Monday, February 15, 2021

ஷாலினி

டாக்டர் ஷாலினி.
மனநல மருத்துவர்.. மனித மனம் குறித்து அறிந்தளவிற்கு அரசியல் மற்றும் பொது சிந்தனை குறித்து அறிந்திருக்கவில்லை ..  சமீபத்திய கருத்துகள் நிறைய விமர்சனங்களை தருகிறது .. எதிர்கருத்துகளை சொல்லவே கூடாதா என்றால் சொல்லலாம்  கருத்தை எதிர்ப்பை பதிவு செய்வதற்கு முன் அதுகுறித்து முழுமையாக அறிந்திருக்கவேண்டும் ..
..
விவசாயிகள் போராட்டம் குறித்து ஏன் வாயை திறக்கவில்லை என தயாநிதியை கேள்வி கேட்கிறார் .. எனது தொகுதி எனது பிரதிநிதி என் சார்பாக அவர்தானே கேட்கவேண்டும் என்கிறார்..  
தன் எம்பியின் செயல்பாடுகளை கவனிக்காமல் இருப்பது  தவறில்லை ஆனால் கேள்வி கேட்கும்  முன் அவர் பேசியிருக்கிறாரா என தெரிந்துக்கொண்டிருக்கலாம் .. எது குறித்தும் எவர் மீதும் விமர்சனம் செய்வதற்குமுன் குறைந்தபட்ச அதுகுறித்து அவர் செயல்பாடுகள் பற்றி தெரிந்து கேள்வி எழுப்பவேண்டும் ..
அவர் பேசினால் போதுமா மற்ற எம்பிகள் ஏன் பேசவில்லை என்கிறார் ..
நாடாளுமன்ற நடைமுறைகள் .. எந்தெந்த கட்சிக்கு எத்தனை மணிதுளிகள் தரப்படும் ..கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கு தகுந்தாற்ப்போல்  நிமிடங்கள் ஒதுக்கபடும் .. திமுகவிற்கு ஒதுக்கபடும் நிமிடங்களுக்கு சில உறுப்பினர்கள் மட்டுமே பேசமுடியும் ..அதோடு பிற பிரச்சனைகள் குறித்தும், தங்கள் தொகுதிநலன் குறித்தும் மாநில நலன் இப்படி பல்வேறு விடயங்களை பேச வேண்டியிருக்கும் ..  Dr. ஷாலினி
நல்ல மனநல மருத்துவர் ஆனால் சிறந்த அரசியல் விமர்சகர் அல்ல.
..
எடப்பாடி என விளிக்க கூடாது .. ஊர் பெயரை விளித்து கடுமையாக தாக்கினால்  மனபிறழ் என்கிறார் .. பழநிசாமி என அழைத்து விமர்சனம் செய்யவேண்டும் என அதிமேதாவியைப் போல கருத்தை சொல்கிறார் .. 
எடப்பாடி என்ற அடைமொழியோடு தான் பழநிசாமி அறியபடுகிறார் .. எங்க ஊரில கருப்பையா என்றொருவர் இருந்தார் .. கபிஸ்தலம் மூப்பனாரென அழைப்பார்கள் .. மெல்ல மெல்ல மூப்பனாரென்றே அழைக்கபட்டார் .. புகழும் போதும் இகழும் போதும் 
அவரை மூப்பனாரென்றே அழைத்தார்கள் .. ஏன் சாதி பெயரை அழைத்து விமர்சனம் செய்கிறீர் என யாரும் கேட்கவில்லை யாரும் மூப்பனாரென அழைக்கிறீர்களே பைத்தியமா என கேட்கவுமில்லை காரணம் அது அவரது காரண பெயராக விளங்கியது .. கலைஞரை அன்போடு கலைஞரென அழைப்பதைபோல .. கலைஞர் எனச் சொன்னால் அது கருணாநிதியை தான் குறிக்கும் .. பிற கலைஞர்களை குறிக்காது .. எடப்பாடி பழநிசாமி என அறியபட்டவரை தகுதியற்ற தன்மானமிழந்து தமிழகத்தை சீர்கெடுத்தவரை விமர்சிக்கிற போது ஊர் பெயரை மட்டும் சொல்லாமல் அவர் பெயரையும் இணைத்து பேசவேண்டும் என்பதில் நமக்கு உடன்பாடுண்டு .. ஆனால் பொதுவாக பழநிசாமியை 
எல்லோருமே எடப்பாடியென அழைப்பதால் ஏற்பட்டது அதற்காக பைத்தியங்கள் என்றழைப்பதெல்லாம் அரைவேக்காட்டுத்தனம் ..
..
இவர் விவசாய மசோதா நிறைவேற காரணமான அதிமுக எம்பிகளை விமர்சித்தாரா என்றால் இல்லை.. இந்த எடப்பாடி பழநிசாமியாவது சட்டமன்றத்தில் எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றினாரா .. ஏன் ஆதரவு தந்தீர்கள் என அதிமுக அடிமைகளை பார்த்து கேள்வி கேட்கதாதது ஏன் .. இவர்களுக்கு திமுகவை மட்டுமே கேள்வி கேட்கவும் விமர்சிக்கவும் தெரியும் கருத்து சுதந்திரம் 
திமுகவை கேள்வி கேட்பதில் மட்டுமே இவர்கள் நடுநிலை நிலைக்கும்..  
சசிகலாவை சிறந்த ஆளுமையாக தெரிந்தவர்களுக்கு திமுகவின் வரலாறு தெரியுமா .. சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர்களை தந்த கழகம் திமுக.. நாடாளுமன்றத்தில் இன்றளவும் திமுகவினர்கள் செயல்பாடுகள் மெச்ச தகுந்ததாகவும் எந்த சூழ்நிலையிலும் எதற்கும் அஞ்சாத கொண்ட கொள்கையை விட்டுகொடுக்காமல், நாட்டில் எந்த மூலையில் மக்களுக்கு விரோதமாக எதுநடந்தாலும் தட்டிகேட்க தயங்கியதில்லை ..
..
திமுக வரலாற்றை கொஞ்சம் படியுங்கள் ..
..
ஆலஞ்சியார்

Saturday, February 13, 2021

ஸ்டாலின் தான் வராரு

அன்பின் மழையில் ..
ஒரு தலைவன் கொண்டாடபடுகிறான் .. இத்தனை காலம் காத்திருந்த காதலை மக்கள் வெளிபடுத்துகிறார்கள் .. சிறுவர்கள் இளைஞர்கள் பெரியவர்கள், வயதில் முதிர்ந்தோர் என பாகுபாடின்றி வாரியணைத்து நிற்கிறார்கள்.. தமிழகம் தன் ஏக்கபெருமூச்சை அன்பில் நனைத்து தருகிறது ..இத்தனைக்கும் ஆள்வோராய் இல்லை ..நீண்டநெடிய அரசியல் பயணத்தில் நிறைய தோல்விகளும் படிப்பினைகளும் நல்ல வெற்றியும் மாறிமாறி தந்த மக்களை எப்போதும் நன்றியோடு உணர்ந்தே சேவகம் செய்தவர்.. மக்களை மட்டுமே நம்புகிற அறநெறியாளர் .. சிறிய ஆசைகாட்டி பெரும் பதவியை சிலரை பிரித்து விலைக்கோ பதவிவோ தந்து பெற்றிருக்கலாம் .. வெற்றி தோல்வி எதுவாகினும் அது மக்கள் தந்ததாக இருக்கவேண்டுமென்ற உயர்நோக்கம் 
அரசியலில் இப்படியொரு தலைவன் தமிழகத்தில் காலம் தந்திருக்கிறது .. அரசியலில் இலக்கணம் சமைத்த கலைஞரின் நேரடி பயிற்சியும் இனமானத்திடம் கற்ற அரசியலும் மாபெரும் தலைவராய் இன்று தமிழகமே கொண்டாடுகிற உயரத்தில் தளபதி..
..
சின்ன குழந்தை கையில் முகத்தை அள்ளி முத்தமிடுகிறது .. வயது முதிர்ந்த பழம் வாழ்த்துகிறது .. மக்கள் முகத்தில் பெரும் மகிழ்ச்சி .. தங்கள் அண்ணன் வருகிறான் தம்பி வருகிறான் மகன் வருகிறான் என தங்கள் குடும்பத்தில் ஒருவரை காண்பதை போல காத்திருந்து மகிழ்கிறார்கள் .. வருபவர் தங்களின் குறைகளை தீர்ப்பார் இவரை தவிர யாராலும் நம்மை காக்க இயலாது .. கொஞ்சம் கொஞ்சம் செல்லரிக்க தொடங்கிய தமிழர் வாழ்வை மீட்டெடுக்க கண்களில் ஏக்கத்தோடு மக்கள் பெருவெளியில் காத்துநிற்கிறார்கள் .. தங்கள் குலதெய்வத்திடம் நல்லதை செய் என வேண்டி நிற்கிறார்கள்.. எம் மண்ணை காக்கும் எங்கள் எல்லைசாமி இவர்தான் என பெரும் நம்பிக்கையோடு நிற்கிறார்கள் ..  
..
கவிஞர்கள் புகழ்பாடும் சபையல்ல, ஆன்றோர்கள் அறம்பாடும் சபையல்ல.. சாமானியர்கள் தங்கள் காவலனிடம் தங்கள் இயலாமையை தங்கள் நெருக்கடியை தங்கள் எதிர்கால தேவைகளை .. தாங்கள் இந்த ஆட்சியாளர்களால் தொடர்ந்து சுரண்டபடுவதை .. தங்கள் குழந்தைகளின் எதிர்காலம் சூறையாடபடுவதை கண்ணீரோடு எடுத்தியம்புகிறார்கள் ..ஆம் இது மக்கள் சபை கூட்டம் நேரடியாக மன்னனிடம் குறை சொல்லி அதற்கான நிவாரணத்தை தங்களால் மட்டுமே தரமுடியும் ..தங்களை அறியணையேற்றுகிறோம் இதுவெல்லாம் வேண்டும் என பெரும்பட்டியலோடு காத்துநின்று கதைக்கும் மக்கள் சபை ..தலைவனுக்கும் மக்களுக்கும் இடைவெளியில்லை தரகரில்லாத அதிகாரவர்க்கம் தலையிடாத நேரடியாய் குறைச்சொல்லும் தேவைகளை பட்டியலிடும் மக்கள் சபை ..
..
நீண்ட பெருமூச்சோடு காத்திருந்து காலம் கனியும் என மக்கள் தலைவனை காண்கிறார்கள் .. அள்ளி அணைப்பதும் கிள்ளி அன்பை தருவதும் கண்ணத்தை தடவி பாசத்தை தருவதும், மக்களின் அன்பில் பாசத்தில் நனைத்துநிற்கிறார் தளபதி .. காலம் செதுக்கிய தலைவர் .. காலம் அருளிய மக்கள் சேவகன் .. நம்பிக்கையின் ஒளி.. தாழ்ந்த தமிழகத்தை தலைநிமிர செய்ய,  தவித்துக்கொண்டிருக்கும் மக்களின் நம்பிக்கை ஒலியாய் காதுகளில் கேட்கிறது ..
#ஸ்டாலின்தான்_வராரு_விடியலைதரப்_போராரு..
..
மக்களோடு தொடர்பில்லாதவன் .. மக்களை சந்திக்காதவன் சிறந்த தலைவனாக முடியாது ..அதேபோல் மக்கள் கொண்டாடதவனை காலம் கவனித்தில் கொள்ளாது .. தளபதி காலம் செய்த தவம் .. காலம் தந்த பரிசு, காலம் தந்த கொடை,  காத்திருந்த விடியல்.. தமிழகம் செய்த பேறு  தளபதி நல்ல தலைவராய் மக்கள் கொண்டாடும் தலைவராய் அன்பின் மழையில் ..
..
தமிழகம் கண்ட நல்ல தலைவர்களில் காலம் கடந்து புகழ் நிலைக்கும் தலைவர்களில் மக்கள் நன்றியோடு எப்போதும் கொண்டாடும் தலைவர்களில் ஒருவராய் 
தளபதி தலைவர் .. பகையோடு திரிந்தவனை கூட பண்போடு நடத்தும் பேரன்பின் பெட்டகமாய், எதிரிக்கும் நன்மை செய்யும் பண்பின் இலக்கணமாய் .. மக்களின் பேரன்பின் ப புதையலாய் திகழ்கிறார் .. எல்லோரும் தலைவனாக முடியாது 
நல்ல தலைவனை காலமே உருவாக்கும்.. தரும் ..
#தளபதி_காலம்தந்தகொடை 
..
ஆலஞ்சியார்

Friday, February 12, 2021

ஜெயலலிதா ஆளுமையா..?

"நீங்கள் வழக்குப் போடாமல் இருந்தால் ஜெயலலிதா இன்னும் 100 ஆண்டுகள் வாழ்ந்திருப்பார். ஜெயலலிதா மரணத்துக்குக் காரணம் திமுகதான். அதுவே விசாரணை ஆணையத்தின் தீர்ப்பாக இருக்கும்".. 
அமைச்சர் ஆர் பி உதயகுமார் .. 
தி இந்து தமிழ் இதழில்..
..
உண்மையில் இவர்களை எண்ணி கவலை கொள்ளவேண்டியிருக்கிறது .. தமிழகம் எவ்வளவு சிறந்த மனிதர்களை பொதுவாழ்வில் தந்திருக்கிறது கொள்கை முரணெனினும் தங்கள் ஆளுமைகளை நிரூபிக்க தவறியதில்லை ..ஜனநாயக பண்புகளோடு மாற்றான் தோட்டத்து மலரிலும் வாசம் உண்டென்பதை உணர்ந்தவர்கள் .. அரசியல் சூழ்ச்சி சதுரங்கம் என ஆடிதீர்த்தாலும் எதிரணியை குறைவாய் மதிப்பிட்டதில்லை மூதறிஞரென்றும் பேரறிஞரென்றும் காலம் புகழ்ந்தது .. அரசியல் அறிந்தவர்களாக அறம் தெரிந்தவர்களாக ..அரசியல் பகை தாண்டி துளியும் கயமையற்ற நட்போடு பழகியவர்கள் .. எதிரெதிர் களமெனினும் கடுமையான கருத்து மோதல் எனினும் எதிராளர்களை குறைத்து மதிப்பிட்டதில்லை..  தங்கள் கொள்கை எதுவென்று அறிந்து செயல்பட்டார்கள் .. 
ஜனநாயகத்திற்கு தீங்கென்ற போது, தமிழ் சமூகத்திற்கு கேடுவருமெனில் ஒருமித்து நின்றார்கள் 
நல்ல தலைவர்களை அமைச்சர்களாக கண்ட தமிழகம் 
இன்று அரைகுறைகளை அறிவிலிகளை தந்து அவமானத்தில் கூனிகுறுகி நிற்கிறது ..
..
"கூவத்தூரில் ஊத்தி கொடுத்தவன் தானே அவன்"என நிதானத்தில் பேசுகிறார் சட்ட அமைச்சர் .. ஊழலில் கொழுத்தவர்கள் சுகமேறி கூட்டிவந்தவரை கழுத்தறுத்து உழைத்து முன்னேறியதாய் புழுகுகிறார்கள் .. அண்ணாவிற்கு அப்புறம் அதிகம் படித்தவர் ..கடைசியாக படித்த புத்தகம் எதுவென்றால் வீட்டில் இருக்கிறதென்கிறார் .. ஒருவர் திருக்குறளை எழுதிய ஔவையார் .. பலூனை உடைத்துவிளையாடும் கிறுக்குப்பிள்ளை ..  தெர்மாகூல் போட்டு அணை நீரை மூடிய அறிவொழுகும் அமைச்சர் .. தொலைக்காட்சி பார்த்துதான் தெரிந்துக்கொண்டேன் என அதிகாரமில்லாத முதல்வர் .. வடநாட்டு தலைவர்கள் காலில் விழுந்து முதுகெழும்பு உடைந்த ஆன்மையற்ற பன்னீர்கள் .. ஒருத்தர் கூடவா கொஞ்சம் அறிவோடு பேசி பார்த்ததில்லை .. என்ன கொடுமை .. காசிற்காக சாதிக்காக மதத்திற்காக  வாக்கை விற்றால் இந்த இழிநிலைதான் நேரிடும் ..
..
எதிர்கருத்தாளர்களெனிலும்  காமராஜர் பக்தவச்சலம் 
ராஜாஜி சி.எஸ்,.. ஆர்.வி,..அனந்தநாயகி.. மடைமாறிய 
இரா.செழியன்,..நாவலர்.. சம்பத் ..என அடுக்கிக்கொண்டே போகலாம் ..நல்ல சிந்தனையாளர்களாய் வலம் வந்தார்கள் பேரறிஞர் அண்ணா, பேரருளாளன் கலைஞர் ..பேராசிரியர் தொடங்கி இன்றைய இளம் தலைவர்கள் வரை தங்கள் தனித்திறமையை பறைசாற்றி தமிழகம் நல்விதைகளை தரும் கழனி என பெயர் தந்தார்கள் ..ஆனால் மகோரா எனும் மடையனின் மோகமுள் குத்த தொடங்கி காலம் அறிவில் விரிசல் விழுந்தநிலைக்கு போனது .. சட்டபைக்கு வரவே அஞ்சியதும் ..
எதிர்க்கட்சித்தலைவர் கலைஞரை சந்தித்தாலே கட்டம் கட்டி ஒதுக்கிவைத்ததும் .. கருத்தை எதிர்கொள்ள பயத்து ஒளிந்ததும் நடந்தது.. பொய்யும் புரட்டும் பேசி பேசி அதையே நம்பவைக்க ஒரு கூட்டம் தொடர்ந்து கூச்சலிட்டு திராவிடத்தின் ஆட்சி வந்தால் எங்கே நமது அதிகாரம் பறிபோகுமென்று பார்பன ஊடகங்கள் திமுகவை ஊழல்கட்சியென சொல்லி கடைசிவரை நிருபிக்க முடியாமல் போனது ..ஆனாலும் ஊழலில் தண்டனைபெற்றாலும் அதற்கும் துணை போவொமென ஆரிய கூட்டம் தொடர்ந்து இந்த கூமுட்டைகளை கைபாவையாக்கி ஆட்சி செலுத்துகிறது .. ஜெயலலிதா எனும் பயந்தாகொள்ளியை சிங்கபெண் என ஊடகபிம்பம் அமைத்து கடைசிவரை காப்பாற்றியதும் .. அவரை தொழ வைத்து அடிமைகளாய் பொறுக்கி அமைச்சராக்கியதும் இந்நிலைக்கு காரணம் ..
..
வழக்கை சந்திக்க பயந்து தொடர்ந்து வாய்தா வாங்கி 
வழக்கை இவர்தான் விசாரிக்கவேண்டுமென்றெல்லாம் அடம்பிடித்து .. கடைசியில் நீதியின் பிடி இறுகியபோது..
சப்தநாடியும் அடங்கி அழுதபடி நான் நோயாளி கருணை காட்டுங்கள் என்று நீதிமன்றத்தில் கெஞ்சியவர் தான் .. அரசு பதவியை முறைகேடாய் பயன்படுத்தி கொள்ளையடித்து ஆடாதஆட்டமெல்லாம் ஆடி எனை எதிர்ப்பதற்கு யாருமில்லை என ஆணவத்தோடு பேசி தன் கட்சிகாரனை சுயமரியாதையற்ற கழுதையாக எண்ணி,அதிகார திமிரில் பாசிசபார்பன காப்பாற்றும் என்ற நம்பிக்கையில் இருந்தவர்தான் ஜெயலலிதா.. விதைத்ததுதான் விளையும் 
என அறியாமல் போனார்..  ஆளுமை வீரமங்கை சிங்கப்பெண் என்பதெல்லாம் கட்டிசமைத்தது .. அடாவடி ஆளுமையாகாது எதிர்கொள்ள அஞ்சுதல்  வீரமாகாது ..
..
தீதும் நன்றும் பிறர்தர வாரா..
..
ஆலஞ்சியார்

Tuesday, February 9, 2021

கனிமொழி கருணாநிதி

கனிமொழி கருணாநிதி
மிக சிறந்த களப்பணியாளராக,களமறிந்து படையோட்டம் நடத்தும் போர்வீரராக,தலைமைக்கு வலுசேர்க்கும் முதன்மை தொண்டராக மிகசரியான நேரத்தில் சரியாக செயல்படும் மகளிரணி தலைவி ..
உண்மையில் பெண்கள் மத்தியில் திமுகவின் தேவையை கொண்டு சேர்த்ததில் வெற்றிபெற்றிருக்கிறார் .. தலைவர் தளபதிக்கு வலுசேர்க்க பெரிய முயற்சியை மிக சாதாரணமாக செய்துக்கொண்டிருக்கிறார் ..
..
பெண்கள் வரும் தேர்தலில் பெரும்பங்கு  வகிப்பார்கள்
மிகப்பெரியளவில் மாற்றத்தை பெண்களின் வாக்குகளே தீர்மானிக்கும் .. இந்த அரசின் கையாலாகாதத்தனத்தால் பெரும் பாதிப்படைந்தவர்கள் பெண்கள் .. தன் பிள்ளைகளின் வேலைவாய்ப்பு மறுக்கபட்டு யாரோ வடஇந்தியர் சொகுசாக வந்தமற வழிவகுத்த பன்னீர் .. தன் குழந்தையின் கவ்விக்கு வேட்டுவைத்த பழனியும் ..கொஞ்சம் கொஞ்சமாக கலாச்சாரப்படையெடுப்பை கண்டுக்கொள்ளாமல் விட்டு நாட்டை நாசமாக்கிய நயவஞ்சகர்கள் மேல் சினங்கொண்டிருக்கிறார்கள் .. முக்கிய தேவைக்கான அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களின் விலை தாங்கமுடியாததாக இருக்கிறது .. தமிழகத்தை சுரண்டும் பனியா கூட்டத்திற்கு வெண்சாமரம் வீசும் 
இந்த கேடுகெட்டவர்கள்மீது கடும் கோபத்தோடு இருக்கிறார்கள் ..  பொய்யும் பித்தலாட்டமும் சொன்னதை செய்யாமல் ஏமாற்றுவதும் தங்கள் உரிமைகளை பலிகொடுப்பதும் தங்களின் வாழ்வாதாரத்தை நாசமாக்கிய அடிமைக்கூட்டத்தை விரட்டியடிக்க நேரம் பார்த்து காத்திருப்பது அவர்களிஅ கண்களில் தெரிகிறது ..
..
கனிமொழியை தங்கள் வீட்டு இளையமகள், சகோதரி, அக்கா,அத்தை, பிரியமான தோழி என பார்க்கிறார்கள் ..பெருவெள்ளத்திலும் புன்னகையோடு கரம் கோர்த்து நிற்கிறார்கள் ..எளிதில் கவர்ந்துவிடும் இயற்கையைப்போல நேசிக்கிறார்கள் தங்களில் ஒருத்தியாய் எண்ணி மகிழ்கிறார்கள் ..அண்ணனுக்கு பரிவட்டம் கட்ட தங்கையின் படையோட்டம் கண்டு மகிழ்கிறார்கள் தமிழினத்தின் மீது படிந்த பாசிசத்தை கறையை கழுவ .. மானத்தோடு வாழ்ந்த சமூகத்தை மீட்டெடுக்க, சுயநலத்திற்காக மண்டியிட்ட கொடியவர்களால் இழந்த மானத்தை வென்றெடுக்க சரியான நேரத்தில் கிடைத்த நல்வாய்ப்பாய் திமுகவை பார்க்கிறார்கள் .. நல்லதொரு விடியலுக்காக தமிழகம் காத்திருப்பது அவர்கள் கண்களில் தெரிகிறது ..
..
நாட்டை மட்டுமல்ல வீட்டை நாசமாக்கும் கயவர்களை 
ஊரை கொள்ளையடித்து உலையில் போடுவோரை தியாகசெம்மல்களாக பேசும் பெரும் கொள்ளைக்கூட்டத்தை ஒன்றிணைந்து கொள்ளையடிக்க வழியுண்டா என காத்துநிற்கும் கள்ளபேர்வழிகளை தமிழக அரசியலிலிருந்தே அப்புறபடுத்த மக்கள் எழுச்சியோடு தயாராகயிருக்கிறார்கள் ..
அறம் வெல்லும் ..
..
ஆலஞ்சியார்

Monday, February 8, 2021

சசிகலா சிறையிலுிருந்து திரும்பினா்..

சிறைச் சென்று திரும்புகிறவர்கள் வெளியில் தலைகாட்டவே அஞ்சி அடைந்துகிடப்பார்கள் சசிகலா படைசூழ கொள்ளையடித்ததை கொண்டாடிக்கொண்டே வருகிறார்.. தமிழக ஊடகங்கள் அதை தொடர் நிகழ்வாக்கி தமிழகத்தின் அவமானமாய் நிற்கிறது.. எந்தவொரு ஊடகமும் சன்டிவி உட்பட எதற்காக ஜெயிலுக்கு போனார் யாரோடு சேர்ந்து கொள்ளையடித்து நீதிமன்றம் தண்டித்தது என பேச மறுப்பது அறம் தவறிய செயல் .. சசிகலா என்ற தனி மனுஷியோடு நமக்கு விரோதமோ பகையோ இல்லை
இன்னும் சொல்லபோனால் அடிமுட்டாள்களை (ஜெயலலிதா உட்பட) வைத்து பொம்மலாட்டம் ஆடிய அவரை நாம் கூர்ந்து கவனிக்கதான் வேண்டும் .. ஒரு பெண்ணாய் சராசரி குடும்ப சூழலை மறந்து ஜெயலலிதா என்ற பிம்பத்தை உயர்த்தி எழுப்பி அதில் தான் யாருமறியாமல் சிம்மாசனமிட்டு அமர்ந்து நடத்தி ..ஆட்சி ..சட்டம் கூட ஒன்றும் புடுங்கமுடியாதவாறு அதிகாரம் செலுத்திய விதம் அந்த பெண்மணியின் தனி குணத்தை காட்டுகிறது ..
..
ஆனால் சசிகலாவை புனிதராக்கவும் அதிமுகவை மீண்டும் உயிர்பிக்கவும் சிலர் படாதபாடுபடுவது அப்பட்டமாக தெரிகிறது .. திராவிடத்தின் ஆட்சி மீண்டும் வந்தால் இப்போதுபோல் கொழிக்கமுடியாதென பாசிச கூட்டம் தெளிவாக அறிந்துவைத்துத்திருக்கிறது .. சல்லி சல்லியாக அதிமுக போவது கூட ஒருவகையில் இழப்புதான் அந்த இடத்தை காங்கிரஸால் நிரம்ப முடியாதவாறு பிய்த்தெறிந்துவிட்டது பாசிசம் .. தங்கள் சிலிப்பர்களை ஒவ்வொன்றாக இறங்கி காங்கிரஸ் எழாதவாறு பார்த்துக்கொண்டிருக்கிறது ..
சாமானியர்களிடம் காங்கிரஸின் அதிகாரம் செல்லாதவரை .. பார்பனீய, ஜமீன் வாசம் மாறாதவரை கடினம் தான் அதுவரையேனும் அதிமுக ஊயிர்ப்போடு இருக்கவேண்டிய அவசியம் அதிகாரமற்ற நிலையிலேனும் எதிர்கட்சியாக அதிமுக இருப்பதுதான் தமிழகத்திற்கு நல்லது பாஜகவை காலூன்ற விடாமல் தடுப்பதற்கான உக்தியாக கருத்தில் கொள்வோம்..
..
சசிகலாவின் வரவு பழனிசாமி பன்னீர் வகையறாகளுக்கு பீதியை தந்திருக்கிறதென்பது அவர்களின் நடவடிக்கைகளில் தெரிகிறது .. A1 ஜெயலலிதா நினைவிடம் மூடபட்டதும் அதிமுக தலைமை அலுவலகம் போலீஸ் பாதுகாப்பில் கொண்டுவரபட்டதும் கடைசியில் சசிகலா காரில் அதிமுக கொடி அகற்றபட்டதில் பயம் தெரிகிறது .. காரணம் இவர்கள் யாருமே மக்கள் தலைவர்களாகவோ அல்லது கட்சியை ஒருங்கிணைக்கும் ஆற்றல் பெற்றவர்களோ அல்ல .. இன்றைக்கு எதையாவது பேசி சமாளிக்கிறவர்கள் தான் முதலில் மண்டியிடுவார்கள் ..ஏனெனில் அதிமுகவின் வரலாறு அதுதான் .. பொதுவாழ்வில் இருப்பவர்களின் பொழுதுபோக்கு என தரம் குறைந்து விமர்சித்த காளிமுத்து காலடியில் விழவில்லையா.. இன்றைக்கு அதிமுகவில் இருப்பவர்கள் ஏறக்குறைய எல்லோருமே  ஜெயலலிதாவை மிக கடுமையாக நாகூச பேசியவர்கள் தான் .. பணமும் பதவியும் விழ காலும் கிடைத்தால் போதும் .. தண்டனை பெற்றவர் தியாகியென பேசுவார்கள் ஊர் பணத்தை கொள்ளையடித்தவரென பேசுவோர்.. 
..

மிக மோசமான அரசியல் நிகழ்வுகளை தரங்கெட்ட மனிதர்களை, பொய்யர்களை, புறம்பேசி திரிவோரை
நாம் பெற்றிருக்கிறோம் 
கொள்ளையடித்தாலும் கொண்டாடும் மனநிலையை
உருவாக்கியிருக்கிறார்கள் .. மீண்டும் நல்லதொரு அரசியல்.. கருத்தியலோடும் கொள்கையோடு அறநெறி மாறாத நல்ல தலைவர்களை இனங்கண்டு ஆட்சியை தருவோம்.   இந்த கேடுகெட்டவர்களால் தமிழகம் இழிவை சுமக்கிறது .. வெட்கிதலைகுனியும் நிலையை ஏற்படுத்தியிருக்கிறது இதற்கு நாமும் ஒரு காரணம் .. 
பணம் தந்தால் யாருக்கும் வாக்களிப்போமென்ற மனநிலை மாறவேண்டும் .. யார் வந்தால் தமிழகம் மானத்தோடும் சுயமரியாதையோடும் புகழோடும் இந்திய ஒன்றிய சமூகத்தில் நிற்கும் என அறிந்து 
வரும் தேர்தலில் வாக்களிப்போம் ..
திருடர்கள் விழா எடுக்கிறார்கள் நான்காண்டு சிறைத்தண்டனையை தியாகமென புகழ்கிறார்கள் ..
ஊடகம் சீரழிந்து அறமிழந்து நிற்கிறது ..
இனியேனும்
நல்லதை விதைப்போம்..
..
ஆலஞ்சியார்

Saturday, February 6, 2021

சசிகலா கொள்ளைக்காரியெனில் ஜெயலலிதா..?

சிலநேரம் பேசும் போது உண்மை தன்னால வரும் ..
சி.வி சண்முகம் பேசும் போது ஊரை அடித்து கொள்ளையடித்த வழக்கில் சசிகலா நான்காண்டு சிறைபெற்றவர் என்கிறார் .. அதே வழக்கில் ஜெயலலிதாவும் சிறை தண்டனைபெற்றாரே என்ற கேள்விக்கு பதிலளிக்காமல் நடையை கட்டினார் ..
(அவைத்தலைவர் மதுசூதனன் செத்தவங்களைப்பற்றி பேசுறீயே நாளைக்கு நீ செத்தாலும் என சாபமெல்லாம் விட்டார்..)
என்ன சொல்ல வருகிறார் சி.வி.சண்முகம்  ஊழல் செய்தவர் என்பதால் சசிகலாவை சேர்க்க முடியாதென்கிறாரா..
அப்படியெனில் தண்டனை பெற்று ஜாமீனில் இருந்த காலகட்டத்தில் சின்னம்மாவை அம்மா ஆக்காமல் விடமாட்டோம் என்றதெல்லாம் சும்மாவா..
..
சசிகலா திருடி என்கிறார் ஆனால் ₹10 கோடி அபதாரம் கட்டிய சசிகலா திருடியெனில் அதே வழக்கில் ₹100 கோடி அபதாரம் விதித்த ஜெயலலிதா மகா திருடி என்பாரா..?  இவர்கள் உண்மையில் சசிகலாவை எதிர்ப்பது ஏன் இதுவரை அடித்த கொள்ளையில் பங்கு கேட்பார் என்பதாலா .. அல்லது எங்கே இதுவரை காலில் விழாமல் இருந்தது மீண்டும் வளைய வேண்டுமே என்ற பயமா.. சசிகலாவை திருடி என ஊடகம் முன்பு வாய்திறந்தவர் ஒருஉண்மையை அவரை அறியாமலே சொல்லிவிட்டு செல்கிறார் ஜெயலலிதா மகா திருடி அவருக்கு எதற்காக மக்கள் வரிப்பணத்தில் நினைவிடம் அவரும் தண்டிக்கபடவேண்டியவர் இறந்துபோனதால் புனிதராகிவிட முடியாது .. மறைந்தாலும் திருடியை திருடரென்றே அழைக்க வேண்டும் என சொல்லாமல் உளறிவைக்கிறார் ..உள்ளே போனதும் சிலநேரம் உண்மையை பேசவைக்கும் என்பார்கள் .. சி.வி.சண்முகம் உண்மையைதான் பேசியிருக்கிறார்..
..
சசிகலா அடிப்படை உறுப்பினர் இல்லையென்று பேசிபார்த்தார்கள் .. பிறகு ஏன் ஒவ்வொருவராக காலில் விழுந்து அதிமுகவின் செயலாளராக வேண்டுமென அழுது கெஞ்சினீர்கள் என்ற போது பதிலை காணோம் இப்போது அவர் செயலாளரல்ல என உச்சநீதிமன்றம் வழக்கை காரணம் காட்டுகிறார்கள்  வழக்கு முடித்துவைக்கபடவில்லை ..நாளை சசிகலா வந்தால் முதல் ஆளாய் நிற்பார் நீங்கள் சொல்லுங்கள் என்ற ஜெயகுமார் .. உண்மையில் இவர்களுக்கு பயம் பற்றிக் கொண்டிருப்பது இந்த பேட்டியில் தெரிகிறது .. சசிகலா தேர்தல் முடியும் வரை காத்திருப்பார் தேர்தலில் படுதோல்வி இவர்களை சசிகலா காலில் விழவைக்கும் இப்போதே எழு மாவட்ட செயலாளர்கள் தொடர்புக்கு வெளியே என செய்திகள் வருகிறது ..பேரணிக்கு தடை கேட்டு டிஜிபியை சந்திக்கிறார்கள் ஆட்சி அதிகாரம் கையில் இல்லையென்பதற்கு மற்றுமொரு எடுத்துகாட்டு..
..
கை காய்வதற்குள் இலை போட்டவரை கழுத்தறுக்கும் பாதகர்கள் இவர்கள் .. நாளை ஜெயலலிதாவையும் வசைபாடுவார்கள் .. நம்பிக்கை துரோகிகள் மாறி மாறி பேசி திரியும் மகா கேவலமானவர்கள் .. கூட இருந்து கொள்ளையடித்த போது இனித்தது கொள்ளையடித்ததில் பங்கை கொண்டுபோய் சசிகலா காலில் கொட்டியபோது இவர் மகா கொள்ளைக்காரி என தெரியாமல் போனது ..இப்போது சசியை திருடி என சேர்த்து குரல் கொடுக்கிறார்கள் .. உண்மைதான் மகா கொள்ளைக்காரி தான் ஆனால் அதே அளவுகோலை ஜெயலலிதா மீதும் வைத்திருக்க வேண்டும் ஜெயலலிதாவை புனிதராக்கி கூட்டுக் கொள்ளைக்கு துணை போன அமைச்சர்பெருமக்கள்..? இன்றைக்கு அதிகாரத்தில் இருப்பதால் தூய்மையாகி விடுவார்களா ..
..
திமுக ஆட்சிக்கு வந்தவுடன் முழுஅளவில் விசாரணை செய்யபடவேண்டும  இன்றைக்கு கொள்ளையடித்துக்கொண்டிருக்கும் அமைச்சர்கள் அவர்களின் உறவினர்கள் என பெரும் கூட்டம் சிறைக்கு செல்லும் காலம் வரும் ..அந்த கூட்டத்தில் இன்று முகமூடிகொண்டிருந்தவர்களும் இருப்பார்கள் .. கூட்டு கொள்ளைகூட்டத்தின் தலைவி வருகிறார் ..கொள்ளையடித்தில் கூட இருந்த கொள்ளையர்கள் பதறுகிறார்கள் .. 
திருடர்கள் ஜாக்கிரதை
..
ஆலஞ்சியார்

Friday, February 5, 2021

முஸ்லிம்கள்

நபிகள் தன் வாழ்நாளில் பொய் பேசியதில்லை 
வாக்குறுதி மாறியதில்லை,#தனக்குதுன்பம்இழைத்தவர்களைபழிவாங்கியதில்லை, ஏழைகள் அனாதைகளுக்காக இரக்கமட்டார் கோபம் பொறாமை பேராசை புறம்பேசுதல் கூடாதென்றார் ..
கலைஞர் கருணாநிதி..
..
இறைதூதர் நபிகளைப் பற்றி கல்யாணராமன் கக்கிய விசம் பெரும் கண்டனத்திற்குரியது தண்டனைக்குரியது இது போன்ற செயல்களை ஆர்எஸ்எஸ் சித்தாந்திகள் மிக எளிதாக செய்து உணர்ச்சியை தூண்டி ஒரு கலவரத்தை நடத்திட முடியுமா என நினைப்பார்கள் காந்தியை கொன்ற கோட்சே கூட இஸ்மாயில் என பச்சை குத்தி பெரும் கலவரத்தை நடத்த திட்டமிட்டிருந்தது பெரியார் வானொலியில் கதைத்து தடுக்கபட்டது .. உத்தமரை கொன்றது உதாரி பாப்பான் என முரசொலி தலைப்பு செய்தியை வெளியிட்டது .. முஸ்லிம்களை கலவரகாரர்களாக மாற்ற தொடர்ந்து சங்கிகள் முயற்சித்து ஒவ்வொருமுறையும் தோற்றுக்கொண்டிரு்கிறார்கள் ஆனாலும் இது தொடர்கிறது ..
..
இதுபோன்ற ஆசாமிகளுக்காக போராட தேவையில்லை இவன் இல்லையென்றால் மற்றொருவனை ஆர்எஸ்எஸ் உருவாக்கும் நாம் செய்யவேண்டியது சட்டத்தின் முன் நிறுத்துவதும் தொடர் நடவடிக்கை மூலம் தண்டனை பெற்று தருவதும் தான் .. நபிகள் மீது பேரன்பு கொண்ட சமூகம் உயிரின் மேலாய் மதிக்கிறது என்பதெல்லாம் சரி அதற்காக கல்யாணராமனை உயரத்திற்கு கொண்டு செல்ல காரணியாக தேவையில்லை ..
வெட்டுவேன் தலையை எடுப்பேன் என பேதுவதால் பயனி்ல்லை .. சமூகம் இளைஞர்களை நல்வழிபடுத்த கல்வியில் வேலைவாய்ப்பில் தனக்கான அங்கீகாரத்கை பெற அரசியலில் பங்காற்ற ஜனநாயக முறையில் முயற்சிக்க வேண்டும் உச்சசுருதியில் பேசுகிறவன் தலைவன் என்கிற நிலையை மாற்றி தனித்தன்மையோ கூடிய அனைவரையும் ஒருங்கிணைக்கும் தலைவனை கண்டெத்தினால் ஒழிய சமூகம் மேம்பாடடைய முடியாது ..
..
சுஹைல் பின் அம்ரு என்கிற கவிஞன்  நபிகளாருக்கு எதிராக அவதூறுகளை பரப்பிக்கொண்டிருந்தான்..அரபுலகம் கவிஞர்களை கொண்டாடிய காலம் அது.. (கவிஞர்கள் பொய்யர்கள் என்று பிறகுதான் குர்ஆன் வசனம் வந்தது )..
வெகுண்டெழுந்த உமர் அவர்கள் உத்தரவிடுங்கள் அவன் கீழ்பற்களை உடைத்துவிடுகிறேன் என்ற போது ..நாளை மறுமையில் என் முகத்தை இறைவன் சிதைத்துவிடுவானே என பதிலளித்தார் நபிகள் பெருமகன்.. 
யாரையும் சிறிதளவில் கூட பழிவாங்க முயற்சித்ததில்லை .. நபிகளை இழிவாக பேசிவிட்டான் என்பதால் இரத்தம் கொதிக்கிறது என்ன நீ இப்படி பேசுகிறாய் என நினைத்தாலும் கவலையில்லை 
முஸ்லிம்கள் அரசியலில் தெளிவு பெறாதவரை இதுபோன்ற சற்றென்று உணர்ச்சியை தூண்டுகிற செயல்களை செய்துக்கொண்டே இருப்பார்கள் 
.. 
ஆளுக்கொரு கட்சி ஆளுக்கு இரண்டு இடங்களை வெவ்வேறு எதிரெதிர் அணிகளில் பெற்று அவரை இவரும் இவரும் அவரும் இகழ்ந்து பேசி கடைசியில் இரண்டும் போய் பிரதிநிதிகள் அற்ற சமூகமாய் நிற்கும் அவலம் .. யார் சரியானவர் என்பதில் கூட தெளிவற்ற சுயநலம் கண்ணை மறைக்கிற அவலம் .. தொடர்ந்து இத்தனை காலம் இருந்தோம் என்ன பயன் என எதிர்கேள்வி கேட்பதும் இஸ்லாமிய இயக்கங்கள் பிரித்ததுயாரென புலம்புவதும் என்ன செய்துவிட்டதென கைபிசைந்து நிற்பதை தவிர்த்து ஒற்றுமை எனும் கயிற்றை பலமாக பிடித்துக்கொள்ளாதவரை தொடரும் .. கல்வியை தாருங்கள் அரசு வேலைகளில் பணியமர்த்த முயற்சி செய்யுங்கள் வெளிநாடு மோகத்தை விரட்டிவிட்டு உள்நாட்டில் தொழில் தொடங்க முயலுங்கள்.. உயர்பதவிகளை அடைவதற்கு இப்போதிலிருந்து உங்கள் குழந்தைகளை தயார் செய்யுங்கள் ..
உயர்படிப்புகள், ஆய்வுகளுக்கு குழந்கைகளை ஊக்கபடுத்துங்கள்
கண்டவனும் கண்டதை பேசி திரிந்தால் செவிகொடுக்காதீர்கள் .. வணக்கம் வழிபாடு மார்க்கம் கோட்பாடுகளை உங்கள் உள்ளங்களிலும் இல்லங்களிலும் வைத்துக்கொள்ளுங்கள். பொது அரசியலை வாருங்கள்அரசியல் பயிலுங்கள் செயல்படுங்கள் இவையனைத்திறேகும் முன்பாக ஒற்றை தலைமையை கண்டெத்துங்கள் ..
..
ஆலஞ்சியார்