Thursday, February 8, 2024

Unfit எல் முருகன்..
டி.ஆர்.பாலு தன்னை தகுதியில்லாதவன் என சொன்னதை தான் தாழ்த்தப்பட்டவன் என்பதாலேயே சொன்னதாக முருகன் புலம்புகிறார் .. தேனி எம்பி ரவீந்திரநாத் கூட முதுகெலும்பு இல்லாதவன் என்று பேசினார் அப்போது யாரும் சாதியை தூக்கி கொண்டு வரவில்லை..
..
அருந்ததியர்களுக்கு உள் ஒதுக்கீடு தந்த இயக்கம் திமுக .. மலத்தை கையிலும் தலையிலும் சுமப்போருக்கான இட ஒதுக்கீட்டை தலையில் சுமந்து கொண்டாடுகிறேன் தொடர்ந்து பள்ளத்தில் கிடப்போரை படிகளில் ஏற்றிட செயல்படுவார பகுத்தறிவு துணைக்கொண்டு என மகிழ்ந்த தலைவன் கலைஞரின் இயக்கம்.. 
ஆ.ராசா மீது அவதூறு சொன்னபோது பொட்டல்காட்டில் பூத்தமலரென பனிக்குடத்தை காப்பதால் போல காத்த இயக்கம் 
இங்கே யார் எதிரி துரோகி என அறிந்து அவன் யாராக இருந்தாலும் முகத்திரையை கிழிப்பது எங்கள் சனநாயக கடமை
..
தமிழ்நாட்டின் நலனுக்கு எதிராக செயல்படுபவன் யாராக இருந்தாலும் அவன் எந்த சாதியினர் இருந்தாலும் கவலையில்லை தோலுரிப்போம் ..
பத்திரிக்கையாளர்கள் கேள்வி கேட்டால் பதில் சொல்ல தெரியாமல் ஜெய்ஸ்ரீராம் என கூவுகிற உமக்கு இப்படிதான் பதிலடி கிடைக்கும் திருவள்ளுவனுக்கு காவி சாயம் பூசி திரிகிற உனக்கெல்லாம் என்ன தகுதி இருக்கிறது ..
..
தமிழ்நாடு துரோகிகளை இனங்கண்டு தூக்கியெறியும்  பதவிக்காக எங்கிருந்து யாரால் எந்த இயக்கத்தின் போனால், எப்பேர்ப்பட்ட தலைவர்களின் அரும் பணியால் சுயமரியாதையோடு திரிகிறோம்.. மிக மிக தாழ்த்தப்பட்டவனாக இந்த சமூகம் எப்படி வேட்டையாடியது தெருவிற்கு நுழைய முடியாத கொடுமைகளை தந்தது.. பெரியார் எனும் பெரும் மனிதனின் பெரும் உழைப்பால் திமிரோடு வலம் வர முடிகிறதே என்ற நன்றி உணர்வில்லாமல்  பேசி திரியும் தங்களை தகுதியில்லாத என்றழைப்பதில் என்ன தவறு 
#Unfit_L.Murugan
..
ஆலஞ்சியார்

Tuesday, February 6, 2024

மானமிகு சரண்யா தேவி..
அயலக திமுக குவைத் மகளிர் அணி செயலாளர் இன்று அயலக தமிழர் தினம் 2024 விழாவில் மாணபமை தமிழ்நாடு முதலமை‌ச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் விளையாட்டுத் துறைக்கான விருதும் 40கிராம் தங்க பதக்கமும் வழங்கப்பட்டது மகிழ்வான தருணம் .. குவைத்தில் சிறந்த துப்பாக்கி சுடும் வீராங்கனையாக வலம் வருபவர் முதல் பரிசை வென்றவர் தகுதியும் திறமையும் வாய்ந்தவருக்கு வழங்கப்பட்டிருப்பதில் பெரும் மகிழ்ச்சிக் கொள்கிறோம்..
..
நன்றாக நினைவிருக்கிறது குருதிக் கொடை நிகழ்ச்சியில் கைரளியர்கள்(மலையாளிகள்) கலந்துக்கொண்ட நிகழ்வு முடிந்து நமக்கான நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது அப்போது நண்பர் சிதம்பரம் தியாகராஜன் அழைத்துவந்து .. நான் தமிழச்சி என்று பெருமையாக சொன்னார்.. 
அப்போது அன்னை மணியம்மையாரின் நூற்றாண்டு விழாவை மாதாமாதம் ஒவ்வொரு அமர்வாக உலகத் தத்துவஞானி தந்தை பெரியார் நூலகம் சார்பில் நடத்திக்கொண்டிருந்த தருணம் .. அப்போது நூலகத்தின் காப்பாளர் எமது ஆசான் வளைகுடா பெரியார் செல்லபெருமாள் அவர்களிடத்தில்  அடுத்த அமர்வில் இவர் பேசட்டும் என்றேன் மகிழ்வு தெரிவித்தார் அப்படியாக தொடர்ந்த உறவு .. மேடையில் முழுவதுமாக பெண்களைக்கொண்டே ஒரு அமர்வு இப்படி எல்லா நிகழ்விலும் எங்களோடு 
 பயணித்து இன்று அயலக திமுக குவைத் மகளிர் அணிச் செயலாளராக உயர்ந்து நிற்கிறார்  ..
"நல்விதைகளை" விதைத்துக் கொண்டே இருப்போம் 
வாழ்க! திராவிடம் 
..
ஆலஞ்சியார்

Monday, January 8, 2024

திமுகவும் இஸ்லாமியர்களும்..
..
திமுக முஸ்லிம்களுக்கு எதுவுமே செய்யவில்லையென்றே வைத்துக் கொள்வோம்.. பாஜகவை காட்டி பயமுறுத்துகிறது, சிறைவாசிகளின் விடுதலை என்னானது என்ற கேள்விகளை தவிர்த்து வேறெதாவது திமுகவை வேண்டாம் என்பதற்கு காரணம் சொல்ல முடியுமா என்றால் இல்லை
..
சிறைவாசிகள் விடுதலையில் அதிமுக ஆட்சியில் எதாவது செய்ததா .. Lord ராமருக்கு இங்கு கட்டாமல் வேறெங்கு கட்டுவது என்ற ஜெயலலிதா,.. அதிமுக எதிர்த்து வாக்களித்திருந்தால் CAA சட்டமாகியிருக்காதென்ற சாதரண புரிதல் கூடவா இஸ்லாமிய சமூகத்திற்கு இல்லாமல் போனது .. இஸ்லாமியர்களுக்கு உள் ஒதுக்கீட்டை தந்த போது மதரீதியான இட ஒதுக்கீடு என விமர்சித்தவர் ஜெயலலிதா இது உச்சநீதிமன்றத்தில் நிற்காது என்று சொன்னவரும் அவர்தான்
..
உண்மையில் முஸ்லீம்கள் அரசு தரும் உதவிகளை உரிமைகளை சரியாக பயன்படுத்திக் கொள்கிறார்களா , அதற்காக 48 அமைப்புகள் முயற்சி செய்தார்களா, +2 ல் மதிப்பெண் 60% விழுக்காடுகளுக்கு மேல் வாங்கினால், மாநில அரசின் உதவி தொகை உண்டு 80% விழுக்காட்டிற்கு ஒன்றிய அரசின் உதவி தொகை உண்டு.. இந்த அமைப்புகளுக்கு எவ்வளவு உதவி தொகை என்றாவது தெரியுமா.. 2021/ 2022 கல்வி ஆண்டில் தகுதியுள்ள முஸ்லிம் மாணவச் செல்வங்கள் 63.5% விழுக்காடு உதவி தொகை பெறவில்லை அது குறித்து விழிப்புணர்வு பிரசாரம் செய்வதுண்டா..
..
திமுக அரசு வழங்கிய சலுகைகள், உரிமைகள் போல் வேறெந்த அரசாவது செய்ததுண்டா.. அரசியல் காய்நகர்த்தல்களில் யாரோடு எப்போது கூட்டணி வேண்டுமென தீர்மானிக்கிறது இஸ்லாமியர்களுக்கு மட்டுமல்ல அனைத்து சமுதாயத்திற்கும் தான் அரசு .. அயோத்திக்கு செல்லவிரும்பினால் உதவிகள் செய்யபடுமென அமைச்சர் சொன்னால் பாஜகவோடு இணைந்துவிட்டதாக சொல்பவர்கள் இஸ்லாமியர்களுக்கு அதேபோல் சலுகைகளை செய்கிற போது இநதுக்களில் பெரும்பான்மையினர் கூப்பாடு போடுவதில்லையே..
..
வேறெந்த ஆட்சியையும் விட திமுக ஆட்சிக்கு வரும் போதும் போராட்டம் கோரிக்கைகள் என எல்லோரும் தூக்கம் கலைத்து எழுகிறார்கள், இந்த அரசு செய்து தரும் என்ற நம்பிக்கையில் இப்போது கூட நீண்டநாள் சிறைவாசிகள் விடயத்தில் சட்டரீதியான நகர்வை திமுக செய்கிறது .. பாஜகவின் செயல்திட்டத்தை மிக சரியாக செய்கிற ஒரு கூட்டம் இஸ்லாமிய பொது சமுகத்தின் முன் கேவலப்பட்டு நிற்கிறது என்பது தான் உண்மை .. 
..
நிற்க..
திமுக எல்லோருக்குமான இயக்கம்,  நியாயமான கோரிக்கைகள் கேட்காமலேயே நிறைவேற்றி தரும் என்ற நம்பிக்கை முஸ்லிம்களிடத்தில் உண்டு ..  எத்தனை சூழ்ச்சி செய்தாலும் "பொய்கட்டி" ஆடினாலும், "நல்லிணக்க" நாடகம் போட்டாலும்  மதசார்பின்மை வேசம் கட்டினாலும் அரிதாரம் கலையும்.. ஏனெனில் உங்களிடம் உண்மை இல்லை ..  திமுக தவிர்த்து வேறெந்த கட்சியோடு நெருக்கம் காட்டினாலும் "விழலுக்கு இறைத்த நீர்"..
..
ஆலஞ்சியார் 
செம்மொழித் தமிழ்ப் பண்பாட்டுக் கூடல்

Saturday, January 6, 2024

"தோழி" ..
வேலைக்கு செல்லும் மகளிருக்கான தங்கும் விடுதி ..
திராவிடத்தின் சாதனைகளில் மகத்தான ஒன்று .. வெளியூர்களில் இருந்து வந்து தங்கி பணிபுரிவோர் சந்திக்கும் பிரச்சனைகளில் தலையாயது தங்கும் விடுதிகள்..
கிடைப்பதறிது கிடைத்தாலும் பாதுகாப்பு குறைபாடுகள் வசதி குறைவு அதைவிட பெரும் செலவு இவையெல்லாம் வெளியூரிலிருந்து வந்து பணிபுரியும் மகளிருக்கே தெரியும் அவர்கள் படும் கஷ்டங்கள்..
..
மாதம் ₹300 என சொற்ப தொகையில் நவீன வசதிகளும் கூடிய தங்கும் அறைகள், குறைந்த சம்பளம் ஈட்டுவோர் பெரும்பகுதியை லேடீஸ் ஹாஸ்டலுக்கு செலவிட வேண்டியிருந்தது அதிலும் ஏகப்பட்ட அழுத்தங்கள் கட்டளைகள், நிபந்தனைகள்..  அரசின் மகிளிர் தங்கும் விடுதி பெரும் பெருட்செலவை குறைப்பதற்கு பாதுகாப்பை உறுதிசெய்கிறது..
..
கருணையுள்ள முதலமைச்சர் பெணகளுக்காக அவர்கள் வளர்ச்சி சமூகத்தில் அவர்களுக்குரிய அங்கீகாரம் கல்வி வேலைவாய்ப்பில் உறுதியான நிலை என தொடர்ந்து மகளிர் மேம்பாடொன்றே லட்சியமாக கொண்டு செயல்படுகிறார்.. கல்லூரி படித்தால் மாதாமாதம் உதவி தொகை .. குடும்ப பெண்களுக்கு உரிமை தொகை என மகளிர் மேம்பட்டிற்காக சிந்திப்பதும் செயல்வடிவம் தருவதும் "பெரியாரின்" வடிவமாய் நம் முதலமைச்சர் காட்சியளிக்கிறார்.. 
..
பெரியாரை, பேரறிஞரை, பேரறிவாளனை சரியாக உள்வாங்கி திராவிட இயக்கம் எதற்காக ,யாருக்காக தொடங்கபட்டதோ அதன் உணர்ந்து மகளிர் கல்வி தரம் உயர்ந்தால் நல்ல சமுதாயம் படைத்திடலாம் என தொடர்ந்து மகளிர்க்காக கட்டணமில்லாத பயணம் தொடங்கி கட்டணமில்லா கல்வி என தன்னம்பிக்கையோடு வாழ நல்ல சமூகத்தை உருவாக்க தொடர்நது திட்டங்கள் தீட்டி தமிழ்நாட்டை மிளிர செய்கிறார் .. 
M. K. Stalin 
Chief Minister of Tamil Nadu 
..
திமுக ஆட்சி
 #முத்துவேல்கருணாநிதிஸ்டாலின் ஆட்சி 
மகளிர் முன்னேற்றத்திற்கான முகவரி 
"தோழி" பெயரிட்டு அழைப்பதில்லை தெரிகிறது திராவிடம்.. 
..
பாருக்குள்ள நல்ல நாடு எங்கள் தமிழ்நாடு.. 
..
ஆலஞ்சியார் 
செம்மொழித் தமிழ்ப் பண்பாட்டுக் கூடல்

Friday, January 5, 2024

"அப்பா சொன்னாரென
பள்ளிக்கு சென்றேன்
சில நண்பர்களை தவிர்த்தேன்,

சண்டை போட்டுக் கொண்டேன்
கல்யாணம் கட்டிக் கொண்டேன் காத்திருக்கிறேன் 
என் முறை வருமென்று"
கனிமொழியின் கவிதை ..
..
கனிமொழி கருணாநிதி ..
எளிமையான அணுகுமுறை, எதற்கும் அஞ்சா துணிச்சல்,கொள்கை தெளிவு, அரசியல் புரிதல், நேர்பட பேசும் ஒழுங்கு, தலைச்சிறந்த தலைவரின் மகள் என்ற அகந்தையில்லாமை , தலைமைக்கு கட்டுப்படும் பண்பு, கனிவான பார்வை, எதிரிகளை இன்முகத்தோடு அடித்தமர்த்தும் ஆளுமை என தமிழ்நாட்டின் சிறந்த தலைவர்களில் ஒருவராக திகழ்கிறார்.. கனிவு,திடம், மனவலிமை,முற்போக்கு சிந்தனை இவையனைத்தும் கொண்ட பகுத்தறிவாளர் கனிமொழி.. 
..
கலைஞர் தன் இலக்கிய வாரிசு என சொன்னவர் அரசியலில்  "கவிஞர்" கனிமொழி கருணாநிதி என விளித்து அறிமுகம் செய்தார் 
அரசியலில் இலக்கியமாய் திகழ்கிறார் கனிமொழி.. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினராக வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார் முதல்முறை மாநிலங்களவைக்கு சென்றாலும் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதியாக வேண்டும் மக்கள் செல்வாக்கில் வெற்றி பெற வேண்டும் என தூத்துக்குடியை தேர்வு செய்து மக்களோடு கலந்தார்.. 
..
தன் தொகுதி மக்கள் குறைகளை கேட்டு உடனுக்குடன் நிவர்த்தி செய்வதும் இந்த பேரிடரில் நான் இருக்கிறேன் நம்பிக்கையை தந்ததும் மூழ்கும் நிலை வந்தாலும் நானும் வருவேன் என தண்ணீரில் இறங்கி நிவாரணப்பணிகளை செய்து நன்மதிப்பை பெற்றார்..
கலைஞரின் குணத்தை கண்டேன் 
உயர்சாதியினருக்கான பொருளாதார இட ஒதுக்கீட்டை ஆதரித்து பேசிய தோழர் ரங்கராஜனுக்கு எதிராய் சினம் கொண்டு நின்ற போது போராளியாய் காட்சிதந்த போது பெரியாரின் பெயர்த்தியை கண்டேன்..
..
சிறந்த சனநாயகவாதியாக, பேச்சில் நாகரீகமும்,நயமும் பழுத்த அரசியல்வாதியைப் போல நேர்த்தியாக அதேவேளை கொள்கை உறுதியோடு மக்கள் நலன் சார்ந்து இனம் மொழி கலை பண்பாட்டில் நின்று முரசொலிக்கும் மங்கை.. பெண்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதை கேள்வி கேட்க தவறியதில்லை.. சமைப்பீர்களா  என கேட்டவரை நோக்கி 
ஏன் இந்த கேள்வியை ஆண்களை பார்த்து கேட்பதில்லை அப்பாவை (கலைஞர்) பார்த்து, என் அண்ணனை பார்த்து கேட்பதில்லை என தைரியமாக பெண்ணியம் பேசிய பெருமைக்குரியவர் ..
..
மிகச்சிறந்த நாடாளுமன்றவாதியாய், மக்கள் பிரச்சனையில் வாதிட தயங்காதவர், சிரித்துக் கொண்டே செம்மட்டியடி அடிப்பதில் அப்பனைப்போல.. அரசியலில் இன்னமும் பெண்களுக்கு போதிய அங்கீகாரம், அதிகாரம் கிடைக்கவில்லை என்பதறிந்து 
தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம், திராவிடம் பேசும் இயக்கங்கள்  கூட இன்னமும் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம், அதிகாரத்தை அலங்கரிக்க செய்யவில்லை என்ற உண்மையை ஒப்புக்கொள்ளதான் வேண்டும்.. வாய்ப்பு கிடைக்கும் ஒருசிலரையும் "ஆண்" வழி நடத்தும் நிலை மாற வேண்டும்.. 
..
கனிமொழி இயக்கத்தின் மிக முக்கிய பொறுப்புகளை அடைய வேண்டும்.. 
காலம் கனியும் 
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் 
கனிமொழி 
Kanimozhi Karunanidhi 
..
ஆலஞ்சியார் 
செம்மொழித் தமிழ்ப் பண்பாட்டுக் கூடல்

Thursday, January 4, 2024

பெண்கள் கைகளிலிருந்து கரண்டியை பிடிங்கிக் கொண்டு புத்தகத்தை கொடுங்கள்..பெரியார்
அதோடு நிற்கவில்லை உங்கள் ஆண் குழந்தைகளை படிக்க வைக்காவிட்டாலும் பெண்குழந்தைகளை படிக்கவையுஙகள் அதற்காக வசதி உங்களூரில் இல்லையென்றால் வெளியூர் சென்று கூலி வேலை செய்தாவது படிக்க வையுங்கள் என்றார்..
..
பெரியார் வழிதோன்றல்கள் பெண்கள் கல்விக்கு மிகுந்த முக்கியத்துவம் தந்தார்கள்..  முதலில் எட்டாவது வரை படி திருமண நிதி தருகிறேன்.. பிறகு 12 வது வரை படி .. கல்லூரிக்கு வா கட்டணமில்லா கல்வி தருகிறேன் என்றவர்கள் இதோ மாதாமாதம் ₹1000 கல்லூரி மாணவிகளுக்கு ஊக்கதொகை என விரிவுபடுத்தி  பெண்களின் உயர்கல்வியை உறுதி செய்தார்கள் .. பெரியாரின் நேரடி சீடன் கலைஞர் எனும் பேரருளாளனின் சிந்தையில் செயலில் நடந்ததுதான்  இவையெல்லாம்..இன்று பெண் குழந்தைகள் பெரியளவில் பட்டம் பெற காரணம்,தமிழ்நாடு கல்வியில் முதன்மை மாநில திகழ காரணம் திராவிடத்தின் ஆட்சி..
.. 
உண்மையில் இன்று பெரியாருக்கு ஜே என கத்தியிருக்க வேண்டும் மத்திய அமைச்சர் எல்.முருகன் .. அவர் சுயமரியாதையோடு வலம் வர காரணமானவர் திராவிட ஆசான் பெரியார் தான்.. இல்லையெனில் வடமாநிலங்களை போல கட்டிவைத்திருப்பார்கள்.. தெருவில் நடமாட விடமாட்டார்கள் .. தமிழ்நாடு கல்வியில் மட்டுமல்ல தனிமனித சுதந்திரத்தை மானத்தை மரியாதையை பெற்று தந்திருக்கிறது அதற்கு முழுமுதல் காரணம் தந்தை பெரியார் ..
..
இன்றைய பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் மாண்பமை இந்திய ஒன்றிய பிரதமர் கலந்துக்கொணடு தமிழ் நாட்டின் பெண்கல்வி புரட்சியை கண்டிருப்பார்.. இதில் குறிப்பிடத்தக்க விடயம் இஸ்லாமிய பெண்கள் பெருமளவில் பட்டம் பெற்றார்கள் அவர்கள் ஹிஜாப் அணிந்திருந்தனர்.. இங்கே கட்டுபாடுகள் என்ற பெயரில் மத துவேசம் இல்லை அவரவர் கோட்பாடுகளை பின்பற்றலாம் அதற்கு இடைஞ்சல் தருவது அரசின் வேலையில்லை..
..
குறிப்பாக முஸ்லிம் சமுகத்தில் பெண்களின் கல்வி பல்வேறு காரணங்களை காட்டி அடிப்படைவாதிகளால் மறைமுக தடை செய்தும் கணிசமான அளவில் பெண்குழந்தைகள் உயர்கல்வி பெறுவது நல்ல மாற்றத்திற்கு வழிவகுக்கிறது.. எல்லா சமூகங்களிலும் பெண்கல்வி குறித்த தாழ்வுநிலை இருந்தாலும் அதையெல்லாம் மீறி பெண் குழந்தைகள் உயர்கல்வியை நோக்கி வர தொடங்கியிருப்பதற்கு திராவிட அரசுகளின் பங்கு கணிசமானது .. இதெல்லாம் தெரிந்தும் சிலர் திராவிடம் என்ன செய்தது என சொரிந்துக் கொள்கிறார்கள்..
..
பெண்களைப் பற்றி 
"நிற்கையில் நீ நிமிர்ந்து நிற்பாய் குன்றத்தைப் போல" .. பாரதிதாசன் சொல்வார்.. 
..
பெண்ணே!
உயர பற உலகம் உனது
ஆலஞ்சியார் 

செம்மொழித் தமிழ்ப் பண்பாட்டுக் கூடல்

Thursday, December 28, 2023

விஜயகாந்த் 
இவரைப் பற்றி பேச துவங்கினாலே இப்ராகிம் ராவுத்தர் ஞாபகம் வருகிறது .. மதுரையில் ரைஸ்மில்லை பாரத்துக்கொண்டிருந்தவரை சினிமா ஆசையை அறிந்து சென்னை அழைத்த வந்தவர்..
..
ஆரமபகாலங்களில் அவரை கேலிசெய்தவர்களின் அலுவலகம் சென்று சண்டை போட்டவர்.. நடித்தால் கதாநாயகனாக நடி என இல்லையென்றால் வேண்டாம் என்றவர்.. விஜயகாந்த் மார்க்கெட் கொஞ்சம் சரிந்த போது ராவுத்தர் பிலிம்ஸ்  என்ற கம்பெனியை உருவாக்கி வெற்றி படங்களை தந்தவர் .. அன்றைக்கு கும்பகோணம் யூகிசேது வின் தந்தையிடம் பைனான்ஸ் பெற்று படங்களை தயாரித்தார் விஜயகாந்திற்காக தானே பைனான்ஸ் கம்பெனியில் கடனுக்கு கையெழுத்திட்டு பணம் பெற்று புதிய இயக்குனர்களை கொண்டு வெற்றி படங்களை தந்து விஜயகாந்தின் வெற்றிக்கு வழிவகுத்தவர் ..  நட்பிற்கு எடுத்துக்காட்டாய் விளங்கிய மனிதர் தனக்கு கல்யாணம் ஆனால் விஜயகாந்தை பிரிய நேரிடுமோ என கல்யாணம் செய்தக் கொள்ளாதவர் இப்ராகிம்
..
ராவுத்தர் பிலிம்ஸில் தினமும் சாப்பாடு போட்டார், வெள்ளிக்கிழமை பிரியாணி என வருகிறவர்களுக்கு சாப்பாடு போட்டவர் இதெல்லாம் ராவுத்தர் பிரிவதற்கு முன்பு வரை நடந்தது.. தனக்கான வாழாமல் தன் நண்பனுக்காக வாழ்ந்தவர்
கடைசி காலத்தில் நோயின் பிடியில் இருந்த போது கூட விஜயகாந்த் அருகில் வைத்துக்கொள்ளவில்லை..  விஜயகாந்த் சினிமாவிற்கு வருவதற்கு முதன்மை காரணமானவர் ,
விஜயகாந்த் வாழ்வில் ஒளியேற்றியவர் இப்ராகிம் ராவுத்தர்  ஏனோ இந்நாளில் நினைவில் வந்தார் 
..
ஆலஞ்சியார்