Saturday, January 7, 2017

நாடக ராஜாக்கள்.

சசிகலா.. நடை உடை பாவனைகளை மாற்றி வருகிறார்.. நிறைய விமர்சனங்கள்.. வருகிறது வேலைக்காரிக்கு வந்த வாழ்வை பார்யா.. என்றெல்லாம் சில பெண்கள் சாலையோர பேருந்திற்காக நின்றிருந்திருந்த போது பேசுவதை கேட்க முடிகிறது.. திருமதி சசிகலா வேலைக்காரியாக இருந்ததால் வரகூடாது என்ற கேள்வியை ஏற்க முடியாது. ஆனால் திறமையும் தகுதியும் உள்ளவரா என பார்க்கவேண்டுமே தவிர அவர் எந்த தொழிலை செய்தால் என்ன.. ஏன் கலைஞரே தன் சாரதியை புதுச்சேரி முதல்வராக்கி அழகுபார்த்தவர்தான்.. .. ஆனால் நயவஞ்சகத்தால் உயரவர துடிக்கிறார்..என்பதுதான் இங்கே பிழையாய் நிற்கிறது.. பணத்தை மட்டுமே முதலீடு செய்து தமிழகத்தில் அதிகாரத்தை பெற்றுவிட முடியுமென்பதற்கு சமீபகால நிகழ்வுகள் போதும்.. இதில் ஜெயலலிதா சசிகலா கும்பலே மிகப்பெரிய சாட்சியம் வகிக்கிறார்கள்.. இதற்கு முன்பு வாக்கிற்கு பணம் கொடுக்கபடவே இல்லையா என்ற கேள்வி எழும்.. மறுப்பதற்கில்லை 60 களில் காங்கிரஸ் பேரியக்கத்தின் ஜமீன்கள் நிலகிழார்கள் .. ஏழைகளை குறிவைத்து பணவிநியோகம் செய்திருக்கிறார்கள் திராவிட இயக்கம் ஆட்சி பொறுப்பிற்கு வந்தபிறகு அது அதிகளவில் வழங்கப்பட்டது.. ஆனால் சில முக்கியமான காலகட்டங்களில் பணத்திற்கு வழங்கி நிற்காமல் ஆட்சியாளர்களை, அரசியல் கட்சிகளை தூக்கியெறிந்திருக்கிறார்கள்.. ஆனால் இப்போது தொகை அதிகமாகிற போது மனம் சஞ்சலபட்டு வழங்கி நிற்கிற கொடுமையை காண முடிகிறது.. இந்த ஈனசெயல் சசிகலா வகையறா போன்ற மாபியா கும்பல்களுக்கு எதையும் செய்துவிட முடியுமென்கிற துணிச்சலை தருகிறது.. வைகோ போன்ற நாணயமற்ற அரசியல்வாதிகளை... பணத்திற்காக எதையும் செய்யவைக்கிறது.. .. சில்லரை கட்சிகளை வழக்கம் போல் பணத்தை எதிர்பார்த்து நிற்கிறவரை சசிகலா போன்ற பினாமி குயின்கள் தூக்கி பிடிக்கபடுவார்கள்.. ஊடகங்கள் பணத்திற்காக தம்பிடித்து தூக்கிவைத்து ஆடுகிற அவலம் தொடரத்தான் செய்யும்.. மக்களின் மௌனம் இவர்ரளை பேயாட்டம் ஆடசெய்யும்.. இவர்கள் மீதான கோவத்தை மக்கள் வெளிப்படுத்துகிறவரை.. ஆடத்தான் செய்வார்கள்.. நிறைய அரிதாரம் பூசி வகைவகையாய் போஸ் கொடுப்பார்கள்.. தகுதியில்லாதவர்கள் புகழ்மாலை பாடினால் பதவி தருவார்கள் இவையாவும்,ஆட்சியும் அதிகாரமும் கையிலிருக்கும் வரை.. நாடகங்கள் அரங்கேறும்.. .. நாடகம் முடியும் போது..தெரியும்.. நாடகத்தின் ராஜபார்ட் என்று.. .. #நாடக_ராஜாக்கள்… .. ஆலஞ்சி மன்சூர்

இரு நிகழ்வுகள்

இரு நிகழ்வுகள்.. ஸ்டாலின் பரிதி இளம்சுருதி சந்திப்பும் சம்பத் சசிகலா சந்திப்பும். முதலில் இனோவாவை பற்றி பேசுவோம்.. நாஞ்சில் சம்பத் இவரது இலக்கிய கூட்டங்களை கேட்டிருக்கிறேன் தமிழோடு இவரின் வார்த்தைஜாலம் கட்டிப்போடும்.. இவரின் அரசியல் கூட்டங்களில் ஏறக்குறைய காளிமுத்துவைதான் ஞாபகம் படுத்துவார்.. திமுகவிலிருந்து பிரிந்து வைகோவோடு போனதும் இவரது நாணயம் போய்விட்டது.. நா நயம் மட்டுமே இவரை ஜெயலலிதாவோடு சேர்த்தது.. அதோடு இவரது நாவன்மை கேலிப்பொருளாக கிண்டல் செய்யுமளவிற்கு வந்தது .. கடைசியில் மரியாதை இழந்து விலைமகளைப்போல்.. கேவலப்பட்டு நிற்கிறார்.. அவரின் சமீபத்திய உளறல்கள் அவரின் நம்பகதன்மை காட்டும்.. சசிகலா ஏற்க மறுப்பதாக சொல்லி சில மணிநேர இடைவெளியில் சின்னம்மாவின் புகழ்பாடும் இவரின் செயல் அரசியல் அயோக்கியதனம்.. .. இளம் சுருதி.. இவரைப்பற்றி சொல்லவேண்டுமெனில் கழக முன்னோடி இளம்வழுதியின் பேரன் இன்னும் புரிகிறமாதிரி சொல்லவேண்டுமெனில் பரிதி இளம்வழுதியின் மகன்.. சிறிய பிணக்கம் கொண்டு சட்டென்று ஒருநாள் பரிதி திமுகவிலிருந்து பிரிந்துசென்று ஜெயலலிதாவிற்கு பூங்கொத்து கொடுத்த போது கொஞ்சம் ஆடிப்போனேன்..காரணம் திமுகவின் துணை பொதுசெயலாளர் வரை உயர்ந்து வந்தவர் எழுப்பூரின் செல்லப்பிள்ளை.. இக்கட்டான சூழலில் கூட கலைஞரோடும் இருந்தவர்... ஏதோவோரு சுந்தரபிணக்கு பெரிய இடைவெளியை தந்து அதில் சிலர் குளிர்காய இயக்கத்தை விட்டு சென்றார் அந்த நிலையில் கூட தளபதியோடு கரம் கோர்த்து நின்றவர் இளம்சுருதி.. .. .. கொண்ட கொள்கையில் தன் தாத்தனைப்போல உறுதியோடு இருந்தவர்.. இளைஞர் அணியில் பகுதி செயலராக பணியாற்றுகிறார்.. இவரைப்போன்றவர்கள் இனம்காணப்பட வேண்டும்.. நிச்சயமாக தளபதி இவரைப்போன்றவர்களை நம்பலாம்.. சம்பத் போன்ற அரசியல் பிழைகளை கட்சியில் சேர்க்காமல் தளபதி காட்டிய மிடுக்கு மிகவும் கவர்ந்தது.. அதேபோல் இளம்சுருதியோடு காட்டும் இணக்கமும் சிறந்த தலைமையை பறைச்சாட்டுகிறது.. .. #கொள்கைஉறுதியும்_அரசியல்பிழையும்.. .. ஆலஞ்சி மன்சூர்

Thursday, January 5, 2017

கலைந்து செல்லும் மேகம்..

சசிகலா நடராஜன் அரசியல் சாபகேடு என்றார் நண்பர் ஆமாம் என்றேன்.. உடனே பெண்கள் அரசியலுக்கு வருவதற்கு எதிர்ப்பாக மாறிவிடாதா அல்லது சாமானியர் பொதுவாழ்விற்கு வருவதை மறுப்பது போலாகாதா என்றார்.. .. அப்படியில்லை.. யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் பொதுவாழ்வில் அர்ப்பணிப்போடு மக்கள்பணியாற்றலாம் ஆனால் அது நேர்மையான பிரவேசமாக இருத்தல் வேண்டும்.. நோக்கமும் செயலும் நேர்மையானதாக.. படிப்படியான மக்கள் சேவையின் மூலம் அமைந்ததாக இருந்தல் வேண்டும்.. செல்வி ஜெயலலிதாவின் அரசியல் பிரவேசம் கூட ஏறக்குறைய அப்படிதான் அமைந்திருந்தது.. அரசியலுக்கு எம்ஜிஆர் அழைத்துவந்த போது சிறுசேமிப்பு துறையில்தான் சிறியதொரு பதவி தந்தார்.. ஏன் எம்ஜிஆரின் அரசியல் பிரவேசத்தில் முதன்முதவில் சிறுசேமிப்புத்துறைத்தலைவராக தான் நியமித்தார் கலைஞர்.. ஜெயலலிதா படிப்படியாக கொ.ப.செ. என தொடங்கி எம்பியாகி.. எம்ஜிஆர் மறைவிற்கு பிறகு போராடி அதன் நின்று கட்சியின் பொதுசெயலரானார்.. ஆனால் சசிகலா அப்படியில்லை.. ஏதோ கம்பெனி முதலாளி இறந்துபோனால் அதிக பங்குகளை வைத்திருக்கும் பங்குதாரர் கம்பெனி எம்.டி ஆவதுபோல சசிகலா பணத்தை வைத்து கட்சியை கட்சியின் முக்கியஸ்தர்கள் என்று சொல்லபடுகிறவர்களை (இங்கே யாரும் முக்கியஸ்தர்கள் இல்லை எல்லோருமோ பூஜ்யங்கள் என்பது வேறுவிடயம்) வாங்கி கட்சியை முதல்வர் பதவியை கைப்பற்ற எண்ணுவதை யாருமே விரும்பவில்லை குறிப்பாக அதிமுகவின் அடிப்படை உறுப்பினர்கள் கூட.. அதுதான் உண்மை.. .. இப்போதெல்லாம் உடனடியான தீர்வு அல்லது பலன் வேண்டுமென்று எண்ணுகிற அவசரம் சசி போன்றவர்களை உருவாக்குகிறது என்று நினைக்கிறேன்.. ஆனால் சசிகலா நீண்டகாலமாக திட்டமிட்டே இதை அடைந்திருக்கிறார்.. ஆனால் ஜெயலலிதா சிறிய பதவியை கூட தராமல் அவரை வைக்கவேண்டிய இடத்தில் வைத்திருந்தார் .. ஆட்சி அதிகாரம் பணமிருந்தால் யார் வேண்டுமானாலும் வரலாமென்பதை காட்டுகிறதே தவிர பொதுவாழ்வில் அர்ப்பணிப்பு கொஞ்சமும் இல்லை.. .. இவர் போன்றவர்கள் காலபோக்கில் கரைந்து போயிருக்கிறார்கள் இவர்.. மழை தரும் மேகமல்ல.. கலைந்து செல்லும்.. மேகம்.. .. #கானல்நீர்.. .. ஆலஞ்சி மன்சூர்...

Wednesday, January 4, 2017

காலம் இட்ட கட்டளை..

The Leader.. தலைமை பதவி எளிதில் கிடைப்பதில்லை அப்படி கிடைக்குமெனில் அது அறிவார்ந்த கூட்டத்தின் தலைமை அல்ல.. வேறுயாருமில்லாயா என சிலரின் கேள்விகளில் நியாயம் இருப்பது போல் தோன்றும்.. ஆம்.. தலைவர் பதவிக்கு தகுதியான ஆட்கள் நிறைய பேரை கலைஞர் உருவாக்கியிருக்கிறார் என்ற உண்மையும் இதில் வெளிப்படும். இங்கே அடிமைகள் இல்லை திறமையானவர்கள் கூட்டமிது அதனால் இந்த கேள்வி எழுகிறது.. அதோடு இங்கே டவாலிகள் கலெக்டராக முடியாது.. .. ஒரு இயக்கத்தில் அல்லது போராட்ட களத்தில் நிறைய செயல்வீரர்கள் இருப்பார்கள் எல்லோருமே திறம்பட செயல்பட்டு எதிரியை நிலைக்குலைய செய்யும் ஆற்றல்படைத்தவர்கள்..வியூகம் அமைத்து திறம்பட செயல்படுவோர் எண்ணிக்கையில் அடங்காதோர் இயக்கத்தில் உண்டு.. தலைமை பதவிக்கு வர இங்கே எல்லோருக்கும் தகுதியும் திறமையும் உண்டு.. அன்பின் மிகுதியில் ஆளுமை திறனை கருத்தில் கொண்டும் ஒற்றுமையாய் ஒருங்கிணைந்து செயல்பட தலைமைக்கு தேர்வு செய்யப்படவேண்டும் கால சூழலும் கருத்தில் கொண்டு எதை எப்போது எவரை கொண்டு செய்து முடிக்க முடியும் ஆய்ந்து அவரை தேர்வு செய்தல் வேண்டும்.. அய்யன் வள்ளுவன் சொன்னதைப்போல #இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன்கண்விடல்.. .. திமுக பொதுக்குழு தலையாட்டிக்கள் சபையல்ல.. மேசைதட்டி ஆராவராம் செய்யும் அடிமைகள் கூட்டமல்ல அறிவுடையோர் சபை.. இங்கே எல்லோரும் கேள்வி எழுப்பலாம் ,எதிர்கருத்தை தைரியமாக சொல்லலாம்.. செல்லப்பட்ட வரலாறுகள் உண்டு அதை சரியென்றால் ஏற்று திருத்தம் செய்யபட்ட சரித்திர நிகழ்வுகளும் உண்டு.. அதைத்து அதிகாரத்தையும் தலைவருக்கு வழங்கும் அதிகாரஅமைப்பு அது.. அதனால் தான் நீண்டநாட்களானது.. நிறைய பேரின் ஆவலை பூர்த்தி செய்ய திரு.ஸ்டாலினை செயல்தலைவராக தேர்வு செய்திட...ஆம்.. #செய்வானை நாடி வினைநாடிக் காலத்தோடு எய்த உணர்ந்து செயல். என்றான் வள்ளுவன்.. அதாவது.. செயலாற்ற வல்லவனைத் தேர்ந்து, செய்யப்பட வேண்டிய செயலையும் ஆராய்ந்த, காலமுணர்ந்து அதனைச் செயல்படுத்தவேண்டும்.... அதைதான் பொதுக்குழு இப்போது செய்துமுடித்திருக்கிறது. .. தலைவர்கள் தானாக திடீரென்று உருவாவதில்லை.. காலம் தீர்மானிக்கும் இவனே சிறந்த தலைவன் என்று.. அப்படி காலம் காத்திருந்து தந்த தலைவனை மக்கள் இருகரம் தட்டி வரவேற்பர் .. எதிரிகளும் இவரே தலைமைக்கு தகுதியானவர் என்பர்..ஆம்.. எதிராளிகளும் எதிர்கருத்தை கொண்டோரும்.. கருத்து வேறுபாட்டால் நிற்போரும் தளபதி தலைவரானதை மகிழ்வோடு ஏற்கிறார்கள்.. பெரும்மகிழ்ச்சி எமக்கு.. .. திரு.ஸ்டாலின் காலத்தின் கட்டளை.. .. ஆலஞ்சி மன்சூர்

செயல்தலைவர்

இவ்வளவு நேரம் நான் அமைதியாய் இருந்ததில்லை உணர்வு என்னை மௌனமாக்கியது.. தம்பி..வா.. தலைமையேற்க வா என்ற போது கண்ணீர் சுரந்தது.. தலைவருக்கான அனைத்து அதிகாரமும் பெற்ற #செயல்தலைவர்.. தலைவரை காண முடியவில்லை என்கிற மன அழுத்தம் என் உயிரினும் மேலான ‍... கரகரக்குரலோடு காந்தம் போல் கவர்ந்திழுக்கும் ஈர்ப்பை காண/கேட்க முடியாது போனது என்னுள் ஏதேதோ செய்தது.. .. வாழ்த்துக்கள் தளபதியே.. இனி செயல் தலைவரென்றே அழைப்போம்.. ஆனாலும் தலைவரின் தளபதியாய் வலம் வருவீர்.. திடீரென ஒருநாளில் செயலாளராக ஆகவில்லை நீர்.. நிறைய படிகளை கடந்து இந்த உயரத்தை எட்டியிருக்கிறீர்.. இக்கட்டான சூழலில் நிறைய சுமைகளை தலையில் சுமக்கவேண்டியிருக்கிறது.. இனி எடுத்துவைக்கும் ஒவ்வொரு அடியும் எதிர்காலத்தை நமதாக்கும் .. எதிரிகளை நிலைகுலைய செய்யும்.. ஆற்றல் நமக்கு உண்டு.. திராவிட இயக்கத்தின் நான்காம் தலைமுறையை முன்னெடுக்க காலம் கனிந்து தானாய் தந்திருக்கிறது.. .. தமிழகம் சூன்யமாகி நிற்கும் வேளையில் தலைமைக்கு வந்திருக்கிறீர்.. நிறைய வேலைகள் பாக்கியிருக்கிறது முன் எப்போதுமில்லாத வேகத்தோடு.. கலைஞரின் வியூகத்தோடும்.. நமக்கு உரிய விவேகத்தோடும்.. திராவிடனுக்கே உரிய அஞ்சாமையோடும்.. களத்தில் வெற்றியை குவிப்போம்.. இனி அஞ்சுவதில்லை எவர்க்கும் .. கண்முன் வெற்றியின் இலக்குமட்டுமே.. எதிரிகள் பலமிழந்து நிற்கிறார்கள் நிலைகுலைய செய்வோம்.. தலைகுனிந்து நிற்கும் தமிழனை தலைநிமிர்ந்து தன்மானத்தோடும் திமிரோடும் நடைபோட செய்வோம்.. தமிழுக்கும் இனத்திற்கும் அரணாய்..தமிழ் மக்களின் நம்பிக்கையாய் வீறுநடைபோடுவோம்.. .. தங்கதளபதியே.. எங்கள் இனத்தின் காவலே.. எங்களின் செயலே.. வழிநடத்துத்துங்கள்.. தமிழகம் நிமிரட்டும்.. #இளஞ்சூரியனே.. வாழ்த்துகள்.. .. ஆலஞ்சி மன்சூர்....

Tuesday, January 3, 2017

ஜல்லிக்கட்டு தடையை நீக்கு..

ஜல்லிக்கட்டு.. திரு.பொன்.ராதா அவர்கள்.. ஜல்லிக்கட்டிற்கான போராட்ட களம் வாடிவாசல் அல்ல டெல்லி தான் என்கிறார்.. நன்று .. இரண்டாண்டுகளுக்கு முன்பு திரு.ஸ்டாலின் ஜல்லிக்கட்டு வேண்டி போராட்ட அறிவிப்பை வெளியிட்டபோது திமுக தலைமைக்கு கடிதம் எழுதி பொறுத்துக்கொள்ளுங்கள் எப்படியும் இந்தாண்டு ஜல்லிக்கட்டை நடத்திவிடலாமென கூறியது தாங்கள் தானே.. அப்போது இங்கே வாடிவாசலில் போராடாதீர்கள் என ஏன் சொல்லவில்லை.. தொடர்ந்து இரண்டாடுகளாக இதோ இந்தாண்டு நடத்திவிடுவோம் என பொய்யுரைப்பது தாங்களும் தங்கள் சகாக்களும் தானே பொன்னார் அவர்களே.. இதை சொல்லும் போது கூசவில்லையா.. .. நிறைய பேர் ஏன் பாஜகவினர் கூட திமுக ஆட்சியில்தானே உச்சநீதிமன்றம் தடைவிதித்தது என்கிறார்கள் ஆனால் தடையை தளர்த்தி /மீறி தொடர்ந்து ஜல்லிக்கட்டை நடத்திக்காட்டியதை பேச மறுக்கிறார்கள்.. சில நிபந்தனைகளை மீறிவிட்டதாக peta அமைப்பு உச்சநீதிமன்றத்தை அணுகுகியதும் பாஜகவின் மேனகாகாந்தி தொடர்ந்து தடைக்காக போராடியதும் இவர்கள் வசதியாக மறந்து போகிறார்கள்.. .. ஆறு ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் அவர்கள் சொத்து வழக்கையும் பிற வழக்குகளையும் கவனித்துவந்தார்களே தவிர .. அதோடு இல்லாமல் எல்லாவற்றையும் நீதிமன்றத்தின் மூலமே தீர்த்துக்கொள்ளலாமென்ற விவரகேடுமே காரணம் .. மத்திய ஆட்சியாளர்களுக்கு அழுத்தம் தந்து தடையை ஓரேயடியாக நீக்க முடியாவிட்டாலும் தளர்த்தி நடத்தி காட்டியிருக்கலாம்.. பாவம் அவர்கள் தலைமீது தொங்கும் கத்திக்கு அஞ்சியே ஆட்சி நடத்தவேண்டிய அவலம்.. .. இப்போது கூட திருமதி தமிழிசை போன்றோர் தேன்தடவிய வார்த்தை சொல்லி நம்பவைத்து கடைசியில் நீதிமன்றம் மறுக்கிறது என சொல்லி ஏமாற்றுவதையே வழக்கமாக்கி கொண்டிருக்கிறார்கள்.. சட்டதிருத்தத்தை இரண்டாண்டுகளில் கொண்டுவந்திருக்கலாம்.. அதை செய்ய மறுப்பது ஏன் .. .. தளபதியாரின் அலங்காநல்லூர் போராட்டம்.. மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.. லட்சக்கணக்கானோர் கலந்துக்கொண்டிருப்பதலிருந்தே மக்களின் உணர்வுகளை புரிந்துக்கொண்டு தடையை தளர்த்தி இந்தாண்டே நடத்த வழிவகை செய்யவேண்டும்.. தமிழர்களின் பண்பாட்டின் மீதான தாக்குதலை இந்த பாசிச பாஜக அரசு கைவிடவேண்டும்.. அமைதியாக இருப்பதாக எண்ணிக்கொண்டிருப்பதாக எண்ணவேண்டாம் நீறுபூத்த நெருப்பாக .. தமிழர் நெஞ்சில் புகைந்துக்கொண்டிருக்கிறது.. அது எரிமலையாய் ஆவதற்குள்.. ஜல்லிக்கட்டின் தடையை நீக்க மத்திய அரசு முயலவேண்டும்.. .. #ஜல்லிக்கட்டுதடையை_நீக்கவேண்டும்.. .. ஆலஞ்சி மன்சூர்

Monday, January 2, 2017

ஜெயலலிதாவின் துரோகிகள்

மக்கள் பன்னீர் செல்வத்திற்கு வாக்களிக்கவில்லை தம்பிதுரை.. ஒரேயொரு சந்தேகம் சசிகலாவிற்கு வாக்களித்து தேர்வு செய்தார்களா என்பதை தம்பி விளக்கவேண்டும்.. அரசியல் அநாதையாகவே காலம் தள்ள முடிவெடித்துவிட்டபிறகு அவர்களிடம் அறிவார்ந்த விளக்கங்களையோ நேர்மையான பதிலையோ எதிர்பார்க்கமுடியாது.. திடீரென சிலர் தமிழச்சியை ஆதரிக்கவேண்டும் என்கிறார்கள்.. சரி இதுவரை ஜெயலலிதாவை எதன் அடிப்படையில் ஆதரித்தீர்கள்.. அப்போது தமிழரல்லாத ஆரிய மங்கையென தெரியவில்லையா.. .. ஜெயலலிதா முன் பேசவே அஞ்சிய வளர்மதி ஜெயலலிதா சொத்துகுவிப்பு வழக்கில் சசிகலா மட்டும் அப்ரூவராக மாறியிருந்தால்.. அம்மாவின் கதை எப்போதோ முடிந்திருக்கும் என்கிறார்.. இதிலிருந்தே இவர்களின் உண்மையாக முகம் கொடூரமானது என்பது தெரிகிறது.. அதிமுகவிற்குதான் வாக்களித்தார்கள் ஜெயலலிதாவிற்காக அல்ல என தம்பிதுரை சொல்வது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம்.. அப்படியே அதிமுகவிற்காக தான் எனில் ஏன் தேர்தலை சந்திக்க கூடாது அப்போதும் அதிமுகதானே இருக்கும்.. மக்கள் அதிமுகவிற்கு வாக்களித்து உங்கள் புதிய சின்னம்மாவை ஆட்சியில் அமர்த்தலாமே.. .. இவர்களின் செயல்களை பார்க்கும் போது மறைந்த ஜெயலலிதா பாவம் என்று தோன்றுகிறது.. கலப்படமற்ற சுயநலமற்ற நட்பை/உறவை நான் என் வாழ்நாளில் சந்தித்ததே இல்லையென்ற ஜெயலலிதாவின் வார்த்தை எத்தனை நிஜமானதென்று எத்தனை வலிகள் அந்த சொல்லில் என புரிந்துக்கொள்ள முடிகிறது.. மிக மோசமான சுயநல கிருமிகளோடே வாழ்ந்திருந்திருக்கிறார்.. சுற்றியிருந்தவர்கள் பதவிக்காக எதையும் செய்ய துணிந்தவர்கள் என்பதை அறிந்துதான் அடிமைகளாகவே வைத்திருக்கிறார்.. .. ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுககாரர்களின் முகம் தெளிவாக தெரிகிறது பணம் சம்பாதிக்கவேண்டும் அதற்காக இறுதி சந்தர்ப்பம் இது இதைவிட்டால் இனி எப்போதும் நடக்காது/முடியாது என்பதை உணர்ந்து எந்த நிலைக்கும் செல்ல தயாராக இருக்கிறார்கள்.. மானம் மரியாதை கௌரவம் தான் வகிக்கும் பதவியின் மரியாதை எதைவேண்டுமானாலும் அடகுவைக்க தயாராகும் கூட்டமிது.. நோக்கம் சம்பாதிக்கவேண்டும் சுரண்டியதை காப்பாற்றிக்கொள்ளவேண்டும் வேறொன்றுமில்லை... இவர்களை இப்படியே அனுமதிப்பது.. மாபெரும் இழிவு தமிழ்நாட்டிற்கு ஏற்படும்.. .. ஜெயலலிதா தன் வாழ்நாளில் எது சரியாக இருந்ததோ தெரியவில்லை..ஆனால் சரியான நேர்மையான எதிரியை பெற்றிருந்தார்.. ஆம் திமுகழகமும் கலைஞரும் நேர்மையான எதிர்கட்சியாக எதிராளிகளாக இருந்திருக்கிறார்கள்.. .. #ஜெயலலிதா_துரோகிகளோடே_வாழ்ந்திருக்கிறார்… .. ஆலஞ்சி மன்சூர்