Friday, March 31, 2017

மனபிறழ்..வைகோ

His mental disorder வைகோ.. வேறெப்படி அழைப்பதென்று தெரியவில்லை தெளிவில்லாதவர்கள் வாய்க்கு வந்ததையெல்லாம் பேசுவார்கள்..உதிரியும் வார்த்தையின் பொருள் உணராமல் போவது எவ்வளவு அபத்தமானது.. மகோராவை நீக்கியது அண்ணாவையே நீக்கியது போன்றது .. சமீபத்திய உளறல்.. கையில் உள்ளதெல்லாம் விட்டுப்போனால் மனம் பேதலித்துவிடும் சிலருக்கு அவர்கள் தன்நம்பிக்கை இல்லாதவர்கள் கோழைகள் #மனபிறழ் வந்துவிடும் அப்படி யாரும் கண்டுக்கொள்ள மறுக்கிற அதாவது மக்கள் ஏற்றுக்கொள்ள மறுக்கிற நிலை.. சிறிய கட்சிகள் கூட இவரை சேர்த்துக்கொள்ள மறுக்கின்றன தான் துவக்கிய மநகூ கூட வெளியேற்றிவிட்டது..தொண்டர்களை காணோம்.. இருக்கிற சிலரும் பிரிந்து போகவார்களோ என்கிற நிலையில் எதையாவது செய்து நானிருக்கிறேன் என்று காட்ட நினைத்து எதையாவது பேசி வருகிறார்.. .. அண்ணாவோடு மகோரா வை ஒப்பிடுவதின் மூலம் அண்ணாவை சிறுமைபடுத்துகிறோம் என்று அறியாமல் போனதேன்.. ம கோ ரா வை அண்ணாவோடு இப்போது ஒப்பிட்டு பேசுகிறவர் (எம்ஜிஆர்) மகோராவை வெளியேற்றிய போது ஏன் கூட செல்லவில்லை.. அப்போது எம்ஜிஆர் நீக்கத்தை ஆதரித்து.. சென்னை சட்டகல்லூரியில் மாணவர்கள் தீர்மானம் கொண்டுவந்தது வைகோவிற்கு தெரியாதா அப்போது ஏன் எதிர்க்கவில்லை. அதற்கு பிறகும்.. எம்ஜிஆர் ஆள்வைத்து அழைத்தார் நான் கலைஞரை விட்டு வரமாட்டேன் என்று சொன்னதேன்.. 18 வருடம் கலைஞரின் தந்த பதவி இனித்தது.அதனால் போகவில்லை என்று சொல்லியிருக்கலாமே.. பதவி வரும் கண்ட கனவு பலிக்காமல் போனதால்.. கூட இருந்தவர்கள் ச்சீ .. இந்த பழம் புளிக்கும் என நடையை கட்டியதால்.. உதிரிகட்சிகள் கூட (லெட்டர்பேட் கட்சிகள்) மதிக்காததால்.. இப்போதெல்லாம் கொஞ்சம் அதிகமாக சத்தம் கேட்கிறது.. சமீபத்தில் விவசாயிகள் போராட்டத்திற்கு சென்று ஹரியானா விவசாயிகள் வெளியேற வேண்டும் அப்போதுதான் ஆதரவு தருவேன் இல்லையென்றால் நான் கிளம்பிவிடுவேன் .. நான் 52 வருட பார்லிமெண்டேரியன்..என பிரச்சனை செய்தது.. மேலே கூறியதுதான்.. வர வர முத்திக்கொண்டே போகிறது His mental disorder நல்ல மனநல மருத்துவரை காண்பதே சிறந்தது.. .. தோழர் ஆலஞ்சி...

Thursday, March 30, 2017

கலைஞர்...

தலைவர் கலைஞர் சட்டசபையில் இன்று வைரவிழா காண்கிறார்.1957ல் குளித்தலையில் பெற்ற வெற்றியில் கோட்டையில் தொடர்ந்து 60 ஆண்டு காலம் சட்டசபை உறுப்பினராக உள்ளார்... இது ஒரு வரலாற்று சாதனை.. Incapable of defeating .. தோற்கடிக்க முடியாத ஒன்றாகவே இவரது சட்டமன்ற வெற்றிப்பயணம் அமைந்திருக்கிறது.. .. கிள்ளியெறிந்துவிடுவேன் என்றவர்களெல்லாம் இடம்தெரியாமல் ஆக்கி தொடர்ந்து மக்களின் பிரதிநிதியாக சட்டமன்றத்தில் செயலாற்றுகிறார்.. எதிரிக்கட்சித் துணைத்தலைவர்.. அமைச்சர் முதல்வர் எதிர்க்கட்சி தலைவர் என அலங்கரித்தவர்.. இவரின் சொல்லாற்றலில் சொக்கிப்போய் எதிரிகள் கலங்கி நின்றிருக்கிறார்கள்.. நகைச்சுவையோடும்.. சுவைமாறா தமிழோடும் இவரின் வார்த்தைகளின் சிலம்பாட்டம் சீறிவரும்.. சிலநேரம் தென்றலாய் தடவிபோகும்.. திருசெந்தூர் முருகனின் வேல் காணாமல் போனது.. தகவலை யார் தந்தார்கள் என்கிறார் எம்ஜிஆர் (ம.கோ.ரா) அந்த முருகனே கொடுத்தான் என்கிறார்.. மகோரா.. முருகனின் பெயரில் யாரெல்லாம் இருக்கிறார்களோ அவர்களையெல்லாம் கைது செய்தார் அப்போதுதான் கலைஞரின் உதவியாளர் சண்முகம் கூட கைது செய்து விசாரித்தார்கள்... .. சட்டமன்றத்தில் ரகுமான்கான் மானியகோரிக்கையில் பேசிக்கொண்டே இருக்கிறார் அடுக்கடுக்காய் குற்றசாட்டுக்கள்.. எம்ஜிஆர் திணறுகிறார்.. சபாநாயகர் உடனே ரகுமான்கானை உட்கார சொல்கிறார் நேரம் முடிந்துவிட்டுதென சொல்லியும் ரகுமான் விடுவதாக இல்லை.. சொல்லி சொல்லி பார்த்து உங்களை அந்த ஆண்டவன் தான் உட்கார வைக்கவேண்டுமென்கிறார் சபாநாயகர்.. கலைஞர் உடனே எழுந்து உட்கார் என்கிறார் ரகுமான் உட்கார்ந்தார்.. சபாநாயகர் ராஜாராம் கலைஞருக்கு நன்றியை சொன்னார்.. உடனே கலைஞர் நீங்கள் தானே ஆண்டவனால்தான் முடியுமென்றீர்.. நானும் ஆண்டவன்தான் தமிழ்நாட்டை ஆண்டவன்தான் என்றார் எம்ஜிஆர் உட்பட சபையே கைத்தட்டியது.. .. கலைஞர் பெருமகன் ஆற்றிய சேவைகளை பட்டியலிட்டால் புத்தகமாகவே போடலாம்.. அருந்ததியினருக்கு இட உள்ஒதுக்கீடு.. அப்போது பேசிய கலைஞர்.. மலத்தை அள்ளும் அந்த சமூகத்திற்கான இடஒதுக்கீட்டை சபையில் அறிமுக செய்து சொன்னார் என் தலையில் வைத்து கொண்டாடுகிறேன்.. மிகவும் ஒடுக்கப்பட்ட ..இன்னும் சொல்லப்போனால் ஒடுக்கப்பட்டவர்களாலேயே புறக்கணிக்கப்பட்ட அந்த சமூகத்திற்கு ஒளியேற்றி எந்த கொள்கைக்காக திராவிடம் இயக்கம் தோன்றியதோ அதை சரியான பாதையில் செலுத்தி கவனமாக பயணித்தார்.. .. வைரவிழா காணும் கலைஞர் உடல்நலியுற்று இருக்கிறார் அந்த கம்பீரமான குரலை இப்போது கேட்கமுடியவில்லை.. அவரின் அரசியல் நகர்த்தல்களை கண்டு ரசிக்கமுடியவில்லை.. ஆனாலும் அவரின் பார்வை நம்மீதும் இந்த சமூகத்தின் மீதும் விழுந்துக்கொண்டுதானிருக்கிறது.. அவர் போட்ட பாதையில் தான் தமிழகம் செல்லும்.. சரியான தலைமை தந்துவிட்டு காலம் அவருக்கு சிறிது ஓய்வு தந்திருக்கிறது.. மீண்டும் நலிவு நீங்கி வழிகாட்டி நடத்திட வருவார்.. #இந்த_பெருமகனை_பெற்றதால்_நாம்_பெருமையடைந்தோம்.. .. #திராவிட_பெருந்தலைவர்_கலைஞர்.. .. தோழர் ஆலஞ்சி..

ஜெயலலிதாவின் மவுசு..

தீர்ப்புக்குப் பிறகும் குறையாத ஜெயலலிதாவின் மவுசு/மதிப்பு ..தந்தி டிவி .. தந்தி டிவியின் கருத்தாக இதை ஏற்போம்.. மக்களின் மனநிலையை சொல்வதாக ஏற்கமுடியாது.. ஜெயலலிதா மறைந்து போனதால் மக்களிடையே அவரைப்பற்றி அவ்வளவாக வெறுப்பு இருக்காது காரணம் இறந்தவர்களைப்பற்றி தவறாக பேசகூடாதென்கிற எண்ணம் காரணமாக இருக்கலாம்.. இரண்டு ஊடகங்கள் ஜெயலலிதாவை கிரிமினல் 1 என வலியுறுத்தி சொல்லாததும் ஒரு காரணம்.. ஆனால் வெகுமக்களிடம் ஜெயலலிதா பற்றிய எண்ணத்தில் சிறியதொரு விரிசல் விழுந்திருப்பதை தந்தி போன்ற ஊடகங்கள் மறைக்க முயல்வதோடு தூக்கி நிறுத்த போராடுகின்றன.. .. ஜெயலலிதாவிற்கும் சசிகலாவிற்கும் உள்ள வித்தியாசம் அனைவரும் அறிந்ததுதான்..சசிகலாவை அதிகாரத்தில் வரகூடாதென்று கங்கனம்கட்டி வேலைசெய்தவர்கள்.. ஜெயலலிதா முதல்வராக இருந்ததையும் ஒரு கிரிமினல் நாட்டை ஆண்டதையும் மக்களிடம் சொல்ல மறுக்கிறார்கள்.. விசாரணை முடிந்து மாதகணக்கில் கிடப்பில் போடப்பட்டிருந்த தீர்ப்பு.. பெங்களுரு உயர்நீதிமன்றத்தை விரைந்து விசாரிக்க வேண்டுமென்று பணித்த உச்சநீதிமன்றம்..விரைந்து தீர்ப்பை தந்திருந்தால் ஜெயலலிதாவும் சிறையில் களி தின்றிருப்பார்.. சசிகலாவிற்காக வேகமாக செயல்பட்டு அரசுநிர்வாகமும் அதிகாரவர்க்கமும் நீதித்துறையும்.. சமூக ஆர்வலர்கள் போர்வையில் உலாவரும் பாசிசவாதிகளும் .. ஜெயலலிதாவிற்கு விரைந்து தீர்ப்பு வழங்க கூறவுமில்லை.. அதற்கான முயற்சியும் எடுக்கவில்லை.. காரணம் ஜெயலலிதா #பாப்பாத்தி .. .. இப்போது கூட ஊடகங்கள் ஜெயலலிதாவின் மவுசை குறையாமல் பார்த்துக்கொள்ளதான் முயற்சிக்கின்றன.. பார்பனன் கொலை செய்தால் கூட.. அவனுக்கு பொன்னும் பொருளும் கொடுத்து நாடுகடத்துங்கள் என்கிற #மனுநீதி ஆட்சி செய்யும் நாட்டில்..சசிகலாக்கள் தான் தண்டனை பெறுவார்கள் .. கோமளவல்லிகள் அல்ல.. .. சசிகலா ஜெயா இருவரின் அரசியலையும் வெறுப்பவர்கள் இவருமே தமிழகத்திற்கு தீங்கானவர்கள்..என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்..இருவருமே கிரிமினல்கள் ..ஒருவரை மட்டும் புகழ்வதும் ஒருவரை தூற்றுவதுமான செயல் அருவருக்கதக்கது.. ஜெயலலிதாவின் புகழ் மங்கதொடங்கியது என்பதே உண்மை.. தந்தியின் பாண்டே மூச்சுபிடித்து நின்றாலும் காலம் கரைத்துக்கொண்டே போகும்.. #கிரிமினலாகதான்.. வரலாற்றில் எழுதபடுவார்.. #கிரிமினல்_ஜெயலலிதா_எனும்_கோமளவல்லி.. தோழர் ஆலஞ்சி..

Wednesday, March 29, 2017

மரியாதை...

இந்த படம் சில உண்மைகளை நமக்கு உணர்த்தும்.. இருவேறு கட்சி பிரதிநிதிகளோடு மாண்பிமை அமைச்சர் அருண்ஜெட்லி அவர்கள் விவசாயிகளை சந்திக்கிறார்.. ஒரு பிரிவினர் அமர வைக்கப்படுகிறார்கள்.. மற்றொரு பிரிவினர் நின்றுக்கொண்டே பேசி அனுப்பிவிடுகிறார்.. இரண்டிலும் கலந்துக்கொண்டதென்னவோ உழவர்கள் தான்.. .. திருச்சி சிவா சுயமரியாதைக்காரர்.. எப்போதும் எதிலும் கம்பீரமாக செயல்பட கூடியவர் எக்காரணத்தை கொண்டும் மரியாதைக்கு இழுக்கு வந்துவிட கூடாதென்பதில் கவனம் செலுத்துபவர். எதை எப்படி செய்தால் எவரை அணுகலாம் எப்படி இந்த பிரச்சனையை கையாளலாம் .. எப்படி அரசின் கவனத்திற்கு கொண்டுவரலாம் என்று அறிந்தவர்.. அதனால் தான் முன்கூட்டியே சந்திப்பதற்கு நேரம் கேட்டு உழவர் பெருமக்களை அழைத்துக்கொண்டு சந்திந்திருக்கிறார்.. திருச்சி சிவா சந்தித்து விட்டாரே என்ற ஒரு காரணத்திற்காக அவசரகதியில் மாண்பிமை அமைச்சரிடம் நேரம் கூட ஒதுக்காமல் அவசரமாக சந்தித்ததால் நிற்கவைத்தே பேசி அனுப்பிவிட்டார்கள்.. .. தம்பிதுரைக்கு மானம் மரியாதை இதெல்லாம் தெரியாது இத்தனை ஆண்டுகள் டெல்லியிலே குப்பை கொட்டியும் இவரால் எதாவது ஒரு மசோதாவோ.. அல்லது ஏதாவது ஒரு கவனஈர்ப்பு கொண்டுவந்து சபையின் கவனத்தை கையிலெடுக்க முடியவில்லை.. மாறாக தன் தலைமைக்கு சிறிய சங்கடம் வந்துவிட்டால் உடனே கூச்சலிட்டு சபையில் கத்தி கலாட்டா செய்ய தெரியும். இவரென்றில்லை அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்களால் தமிழகத்திற்கு..ஏதேனும் நல்லது நடந்திருக்கிறாதா.. அல்லது இந்த தமிழ் சமூகம் சார்ந்த விடயங்களில் சரியான பங்களிப்பை செய்து அரசை பணியவைக்க முடிந்திருக்கிறதா.. என்றால் இல்லை.. .. சரியான திறமையான நபர்களை அதிமுக கேர்வுசெய்து நிறுத்தாததும் ..யார் சரியானவர் நமக்கு நல்லதை செய்வார் ..இவரால் தமிழகம் பெருமைபடுமென என சிந்தித்து வாக்களிக்காமல் கண்டவர்களையும் அனுப்பிவைத்ததுதான் இவ்வளவிற்கும் காரணம்.. ஒரு சிலர் திறமையாளர்களாக.. நல்ல சிந்தனை உடையவர்களாக இருக்ககூடும் அவர்களை வாய்திறந்து பேச அதிமுக தலைமை அனுமதிருக்கவில்லை.. தாம் அழைத்துச் செல்கிறவர்களுக்கு மரியாதையை பெற்று தரவேண்டுமென்ற அடிப்படை கூட தெரியாதா.. பாவம் காலில் விழுந்து விழிந்து குனிந்து நின்றே பழகிப்போனதால்.. மானம் மரியாதையெல்லாம் என்னவென்றே அறியாமல் போனீர்கள்.. .. #மானமொன்றே பெரிதென கொண்டு வாழ்ந்தது எங்கள் சமுதாயம்.. #மறந்துபோனதோ.. .. தோழர் ஆலஞ்சி

Tuesday, March 28, 2017

காவி..

18 லிருந்து 20 மணிநேரம் வரை அரசு ஊழியர்கள் பணியாற்ற வேண்டுமாம் , அப்படி முடியாதவர்கள் விலகி கொள்ளலாம்... உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்.. .. இந்தியாவில் மன்னராட்சி வந்துவிட்டதா.அனைத்து அதிகாரமும் பெற்றவரா... அல்லது தங்களுக்கு கிடைத்த வெற்றியின் மமதை அப்படி பேசவைக்கிறதா.. அவர்களே எதிர்பார்க்காத வெற்றியை தந்தது அவர்கள் மீதுள்ள அதீத நம்பிக்கையால் அல்ல.. பிரிந்து கிடந்து தங்களுக்குள்ளே அதிகார சண்டையை பகிரங்கமாகவே செய்ததால் மக்கள் வெறுப்பை அவர்கள் (முலாயம் அகிலேஷ்) மீது காட்டியதால் மாபெரும் வெற்றியை தந்தார்கள்.. ஜனநாயகத்தில் இதுபோன்ற வன் வெற்றிகள் தலைகனத்தையே தரும்.. .. மதம் தலைக்கேறிய தலைவர்களை கொஞ்சம் கவனியுங்கள் அவர்களிடம் வெற்றியை தந்தால் இதுபோன்று நெறிகெட்ட செயலைதான் நடைமுறை படுத்துவார்கள்.. பாஜக மத்தியில் ஆட்சி பொறுப்பிற்கு வந்ததிலிருந்து காவிகளின் பேச்சை கவனியுங்கள்.. பிணத்தை தோண்டியெடுத்து கற்பழிக்க சொல்வதும் 70 சதவிகிதம் மக்கள் மாட்டுக்கறி உண்ணும் போது தடைசெய்வதும் அதற்காக கொல்வதும் .. இல்லாத ஒன்றுக்காக நாட்டின் வளர்ச்சியை தடுப்பதும் (சேது திட்டம்) .. பாஜகவை தவிர மதவெறியர்களை தவிர மற்றவர்களை தேசவிரோதிகளாக சித்தரிக்க முயல்வதும் ..தொடர்ந்து செய்திகளாக ..வருகிறது.. இதோ இப்போது நாட்டின் இறையான்மையை ஒருமைப்பாட்டை சீர்குலைக்க மோகன்பகவத் குடியரசுதலைவராக வரவேண்டுமென இப்போதே நூல்விடுகிறார்கள்.. .. தமிழகத்தில் எங்கிருந்தார்கள் என தெரியாதவர்களை எல்லாம் சமூக ஆர்வலர்.. பொருளாதார நிபுணர்.. நடுநிலையாளர் என்ற போர்வையில் விவாதங்களில் தொடர்ந்து பங்களிக்க செய்வதும்.. ராசா போன்ற அரைவேக்காடுகளை வைத்து தினம் தினம் உளறவைப்பதும்.. இதோ இப்போது கூட தமிழர்கள் சோம்பேறிகள்.. பொழுதுபோகாமல் போராடிக்கொண்டிருக்கிறார்களென தலைநகரில் போராடும் உழவர் பெருமக்களை கேலி செய்வதும் நடந்துக்கொண்டுதானியிருக்கிறது.. .. உ.பியில் என்றில்லை ஒட்டுமொத்த இந்தியாவையும் காவிகள் களேபரமாக்கி கொண்டிருக்கிறார்கள்.. அதிகாரம் கையில் இருக்குவரை ஆடதான் செய்வார்கள்.. மதம் தலைக்கேறியவர்கள்.. மக்கள் திரும்பி தாக்கும் போது இருந்த இடம் தெரியாமல் போய்விடுவார்கள்.. மதம் தலைக்கேறியவரிடம் அறிவிருக்காது சிந்கனை செயல் எல்லாம் மூடத்தனங்களால் நிரம்பி வழியும்.. சரியானதை நியாயமானதை தேர்வு செய்ய இயலாது .. மக்கள் மீதான தாக்குதல் ஒரு இரவில் பணமெல்லாம் செல்லாதென்றார்களே அதைப்போல அறிவிலித்தனமாக இருக்கும்.. அப்படியொரு அறிவிப்புதான் 18மணிமுதல் 20 மணி நேரம் உழைக்கவேண்டும்.. மதம் மடையனாக்கும்.. .. #கிறுக்கன்கள்கையில்_என்நாடு... .. தோழர் ஆலஞ்சி

திமுக...

தமிழகத்தில்.. எல்லாகட்சிகளும் தேசிய மாநில ..அங்கீகாரம் பெற்றது.. பெறாதாது. எல்லா கட்சிகளும் சொல்லும் ஒரு வார்த்தை திமுகதான் எங்கள் எதிரி.. இதிலிருந்து ஒரு உண்மை தெரிகிறது.. திமுகவை வைத்துதான் அரசியல் செய்யமுடியும் அல்லது அரசியலை சொல்லி பிழைக்கமுடியும்.. நேற்று கட்சி தொடங்கினாலும் கருணாநிதி ஒழிக என்று சொல்லிதான் துவக்கம் குறிக்கவேண்டும்... .. ஏறக்குறைய 68 கால திமுக வரலாற்றில் தமிழகத்தின் மய்யமாக திமுக சுழல்கிறது இந்த சூரியனை சுற்றிதான்..எல்லாரும் வலம் வருகிறார்கள் அவர்களின் அரசியல் வாழ்வை உறுதிசெய்ய திமுக வேண்டும்.. திராவிட இயக்கம் நூற்றாண்டை கண்டாலும் அரசியல் அங்கீகாரத்தை அதிகாரத்தை பெற்று 50 ஆண்டுகள் பின்னிட்டும்..நிறைய ஏற்றதாழ்வுகளை கட்சி சந்தித்தும்..இதோடு முடிந்தது என்ற பழைய பல்லவியை திரும்ப திரும்ப பாடினாலும்..திமுக விடும் மூச்சுகாற்றில் தான் சிலர் உயிர்வாழ்கிறார்கள்.. எல்லா கட்சிகளும் காங்கிரஸ் அதிமுக உட்பட .. பிற அமைப்பு ரீதியான கட்சிகள் தோற்றதன் பின்னில் அவர்களின் அறியாமையும் கொள்கை பிழையும் மறைந்துவிடும் கவர்ச்சியும் சரியான தலைமை இல்லாமையும்..காரணிகளாக தெரியும்.. .. திமுக இன்றும் நின்று நிலைத்து மக்களிடையே செல்வாக்கோடு இருப்பதின் காரணம்.. இங்கே உணர்வுபூர்வமாக கொள்கையால் இன மொழிஉணர்வால் ஈர்க்கப்பட்டு சாதீய மத சாயலை தவிர்த்து சமூகநீதியின்பால் அக்கறையோடு தொண்டாற்றுகிறவர்கள் அதிகம்..ஒருசிலர் முரண்பட்டிருக்கலாம் மாபெரும் இயக்கத்தில் சில வேண்டாதவைகளும் வேண்டாதவர்களும் இடம்பெறுவது இயல்பு ஆனாலும் ஒட்டுமொத்தமாக பார்த்தால் கொள்கையால் ஈர்க்கப்பட்டவர்களே அதிகம்.. .. அண்ணா மறைவிற்கு பிறகு கலைஞர் தவிர்த்து வேறுயாரேனும் நாவலர் உட்பட தலைமை பொறுப்பேற்றிருந்தால் இந்நேரம் திமுகவை சிதைத்திருப்பார்கள் கட்சியின் இக்கட்டான காலக்கட்டத்தில் கூட மக்களோடும் இயக்க தொண்டர்களோடும் தொடர்பில் இருந்தார்.. துவண்டுபோய் விழுந்தவனை தாங்கிப்பிடிக்கும் அவரது எழுத்தும் பேச்சும்.. மிகப்பெரிய தோல்வியை சந்தித்த போதும் மறுநாள் முரசொலியை தேடுவான் கலைஞர் என்ன சொல்லியிருக்கிறார் ‍. கலைஞரின் கடிதம் தான் ஊட்டசத்து.. அதுதான் கலைஞரின் வலிமை.. இன்றுவரை திமுகழகத்தை சுற்றியே அரசியலை இயக்கத்த பெருமை எம்ஆசான் கலைஞரையே சாரும். .. #இந்தநூற்றாண்டின்இணையற்ற_தலைமை.. #திராவிடபெருந்தலைவர்_கலைஞர்.. தோழர் ஆலஞ்சி

Sunday, March 26, 2017

ஜெயலலிதா..

மாலையிலேயே அம்மா இறந்துவிட்டார்கள் என்ற செய்தி பாண்டேக்கும் தெரியும் Ma Foi K Pandiarajan .. கூடவே அது ரங்கராஜ் பாண்டேவிற்கும் தெரியுமென்றார்.. அவர் அரசியல் பேசுவதாகவே வைத்துக்கொள்வோம்.. ஆனால் அப்போலோ நிர்வாகம் முதலில் ஜெயலலிதா இறந்ததாக எல்லா ஊடகங்களிலும் வந்த செய்தியை மறுத்து மருத்துவர்கள் போராடிக்கொண்டிருக்கிறார்கள் என அறிக்கை தந்ததே .. அப்படியெனில் மருத்துமனை நிர்வாக தந்த செய்தியும் பதிலும் பொய்.. ஏற்கனவே பன்னீரும் இதே செய்தியை அதாவது நாலரை மணிக்கே இறந்துவிட்டார்களென சொன்னார்.. ஒரு மாநில முதல்வரின் மரணத்தில் ஏன் இத்தனை குளறுபடிகள் இவர்கள் அதிகார சண்டையில் மெல்ல உண்மை வெளிவருகிறதே.. இவர்களுக்குள் அதிகார போட்டி வராமல் பதவி ஆசை இல்லாமல் இருந்திருந்தால் இவர்கள் இப்போது கூட இதை சொல்லபோவதில்லை.. .. என்னவொரு அயோக்கியத்தனம்.. தொடர்ந்து பதவி தந்து அதிகாரம் தந்து இவர்களை அடையாளபடுத்தியவர்.. சரியோ தவறோ திறமை இருக்கிறதோ இல்லையோ தான் விரும்புகிறவரை தூக்கிவிட்டவர்...இவர்கள் மீது எப்போதும் நம்பிக்கை இல்லாததால் தான் அடிக்கடி அமைச்சரை .. சட்டமன்ற உறுப்பினர்களை மாற்றிக்கொண்டே இருந்தார் போலும்.. ஒருவர் கூட உண்மையாக இல்லை..நம்பிக்கையானவரை நல்ல நண்பரை நான் என் வாழ்நாளில் சந்தித்ததே இல்லை என்ற அந்த பெண்மணியில் வாழ்வியல் எவ்வளவு மோசமானவர்களால் ஆக்ரமிக்கப்பட்டிருக்கவேண்டும்..யாரையும் நம்ப முடியாமல் நோயின் பிடியில் சொந்தங்கள் யாருமின்றி பதவி பண அதிகார ஆசை பிடித்தவர்களின் பிடியில் தன் இறுதிநாட்களை கழித்திருக்கிறார்.. உண்மையில் இறக்கமில்லாதவர்களின் பிடியில்.. .. ஜெயலலிதா என்ற அரசியல்வாதியின் மீது கடும் அதிருப்தி உண்டு .. அவரின் அரசியல் எக்காலகட்டத்திலும் நமக்கு ஏற்புடையதாக இல்லை கொஞ்சமும் ஜனநாயமரபுகள் இல்லாத தான்தோன்றித்தனமான, விவரகேடான,ஆட்சியை தான் தந்தார்.. அவரது தனிப்பட்ட வாழ்விலும் அரசியல் வாழ்விலும் நிறைய சோகங்களை இழப்புகளை கொண்டிருந்தார்.. அவரின் அரசியலை தவிர்த்து அவரது வாழ்க்கை மிக பரிதாபகரமானது .. வாழ்வில் ஒருவரை கூட நம்பிக்கையானவராக தேர்வு செய்யமுடியாத கொடுமை.. உறவுகள் உட்பட மிகவும் சோகமானது.. உறவின் பலம்,இறப்பில் தெரியுமென்பார்கள் அதுகூட ஜெயலலிதாவிற்கில்லாமல் போனது.. .. சரியான எதிரியை இனம்கண்ட அவரால் ஒரு நல்லவரை நம்பிக்கைக்குரியவராக இனம்கான முடியவில்லை.. நல்ல ஒரு மனிதரை /மனுஷியை கூட அவரோடு இல்லை.. எல்லாரும். நயவஞ்சகர்களாகவே,இருந்திருக்கிறார்கள்.. பாவம் வாழ்வியலில்.. #ஜெயலலிதா_தோற்றமனுஷி.. .. தோழர் ஆலஞ்சி..