Friday, July 16, 2021

ஆட்சி பொறுப்பேற்று இரண்டே மாதங்களில் இந்தியாவின் தலைசிறந்த முதல்வர்கள் பட்டியலில் முதலிடம் பெறுவதென்பது சாதாரண காரியமில்லை கடின உழைப்பு தகுதியான அமைச்சர்கள், அதிகாரிகள் என நிர்வாகத்தின் திறன்காட்டி இந்திய ஒன்றியமே உற்றுநோக்க வைத்திருக்கிறார்
தமிழ்நாட்டின் முதலமைச்சர் மாண்பிமை ஸ்டாலின் அவர்கள் 
மகிழ்கிறோம்..
..
வாக்களித்தவர்கள் மட்டுமல்ல எதிர்த்தவர்களும் சிறந்த ஆட்சியென புகழதக்கவகையில் நல்லாட்சியை தந்து தமிழகத்தை உயர்த்தி நிறுத்தியிருக்கிறார்.. ஆட்சிபொறுப்பிற்கு வந்த போது பெருந்தொற்றின் பிடியில் தமிழகம் சிக்கி சீரழிந்துக்கொண்டிருந்தது அதிமுக  மடையர்களின் ஆட்சியில் நிர்வாக குளறுபடிகள் ,கொரோனா வயதானவருக்குதான் வருமென எள்ளிநகையாடி தன் "ஆண்டைகளின்" மனம்குளிற தமிழகத்தை குட்டிசுவராக்கி நிறுத்தியிருந்தார்கள் .. அரைகுறைகள் கால்நக்கிகள் தமிழ்நாடு அரசின் நிர்வாகத்தை ஒன்றிய அரசிடம் கொடுத்துவிட்டு கைப்பிள்ளையாக இருந்தார்கள் .. தடுப்பூசி போடுவதில் கூட 13% வீணாக்கி இந்தியாவிலேயே தமிழ்நாட்டை தலைகுனிய வைத்தார்கள் ..மக்கள் தீர்ப்பில் மகத்தான வெற்றியோடு அறியணையேறிய தளபதி அவர்கள் கொரோனாவை வென்றால் தான் எனக்கு நிம்மதி என அரசு நிர்வாகத்தை முடுக்கிவிட்டு தொடர்ந்து கண்காணித்து தொடக்கத்தில் 30,000 தொட்ட கொரோனை தொற்றை 2400 க்குள் கட்டுபடுத்தியிருக்கிறார்..
..
ஆட்சி பொறுப்பேற்றவுடன் கொரோனாகால உதவிதொகை வழங்கல் மகளிர் கட்டணமில்லா பேருந்து பயணம் என சமூகநீதியோடு ஆட்சி செய்கிறார் "அப்பனைப்போல்"அதிகாலையே
 எழுந்து அமைச்சர்களை அதிகாரிகளை அழைத்து வேலைவாங்குகிறார் .. அதிமுக ஆட்சியென்றால் சும்மா இருந்தாலே போதும் திமுக ஆட்சியென்றால் துரிதமாக வேலை செய்யவேண்டும்  என அதிகாரிகளே சொல்கிறார்கள்..
ஒரு அரசு எப்படி செயல்படவேண்டுமென திமுக ஒன்றியத்திற்கே வழிகாட்டியிருக்கிறது..
..
குடிதழீஇக் கோலோச்சும் மாநில மன்னன்
அடிதழீஇ நிற்கும் உலகு..
என்றான் வள்ளுவன்.. 
குடிமக்களை அரவணைத்து ஆட்சி நடத்தும் நல்லரசின் அடிச்சுவட்டை நானிலமே போற்றி நிற்கும்..
ஆம் இது குடிமக்களுக்கான ஆட்சி
வந்தேறிகள் இம்மண்ணில் இட்ட எச்சங்களையெல்லாம் துடைத்தெறிந்து மண்ணின் பெருமையை இனத்தின் உரிமையை நிலைநாட்டி பாகுபாடற்ற சமத்துவ சமூகநீதியை பறைசாற்றும் ஆட்சி.. இங்கே பகைவரும் பிரமித்துநிற்கிறார் .. செயலால் எம் முதல்வர் தமிழனை தலைநிமிர செய்தது கண்டு .. உழைப்பும் நேர்மையும் நெஞ்சுரமும் அஞ்சாமையும் கண்டு எதிரிகள் வாயடைத்து நிற்கிறார்கள் .. அதிவேக படையோட்டம் நல்ல நிர்வாகதிறமையாளர்கள் அதிலும் நேர்மையான அரசின் தலைவர் தலைமையில் பணியாற்றுவதால் தமிழகம் மிளிர்கிறது..
..
கலைஞரின் தமிழெடுத்து சொல்கிறேன் ..
யாரேனும்  கண்டதுண்டா..
யாரேனும் கேட்டதுண்டா
ஆட்சிக்கு வந்து 60வதே நாட்களில்
தமிழகத்தை இந்திய ஒன்றிய மாநிலங்களில் முதன்மையாக்கிய வரலாற்றை யாரேனும் கண்டதுண்டா.. புதிய ஆட்சிக்கு நூறுநாளேனும் அவகாசம் வேண்டும்.. ஆனால் 60 நாட்களில் இந்தியாவின் நம்பர் ஒன் முதல்வர் 
என பெயரெடுத்திருக்கிறார்..
இன்னும் நிறைய பணிகள் காத்திருக்கிறது.. 
கடந்த அடிமை அதிமுகஆட்சியின் ஊழலை வெளிகொணர்ந்து படுபாவிகளை புழலுக்குள் அனுப்பும் வேண்டும் .. அடிமைகளால் தமிழகம் இழந்த உரிமைகளை மீட்டெடுக்க வேண்டும் .. 
..
எழுதி வைத்துக்கொள்ளுங்கள் இன்னும் கால்நூற்றாண்டு திமுகதான் ஆட்சியமைக்கும் .. இதுமட்டும் நடந்துவிட்டால் போதும் நாம் நம் தலைமுறைகள் நூறாண்டு நிம்மதியாய் வாழும் 
வாழ்த்துகள் @cmotamilnadu
முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்
..
ஆலஞ்சியார்
..

Wednesday, July 14, 2021

என்னதான் பிரச்சனை யார் பெரியவன் என்பதிலா .. யாருமே பெரியவனில்லை என்ற இறை கோட்பாட்டை இவர்கள் நம்புவதில்லையோ.. தமிழக முஸ்லிம்கள் ஒற்றுமை என்பது எப்போதும் சாத்தியபடாத அறுந்து விழகூடிய நூலிழையில் இருப்பதைதான் காணமுடிகிறது .. விடுதலை இந்தியாவில் ஒன்றியத்தின் தலைமையை சுட்டிகாட்டுகிற இடத்தில் இருந்த சமூகம் இன்று 48 பிரிவுகளாய் .. எல்லோருமே தன்னை முன்னிலைபடுத்த நினைப்பதால் சரிநிகரானவரை ஏற்பதோ அல்லது வரும் தலைமுறை தனக்குள் தலைவனை கண்டெத்த நினைப்பதையோ விரும்புவதில்லை..  இந்திய ஒன்றிய அரசியலை உற்றுநோக்கவைத்த மாபெரும் தலைவர்களை உருவாக்கிய சமுதாயம்  "ஒன்றுபடல்" என்பதை மறந்து தனித்தனி ஆவர்த்தனம் செய்து கூக்குரலாய் செவியடைக்க செய்கிறார்கள்..
..
சொத்து தகராறு என இதை சமுதாயம் கண்டுக்கொள்ளாமல் விட்டால் வரும்காலங்களில் நிறைய விலை கொடுக்கவேண்டிவரும்..
எங்கே விழுந்தது சமுதாயம் என ஆய்வுக்கு உட்படுத்தவேண்டிய காலம் வந்துவிட்டது .. வீணாய் அரசியல்கட்சிகள் மீது பழிசுமத்தி அரசியல் செய்வதும், தங்களுக்குள் அடித்துக்கொள்வதும் சமுக பிரச்சனைக்களுக்கு தீர்வாகாது .. இஸ்லாமிய அமைப்புகளில் இளைஞர்கள் பெருமளவில் இருக்கிறார்கள் .. ஏதோ சமுதாயத்திற்கு நல்லது செய்வதாக எண்ணி "வழிகேடர்களாக" மாறிவரும் துயரம் தொடர்கதையாகிறது . சட்டென்று உணர்ச்சிவயபடுதலும் பிற சமூகத்தை குறைவாக எடைபோடுவதும் உள்ளில் தீ வளர்த்து பகைஉணர்வை வெளிகாட்டுவதும் ஏதோ இவர்கள் தான் இஸ்லாத்தை காக்கவந்தவர்கள் முஸ்லீம்களின் காவலர்கள் என நம்பி வீணாவதும் தொடர்ந்து பார்த்துக் கொண்டுதானிருக்கிறோம்..
சமுதாயம் பிரிந்து கிடப்பதும் தாங்களே பூரண இஸ்லாத்தை கடைபிடிப்பவர்கள் என கதைவிடுவதும் ..ஏதோ இவர்களால் தான் இஸ்லாம் நமக்கெல்லாம் புரிந்ததுபோலவும் மண்சார்ந்த கலாச்சாரத்தை புறக்கணித்து அரேபிய கலாச்சாரத்தை திணித்துக்கொண்டதும் தொடர்ந்து சம்பூர்ண இஸ்லாம் என சொல்லி கடைசியில் ஒழுக்ககேட்டில் நின்று ஊர்சிரித்ததும் நாம் கண்டதுதான் 
..
உண்மையில் தமிழக முஸ்லிம்கள் அரசியல்படுத்தபடவில்லை .. மிகப்பெரிய நாட்டில் தங்களுக்கான அரசியல் எதுவென்ற புரிதல் கூட இல்லை.. பிரதான பகையை அறிந்திருந்தவர்கள் யாரை துணைக்கழைத்து சண்டைபோடவேண்டும் என்ற அறிவில்லை .. தாய்சபையை இன்று வலுவிழக்க இந்திய முஸ்லிம்களே காரணம்..இதே அதிகார போட்டிதான் முன்பும் நடந்தது .. (இபுறாகிம் சுலைமான் சேட் / பனாத்வாலா என்ற மௌன போர் 
சமுதாயம் கண்டதுதான் .. தமிழகத்தில் அப்துல்சமது /அப்துல் லத்தீப்) 
..
இஸ்லாமியர்கள்
கல்வி வேலைவாய்ப்பை சரியாக பயன்படுத்தவில்லை .. அரசுதுறையில் விரல்விட்டு எண்ணிவிடலாம் .. ஒவ்வொரு துறையிலும் முஸ்லிம்களின் இடஒதுக்கீடு கூட நிரப்ப ஆளிலில்லை.. இத்தனை அமைப்புகள் இருந்தும்   ஒன்றிய மற்றும் மாநில அரசின் உதவிகள்
மானியங்கள் மாணவர்களுக்கு கிடைத்ததா என்றால் பதில் இல்லை.. இவர்கள் சமுதாயத்திற்கு
பலன் தருபவர்கள் அல்ல.. சமுதாயத்தை வைத்து புகழில் தேட நினைப்பவர்கள் ..
..
முஸ்லிம்களே இனியேனும் இவர்கள் புறக்கணியுங்கள் .. காங்கிரஸ் திமுக ,பொதுவுடமை இயக்கம் போன்ற கட்சிகள் இணைந்து செயலாற்றுங்கள் உங்களுக்குரிய பிரதித்துவம் கிடைக்கும் .. முதலில் அரசியல் வேறு, வழிபாடு_கோட்பாடு வேறு என்பதை உணருங்கள் .. இங்கே பெருபான்மையோடு இணைந்தே சாதிக்க முடியும் என்ற உண்மை புரிந்தால் நமக்கானதை நாமே தீர்மானிக்கும் சக்தியாக உருவெடுக்கலாம் .. பொது அரசியலில் மதம் சாதி வேறுபாடு இவையெல்லாம் ஒரு குறிப்பிட்ட காலம் வரை கைகொடுக்கும் பிறகு மெல்ல காவு வாங்கும்.. 
..
உங்களுக்கு யார் பகைவரென தெளிவாக தெரிகிறது உங்கள் சித்தாத்தத்தின் எதிரி யார்.. உங்கள் மீது வெறியோடு கலகம் செய்ய துடிப்பவர் யார் என்ற புரிதல் இருக்கிறது .. ஆனால் யாரோடு இணைந்து செயல்படவேண்டும் யார் நமக்கானவர் .. நம் தேவைகளை உரிமையோடு யாரிடம் கேட்டு பெறலாம் நமக்கான உரிமைகளை யாரோடு இணைந்து போராடி பெறுவது என்ற தெளிவும் அறிவும் இல்லை .. இனியேனும் தெருவில் அடித்துக்கொண்டோ, கத்தி கூச்சலிட்டோ, சற்றென்று உணர்ச்சிவயபட்டு பிறசமூகத்தை மீது வன்மத்தை கக்கியோ வாழ்வை இழக்காமல், நல்லதொரு விடியலுக்காக அரசியலை தேர்வு செய்யுங்கள் .. 48 அமைப்புகளாக இருப்பதில் ஒரு பலனுமில்லை என்ற உண்மை விளங்கினால் 
சமுதாயம் விடியல் பெறும் 
..
ஆலஞ்சியார்

Sunday, July 11, 2021

ரஜினி மக்கள் மன்றம் கலைப்பு..
இனி ரசிகர் மன்றமாக செயல்படும்,
ரஜினிகாந்த்..
..
நடிகர் ரஜினி நல்ல நடிகரா என்பதைவிட நல்ல வியாபாரி தன்னை நம்பி படமெடுப்பவர்கள் கைகாசை இழந்துவிட கூடாதென்பதில் கவனமாக இருப்பார் .. தான் ஒரு படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டால் தனக்கான பாத்திரத்தில் தன் ரசிகர்கள் எதிர்பார்ப்பதை தர கடுமையாக முயற்சிப்பார் .. இயக்குனரின் வேலையில் தலையிடுவதில்லை தன் மேதாவித்தனத்தை காட்ட நினைத்து தயாரிப்பாளரை தெருவில் நிறுத்துவதில்லை தனக்கான புகழ் தன் நடிப்பால் திறமையால் மக்கள் விரும்பத்தால் தன் செய்கையால் கிடைத்திட்டதாக இருக்கவேண்டுமென எண்ணுபவர்.. கமலை போல தயாரிப்பாளரை நடுதெருவில் நிறுத்துபவர் அல்ல .. போட்டகாசு கிடைக்க வேண்டும் என்பதில் கவனமாக இருப்பவர்.. தொடர்ந்து வெற்றிபடங்களை தந்து 70 வயதில் வியாபார ரீதியாக உச்சத்தில் இருப்பவர் ..தன் படம் வரும் போதெல்லாம் பரபரப்பாக எதையாவது செய்து படம்பற்றி பேசவைப்பவர் ..
..
அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என நீண்ட நாட்களாக தமிழகத்தின் பேசுபொருளாக தன்னை நிறுத்தி 
தன்னை தன்னை நம்பி பணம்போட்டவரை மகிழ்வில் ஆழ்த்தியவர் .. ரஜினி நல்ல நடிகரா என்றால் தெரியாது ஆனால் மக்களை "மகிழ்விக்கும் கலைஞன்"  சிறுவர்கள் முதல் கிழவர்கள் வரை அவரின் சேட்டைகளை ரசிப்பார்கள் ..ஒரு கலைஞன் தன்னை விட மக்களை மகிழ்விப்பவனாக இருத்தல் வேண்டும் மிகப்பெரியளவில் அவரால் மகிழ்விக்க முடியவில்லையென்றாலும் இன்றைக்கும் அவரால் வெற்றிபெற முடிகிறதென்றால் மக்கள் விரும்புகிற கலைஞனாக இருக்கிறார் என்பதில் மாற்று கருத்தே இல்லை..
..
அரசியல் அவ்வப்போது ஆசை வரும்.. கூட இருப்பவர்களின் பேராசையும் கூட வரும் .. இவரை புகழ்ந்து இரையும் ஒரு கூட்டம் உச்சத்தில் நிறுத்துவதாக நம்பவைக்க முயற்சிக்கும்.. கூடவே தன் படம் வெற்றியடைய வேண்டும் என்பதற்காக பரபரப்பாக எதையாவது செய்தாக வேண்டும் என்ற சூழ்நிலைகைதியாய் நிற்க வேண்டிவரும் இதோ வந்துவிட்டார் என ஊடக வெளிச்சம் மதிமயங்க வைக்கும் சற்றென்று அறிவு விழித்துக்கொண்டு இருப்பதை இழக்காதே என எச்சரிக்கும் இதற்கிடையில் அடுத்தபட தயாரிப்பு வரும் இப்படியாக பொதுவாழ்வு காமெடிகள் வந்துக்கொண்டே இருக்கும் அதற்கு முற்றுபுள்ளி வைத்திருக்கிறார் .. நன்று ரஜினி அவர்களே .. சிலர் பேச்சை கேட்டு 
அரசியலுக்கு வந்திருந்தால் இதுவரை கட்டிகாத்த பிம்பம் சிதைந்துபோயிருக்கும் கைகாசும் போய் பெயரும் புகழும் கெட்டுவிடும் ..  வேறெங்கும் செல்லதேவையில்லை தொடர்ந்து உங்களோடு திரையில் நேரெதிராய் போட்டி போடும் கமல் அரசியலில் கால்பதித்து தோல்வியும்
கொஞ்சம் கொஞ்சமாய் கட்சியும்  கரைந்து யாருக்கும் வேண்டாதவராய் நிற்கிறார் ஆனால் ரஜினி அவர்களே உங்களின் தெளிவு கமலுக்கில்லாமல் போய்விட்டது .. சினிமாகாரனை நம்பிய காலம் அந்த மோகமெல்லாம் போய் வெகுகாலமாகிவிட்டது ..தொடர்ந்து உழைக்க வேண்டும் எப்படியெனில் உதயநிதியை போல .. மக்களோடு பயணிக்கவேண்டும் அவர்கள் குறைகளை கேட்டு அவருக்கு நானிருக்கிறேன் என்ற நம்பிக்கையை விதைக்கவேண்டும் இவை சரியான வயதில் தொடங்கியிருக்கவேண்டும் காலம்போன காலத்தில் கல்யாணம் கட்டி  என்னபயன்..? 
..
ரஜினியின் முடிவு அவருக்கு நல்லது அரசியல் வந்து மானங்கெட்டு போகாமல் நல்ல கலைஞனாக நம்மை மகிழ்விப்பதென முடிவெடுத்திருக்கிறார்..
25 வருடங்களாக வருவாரா மாட்டாரா என்ற ஆருடத்திற்கு முற்றுபுள்ளி வர ஒருவகையில் காரணம் தளபதியார்..
இனி 25 ஆண்டுகளுக்கு  யாரும்  முதல்வர் கனவில் அரசியலுக்கு வர இயலாதவாறு உழைக்கிறார் .. தமிழகத்தை கிறுக்கர்களிடமிருந்து மீட்டு புதிய பாதையில் தமிழகத்தை வழிநடத்துகிறார் 
அதை அறிந்து மௌனமாய் வெளியேறுவது நல்லதென அரசியலுக்கு வருவதில்லையென ரஜினி முடிவெடுத்திருக்கிறார் நன்று..
மகிழ்ச்சி..
..
ஆலஞ்சியார்

Friday, July 9, 2021

ஐ.லியோனி தமிழ்நாடு பாடநூல் நிறுவனத்தின் தலைவராக தமிழ்நாட்டின் அரசால் நியமிக்கபட்டவுடன் சிலர் கலவரபடுகிறார்கள் .. சாதிவெறியர் ராமதாஸும் மகன் அன்புணியும் அவர் பெண்களை இழிவுபடுத்தி பேசியவர் எனவும் பட்டிமன்ற பேச்சாளர் அவருக்கென்ன தெரியும் என்றெல்லாம் பேசுவது வேடிக்கையாகயிருக்கிறது
அவர் ஆசிரியராக அதிலும் நல்லாசிரியராக இருந்தவர் .. நகைச்சுவையாக பேசுகிறவர் என்பதற்காக அவரை குறைவாக எடைபோடுகிறார்கள் .. மிக தகுதிவாய்ந்தவர்களில் ஓருவர் அவரின் செயல்பாடுகள் நமக்கு நிச்சயம் உணர்த்தும்..
..
முதலில் பொதுவாழ்விற்கே தகுதியில்லாத ராமதாஸ் அரசியலை வியாபாரமாக்கி  மாறிமாறி பேசி பெற்றதாயை கூட கேவலமாக பேசும் ..வாய் திறந்தாலே பொய் பேசி திரியும் ஒவ்வொருமுறையும் உண்மையாக நடந்துகொள்ளாத கேடுகெட்ட அரசியல்வாதி விமர்சிப்பதுதான் கொடுமை.. திராவிடகட்சிகளோடு கூட்டணியே இனி இல்லை என எழுதி தரட்டுமா என்றவர் கடைசியில் திராவிடக்கட்சியின் காலடியில் கிடப்பவர் ,பதவி பணத்திற்காக சொந்த சமூக மக்களேயே ரௌடிகளாக வளர்த்தெடுப்பவர் கல்வி விடயத்தில் கருத்துச் சொல்வது வேடிக்கை..
..
யாரை தலைவராக நியமிக்க வேண்டுமென்கிறார் ..  மாடு திருடுகிறவர்களையா.. அல்லது குடிசை கொளுத்திகளையா ..
திராவிட சிந்தனைகளை ஏற்று பகுத்தறிவால் நல்ல கருத்துகளை தன் நகைச்சுவையால் மக்கள் மனதில் விதைக்கும் லியோனி போன்றவர்களை நியமிப்பதுதானே சரி.. இனி  மத்திய அரசென்பதை ஒன்றிய அரசென கற்பிக்க வகைசெய்யபடும் என்றவுடன் புத்திலிருந்து கள்ளெலிகள் வெளிவருகின்றன.. யாரை நியமிக்க வேண்டும் மூன்றாவதுபடித்த குமாரை நியமித்தாரே எம்ஜிஆர் அதைப்போல அல்லது தற்போதைய ராமதாஸின் ரட்ஷகன் மோடி  திருமதி.ஸ்மிருதியை நியமித்தாரே
,அதைபோலவா.. அதுசரி சாதி சான்றிதழை மாற்றி டாக்ரானவருக்கு இதெல்லாம் சகஜம் தான் .. என்ன படித்தார் யாரோடு படித்தாரென யாருக்குமே தெரியாதவர் ஒன்றியத்தின் பிரதமராக இருப்பதும் அவரை புகழ்ந்து மகனுக்கு மகுடம்சூட்ட நினைப்பவருக்கு லியோனியின் நியமனம் கசக்கதான் செய்யும்.. 
உதவிகேட்டுவந்த பெண்ணை கர்ப்பமாக்கயதை, ஐந்துவருடம் ஒருபெண்ணை திருமணம் செய்வதாக சொல்லி கர்ப்பத்தை கலைக்க சொன்னதை இவர் கேட்கமாட்டார் .. ஆனால் எப்போதோ இடுப்பை பற்றி சொன்னதை பிடித்துக்கொண்டு கத்திக்கொண்டிருக்கிறார் ..
..
அரசியலின்  அழுக்குகள் இவர்கள் தமிழகத்தின் அவமான சின்னங்கள் சமூகநீதி காத்துநிற்கும் மண்ணில் மதவெறியின் நுழைவுவாயிலாய் சாதியை தூக்கி திரியும் கழிசடைகள் .. தன் பிறப்பையே மறைத்து மருத்துவ படிப்பை முடித்தவரெல்லாம் சமுதாய நலனை பேசுவது காலகொடுமை
..
ஆலஞ்சியார்

Wednesday, July 7, 2021

ஒன்றிய அமைச்சரவை விரிவாக்கம் தமிழகத்திலிருந்து எல்.முருகன் அமைச்சராகிறார் வாழ்த்துகள்.. மிக மிக ஒடுக்கபட்ட /வர்ணாசிரமத்தால் தாழ்த்தவராக கருதபட்ட சமூக பின்னணியில் இருந்து வந்தவர்.. ஒடுக்கபட்டமக்களை அரசியல்படுத்தபடவேண்டும் என்றுதான் பெரியார் விரும்பினார்
இன்றைக்கு அமைச்சரவை பட்டியலில் பெயருக்கு பின் சாதியை போட முடியவில்லையே அது திராவிடம் சாதித்தது .. 
தமிழகத்திற்கு ஒருவர் கிடைத்திருக்கிறாரென மகிழ முடியவில்லையென கமல்ஹாசன் சொல்கிறார்.. பாசிசம் இப்படிதான் தன் கையாளை கொண்டு பேசவைக்கும்.. 
..
அமைச்சரவை ரேஸில் அன்புமணி ரவீந்தரநாத் என சிலர் வரிசை கட்டிநின்றனர் .. காலில் விழுந்து கதறிபார்த்தும் ஒன்றிய அரசென அழைக்கமாட்டோமென ஜால்ரா அடித்தும் பார்த்தாகிவிட்டது .. அதிமுக தோல்விக்கு பாஜக காரணமென சி.வி.சண்முகம் சொல்ல உடனே விரைந்து வந்து பாஜகவோடான உறவு உணர்வுபூர்வமானது நாட்டு நலனுக்கானதென பன்னீர் பதறியதும் ..சம்பந்தமே இல்லாமல் அன்புமணி அதிமுக வெற்றிபெற்றதே பாஜக கூட்டணி இருந்ததால் தான் என கூசாமல் சப்பை கட்டியதும் ரசிக்க முடிந்தது பாவம் காரியம்தான் கைகூடவில்லை ..
..
அன்புமணி அவர்களே நீங்கள் அமைச்சரானது உங்கள் திறமையாலோ அல்லது கட்சி பலத்தாலோ அல்ல .. அன்று கலைஞர் பெருமகன் தந்த பிச்சை
அவரின் கருணை உமக்கு வாழ்வு தந்தது ..
நன்றிகெட்ட அப்பனும் மகனும் சொந்த சமூகத்தையே காவுகொடுத்தேனும் பதவி புகழ் பணம் என சுகவாழ்வு வாழ்பவர்கள்..
ஜனநாயக மாண்பை கடைபிடிக்காத, சாதிவெறியை தூண்டி இளைஞர்களை வழிகெடுக்கும் உம்மை போன்றோர் பொறுப்பிற்கு வராதது உண்மையில் மகிழ்ச்சியாக இருக்கிறது ..
..
பன்னீரும் மகனும் அரசியலில் அழுக்கானவர்கள் .. அன்றைக்கு ஒன்றிய செயலாளருக்கு "பெட்டிதூக்கி" யாக செயல்பட்டு விசுவாசமானவன் என சசிகலாவிடம் சொல்ல அரசியல் வாழ்க்கையை தொடங்கி, பிணக்கம் வந்த போது மதவெறி கூட்டத்தோடு கைகுலுக்கி கூர்பார்த்த போதே உமது அரசியல் சறுக்குபாதையானது.. இன்றைக்கு எதிர்க்கட்சி தலைவராக கூட முடியவில்லை கட்சி கொஞ்சம் கொஞ்சமாக கைபிடி நழுவுவதை அறிந்து எப்படியேனும் பாசிச கூட்டத்தின் கடைக்கண் பார்வைக்காக காத்திருந்ததெல்லாம் வீணானது ..
..
ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் விலகல் அரசின் தோல்வியை காட்டுவதை எந்த ஊடகமும் பேசவே இல்லை கொரோனா தொற்றை கையாள்வதில் அரசின் தோல்வியை அரசே ஒப்புகொள்வதாகதான் பொருள் ..
தமிழகத்தில் நீண்டநாட்களாக காத்தநிற்கும் விசுவாசமான அடிமைகள் அன்புமணி பன்னீர் மகன் இவர்களை இடதுகையால் புறந்தள்ளிய மோடியை ஒப்புகொள்ளதான் வேண்டும் .. மிக ஆபத்தானவர்கள் என அறிந்துவைத்திருக்கிறார்..
..
ஆலஞ்சியார்

Tuesday, July 6, 2021

எங்கள் தொழில் கொள்கையை பின்பற்றுங்கள்  எடப்பாடி 
வெட்கமாக இல்லையா பழனிசாமி
உங்கள் கொள்கை என்ன ..? எவ்வளவு கமிஷன் என பேச தொடங்கி தமிழகத்தை விட்டு வேறு மாநிலத்திற்கு எத்தனை தொழிலதிபர்கள் ஓட்டம் பிடித்தனர் 
என்பதாவது தெரியுமா பழனிசாமி
எதாவது ஒரு தொழிற்சாலையை கொண்டுவந்திருக்கிறதா அதிமுக அரசு .. வெளிநாட்டு முதலீடு என தம்பட்டம் அடித்து கடைசிவரை இரண்டுலட்சம் கோடி என சொன்னதில் ₹2000 கோடி கூட தொழில் தொடங்க முதலீடு வரவில்லையே நீரெல்லாம் ஆலோசனை சொல்லவருகிறீர் சொந்தபுத்தியில்லாத தலையாட்டிகள் கருத்து கூற கூடாது..
..
அடிமைகள் முதலாளிகளின் குரலை பிரதிபலிக்கிறார்கள் 
பன்னீர் ஒன்றியமென அழைக்க கூடாதென கருத்துச் சொல்லி கடைசியில் வாங்கிகட்டிக்கொண்டார் .. மகனுக்கெல்லாம் மந்திரி கிடையாதென கைவிரித்துவிட்டார்களாம்
 சுகாதாரத்துறை ஊழலில் சிக்கிய அன்புமணி ஒன்றியம் என்பது தவறென சத்தமில்லாமல் பேசி நழுவிகொண்டார் ..  பிடி இறுகும்போது தளர்ந்துவிழவேண்டிவரும் ..
..
தமிழகத்தின் வளர்ச்சி திமுக ஆட்சிக்கு வந்ததற்கு பிறகு தெரிகிறது ..  முதலீட்டார்கள் அரசோடு பேச தொடங்கியிருக்கிறார்கள் .. ஒவ்வொரு திட்டமும் நன்கு அறிந்தோரின் ஆலோசனையோடு பொருளாதார நிபுணர் வழிகாட்ட எப்படி தமிழகத்தின் வருவாயை உயர்த்த முடியுமென கவனத்தோடு செயல்படும் அரசிற்கு அரைகுறைகள் ஆலோசனை சொல்லகூடாது ..எதையாவது பேசவேண்டும் என்பதற்காக தங்களை மேதாவிகளாக காட்ட நினைத்தால் மக்களே காரி உமிழ்வார்கள் .. எதிலும் கொள்ளையடிக்கும் கும்பல் வெளிப்படையான அரசை விமர்சிக்க கூட தகுதியல்லை 
இன்னும் சில தினங்களில் கொள்ளையடித்தற்கான வழக்குகள் வரும் .. அப்போது முகமூடி கிழியும் .. விரைந்து விசாரிக்கபடும் புழல் வரவேற்கும் பழனி .. அதுவரை வாய்மூடி இருக்கவும் 
..
வீடுகட்டுவதற்குரிய இடம் சேறாக இருந்தால் கட்டிடம் கட்ட முடியாது பாலவனமாக இருந்தால் பயிர்செய்ய முடியாது.. அதைப்போல சரியாக திட்டமிடல் எனும் அறிவு இல்லையென்றால் சாதிக்க முடியாது என்றார் அண்ணா .. 
திமுக அறிவின் நிழலில் ஆட்சி செய்பவர்கள் கஜானா காலியான போதே எங்கள் மூளை காலி இல்லையென்றார் கலைஞர் .. 
ஆலோசனை சொல்லவும் தகுதி வேண்டும் அது அதிமுகவில் எவருக்கும் இல்லை 
..
ஆலஞ்சியார்

Saturday, July 3, 2021

The rising sun never sets..
ஆம் தமிழகத்தை இருள் நீக்க உதயமான சூரியன் ஓய்வில்லாமல் சுழன்று ஒளிவீசிக்கொண்டே இருக்கிறது .. அதிகாலையிலேயே அமைச்சர்கள் அழைக்கபடுவதும் அதிகாரிகள் சுழன்று பணி செய்வதும் கடந்த பத்தாண்டாய் படு உறக்கத்திலிருந்த அரசு இயந்திரம் ஜெட் வேகத்தில் பயணிப்பது சிலருக்கு வியப்பை தருகிறது .. உண்மையில் திமுக ஆட்சிக்கு வந்தாலே அமைச்சர்கள் அதிகாரிகள் உழன்று கொண்டே இருப்பார்கள் .. கலைஞர் பெருமகன் ஒவ்வொரு நொடியும் தமிழகம் நலன் சார்ந்து விரைந்து செயலாற்றியதை அறிந்தது தான்..
அதிமுக ஆட்சியில் அலட்சியமாக இருக்கும் அதிகாரிவர்க்கம் சுறுசுறுப்பாக சுழலும் 
..
ஒரு உதாரணம்..
இருளர் இனத்தை சேர்ந்த 20 குடும்பங்களுக்கு வீட்டுமனைப் பட்டா கேட்டு ஐந்தாண்டுகளாகப் போராடி பார்த்தார்கள் ஒரு அசைவும் இல்லை  விடியல் தந்த ஒளி அவர்களுக்கு வீட்டுமனை கிடைத்தது ..
முதல்வரின் தனி கவனத்தில் பெறபட்ட மனுக்கள் விரைந்து தீர்வாகிறதாக எதிர்க்கட்சிக்கு வாக்களித்தவர்களே வெளிப்படையாக சொல்வதை காணமுடிகிறது.. பெருந்தொற்றின் அலை கோரதாண்டவம் ஆடிய காலகட்டத்தில் அறியணையேறிய நம் "காவலன்" மக்களை காக்க அனைத்து அமைச்சர் பெருமக்களையும் மாவட்டவாரியாக செயல்பட வைத்து மக்கள் நல்வாழ்வுதுறையை சரியாக வழிநடத்தி துரிதமாக போதாமைகளை(உயிர்வளி படுக்கை) சரிசெய்ய போர்காலமென செயலாற்றி விரைந்து இயல்புநிலைக்கு திரும்பியதை கண்டு இந்திய ஒன்றியமே வியந்து நிற்கிறது வெளிப்படையான செயல்பாடுகள் தடுப்பூசி இல்லையென்றால் இல்லை வந்தவுடன் எவ்வளவு வந்திருக்கிறதென உடன் அறிவித்து மாவட்டவாரியாக பிரித்து பகிர்ந்தளித்து ஒரு ஆட்சியாளன் எப்படி செயல்படவேண்டுமென உலகிற்கு உணர்த்துகிறார் ஒப்பற்ற முதல்வர் 
..
PMCARE போல "மர்மநிதி" அல்ல முதல்வர் நிவாரணநிதி எவ்வளவுவந்திருக்கிறது எவ்வளவு செலவு செய்யபட்டிருக்கிறதென மக்கள் அறிவது கடமையென செயல்படும் அரசு .. மோடி அரு வசூலித்த பேரிடர் நிதி ("மர்ம நிதி") என்னானதென யாரும் கேட்ககூடாதென அரசே சொல்வது எவ்வளவு அயோக்கியதனமென ஊடகங்கள் பொதுவெளியில் யாரும் பேசுவதில்லை ..  எதிர்கட்சிகள் அரசியல் செய்ய பொருள் " இன்றி தவிக்கிறார்கள் 
பிரதமரை சந்தித்து ஜெய்ஹிந்த் விவகாரம் தான் பேச முடிகிறது.. கோவில்நிலத்தில் மயிலாப்பூர் மாமாக்கள் "பார்" நடத்தியதை பேச முடியவில்லை ஐஐடி யில் பார்பன மேலாதிக்க குறித்து வாய் திறக்கவில்லை .. துணை ஒருங்கிணைப்பு எதையாவது சொல்ல நினைத்து "செங்கல்பட்டு"
தலை உடைந்தது தான் மிச்சம் ..
சேக்கிழார் மின்சாரம் தாக்கியதில் மூர்ச்சையாகிப் போனார் .. பிரபாகர பிம்பம் இங்கே சுக்குநூறாக உடைத்தெறியபடுகிறது .. தமிழகம் சார்ந்து பேசவோமென விழிப்பணர்வு வருகிறது .. பிரபாகரன் நிழற்படத்தை கூட இலங்கை மண்ணில் வெளியிட முடியவில்லை இங்கே திரைபடமே வெளியிட முடிகிறது .. கருத்து சுதந்திரம் என்ற பெயரில் கழிசடைகளை கண்டதையும் பேசி தனிநபரை கிண்டல் கேலி நையாண்டி செய்துகாட்டிய "மேதாவி"யாக நினைத்தால் புழல் வரவேற்கும் என புரிய தொடங்கியிருக்கிறது .. 
..
தமிழ்நாடு இந்தியாவில் தன்னிகரற்ற மாநிலமாக்க முதல்வர் உறுதிபூண்டுயிருக்கிறார்
பின்தங்கிய மாவட்டம் பின்தங்கிய சமூகம் பின்தங்கிய மக்கள் என்ற இருக்க கூடாது என்ற அறைகூவலோடு பயணிக்கிறார்..
மாநிலத்தில் வளர்ச்சி ஏற்றுமதி இறக்குமதியில் மட்டுமல்ல அனைத்து தரப்பு மக்களின் வளர்ச்சியாக இருக்கவேண்டும் 
தமிழ்நாடு இனி உலக நாடுகளின்  வளர்ச்சியோடு ஒப்பிடவேண்டும்..
இந்திய ஒன்றிய அரசின் தலைவரைப்போல "வாய்சவடால்" இல்லை இங்கே "எல்லாம் செயல்"
பல்துறை நிபுணர்கள் சிறந்த அமைச்சர்கள்  என ஓய்வில்லாமல்  உழன்று உழைத்து தமிழகத்திற்கு "புத்தொளி"யை தந்துக்கொண்டிருக்கும் உதயசூரியன் ..
#தளபதி
#StalinEra
..
ஆலஞ்சியார்