Monday, January 8, 2018
திமுக சதிகளை முறியடிக்கும்
திமுக மா.செ கூட்டத்தில் திருவாரூர் மாவட்டச் செயலாளர் பூண்டி கலைவாணனின் பேச்சு எனக்கு தஞ்சை தளகர்த்தர் கோ.சி.மணியை நினைவுபடுத்தியது..
பாலைவன ரோஜாக்கள் படத்தில் தலைவர் ஒரு வசனம் எழுதியிருப்பார். ‘ரயில் இன்ஜினையே களவாடிச் சென்றவர்களை விட்டுவிட்டு கரித்துண்டுகளை பொறுக்கியவனுக்கு தண்டனையா?’ என்று கேட்டிருப்பார். அதுபோல ஆர்.கே.நகர் தேர்தலில் திமுக என்ற ரயிலின் இன்ஜினையே சீர் குலைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதை விட்டுவிட்டு, கரித்துண்டுகளைத் திருடிய வட்டச் செயலாளர்கள் மீது நடவடிக்கை எடுத்துக் கொண்டிருக்கிறோம். ஆர்.கே.நகரில் இன்ஜினையே திருடி விற்றவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறோம்..என்று கேட்டார்..
இதுதான் திமுக.. தவறை யார் தெய்தாலும் சுட்டிகாட்டும் துணிவு.. அதை தலைமையின் கவனத்திற்கு புரிகிற மாதிரி விளக்கி சொல்லும் ஆற்றல் இதுபோன்ற நிகழ்வுகள் எந்த கட்சியிலும் நடக்காது.. ஆம்.. எந்த கட்சியிலுமே பேச அனுமதிக்கவே மாட்டார்கள் ஏற்கனவே எப்படி பேசவேண்டுமென தயார்படுத்தி அனுப்புவார்கள் ..திமுக ஜனநாயக இயக்கம் என்பதற்கு இது சிறந்த எடுத்துகாட்டு..
..
விடயத்திற்கு வருவோம்.. பூண்டியின் கருத்தில் உடன்படுகிறேன் ஒட்டிமொத்த அமைப்பையே கேலிகூத்தாக்கி .. நடந்த விடயங்கள் நம்மை தலைகுனிய வைத்திருக்கிறது மாவட்ட தலைமை தார்மீக பொறுப்பேற்றிருக்கவேண்டும்.. செயல்தலைவராக பொறுப்பேற்று நடந்த முதல் இடைத்தேர்தல் என்பதையும்.. எளிதாக வெல்லகூடிய சூழ்நிலை நிலவியதை மாற்றி யாரெல்லாம் விலைபோனார்கள் .. என்பதை அடையாளம் காண வேண்டும் அதற்கான பணிகளில் தளபதி இறங்கியிருக்கிறார் என அறிந்து மகிழ்வுண்டு.. நிறைய சீர்திருத்தங்களை முன்னெடுக்கவேண்டும்.. கிளைக்கழக அதிகாரத்தை பூத் (வாக்குசாவடி)வாரியாக பிரித்தளிப்பது அதிகார பரவலை ஏற்படுத்தும் நல்ல முடிவும் கூட எல்லைகளை சுருக்கி பணி செய்ய சொல்வதின் மூலம் நேரடி கண்காணிப்பு இலகுவாகும்.. நல்ல முடிவை தளபதி எடுத்திருக்கிறார்..
..
கலைஞர் தலைமையில் நடக்கும் மா.செ.கூட்டத்திலும் சரி பொதுக்குழு செயற்குழுவிலும் சரி நிறைய மாற்று கருத்துகளை விவாதிக்க பேச அனுமதிக்கபட்டது.. எல்லை மீறும் போது கோ.சி.மணியை கொண்டு சரிச்செய்வார்.
அந்த நிகழ்வுகளை தான் இப்போது காண்கிறேன்.. மன்னை,வீரபாண்டியார், நெல்லிகுப்பம் கிருஷ்ணமூர்த்தி, கோ.சி.மணி போன்றோரெல்லாம் தலைமைக்கு எந்தளவிற்கு விசுவாசமாக இருந்தார்களோ அதே அளவு தவறுகளை சுட்டிகாட்டி திருந்தங்களை கொண்டுவந்திருக்கிறார்கள்.. சில முக்கிய முடிவுகள் எடுக்கும் போதெல்லாம் முக்கிய நிர்வாகிகளோடு
கலைஞர் ஆலோசித்திருக்கிறார்.. சிறந்த ஜனநாயக பாதையை நமக்கு கலைஞர் நடத்திகாட்டியிருக்கிறார்.. அதே பாதையில் நடைபோட்டால் நல்ல எதிர்காலம் நமக்கு கிடைக்கும்..
..
234 தொகுதிகளிலும் தொண்டர்களின் கருத்தை கேட்க பிப்ரவரி முதல் பயணம் மேற்கொள்ளபோவதாக தளபதி சொல்லியிருக்கிறார் நல்ல தொடக்கம் காரணம் நிர்வாகிகள் அல்ல பலம் தொண்டர்கள் .. நடந்தவைகளையும் நடப்பவைகளையும் நேரடியாக தளபதியிடம் சொல்லுங்கள்...அதுவே சிறந்ததாக அமையும் கட்சிக்கு வலுசேர்க்கும்..
..
இங்கே ஒன்றை குறிப்பிட வேண்டும்..
எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம்
நடிகர் ரஜினிகாந்த் அரசியல் வருகை திமுகவை பாதிக்குமா என்று பலரும் தொலைக்காட்சிகளில் விவாதிக்கிறார்கள். எம்.ஜி.ஆர். திமுகவை விட்டுப் போய் புதுக்கட்சி ஆரம்பித்தபோது அவருக்கு பலத்த எழுச்சியும், வரவேற்பும் கிராமங்கள் தோறும் இருந்தது. அடுத்து வைகோ நம்மை விட்டுப் பிரிந்தபோதும் பலத்த அதிர்வு இருந்தது. கடைசியாக விஜயகாந்த் கட்சி ஆரம்பித்தபோது வட மாவட்டங்களில் பல கிராமங்களிலும் அவருக்கு கிளைகள் தொடங்கப்பட்டு நல்ல வரவேற்பு இருந்தது. ஆனால், இப்போது ரஜினிக்கு ஊடகங்கள் மட்டுமே பிரசாரம் செய்து வருகின்றன. அவருக்கு கிராமங்களில் எந்த வரவேற்பும் இல்லை. எனவே நாம் ரஜினி பற்றி கவலைப்பட வேண்டியதில்லை என்று தெரிவித்தார்.. இதுதான் நிதர்சனம்..
..
இல்லாதயொன்றை நமது பொது எதிரிகள் பூதாகரமாக்கி காட்டி தங்களுக்குள் மகிழ்ந்துக்கொள்கிறா்கள் ..
பாவம் உண்மை தெரியும் போது தலைகுனிந்து நிற்பர்..
#நாம்_நம்பணியை_செவ்வனே_செய்வோம்..
..
Aalanci Spm
Sunday, January 7, 2018
திமுக...
எந்த கொம்பனாலும் தொட்டுபார்க்க முடியாது தளபதி..
..
சிறிய சுணக்கமும் தோல்வியு ம் கண்டவரையும் பேசவைத்திருக்கிறது.. ரஜினி கடைசி அத்தியாயத்தை எழுதுவாராம்.. முதலில் அவரின் கொள்கையை சொல்ல சொல்லுங்கள்
பிறகு தேறுவாரா என பார்ப்போம்..
..
நிறைய பேரை கொம்பு வீசி அனுப்பி பார்த்துவிட்டீர்கள் ஆனால் பாருங்கள் எல்லா புயல்மழைக்கு தாக்குபிடிக்கிறது இந்த ஆலமரம் . எப்படியென்று அறிந்ததுண்டா.. மூட்டைப்பூச்சியைப்போல நசுக்குவேனென்ற ராஜாஜியிடமும் 6000 அடி பள்ளத்தில் புதைத்துவிடுவேன் என்ற பக்தவச்சத்தலையிடமும் கேட்டு தெரிந்துக்கொண்டிருக்கலாம்.. பாவம் பொன்னர் என்ன செய்வார் அப்பச்சியை அரை அம்மணமாகவிட்டவனிடமே சொரணையற்று காலடி கிடப்பதால் ஒன்றும் புரியவில்லை..
தோல்விகள் ஒன்றும் புதிதல்ல அது போல் வெற்றியும்.. என்று புரியவில்லை
..
எங்களை வடிவமைத்த பேராசான் பெரியாரே
ராஜாஜியோடு இணைந்து களம் கண்டு வெற்றிபெற்றவுடன் தந்த முதல் அறிக்கையில்..
நான் தோற்றுவிட்டேன் பார்பான் வெற்றிபெற்றுவிட்டான்.. இதற்குமுன்பு இரண்டுமுறை தோற்கடித்திருக்கிறேன் .. என்னிடம் பொறுப்பை ஒப்படைத்துவிடுங்கள் நான் பார்த்துக்கொள்கிறேன்.. பார்பானை எப்படி தோற்கடிக்கவேண்டுமென எனக்கு தெரியுமென்றார்..
..
வெற்றி பெற்றவுடன் அண்ணா நேராக பெரியாரைதான் போய் பார்த்தார்..
ராஜாஜியோ என்னை ஏமாற்றிவிட்டீர்கள் என்றபோது காலமெல்லாம் எம் இனத்தை ஏமாற்றி வருகிறீர்களே நான் இரண்டு தினம் உங்களை ஏமாற்ற கூடாதா.. என்றார்.. பேரறிஞர் அண்ணா..
அப்போது பெரியார் ஒன்றை சொன்னார்..
முன்னேற்ற கழகத்திற்கு எதிர்க்கட்சிகளால் ஆபத்துவராது உட்கட்சி பூசலால் தான் வரும்..என்றார் அதைப்போலவே எம்ஜிஆரால் வந்தது.. மாணவர்களுக்கு இந்த அரசுக்கு எந்த கேடும் வராமல் பாதுகாத்துக்கொள்ளுங்கள்..
இல்லையென்றால் இந்த ஆட்சி போனால் அடியோடு நிலைமை மாறிவிடும்.. அப்புறம் மனுநீதிபடிதான் ஆட்சி நடக்கும் என்றார்..
எத்தனை தொலைநோக்கு பார்வை.. பெரியார் சொன்னதுதான் நடந்தது.. மகோரா எல்லா நீதிகளையும் மீறினார் மக்கள் கவர்ச்சியை மட்டுமே நம்பினால் போதுமென நம்பவைத்ததால் எத்தனை இழிவு அது இன்றும் தொடர்கிறதே.. ஆனாலும் பெரியாரை மறந்க ஒன்றை (எம்ஜிஆர்) மகோராவாலேயே நடத்த முடியவில்லை காரணம் அடித்தளத்தை மிகபலமான சமூக நீதியால் அமைத்திருந்தார் பெரியார்
..
வெற்றிடம் என்ற சொல்லை சமீபகாலமாக ஊடகங்களில் பேச வைக்கபடுகிறது..
மொத்த வாக்காளர்களில் .. மூன்றில் இரண்டு பங்கை அதிமுக திமுக பெறுகிறது.. இவர்களை
இல்லாதாக்க போவதாக சொல்வது அவர்களுக்கே வேடிக்கையாக தெரியவில்லை
இரு பெரும் கட்சிக்கும் படுதோல்வியையும் மிகப்பெரிய வெற்றியும் பெற்றிருக்கின்றன்..மற்றவர்கள் இரு கட்சிகளை அரவணைக்காமல் போனால் இருக்குமிடமே தெரியாமல் போனதுதான் மிச்சம்.. சாதியும் மதமும் இங்கே எடுபடாது மட்டுமல்ல இருக்கிற இடமே தெரியாமல் அழித்துவிடுமென்பதற்கு பாஜகவும் பாமகவுமெ சான்று
..
இன்றைக்கு இருந்த இடம் தெரியாதவனெல்லாம் துள்ளி குதிக்கிறான்.. திமுகவை ஒழிக்கவேண்டுமென கங்கனம் கட்டிக்கொண்டு செயல்படுகிறான்.. ஆரியர் சூழ்ச்சி இரையாகி மகோரா எனும் கெடுதி தொடங்கி வைத்த அலங்கோலங்களை எல்லாம் தனியொருவராய் நின்று இந்த தமிழ் மக்களை காத்துவந்த கலைஞர் .. உடல் நலிவுற்றவுடன் திமுகவை முடிந்தது பாரென எக்காலமிடுகிறார்கள் விவரகேடுகள்..
..
எம் பேராசானின் கைதடி கொண்டு வீறுநடை போடுவோமென அறியாமல் போன அறிவிலிக்கூட்டம்.. ஆசானை மீறிய எதுவும் இங்கே நடக்காது .. மரித்து 44 ஆண்டுகள் ஆகியும் இந்த மண்ணில் பார்பனர்கள் செயலிழந்து நிற்க செய்திருக்கிறானே பெருங்கிழவன்.. அவன் வழியொன்றே எமக்கு போதும்..
..
துவண்டு விழுகிறபோதெல்லாம் எமக்கு புத்துணர்ச்சி தருவதற்கு எம்மை யாமே புதுபித்துக்கொள்ள மாபெரும் கூட்டம் ஒன்று போதும்.. முன்பை விட வேகமான பாய்ச்சலோடு எதிரிகள் குலைநடுங்க வீறுக்கொண்டு வருவோம்.. இதோ அதற்கான ஏற்பாடுகள் தயார். ஈரோட்டு கிழவனில் சொல்படி ஆட .. ஈரோட்டிலே மண்டல மாநாடு ..மாநிலசுயாட்சி சமுக நீதி மத நல்லிணக்கம்..
எல்லாவற்றிக்கும் பதில் கிடைக்கும்.. உளறிக்கொண்டிருப்போருக்கும் உதவாகரைகளுக்கும் ..
அங்கே இறுதி அத்தியாயம் எழுதப்படும்
..
Aalanci Spm
Saturday, January 6, 2018
திராவிடம்
எத்தனை கிறுக்கர்கள்
அதிமுகவின் கடைசி அத்தியாயம் எழுதப்பட்டு வருகிறது.. திமுக கடைசி அத்தியாயத்தை நோக்கி .. நோட்டாவிடம் தோற்ற கட்சியின் நாகர்கோவில் எம்பி.
..
முஸ்லிம் பிள்ளைகள் நபிகளை கும்பிடலாம்..? ஆனால் முப்பாட்டன் முருகன் தான்..
பாஜகவை ஒருபோதும் மதவாத கட்சியென சொல்லமாட்டேன் .. சீமான்
உண்மை உழைப்பு உயர்வு..
சாதிமதமற்ற ஆன்மீக அரசியல்.. ஸ்டைல் நடிகர்
எனக்கொரு வாய்ப்பு தாருங்கள் .. மருத்துவக் கல்லூரி ஊழல் புகழ் அன்புமணி..
ஆர்.கே.நகர் மக்கள் பிச்சைக்காரர்கள் .. மக்களை காப்பாற்ற துடிக்கும் கமலஹாசன்..
..
எல்லாவற்றிக்கும் காரணம் பாஜக அதிமுக அரசை கலைத்து ஜனநாயக முறைப்படி தேர்தலை சந்திக்க வைத்திருந்தால் இவர்களின் உளறலையெல்லாம் கேட்டிருக்கமாட்டோம்.. திமுக அதிமுகவை அழித்துவிடுவதை பேசி திரியும் பொன்னர் நாகர்கோவில் பக்கம் போனால் தெரியும்.. ஒரு தோல்வி மாபெரும் இயக்கத்தை சரித்துவிடுமா என்ன.. சிறந்த ஜனநாயக கட்டமைப்போடு கூடிய இயக்கத்தை கொள்கையில் உறுதிக் கொண்ட பேரியக்கத்தை ... எங்கே என தேடும் நிலையில் உள்ள கட்சி வீழ்த்திவிடுமாம்.. போய் வேலைபாரும் பொன்னரே..
..
முஸ்லிம்கள் நபிகளை தொழுவர்.. என்கிற போதே இன்னமும் முதிர்ச்சியடையவில்லை .. அரைகுறை என தெளிவாக தெரிகிறது..
நமக்கெல்லாம் முப்பாட்டன் முருகன் என்ற போது மோகன் பகவத் கருத்தை வழிமொழிவது தெரிகிறது.. பாஜக மதவாத கட்சியல்ல என்று கூறி முழு சந்திரமுகியாய் காட்சி தருகிறார்..
எங்களை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் என்பதிலிருந்தே இன்னமும் வளரவில்லையென்றே சொல்லவேண்டும்.. கைகளை தூக்கி வீர வசனம் பேசினால் போதுமா .. புரிதல் வேண்டும் தெளிவான சிந்தனை வேண்டும் பலதரப்பட்ட மக்களின் மதிப்பை பெற்றிருக்கவேண்டும்.. முருகன் முப்பாட்டனாம்.. முருகனின் அப்பன்.. சிவனும் அண்ணன் கணபதியும் .. தமிழர்கள் இல்லையே.. தமிழ்கடவுள் அல்லாதவனுக்கு பிறந்த முருகன் பாட்டான் என்றால் .. தமிழனை தமிழன்தான் ஆளவேண்டுமென்பது அடிபட்டு போகுமே... புரியவில்லையா.. தமிழின் ஐம்பெருங்காப்பியங்களில் எங்குமே நீங்க சொன்ன கடவுள் இல்லையே.. தமிழன் இயற்கையோடு வாழ்ந்தவன் வணங்கியவன் அவ்வளவுதான் இடையில் ஆரியர் மற்றும் பிற (முகலாயர் ஆங்கிலேயர்) ..வரவிற்கு பிறகு தான் சாதி மதம்.. திராவிடத்தை எதிர்க்கிறேன் என்கிற போதே அதன் பின்னில் ஆரியம் இருப்பது பட்டவர்த்தமாக தெரிகிறது.. என்னதான் சூழ்ச்சி செய்தாலும் நீயும் அவனுக்கு தாழ்ந்தவன்தான்..
தமிழ் தமிழர் .. நாங்கள் மட்டும்தான் தமிழர் என்கிற உளறலை குறைத்துக்கொண்டால் மட்டுமே இனி வாழ்வு..
..
எனக்கொரு வாய்ப்பு தாருங்களென சாதி கொண்டையை மறைக்க முடியாமல் அன்புமணியும்.. சிஸடத்தை சரி செய்ய வருகிறேனென ஆன்மீகத்தை துணைக்கழைத்து கிறுக்கனும்.. மக்களை பிச்சைக்காரர்களென ..தாக்குதல் நடத்தி .. சினிமா வசனம் பேசும் ஞானக்கிறுக்கன் நானென்னும் கமலும்... இன்னும் எத்தனை கிறுக்கர்கள் வருவார்கள்..
அப்பப்பா..
தமிழகம் .. வருகிற போகிறவனெல்லாம் நின்று கூத்தாடும் இடமாகிப்போனது.. எழுபதுகளில் தொடங்கி வைத்த கூத்தாடி அரசியல்.. ஐம்பதாண்டு பின்னிட்டும் ஆசைக்காட்டி வருகிறது.. மக்களை பிச்சைகாரன் என்று கூட சொல்ல முடிகிறது.. ₹20 மஸ்கோத் அல்வா தந்தால் போதும் வாக்களித்து விடுவார்களென நம்பவைக்கபடுகிறது.. கண்ட களவாணிகளும் கடைவிரிக்க முடிகிறது.. இன்னும் எத்தனை திரைதுறையினர்.. நேரடியாக முதல்வர் கனவோடு வருவார்கள்..
..
சிறிய சுனக்கம் .. நிறைய கேள்விகளை கேட்கிறது.. சோம்பல் முறித்து எழுந்து நின்றால்..கண்டவுடன் கட்டிய துணியிலேயே கழிந்துவிடுவார்கள்.. பாவம் முதலில் நாவடக்க பழகுங்கள்.. ஊடகங்கள் பரபரப்பிற்காக கண்ட கழிசடைகளிடம் பேட்ட்வாங்கி போடுவதை நிறுத்துங்கள்...
சசிக்கல..
..
#நாடகத்தை_நிறுத்துங்கடே..
..
திராவிடத்தால் எழுந்தோம் ..
..
Aalanci Spm
Friday, January 5, 2018
திருமாவின் அரசியல்
என்னானது திருமாவிற்கு..
திடீரென சாதி மதமற்ற ஆன்மீகம் என்பதை வரவேற்றவர்.. கூடவே இருக்கும் ரவிக்குமாரின் மாற்று கருத்தை இப்போது மொழிகிறார்..
ரஜினி காந்த் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால் R S S ஆட்சியாகவே அமையும் -- திருமாவளவன்
இது அரசியல் ஆரம்பபாடம் படிக்கும் அனைவரும் அறிந்தது தான்.. திருமாவின் அரசியல் பார்வை அடிக்கடி மாறும்தன்மை கொண்டதாக இருக்கிறது.. ஆன்மீகம் என்பது அது எந்த மதத்தை கையிலெடுத்து சொன்னாலும் அதில் கசடுகளே மிஞ்சியிருக்குமென அறியாதவரா.. தனிமனித ஒழுக்கம் சிநேகம் அன்பு .. அடுத்தவரின் மீதான பரிவு இவையெல்லாம் என்னவென்றே அறியாதவர்கள்.. தங்களின் மதம் மட்டுமே சரி தங்களின் கடவுள் மட்டுமே சரி என்பவர்கள் நிச்சயமாக நேர்மையானவர்களாக இருக்கமுடியாது.
இந்து..முஸ்லிம் கிருஸ்துவ கடவுள்களை இல்லையென்கிறார்கள் ..கிருஸ்துவர் முஸ்லிம் இநிது கடவுளைகளை ஏற்க மறுக்கிறார்.. இஸ்லாமியர் இந்து முஸ்லிம் கடவுள்களை மறுக்கிறார்.. நான் மூன்று கடவுள்களையும் மறுக்கிறேன் என்றார் பெரியார் இதுதான் தெளிவு.. ஆன்மீகம் என்பதிலிருந்தே .. தான் சார்ந்த மதத்தை முன்னெடுப்பதாகவே பொருள்..இதெல்லாம் தன்னை நாத்திகராக Atheist ஆக சொல்லிக்கொள்ளும் திருமா அறியாமல் போனதேன்..
..
ரஜினியின் வரவிற்கு பிறகு சில சஞ்சலக்காரர்கள்.. திருமா உட்பட மாற்றமென்ற சொல்லையும் .. திராவிட அரசியலுக்கு மாற்றாக புதியதொரு எழுச்சியை உருவாவதையும் போலவும் சித்தரிக்க முயல்கிறார்கள்.. கொள்கை என்ன என கேட்கதற்கே வியர்த்து தண்ணீர் குடிக்கிற ஒருவரை புனிதரைப்போல சித்தரிப்பதும்.. தொடர்ந்து மக்களை சந்தித்து தோல்விகளிலும் துவண்டுவிடாமல் கட்சி மற்றும் சமுதாயபணிகளை செய்துவரும் .. செயல்தலைவர் தளபதியின் செயல்பாடுகள் திருப்தியில்லையென்பதைப்போல ஊடகங்கள் சொல்லி திரிவதின் பின்னால் யாரெல்லாம் இருக்கிறார்கள்.. எந்த சக்தி இவர்களை இயக்குகிறதென மக்கள் அறியாமல் இல்லை..
எந்தவிதமான போராட்டத்திற்கும் வரமறுக்கும் இதோ இப்போது நடக்கும் போக்குவரத்து ஊழியர்களின் வேலை நிறுத்தத்தைப் பற்றி கருத்து தெரிவிப்பாரா.. எதிர்கருத்தாக இருநிதாலும் சரி சொல்லவேண்டுமல்ல.. உயர்நீதிமன்றமே அவர்களின் வேலைநிறுத்தத்தை சட்டவிரோதமாக அறிவிக்க மறுத்திருக்கிறதே.. இதெல்லாம் நேரடி முதல்வர் கனவில் இருக்கும் ஆன்மீகம் ஏன் கண்டுக்கொள்ளவில்லை..
..
Hindustan times நாளிதழ்..
பாரதிய ஜனதா கட்சி பின் நாளில் ரஜினிகாந்தை தனது கட்சியின் ஒரு அங்கமாக மாற்ற ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. இதே நிலைதான் ஆந்திரப் பிரதேசத்தில் சீரஞ்சிவிக்கு ஏற்பட்டது. காங்கிரஸ் கட்சி சீரஞ்சிவியை தனது கட்சிகுள் கொண்டு வந்தது .திராவிட இயக்க அரசியல் ஊழலுக்கு வழிவகுத்தது என்று ரஜினி காந்த் நம்புவது தவறு. திராவிட இயக்க அரசியல் கட்சிகள் சமூகம் , அரசியல் , பண்பாடு ரீதியாக மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது என்பதை ரஜினி காந்த் உணர வேண்டும்.. என எழுதியிருக்கிறது..
..
திராவிட அரசியலை விமர்சிப்போருக்கு.. இதைவிட தெளிவாக சொல்ல தேவையில்லை..
கடைசியாக..
வெல்வதற்கே தோல்வி..
எழுவதற்கே வீழிச்சி என்றார்
சீன மெய்யியலாளர் தத்துவஞானி #கன்பூசியஸ் ..
நாம்.. வீழும்பொழுதெல்லாம்
வெகுண்டு எழுந்திருக்கிறோம்..
#வீறுக்கொண்டெழுவோம்..
..
Aalanci Spm
Thursday, January 4, 2018
விகடன் கதறல்
விடகனின் நீலிக்கண்ணீர்..
செயல்தலைவரின் செயல்படாத தருணமென சிலவற்றை சொல்லி வழக்கம் போல் தன் அரிப்பை தீர்த்துக்கொள்கிறது.. இப்படிதான்
திமுக இணைய பேராளிகளை கடும் விமர்சனம் செய்து வாங்கிகட்டிகொண்டது ..
மாவட்ட செயலர்களை கட்டுபாட்டில் வைத்திருக்கவில்லை கட்சியினரோடு தொடர்பில்லை அழகிரியை அரவணைத்து அழைத்துச்செல்லவில்லை எதிரிகளை அழிக்க தெரியவில்லை திமுக ஐ டி லிங்க் சரியில்லை..
பாவம் அந்தளவிற்கு கதறவிட்டிருக்கிறது திமுக இணையதளம் ..
..
மாவட்ட செயலர்கள் யாருமே அதிருப்தியை தெரிவிக்கவில்லை அதைவிட தளபதியை மீறி எதுவும் செய்திடவில்லை.. ஜனநாயக இயக்கத்தில் மாவட்ட கிளை கழகங்களில் உட்கட்சி விவகாரங்களில் மாற்று கருத்துவருவதும் அதே வேளை பொது செயல்பாடுகளில் ஒருங்கிணைந்து செயல்படுவதும் ஏன் விகடனுக்கு தெரியாமல் போனது.. கட்சியினரோடு தொடர்ப்பு முன் எப்போதுமில்லாது நேரடியாக தளபதியை தொடர்பு கொள்ள முடிகிறது.. முன்பெல்லாம் காத்திருந்து சொல்லபட்ட கருத்துகள் விமர்சனங்கள் நேரடியாக இணையத்திலோ தொலைபேசிவாயிலாகவோ தளபதியிடம் சொல்ல கொண்டு சேர்க்கமுடிகிறது..
..
எதிரிகளை அழிக்க தெரியவில்லை கலைஞரை போல என சொல்வதிலிருந்தே கலைஞர் எல்லாகட்சிகளையும் அழித்தவர் போன்ற தோற்றத்தை நிறுவ முயல்கிறது இந்த நூற்றாண்டு கண்ட மிக சிறந்த ஜனநாயகவாதியை கேவலபடுத்த நினைத்து கேவலப்பட்டு நிற்கிறது விகடன்..ஆம்.. எதிரிகள் கூட கலைஞரை சந்திக்கலாம் மாற்று சிந்தனையாளர்கள் கடுமையாக எதிர்ப்பவர்களை கூட அவர்களின் கருத்தை உள்வாங்கி பதிலளித்து அவர்களையும் செயல்பட விடுகிற ஒரே தலைவர் கலைஞர் தனிப்பட்ட விமர்சனங்களை கூட கண்டுக்கொள்ளாதவர்.. ஜெயலலிதாவை போல வழக்கு போட்டு அலைக்கழித்ததில்லை.. மாறாக சுதந்திரமாக செயல்படவிட்டவர் அவரை விமர்சனம் செய்யவும் தகுதி வேண்டும் அதை இழந்து நிற்கிறது.. எதிரிகளை ஏன் அழிக்கவேண்டும்.. அவர்களை மக்கள் முன் நிறுத்தி தோற்கடித்தால் போதாதா..
எம்ஜிஆர் மறைவிற்கு பிறகு ஜானகி அரசை கவிழிக்க முயற்சிக்கவில்லை என்ற குற்றசாட்டை இதே விகடன் முன்பு வைத்தது நியாபகம் வருகிறது.. ஜனநாயக முறையில் நேர்மையோடு களம்காண்பதும் தோல்வி வெற்றி இரண்டையும் ஒருபோல நோக்குவதுமே கலைஞர் கற்று தந்தது..
..
அழகிரியை அரவணைக்க தெரியவில்லை..
கட்சியிலிருந்து நீக்கிவைத்துவிட்டபிறகு அவரை யாரும் கண்டுக்கொள்ளவில்லை திமுகவின் மீது வன்மம் கொண்டு அலையும் ஊடகங்களை தவிர.. அவருக்கான மதிப்பும் மரியாதையும் அவர் அணிந்திருந்த கரைவேட்டிக்குதானே தவிர.. அவருக்கில்லையென சாதாரண தொண்டன் கூட அறிந்திருக்கிறான்.. அதனால்தான் அவரின் இடையூறு செய்யும் பேச்சுக்கெல்லாம் அதே பாணியில் பதிலடி தருகிறான்.. யீருமே கண்டுக்கொள்ளவில்லையென்பதால் ஏற்பட்ட விரக்தியை வெளிகாட்ட திமுக மீதும் தளபதி மீதும் புளுகி தள்ளுகிறார் அதை திமுகவை தொடர்ந்து விமர்சிக்கும் ஊடகங்கள் சொற்பநேர இன்பத்திற்காக தூக்கிவைத்து ஆடுகின்றன..அப்புறம் தூக்கி வீசி விடுகின்றன
யாரும் இருக்குமிடத்தில் இருந்தால் தான் மதிப்பு என்பது தெரியாமல் பேசிவருகிறார்.
..
விகடன் என்ன முயற்சித்தாலும் இங்கே நடக்காது.. எங்கள் செயலி.. தளபதிதான்..
..
Aalanci Spm
Tuesday, January 2, 2018
உறைபனியில் விரைத்து போவீர்
கருநாடகம் தமிழகம் தெலுங்கானை கேரளம் இன்னும் பிற பகுதி மக்கள் தங்களை அதிகாரத்திற்கு வரவோ ..உங்கள் அசுத்தமான வகுப்புவாத பிரிவினை அரசியலை செய்யவோ விடமாட்டோம்.. பிரகாஷ்ராஜ்..
..
ரஜினியிடமிருந்து மாறுபடுகிறார்.. கர்நாடகாவை கன்னடர்கள் ஆளவேண்டுமென சொன்னவர்.. இப்போது பாஜகவை நேரடியாக விமர்சிப்பதில் முனைப்பு காட்டுகிறார்..குறிப்பாக தென்னிந்தியாவை தேசிய நீரோட்டத்திலிருந்து இயல்பாக பிரிந்துநிற்பதை சொல்கிறார் என நினைக்கிறேன்.. நடிகர்கள் கருத்து சொல்வது சமீபகாலங்களில் அதிகளவு முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. கமல் தொடங்கி ரஜினிவரை..அரசியலில் ஆர்வம் காட்டுவதை வரவேற்கவேண்டும் அது நல்ல அரசை நிறுவ உதவலாம் இங்கே யாரும் கருத்தை கூற விமரிசிக்க உரிமை உண்டு..
ஆனால்..
ஆட்சி அதிகாரம் முதல்வர் கனவென்று வரும்போதுதான் சில கேள்விகளை நாம் எழுப்பவேண்டிருக்கிறது.. எப்போதிலிருந்து மக்கள் மீதான அக்கறை வந்தது ஏன் இதுவரை இந்த நொடிவரை..மக்களின் பிரச்சனைகளுக்காக போராடவோ போராடுகிறவர்களை ஊக்குவிக்கவோ அல்லது எதிர்ப்பை பதிவு செய்யவோ இல்லை..
போகிற போக்கில் முதல்வராக வேண்டுமென்பது எந்தவகை நியாயம்..
ரஜினி என்றில்லை கமலோ இன்னும் வர இருக்கிற .. விஜயோ யாராக இருந்தாலும் தமிழக மக்களின் தேவைகள் அவர்களுக்கான உரிமைகள் இங்கு நிலவும் அடிப்படை ஜீவதார உரிமைகளுக்காக குரல் கொடுப்பதை யாராவது செய்திருக்கிறீர்களா..
..
அது என்ன மற்றவர்களை அயோக்கியர்கள் போலவும் தாங்கள் மட்டுமே நேர்மையானவன் காட்டுகிறீர்.. நடிகர்கள் மட்டுமே சிறந்தவர்களை போல ஏன் சுவர் எழுப்புகிறீர்கள்.. சினிமாவில் நல்லவனாக நடித்தால் நிஜத்தில் ஒழுக்கமானவன் கரைப்படியாதவன் என்கிற மாயபிம்பத்தை இன்னும் எத்தனை நாளைக்கு கட்டியெழுப்பிக்கொண்டிருப்பீர்.. சினிமா கதாநாயகனை நல்லவன் என்ற காலம் மலையேறிவிட்டது இப்போதெல்லாம் சினிமாவில் கூட ஆன்டி ஹீரோ தான் அதிகம் கவரபடுபவராக இருக்கிறார் .. சினிமாவில் புழங்காத கறுப்புபணம் உண்டா .. எத்தனை பேர் நேர்மையாக சம்பாதித்திருக்கிறீர்.. முறையாக வரி செலுத்தியிருக்கிறீர்..ஏன் எம்ஜிஆரே.. வரி ஏய்ப்பு செய்தவர்தானே.. கடைசியில் சொத்தை விற்று கட்டுவதாக நம்பவைத்தார் பிறகுதான் தெரிந்தது ஜானகிக்கு விற்று வரி கட்டியதாக செய்தி வெளியானது.. ஏமாற்றுகாரர்களின் உலகம் தானே சினிமா.. அங்கிருந்து யோக்கியம் பேச வந்திருப்பவர்கள்.. நல்ல நடிகர்கள்.. பாவம் நிழலில் நடிப்பை ரசித்தவர்கள் நிஜத்தில் வெறுப்பான் என்பதை அறிந்திருக்கவில்லை.. 70 களில் இருந்த சினிமா மோகம்.. இப்போதெல்லாம் இல்லை என்கிற உண்மை விளங்க ரஜினி போன்றவர்களுக்கு தரபோகும் தோல்வி இனி எவரும் முதல்வர் கனவோடு கோடம்பாக்கத்திலே திரிய கூடாது..
..
ஆன்மீகம்..
மதத்தின் பால் தீவிர நம்பிக்கை கொண்டவர்களை இதே இடத்தில் அழுத்தி பிடித்து நகரவிடாமல் இருக்க செய்யும் ஒரு வித்தை.. இது எல்லா மதத்திற்கும் பொருந்தும் இதில் சமரசமே யாருக்குமில்லை.. ஆனால் சாதி மதமற்ற என்ற சொற்சொடர் இங்கே அடிபட்டு போகிறது..மதம் தலைக்கேறாவிட்டால் ஆன்மீகம் செயலிழந்து போகும்..
மதச்சார்பின்மை இல்லை என்பதிலிருந்தே
ஆன்மீக போர்வையிலிருந்து வெளிவருகிறது மதம்..
மதம் தலைக்கேறி விஷமம்..
நேரடியாக மோத தெரியாது இவர்களால்..
அறுபதாண்டுகளாக உறைந்து கிடக்கும் திராவிடத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் என பிதற்றுகிறார்கள்.. பாவம் உறைபனியில் சிக்கி மூர்ச்சையாகி போவார்கள்..
..
உறைபனியில் பிணமாவீர்..
..
Aalanci Spm
வரைகலை.. நன்றி தோழர்
Ganesh Tiger..
Monday, January 1, 2018
திராவிடம்
கருத்தரங்கம்..
திராவிட இயக்கத்தைப் பற்றி இளைய தலைமுறையினர் தெரிந்துக்கொள்வதற்காக இதுபோன்ற கருத்தரங்கள் கலந்துரையாடல்கள் தெருமுனைப் பிரச்சாரங்கள் .. திண்ணைப் பேச்சுகள் நடத்தப்படவேண்டும் .. இன்றைய தலைமுறையினரிடம் .. குறிப்பாக திராவிடம் ஏன் என்ற ஒருவகை கசப்பை விதைக்க தொடங்கியிருக்கிறார்கள்.. திராவிடம் மொழிசார்ந்ததாகவோ.. நிலம் சார்ந்தததாகவோ கணக்கிட்டு நம்மை பிரித்தாள ஆரியர்கள் திட்டமிட்டே தமிழர்கள் தமிழ் என்ற குறுகிய வட்டத்திற்குள்.. மொழிவாரியான சிந்தனைக்குள் திணித்து நம்மை சுருக்க பார்க்கிறார்கள் இதன் மூலம் .. அவர்களின் வெற்றி அல்லது பலன் அதிகரிக்கும்..
த்ராவித் என்ற சொல்லியிருந்தே திராவிடம் என்ற முழுமை வந்ததாக சொல்கிறார்கள்.. ஆரியர்களிடமிருந்து நம்மை பிரித்துக்கொள்ள ஒரு பொது சொல் தேவைபட்டது அது த்ராவத் என்ற சமஸ்கிருதத்தை நம் மீது திணித்தனர். ஆரியர்கள் தங்களை தனித்து இனம் காண பொது சொல்லை பயன்படுத்தினர்...
திராவிட மொழிகளில்.. தமிழ் தெலுங்கு மலையாளம் .. கன்னடம் துளு.. இவையாவுமே தமிழிலிருந்து பிரிந்து சென்ற மொழிகள் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.. காரணம் தமிழை ஒத்து ஒலி ஒசை ..மற்றும் மூலப்பொருள் தமிழை சார்ந்தே இருக்கும் குறிப்பாக .. மலையாளம் தெலுங்கில்.. கலந்த சமஸ்கிருத சொல்லை நீக்கிவிட்டால் அது தூய வடிவிலான தனித்தமிழ் சொற்களாக வரும். எப்படி சாதிய பிரிவினையை ஆரியர்கள் கையாண்டார்களோ அதே பாணியை தான் மொழியில் தொடங்கியிருக்கிறார்கள் அது அரசியலாக்க படுகிறது..மொழிவெறியை ஊட்டி இனத்தின் மீதான தாக்குதலை தொடுத்திருக்கும் வேளையில் இது போன்ற கருத்தரங்கள் மக்களின் அறியாமையை நீக்க பேருதவியாக இருக்கும்..
..
..
திராவிடர் என்னும் சொல், திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த மொழியொன்றைத் தாய் மொழியாகக்கொண்ட மக்களைக் குறிக்கும். தற்காலத்தில் திராவிடர்கள் செறிந்து வாழும் பகுதி, தென்னிந்தியாவில்விந்திய மலைக்குத் தெற்கேயுள்ள பகுதியாகும். இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளும் திராவிடர்களின் தாயகங்களில் ஒன்றாகத் திகழ்கின்றது..
..
திராவிடம் ..
இன்றைக்கு குறிப்பாக பார்பனர்களால் தமிழகத்தில் கடுமையாக எதிர்க்கபடுகிற .. அல்லது அவர்களை பயம் கொள்ள செய்கிற விடயமாக இருக்கிறது .. காரணம் பார்பனர்களை குறிப்பாக அதிகாரத்திலிருந்து தூக்கியெறிந்து .. தமிழர்களின் உரிமைகளை.. மீட்டு தந்தது.. இன்றைக்கு மரியாதையோடு பேச எழத எதிர்த்து குரல் கொடுக்க முடிகிறதென்றால் அது திராவிடம் பெற்று தந்ததே.. நமக்கான உரிமைகளை போராடி பெற்று தந்தது திராவிடம்.. அது அரசியல் காரணங்களுக்காக .. சில கட்சிகள் பயன்படுத்தியிருந்தாலும் பயன்பட்டிருந்தாலும் பொதுவாக சாதித்தது மிக அதிகம் ..
மண் சார்ந்த மொழிசார்ந்த விடயங்களில் திராவிட ஒருங்கிணைப்பு அதிவேக செயல்பாட்டால் .. ஆரியர்கள் தங்களை சுருக்கி கொண்டதும்.. அடிக்கடி துள்ளி குதித்தாலும் மேலெழும்ப முடியாதவாறு ..அழுத்தி அவர்களை பிடித்திருப்பது பெரியாரும் .. அவரின் சிந்தனைகளும் தான்..
..
கிழவனின் தொலைநோக்கை எல்லாவற்றிலும் காண முடியும்.. சமூகம் சமுதாயம் கல்வி பெண்ணுரிமை சாதிய ஒழிப்பு சமதர்மம்.. அடிமைத்துவத்திலிருந்த விடுதலை.. பேசும் உரிமை..போராடும் துணிவு .. இனத்தின் மீதான தாக்குதலிருந்து பாதுகாப்பு ...சொல்லிக்கொண்டே போகலாம் இன்றைக்கும் பெரியாரின் சொல் செயல் தான் நம் பொது எதிரியிடமிருந்து காக்கிறது.. இன்றைக்கு குறிப்பாக பார்பனர்கள் திராவிடம் என்ற சொல்லை எதிர்ப்பதற்கு நம்மிடமிருந்தே அம்புகளை தயார் செய்கிறார்கள்.. பாவம் அறியவில்லை அந்த அம்புகளே அவர்களை தாக்குமென்று..
..
இக்கட்டான காலகட்டங்களில் இது போன்ற அறிவுசார் கருத்தரங்கள் புரிந்துணர்வை தரும் நம் உணர்வின் மீது தொடுக்கபடும் தாக்குதலை முறியடிக்கும்..திராவிடம் என்பது தமிழ் மொழியை மூலமாக கொண்ட இனத்தின் அடையாளம்.. தமிழ் மொழியின்,இதன் கிளை மொழிகளின் பொதுபெயர்..
பார்பனர்களை பதற செய்யும் ஒற்றைச் சொல்..
எம் இனத்தின் பெயர்..
திராவிடம்..
..
Aalanci Spm..
ஆலஞ்சியார்
Subscribe to:
Posts (Atom)