Wednesday, December 6, 2017
தேர்தல் முறையில் மாற்றம்
விஷால் மனு ஏற்பும் பின் நிராகரிப்பும்..
..
முதலில் இந்திய தேர்தல் முறையில் நிறைய மாற்றங்களுக்கு உட்படுத்தவேண்டும் தனியாக எந்த கட்சியையோ அமைப்பையோ சாராதவர் நிற்க வேண்டுமெனில் 10 பேர் பின்துணைக்கவேண்டுமென்பது கூட ஒருவகை அத்துமீறல்.. சம்பந்தபட்ட தொகுதியை சேர்ந்த வாக்காளர் இருவர் போதுமென அங்கரீக்கபட்ட கட்சிகளுக்கு மட்டுமென்பதை எல்லோருக்கும் என பொதுவானதாக ஆக்கவேண்டும்.. யார் வேண்டுமானாலும் போட்டியிட உரிமை உண்டென்கிற போது.. அதில் எல்லோருக்கும் சமமான நீதியை வழங்கவேண்டும்.. அதிகளவில் தனி வேட்பாளர்கள் வருவார்கள் என காரணம் காட்டி அவர்களுக்குமட்டும் விதிகளில் கடுமையென்பது சிறந்த ஜனநாயகமில்லை.. கட்சிகளுக்கு மாற்று வேட்பாளர் படிவம்
என்ற சிறப்பு மட்டும் போதும் .. அதை வேண்டுமானால் தனி வேட்பாளருக்கு தேவையில்லையென வைக்கலாம்..
தேர்தல் நடத்தும் ஆணையம் எல்லோருக்கும் பொதுவானதாக இருக்கவேண்டும்.. தேர்தல் நடத்தும் அதிகாரி யார் வேட்பு மனுவையும் ஏற்கும் நிராகரிக்கும் தகுதியென்பது சரியான முறையாக இல்லை.. படிவத்தில் இருக்கும் தவறுகளை .. திருத்திக்கொள்ள அவகாசம் வழங்கலாம்..
ஏனெனில் கட்சிகள் மற்றும் ஒரு சிலரை தவிர அந்த படிவத்தை பூர்த்தி செய்ய நிறைய பேருக்கு தெரியாது சாதாரணமாக தாலுக்கா அலுவலங்களில் எழுதி கொடுப்பதற்கென்றே வெளியே சிலர் இருப்பர்.. அதே போல தேர்தல் அலுவலகத்திலும் சிலரை நியமிக்கலாம்..
..
சரி ..
விஷாலின் மனு நிராகரிக்கபட்டதாக முதலில் அறிவித்துவிட்டு பின்பு ஏற்றுக்கொண்டதாக சொன்னதேன்.. மீண்டும் சம்பந்தபட்டவரை (கையெழுத்திட்டவர்) அழைத்து விசாரிக்க யார் பணித்தார்கள்.. மீண்டும் தள்ளுபடி செய்ய யாரோ மிரட்டியதாக வரும் செய்தி எந்தளவிற்கு உண்மை..
ஒரு Returning Officers தேர்தல் அதிகாரிகளின் நடத்தை விதிமுறைகள் ஏன் இங்கே மீறப்பட்டது
இதே போல் நிறைய தனி வேட்பாளர்கள் மனுக்கள் தள்ளுபடி செய்யபட்டிருப்பதில் உண்மை நிலையென்ன .. பிரபலமானவர் என்பதால் விஷால் தெரிந்தாரே தவிர.. முகம் தெரியாத அந்த மனுசெய்த தனி நபர்கள் சரியான அளவுகோலோடு நிராகரிக்கபட்டார்களா.... இதற்கெல்லாம் யார் பதில் தருவது..
இந்திய அரசியலமைப்பு வழங்கியிருக்கிற உரிமைகளை சில தவறுகள் தடுக்குமெனில்.
வரையறுக்கபட்ட விதிகள் தவறானதென்றே பொருள்.. இன்னமும் எளிமைபடுத்தபட்டிருக்கவேண்டும் யார் வேண்டுமானாலும் போட்டியிடலாமென உரிமை பேசிவிட்டு விதிகளை கடுமையாக்குவது சரியான அணுகுமுறையல்ல..
..
எத்தனை பேர் போட்டியிட்டாலும் வாக்குபதிவு இயந்திரம் தான் என லக்கானி சொல்கிறார்.. இது தேர்தல் நடத்தும் விதிமுறைகளுக்கு எதிரானது..ஏனெனில் 64 பேருக்கு மேல் போனால் வாக்கு சீட்டுமுறையென தேர்தல் ஆணையம் நீதிமன்றத்திலேயே சொல்லியிருக்கிறது..லக்கானியின் பேச்சு 64 பேருக்குமேல் போகாமல் பார்த்துக்கொள்ள தேர்தல் அதிகாரிக்கு வழங்கபட்ட சமிஞ்சை யாக கருதவேண்டியிருக்கிறது...
..
விஷாலின் மனு ஏற்போ நிராகரிப்போ அல்ல பிரச்சனை ..எப்படி தேர்தல் ஆணைய அதிகாரி நடந்துக்கொண்டார்.. ஏனிந்த தடுமாற்றம்..யாருக்கு வழங்கி நிற்கிறது தேர்தல் ஆணையம்.. தொடர்ந்து வாக்குபதிவு இயந்திரம் மீதான சந்தேகமற்ற சந்தேகம் நிறைய இடங்களில் எந்த பட்டனை அழுத்தினாலும் பாஜகவிற்கு வாக்கு விழுந்ததோ அது எப்படி நிகழ்ந்தது வாக்கு பதிவு இயந்திரத்தின் நம்பகதன்மை ஜனநாயகத்தை சர்வாதிகாரமாக்கியிருக்கிறதே ஏன்.. இதையெல்லாம் கவனித்திலேயே கொள்ளாமல் தேர்தல் நடத்துவதைவிட யார் ஆளுகிறார்களோ அவர்கள் விருப்பதற்கு ஏற்றாற்ப்போல் தேர்தலை நடத்திவிடலாம்..
..
தேர்தல் மிக சிறந்த ஜனநாயகமுறை தயவு செய்து அதை கேலிகூத்தாக்கிவிடாதீர்..
..
Aalanci Spm
Tuesday, December 5, 2017
அரசியல்பிழை ஜெ..
நினைவில்..
மறைந்த ஒருவர் எதற்காக நினைவுகூறபடுகிறார் என்பதில்தான் அவரது புகழ் அடங்கியிருக்கிறது.. எல்லோரும் ஏதோவொரு வகையில் நினைவுகூறபடவேண்டும்.. அது எதை குறிக்கிறது என்பதை வைத்துதான் வரலாறு அவரைப்பற்றி பதிவு செய்யும்..
ஒருவரின் அரசியல் வாழ்வை (பொதுவாழ்வு) தான் இந்த சமூகம் அவர் மீது கொண்டிருந்த அன்பை .. அல்லது வெறுப்பை சுட்டிகாட்டி அவர் ஆற்றிய பணிகள் நல்லவை கெடுதிகள் எதுவானாலும் வரலாற்றில் இடம் பெறும்.. இதில் பெண் ஆண் என்ற பாகுபாடில்லை..
..
நல்லவைகளை மட்டுமே பேசவேண்டுமெனில் வரலாற்றில் இட்லரும்,கோட்சேவும் ,இடிஅமீனும்..
இடம்பெற்றிருக்கமாட்டார்கள்..
நம் வீட்டில் இழவு விழுந்து விட்டதென்பதற்காக பக்கத்துவீடு எரிகிறபோது .. ஓடிசென்று அதை அணைக்கவேண்டுமே தவிர.. இல்லாமல்
பிணத்தை கட்டிபிடித்துக்கொண்டு அழுதுகொண்டிருந்தால்.. சுடுகாட்டிற்கு எடுத்து செல்லாமல் வீடே சுடுகாடாகிவிடும்.. அந்த நிலைதான் இப்போது.. செய்யவேண்டியதை செய்யமறுத்தால் வரலாறு இப்படிதான் நம்மை
எரித்துவிடும்..
..
ஜெ.ஜெயலலிதா.. ஒரு பெண் ஆளுமை ..
இங்கே ஆளுமைக்கு ஆணவத்திற்கும் வேறுபாடு உணராமல் சிலர் கதைக்கிறார்கள்.. பொதுவாழ்வில் வருபவர்கள் தவறிழைப்பது .. அவரின் தவறான முடிவாலோ அல்லது தவறான வழிகாட்டுதலாலோ.. அல்லது தனக்கெல்லாம் தெரியுமென்ற மமதையாலோ ஏற்படலாம் ஆனால் அதை உணர்ந்து புதிய பாதையை வகுத்திருக்கவேண்டும்.. இந்திய பெண் ஆளுமையென இன்றைக்கும் பேசபடுகிற திருமதி இந்திரா பிரியதர்ஷினி... மிசா கால தவறை உணர்ந்தார்.. ஆம் அவசரகாலத்தில் அவர் ஆடிய திமிராட்டத்தை மக்கள் அவருக்கு தோல்வியை தந்து பரிசளித்தார்கள் .. மீண்டும் பகிரங்கமாக தவறை உணர்ந்து மக்களிடம் மன்னிப்பை கேட்டு..தேர்தலை சந்தித்தார் தவறுக்கு வருத்தியதை மக்களும் ஏற்றார்கள்.. ஆனால் ஜெயலலிதா டான்சி வழக்கில் தண்டிக்கபட்டபோது உச்சநீதிமன்றம் சொத்தை திருப்பி தருவதாக அதாவது முறைகேடாக வாங்கியதை ..தருவதாக சொல்லியதை ஏற்று விடுதலை செய்தது அப்போது மனசாட்சியோடு நடந்துக்கொள்ளுங்கள் என சொல்லியதை மறந்தார்..
இந்திய வரலாற்றிலேயே .. முதல்வராக நீதிமன்றம் சென்றவர் தண்டிக்கபட்ட குற்றவாளியானது ஜெயலலிதா மட்டும்தான்.. கொடியை இறக்கி.. பாதுகாப்பை விலக்கி தனியறையில் வைத்திருந்து சிறைக்கு அனுப்பினார் குன்ஹா..
இதெல்லாம் வரலாற்றில் தீராத களங்கத்தை ஏற்படுத்தியது யாரும் மறுக்கமுடியாது.. ஜெயலலிதா உயிரோடிருந்திருந்தால் சசிகலாவோடு சேர்ந்து சிறையில் கம்பங்களி திங்கவேண்டிவந்திருக்குமே..
..
ஒரு பெண் பொதுவாழ்விற்கு வருவதென்பது அதிலும் உயர்பதவிகளை அலங்கரிப்பதென்பது இன்றைய சூழலில் கூட .. ஆணாதிக்க அரசியலில் இயலாதென்பதால்.. ஜெயாவின் தவறுகளை பெரிதுபடுத்தாமல் இருந்தோம் ஆனாலும் எதற்கும் எல்லை உண்டென்பதை அறியாமல் போனார் இந்த பேதை.. அவரின் பலமென்பது அவரது இனமே தவிர திறமையல்ல.. காரணம்.. அடாவடி ஆணவம்.. திமிர் அடக்கியாளுதல் இவையாவும் திறமையல்ல.. தன் இளமைகாலங்களில் தனக்கேற்பட்ட துயரங்கள் ஏமாற்றங்கள் பாதிப்பு
இவரை வெகுவாக அவரின் நடவடிக்கைகளில் காணபட்டது..
ஜெயலலிதா அரசியலென்பது கிழிந்த காதிகம் ..
அதில் பயனில்லை இன்றைக்கு அவரின் ஆதரவாளர்களென அறியபடுகிறவர்கள்.. வரும்காலங்களில் ஒரு தேர்தல் தோல்வி போதும் இவரை வசைபாடுவார்கள்..இப்போது கட்டமைக்கபட்டிருக்க பிம்பங்கள் தகர்ந்துவிடும்..
அடிமைகள் கூடாரத்தை .. கொள்கையில்லா கோமாளிகளை.. ஆம்
கட்சியை கட்டுபாட்டில் வைத்திருந்ததை தவிர வேறெதும் பிரமாதமாய் இல்லை..
..
நல்ல அரசியல் தலைமையின் கீழ் பயிற்சி பெறாததால்.. அவரால் நல்ல தலைவர்களையோ தொண்டர்களையோ உருவாக்க முடியவில்லை..தன் வாழ்நாளில் அடிமையைபோல நடத்தபட்டவர்..பின்னாளில் அடிமைகளை உருவாக்கியிருக்கிறார் அவ்வளவுதான்..
..
காலம் அரசியல் தவறாகவே இவரை கணக்கில் கொள்ளும்.. ஆம் அரசியல்பிழை..
..
#தீதும்நன்றும்_பிறர்தரவாரா..
..
Aalanci Spm
Monday, December 4, 2017
குமரி அழுகிறது..
குமரி அழுகிறது..
ஆள்வோர் குமரிக்கோட்ட கதாநாயகனுக்கு விழா எடுப்பதில் முனைப்பு காட்டுகிறார்கள்.. மத்திய அமைச்சரோ.. ஆயிரம் பேரெல்லாம் காணமல் போகவில்லை என்கிறார்.. ஒரு உயிரானாலும் அது உயிர்தானே.. செத்தவன் யார் நேக்கு வேண்டுவனில்லை என்பதால் எதத்தாளமாக பேசுகிறார் அவர் உடல்மொழி ஆணவம் அறிந்ததுதான் இது போன்ற பேரிடர் இழப்பிலேனும் கொஞ்சம் சங்கடபடுவதைபோல வேணும் நடித்திருக்கலாம்..
புயல் மழையால் அதிகம் பாதிக்காத தன் இன மக்கள் வாழும் #சுசீந்திரம் பகுதிக்கு மட்டும் சென்றார் மத்திய அமைச்சர் நிர்மலா
புயல் பாதித்த பகுதிகளுக்கு .. குறிப்பாக அதிகம் பாதித்த கடற்புரத்திற்கு செல்லவில்லை .. குமரி மேற்கு பகுதிகளுக்கும் செல்லவில்லை..
..
உலகின் நான்காவது பெரிய தரைப் படை, ஏழாவது பெரிய கடல் படையையும் கொண்ட நாடு இது.. பேரிடர் மேலாண்மை நிபுணர் படை ஒன்றும் நம்மிடம் இருக்கிறது.. இக்கட்டான நேரத்தில் துரிதமாக செயல்பட்டிருக்க வேண்டாமா..
முன்கூட்டியே வானிலை அவதான மையம் ஏன் அறிவிக்கவில்லை..
ஒரு வாரத்திற்கு முன்பே சொல்லியிருந்தால் மீனவர்கள் கடலுக்கு போயிருக்க மாட்டார்களே ..
இத்தனை உயிர்பலி ஆகியிருக்காதே.. என்னானார்களென்றே தெரியவில்லையே..
செத்தவனை விடுங்கய்யா உயிரோடு தவிக்கிறவனை காப்பாத்துங்கய்யா என்கிறாளே .. அவளின் வார்த்தை வலிக்கிறதே.. இதைவிட வேறெப்படி கூறமுடியும்... அரசின் அலட்சியத்தை கையைலாகாததனத்தை..
..
ஊருக்குள் நுழைந்த அமைச்சர்களை விரட்டுகிறார்கள் மக்கள்.. இவர்களால் ஒரு பலனுமில்லை..இருக்கிறவரை சுருட்டுகிற கெடுமதியாளர்கள் இவர்களால் எந்த விடயத்திலும் பயனில்லை.. அதனால்தான் இந்த வாய்சவடால் விடும் பொய்யர்களை விரட்டுகிறார்கள்.. மத்திய அரசையோ மாநில அரசையோ நம்புவதில்லை என்ற நிலைக்கு தள்ளபட்டிருக்கிறார்கள்..
வீடு இழந்து .. அடுத்து என்ன செய்வதென்றே தெரியாமல் பள்ளிகூடங்களில் சமுதாய கூடங்களில் மக்கள்.. அவர்களின் இந்த நிலைக்கு செயல்படாத அரசும் மாற்றாந்தாய் மனபான்மையோடு செயல்படும் மத்திய அரசுமே காரணம்.
..
இந்த சூழலில் தளபதி பாதிக்கபட்டோரை சந்திக்கிறார்.. பெண்கள் அவரை கையை பற்றிக்கொண்டு அழுகிறார்கள்.. நம் கண்களில் நம்மையும் அறியாமல் நீர் விழுகிறது..
சொற்ப காசிற்கு ஆசைபட்டு சிலர் அதிமுகவைய அறியணை ஏற்றியதின் மிச்ச வேதனையையும் இப்போது அழுகையில் தெரிகிறது .. இந்த படம் நம்மை செவிட்டில் அறைவதை போல கேள்வி எழுப்புகிறது.. கண்ட கழிசடைகளை நம்பியதின் விளைவு மொத்த தமிழகமும் கண்ணீரில் .. கேவலமான அரசு.. கேட்பாரற்று மக்கள்.. எப்போது முடியும் இந்த நிலை..
மக்கள் இனியும் பொறுத்திருக்கவேண்டுமா.. இந்த பதவிவெறியில் அடிமைசாசனம் எழுதி தந்துவிட்டு வீழ்ந்து கிடக்கிறார்களே ..
என்செய்ய..?
..
குமரி மட்டுமா அழுகிறது..
..
Aalanci Spm
Sunday, December 3, 2017
திமுக இனத்தின் காவல்
காலம் எத்தனை வேகமாய் சுழல்கிறது..
திமுகவை அதிகாரத்திற்கு வரவிடாமல் தடுக்க அனைத்து வழிகளிலும் பயணிப்பேன் என சூளுரைத்தவர்கள்.. வேறு வழியின்றி மௌனமாய் வலிய வந்து ஆதரிக்கிறார்கள்... அவர்களை கொச்சைபடுத்துவதல்ல.. அதே வேளை இவர்களின் அலப்பறைகள் சொல்லில் அடங்காவண்ணம் இருந்தது.. மற்றவர்களைப்பற்றி அதிகம் விமர்சிக்கவில்லை ஆனால் வைகோவை கடுமையாக விமர்சித்திருக்கிறேன்.. காரணம் என் இளமைகால கதாநாயகன்.. அந்த உணர்ச்சிவயபடும் பேச்சு அடுக்கடுக்காய் உலகளாவிய அரசியல் .. நாடாளுமன்றத்தின் திமுகவின் குரலாய் கம்பீரமாய் ஒலித்ததெல்லாம் நினைவிற்கு வந்தது.. 1980 இளைஞர்அணி துவக்கத்தை தொடர்ந்து நந்தவனம் அன்பகம் பழைய திமுக தலைமைகழகம் இளைஞரணிக்கு தருவதாக பேராசிரியர் சொல்லி 10 லட்சரூபாய் கொடுத்தால் இளைஞர் அணி அலுவலகமாக பயன்படுத்தலாமென்றார்.. தளபதி ஊரூராக அழைத்து வந்து கொடியேற்றினால் ₹500 பொதுகூட்டமென்றால் ₹1000 என சொல்லி துணைநின்று இளைஞரணிக்காக அன்பகம் பெற்று தந்ததில் அவர் காட்டிய ஆர்வம் இப்போதும் கண்முன் வருகிறது.. கலைஞர் அதிகம் நம்பியவர்களில் ஒருவர்.. எங்கு சறுக்கியதென்றே அறியாமல் வீழ்ந்து போனதும் கலைஞருக்கு எதிராக கூர் தீட்டியதும் நம் கோபமெல்லாம் அதிகரிக்க காரணமாகியது..
..
எதற்கெடுத்தாலும் உணர்ச்சிவயபடுதல் அரசியல் உகந்ததல்ல என சுயமறிய அவருக்கு 72 வயது தேவைபட்டிருக்கிறது.. திராவிட இயக்கம் குறிப்பாக திமுக ..யாராலும் ஒன்றும் செய்யமுடியாது.. காரணம் தேர்தல் அரசியல் என்பது எங்களுக்கு வழங்கபடுகிற வாய்ப்பு அதை பயன்படுத்தி இந்த சமூகத்திற்கு இனத்திற்கு மொழிக்கு எதையெல்லாம் செய்யமுடியுமோ அதை செய்யதானேயொழிய .. அரசு பதவியோ அதிகாரமோ இல்லாவிட்டாலும் இனத்திற்கான பயணம் தொய்வின்றி நடக்கும் .. மக்களுக்கான சேவையை அது செய்துகொண்டே இருக்கும் அதைவிட எம் பகைவர்களால் இனத்திற்கோ மொழிக்கோ எம்மக்களுக்கு கேடுவிளைக்குமெனில் தீட்டிய கூர்வாளைப்போல எதிரியிடமிருந்து காக்கும்.
..
அந்த இனத்திற்கு சில இன துரோகிகளால்.. அடிமைசாசனமெழுதி தொடைநடுங்கி நிற்கிறார்கள்
சில இளைஞர்கள் அடிப்படை ஏதென்றே அறியாமல் பகைவரோடு கைகோர்த்து நிற்கிறார்கள்.. இந்நிலையில் தான் திராவிடத்தை காக்க என ஞானோதயம் பெற்று வருகிறார்.. ஆனால் காலம் அவரை கேலி செய்கிறது.. ஏனெனில் சிறந்ததொரு படைவீரனை தேர்வு செய்து இனம்காக்க #தளபதியாய் வழிநடத்த வருங்கால தலைவனாய் காலம் தீர்மானித்துவிட்டது.. ஆனாலும் வலிய வரும் கைகோர்ப்பை தட்டிவிட மனமில்லை ஆனால் தோளில் சுமக்கவும் தயாரில்லை என தளபதி சூசகமாய் சொல்லியிருக்கிறார்..
..
காலம் தந்த வாய்ப்பை அவசரகதியில் தூக்கியெறிந்தவர்கள் வலிமையிழந்து கேட்பாரற்று போவார்கள் என்பதை வைகோவின் நிலையும் அறிவிப்பு நமக்கு உணர்த்துகிறது..
இவரென்றில்லை .. வழி எதுவென்று அறியாது இனபகைவரின் சூழ்ச்சிக்கு இரையாகி தமிழ் தேசியமென உளறிவரும் சிறார்கள்.. பகைவர் நிழலில் நின்று கதைக்கிறார்கள்... பகைவர் சூது அறிந்தும் போது.. மொத்தமாய் இழந்து செய்வதறியாது போகும் நிலையில் வரும் போது புத்தி தெளியும் அப்போதும் இந்த திராவிட இயக்கம் தான் துணை நிற்கும்..
..
#திமுக_இனத்தில்_காவல்…
..
Aalanci Spm
Saturday, December 2, 2017
தன்னிலை அறிதல் வேண்டும்
தன் தந்தை கருணாநிதி அதிகாரத்தால் பதவிக்கு வந்த ஸ்டாலின்.. தொண்டனாக இருந்து முதல்வரான என்னை விமர்சிக்க அருகதை இல்லை ..
எடப்பாடி பழநிசாமி..
..
திரு.ஸ்டாலினப்பற்றி விமர்சிப்பதற்கு முன் அவர் கடந்துவந்த பாதையைப்பற்றி அறிவை பிறரிடம் கேட்டோ அல்லது அதிகம் புத்தகம் படிக்கிற மாமேதையான பழநிசாமி படித்து தெரிந்தோ பேசியிருக்கலாம்.. கலைஞரால் அரசியலுக்கு வந்தாரென்பதைவிட இந்திராவால் அரசியலுக்கு வந்தார் என்பதே சரி.. படிப்படியாக உயர்ந்து இன்று திராவிட இயக்கத்தின் நான்காம் தலைமுறையை தலைமை தாங்க காலம் பணித்திருக்கிறது..
..
ஆனால் ..எடப்பாடி அவர்கள்.. தவழ்ந்து வந்து
சசிகலா காலை நக்கி முதல்வர் பதவி வாங்கியதை ஊரறியும்.. அன்றைய இக்கட்டான சூழலில் சசிகலா எடுத்த முடிவு தனக்கு சாதகமாகி முதல்வராகியது
அதற்கு கைமாறாய் வாய்ப்பு தந்தவருக்கே உலை வகைக்கிற கேடுக்கெட்டதனத்தை .. வந்த வழி மறந்து சம்பந்தமே இல்லாத பாஜகவிற்கு காவடி தூக்கி.. ஒட்டுமொத்தமாய் தமிழகத்திற்கு தலைகுனிவை ஏற்படுத்தி.. உட்சபட்ச
அடிமைத்தனத்தையும் மோடிக்கு காட்டி ( மோடியின் கையில் தலைகவிழ்ந்து) மானமிழந்து மரியாதையிழந்து .. விசுவாமில்லாமல்.. தன்பதவிக்காக எதையும் செய்ய துணியும் கோடாரி .. எங்களைப்பற்றி பேச என்ன அருகதை இருக்கிறது..
..
முதலில் யாரென்றே தெரியாத உங்களை ஜெயலலிதா வளர்த்துவிட்டதும்.. செங்கோட்டையின் சேட்டைகள் .. அவருக்கு வினையாய் போனதும் அந்த இடத்தில் கைகட்டிநின்றதால் பதவி கிட்டயதே தவிர திறமையாலோ அல்லது செய்த தொண்டாலோ அல்ல..மானமரபுகளை காக்கும் இனத்தில் பிறந்த கேடுகெட்டபிறவி.. தீட்டிய மரத்திலேயே கூர்பார்க்கும் ஈனச்செயலை செய்தவர்
யாரை விமர்சிப்பது என்று தெரிந்திருக்கவேண்டும்..
..
தளபதியை பார்த்து கலைஞரால் பதவிக்கு வந்ததாக சொல்வது வேடிக்கை.. திமுகவில் பகுதி செயல்வீரராக தொடங்கி இளைஞர் அணி .. சட்டமன்ற உறுப்பினர்.. அமைச்சர்.. துணை முதல்வர்.. கட்சி பொருளாளர்.. எதிர்க்கட்சி தலைவர்
என படிப்படியாய்.. வளர்ந்து கட்சியின் செயல்தலைவராய் .. மக்கள் மனதில் நம்பிக்கையூட்டும் எதிர்காலமாய் நிற்கிறார்.. நட்டதும் பூத்ததில்லை.. நெடுநாள் நீர்பாய்ச்சி.. வேலிகட்டி பாதுகாத்து.. வளர்ந்து பயன்தரும் மரமாய் நிற்கிறது வைரம் பாய்ந்த மரம்..
..
எடப்பாடி அவர்கள் தன்னை நிலைக்கண்ணாடியில் ஒருமுறை பார்த்துக்கொள்ளட்டும் அப்போது தெரியும் யாரென்று .. சசிகலா எடப்பாடிக்கு பதில் செங்கோட்டையனையோ, செல்லூரையோ
.. ஏன் தினகரனையோ.. அறிவித்திருந்தால் அவர்தான் முதல்வர்..
முதல்வர் பதவி யாரோ இட்ட பிச்சையென்பதை அறிதல் வேண்டும்.. தன் தகுதிக்கு மீறுயதென்பதையும் நினைவில் கொள்க..
..
#நில்லாத வற்றை நிலையின என்றுணரும்
புல்லறி வாண்மை கடை...
என்ற வள்ளுவன் வாக்கை உணர்க..
நிலையற்றவைகளை நிலையானவை என நம்புகின்ற அறியாமை மிக இழிவானதாகும்.
..
#தன்னிலையறிதல்_நன்று..
..
Aalanci Spm
Friday, December 1, 2017
பொதுவாழ்வின் பொக்கிஷம் மணி
கோ.சி.மணி..
ஒரு பொதுவாழ்விற்கு வந்தவன்.. ஒரு நிர்வாகி ஒரு தொண்டன் எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு மிக சிறந்த எடுத்துக்காட்டு.. தி.மு.கழகத்தின் தஞ்சை மாவட்ட செயலர் அதுவும் இப்போதைய தஞ்சை நாகை திருவாரூர் மாவட்டங்களின் ஒருங்கிணைந்த தஞ்சை செயலர்.. அண்ணாவின் மீது அன்பு கொண்டவர் கோவம் அவரோடு உள்ள குணம் அது நேர்மையின் அடித்தளம் .. எந்த குற்றசாட்டிற்கும் ஆளாகாத ஒரு அமைச்சர் இவரிடத்தில் சென்றால் அது சரியென்றால் உடனே செய்து தந்துவிடுவார்.. தஞ்சை விவசாயிகளின் பிரச்சனையை ஆழமாக அறிந்தவர் .. எந்தவொரு விவசாய பிரச்சனையாக இருந்தாலும் மணி கூப்பிடு என்றுதான் அண்ணாவும் கலைஞரும் சொல்வார்கள் அத்தனை அத்துபடி.. அண்ணா மேக்கிரி மங்கலத்து பேக்கிரி என்பார்..
..
எல்லாநேரமும் அரசியல்வாதியாகவே இருந்தவர்.. திமுகழக ஆட்சுயின் போதுதான் அவரது துணைவியார் இறந்து போகிறார் .. தளபதி அவர்கள் அழுதகண்களோடு அம்மையாருக்கு அஞ்சலி செலுத்துகிறார்.. ஸ்டாலின் இங்கே வா என தனியாக அழைத்து கும்பகோணம் தேர் ஓடணும் அதற்கு பாதை சரிபண்ணறதெல்லாம் உன் டிப்பார்ட்மண்ட் தான் வருது உடனே சரிபண்ணி கொடு என்கிறார்..அப்போது உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தார்...கலக்கிய கண்களோடு இருந்த போதுகூட தொகுதியின் நலன் பற்றி பேசியவர் .. இதெல்லாம் அறிந்துக்கொள்ளவேண்டும் இன்றைக்கு பொதுவாழ்விற்கு வருவோர்.. கும்பகோணம் கும்பேஸ்வரர் கோவிலை சுற்றி சாக்கடைதான் ..
மழைக்காலம் வந்துவிட்டால் சாலை எது சாக்கடை எதென்றே தெரியாது .. கும்பகோணம் சட்டமன்ற தொகுதியில் வெற்றிபெற்று அமைச்சரான போதுதான் ..பாதாள சாக்கடையை கொண்டுவந்து ஒரு சொட்டு தண்ணீர் கூட நிற்காமல் செய்தவர் கோவில் படிகளை விட உயரமான சாலை அமைத்து அந்த இடத்தையை சுத்தமாக்கியவர்.. இன்றைக்கும் மணி பேசபடுகிறார் என்றால் அது அவர் தொகுதிக்கு செய்த சேவை அப்படி கலைஞர் அவர்களே .. பொட்டு வைக்க சொன்னேன் அவன் சிங்காரித்து வைரமெ வைடூரியம் போட்டு தகதகவென்று கும்பகோணத்தை ஆக்கிவிட்டான் என்பார் .. சட்டமன்ற உறுப்பினர் எப்படி இருக்கவேண்டுமென்பதற்கு அவர் தான் சிறந்த உதாரணம்..
..
ஒரு கட்சி தலைவனுக்கு எப்படி விசுவாசமாக இருக்கவேண்டுமென்பதற்கும் மணி அவர்கள் சிறந்த உதாரணம்.. வைகோ திமுகவிலிருந்து பிரிந்து சென்ற போது எங்கே பொதுக்குழுவை கூட்டலாமென்று வேண்டுமென்று பேராசிரியர் தவித்தபோது கலைஞர் சொன்னர் தஞ்சையிலே கூட்டுங்கள் மணி பார்த்துக்கொள்வான் என்றார் ஒன்பது மாவட்ட செயலர்கள் வைகோவோடு போய் திமுக தங்களுக்கென்ற பதட்டமான சூழலில் தஞ்சையில் வெற்றிகரமாக நடத்தி முடித்தார் அன்றிரவு பொதுகூட்டம் .. எப்படி நடக்கிறது பார்போமென சிலர் கொக்கரித்து கலைஞரின் காதுகளுக்கு வருகிறது மணியை அழைத்து என்னப்பா ..தஞ்சை பாதுகாப்புன்னு சொன்னிய கூட்டம் நடத்தமுடியா போய்விடுமோ என்ற போது இரு நான் வரேன் என்று கீழவாசலுக்கு போய் வேட்டியை மடித்துக்கட்டிக்கொண்டு எவன்டா கூட்டத்துக்கு கலாட்டா பண்ணுவேன்னு சொன்னது என்ற கேட்ட போது ஒருத்தரும் வரவில்லை.. திரும்பி வந்து இப்ப போய் பேசு ஒருத்தனும் கலாட்டா பண்ணமாட்டான் என்று சொன்னார் .. இப்போதும் என் கண் முன் வந்து போகிறது கலைஞரின் மீது ஒரு துரும்பு விழுவதை கூட விரும்பாத பெருந்தொண்டன்.. அதனால் தான் கோ.சி.மணி இறந்தபோது எப்படி தஞ்சைக்கு செல்வேன் மணி இல்லாத தஞ்சையை எண்ணி என் #குலைநடுங்குகிறதே என்றார்..
..
நிறைய பேசிக்கொண்டே போகலாம்.. ஒரு தொண்டனாய் மக்கள் பணி செய்யும் சேவகனாய்.. நல்ல கட்சியின் சிறந்த நிர்வாகியாய்.. பட்டிதொட்டியெல்லாம் தெரிந்து வைத்திருந்த எல்லோரையும் பேர் சொல்லி அழைத்த அன்னியோன்யம் .. எல்லா நேரமும் தொகுதி மக்களுக்கு உதவிடும் தலைவனாய்.. வலம் வந்தார்
நிச்சயமாக இன்றைக்கு பொதுவாழ்விற்கு வருபவர்களுக்கு தெரிந்துகொள்ள கூடிய
சிறந்த பாடம் கோ.சி.மணி அவர்கள் பொதுவாழ்வு..
மணியை போல ஒரு தொண்டன் தளபதி கிடைத்தால் மலையை கூட நகர்த்தலாமென்பார் கலைஞர்..
வேறென்ன வேண்டும்..
..
முதலாம் ஆண்டு நினைவில்..
..
Aalanci Spm
விதையை தேடுகிறார்கள்
பாஜக ..
ஆர்.கே.நகருக்காக ஆள்தேடி அலைகிறது..
தமிழகத்தில் பாஜகவிற்கு குறிப்பாக பாசிச பார்பன சக்திகளுக்கு ஏற்பட்டிருக்கிற அவலநிலைக்கு காரணம் பெரியார்.. ஒரு நாட்டையே ஆள்கிற கட்சி தமிழகத்தில் ஒரு தொகுதிக்கு ஆள்தேடும் அவலம் ஏன் ஏற்பட்டது இங்கே குறிப்பாக பிராமண இயக்கமாக கருதபடும் ஆர்எஸ்எஸின் நிழல் கூட எதிர்க்கிற நிலை வந்ததே .. இங்கே சாதீய கொடுமைகள் மதவெறி செயல்கள் மட்டுபடுத்தபட்டிருக்கிறதே.. இதற்கெல்லாம் மூலகாரணி.. எம் தந்தை #பெரியார்..
..
எந்தெந்த குறுக்கு வழிகளில் உண்டே அத்தனையிலும் புகுந்து தலை நீட்டும் போதெல்லாம் சட்டென்று தலையில் கொட்டி விசத்தை கக்கவிடாமல் பார்த்துக்கொண்டிருக்கிறது தமிழகம்.. சாதி உணர்வை தூண்டி பார்த்து முடியாமல் கடைசியில் மொழி வெறி தூண்டி .. கடைசியில் நேரடியாகவே ஆள துடிப்பதை கண்டு தமிழன் சிரிக்கிறான் ..
..
திராவிடர் கழகம்
இங்கே குறிப்பிட்டாக வேண்டும் சில தவறான முடிவுகளை சிலநேரம் எடுத்தாலும் அல்லது அப்படி நமக்கு தோன்றினாலும் கடைசியில் அது சரியென்று நமக்கு காலம் உணர்த்தியிருக்கிறது..
பெரியார் மறைந்து இத்தனை காலம் பின்னிட்டும் திராவிடர் கழகம் .. இந்த பாசிச வெறியர்களை தமிழ் மண்ணில் நுழையவிடாமல்
செய்துக்கொண்டிருக்கிறது அதன் காரணகர்த்தர் ஆசிரியருக்கு எம் நன்றி.. திராவிட கழகத்தின் தலைமை பொறுப்பை ஏற்று 35 ஆண்டுகளாக சமூகநீதிக்காக .. ஏற்றதாழ்வற்ற சமூகம் வேண்டுமென்பதற்காக பணியாற்றி.. எப்போதெல்லாம் மறைமுகமாக இடஒதுக்கீடு சமூக உரிமைகளில் தலையீடு வருகிறதோ அப்போதெல்லாம் போராளியை போல களம் கண்டு தடுத்து நிறுத்தும் மாவீரராய் நம் ஆசிரியர் .. அகவை 85 ல் அடியெடுத்து வைக்கிறார்.. வாழ்த்துகள்..
..
பாஜகவின் வளர்ச்சியை தடுக்கும் கேடயமாக திராவிட இயக்கத்தின் இரட்டைக்குழலின் ஒன்றாய் நம் ஆசிரியர் தொடர்ந்து பணியாற்றுகிறார்..
நிறைய கருத்தொற்றுமையும் சில வேற்றுமையும் உண்டெனினும் ஆசிரியரின் பணி அளப்பெரியது...
இன்றைக்கு பாஜக வேட்பாளருக்காக வலைவீசுகிறதென்றால் .. அதற்கு இங்கே திராவிட இயக்கத்தின் வேரூன்றல் எந்தளவிற்கென்பதை உணரமுடிகிறது.. எத்தனை வழிகளில் வந்துநின்றாலும் திருப்பி தாக்கும் வலிமையை இம் மண் பெற்றிருக்கிறதே அதற்கெல்லாம் தி.கழகம் மிகப்பெரிய காரணம்..
..
எம்ஜிஆர் காலம் தொட்டே மறைமுக அதிகாரத்தை செலுத்தியவர்கள் இப்போது அடிமைகளை கொண்டு அதிகாரத்தை நிரம்பும் போதும் கூட நேரடி விதைப்பை இங்கே செய்ய முடியவில்லை.. விதையே கிடைக்காத நிலை தான் .. இவர்கள்தான் நல்ல விளைச்சலை தரபோகிறார்களாம்..
கழகங்கள் இல்லாத தமிழகம் என்ற காவிகள்
கட்டிவச்ச காசையேனும் காப்பாற்ற ஆள் தேடுகிறார்கள் ..
..
#திராவிடம்
..
Aalanci Spm
Subscribe to:
Posts (Atom)