Tuesday, September 6, 2016
விலைபோன வாக்கு
தலைமை செயலாளராக நான் இருந்த காலத்தில் 7 முறை மட்டுமே ஜெயலலிதாவிடம் பேசியிருக்கிறேன். தலைமைசெயலராக இருந்த ஞானதேசிகன்..
சாதாரணமான விடயமல்ல அரசின் தலைமை செயலர் சொல்வதை கண்டுக்கொள்ளாமல் விட்டுவிட முடியாது.. முதல்வரின் செயலரும் அவருக்கு வேண்டப்பட்டவர்களும் அரசை இயக்குகிறார்கள் என்பது வெளிச்சமாகிறது..
முதலில் ஞானதேசிகனுக்கு இடைநீக்கம் செய்தவுடன் ஞானம் வந்தது அருவருக்கதக்கதாக இருக்கிறது.. உயர்பதவியில் இருந்துக்கொண்டும் செயல்பட முடியவில்லையெனில் அதை அப்போதே சொல்லியிருக்கவேண்டும்.. பதவி சுகத்தை அனுபவிக்க மௌனமாய் இருந்தது எந்தவகையில் நியாயம் என்பதை திரு.ஞானதேசிகன் அவர்கள் விளக்கவேண்டும்..
..
இரண்டு அதிகாரமையங்கள் ஜெயலலிதா ஆட்சிக்குவரும்போதெல்லாம் நடக்கிறது.. சசிகலாவிற்கு வேண்டியவர்கள் என தனி அரசே நடத்துகிறார்கள் முதல்வருக்கு எந்த செய்தி செல்லவேண்டுமென்பதை இந்த அதிகாரமையம் தான் முடிவு செய்கிறது.. ஜெயலலிதா அரசு அதிகாரிகள் சுயமாக சட்த்திற்குட்பட்டு செயல்படுதென்பது அரிதாகதான் இருக்கும்..
இது ஆபத்தான போக்கு என்றோ அல்லது முறையற்ற செயல் என்றோ ஊடகங்கள் எடுத்துரைப்பதே இல்லை..
..
தலைமை செயலகம் தலைமையில்லாமல் என ஜூவி சொல்கிறது செயலகம் மட்டுமல்ல தமிழகமே சரியான தலைமை இல்லாமல் அல்லாடுகிறது.. பாட்டு கூத்து டான்ஸை விட்டுவிட்டு பாமரனை கொஞ்சம் பாருங்கள் அவனுக்கு செயல்படுங்கள் என #ஹிந்துஸ்தான்_டைம்ஸ் எழுதுகிறது.. தமிழக நாளேடுகளும் தொலைகாட்சிகளும் தங்கள் வருவாயை பெருக்கி கொண்டால் போதுமென எண்ணி ஜெயலலிதா அரசின் அவலட்சனத்தை கண்டுக்கொள்வதில்லை.. மடிகணனி ஊழலை முறையற்ற செலவு என தினமலர் எழுதுகிறதென்றால் எவ்வளவு கரிசனம் ..
இழப்பை ஊழலென்று கூக்குரலிட்டவர்கள்... இப்போது அதிகமாக பணம் கொடுத்து தரமற்ற பொருளை வாங்கி ஊழல் செய்து கொள்ளையடித்ததை முறையற்ற செலவு என மெழுகுகிறார்கள்..
..
முறையற்ற, திறனற்ற, செயல்படாத பஜனை கோஷ்டிகளோடு வலம் வருகிற ஒரு ஆட்சி ஜெயலலிதா தலைமையிலான ஆட்சிதான்..
இங்கே ஜாதிய மோதல்கள் நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே போவதும் இந்தியாவிலேயே இரண்டாவது இடத்திற்கு ஜாதிமோதலை கொண்டுவந்ததும் தான் ஜெ.வின் சாதனை..
..
#விலைபோன_வாக்கு..
..
ஆலஞ்சி மன்சூர்
காவிரி
கர்நாடகம் தர உத்தரவிட்டிற்கிற 13 டிஎம்சி.. வினாடிக்கு 15000 கனஅடிவீதம் 10 நாட்கள் .. அதுவும் ஒழுங்காக வந்தால் 13.4 டிஎம்சி கிடைக்கும்.. குடிநீர் மற்றும் பிற தேவைகளுக்கு போக மீதமுள்ளதை கொண்டு கடைமடை தவிர்த்து சம்பா பயிரிடலாம்.. இப்போதே காலம்தாழ்ந்த நிலைதான்.. எப்போதுமே முதல்மடை பகுதியினர் கரையோர விவசாயநிலங்கள்/ விவசாயிகள் பெரிதாக கண்டுக்கொள்வதில்லை .. வெள்ளப்பெருக்கிலோ,மழை வெள்ளத்திலோ எப்போதும் பாதிப்படைகிற திருவாரூர் நாகை ..கீழ்தஞ்சை பகுதி விவசாய நிலங்கள்..
தண்ணீர் இன்றி வருடாவருடம் விவசாயம் பொய்த்து போகிறது..
முதல் மடை பகுதி ..அதாவது காவிரி மற்றும் பிரதான கிளை ஆறு வெண்ணாறு குடமுருட்டியின் முதல் பாசன பகுதி மட்டுமே இரண்டரை லட்சம் ஹெக்டர்.. நாகை திருவாரூர் மற்றும் கீழ்தஞ்சை பகுதிகள் சென்ற ஆண்டு சம்பா பொய்தத்து ..இந்த ஆண்டும் அதே நிலைதான்.. நீரை வீணடிக்காமல் முறை பாசனம் வைத்து பகிர்ந்தால் மேற்சொன்ன இரண்டரை ஹெக்டர் பயிரிடலாம் கொஞ்சம் மழையும் கைக்கொடுக்கவேண்டும்..
..
எட்டு டிஎம்சி நீரில் ஒன்றும் செய்யமுடியாது மழை வந்து காப்பாத்தணும் இல்லையென்னா கொண்டுபோகணும் அதுதான் தமிழக விவசாயிகளின் இன்றைய நிலை.. நதிநீரை சரியான முறையில் கொண்டு செல்ல இன்னும் கால்வாய்களும், வாய்கால்களும் தூர்வாறப்படவில்லை..எப்போதுமே காலகடந்த சிந்தனையும் செயலும் ஒன்றுக்கும் உதவாது..வருடாவருடம் இதை பேசியே காலம் கடத்தினால் தஞ்சையில் இனி வயல்வெளி போய் கட்டங்களும் வீட்டுமனைகளும் தான் காட்சி தரும்..
..
#காலம்கடந்த_ஞானோதயம்..
..
Monday, September 5, 2016
இலவச ஊழல்
இலவசங்களில் ஊழல்
ஜெயலலிதா அரசு இட்லி முதல் மடிகணனி வரை ஊழல் செய்திருப்பதாக மத்திய கணக்கு தணிக்கை துறை அறிவித்திருக்கிறது..
மின் வாரியத்தில் மட்டும் ₹5 க்கும் குறைவாக கிடைக்க கூடிய மின்சாரத்தை ₹ 7.20 வாங்கியிருக்கிறது இதில் மட்டும் ₹11679 கோடி இழப்பை ஏற்படுத்தியிருக்கிறது இதில் எவ்வளவு கமிஷன் கிடைத்திருக்கும் மாணவர்களுக்கு மடிகணனி லேப்டாப் வாங்கியதில் மட்டும் ₹242 கோடி ஊழல்..
இலவசமாக வழங்கப்பட்ட மிக்ஸி கிரைண்டர் மின்விசிறி .. எல்லாம் தரமில்லாத பொருட்களாக வாங்கி மிகப்பெரிய மோசடி நடந்திருக்கிறது..
என சிஏஜி அறிக்கை சொல்கிறது..
இதை ஊடகங்கள் வேண்டுமென்றே மறைக்கின்றன..
..
எதிலும் வெளிப்படையில்லாத நிர்வாகம்..
திறமையில்லாத முதல்வர் அதிகாரத்தில் வெளிநபர் தலையீடு இவையெல்லாம் மிகபெரிய ஊழலுக்கு காரணமாகி இருக்கிறது.. அம்மா கடை இட்லியில் கூட கொள்ளையடிக்கிற கூட்டம்..
..
திமுக ஆட்சியிலும் இலவசமாக டெலிவிஷன் கொடுக்கப்பட்டது ஆனால் அதை வெளிப்படையான டெண்டர் விடப்பட்டு அனைத்துகட்சி பிரமுகர்கள் அடங்கிய குழுவின் முன்னிலையில் திறக்கப்பட்டு மிக சிறந்த நிறுவனங்களிடமிருந்து ஆர்டர் கொடுத்து பெற்று விநியோகம் செய்யப்பட்டது..
ஒரு வெளிப்படையான ஊழலுக்கு முறைகேடுகளுக்கு இடம்தராத திட்டமாக இருந்தது..
ஆனால் ஜெயலலிதா அறிவித்த இலவசங்கள் விநியோகம் மர்மமானதாகவே இருந்தது எங்கிருந்து எவ்வளவு தொகைக்கு பெறப்பட்டது ..யார் யாரெல்லாம் டெண்டரில் பங்குபெற்றார்கள் என்பதை சிதம்பர ரகசியம் போல் இருந்தது இப்போது ஒவ்வொன்றாக வெளிவர தொடங்கியிருக்கிறது.. மிகப்பெரிய மோசடியை கொஞ்சமும் அலட்டிக்கொள்ளாமல் செய்திருக்கிறது ஜெயலலிதாவின் தலைமையிலான அரசு..
..
ஊழல் கொள்ளை ஜெயலலிதாவிற்கு புதிதல்ல டான்சி தொடங்கி சொத்துகுவிப்பு வரை தண்டனை பெற்றும் கொஞ்சம் கூட கவலையோ வருத்தமோ கொள்ளாமல் கொஞ்சம் கூட வெட்கப்படாமல் மக்களை விலைபேசி வாங்கிவிடலாமென்ற ஒரே ஒரு நம்பிக்கையோடு வலம் வருகிறவர்.. இந்தியாவில் பதவியில் இருக்கிற போதே தண்டிக்கப்பட்ட #கவரிமான் பரம்பரை.. நடுத்தரமக்களுக்காக குறைந்த செலவில் ஒரு ரூபாய் இட்லி என சொல்லி கோடிகளில் கொள்ளையடிக்க தெரிந்தவருக்கு..எத்தனை சிஏஜி அறிக்கை வந்தாலும் கவலையில்லை.
..
#இலவசங்களில்_இலவசமாய்கொள்ளை..
Sunday, September 4, 2016
ஆசான்
#ஆசான்..
நிறைய பேரை எழுதவேண்டிவரும்.. என்னுள் அகரத்தை எழுதிய பூலாபாய் தொடங்கி..
..
ஒரு குழந்தையின் முதல் ஆசான் தாய்..
தாயிடமிருந்து 3000 சொற்களை பள்ளிக்கு செல்வதற்கு முன்பே கற்றுக்கொள்கிறது குழந்தை..
அறத்தை அன்பை அர்ப்பணிப்பை அக்கறையோடு நம்மில் விதைக்கிற தாயே நம் முதல் ஆசான்..
பள்ளிகளில் போதிக்காத நிறைய விடயங்களை தாய் தன் செய்கையில் போதித்துவிடுவாள்.
அன்பின் மிகுதியால் நம்மை வழிநடத்தி சரிசெய்ய மறந்து போவாள்..
..
#பள்ளி..
ஆரம்பத்தில் பயத்தையும் பின் அக்கறையும் அறிவுசுடர் கொண்டு நம்மில் விதைக்கிற.. இல்லையில்லை நடுகிற இடம்.. நாற்றை பிடிங்கி வேறிடத்தில் நடுவதைப்போல பாத்திக்கட்டி பயிரை காப்பது போல வீணான களைகளை களைந்து .. நம்முள் நம்மை அறியாமல் வந்துவிழும் கொல்லிகளை.. கெட்டவிடயங்களை கொன்று நம்மை செழிப்போடும் சிறப்போடும் வளர்த்தியெடுக்கும் நெடுவயல்..
..
#ஆசான்.
நம்முள் அறிவெனும் விதையை விதைக்கிறவர்கள்.. அது சரியாக விளைகிறதா என நம்மை கவனித்து அடுத்த நிலைக்கு கொண்டுபோகும் அறம் செய்பவர்கள்.. ஆசிரியர்பணி அறப்பணி.. கற்பித்தல் எனும் அரிய சேவையாற்றுகிறவர்கள்..
..
என் ஆசான்கள் அறிவில் சிறந்த சான்றோர்கள்..
அன்பை அறிவை பகுத்தாயும் திறனை சுயமரியாதையை..சோர்ந்துவிடாமல் இயங்கும் ஆற்றலை எனக்கு கற்றுதந்தவர்கள்..
மிகசிறந்த நல்லாசிரியர்களோடு நட்போடுபழகும் வாய்ப்பினை பெற்றிருக்கிறேன்.. அன்பிற்குரிய அறிவாசான்கள்..
..
இந்த ஆசிரியர் தினத்தில் என்னை செம்மைப்படுத்தி வாழும் வழிமுறையை அறத்தோடும் அன்போடும் ஈகை குணத்தோடும் கற்றுதந்த..
என் முதல் ஆசான்
எங்கள் தாயாரின் நினைவோடு..
..
ஆலஞ்சி மன்சூர்
Saturday, September 3, 2016
கொங்கு அறிவின் பட்டறை ..இப்போதெல்லாம்
விவசாயிகள் கோடிஸ்வரர்களாக இருக்கிறார்கள் அமைச்சர் கருப்பண்ணன்..
நான் இதுவரை ஒருசிலராவது அறிவு,ஆற்றல் உடையோராய் திறமையாக செயல்படுவோராய் இருப்பார்கள் என நினைத்தேன் ஒட்டுமொத்த அறிவிலிகளும் அடிமை என்ற வரம்புக்குள்தான் வருகிறார்கள்.. இவர்கள் கையிருப்பு இவ்வளவுதான்.. இவர்கள் மீது கோவமெல்லாம் இல்லை முட்டாள்கள் என தெரிந்தும் மக்கள் தேர்தெடுத்திருக்கிறார்களே என்ற ஆதங்கம் மட்டுமே மிஞ்சுகிறது.
..
இவர் யாரையெல்லாம் விவசாயி என்கிறார் விளைநிலங்களை விலை நிலங்களாக மாற்றியவர்களையா இன்னும் மிச்சமிருக்கும் விளைநிலங்களையெல்லாம் ப்ளாட் போடமுடியுமா என்று நினைக்கிறவர்களை கோடிஸ்வரர் எனச் சொல்கிறார் போலும்..
..
இப்படி அமைச்சர்கள் பேசுவது இதுமுதல்முறையல்ல.. வாக்களித்த மக்களை கீழ்தரமாக பேசுவது அதிமுகவினருக்கு சர்வசாதாரணமான விடயம்.. எனக்கென்னவோ இதுபோன்ற உளறல்கள் ஜெயலலிதா அனுமதியோடுதான் பேசுகிறார்களோ என தோன்றுகிறது.. காரணம் இப்படி பேசினால் பிரச்சனையை திசைத்திருப்ப முடியும் .. அதேவேளை மக்களின் கோவம் அதிகமானால் சம்பந்தப்பட்ட அமைச்சரை நீக்கிவிடலாம்.. பெரிய அளவில் எதிர்ப்பில்லையென்றால் தண்ணீர் பிரச்சனையை வேறுபக்கம் மடைமாற்றிவிடலாம் இதைதான் எண்ணுகிறார் ஜெயலலிதா என நினைக்கிறேன் .. ஊடகங்கள் விவசாயிகள் மாடமாளிகையில் வாழ்வதைப்போல கதையடிக்கும்..
..
சிறு குறு விவசாயிகள் என ஏறக்குறைய எழுபது லட்சம் குடும்பங்கள். காவிரி, முல்லை ,பாலாற்றை நம்பி இருக்கின்றன.. சில நிலகிழார்கள் உண்டு மறுப்பதற்கில்லை.. ஆனால் ஒரு ஏக்கர் இரண்டு ஏக்கர் என நிலங்களை வைத்திருப்பவரும் குத்திகைக்கு எடுத்து நடுகிறவர்களுமே அதிகம்..
தண்ணீர் தர மறுக்கிறார்கள் அண்டை மாநிலத்தவர்கள் என்ன செய்வது என பேசியிருந்தால் அதில் நியாயமிருக்கிறது. தண்ணீரை பெற்று தர வக்கில்லை சதா உறக்கத்திலும் தன் மீதான ஊழல்வழக்கு உச்சநீதிமன்றத்தில் இருப்பதில் என்னாகுமோ என்ற சிந்தனையோடு ஆட்சி செய்கிறவர்.. இட்லிகடையில் கூட ஊழல் செய்ய கற்றுக்கொடுத்தவரிடம் வேறெதை எதிர்பார்க்கமுடியும்..
..
நல்ல வேளை தமிழ்நாடு கோடிஸ்வரர்களின் நாடு எல்லோருமே கோடிகளில் புழங்குகிறார்கள் என சொல்லாமல் விட்டதுவரை சந்தோசம்..
கொங்கு அறிவின் பட்டறை என்பார்கள்..,இப்போதெல்லாம்.. அறிவிலிகளின் கூடாரமாகிறது.. என்னசெய்ய..
..
நாள்தொறும் நாடி முறைசெய்யா மன்னவன்
நாள்தொறும் நாடு கெடும்..
..
பெரியாரை மறந்த நிலை இப்போதில்லை
ரஞ்சித் அடுத்த படத்திலாவது பெரியாரை படத்தை வைக்கவேண்டுமென பரவலாக சொல்லபடுகிறது..
தேவையில்லை .. பெரியாரின் கருத்துக்களை ஏற்கவோ மறுக்கவோ ரஞ்சித்திற்கு உரிமை உண்டு
பெரியாரை விமர்சிக்க கூட செய்யலாம் அது அவர் விருப்பம்.. பெரியாரே நானே சொன்னாலும் உன் அறிவேற்காததை ஏற்காதே என்றுதான் சொன்னார்..
..
பெரியாரை விமர்சிக்கவே கூடாதா என்றால் விமர்சிக்கலாம் கேள்விகேட்கலாம் அது உங்களுக்கு சரியானதாக, அவரின் கொள்கை அரசியல் உங்கள் அறிவு ஏற்றுக்கொள்ளாததாக மாற்றுகருத்தில் பலமாக விசுவாசம் உள்ளவராக இருக்கவேண்டும்.. ஆனால் மதில்மேல் அமர்ந்துக்கொண்டு சஞ்சலத்தோடு இருநிலைப்பாட்டை எடுக்ககூடாது..
திரு.பா.ரஞ்சித் பெரியார் படத்தை வைக்க மறந்துவிட்டேன் என்பதை ஏற்கமுடியாது.. பெரியாரை எதிர்ப்பதோ ஆதரிப்பதோ அவரின் விருப்பம்.. ஆனால் தவறுதலாக விடுபட்டுவிட்டதென்பது சமாளிப்பதே தவிர வேறில்லை..
ஏனெனில் பெரியாரை மறந்த நிலை இப்போது தமிழகத்தில் இல்லை..
..
இப்போது கூட
தன் மகள் காதலித்தால் 24 மணிநேரத்திற்குள் தற்கொலை செய்துக்கொள்வேன் என்கிற மதவெறியர்கள் இருக்கிறார்கள்..
தன் மகள் தன் ஜாதி பையனையோ அல்லது தன்னைவிட மேல்ஜாதி பையனையோ காதலித்தால் சாகமாட்டான் தன்னைவிட தாழ்ந்தஜாதி பையனை காதலித்தால் உயிரைவிடுவானாம்.. இப்போது கூட பெரியார் தான் தேவைபடுகிறார்.. மத,சாதீய வெறியர்களின் பங்கை அவ்வளவு குறைவாக மதிப்பிட முடியாது மெல்ல கொல்லும் விசம் போல் அவர்களின் செயல் அதற்கு அரசியல் காரணத்தை/ஆதரவை பெற முயற்சிக்க தங்களின் உரிமைகளை இழந்தாலும் பரவாயில்லை மீண்டும் கற்காலத்திற்கு/அடிமைத்தனத்திற்கு சென்றாலும் பரவாயில்லை என நினைக்கிற கூட்டம் சிறிய அளவில் எனினும் மிகவும்,ஆபத்தானவர்கள்..
..
இவர்களின் சொல்,செயலுக்கு மக்கள் அரசியல் அங்கீகாரம் அளிக்கவில்லையென்றாலும் காலபோக்கில் சிறிய சலனத்தை மக்கள் மனதில் விதைத்திட்டே போகிறார்கள் சிறியளவில் மாற்றத்தை தரும்.. பெரியாரிய கருத்துக்களை சினிமாக்களில் என்றில்லை சமூகதளங்களில் பேச விவாதிக்க பெரிய அளவில் எடுத்துச்செல்லவேண்டும்..
..
மத ஜாதீய நிழலில் நின்றுக்கொண்டு பரந்தமன்மையோடு செயல்படுவதாக சொல்வது ஒருவகை போலித்தனம்.. எதிர்ப்பதோ ஆதரிப்பதோ வெளிப்படையான/உண்மையான செயலாக இருக்கவேண்டும்.. சினிமா நிறைய சமரசங்களுக்கு உட்பட்டே எடுக்கவேண்டிவரும் அதில் கிடைக்கிற சந்தர்ப்பத்தை பயன்படுத்த ரஞ்சித் என்றில்லை நல்சிந்தனையாளர்கள் சமூக அக்கறையுள்ளவர்கள், சமூகம் சமநிலையை அடையவேண்டும் என்பவர்கள் தாமாக முன்வரவேண்டும்..
..
ஆலஞ்சி மன்சூர்
Thursday, September 1, 2016
பகுத்தறிவு..
ஸ்டாலின் மனைவி கோவில் கோவிலாக போகிறார் அமைச்சர் செல்லூர் ராஜூ..
..
கொள்கையைப்பற்றி பிறகு பேசுவோம்.. ராஜூவை மக்கள் தேர்தெடுத்ததும் அமைச்சராக்கியதும்.. மக்கள் பிரச்சனைகளை தீர்க்கவே தவிர ஸ்டாலின் குடும்பம் கோவிலுக்கு செல்வதை கணக்கெடுக்க அல்ல.. மாறாக மக்கள் வரிப்பணத்தில் உங்க ஆத்தா புகழ்பாடவும் அல்ல..
..
சபை உறுப்பினர்களின் குடும்பங்களை பற்றி சட்டசபையில் பேசவேண்டியதில்லை அதே போல் ஜெயலலிதா வின் முந்தைய கால குடும்பவிடயங்களை பற்றி பேச அமைச்சர் தயாரா..என கேள்வி எழுந்தால் அமைச்சர் பதவி அமாவாசை வரை காத்திருக்காது... தனிநபர் விருப்பு வெறுப்புகளை பேசகூடிய இடமல்ல சபை மக்களின் உணர்வுகளின், தேவைகளின் அடிப்படையில் இயக்கவேண்டும்..
எங்கள் ஆசான் #பெரியார் தேர்தெடுக்கப்பட்டவன் அயோக்கியன் என்றால் தேர்தெடுத்தவன் முட்டாள் என்றார்.. இங்கே முட்டாள்களை அவசரகதியில் ஆலோசிக்காமல் அனுப்பியிருக்கிறோம்.
..
#பகுத்தறிவு..
நாத்திகம் மட்டும் பகுத்தறிவு என நினைக்கிற மடமை.. அமைச்சர் உளறலில் தெரிகிறது.. திக விலிருந்து திமுக பிரித்தபோதே ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்றார் அண்ணா.. திமுகவில் ஆரம்பம் தொட்டே இருப்பவர்களில் ஆத்திகர்களும் அடங்கும் நிறைய பேர் கடவுள் மறுப்பை ஏற்காத அதேவேளையில் பெரியார் சொன்ன கருத்தில் உடன்பட்டு செயல்படுகிறவர்கள் அதிகம் பேரை காணலாம்..
ஏன் பெரியார் கூட மத கடவுள் நம்பிக்கை உள்ளவர்களை புறக்கணித்ததில்லை.. ராஜாஜி கல்கி என அடுக்கி கொண்டே போகலாம்..
கல்கி கிருஷ்ணமூர்த்தி இல்லதிருமணத்திற்கு பெரியார் சடங்கெல்லாம் முடிந்தபிறகு சென்று மணமக்களை வாழ்த்தினார் எப்படி தெரியுமா குங்குமத்தை எடுத்துவரச்சொல்லி நெற்றியில் இட்டு வாழ்த்தினார்.. கல்கியின் உதவியாளர் இதை நம் பத்திரிக்கையில் படத்தோடு போட்டு பெரியாரின் இரட்டைவேடம் என தலைப்பு இடலாமென்ற போது கல்கி சொன்னார்..பெரியார் நமக்காக நம் மனம் நோக கூடாது என்பதற்கு திருமணம் எல்லாம் முடிந்து வந்து வாழ்த்துகிறார்.. பெரியார் தன் கொள்கையை மற்றவர்கள் மீது திணிப்பவரல்ல மற்றவர்களின் நம்பிக்கைக்கு மதிப்பளிப்பவர்.. அதே வேளை கொள்கையில் கடவுள் மறுப்பில் உறுதியானவர் என்றார்..
..
அடுத்தவரின் நம்பிக்கையை எதிர்ப்பதென்பது வேறு அவரின் நம்பிக்கைகளுக்கு /அவர்களுக்கு மதிப்பளிப்பது என்பது வேறு..
இந்த கூமுட்டைகள் எல்லாம் அமைச்சர்களாக வலம் வருவதிலிருந்தே அரசின் யோக்கியதையை அறிந்துக்கொள்ளலாம்
..
#அரைகுறைகள்_அமைச்சரகலாம்..
..
ஆலஞ்சி மன்சூர்
Subscribe to:
Posts (Atom)