Monday, June 5, 2017

காயிதெ மில்லத்

#காயிதெமில்லத்.. கண்ணியத்துக்குரியவர்... இஸ்லாமிய சமூதாயத்தின் தன்னிகரற்ற தலைவர்.. முகமதலி ஜின்னா தலைவராக இருந்த (ஒருங்கிணாந்த இந்தியாவில்) காலகட்டத்திலேயே மிக முக்கிய தலைவராக வலம் வந்தார்.. பிரிவினையின் போது இந்தியாவோடு இருப்பதென்பதில் உறுதியான நிலைப்பாட்டை எடுத்தவர்..1949ல் அகில என்பதை நீக்கிவிட்டு IUML இந்திய யூனியன் முஸ்லீம் லீக்காக உருவாக்கினார் ..பின் அதன் தலைவராக திறம்பட செயல்பட்டார்.. .. 1952 ல் இந்தியாவின் ஆட்சிமொழியாக இந்தியை கொண்டுவந்த போது அதை கடுமையாக எதிர்த்தவர்.. அதற்கான தகுதி இந்திக்கில்லை என வாதிட்டார்.. இவரின் பெரும் முயற்சியில் சரிசமமான வாக்குகளை சபையில் பெற முடிந்தது... 244 வாக்குகள் இந்தி வேண்டுமென்றும் 244 வாக்குகள் வேண்டாமென்றும் விழ சபாநாயகர் தனது வாக்கை ஆட்சியாளருக்கு சாதகமாக்கி .. இன்று வரை இந்தி ஆட்சிமொழியாக தொடர்கிறது.. .. தொகுதிக்கே செல்லாமல் வெற்றிப்பெற்றவர் இவர் ஒருவர்தான் .. வேட்புமனுவைதாக்கல் செய்துவிட்டு தொகுதிக்கே செல்லமாட்டார்.. என்னை அவர்களுக்கு பிடித்திருந்தால் வாக்களிப்பார்களென சொல்வார்.. மூன்றுமுறை தொடர்ந்து மஞ்சரியிலிருந்து இப்போது மலப்புரம். . வெற்றிப்பெற்றார்.. இவருக்கு பிறகு நிறைய தலைவர்களை IUML கண்டிருக்கிறது.. ஆனால் இவரைப்போல.... விடைதானில்லை.. .. காயிதெ மில்லத் மறைந்தவுடன் பெரியார் விரைந்து சென்று பார்த்து அழுகிறார்.. அதற்குள் போய்விட்டாயா தம்பி நான் போய் நீ இருக்க கூடாதா என்கிறார்.. இந்த சமுதாயத்திற்கு இனி யாரிருக்கிறார் என்கிறார்.. பெரியாரின் வார்த்தை சரியாக தானியிருந்தது.. யாரிருக்கிறார்..எத்தனை பிரிவுகள்.. பிரிவுகளுக்குள் கோஷ்டிகள் .. கோஷ்டிகளுக்குள் இழுபறிகள்.. யார் பெரியவன்.. சமுதாயத்தை கூறுப்போட்டிருக்கிறார்கள்.. இன்றுவரை சமுதாயத்தை ஒருங்கிணைத்து வழிநடத்தும் தலைவர் இல்லையென்பதே சுடுகிற உண்மை .. தலைமைக்குரிய பண்புகள்.. நட்பையும் எதிர்ப்பையும் சரியாக காட்டுதல் மொழி ஆளுமை.. நிர்வாக திறன் .. சிறந்த நாடாளுமன்றவாதி.. சமுதாயகாவலர்.. சொல்லிக்கொண்டே போகலாம்.. ஒரே வரியில் சொல்வேண்டுமெனில் இந்தியா கண்ட சிறந்த ..நல்ல தலைவர்களில் ஒருவர்..ஆம் #கண்ணியத்துக்குரியவர்.. .. தோழர். ஆலஞ்சி

Sunday, June 4, 2017

வைரவிழா சொல்லும் சேதி

#வைரவிழா.. நிறைய கருத்துகளை விதைத்திருக்கிறது.. பாஜக மட்டுமல்ல அதிமுகவும் பதறியதை வெளிச்சமிட்டு காட்டுகிறது.. வயதானோர்கான விழா என பொன்னர் சப்பைகட்டுகிறார்.. காங்கிரஸின் குடியரசுதலைவர் வேட்பாளரை ஆதரிக்கவேண்டுமென நாஞ்சில் சம்பத் பேசுகிறார்.. வழக்கமான நாஞ்சில் பேச்சாக இது இல்லை.. அதிமுகவின் குறிப்பிட்ட ஒருபிரிவின் குரலாக தெரிகிறது.. .. சிலர் விமர்சனங்களில் ஆசிரியருக்கு திருமாவிற்கு இடமில்லை ப.சிதம்பரம் போன்றோர் முன்னிலை படுத்தபடவில்லை என சொல்கிறார்கள்.. எல்லோரும் ஒரே பதில்தான் .. விழாவின் நோக்கம் சிதைந்துவிடாமல் ஆளும் அரசுகளுக்கு எதிரான பங்களிப்பை ஒருங்கிணைக்க செய்த முதல் முயற்சி அதில் வெற்றி கண்டிருக்கிறது.. எவ்வளவோ இடைஞ்சல் எதிர்மறை கருத்துகள் விழாவின் சிறப்பை களங்கமடைய செய்ய செய்த சூழ்ச்சிகள் அத்தனையையும் முறியடித்து சிறப்பித்திருக்கிறார் தளபதி.. இதில் மற்றொரு சேதியும் அடங்கியிருக்கிறது .. திராவிட இயக்கத்தின் நான்காம் தலைமுறையின் தலைமை பொறுப்பை ஏற்றிருக்கும் திமுகவின் அடுத்த தலைவராக முன்னிருத்தப்பட்ட திரு.ஸ்டாலினை தேசிய அளவிலான அங்கீகாரத்தை பெறுதல் .. .. தமிழகத்தின் பல்வேறு உதிரிக்கட்சிகளின் தலைவர்களை அழைக்கவில்லை என்பதை வேறொரு கோணத்தில் காண வேண்டியிருக்கிறது.. தேவையில்லாத சுமையை ஆரம்பத்திலிருந்தே சுமக்க வேண்டியதில்லை.. தேவைபடுமெனில் அது அப்போதைய நிலைமையை கண்டு முடிவெடுக்கலாமென்ற யுக்தியாக கருதவேண்டும்.. ஆம்.. தளபதி அவர்களை நாடு நம்ப தொடங்கியிருக்கிறது.. தமிழக வரலாற்றில் மிக சிறந்த தலைவர்கள் வரிசையை தளபதி அடைந்திருக்கிறார்.. மக்கள் விரும்புகிற தலைவராக மாற்றே இல்லாத இடத்தை நோக்கி வந்துக்கொண்டிருக்கிறார்.. இந்த நேரத்தில் எங்களால்தான் என #சிறுசுகள் கூச்சலிட வாய்ப்பை வழங்காமல் காயை நகர்த்துகிறார்.. மேடையில் கூட மிக சாதூர்யமாக சிலரை அமர்த்தவில்லை.. மேடையை அழகாக்கியிருக்கிறார் என்று கூட சொல்லலாம்.. .. நாகரீகமான அரசியலை எதிரிகளும் வியக்கும் அரசியலை நல்லதொரு தொடக்கத்தை.. நாடு விரும்பும்..மக்கள் விரும்புகிற புதியதொரு மாற்றத்தை திரு.ஸ்டாலின் முன்னெடுத்திருக்கிறார் #மகிழ்ச்சி_பெரும்மகிழ்ச்சி.. .. #தளபதியின்_புதியபாதை … .. தோழர். ஆலஞ்சி ..

Saturday, June 3, 2017

மகிழ்ச்சி

#மகிழ்ச்சி.. நடந்துமுடிந்த #வைரவிழா ஒன்றை பறைச்சாட்டியிருக்கிறது.. இந்த நாட்டை ஆளும் பாஜகவிற்கு எச்சரிக்கையை தந்ததோடு.. சிதறிக்கிடப்பதால் பலனற்று போய் பாசிசம் தலைதூக்கி நிற்கிறது அதன் கொடூரபற்களை மக்களை காவு கேட்கிறது.. அதை பிடிங்கியெறிய வேண்டுமென்பதை உணர்ந்திருக்கிறது/ உணர்த்தியும் இருக்கிறது.. .. #கலைஞர்.. தவிர்க்கமுடியாத தலைமை இந்திய அரசியல் எப்போதெல்லாம் திசைமாறி போகிறதோ அப்போதெல்லாம் சரியான திசையில் திருப்பி சரியாக செலுத்தும் #விசையாய் இருக்கிறார் ..இப்போது கூட மௌனத்தை காதல்கொண்ட வேளையிலும் அவரின் அசைவுகள் கூட அதைதான் செய்திருக்கிறது.. தேசம் மிக மோசமான காலத்தை இதுவரை சந்தித்திராத மதவெறியாட்டத்தின் உச்சத்தை .. கோமாளித்தனமான ஆட்சியை , கொடூரமாக விசவிதைகளை விதைத்திடும் அயோக்கியர்களின் கையில் நாடு இருக்கும்வேளையில் .. கலைஞரின் வைரவிழா புதியதொரு தொடக்கத்தை நாட்டின் நலன் கருதும் நோக்கத்தோடு செய்திருக்கிறது.. .. #தளபதிஸ்டாலின்.. நாடே வியந்து போற்றுகிறது.. நாட்டின் பல்வேறு மாநில தலைவர்களும் புகழ்கிறார்கள்.. சரியான நேரத்தில் கலைஞரைப்போல சரியாக முடிவெடுத்து ஒருங்கிணைத்திருக்கிறார்.. இந்த தேசம் சந்திக்கிற/சந்தித்து கொண்டிருக்கிற அவலங்களை களைய மிக சரியான நபரை இனம் காண வேண்டிய தருணத்தை உணர்த்திருக்கிறார் அதை தேசத்தின் தலைவர்கள் உணர்ந்திருக்கிறார்கள் என்பதை இந்த விழா சொல்கிறது.. தமிழகத்தின் தவிர்க்க முடியாத, தவறவிடகூடாத சக்தியாக ஸ்டாலின் எழுந்து நிற்கிறார்.. நிச்சயம் ராகுல் சொன்னதைப்போல கலைஞரைப்போல இவரும் பேசப்படுவார் /புகழப்படுவார்.. இன்று சிலர் எரிச்சலடையலாம் அதுவே தளபதியின் வளர்ச்சிக்கு உரமாகும்.. .. எல்லோரும் விரும்பும் தலைவராக தமிழகத்தின் எதிர்பார்ப்பாக.. இந்திய தேசத்தின் ஒப்பற்ற தலைவர்கள் வரிசையில் கலைஞரைப்போல தளபதியும் முத்திரை பதிப்பார்.. தளபதி கனிந்திருக்கிறார்.. .. #தளபதி_தலைவராகிறார்.. .. தோழர். ஆலஞ்சி

Friday, June 2, 2017

தமிழர்களின் காவல் தெய்வம்

தமிழர்களின் #காவல்தெய்வம் குடியிருக்கும் கோவில்.. ஆனந்த கூத்தில் தமிழகம்.. #ஆண்டவா என்கிறது.. மனதை ஆளவா என்கிறது.. .. எல்லோருக்கும் பிறந்தநாள் வரும் இங்கே இவருக்கு... பிறந்த நாள். தமிழர்கள் தலைநிமிர்ந்த நாள். தமிழ் மகுடம் சுமந்த நாள்.. .. கடைசி நிமிடம் வரை வெறுத்து நின்றவன்.. காணொளி கண்டு சிறுத்துப்போனான் முகம் கறுத்துப்போனான்.... .. தமிழ் என்றால் நாங்கள் அறிந்தது கலைஞர்தானே.. தமிழென்றால் அழகென்பார். எங்கள் அழகின் அழகே முத்துவேலர் பெற்ற மு.க.தானே.. தமிழ் நாடே சிலிர்த்தெழும் கலைஞர் சொல் கேட்டால்.. #உடன்பிறப்பே.. சொல்லும் ஓராயிரம் மந்திரங்கள்.. .. கலைஞர் தமிழன்னை தலையில்.. #வைரகீரிடம்.. .. வாழிய! வாழிய!! வாழிய!!! பல்லாண்டு.. .. தோழர். ஆலஞ்சி

கலைஞர்..முகம் கண்டு

விழா மலரை கலைஞர் பார்வையிடும் காணொளி காட்சி.. தமிழ் நல்லுலகம் பூரித்துநிற்கிறது.. வயது மூப்பும் உடல்நலிவும் புரிகிறது ஆனால் எங்கள் கண்களில் ஆனந்த கண்ணீர்.. .. என்பதாண்டுகாலம் தமிழக நலன் மட்டுமே எண்ணத்தில் கொண்டு சொல்லால் செயலால் ஓய்வறியாது உழைத்த எம் தலைவரின் 94 ம் பிறந்தநாள் விழா.. அறுபதாண்டுகள் தொடர்ச்சியாய் சட்டமன்ற உறுப்பினராய்.. யாராலும் தொடமுடியாத சாதனை நாயகராய் .. வைரவிழா காணும் கலைஞரை.. எல்லோரும் வாழ்த்துகிறார்கள்.. சதா எதிர்த்து கொண்டிருந்தவரெல்லாம் இப்போது நல் வாழ்த்தை சொல்கிறார்கள் #மகிழ்ச்சி.. .. தேசத்தின் பல்வேறு தலைவர்கள்.. தங்களின் வாழ்த்தை மகிழ்ச்சியை பகிர்ந்துகொள்கிறார்கள்.. இந்திய துணைக்கண்டமே இவரது சாதனையை எண்ணி வியக்கிறது.. எள்ளல் பேசியவன் வாய்மூடி கிடக்கிறான்.. காரணம் மிக எளிது.. விமர்சனங்களை இரும்புகரம் கொண்ட அடக்கவில்லை.. அவரவர் உரிமையதென அதன் போக்கில் விட்ட மாபெரும் தலைவர் இவர்.. அதனால்தான் சோர்ந்து விழுகிறார் எம் எதிரிகள்.. .. வீழ்த்தி விடலாம் வேரோடு என்றலைந்தவர்கள்..பாவம் வீழ்த்த நினைத்து வீழ்ந்து கிடக்கிறார்கள் எத்தனை விமர்சனம் கலைஞரின் உடல் நலம் குறித்து மூப்பென்றும் பாராது வாய்க்கு வந்ததை பேசி திரிந்த/திரியும் சிறுப்பிள்ளைகளே.. கலைஞர் யாருமே எழுத முடியாத வரலாறு.. இந்திய துணைக்கண்டம் கண்ட ஒப்பற்ற அரசியல் தலைவர்.. தமிழ் உலகம் இதுவரை கண்டிராத மாபெரும் தலைவர்.. இந்த நூற்றாண்டு கண்ட மாபெரும் எழுச்சி நாயகர்.. தமிழ் பெற்ற பேறு.. தமிழ்நாடு செய்த #அருந்தவம்.. .. தமிழகமே வணங்கி நிற்கிறது இந்த #தமிழ்கிழவனின் முகம் கண்டு.. .. தோழர். ஆலஞ்சி

Thursday, June 1, 2017

அரசியல் கழிசடை மணியன்

தமிழருவி மணியன்.. அரசியல் கழிசடை.. வார்த்தை கொஞ்சம் தடிமனாகி போனதற்காக வருத்தமில்லை.. காரணம் எங்குமே நிலையில்லாத.. கற்ற தமிழை பேசும் திறமையை கொண்டு வயிறு வளர்க்கும் கீழ்த்தரமான பிறவி.. முதலில் எங்கிருந்தார்.. இந்திய தேசிய காங்கிரஸ் தொடங்கி சிண்டிகேட் காங்கிரஸ் அதாவது நிறுவன காங்கிரஸ் மா.பொ.சி.யின் தமிழரசு கழகம் பிறகு ஜனதா கட்சி .. லோக்சக்தி ..மீண்டும் இந்திய தேசிய காங்கிரஸ் பிறகு..காந்திய மக்கள் இயக்கம் காந்திய மக்கள் கட்சி கடைசியாய் மக்கள் நலக்கூட்டணி தேர்தலில் மக்கள் தந்த மரண அடியை தொடர்ந்து வீர வசனம் பேசி அரசியலில் இருந்து விலகினார்.. இப்போது மீண்டும் சோற்றுக்கு வழியில்லாமல் போய் ரஜினியை பின் துணைப்பதாக சொல்லி ஏதேதோ உளறிக்கொண்டியிருக்கிறார் அதில் பிரதானமாய் திராவிட கட்சிகளை ஒழிப்பேன் அது என்னால் மட்டுமே முடியும் .. நிலையற்ற கொள்கையும், குணமும் கொண்டவரால் என்ன செய்துவிடமுடியும்.. .. காங்கிரஸில் இருந்து வெளியேறி.. பல மரகிளைகளில் தாவி கடைசியில் கலைஞரிடம் தான் வந்தார் கலைஞரின் தனக்கே உரித்தான இளகிய உள்ளம் திட்டகமிஷனில் இடம் அளித்தார்.. கடைசியில் கலைஞரை வசவு பாடிதான் இப்போது பிழைத்துக்கொண்டிருக்கிறார்.. வீட்டுவசதி வாரியம் இவருக்கு திட்டகமிஷனில் இருந்த போது வீடு ஒதுக்கியது .. காலகெடு முடிந்தவுடன் வீட்டை காலி செய்ய முறையான அறிவிப்பு தந்தும் அதை அலட்சியபடுத்தியதால் ..கடைசி கட்டத்தில் வீட்டைவிட்டு இறக்கிவிட வேண்டிய சூழல்..அதனால் கலைஞரின் மீது தீராத பகை கொண்டு திரிகிறார்.. முறைகேடாக மூன்றாண்டுகளுக்கு மேல் இருந்தும் ஆசைவிடவில்லை.. இது தான் இவரது லட்சணம் .. .. திராவிடத்தை ஒழிப்பேன் என கூவிக்கொண்டி திரிகிற மணியனே .. முதலில் நிற்க காலில் இருக்கிறதா பார்.. கட்டை காலில் அடுத்தவன் தயவில் அரசியல் செய்கிற ..இந்த லட்சணத்தில் திராவிட கட்சிகளை என்னால் தான் ஒழிக்கமுடியுமென சொல்கிறாய் கேட்கதான் ஆளில்லை ஆயிரம் வாக்குகள் கூட பெற முடியாதவரின் வெற்று கூச்சலென்பதை அறிவோம்..வீரவசனம் பேசி அரசியலை விட்டே போனவர் தானே .. திராவிடத்தை ஒழிப்பேன் என்றவனெல்லாம் இருக்குமிடம் தெரியாமல் போனான்.. இருக்குமிடமே இல்லாத நீரெல்லாம்.. அரசியல்வாதியே அல்ல.. .. #வாய்சவடால் .. தோழர். ஆலஞ்சி

கலைஞர்..

காதலி வரவிற்காக காத்து நிற்கும் காதலன் போல்.. தமிழ் கூறும் நல்லுலகு காத்திருக்கிறது.. தேனெடுத்து தினைமாவு கலந்து நீ தர வேண்டாம்.. வார்த்தை சித்தில் நம்மை வளைத்தெடுக்கவேண்டாம்.. உன் கரகரக்குலில் ஒரு வார்த்தை.. #என்உயிரினும்மேலான_உடன்பிறப்பே.. அது போதும்... காத்திருக்கிறது மொத்த தமிழகமும்.. வாஞ்சையோடு...காதல்கொண்டு.. .. மு.க.எனும் திராவிடத்தலைவனை காண ஆவலாய்..பெருங்கூட்டம் .. என்பதாண்டுகள் நிறைய ஏற்றதாழ்வுகள் ஆனாலும் கம்பீரமாய் வலம் வந்த சூரியன்.. இந்திய அரசியல் இதுவரை கண்டிராத அரசியல் சாணக்கியம்.. எதிர்த்தவனெல்லாம்..இடறிபோனான் அல்லது இடம்மாறி போனான்.. எதிரிகளின் படையை எப்போதும் கலங்கடிக்கும் ஆற்றல்மிகு அறிவுசார் சிந்தனை .. கடைசியில் எதிர்த்தவன் கூட புகழ்ந்தே போனான் எதிர்ப்பின் வலிமை கண்டு .. தோல்விகள் எப்போதும் கொண்ட கொள்கையில் மாற்றதை தரவில்லை மாறாக உரமேறிய தெம்பாய் எழுந்துநின்று ஆடியது.. .. எழுத்தும் சொல்லும் தமிழனின் வாழ்வில் வளமேற்றியது.. பதவியை தந்தபோது பணிக்கான வாய்ப்பாய் தமிழன் நலம் கண்டு சமூகநீதி காத்தது.. எத்தனை எத்தனை இடர்கள் .. அத்தனையையும் புன்முறுவலோடு ஏற்ற விந்தை இதுவரை யாரும் காணாதது.. அப்பப்பா எவ்வளவு துரோகிகள்.. கடைசி நிமிடம்வரை சிரித்து நின்று முகுகில் வாள் பாய்ச்சியவர்களை கூட சிறிய புன்னகையோடு மறந்து ஏற்றதை காணும் போது.. உள்ளத்தில் உயர்ந்த உள்ளம்..உறங்காதென்பதை உணர்ந்த கொண்டோம்.. பேரெடுத்து சொன்னால் பட்டியலே ஒரு புத்தகமாகும் அவ்வளவு துரோகிகள் ‍எதிரிகளைவிட துரோகிகளின் எண்ணிக்கை எண்ணிலடங்கா.. காட்டி கொடுத்தவன் கொல்ல துணிந்தவன் .. இலைமறைவில் எதிரிக்கு ஒற்றனாய் திரிந்தவன் உதட்டில் சிரிப்பாய் உள்ளத்தில் விசமாய் ... அப்பப்பா நெஞ்சே நடுங்குகிறது.. ஆனால் அத்தனையும் மறந்து மன்னித்து பணிசெய்து கிடைப்போமென .. வாழும் வரலாறாய்.. எழந்து நிற்கிறாய் ..யாரும் தொடமுடியாத உச்சத்தில்.. .. எதிரிகள் கூட எழுந்து நின்று கை கூப்புகிறான் உன் உயரத்தின் மகிமை கண்டு.. வா.தலைவா.. வந்து ஒரிரு வார்த்தை சொல்..அது இன்னும் சில நூற்றாண்டுகள்.. தமிழனை வாழவைக்கும்.. #உயிரினும்மேலான_உடன்பிறப்பே.. .. #இந்தியாவே_காத்திருக்கிறது_உன்_வரவிற்காக.. .. தோழர். ஆலஞ்சி