Friday, September 7, 2018

பெரியார் அம்பேத்கர்

இந்த காலத்திற்கு தந்தை பெரியார் அம்பேத்கர் கொள்கைகள் ஏற்கதக்கதல்ல.. @கிருஷ்ணசாமி .. எது சரியில்லையென்கிறார் சகமனிதனை மதிக்க கூடாதென்கிறாரா .. ஏற்றதாழ்வோடு தாழ்ந்தவன் உயர்சாதிக்காரன் என பேதம் கொண்டு துண்டை கக்கத்தி வைத்துக்கொண்டு கும்பிடுறேன் சாமி என சொல்வதுதான் சரியென்கிறாரா.. இவர் அப்பன் பாட்டன் போல செருப்பை கையில் தூக்கிக்கொண்டு ஜாதி தெருக்களில் செல்ல தயாரென்கிறாரா.. இவரும் இவர் குழந்தையும் இடஒதுக்கீட்டில் படித்து முன்னேறிவிட்டு .. இவர் சமூகத்தை சேர்ந்தவர்கள் உட்பட யாரும் இடஒதுக்கீட்டில் படிக்காமல் உயர்ஜாதிகாரன் பணம் படைத்தவன் மட்டும் உயர்கல்வியை பெறுவதுதான் சரி என்கிறாரா.. .. தான் கட்டும் மருத்துவக்கல்லூரிக்காக எந்த இடைஞ்சலும் வரகூடாதென்று பாசிசத்தின் காலில் விழுந்து கிடக்கிறவர் தன் சமூகத்தையே பள்ளத்தில் தள்ளிவிட நினைக்கிற கேடுகெட்ட எண்ணம் இவரை இப்படி பேச வைக்கிறது பாவம் யாருமே கண்டுக்கொள்வதில்லை ஆனாலும் எதாவது உளறிக்கொண்டே இருப்பார் பெரியாரின் கொள்கைகள் வேண்டாமாம்.. பார்பணீயத்திற்கெதிராக .. வர்ணம் கொண்டு பிரித்து தன்னை உயர்ந்தவனாய் காட்டி .. எல்லாருடைய உரிமைகளையும் பறித்து அனுபவித்து வந்ததை தடுத்து அனைவருக்கும் எல்லா கிடைக்கவேண்டும் கல்வி வேலைவாய்ப்பில் அவனுக்குரிய இடங்களை உறுதி செய்யவேண்டுமென்று பாடுபட்ட பெரியாரும் அம்பேத்கரும் வேண்டாம் .. குலக்கல்வி திட்டத்தோடு இந்த சமூகத்தில் சாக்கடை அள்ளுகிறவனின் மகன் அதே தொழிலை செய்தால் போதும் அவனும் உயர்பதவிக்கெல்லாம் வரகூடாதென்று நினைக்கிற எண்ணம் கொண்டோரோடு சேர்ந்ததால் சகதி உருளும் பன்றியாகிப்போனார்.. .. பெரியாரின் கொள்கைகள் நடப்பிலாக்கபட்டதால் தான் இன்றைக்கு கிருஷ்ணசாமியும் மகளும் டாக்டராக முடிந்தது .. சமுகநீதி நிலைநாட்டபட்டது .. 69 விழுக்காடு ஒதுக்கீடு தமிழகத்தில் இருப்பதும், எல்லாதுறைகளிலும்,தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட விளிம்புநிலை மக்களும் வேலைவாய்ப்பு பெறுவதை உறுதி செய்தது தலித்மக்களின் பாதுகாப்பாக வாழ இன்னும் சொல்லபோனால் மரியாதையாக வாழ முடிந்தது.. .. நன்றிக்கெட்டவனாக கூட இருந்துவிட்டுபோ.. ஆனால் துரோகியாய் காட்டிகொடுத்து பிழைக்காதே.. .. ஆலஞ்சியார்

Thursday, September 6, 2018

தளபதி

சென்னையில் அழகிரி கூட்டிய அமைதிபேரணி அனைவரையும் திரும்பிபார்க்க வைத்தது.. பொன்.ராதா.. பாவம் அவர் என்ன செய்வார் காலி சேர்களையே பார்த்து பழகிய கண்களுக்கு ஆயிரம்பேரை பார்த்தாலே பிரமிப்பாதான் இருக்கும் .. கண்ணில் ஆனந்தகண்ணீர் வந்திருக்குமே... .. அழகிரியை விடுங்கள் இந்த பாசிச கூட்டம் எப்படி ஆசைபடுகிறதென்பதை அவர்கள் நடவடிக்கைகள் காட்டி கொடுத்துவிடுகின்றன என்ன செய்தாலும் அதை மக்கள் கேவலபடுத்திவிடுகிறார்கள்.. திமுகவின் இருப்பு இவர்களை பதறவைக்கிறது .. திராவிடத்தை வீழ்த்திவிடலாமென்ற கனவில் .. ஜாதிவெறியை தூண்டி.. மக்களை மதத்தின் பெயரில் பிரித்து மொழியென்றும் தமிழ் தேசியமென்றும் உட்பகையை ஊட்டி குளிர்காய நினைத்தார்கள்.. கலைஞர்பெருமகனோடு தீராதபகைகாட்டி ..அவரோடு திராவிடத்தை இல்லாதாக்கிவிடலாம் என்று நினைத்ததெல்லாம் தலைகீழாய் போனது.. பெரும் எழுச்சியோடு குறிப்பாக இளைஞர்களிடையே திராவிடத்தை எத்திவைக்கும் பெரும்பணியை .. திராவிடகட்சிகளால் பயன்பெற்றவர்கள் பெரும்படையோடு களமிறங்கி .. கருத்தரங்கங்கள் விவாதமென பட்டையை கிளப்புகிறார்கள்.. திமுகவை கலைஞரை இப்போதுதான் சரியாக புரிந்து திமுகதான் நமக்கு பாதுகாப்பென தமிழக மக்கள் உணர தொடங்கியிருப்பது.. பாசிசபாஜகவிற்கு பீதியை தந்திருக்கிறது.. அதனால் தான் அரிதாரங்கள் கொண்டுவந்து நிறுத்தி அது எடுபடாதென்று அறிந்து யாரெல்லாம் திமுகவோடு பிணங்கி நிற்கிறார்களோ அவர்களை கொம்புசீவும் வேலையை பாஜக செய்கிறது.. .. கலைஞர் ஓய்விடத்தில் போய் தமிழனத்திற்கு எதிரானவர் இங்கே உறங்குகிறார் என சொன்னால் அது கருத்து சுதந்திரத்தில் வராதா என ஒரு பார்பனன் கேட்கிறான்.. போய் சொல்லிபாரும் மக்களின் reaction எதிர்வினையை அப்போது உணர்வீர்கள்.. கருத்து சுதந்திரம் என்பது தனிநபர் பகையல்ல கலைஞர் மீது எந்தளவு வன்மம் இருந்தால் இப்படி பேச சொல்லும் .. தமிழிசையை தனிப்பட்ட முறையில் யாரும் எதிர்க்கவில்லை மாறாக அவர் சார்ந்த கட்சியின் செயல்பாட்டால் விரக்தியின் எல்லைக்கே சென்றதன் விளைவு பாசிச பாஜக ஒழிக என்ற கோசம் அது இந்த பாசிச அரசிற்கெதிரானது..இதெல்லாம் புரியாமல் இல்லை எங்கே எழமுடியாமல் போய்விடுமோ என்று அதாவது வாய்க்குவந்ததை பேசி அசிங்கபடுகிறார்கள்.. .. இங்கே பார்பனர் மற்றும் அவர்களுக்கு ஒத்தூதுகிறவனை தவிர மற்றவர்களை ஏதோ தீண்டதகாதவர்களைப்போலவும் .. இவர்கள் மட்டுமே தேசபிமானிகள் போலவும் பேசுவதும் செயல்படுவதும் தொடர்ந்து நடந்தேறுகிறது .. தமிழகத்தில் ஏன் தென்னாட்டில் பாசிசத்தின் கோரப்பற்கள் பிடிங்கெறியபடுவதால் தீராத வன்மத்தோடு அடிமைகள் இனதுரோகிகளை சாதிமதவெறியர்களை வைத்து ஆட்டம்போடுகிறார்கள்..ஆனால் அவர்கள் எண்ணம் ஈடேறாது.. திராவிட இயக்கத்தை வழிநடத்த கலைஞர் பெருமகன் தளபதியை செதுக்கி தந்திருக்கிறார்.. #தளபதி_தமிழர்களின்_எதிர்காலம் .. ஆலஞ்சியார்

Wednesday, September 5, 2018

அழகிரி..

தன் பலம் அறிதல் வேண்டும் அதினும் பெரிது எதிராளியைப்பற்றி அறிந்திருத்தல் வேண்டும்.. .. கலைஞரின் விதையொன்று சொத்தையாய் போனதில் வருத்தமுண்டு.. யாரை எதிர்க்கவேண்டுமென்று தெரியாமல் அரசியலின் நாடிதுடிப்பை உணராமல் .. தன்நிலையறியாது கூட இருந்தவர்களின் கூச்சலில் முகம் தொலைந்து நிற்பது பரிதாபகரமாக இருக்கிறது .. எதை பேசவேண்டும் எப்போது பேசவேண்டுமென்று என்ற அறியாதுபோனார் .. இந்த நேரத்தில் தலைவர் தளபதியை பாராட்டவேண்டும் .. கண்டுக்கொள்ளாமல் எந்தவித எதிர்வினையும் ஆற்றாமல் எதிரியை நிலைகுலைய செய்யும் கலைஞரின் வித்தையை கையிலெடுத்தார்.. கட்சிக்கொடியை பயன்படுத்த கூடாதென்று வழக்கு தொடர்ந்தால் கூட போதும் .. அதையே பிடித்துக்கொண்டு மேலேறி வந்துவிடுவார்கள்.. ஆம் கலைஞர் "இருவர்" படத்தின் போது எம்ஜிஆர் கலைஞர் கதையை எடுத்திருப்பதால் தடைசெய்ய சொல்லலாமென்று கூட இருந்தவர் சொன்னபோது .. பிடித்தால் பாருங்கள் இல்லையென்றால் விடுங்களென்றார் .. படம் மிகப்பெரிய ப்ளாப்.. மணிரத்னம் கலைஞரை நேரில் சந்தித்து படத்தை பார்க்க வரவேண்டுமென்று கேட்ட போது புன்னகையோடு மறுத்தார்.. இந்த நேரத்தில் மற்றொன்றையும் பதிவு செய்யவேண்டும் .. ரோஜா படம் முதல் வாரம் கொட்டகை காலியாகதான் இருந்தது பிற்போக்குத்தனமான இஸ்லாமிய அமைப்புகள் எதிர்க்க .. படம் சூடுபிடித்து பெரிய வெற்றியை தந்தது .. திமுக தலைவர் தளபதி பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் அழகிரியின் முகத்தை ஊரறிய செய்துவிட்டார் காலமறிந்து தவிர்த்ததால் எதிராளி மிகவும் பலவீனமடைந்ததை ஊரறிந்தது.. .. எனது ஒற்றை கோரிக்கை என்னை கட்சியில் சேர்க்க வேண்டும் என்பதே தவிர வேறு ஒன்றும் இல்லை. நான் கட்சியில் சேர்ந்தால் மு க ஸ்டாலினை தலைவராக ஏற்றுக் கொள்வேன்.‌ஏனெனில் அவர் தான் தலைவர். எனக்கும் மு க ஸ்டாலினுக்கும் எந்த பிரச்சனையும் இல்லை. ஊடகங்கள் தான் அவ்வாறு பெரிதுப்படுத்தி செய்திகளை வெளியிட்டு வருகிறது. எங்க குடும்பத்தில் நாங்கள் ஒற்றுமையுடன் தான் உள்ளோம்.‌அரசியலில் தான் எனக்கும் ஸ்டாலினுக்கும் ‌போட்டியே தவிர ‌வேறு எந்த பிரச்சனையும் ‌ இல்லை..மு. க.அழகிரி ( ஆங்கில செய்தி பத்திரிக்கை ஒன்றுக்கு சற்று முன் ‌அளித்த பேட்டி ).. நிற்க.. அவரின் பேட்டியிலேயே அவரது இயலாமை தெரிகிறது.. அவரை ஏன் சேர்க்ககூடாதென்று சிலர் வினவலாம் .. கலைஞர் இருக்கும் போதே கலகம் செய்தவர் நாளை நிச்சயம் பிரச்சனையாக உருவெடுப்பாரே வரும் முன் காப்பதே நல்லது.. நாவலர் நெடுஞ்செழியன் அதிமுகவில் உதிர்ந்த ரோமமாய் நின்ற போது கலைஞருக்கு தூது அனுப்பி நான் திமுகவில் சேர்ந்துக்கொள்கிறேன் என்றார் .. கலைஞர் அவரை சேர்த்தால் அவருக்குரிய மரியாதை தர இயலாது ..இரண்டாவது இடம் அன்பகழனுக்குரியது அதில் பிரச்சனை வரும் சிலர் நாவலருக்கு தரலாம் அண்ணாவோடு இருந்தவர் என்றெல்லாம் பேசுவார்கள் என அவரை சேர்க்கவில்லை கடைசியில் சுயமிழந்து கட்டிவச்சகாசை (டெபாசிட்) இழந்து நின்றார் ஏனோ நாவலர் நினைப்பு வந்தது.. மூடிவைக்கிறவரைதான் மதிப்பு இது புரியாமல் போனது.. .. மூடிய கைகளை திறந்ததால் ஊருக்கு தெரிந்தது இவர்களின் இருப்பு.. .. ஆலஞ்சியார்

Tuesday, September 4, 2018

தமிழிசை...

சோபியா.. கருத்துசுதந்திரம் எதுவென்பதை நாம் உணரவேண்டும் ஆளும் பாஜக எதிராக பேசுவது மட்டும் அல்ல எதிர்வினையை களமறிந்தாற்ற வேண்டும் பாசிச பாஜக ஆட்சி ஒழிக என்பதில் எந்தவித சமரசமும் இல்லை ஆனால் அது தனிநபரின் மீதான தாக்குதலாக இருக்க கூடாது ..ஒருவரின் தனிப்பட்ட நிகழ்வில் நாம் சென்று ஒருவித கலவரத்தை செய்வதும் தவறு .. .. ஒட்டுமொத்த இந்தியாவும் பாசிச பாஜகஆட்சி ஒழிகவென்று சொல்ல வைத்ததில் திமுக வெற்றி கண்டிருக்கிறது ..திமுக தலைவர் தளபதியின் விரைந்து செயலாற்றியதும் அதை தொடர்ந்து அது உலகம் முழுவதுமான செய்தியாய் போனது .. திமுக சரியாக பயணிக்கிறதென்று நினைக்கிறேன் .. உடனுக்குடன் பதிலடி தருவதென்பது அவசியமாகிறது .,. பாவம் தமிழிசை எந்தவொரு விடயத்தையும் எப்படி கையாள்வதென்று தெரியாமல் ஊதி பெருசாக்கிவிட்டார் .. தமிழசை தன்னை ஆரிய சித்தாந்தி என எண்ணிக்கொள்கிறார் பாவம் அவர் உணரவில்லை அவருக்கு சேர்த்துதான் திராவிட இயக்கம் உழைத்துக்கொண்டிருக்கிறது .. சோபியாவின் பின்னால் மட்டுமல்ல .. தமிழிசை போன்றோருக்கும் நாளை துணை நிற்கும்,.. .. அதிகாரத்தில் இருக்கிறோமென்ற திமிர் அவரை அப்படி நடந்துக்கொள்ள வைத்திருக்கிறது சமீபகாலமாக தமிழக பாஜவினரின் உடல்மொழியில் ஒருவித தெனாவட்டை காணலாம் அது அறிவின் செருக்கிலோ அல்லது சரியான செயல்பாட்டிலோ உண்மையின் மீது நின்று கதைப்பதாலோ வந்ததில்லை மாறாக தமிழகத்தில் தலையாட்டும் "சர்க்கார்" .. ஊழலில் திளைத்து சுருட்டியதை பாதுகாக்க எதைச் சொன்னாலும் கிளைப்பிள்ளையைப்போல் சொல்லும் அடிமைகள் அரசு இருப்பதால் இவர்களின் ஆட்டம் அதிகரித்திருக்கிறது..ஆனால் தமிழகம் ஒவ்வொரு முறையும் காரி உமிழ்கிறது .. துடைத்துக்கொண்டு மீண்டும் மீண்டும் அதையை செய்கிறார்கள் தமிழிசை பொன்னர் வகையறாக்கள்.. .. கருத்து சுதந்திரம் .. எதிர்ப்பை காட்டுதல் என்பது தன்மானமுள்ளவர்கள் செயல் .. திமுக மீது எத்தனை விமர்சனங்கள் அவையெல்லாம் பொருட்படுத்தாமல் அதேவேளை எமது பணியை தொடர்ந்து கொண்டுதானிருக்கிறோம்.. இன்னும் சொல்லப்போனால் தனிநபர் தாக்குதல் கூட அதிகம் சந்தித்தவர் கலைஞர் பெருமகன் .. எல்லை மீறும் போது மட்டும் பதிலடி தருவார் .. திரு.ஸ்டாலின் மெட்ரோ ரயிலில் தாக்கினாரே என்று தமிழிசை கேட்கிறார் .. அங்கு நடந்தது வேறு பெண்கள் மீது இடித்து நின்று கொண்டிருந்து இடைஞ்சல் தந்தவரை தள்ளிவிட்டார் .. எதைஎதோடு ஒப்பிட வேண்டுமென்று கூட தெரியவில்லை.. தமிழிசை முன்னே பாஜகவினர் சோபியாவை தரம்தாழ்ந்த சொற்களை பயன்படுத்தியதாக அவரது தந்தையே எழுத்துபூர்வமாக புகார் அளித்திருக்கிறாரே அதற்கு தமிழிசையின் பதில் என்ன.. தமிழிசையின் சமீபத்திய செயல்கள் சகிக்கவில்லை சகவாசத்தால் வந்தது .. மோடி ஆட்சியை விமர்சிக்கலாமென்கிறார் இவர்களோ ஆடுகிறார்கள் .. .. சமூகஅநீதிக்கு எதிராக பொங்கி எழுந்தால் அது எப்படி தவறாகும்.. மக்களின் உணர்வுகளின் வெளிப்பாடு சிலநேரம் காட்டாற்று வெள்ளம் போல உடைத்துகொண்டு போகும் என்பதை பாசிசபாஜகவின் தமிழிசை உணரவேண்டும்.. .. #பாசிசபாஜகஆட்சிஒழிக .. ஆலஞ்சியார்

Monday, September 3, 2018

திமுகவிற்கு எச்சரிக்கையாம்..

மகா உத்தமர் வெளியில் வந்து நானுமிருக்கிறேன் என்று சொல்லிபார்த்து.. நான் யோக்கியனப்பா என கெஞ்சிபார்த்து யாருமே கண்டுக்கொள்ளாமல் போக .. தன் நிலைநிறுப்பை காட்ட யாராவது கவனிக்கமாட்டார்களா என்ற நிலைக்கு தள்ளபட்டு.. கடைசியில் திமுகவை சொறிகிறார் திமுகவிற்கு எச்சரிக்கையாம் .. ஒருவரின் தனிபட்ட விடயங்களை நாம் பேசுவதில்லை அது அவரும் அவரோடு சம்பந்தபட்டவரின் குடும்பம் சார்ந்தது அவர் முஸ்லிம்களிடம் மரியாதை இழந்து நிற்கிறார் .. இஸ்லாமிய சமூகத்தில் ஒரு பகுதிவரை ஆதிக்க செலுத்தி மூளைச்சலவை செய்து .. தன்னை உத்தமனாய் காட்டிக்கொண்டு.. தான் பேசுவது மட்டுமே உண்மை .. தனக்கு மட்டுமே இஸ்லாம் தெரியும் .. தான் சொல்லும் வழி தான் இஸ்லாம் இனிய மார்க்கமென்று அரைகுறை அறிவோடையோரை .. தனிமையில் ஒருவித மன வெறுமையில் வெளிநாடுகளில் வாழும் இஸ்லாமிய இளைஞர்களை .. வழிகெடுத்து உற்றார் உறவினர் சேர்ந்துவாழ்ந்த சமூகத்தில் .. எல்லாதளத்திலும் வேறுபாட்டை கொண்டுவந்து பிரித்து ஒற்றுமையை சிதைத்து இஸ்லாமிய இளைஞர்களை பயங்கரவாத செயல்களில் செலுத்தி.. வருடக்கணக்கில் சிறைகளில் வாழ வைத்ததை தவிர வேறென்ன சாதித்தார்.. .. திமுக இதை செய்யவில்லை திமுக ஆட்சியில்தான் முஸ்லிம் இளைஞர்கள் மீது வழக்கு பாய்ந்தது எனச் சொல்லி தாங்கள் செய்த தவறை நியாயபடுத்த நினைத்து.. பழியை தொடர்ந்து திமுக மீது சுமத்தி காழிபுணர்ச்சியை வளர்த்ததை தவிர வேறென்ன சாதித்தார்.. சிறையில் வாடும் குடும்பங்களுக்கு நிதிவசூல் செய்து அதிலும் கமிஷன் பார்த்து சொகுசாக வாழ்கிறார்கள் .. யோசிக்க மறந்தவன் ..சிறையில் சிறுநீரகம் செயலிழந்து வாழ்வை தொலைத்து வாடுகிறான்.. பாவம் அவன் குடும்பம் மகன் வளர்ந்து நம் குடும்பத்தை காப்பான் என்ற கனவு சிதைந்து அவனை வெளியே எடுக்க சொத்தையெல்லாம் இழந்து நிற்கிறார்கள்.. சொந்த சமூகத்திற்கு இளைஞர்களை வழிகெடுத்தவர் .. யோக்கியத்தைப்பற்றி பேசுவது ஏமாற்றுவேலை.. .. திமுக மீதான விமர்சனங்களை எப்போதுமே எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம் அது உண்மையானதாக சரியானதாக இருந்தால் அதற்கு விளக்கம் தர தயாராக இருக்கிறோம் ஆனால் தங்களின் நிலைநிறுப்பிற்காக திமுகவை சாடுவதென்பதைஏற்க முடியாது .. திமுக இஸ்லாமிய சமூகத்திற்காக செய்தவைகள்.ஏராளம் . கல்வி வேலைவாய்ப்பில் பின்தங்கியதை கருத்தில் கொண்டு பிற்படுத்தபட்டோர் பிரிவில் உள் இடஒதுக்கீட்டை கொண்டுவந்தது..சிறுபான்மை சமூகத்தின் உரிமைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுக்கும் இயக்கம் திமுக.. திமுகவை குறைகூறுவதை விடுத்து வேறுவேலையை செய்யலாம்.. .. ஆலஞ்சியார்

Sunday, September 2, 2018

கலைஞர்

மெரினாவிற்கு போய்விட்டு வந்தால் குளிச்சிட்டு பூணூலை மாத்திக்கணும் என்ற ஆரியர்களின் கிண்டலுக்கெதிராக .. பிறந்த குழந்தைகளை கூட கலைஞரின் காலடியில் வைத்து மிகப்பெரிய ஆரியத்திற்கெதிரான கலகத்தை மக்கள் மௌனமாய் செய்கிறார்கள். .. குடியரசு இதழில் #தீட்டாயிடுத்து என்று கட்டுரை தீட்டியவர் ஓய்வெடுக்க சென்ற பிறகும் மிகப்பெரிய புரட்சியை அமைதியாய் செய்துக்கொண்டிருக்கிறார்.. .. வணங்குதல் அல்ல வழிபாடு முறையல்ல மாறாக நன்றி நவிழ்தல் தன் இன மேம்பாட்டிற்காக உழைத்தவரை.. இந்த மனிதசமூகத்தின் .. மூட புரட்டுகளுக்கெதிராக ஆணியடித்தவரை .. வாழும் வரை ஒரு போராளியாய் இந்த சமூகத்தின் புரையோடி போயிருந்த நாற்றமடித்த சாதி மத வேற்றுமையை கலைந்து சமத்துவபுரம் கண்ட புரட்சியாளரை.. ஏழைகளுக்கு எட்டாத உயர்கல்வியை .. முதல் தலைமுறை பட்டதாரிக்கு இலவசமாய் அரசு செலவில் உயர்கல்வி தந்த கல்விகண் தந்த கோமானை .. வரும் புதிய தலைமுறைக்கு எடுத்து சொல்லும் செயலாய் பிறந்த குழந்தைக்கு தாய்பாலைப்போல தமிழுக்கு தொண்டு செய்ய முத்தமிழின் மடியில் கிடத்துகிறார்கள்.. .. இதுவரை எத்தனையோ தலைவர்கள் வந்தார்கள் வாழ்ந்தார்கள் ..நாட்டிற்கு உழைத்தார்கள் மறைந்தார்கள்.. ஆனால் கலைஞரை இந்த சமூகம் நன்றியோடு காலமெல்லாம் நினைவு கூறும் ..மிக கடுமையான விடயமென நாம் எண்ணிக்கொண்டிருந்தவைகளை ஒன்றுமே இல்லாமல் உடைத்துபோட்டு போய்விட்டார்.. வரலாற்றில் எந்தபக்கம் திருப்பினாலும் .. அரைநூற்றாண்டில் கலைஞர் செய்ததின் வினை ... இன்னும் பல நூற்றாண்டுகள் கடந்தும் ஆற்றிக்கொண்டே இருக்கும்... .. ஆம் கலைஞரைப்பற்றி நீ அறிய முற்படுகிறபோதுதான் உன்னையே நீ யாரென்று உணர முடியும் எந்தளவிற்கு உன்னை உயர்த்தி பிடித்திருக்கிறாரென்று தெரியும்,.. கலைஞரின் வாழ்வியல் தெளிவான திறந்த புத்தகம் அவர் ஆற்றிய அளவிலா நன்மைகள் வரும் தலைமுறைக்கும் நல்லதையே செய்து கொண்டிருக்கும்.. பகுத்தறிவு பகலவனின் சொல்லில் அண்ணா தந்த பாதையில் அவர் நடத்திய ராஜபார்ட்டை .. எவராலும் ஈடுசெய்ய முடியாது ... கலைஞர் தனி மனிதரல்ல .. சமூகநீதியின் முகம் சமூகநீதி தத்துவம் .. கலைஞர் தமிழரின் தவம் .. ஆலஞ்சியார்

Saturday, September 1, 2018

கலைஞர் புகழ் வணக்கம்

கலைஞருக்கு புகழ் வணக்கம்.. எந்த தலைவருக்கும் கிடைக்காத மரியாதையாய் பல்வேறு துறை சார்ந்தவர்கள்,இந்த தலைவனை புகழ்கிறார்கள். .. அரசியல் இயக்கத்தை சார்ந்தவர்கள் மறைந்த அரசியல் தலைவருக்கு புகழஞ்சலி செலுத்துவதென்பது நாம் கண்டதுதான் அந்த கட்சியை சார்ந்தவர்கள் அவரது சமுதாயத்தை சேர்ந்தவர்கள் அவரை புகழ்வதை நாம் கண்டும் கேட்டுமிருக்கிறோம்.. தேசிய தலைவர்களில் ஒரு சிலரை புகழ்ந்து வரலாற்றில் படித்திருக்கிறோம் .. ஆனால் ஒட்டுமொத்த இந்தியாவும் ஒரு மனிதரை புகழ்கிறது ..பல்வேறு துறைசார்ந்த சான்றோர்கள் விருப்புவெறுப்பின்றி கலைஞரின் சாதனைகளை பேசுகிறார்கள் .. தனி மனிதனால் அதுவும் அதிகம் வெளிச்சம் வராத சிற்றூரின் பின்னணியில் வளர்ந்து மிகவும் பின்தங்கிய சமூகத்திலிருந்து ஒருவர் நவீன இந்தியாவின் சிற்பிகளுள் ஒருவராக திகழ முடிந்ததெப்படி என வியக்கிறார்கள்.. எத்தனை சோதனைகள் எவ்வளவு பொய் பிரச்சாரங்கள் தனிமனித தாக்குதல்கள் .. பொய் குற்றசாட்டுகள் இவை அனைத்தையும் .. கடந்து "அறம் வெல்லும்" என்ற நம்பிக்கையோடு ஒரு சமூக போராளியாக .. இந்த இந்திய சமூகத்தின் வர்ணாசரம கோட்பாடுகளால் அடக்கி ஒடுக்கப்பட்ட விளிம்புநிலை மக்களை ஏற்றிவிட தன் வாழ்நாள் முழுவதும் சிந்தித்து வாய்ப்பு கிடைக்கிற போதெல்லாம் செயல்படுத்தி அவர்கள் தம் முன்னேற்றத்திற்கு பாடுபட்ட ஒரு மனிதர்.. யாராலும் அடையமுடியாத சாதனைகளை ..செய்து காட்டிய ஓய்வில்லாத உழைப்பை இந்த நாடே போற்றி புகழ்ந்து தன் நன்றிதனை செய்கிறது.. .. இந்த மா மனிதரை தரம்தாழ்ந்து விமர்சித்தும் ஊழல் அளவிற்கதிகமாக சொத்தை சேர்த்துவிட்டார் .. உலகமே காண ஊழல்புகார் சுமத்திய இவரது குடும்ப உறுப்பினர்களை ஏதோ கொள்ளைக்காரர்கள் போல ஊடகங்களின் மூலம் செய்திகள் பரப்பி.. ஆட்சி அதிகாரத்திற்கு வரவிடாமல் செய்தால் ..ஒடுக்கப்பட்ட பிற்படுத்தப்பட்டவர்களின் உரிமைகளை தடுக்கலாம் என்றெண்ணி .. அடுக்கடுக்காக விமர்சனங்கள் .. ஆனால் உண்மையை என்றைக்கும் ஆழ புதைத்தாலும் அது விதையைப்போல கிழித்து வெளிவரும் என்ற உண்மை இப்போது மக்கள் உணர தொடங்கியிருக்கிறார்கள் .. எத்தனை குற்றசாட்டுகள் ஒன்றில் கூட இவரையோ இவர் சார்ந்த இயக்கத்தையோ சட்டத்தின் முன் குற்றவாளியென்று நிரூபிக்க முடியவில்லை அவர் மீது தொடுக்கபட்ட வழக்குகளெல்லாம் பொய்யால் குரோதத்தால் எப்படியும் அவரை வீழ்த்திட வேண்டுமென்று சொல்லபட்டவை .. அறம் வெல்லுமென்று அமைதி காத்து கடைசியில் எல்லா பொய்களையும் சூழ்ச்சிகளையும் வென்றார்.. .. இன்றைக்கு சாதி மதம் பார்க்காமல் மொழி இனம் பார்க்காமல் இந்தியா முழுவதும் கொண்டாடபடுகிற .. எங்கள் மண்ணில் இப்படியொரு மனிதர் .. அரசியல்வாதி கலைஞர் சமூகநீதி காப்பாளர் பிறக்கவில்லையே .. இப்போது நாங்கள் யோசித்து செயல்படுத்த நினைக்கும் விடயங்களை திட்டங்களை முப்பது வருடங்களுக்கு முன்பே தமிழகத்தில் நடைமுறைப்படுத்தி அதை வெற்றிகரமாக செயல்படுத்தி காட்டியிருக்கிறார் இந்த தொலைநோக்கு சிந்தனையாளரென வியக்கிறார்கள்.. நீதியரசர்கள் திறந்த மனதோடு எந்தளவிற்கு சமூகநீதிக்காக பாடுபட்டவர் எத்தனை அழகாக சட்டங்களை இயற்றி இடஒதுக்கீடு போன்ற விடயங்களில் தெளிவான பாதையை வகுத்து .. நீதிமன்றங்களால் தடைபோட முடியாத அளவிற்கு சட்டமியற்றியதை புகழ்ந்திருக்கிறார்கள் .. பிற மாநிலங்களில் இடஒதுக்கீடு தந்த சட்டங்கள் நீர்த்து போனபோதும் தமிழகத்தில் அதை வெற்றிகரமாக செயல்படுத்தி சட்டசிக்கல்களை கலைந்து செயல்படுத்தியதை வியந்து போற்றுகிறார்கள்.. நீதியரசர் அக்பர் அலி இஸ்லாமிய சமுதாய மக்களின் உள்ளுணர்வை மிக தெளிவாக பதிவு செய்தார் இன்றைக்கு இஸ்லாமிய சமூகத்தில் பரவி கிடக்கும் கலைஞரைப்பற்றிய அறியாமை ஒருவித கசப்பு விலகும்.. நீதியரசர் மோகன் கோகுலகிருஷ்ணன் போன்ற சமூகநீதியரசர்கள் புகழ்மாலை தமிழரிடையே ஏற்பட்டிருக்கிற தெளிவின்மைக்கு விளக்கமாக அமையும் .. தமிழக மக்கள் இப்போதுதான் கலைஞரை சரியாக புரிந்து .. இந்த மாபெரும் தலைவனை சில விவரகேடுகளின் பேச்சை பொய் பிரச்சாரத்தை நம்பி அதிகாரத்திலிருந்து சிலகாலம் அகற்றி நிறுத்தினோமே என வருந்துகிறார்கள் .. தொடர்ந்து வாய்ப்பை வழங்கியிருந்தால் தமிழகம் மிக சிறந்த மாநிலமாக திகழ்ந்திருக்கும் .. கிடைத்த குறைந்த வாய்ப்பை மிக சரியாக பயன்படுத்தி சமூகநீதியை நிலைநாட்டி ..மண்,கலாச்சாரம், மொழி,இனம் என்ற பல்வேறு தளங்களிலும் தனிமுத்திரை பதித்து யாருமே செய்ய முடியாத சாதனையை எட்டமுடியாத உயரத்தை தொட்ட மாபெரும் தலைவருக்கு .. நாடும் இனமும் என்றைக்கும் நன்றி மறவாமல் புகழ்பாடும்... .. வாழ்க! கலைஞர் புகழ்.. .. ஆலஞ்சியார்