Monday, November 6, 2017

பொதுவுடைமை போலிகள்

அறிவியல் பூர்வமான சமூக விஞ்ஞானமான மார்க்சிய தத்துவமே, இந்தியா சந்திக்கும் சவால்களில் இருந்து விடுதலை அளிக்கும் என இடது கம்யூ தமிழ்மாநில பொதுசெயலர் ஜி.ராமகிருஷ்ணன்.. நூற்றாண்டு பின்னிட்டும் இவர்கள் எங்கே நிற்கிறார்கள் .. இந்தியாவில் இவர்களின் நிலை ஏன் பரிதாபகரமானது அல்லது சுருங்கிப்போனது.. இந்த பொதுவுடமைவாதிகள் எங்கே நிற்கிறார்கள் என்று பாருங்கள் இவர்களின் தத்துவத்திற்கும் செல்வி ஜெயலலிதாவிற்கும் ஏதாவது சம்பந்தம் இருந்ததா ஆனால் அழைக்காமலேயே ஓடிபோய் நின்றார்களே ஏன்.. எந்தவொரு அரசியல் முடிவையும் அன்றைய சூழலை மட்டுமே ஆலோசித்து எடுத்தால் தொலைநோக்கு புதைந்து போகும் அப்படி தொலைநோக்கு சிந்தனையில்லாத திட்டங்களும் செயல்பாடுகளும் பொதுவுடமை சித்தாந்தத்தை புதைத்து விட்டதென எண்ணுகிறேன்.. இந்தியாவில் மார்க்சியம் தோற்று வெகுநாட்களாகிவிட்டது இன்றைய காம்ரேட்களுக்கு தெரியவில்லைபோலும்.. ஏறக்குறைய இருபத்தைந்தாண்டுகள் வங்கத்தை ஆண்ட இவர்களால் மனிதனை மனிதனே இழுக்கும் இழிவிலிருந்து மீட்க முடியவில்லை.. பொலிட்பீரோ என்கிற அதிகாரபீடத்தில் பார்பனர்கள் கையில் இருந்தது/ அவர்கள் அதை வெகு சாமர்த்தியமாக வளரவிடாமல் பார்த்துக்கொண்டார்கள்.. பொதுவுடமை சித்தாந்ததிலிருந்து வெகுவாக விலகி கரைந்து மறைந்து போனார்கள் ... உலகெங்கும் கம்யூனிஸம் வெகுவாக மறைய தொடங்கும் வேளையில் தோழரின் பேச்சு சற்று நகைச்சுவையாக தோன்றுகிறது உலகமயமாக்கல்/தாராளமயமாக்கல் நோக்கிய உலகநாடுகளில் அதிவேக பாய்ச்சல் தொழிலாள வர்க்கத்தை மிகவும் அடிமைத்தனத்திற்கு அல்லது மிருகத்தைவிட கேவலமாக நடத்தபடுகிற நிலைக்குதான் கார்ப்பரேட் நடந்துக்கொண்டிருக்கிறது/நடத்திக்கொண்டிருக்கிறது.. இதை கம்யூனிஸ நாடுகள் கூட பின்பற்ற தொடங்கிவிட்ட காலகட்டத்தில் ராமகிருஷ்ணன் பேசியிருக்கிறார்.. .. இந்திய வர்த்தக சந்தையை குறிவைத்து உலகின் பிரபல கார்பரேட்டுகள் வியாபார அரசியலை செய்துக்கொண்டிருக்கிறார்கள் .. விரும்பியோ விரும்பாமலோ மக்களும் அதை நோக்கி நகர்ந்துக்கொண்டிருக்கும் போது மார்கிசியம் பேசுகிறார்..கொள்கை அரசியலிருந்து பின்னோக்கி பயணிக்கும் ராமகிருஷ்ணனும் சகாக்களும்.. இந்தியாவிற்கு ஏற்றது மார்க்சியம் என்பதை எப்படி எடுத்துக்கொள்வது. கேரளாவில் இடதுசாரிகள் எல்லாம் கார்பரேடுகளோடு கைகுலுக்கி சந்தை செய்கிறார்கள் வங்கத்திலோ புறக்கணிக்கப்பட்டு.. அவர்களின் #தீதியோடு கைகோர்த்துவிட்டார்கள்.. .. இந்தியா சந்திக்கும் மிகப்பெரிய சவால் மதவாதம் ஆனால் மறைமுகமாகவோ நேரடியாகவோ ஆதரிக்கும் சிலரோடு கைகோர்க்கும் கம்யூனிஸ்ட்டுகள் இந்திய சந்திக்கும் சவால்களுக்கும் அதுவும் அறிவியல்பூர்வமான சமூகவிஞ்ஞான பூர்வமான சவால்களுக்கு தங்களின் சித்தாந்தமே சரியென்கிறார்.. இந்தியாவில் தோல்விகண்ட கம்யூனிஸம்.. கம்யூனிஸ்ட் உச்சபட்ச அதிகார மையத்தில்/சபையில் (பொலீட்பீரோ) இருப்பவர்களை /இருந்தவர்களைஒருமுறை கவனித்தாலே போதும் உயர்மட்டத்தில் உயர்வகுப்பினரே ஆட்சி செலுத்துவார்கள் .. பொலீட்பீரோவில் ஒரு பெண் வருவதற்கு கூட விடுதலை அடைந்து 50 ஆண்டுகள் காத்திருக்கவேண்டியிருந்தது.. இவர்கள் பேசும் பொதுவுடமை என்பது #நோக்கு_கூலி ரகம்.. அதிலும் ராமகிருஷ்ணன் போன்றவர்கள் பொதுவுடமையின் போலிகள்.. .. #சாயம்வெளுத்த_செஞ்சட்டைகள்… .. Aalanci Spm

திராவிட பெருவுடையார்

திராவிட பெருவுடையாரை சந்தித்தார் பாரத பிரதமர்.. இன்றைய தினம் மகிழ்ச்சி பெருக்கில்.. காரணம் பிரதமரே வந்து சந்தித்தார் என்பதால் அல்ல.. எங்கே அந்த செய்தி பெரியதொரு விடயமாக பேசபடுமோ தாக்கத்தை தந்திடுமோ என்று கூட யோசித்தேன் ..ஆனால் கலைஞரின் வருகை சில நொடிகளிலேயே வெளியே வந்து தொண்டர்களை மக்களை சந்தித்து கையசைத்தார் பாருங்கள் அங்கே எல்லாம் அடிபட்டு போனது.. அதுதான் கலைஞரின் அரசியல் எதை எப்போது செய்யவேண்டுமென்பதில் எதை செய்தியாக்கி முன்னிலைபடுத்த வேண்டுமென்பதை கலைஞரைப்போல தீர்மானிக்க இந்திய அரசியலில் எவருமே இல்லை.. மோடி வந்து போனதை கூட மறந்து சிரித்து நிற்கிறான் உடன்பிறப்பு.. .. திடீரென பிரதமர் வருவதாக சொன்னதும் சிலர் வேறுமாதிரியான சூழல் உருவாக போகிறதென்றெல்லாம் சொல்லி திரிந்தார்கள்.. ஆண்டவரை தரிசிக்க யார் வேண்டுமானாலும் வரலாம் தரிசனம் பொதுவானது வருகிறவர்களை வரவேற்பதும் வீடு வரை வந்தவரை மரியாதை நிமித்தமாக சந்தித்து உரையாடுவதும் கோபாலபுரத்து பெருவுடையாரின் பழக்கம்.. மோடிக்கு தெரியும் தமிழகம் வருகை பெரிய விளம்பரம் வேண்டுமெனில் .. இதுவரை தம்மை துரத்திக்கொண்டிருக்கிற திராவிட போராளிகள் சத்தத்தை குறைக்கவேண்டுமெனில் பெருவுடையாரை தரிசிப்பதை தவிர வேறுவழியில்லையென்று.. GST , பணமதிப்பிழப்பு ..என..தொடர்ந்து வரும் கடும் கண்டனங்களை எதிர்கொள்ள வேண்டிவருமென்பதால் பெருவுடையாரிடம் சரணாகதியாகி நின்ற காட்சியை ரசிக்க தோன்றியது.. ஆம்.. அவருக்கு புரியும் எந்த சூழலிலும் கொள்கை மாறாத .. போர்க்குணத்தோட படை நடத்தும் இந்த பெருமகனை .. வயோதிகம் ஒன்றும் செய்துவிடாது ..எந்நேரமும் மக்களின் துடிப்பை அறிந்து செயலாற்றும் பெரும் கருவி .. தமிழகம் செய்த பெரும் தவத்தால் கிடைத்த பெருவுடையார்.. அவரை சந்தித்து பாவம் போக்கலாமன்றிருப்பார்கள்.. .. ஒட்டுமொத்த தமிழகத்தின் கவனத்தை ஈர்த்த நிகழ்வு.. கலைஞரின் கை அசைவு.. ஒரு கை அசைத்தே கவனத்தை தம் பக்கம் ஈர்க்கமுடியுமென சமிக்கை தந்திருக்கிறார்.. இனியும் சூரியனைச் சுற்றி எதுவுமே நடக்கும் தமிழக அரசியல் இந்த #சூரியனைச்சுற்றித்தான்.. .. #தெற்கிலிருந்தும்_சூரியன்_உதிக்கும் … .. Aalanci Spm

Sunday, November 5, 2017

கமல்..எனும் பாசிசம்

ஐம்பது ஆண்டுகளாக நாம் தூங்கிக் கொண்டிருந்தோம். ..கமல் இல்லை கமல் அவர்களே ஐம்பது ஆண்டுகளாக உங்கள் பூணூலை மறைத்துக் கொண்டிருந்தீர்கள்.. ஆனாலும் அதையெல்லாம் மீறி அடிக்கடி எட்டிபார்க்கும் என்பதை நாங்கள் அறிவோம்.. .. கொஞ்சம் கவனித்தால் புரியும் இதுவரை கமல் பாஜகவை விமர்சிக்கவே இல்லை .. ஆனால் பகுத்தறிவு வேடம் கட்டி நம்மை விமர்சிப்பார். விமர்சனம் செய்யட்டும் அதில் காரியமாக ஏதேனும் இருக்கிறதா என்று பார்க்கவேண்டும்.. ஐம்பதாண்டுகள் என யாரையெல்லாம் சொல்கிறார் .. அண்ணா கலைஞர் மகோரா ஜெயா ஆட்சி .. நாங்களே மகோரா ஜெயா ஆட்சியை திராவிடத்தின் ஆட்சியாக கருதியதில்லை திராவிட போர்வையில் ஏறக்குறை பாசிச கைகூலிகளின் ஆட்சி அது .. இங்கே நேரடியாக வலம் வரமுடியாதென்பதால் திராவிட போர்வையில் ஆட்சி செய்தார்கள் அதனால் மயிலு குயிலென்றென்லாம் பெயர் சூட்டி மத்தியில் ஆள்வோரை/அதிகாரிகளை குளிர்வித்து ஆட்சி செய்தார் .. ஜெயாவோ நேரடியாகவே இந்துத்துத்துவவாதிகளை செயல்படவிட்டார் கடைசி காலங்களில் அவர்களாலேயே மிரட்டலுக்கும் ஆளானார். .. அண்ணா.. கலைஞர் இருவரின் ஆட்சியில் இன்று காண்கிற நல்ல திட்டங்கள் காலம் கடந்தும் பயனளிக்கிற திட்டங்கள் .. ஒடுக்கபட்டிருந்த சமூகத்திலிருந்தவர்களை கை கொடுத்து மேலிழுத்து அவர்களை சரிசமாக நடமாடவிட்டது.. ஆண்டே சாமி என்றழைத்தவைனை .. யோவ் அய்யரே என அழைக்க காரணமானவர்கள் பெரியாரும் அண்ணாவும் தான் .. இன்றைக்கு நாங்களெல்லாம் உம்மை போன்றவரை எதிர்த்துநின்று கதைக்கிறோமே அதெல்லாம் பெரியாரும் அண்ணாவும் கற்று தந்ததுதான்.. ஏன் என கேட்க வைத்ததும் திராவிடம் தான். நூற்றாண்டாய் எங்களை பழக்கி பழக்கி..திருந்துடா திருந்துடா என பெரியார் எங்களை திட்டி திட்டியே சொரணையை வரவைத்து .. இனி எக்காலத்திலும் பாசிசத்தை காலூன்ற வைக்காமல் பார்த்துக்கொள்ள பழக்கியிருக்கிறார்கள்.. அதனால்தான் சின்ன சின்ன அசைவுகளை கூட எங்களால் இனம்காண முடிகிறது.. .. கமல் அவர்களே .. உங்கள் நடிப்பை ரசிக்கிறவன் என்பதற்காக தமிழனை மதிமயக்கத்திலேயே வைத்திருக்கலாமென்ற எண்ணம் இனி ஈடேறாது எழுபதுகளில் நடந்த தவறுகள் இனியும் இங்கே நடக்காதென்பதை காலம் உணர்த்தும் .. கட்சி நடத்த நிதியை ரசிகர்கள் தருவார்கள் மிக கவனமாக காசை எடுக்காமல் அடுத்தவன் தலையை தடவுகிறீர்.. கொள்கைக்காக கட்சி தொடங்கினால் தாமாக முன் வருவார்கள். வெறும் டீயும் பண்னையும் தின்றுவிட்டு கட்சி பணியாற்றுவான் .. ரசிகன் தருவான் என்கிற போதே முதலீடு செய்ய சொல்வது புரிகிறது.. முதலில் எதேனும் ஒன்றில் தெளிவாக நில்லுங்கள்.. மிக தெளிவாக சிந்திக்கிற மக்கள் .. தனிகட்சி தொடங்குவதாக சொல்வது கல்லைக்கட்டிக்கொண்டு கிணற்றுக்குள் இறங்குவதைப்போல.. விரைந்து இறங்குங்கள் பாஜகவை விமர்சிக்காமல் அங்கொரு காலும் இங்கொருகாலும் வைக்காமல் ஒரே இடத்தில் நிற்க பழகுங்கள்.. தீவிரவாதம் வேறு பயங்கரவாதம் வேறு .. இருபக்கம் அடிவாங்க நானென்ன மத்தளமா.. என்கிறீர் அதைதான் சொல்கிறோம் ஏன் சங்கடபடவேண்டும்.. கறுப்புச்ச்டை போர்வில் காவி சிந்தனையோடு திரியவேண்டும் நேரடியாக பாஜகவில் சேர்ந்து எதிர்நின்று போராட வா.. மறைந்துநின்று தாக்கும் ராமசந்திரன் பரம்பரையே.. நேர் வா.. .. இல்லையெனில் வாய்மூடி போ.. .. Aalanci Spm Mansoor Mohammed.. ஆலஞ்சியார்

Saturday, November 4, 2017

காலத்தின் வெகுமதி

கலைஞர் எங்களை கவிதை நயத்தோடு திட்டுவார், ஸ்டாலின் பட்டவர்த்தனமாக திட்டுகிறார்..என்கிறார் அமைச்சர் செல்லூர் ராஜூ. .. கலைஞரின் விமர்சனங்கள் நயத்தோடு இருக்கும் எதிர்ப்பை கடுமையாக அதேவேளை இலக்கிய நயமாக சொல்லிவிடுவார்.. தன் சிலை உடைக்கபட்டபோது கூட .. #செயல்படவிட்டோர் சிரித்து மகிழ்ந்து நின்றாலும் அந்த சின்ன தம்பி என் முதுகில் குத்தவில்லை நெஞ்சில் தான் குத்துகிறான் அதுவரை நிம்மதியெனக்கு என்று பாட முடிந்தது.. .. அதே போல் மகோராவை (எம்ஜிஆரை) மானமிகு வாலியை மறைந்து நின்று தாக்கிய மாண்புமிகு ராமசந்திரனை மாவீரனென்று மகாகவி கம்பனே ஏற்றுக்கொள்ளவில்லையென பாடமுடிந்தது.. .. கவி நயத்தோடு சொற்களை அள்ளி வீசுபவர் கலைஞர் அவரைப்போல இனி யாரும்,இப்படி தனி ராஜாங்கம் நடத்தமுடியுமா என தெரியாது ஆனால் அவர் காட்டிய வழியில் .. அவர் பயிற்சியில் அவரது மேற்பார்வையில் தளபதி வேகமாக செயல்படுகிறாரென்பது அமைச்சரே ஒப்புக்கொண்டிருக்கிறார்.. .. தளபதி விமர்சனங்களை ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்வதில்லை .. தனக்களிக்கப்பட்ட வாய்ப்பை மிக சரியாக பயன்படுத்துகிறார் அவசரமில்லாமல் அதே வேளை ஆணித்தரமாக சொல்லவந்ததை சொல்லிவிட்டு போகிறார்.. தளபதியின் வளர்ச்சி சிலருக்கு உறுத்தலாம் ஆனால் காலம் செய்த தேர்வு தளபதி.. அவரைச் சுற்றிதான் இனி தமிழக அரசியல் .. அவரின் கருத்து மட்டுமே இனி அரசியலின் திசையை தீர்மானிக்கும்.. தளபதியை தவிர்த்து ஒரு அரசியல் இனி தமிழகத்தில் இல்லை.. அவரின் கருத்துகள்/பேச்சுகள்/நடவடிக்கைகள் கூர்ந்து கவனிக்கபடுகிறது தமிழகம் காத்து நிற்கிற தலைவராக உருவாகிறார்.. ஆம் யாரும் தலைவராக உருவாக முடியாது அதை காலம் தான் தீர்மானிக்கும் அப்படி காலம் உருவாக்கிய தலைவர்தான் தளபதி அவர்கள்.... .. நிறைய புலம்பல்கள் வரும் அது சாதீய மத உணர்வுகளை தூண்டகூடும்.. இனத்தை மொழியை ஆயுதமாக்கி போரிட முயற்சிக்கும்..பழைய வரலாற்று கசப்புகளை தோண்டியெடுக்கும் எங்கோ எப்போதோ நடந்த சில நிகழ்வுகளை முன்னிலைபடுத்தும்..பிரதான எதிரிகளோடு சேர்ந்து வீழ்த்தலாமெனஆசை கொள்ளும்.. வாரிசு அரசியல் .. திராவிட அரசியல் என்றெல்லாம் கூப்பாடு போடும்.. எப்படியேனும் வீழ்த்திவிட முடியாதா என ஜோதிடம் என்ற பொய்யை பரப்பகூடும்.. இதோ இவரை விட இவரின் பங்காளி சரியான தேர்வு என முடிச்சு போடும்.. இவர் பின்னால் அணிவகுக்கும் சாமானியனை சொறிந்துவிடும்.. ஆனால் இவையாவும் தவிடுபொடியாக்கி. தள்ளிக்களைய வேண்டியவை.. எத்தனை இடையூறுகள் வந்தாலும் அத்தனையும் தாண்டி ..எல்லாவற்றையும் கடந்து நிமிர்ந்து உயர்ந்து நிற்கும் நம் தளபதி #காலத்தின்_கட்டாயம்… .. #தளபதி_காலம்தந்த_பரிசு.. .. Aalanci Spm Mansoor Mohammed

Friday, November 3, 2017

எனது உரிமை..

கமல் மீது வழக்கு.. உ.பி. வாரணாசியில் ஐந்து பிரிவுகளில் வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள். அப்படியென்ன சொல்லிவிட்டார்.. விகடனில் கேரள முதல்வருக்கு எழுதிய செய்தியில் இனி இந்து தீவிரவாதிகளை காட்டுங்களென அவர்களால் இனி சொல்லமுடியாதென கூறியிருக்கிறார்.. அதாவது இந்து தீவிரவாதமும் இருக்கிறதென எழுதியது அவர்களுக்கு கோபத்தை வரவழைத்திருக்கிறது அதனால் அவரை தீவிரவாதியென்றும் தீவிரவாத்திற்கு துணைபோகிறவர் என்றும் அவரிடம் #தேசபக்தர்கள்..? கவனமாக இருக்கவேண்டுமென்றும் பாஜகவினர் சொல்கிறார்கள்.. தேசபக்திக்கு ஒட்டுமொத்த குத்தகையெடுத்தவர்கள்.. .. முதலில் கமலில் கருத்துரிமையை எதிர்க்கிறார்கள் அதோடு மிரட்டுகிறார்கள் அதாவது யாரும் இந்து மதவெறியைப் பற்றி எந்த எதிர்கருத்தும் சொல்லகூடாதென்று அதுமட்டுமல்ல மதத்தை சொல்லி இவர்கள் நடத்தும் கேடுகெட்ட அரசியலை குறைகூற கூடாதென்கிற சர்வாதிகார திமிரும் இதில் வெளிபடுகிறது.. எழுத்துரிமை பேச்சுரிமைக்கெதிராக விடப்பட்டிருக்கும் மிரட்டல் .. தபோல்கர் தொடங்கி கௌரி லங்கேஷ்வரை எதிர்கருத்தாளர்களை கொன்று மற்றவர்களை பேச கூடாதென்கிற மறைமுக மிரட்டலை விடுக்கிற இவர்கள் தீவிரவாதிகள் இல்லையா.. .. கமலின் கருத்தோடு நிறைய வேறுபட்டிருக்கலாம் ஆனால் வழக்கென்றும் தீவிரவாதியாக சித்திரிப்பதும் ஒரு வகை கோழைத்தனம்.. இந்துமதத்தை கேவலபடுத்துவதே கமலுக்கு வேலையாக போய்விட்டதாகவும் கேரள முதல்வரை சந்தித்தின் விளைவு அவர் கம்யூனிஸ்டாக காட்டிக்கொள்ள இப்படி பேசுவதாகவும் .. ₹2000 யில் சிப் இருக்கென்ற மேதை எஸ்.வி.சேகர் .. சுப்ரமணிய சுவாமி.. நாடு கடத்தவேண்டுமென்ற ரேஞ்சுக்கு பேசுகிறார்.. .. ஒன்று மட்டும் புரிகிறது மதத்தை முன்னெடுக்காமல் இவர்களால் ஒரு மயிரும் புடுங்கமுடியாது.. இவர்கள் உண்மையில் ஆட்சி அதிகாரமிருக்கிறதென்பதற்காக எதை செய்தாலும் அதை அப்படியே நம்பவேண்டுமென எண்ணுகிறார்கள்.. அறிவிற்கு வேலை தராது மக்களை சிந்திக்க வைக்காமல் மத நம்பிக்கையென்ற பெயரில் பொய் பித்தலாட்டத்தை மக்களிடம் பரப்பும் இவர்கள் உண்மையிலேயே ஒழிக்கப்படவேண்டியவர்கள்.. இந்துமதம் வாழ்வியல் முறையாம் .. எப்படி தலையில் பிறந்தவன் மட்டுமே வாழ வழிச்சொல்லும் முறை மிக சிறந்த வாழ்வியல் முறையா.. ஏற்றதாழ்வில்லாமல் அனைவரும் சமமான உரிமையோடு வாழ சொல்லாத ஒரு வழிமுறையை எதன் பெயரில் கொண்டுவந்தாலும் அதை எதிர்க்க மட்டுமல்ல பின்பற்றாதீர்களென கூற இங்கே எஸ்லோருக்கும் உரிமை உண்டு.. .. கமலில் கொள்கையில் நமக்கு உடன்பாடில்லையென்றாலும் அவரது கருத்தை புறந்தள்ள முடியாது அவரின் கருத்துரிமையும் கூட.. .. #My_right… .. Aalanci Spm

யது கிருஷ்ணன்

யது கிருஷ்ணன்.. இந்த பெயரை கேட்டிருப்பீர்கள் முதல் தலித் அர்ச்சகர் கேரள இடதுமுன்ணணி அரசு கோவில் அர்ச்சகராக ஒரு பட்டியலினத்தை சேர்ந்த நியமித்தது அப்போதே சிலர் பார்பனர்கள் இனி கேரளா சென்றால் கோவில்களுக்கு செல்லகூடாதென்றெல்லாம் ட்விட் செய்தார்கள்.. இப்போது இவர் கையால் பிரசாதம் வாங்குவதை சில குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் குறிப்பாக பெண்கள் தவிர்த்து அருகிலுள்ள கோவில் பிராமண அர்ச்சகர் கையால் வாங்கி செல்வதாக வருத்தபட்டிருக்கிறார்.. அதாவது அவர் பூஜை செய்யும் நெல்லிக்கனி தேவி கோயிலில் இவரிடம் யாரும் பிரசாதம் வாங்குவதில்லையாம் .. தேவி கோயிலில் சாமி கும்பிட்டு விட்டு அருகில் இருக்கும் சாஸ்தா கோவில் பிராமணர் அர்ச்சகர் இடம்போய் பிரசாதம் வாங்கி செல்வதாக மிகவும் மனம் வருந்திகூறுகிறார் யது கிருஷ்ணன்.. .. அதிகம் படித்தவர்கள் கொண்ட மாநிலமென்றாலும் முற்போக்கு சிந்தனையுடையவர்கள் அதிகமிருப்பதாக சொல்லிக்கொண்டாலும்.. இன்னமும் மூடபழக்கவழக்கங்களை அதிகம் நம்புகிற அதில் மூழ்கி கிடக்கிற கூட்டம் சற்று அதிகம் அங்கே உண்டு.. எந்தவொரு நிகழ்விற்கும் பணிக்கரை அழைத்து சோலி உருட்டி நேரம் பார்க்கும் அதி முட்டாள்த்தனம் கொண்டவர்கள் அதிகம்.. அதனால் தான் இதுபோன்ற விசமத்தனமான பிரச்சாரங்களை நம்பி யதுவிடம் பிரசாதம் வாங்க யோசிக்கிறார்கள்.. இது மூடத்தனம் மட்டுமல்ல ஒருவகையான யுத்தமும் கூட .. கடவுளின் கருவரைக்குள் காலம்காலமாய் தாங்கள் மட்டுமே ஆட்சி செய்ததை அதுவும் தொட்டாலே தீட்டென்கிறவனை நுழைய விட்டதை ஏற்றுக்கொள்ள மறுத்து இவர்கள் செய்யும் விசமத்தனம் இது .. திட்டமிட்டே குறிப்பாக பெண்களிடத்தில் இவர் கையால் வாங்கினால் அது தோஷம் என்று செய்தியை கசிய விடுகிறார்கள் .. சட்டென்று நம்பிவிடும் பெண்களின் மனநிலையை பயன்படுத்தி குழப்பம் விளைவிக்கிறார்கள்.. இனியும் இதுபோன்று தலித் நியமனங்கள் நடக்ககூடாது .. நியமிக்கபட்டவர்களையும் பின்மாற செய்யவேண்டுமென்று சதி செய்கிறார்கள்.. .. அரசு உடனே இதுபோன்று பரப்புரையில் ஈடுபடுவோரை இனம் காண வேண்டும் அவர்கள் மீது தீண்டாமை வன்கொடுமை சட்டத்தில் கைது செய்யவேண்டும்.. காலகாலமாக ஏமாற்றி பிழைத்த பிழைப்பில் மண் விழுந்துவிட்டதென்றெண்ணி இவர்கள் நடத்தும் நாடகத்தை உலகறிய செய்யவேண்டும்..இனியும் நிறைய பட்டியலின சகோதர்களை அர்ச்சகர்களாக Priests நியமிக்க வேண்டும்.. .. யதுவிற்கு இதுபோன்று நிறைய சங்கடங்களை தருவார்கள் மறைந்துநின்றே தாக்கி பழக்கமுடையவர்கள் புறவாசல் அரசியல் மட்டுமே செய்ய தெரிந்தவர்கள்.. நேர்நின்ற கதைக்க அஞ்சுகிற கூட்டமது.. ஏற்றதாழ்வுகளை கடவுள் பெயரால் பரப்பி அதில் தாங்கள் மட்டுமே வாழவேண்டுமென நினைக்கிறவர்கள்.. நிறைய அம்புகள் பலதிசையிலிருந்தும் வரும்.. எய்தவன் யாரென்றே தெரியாது.. எதுவாயினும் தொடர்ந்து பணியாற்று.. ஆம்.. துண்டை உதறி தோளில் போட்டுக்கொண்டு போய் கொண்டே இரு.. .. #இனி_நமது.. .. Aalanci Spm

Wednesday, November 1, 2017

தகிடுதித்தோம்

தமிழ்நாட்டில் ஊடகங்களுக்கு கடுமையான நெருக்கடியை மத்திய தொலைத் தொடர்பு துறை கொடுப்பதாக தகவல் வருகிறது ஒரு கவுன்சிலர் சீட் கூட வெற்றி பெற முடியாத பாஜக பிரதிநிதிகளை அழைத்து ஏன் எல்லா பிரச்சினைகளுக்கும் கருத்து கேட்க வேண்டும் .. விவாதித்தில் பங்கேற்க செய்யவேண்டும் திருமுருகன் காந்தி .. .. அவர் சொல்வதில் தவறில்லை .. யாரென்றே தெரியாதவர்கள் திடீரென பொருளாதார நிபுணராக ..அவரே அரசியல் விமர்சகராக, நடுநிலையாளராக சமூக ஆர்வலராக பாஜகவாக வருகிறார் ஒருவருக்கு எத்தனை முகங்கள்.. வலுகட்டாயமாக பாஜகவை சேர்ந்தவர்களை அழைத்துவந்து அவர்கள் கருத்துக்களை மக்களிடம் திணிக்கும் செயலை தொலைக்காட்சி ஊடகங்கள் செய்கிறது.. எந்த சேனலும் விருப்பட்டு செய்வதாக தெரியவில்லை மாறாக கட்டாயபடுத்தி தங்களின் பிரதிநிதிகளை பாஜக திணிப்பதாகவே தெரிகிறது இது யதேச்சயமாக நடப்பதாக தெரியவில்லை எல்லா விவாதங்களிலும் திமுக அதிமுக பங்கேற்கிறதோ இல்லையோ பாஜகவின் ஆட்கள் பங்கேற்கிறார்கள்.. .. அதிகாரம் கையிலிருப்பதால் அழுத்தம் Pressure தந்து தொடர்ந்து பங்கேற்க செய்வதால் பாஜக வளர்கிறதென்ற தோற்றத்தை ஏற்படுத்தலாமென எண்ணுகிறார்கள் ஆனால் பெரிய பலனை தராது இடைவிடாது கூச்சல் போடுவதால் சலிப்பையே தரும் அமைப்பு ரீதியாக காங்கிரஸூக்கு இருக்கிற பலம் கூட பாஜகவிற்கில்லை.. குறிப்பிட்ட சமூகத்தை சார்ந்தவர்கள் நிறைய பேர் பாஜக போன்ற மதத்தை கையிலெடுக்கிற கட்சியை பின் நிற்கிறார்களே தவிர பெருவாரியான பிற சமூக மக்களிடம் பெரியதொரு தாக்கமில்லை அதைவிட தமிழகமக்கள் சாதி மதம் சொல்லி பிரிவினை உண்டாக்குவோரை திரும்பி கூட பார்க்கமாட்டார்கள்.. .. நிறைய குறுக்கு வழிகளை கையாண்டு பார்க்கிறார்கள் உளவுத்துறை ரிப்போர்ட் என்று சில நாட்களாக கசியவிடுகிறார்கள் அதில் எடப்பாடி அரசை பிடிக்கவில்லையென 89 % பேர் இதில் 80 % மீண்டும் அதிமுகவிற்கு வாக்களிக்க போவதில்லையாம் அதில் 46 % பேர் தி மு க வுக்கும் வாக்களிக்க மாட்டார்களாம். இதில் ரஜினிகாந்த் 19 % சதவீதம் ,. விஜய் 9 %,. கமல் 4 % சதவீதமும் பெறுவார்களாம் பா ஜ க மத்திய உளவுத்துறை அறிக்கையை பார்த்து விட்டு திகைத்து போய் விட்டதாக சொல்லி செய்தியை கசிய விட்டிருக்கிறார்கள் .. அதாவது ரஜினிக்கு 19 % பேர் ஆதரவு இருப்பதாக உளவுத்துறையை கொண்டு பிரசாரம் செய்யும் உக்தி எப்படியாவது ரஜினியை கொண்டுவரவேண்டுமென்று பாஜக பல முயற்சிகளை மேற்கொள்கிறது அதில் இதுவும் ஒன்று .. .. நிறைய உளவுத்துறை ரிப்போர்ட்களை பார்த்தவர்கள்.. இதெல்லாம் எதற்காக செய்படுகிறதென்று அறிவோம்.. தினம் ஒரு ஆளை அனுப்பி ஆதரவாக பேசவைத்தாலும் மக்களிடம் எடுபடாது .. காரணம் மிக எளிது இது தமிழகம் பெரியாரிய தாக்கம் இல்லாமல் எதுவும் நடக்காது.. அந்தளவிற்கு எம்மைபண்படுத்தியிருக்கிறார் #பெரியார் .. இங்கே #தகிடுதித்தோம் வேலைக்காகாது.. .. அமைப்பு ரீதியாக பலமில்லாதவர்கள் வெற்றிபெற முடியாதென்கிற எளிய உண்மை தெரியாமல் தினம் தினம் உள்ளேன் அய்யா சொன்னாலும் கரைசேர முடியாது.. சர்வ அதிகாரமும் தங்களுக்கிருப்பதாக எண்ணி ஊடகங்களை மிரட்டலாம் உளவுத்துறையை பயன்படுத்தலாம்.. களம் வேறுமாதிரியான பதிலடியை தரும்.. .. #திராவிடமண் .. Aalanci Spm