Sunday, November 6, 2016
தமிழக அரசியல் ..
இருபெண்மணிகள்..
எம்ர்ஜென்ஸியை கொண்டுவந்த காங்கிரஸோடு கூட்டணி வைத்துக்கொண்டு பாஜகவை விமர்சிக்ககூடாது தமிழிசை..
நாளுக்கொரு பேச்சு பேசுபவர் வைகோ.. பிரேமலதா..
..
தமிழிசை கூற்று சற்று யோசிக்க வைக்கும்... அவசரநிலை பிரகடனத்தை ஏதோ திமுக ஆதரித்துபோல தோற்றத்தை உருவாக்க பார்க்கிறார்
Maintenance of Internal Security Act
மிசா கலைத்தில் மத்திய அரசை கடுமையாக எதிர்த்தவர் கலைஞர்.. திமுக அதற்காக ஆட்சியை கூட இழக்கவேண்டியிருந்தது .. காமராஜரை கைது செய்யவேண்டுமென்ற திருமதி இந்திராவின் கோரிக்கையை நிராகரித்தார்.. காமராஜரே கவைஞருக்கு ஆதரவளித்த காலமது.. இந்திரா மிசாவை கொண்டுவந்ததற்காக வருந்தி அதற்காக மக்களிடம் மன்னிப்பை கேட்டார் அதற்கு பிறகு திமுக அவரை பின்துணைத்தது.. அப்போது கருத்துசுதந்திரம் நசுக்கப்பட்டபோது ஜெயபிரகாஷ் நாராயணனோடு சேர்ந்து இந்திராவை எதிர்த்தவர் தான் கலைஞர்.. இந்திராவே ஆதரவென்றாலும் எதிர்பென்றாலும் அதை கடுமையாக செய்பவர் கருணாநிதி என்றார்.. இன்றைக்கு ndtv க்கெதிரான தடையை கருத்துச்சுதந்திரத்தின் மீதானதாக்குதலாக கருதவேண்டியிருக்கிறது.. இது எதிர் கருத்தை சொல்பவர்கள் மீது திரும்பும் /எச்சரிக்கும் செயலாக மாறும்.. ஆரம்பத்திலேயே கடும் கண்டனத்தை பதிவு செய்யவேண்டும்.. அதைதான் ஜனநாயகத்தில் நம்பிக்கையுள்ளவர்கள் கருத்துசுதந்திரத்தை எதிரான செயலாக கருதி எதிர்ப்பை பதிவு செய்கிறார்கள்..
..
தேமுதிகவின் பிரேமலதா வைகோவை பற்றி சொன்ன கருத்தில் உடன்படவேண்டியிருக்கிறது தினம் தினம் தன் கருத்தை கொள்கையை வேகமாக (பச்சோந்தியைவிட) மாற்றிக்கொண்டிருக்கும் வைகோ சிறுதும் நம்பகதன்மையற்றவராக அரசியலில் தரம்தாழ்ந்து போய்விட்டார்.. கருத்துக்களை மாற்றிச்சொல்வதொன்றும் அரசியலில் புதிதல்ல அது நடைமுறை அரசியலில் ஏற்படும் மாறும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு சில மாறுபட்ட கருத்துக்களை சொல்வதுண்டு.. ஆனால் சட்டென்று மாறும் தன்மையுடையவராகவே வலம்வருகிறார்.. எதிர்மறையான கருத்தைகொண்டவர்களை கூட சட்டென்று உயரத்தில் தூக்கிவைத்து கொண்டாடுவதும் திடீரென தூக்கி வீசி ஏசுவதும் அதிவேக கொள்கை/ கருத்து மாற்றத்தை மாறி மாறி பேசுகிறவர்களை தமிழகம் மட்டுமல்ல இந்திய அரசியலில் எங்கும் கண்டதில்லை.. மோடியின் உருவில் பெரியாரையே பார்த்தவர்.. கலைஞரை,ஜெயலலிதாவை, புகழ்ந்தும் இகழ்ந்தும் இவ்வளவு வேகமாக யாரும் கருத்துச்சொன்னதில்லை.. சேருமிடத்திற்கு தகுந்தாற்ப்போல் நிறத்தை மாற்றிக்கொள்ளும்
#அரசியல்பச்சோந்தி..
..
#தகுதியில்லாத_கட்சிதலைமைகள்..
..
ஆலஞ்சி மன்சூர்
Saturday, November 5, 2016
நிறம்மாறிய காம்ரேட்
அதிமுக கேட்டுக்கொண்டால் மூன்று தொகுதிகளிலும் மநகூ ஆதரிக்கும்..
காம்ரேட் முத்தரசன்..
முன்பெல்லாம் பொதுவுடமை கட்சி தேர்தலை ஜனநாயகத்தின் அளவுகோலாக கொண்டு நடந்தது.. சில ஆயிரங்கள் கூட வாக்குகள் இல்லாத தொகுதிகளில் கூட ஆளும்கட்சியை எதிர்த்து களம்கண்டிருக்கிறது.. அதெல்லாம் தோழர் ராமமூர்த்தி நல்லகண்ணு காலத்தோடு முடிந்துபோன கதையானது..
கம்யூனிஸ்ட் மீதான எனது மரியாதை தா.பாவின் வரவிற்கு பிறகு மங்கிப்போனது ஒரு சிலர் தோழர்கள் இன்றைக்கும் வட்டாரம் சார்ந்த விடயங்களில் ஒழுங்காக நேர்மையோடு போராடிக்கொண்டிருக்கிறார்கள்..ஆனால் அவர்களை கம்யூனிஸ்ட் பார்ட்டியே அங்கீகரிப்பதில்லை.. ஆனால் அவர்களின் பணி தொடர்ந்துக்கொண்டுதானிருக்கிறது..
..
மநகூ வின் நோக்கத்தை இப்போது முழுமையாக மக்கள் உணர்ந்துக்கொண்டிருப்பார்கள்.. இவர்கள் கட்சி நடத்தவரவில்லை மாறாக கம்பெனி நடத்துகிறார்கள்.. இவர்களை மக்கள் புறக்கணித்து நீண்ட நாட்களாகிவிட்டது.. தமிழகத்தின் இவர்களின் வளர்ச்சியில் குறிப்பிட்டளவு பங்கு கலைஞரையே சாரும் தேவைக்கதிகமாக தூக்கிவைத்து கொண்டாடியதும் அவர்களுக்கு அதிமுக்கியத்துவம் தந்ததும் சரியானதல்ல... இந்த விடயத்தில் ஜெயலலிதாதான் சரி.. மூக்கறுத்து அவர்களின் நிலையை உணரவைத்து கடைசியில் தரகர் அளவிற்கு கொண்டுவந்து சில கட்சிகளுக்கு சின்னமே கிடைக்கமுடியாமல் போக காரணமாக இருந்தார்.. அவர்களும் வளர்ப்பு நாயைப்போல வாலாட்டிக்கொண்டே இருக்கிறார்கள்..
கம்யூனிஸத்திலிருந்து காசு பார்க்க கற்றுகொடுத்த #குருவிற்கு விசுவாசமாக இவர்கள் வாலாட்டுகிறார்கள்.
..
தமிழகத்தில் ஒருசில தொகுதிகளில் திருத்துறைப்பூண்டி திருப்பூர் என சிலதொகுதிகளில் கொஞ்சம் செல்வாக்காக இருந்தவர்கள் இராமகிருஷ்ணன் தா.பா வரவிற்கு பிறகு முழுவதுமாக துடைத்தெறியப்பட்டிருக்கிறார்கள்..இவர்களின் எதிர்காலம் குறிப்பாக கம்யூனிஸத்தின் எதிர்காலம் தமிழகத்தில் மிகப்பெரிய கேள்விக்குறி..
வருத்தம் மேலிட்டாலும் அதுதான் உண்மை..
#பொத்தல்காசு_செல்லாமல்போய்காலம்குறையஆகிவிட்டது.
..
#காம்ரேட்டுகளில்_கருப்பாடுகள்..
The black sheep of the Communists..
..
ஆலஞ்சி மன்சூர்
பெரியார் மானமுள்ளவர்களின் வழிகாட்டி
இனியும் பெரியாரை சுமக்க முடியாது சீமான்..
பெரியாரை யாரும் சுமக்க தேவையில்லை பெரியார் சுமந்தால்தான் இன்றைக்கு கொஞ்சமேனும் நரம்பு புடைக்க பேசிகிறாய்.. இல்லையெனில் கும்பிடுறேன் சாமி என்று குனிந்துக்கொண்டுதான் இருப்பாய்.. பீகாரை போல உ.பியை போல நடுத்தெருவில் நாயைவிட கேவலமாக அடித்து துரத்தப்பட்டிருப்பாய்..
..
பெரியார் எப்போது சொன்னார் என்னை பின்பற்றுங்கள் என்று என்னை தலையில் தூக்கி கொண்டாடுங்கள் என்று.. நானே சொன்னாலும் உன் அறிவேற்காததை ஏற்காதே என்றுதான் சொன்னார்.. அவர் சொன்னதெல்லாம் கொஞ்சம் விவரம் உள்ளவனுக்கு அதெல்லாம் உன்னைப்போன்ற விவரகேடுகளுக்கு புரியாது..
..
பெரியார் மட்டும் தமிழகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தவில்லையென்றால்.. உன்னை உன் உரிமையை உனக்கானதை உன்னை கேட்காமலேயே சுரண்டுகிறான்..எல்லா உயர்விலும் அவன் அமர்ந்துக்கொண்டு உன்னை மாட்டைவிட கேவலமாக நடத்துகிறான் .. கடவுள், மதம்,ஜாதி,வர்ணம் எனச்சொல்லி அவன் மட்டுமே உடம்பு வளையாமல் வலிக்காமல் எல்லாவற்றையும் உன்னிடமிருந்து பறித்து அவன் மட்டுமே அனுபவிக்கிறான்.. எனச்சொல்லி சுயமரியாதையோடு வாழ சொன்னவன் இந்த பெருங்கிழவன்..
..
பெரியார் நினைத்திருந்தால் எல்லா உயர்பதவிகளையும் அடைந்திருக்கமுடியும்.. சமுதாய மாற்றத்தை சமூகநீதியை எல்லோருக்குமான சமநீதியை.. ஏற்றஇறக்கமில்லா சமஉரிமையை எல்லா மனிதனும் சமமாக நடத்தப்படவேண்டும் எல்லாருக்கும் பொதுவானதாக கடவுள் ,நீதி இருக்கவேண்டும் என விரும்பியவர்.. பெரியாரை போல ஒருவரை இந்தியா கண்டிருக்காவிட்டால் இன்னமும் அடிமைத்தனத்தில் ஊறி வளைந்த முதுகோடுதான் நின்றிருப்பாய்.
..
#பெரியார்_மானமுள்ளவர்களின்_வழிகாட்டி..
Periyar's guide for those who honor…
..
ஆலஞ்சி மன்சூர்
Friday, November 4, 2016
ஸ்டாலின் தவிர்க்கமுடியாத சக்தி
ஸ்டாலினுக்கு தமிழக அரசியலில் வாய்ப்பு வருவது கடினம் தமிழிசை ..
வார்டு கவுன்சிலருக்கு நின்று கூட வெல்லமுடியாதவர் எதிர்கட்சித்தலைவராக கம்பீரமாய் நிற்கும் தளபதியை பார்த்து சொல்கிறார்..
ஒன்றுமட்டும் புரிகிறது.. திமுகவை எதிர்க்கும் அரசியல் மட்டுமே தமிழகத்தில் தங்களின் நிலைநிறுப்பை கொஞ்சமேனும் காப்பாற்ற பயன்படும்..மற்றொன்று கலைஞரை எதிர்த்தால் தான் அரசியல் செய்யமுடியுமென்கிற நிலையிலிருந்து இப்போது தளபதியை எதிர்த்தால் தான் அரசியல் செய்யமுடியுமென்கிற உண்மையை உணர்த்துகிறது.. உதிரிகட்சிகளில் செயல்பாடு..
..
திரு.ஸ்டாலின் தமிழகத்தின் தவிர்க்கமுடியாத சக்தியாக தனிஇடத்தை அடைந்திருக்கிறார்..
திராவிட இயக்கத்தின் நான்காம் தலைமுறையை தலைமையேற்க தகுதியானரென்று உறுதிப்படுத்தியிருக்கிறார்கள் நம் எதிரிகள்..
..
பாமக தேமுதிக மதிமுக பாஜக என எல்லாமே திமுக எதிர்ப்பு அரசியலை கையிலெடுப்பதிலிருந்தே அவர்கள் நிற்க கூட பலமில்லாமல் பரிதவிப்பது தெளிவாகிறது..
இந்த இடைத்தேர்தலை இவர்கள் புறக்கணிக்க அல்லது வேறொரு கண்ணோடத்தில் அணுகுகிறார்கள்..அதாவது திமுகவின் வெற்றியை தடுத்திட வேண்டும் வாக்கை பிரித்து அல்லது தேர்தலை புறக்கணித்து..
ஆனால் இவர்கள் எண்ணம் ஈடேறாது..
..
முதல்வர் வேட்பாளரென்று தங்களை கூறிக்கொண்ட அன்புமணியோ, விஜயகாந்தோ, சீமானோ, ஏன் இடைத்தேர்தவில் போட்டியிட்டு வெற்றிபெற கூடாது.. குறிப்பாக முதல் நாள் முதல் கையெழுத்து புகழ் அன்புமணி ஏன் நிற்கவில்லை அல்லது கிங் மேக்கரில்லை கிங் என்று தன்னை அறிமுகம் செய்துக்கொண்ட கேட்பன் நின்றியிருக்கலாமே..
ஆள் கிடைக்காமல் கிடைத்தவன் தலையில் மிளகாய் அரைக்காமல் களம்கண்டிருக்கலாமே.. தமிழிசை கூட கச்சேரி செய்திருக்கலாம் .. போட்டி பலமாக புரபரப்பாக ரசிக்கும்படியாக பொழுதுபோகியிருக்குமே மக்கள் கவலைகளை மறந்து இவர்களின் கூத்தை ரசித்திருக்கலாம்..
..
மதம்,ஜாதி,குறுகிய சிந்தனை இவையெல்லாம் நீண்டநாள் நிலைக்காது அதுவும் தமிழகத்தில்.. இன்றைய சூழல் மிக ஆபத்தான பாசிசத்திற்கு தமிழகத்தில் மறைமுகமாக வழிஅமைத்துதர முயற்சிக்கும் அதிமுகவின் ஆட்சியாளர்கள் பொம்மையை போல நடத்தபடுகிறார்கள்.. ஜெயலலிதா எதிர்த்த மத்தியரசின் திட்டங்களையெல்லாம் சத்தமேயில்லாமல் நிறைவேற்றபடுகிறது.. மறைமுக ஆட்சியை பாஜக நடத்துகிறதோ என சில ஊடகவியலாளர்கள் சந்தேகம் கொள்கின்றனர்.. பொம்மையை போல நடத்தபடுவதாக சொல்லபடுகிறது ..
இப்போது திமுகவின் வெற்றியும் வளர்ச்சியும் அதன் பங்கும் அவசியமாகிறது.. காலம் சரியான நபரை தான் தேர்வுசெய்து நம் முன் நிறுத்தியிருக்கிறது தமிழகமக்களின் நம்பிக்கையாய் வருங்கால வழிகாட்டியாய் வழிநடத்துபவராய் திரு.ஸ்டாலின் உயர்ந்து நிற்கிறார்.. இதனை பொறுக்கமுடியாமல் சிலர் ஏதேதோ உளறி ஊளையிடுகிறார்கள்.. இது கோவத்தின்/இயலாமையின் வெளிப்பாடு
இந்த உதிரிகளின் உளறல்களை புறந்தள்ளுவோம்..
..
#காய்த்துகனிந்தமரம்கல்லடிபடதான்செய்யும்
..
ஆலஞ்சி மன்சூர்
Thursday, November 3, 2016
பேதைகளின் கூப்பாடு..
#நன்று..
தேமுதிகவை ஆதரிக்கபோவதில்லை திமுகவை தோற்க்கடிப்பதே நோக்கம்.. வைகோ
வாக்கை பிரித்து திமுகவை தோற்கடிப்பதே எங்கள் வேலை பிரேமலதா..
நன்று இப்போதுதான் சரியான பாதைக்கு வந்திருக்கிறார்கள்.. ஊசலாடிக்கொண்டிருக்கும் கட்சியை புதைப்பதென்று முடிவு செய்திருக்கிறார்கள்.. மக்கள் மிகதெளிவாக அறிந்துதான் இவர்களை கட்டிவச்சகாசை (டெபாசிட்) கூட கிடைக்காத தோல்வியை பரிசாக தந்தார்கள்..
..
இவர்கள் பேச்சு திமுகவின் வெற்றியை உறுதிசெய்கிறது களம் திமுகவிற்கு சாதமாக இருப்பதை காட்டிகிறது.. ஆளும்கட்சிக்கெதிராக அரசியல் செய்யாமல் இருப்பதலிருந்தே இவர்கள் அரசியல் கட்சி நடத்தவரவில்லை மாறாக வியாபாரம் செய்யவந்திருப்பது தெளிவாக தெரிகிறது..இடைத்தேர்தல் ஆளும்கட்சிக்கு எதிராகதான் பிற கட்சிகள் தேர்தலை சந்திக்கும் இங்கே எதிர்கட்சிக்கெதிராக இவர்கள் முழங்குவதிலிருந்தே இவர்கள் காசிற்காக கட்சிநடத்துவது அம்பலமாகிறது..
..
வைகோவின் மதிமுக ஏறக்குறைய பிணமாக தெரிகிறது இனி உயிருட்டமுடியாது.. தேர்தல் அரசியல் என்பது இனி எக்காலத்திற்கும் வைகோவால் செய்திட முடியாதென்பது அவரின் பேச்சே நமக்கு உணர்த்துகிறது.. தேமுதிக என்ற கட்சி எதிர்காலத்தில் இருந்த இடமே தெரியாமல் போய்விடுமென நினைக்கிறேன் .. மதிமுக மற்றும் தேமுதிக தொடங்கப்பட்டபோது தமிழகமே இவர்கள் பின்னால் என்பதை போன்றத்தை ஊடகங்கள் கட்டமைத்தது ஆனால் மக்கள் சரியாக புரிந்து இவர்களை முழுவதும் ஒதுக்கிவிட்டார்கள்.. கட்டிவச்சகாசை கூட திரும்பபெற முடியாதவாறு மக்கள் புறக்கணித்துவிட்டார்கள்.. இதோ நாங்களும் இருக்கிறோம் என்ற கூச்சல்தானே தவிர வேறில்லை இவர்களிடத்தில்..
..
இவர்களின் கூப்பாடு ஒரு உண்மையை நமக்கு உணர்த்துகிறது.. திரு.ஸ்டாலின் என்கிற நபரின் வளர்ச்சியை இவர்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.. இவர்களை அறியாமலே இனி ஸ்டாலினை எதிர்த்தால் தான் அரசியல் செய்யமுடியுமென நினைக்கிறார்கள்.. தவிர்க்கமுடியாத எதிர்க்கமுடியாத,பெருவளர்ச்சியை #தளபதி_ஸ்டாலின் பெற்றிருக்கிறார் என்பது ஊர்ஜிதமாகிறது..மற்றொன்று இடைதேர்தல் திமுகவிற்கு சாதகமாக இருப்பதைதான் இவர்களின் பதைபதைப்பு சொல்கிறது. காட்டாற்று வெள்ளத்தை கை கொண்டு தடுத்திடவா முடியும்..
..
இவர்களின் கூப்பாடு..
#பேதைகளின்_வெற்று_கூச்சல்…
#Screamed_the_fatuous_and_ignorant..
..
ஆலஞ்சி மன்சூர்
Wednesday, November 2, 2016
கமல்....?
தனி நபரின் சொந்தவிடயங்களில் நாம் ஏன் மூக்கை நுழைக்கவேண்டும். . எந்தயொரு செயலும் இந்த சமூகத்தில் மாற்றத்தை/ கேடை விளைவிக்காது என்கிற போது நாம் ஏன் தலையிடவேண்டும்.. ஒரு தனிநபர் என்வீட்டில் அழைப்புமணி calling bell வைத்திருக்கிறேன் என்கிற நாம் ஏன் எட்டிபார்க்கவேண்டும்.. திரு.கமல் கௌதமி இருவரும் give and take policy ல் கொடுக்கல் வாங்கல் கொள்கையில் வாழ்ந்து வந்தார்கள் இருவரும் பிரிகிறார்கள்.. இது முழுக்கமுழுக்க இருவரின் தனிப்பட்ட விடயம் இதில் கருத்துச்சொல்வது நையாண்டி செய்வது விமர்ச்சனம் செய்வது தேவையில்லாதது..
..
திருமணம் என்ற சடங்கின் மீது நம்பிக்கையற்ற ஒருவரின் வாழ்வில் அவர்களுக்கான பாதையை அவர்களே தேர்வு செய்து கொள்ளும் உரிமை அவர்களுக்குண்டு.. இரு கலைஞர்களின் கலைசார்ந்த விடயங்களை ,நடிப்பை, அவர்கள் சமூகத்திற்கு செய்த செய்கிற காரியங்களை, அவர்களின் இந்த சமூகம் மீதான பார்வையை நாம் விமர்ச்சிப்போம் விவாதிப்போம்.. முடிந்தால் கடும் கண்டனத்தை கூட பதிவு செய்வோம். அதுவரை தான் நமது எல்லை.. அவர்களின் தனிப்பட்ட வாழ்வை விமர்சிக்க யோசனை சொல்ல கருத்திட நமக்கு எந்த உரிமையும் அருகதையம் இல்லை..
..
ஆணுக்கென்று இங்கே வரையறை ஏதும் வகுக்கப்படவில்லை ஆனால் பெண்ணின் எல்லைகள் வகுக்க அல்லது தடை செய்யப்பட்டிருக்கிறது.. என்பதை தான் திருமதி கௌதமியின் கருத்து நமக்கு சொல்கிறது..
தன் மகளின் எதிர்காலத்தை கணக்கில் கொண்டு பிரிவதாக சொல்கிறார்..
ஆம் இப்போதும் இந்த சமூகத்தின் கண்ணோட்டத்தில் ஆணாதிக்க திமிரின் சாயல் இருக்கதான் செய்கிறது..
..
இருபது நூற்றாண்டை பின்னிட்டும் இந்த சமூகத்தின் பெண்கள் மீதான பார்வை நையாண்டியும் கேலியும் ஆனதாகவே இருக்கிறது..அவர்களின் உரிமைகள் நியாயங்கள் விருப்புவெறுப்புக்கள் பரிசீலிக்கவோ/ கேட்கவோ படுவதில்லை.. give and take policy இந்திய கலாச்சாரத்தோடு எதிர்வினையாற்றிக்கொண்டே இருக்கிறது.. இங்கே திருட்டுத்தனத்தை /கள்ளத்தனத்தை கூட கௌரவமாக பார்க்கிற சமூக பின்னணியே இதற்கு காரணம்..
இது தவறா சரியா என்பதைவிட நிறைய மறைமுக தவறுகளுக்கு வழிவகுக்கின்றன..
..
தனிநரின் விருப்பு வெறுப்புகளை இந்த சமூகம் காட்டும் ஆர்வம் நல்ல பலவிடயங்களில் சமூகத்தின் மீதான அக்கறையில் காட்டினால் நல்ல சமுதாயத்தை கட்டமைக்கலாம்.. கமலின் நடிப்பை, அரசியலை, அவரின் சித்தாந்த கருத்துக்களை, நாம் கடுமையாக விமர்சிப்போம்.. கருத்திடுவோம் கண்டனத்தை பதிவு செய்வோம்.. அவரது தனிப்பட்ட வாழ்க்கையை அல்ல..
..
#தனிநபர்உரிமைகளில்_தலையிடுவது_அநாகரீகம்…
..
ஆலஞ்சி மன்சூர்
Tuesday, November 1, 2016
லூசு...
#லூசு.
கன்னடத்து பைங்கிளி சரோஜாதேவி குறித்து மாண்பிமை ஜெயலலிதா 1987 ல் கூறியது
எம்ஜிஆர் மறைவுக்கு பிறகு ஜானகியை ஆதரித்தார்
அப்போது ஜானகியோடு மல்லுக்கட்டிய ஜெயலலிதா சரோஜாதேவியை பார்த்து சொன்ன வாசகம் தான் மேலே உள்ளது
இந்த நேரத்தில் மற்றொன்றையும் கூற வேண்டும்..
ஜெயலலிதாவிடமிருந்து பிரிந்து வந்த அறந்தாங்கி திருநாவுகரசு... இப்போது ...கரசர் தமிழககாங்கிரஸ் தலைவர் ..
எம்ஜிஆர் அழைத்தபோது சரோஜாதேவி வந்திருந்தால் இன்றைக்கு ஜெயலலிதாவே கிடையாது..என்றார்
..
என்ன கொடுமை.. மகோரா மக்களை சினிமா மயக்கத்திலேயே வைத்திருக்கவேண்டுமென்று நினைத்திருக்கிறார்..காரணம் தெளிவு பெற்றவர்கள் யாரும் அவரோடு இல்லை.. சிலர் இருந்தார்கள் என்றால் கலைஞர் மீதான கோபம் அல்லது பதவி மீதான மோகம் ..அதனால்தான் இருந்தார்கள்.. மகோரா சிறந்த தலைவர்களை உருவாக்கவில்லை காரணம் கவர்ச்சி என்ற மூலத்தனமே மட்டுமே கொண்டு அரசியலுக்கு வம்தவர்.. திமுகவை முக்கியமாக திராவிடகொள்கைகளை சிதைக்கவேண்டுமென்ற பாசிச ஆர்எஸ்எஸ் சித்தாந்தவாதிகளுக்கு ஒரு ஆள் தேவைபட்டால் அதனால் அவரை ஊடகங்கள் தலையில் தூக்கி கொண்டாடின..
..
திருமதி.சரோஜாதேவி அவர்கள் சொன்ன கருத்தின் மீது பெரிய யோசிப்பில்லை ஆனால் அவர் சொல்கிற போது சரியான விவரத்தையாவது சொல்லணும் அமெரிக்க மருத்துவரிடம் பேசினேன் என்கிறார் ஒருவேளை அப்போலோவில் அமெரிக்கர் பணி செய்கிறாரா என தெரியவில்லை.. அதைவிட கண்திருஷ்டி என்கிறார்.. நமக்கு நம்பிக்கையில்லாத விடயம் ஆனால் அதற்கு எதிர்வினை வந்தால் .. ஜெயலலிதாவால் பாதிக்கப்பட்ட சாலைதொழிலாளர்களின் சாபம் என்று சொன்னால் எவ்வளவு மடமையோ அதே மடமையை மூடத்தை சொல்கிறார்.. தன்னை லூசு என்றவர் உடல்நலிவுற்று இருப்பதுகண்டு வருந்துகிறாரே அந்த பெருந்தன்மை ஜெயலலிதா அறியாதது..
..
நல்ல வேளை எம்ஜிஆர் அழைத்து சரோஜாதேவி வராமல் இருந்தாரே இல்லையெனில் மும்முனைப்போட்டி மகோரா (எம்ஜிஆர்) வாரிசு யாரென்பதில் வந்திருக்கும்..
#காலக்கொடுமை..
..
ஆலஞ்சி மன்சூர்
Subscribe to:
Posts (Atom)