைான செயல்பாடு நல்ல எதிர்காலத்தை தரும் இந்த நேரத்தில் திராவிடம் தந்த பெருந்தகைகள்
கலைஞருக்கும் பேராசியருக்கும் நன்றிகள்..
மிகச்சரியான நபரை தேர்வு செய்து வார்த்தெடுத்து செதுக்கி ..இயக்கத்தின் நான்காம் தலைமுறை தலைவனாக்கி தந்திருக்கிறீர்..
நன்றி! நன்றி!!
..
#எம்இனத்தின்_நம்பிக்கை
..
Aalanci Spm
காதல் பேசுவோம்
#கொஞ்சம்_காதல்பேசுவோம்..
..
அவளும் நானும்..
எப்படி சொல்வேன்..
அரும்புமீசை வளரும்காலம்
காதல் அரும்பிய பொன்நேரம்....
ஆசையா.. ஈர்ப்பா..
அது காதல்தானா..
அறியாமல் அரும்பிய
மனம் கவர்ந்த மல்லி..
..
ஆற்றங்கரையில்
விரல்உரசி..
நடந்ததும்..
வரவை எண்ணி.
ஆற்றுபடுகையில்
புத்தகத்தால் முகம் மூடி
தவமிருந்த மணிதுளிகள்..
மழை நின்று
இலை சிந்தும் நீரில்
நனைந்து..
இதமாய் இதழ் பதித்த..
நான்..ரசித்த
ரசனைக்குரிய நாட்கள்..
..
முதல் காதல்..
முதல் முத்தம்..
முதல் ஸ்பரிசம்..
மறக்கமுடியாத..
காவிரிக்கரை..
அழகிய தென்னந்தோப்பு..
சிறிய குட்டை..
தாமரைக்குளம்..
அமைதியான..
அக்ரஹார கோவில் நிழல்..
சின்ன சிணுங்கல்..
பெரும் மூச்சு..
கருவிழி நாட்டியம்..
என்னை கொன்ற
கவிதையவள்
மறக்கமுடியுமா..
..
ஒற்றைவரியில்..
மனம் விரும்பிய
என் முதல்
#கவிதை ..
..
அவளும் நானும்..
..
Aalanci Spm
Tuesday, January 30, 2018
திராவிடம் தந்த திமிர்..
பொன்னரும் தமிழிசையும் ஆதங்கபட்டதாக செய்திகள் உலவுகிறது.. அவ்வளவு வெளிப்படையாக எல்லாம் பேசிவிட மாட்டார்கள்.
தொடர்ந்து இழிவு படுத்தபட்டாலும் அவர்கள் மனதுக்குள் புழுங்குவார்களே தவிர அதை வெளியில்காட்டி தங்கள் சகாக்களை கையொழிய மாட்டார்கள்..
உண்மையில் எச்.ராசாவை விட பாஜகவிற்காக நல்லமுறையில் உழைப்பவர்கள்.. சாண் ஏற நினைக்கிற போது முழம் சறுக்கும்.. அந்த வேலையை ராசா மிக கச்சிதமாகவே செய்வார்..தங்கள் பகுதிகளில் மக்கள் செல்வாக்குள்ள தலைவர்களை வளரவிடாமல் செய்வதில் பார்பனீயம் மிக கடமையோடு வேலைசெய்யும்.. நாகர்கோவிலில் இனி பொன்னருக்கு பழைய மரியாதை கிடைக்குமா என தெரியவில்லை ..
..
இந்து நாடார் இன மக்களில் ஏனெனில் கிருஸ்தவ நாடார்களில் பெரும்பாலானோர் பாஜகவை ஏறெடுத்தும் பார்பதில்லை .. இவர்கள் மதமாறிவிட்டார்களென சொல்லி மனதில் வன்மத்தை கொட்டி இந்து நாடார்களில் சிலரை பாஜக அவர்கள் பக்கம் இழுத்தது.. முன்பெல்லாம் காங்கிரஸில் இருந்தவர்கள் பாஜகவிற்கு இடம்பெயர மதம் சார்ந்த உணர்வை ஊட்டியதே மிக முக்கிய காரணம்..
பின்னர் அது தொடர்ந்து பாஜக தலைமை வரை வர காரணமாகியதும் வழக்கம் போல் பார்பனர்கள் அவர்களை இல்லாதாக்கும் அல்லது வளரவிடாமல் உயர் நல் பதவிகளுக்கு வந்துவிடாமல் பார்த்துக்கொண்டனர்..
நட்டுவைத்த வேலுக்கு கிடைத்த மரியாதை.. நாகர்கோவில் பொன்னுக்கு கிடைக்கவில்லை..
காரணம் எல்லோரும் அறிந்ததுதான் ..
..
தொடர்ந்து தமிழக பாஜகவில் ராசாவின் குறிக்கீடு அளவிற்கதிகமாக இருக்கிறது .. ஒரு கட்டத்தில் தேசிய செயலராக நியமித்து கேரள பொறுப்பை வழங்கிய பின்னரும் தமிழக அரசியலில் .. குறிப்பாக பாஜக நிர்வாகத்தில் அதீத தலையீடும்.. நாடார் இன தலைவர்களை ஒருபடி தாழே .. வைத்ததும் பொன்னரையும் தமிழிசையும் தங்கள் நட்புவட்டத்தில் பேசவைத்து அதை கசியவிட்டிருக்கிறார்கள்..
அதுதான் நானும் திராவிடன் தான் என்கிற வெளிப்படையான அறைகூவல்.. அய்யா சுப.வீ சொன்னதைப்போல பாஜகவில் யாருக்கோ சேதி சொல்லியிருக்கிறார்.. காரணம் பார்பனர்களுக்கு பிடிக்காத ஒரு சொல் உண்டெனில் அது திராவிடம் தான்... திராவிடம் என்ற பெயரை கேட்டாலே கொதிக்கிற எண்ணெய் சட்டியில் விழுந்தைப்போல துடிப்பார்கள்.. அவர்களுக்கு பிடிக்காத வார்த்தை திராவிடம்.. நூறாண்டுகளாய் அவர்களை துரத்துகிற .. வேட்டையாடுகிற தூக்கத்தில் கூட பதறவைக்கிற சொல் .. அதை கையிலெடுத்து பொன்னர் ஆடும் போதே உள்புகைந்தது வெளிவர ஆரம்பித்துவிட்டது.. ஆம் தகுதியிருந்தாலும் கீழே அழுத்தி அவர்மீதே ஏறிநின்று கோரதாண்டவம் ஆடுவதை யார்தான் பொறுப்பார்கள் ..
..
பாஜக என்பதே பார்பனர்களுக்கான கட்சி .. அது இந்துக்களுக்கானதென்று சொல்லி திரிந்தாலும் நிர்மலா சீதாராமன்களுக்கே கௌரவம் கிடைக்கும்.. இங்கே பெயருக்கு தமிழிசையை தலைவராக வைத்துவிட்டு ராசாவை கேட்டுதான்.. அல்லது சொல்படிதான் எதுவும் நடக்கும்.. தமிழக பாஜகவில் தமிழிசைப்போல கடுமையாக உழைத்தவர்கள் யாரும் இல்லையென்றே கூறவேண்டும் சமூகவலைதளங்களில் கடுமையாக தாக்குதல் நடந்தும் தொடர்ந்து செயல்பட்டு கொண்டேயிருந்தவர்.. வானதியை போல அல்லாமல் அப்பழுக்கற்றவராக வலம் வருகிறார்.. ஆனால் இவர்கள் என்னதான் கடுமையாக உழைத்தாலும் நேர்மையாக இருந்தாலும்.. பாஜகவில் இரண்டாம் நிலைதான்..
..
இன்றல்ல...,எப்போதுமே நாடார்களை பார்பனர்கள் தாழ்ந்தே பார்த்துவந்திருக்கிறார்கள்...இன்று உழைப்பால் உயரத்தை எத்தியவர்களென்றாலும் அந்த இடைவெளி தொடரதான் செய்கிறது... பனை மரத்தின் மீது இருக்கும் நபர்.. அவ்வழியே பாப்பான் சென்றால் .. மரத்தை மட்டையால் அடித்து ஒலி எழுப்பவேண்டும் கீழே நடந்து செல்கிற பாப்பான் நகர்ந்து செல்வார் .. நாடாரின் நிழல் கூட தீட்டென்று சொன்னவர்கள்... தலித் மக்களை தொட்டால்தான் தீட்டு... சாணரை பார்த்தாலே தீட்டென்றவன்... இன்றைக்கு நானும் திராவிடன் என பார்பனன் செவியருகே உரக்க சொல்கிறாரே.. மானமிகு பொன்னர் அது இந்த திராவிடம் தந்த தைரியம்
..
மானத்தோடு வாழத்தான் திராவிடம் கற்றுதந்தது...
..
Aalanci Spm
Monday, January 29, 2018
பேராயுதம்
இதுதான் திமிர்..
மதுரை ஆதீனம் என்ன சொல்லியிருக்கிறார்.. அவர் என்னிடம் வேலைகேட்டு வந்தவர்..
தினமணியில் வந்த கட்டுரை.. நான் தினமணி படிப்பதில்லை.. ஹேராம்.. படம்.. நான் பார்க்கவில்லை.. ராகவன் எழுதிய ஆண்டாள்.. அது எனக்கு தெரியாது.. ஆனால் சூத்திரன் எப்படி ஆண்டாளை பேசலாம்.. இதுதான் பார்ப்பனீயம்.. அவர்களுக்குள் காட்டி கொடுத்துக்கொள்வார்கள் ஆனால் அதை நாம் சொன்னால் பேசாதே என்பது எந்த ரகம்.. நல்லதை மட்டுமே பேசவேண்டுமென்றால் பொய் தான் அதிகம் பேசவேண்டி வரும்... தட்டில் இனிப்போடு பீ வைக்கிறீரகள் என்கிறார் ..பீ அல்ல காரம் கடும் காரம் அது மூளையை வேலை செய்ய சொல்லும் .. அறியாமல் உண்மையை உளறவைக்கும்..
எல்லாவழிகளும் அடைபடும் போது இப்படி பேசினால் தான் தப்பிக்கமுடியும்..
எஸ்.வி சேகர் நேற்றைய தினம் வச்சு செய்தார்..
..
காஞ்சி மடத்தை சேர்ந்த ஜெயேந்திரனை விமர்சிக்க கூடாதாம் கடவுளாம்.. யாருக்கு கடவுள் பாப்பானுக்கு கடவுள் என்றால் அதே பாப்பானை கொன்ற வழக்கில் கைது செய்தது ஏன்.. இன்றுவரை மேல்முறையீடு செய்யாமல் பாதிக்கபட்ட சங்கரராமன் குடும்பம் மிரட்டபட்டிருக்கிறதே இதை இந்த சேகர் பாப்பான் ஏன் கேள்விகேட்கவில்லை.. எங்க அப்பாரு தானா கழுத்தறுத்து செத்துட்டார் என்ற மகனின் கதறுலும் எனக்கிருக்கிற ஒரே மகனை இழக்கணுமா என்ற தாயின் இயலாமையும் அவர்கள் வயிறெறிந்த சாபம்...சேகர் காதுகளுக்கு கேட்கவில்லையா.. சேகர் சொன்னதைப்போல பாதிக்கபட்டவரின் சாபம் என்ன செய்துவிட்டது.. காமகளியாட்டங்களை கடவுள் பெயரில் நடத்துவதாக பாப்பன பெண்களே சொன்னபோது இந்த காமெடி பாப்பான் எங்கே .. அப்பன் ஆவியோடு பேசிக்கொண்டிருந்தாரா.. எவ்வளவு பொய்.. ஒரு பேட்டியில் தன் தந்தையின் ஆவியோடு பேசினேன் தன் மகனின் இரண்டாவது படம் பிரமாதமாக ஓடுமென ஆவி சொன்னதாக சொன்னார்.. படம் படுதோல்வி..
..
ஜீயர் சோடாபாட்டில் வீசலாமா என்றதற்கு பாவம் வீசுவேன்னு சொல்லலே என்கிறார்.. முதலில் இதில் ஒளிந்துகிடக்கும் உண்மை புரியவில்லை ..வேறு மாநிலத்தைப்போல இங்கே இடைசாதிக்காரனை கொம்பு சீவி அரிவாளெடுக்க சொல்லமுடியவில்லை தாங்களே எடுத்தால்தான் உண்டு அதுவும்.. செஞ்சுடுவேன் குரூப்போடு மோதினால் உண்மையிலேயே செஞ்சுடுவாங்கலோ என்கிற பயம்.. ஒன்றை புரிந்துக்கொள்ளவேண்டும் மத்தியில் ஆட்சியில் இருப்பதால் எதைவேண்டுமானாலும் செய்யலாமென்ற திமிர் .. அதிகாரமிக்க பதவிகளை அடையலாமே தவிர.. செல்வாக்கை பெற்றிட முடியாது.. மீண்டும் மீண்டும் இதேபோல் பேசிக்கொண்டிருந்தால் தமிழகத்தில் வேறுமாதிரியான பதிலடி கிடைக்கும்.. முட்டாளென்றதற்கே அடிமுட்டாளென சட்டென்று திருப்பி அடிக்கிற இனம்.. இங்கே எவனுக்கும் பயமுல்லை..காரணம் இங்கே பெருங்கிழவனின் சொல் இருக்கிறது.. செயல் இருக்கிறது.. மீறினால் தடி இருக்கிறது ..
..
எதையும் ஆய்ந்தறிக என்று எங்கள் பெருங்கிழவன் சொல்லிவிட்டு போயிருக்கிறான்.. நானே சொன்னாலும் உன் அறிவேற்காவிட்டால் ஏற்காதே என்று எனக்கு உலகில் எவருமே சொன்னதில்லை.. மதம் பேசியோர் வாழும் மார்க்கத்தை சொன்னோர் ஆன்றோர் அறிவில் சான்றோர் அறிவியல் சொன்னவர் .. என எவருமே,தாம் சொல்லவந்ததை மட்டுமே சரியென்றார்கள்.. இந்த ஈரோட்டு கிழவன் மட்டும் தான் .. யார் சொன்னாலும் உன் அறிவேற்காததை ஏற்காதே என்றான் அதனால்தான் காலம் கடந்தும் நிலைத்து நின்று பாசிசம் பேசுவோரை கதிகலங்க செய்கிறான்... பெரியாரின் சொல்லும் செயலுமே எமது ஆயுதங்கள்.. இந்த பொறம்போக்குகளிடமிருந்து எம்மை எந்நாளும் காத்து நிற்கும் பேராயுதங்கள்...
..
#பெரியார்
..
Aalanci Spm
Sunday, January 28, 2018
திராவிடம்
திராவிடம்..
திராவிட கட்சிகளென்ற உடனேயே திமுகவும்,அதிமுகவும் இணைத்தே பேசபடுகிறது.. முதலில் ஒன்றை புரிந்துக்கொள்ளவேண்டும்.. திராவிட சித்தாந்தத்திலிருந்து வேகமாக வெளியேறிய கட்சி அதிமுக..எம்ஜிஆர் காலத்திலேயே இந்த மண்ணில் பாசிசம் வளர ஆரம்பம் குறித்தது மகோரா(எம்ஜிஆர்) தான் ..
அதுவரை வெளிப்படையான போக்கு இருந்ததில்லை இந்துமுன்னணி இங்கே உருவாக காரணமாக இருந்தவர்.. எம்ஜிஆரை ஆர்எஸ்எஸ் தன் கட்டுபாட்டில் கொண்டுவர அதிகம் சிரமம் எடுக்கவில்லையென்றே நினைக்கிறேன்.. இஸ்லாமியருக்கு முஸ்லீம்லீக் இருக்கும் போது இந்துமுன்னணி இருக்ககூடாதாயென அப்துல் சமத் இடமே கேட்டார் .. சிறுபான்மையினரின் அமைப்பிற்கும் .. இந்துத்துவா அமைப்பிற்குமான வேறுபாடு தெரியாமல் பேசினார்.. சுதந்திரத்திற்குமுன்பே லீக் உண்டென்பதும் ..அது மதவெறியை கையிலெடுத்ததில்லை என்பதும் தெரிந்தும் ஆர்எஸ்எஸ் செயல்பாட்டிற்கான துவக்கத்தை குறித்தார்... திமுகவில் இருந்தபோது தனக்கு பதவிவேண்டுமென தொடர்ந்து தொந்தரவு செய்து கலைஞர் பொருளாளர் பதவியை தந்தபோது பேராசான் பெரியார்.. கலைஞருக்கு என்னாச்சு தெரிஞ்சே சகதியில கால வைத்துவிட்டாரே என்றார் அப்போதே எம்ஜிஆரின் சுயரூபம் அறிந்தவராக இருந்தார்..
..
அதிமுகவோடு திமுகவை இணைத்து இரண்டும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளென பொதுவான கருத்தை தொடர்ந்து சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள்.. திராவிடத்தை வீழ்த்த .. குறிப்பாக அதிகாரத்தில் திராவிடமென்ற நிலையை உடைத்தெறியவேண்டுமென்பதற்காக ஆர்எஸ்எஸால் .கொம்புசீவபட்டு கொண்டுவரபட்டவர்தான் எம்ஜிஆர் எனும் மகோரா.. சோ அந்த பணியை திறம்பட செய்தார்.. தொடர்ந்து தோல்வியிலும் திமுகவை ஒன்றும் செய்துவிட முடியவில்லை.. காரணம் கலைஞர் அவர் கட்டிகாத்த விதம் அதைவிட ஜனநாயக ரீதியிலான கட்சி அமைப்பு .. ஒருமுறை சாவும் மறுமுறை நோவும் திமுகவின் தோல்விக்கு காரணமானாலும் தொடர்ந்து இந்த சமூகத்தின் மீதான அக்கறை திமுகவை வீழ்ந்துவிடாமல் காத்தது.. நிறைய வரலாற்றுப்பிழைகளை திமுகழகம் எடுத்திருந்தாலும் அதை மக்கள் முற்றிலுமாக புறக்கணிக்காததற்கு திராவிடத்தின் வேர் பலமாக இருந்தது ஒரு காரணம்.. ஊடகத்தின் தொடர் எதிர்ப்பு தொடர்ந்து வரும் ஊழல் குற்றசாட்டுகள் .. அதில் ஒன்றில் கூட நிரூபிக்க முடியவில்லையென்றாலும்.. குற்றம் நிரூபிக்கபட்டவர்களை பரிசுத்த ஆவியைப்போல கொண்டாடுகிற பாசிச ஊடகவியலாளர்கள்.. நடுநிலையென்ற பெயரில் அதிமுகவோடு திமுகவை இணைத்தே பேசும் வழக்கத்தை மாற்றாத நேர்மையானவர்கள்..? இவைகளை/இவர்களை எல்லாம் கடந்தும் நிற்பதற்கு இந்த மண்ணின் ஈரமும்.. மக்களின் தெளிவும் மிகப்பெரிய காரணிகள்.. முதலில் இங்கே இந்து எனும் சொல்லே தவறென்று உணர தொடங்கியது பெரியாரின் பெரும்முயற்சிதான் காரணம்.. வர்ணாசிரம நிலைபாட்டை மிக தெளிவாக எடுத்துரைத்து.. இது பிராமண மதமென்ற உண்மையை மிக கவனமாக கையாண்டார் பெரியார்.. குலசாமிகளை கும்பிட்டுவந்தவன் நீ என்று அவனுக்கு சொல்லாமல் சொன்னார்.. இங்கே இந்த ஏற்றதாழ்வுதான் .. கிருஸ்துவனாக இஸ்லாமியனாக மாற்றியது .. அதோடு பூர்வகுடியானவனை .. எங்கிருந்தோ வந்தவன் ஏறிமிதிப்பதை அவனுக்கு புரியம்படியாக சொல்லி அதில் கடைசிவரை உரத்துநின்ற பெருங்கிழவன் பேராசானின் பெரும் தொண்டே இன்னமும் திராவிடம் இங்கே நிலைத்துநிற்க காரணம்..
..
திராவிடத்தை சொல்லாமல் இங்கே எதுவுமே நடக்காதென்பதின் சமீபத்திய உதாரணம் பொன்.ராதா.. ஆனால் இவர்கள் அதிமுக உட்பட தங்களை நிலைநிறுத்தலுக்காக உச்சரிப்பவர்கள்..தி.மு கழகமுமே மட்டுமே திராவிடர்களின் அரசியல் களத்திற்கான இயக்கம்.. இங்கே மற்றொன்றையும் சொல்லவேண்டும்.. ஏன் பார்பனர்கள் குறிப்பாக திமுக மீது கடும் வன்மம் கொண்டிருக்கிறார்கள் தெரியுமா.. இந்தியாவிலேயே முதன்முதலில் கோவில் நிர்வாகத்தை அரசே ஏற்றது திமுக ஆட்சியில்தான் அதுவரை பண்டாரங்கள் கையிலிருந்த கோவில் அரசு நிர்வாகத்திற்கு வந்தது .. அதுவரை கோவிலை வைத்து பிழைத்தது கெட்டுபோனதே என்கிற கோபம் அவர்களை தொடர்ந்து எதிரான போக்கை கொள்ளவைக்கிறது.
..
திமுக எதை செய்தாலும் அது ஆரியத்திற்கு எதிரானதாகவே அமையும்..
ஆரியத்திற்கெதிரான போரில்..
திராவிடம் என்றும் வெல்லும்..
..
Aalanci Spm
..
Subscribe to:
Posts (Atom)