Thursday, November 2, 2023
Sunday, October 29, 2023
திராவிடம்..
திராவிடம் என்னவென்று தெரியாதவரெல்லாம் அ.தி.மு.கவின் பொதுச்செயலாளராக இருப்பது எவ்வளவு அசிங்கம் .. அதிமுக ஆரம்பித்தபோது கலைஞர் சொன்னது தான் ஞாபகம் வருகிறது.. சிங்கத்திற்கு முன் "அ" சேர்த்தால் வருவதுதான் ..
..
அறிவுடை இயக்கமாய் ஆரம்பிக்கப்பட்ட கட்சி மகோரா எனும் சாயபூச்சுகாரனின் அலங்கோலத்தால் மக்களின் கேளிக்கை மயக்கத்தில் மதியிழந்து நின்றதால் இன்றைய அவலங்களுக்கு நாமும் சாட்சியாகிறோம்.. இனப்பகைவர்கள் கூட நம் அறிவின் முன் மதிமயங்கி நின்றதெல்லாம் காலம் நமக்கு போதித்திருக்கிறது.. எதையும் அறிவுக்கொண்டு பார் எனச் சொல்லி வளர்ந்த தமிழர்கள் இன்று அறிவிலிகளால் தலைக்குனிவை நேரிடும் அவலம். திராவிடம் ஆரியம் அதெல்லாம் புராணத்தில் வரும் என உளறிவைத்து தன்னை தற்குறியாய் அடையாளப்படுத்தியிருக்கிறார் பழனிசாமி
..
திராவிடம் இந்த மண்ணின் இனம்.. இந்தியாவிற்கு உரிமை கொண்டாட வேண்டுமெனில் தமிழர்களை தவிர யாருக்கும் தகுதியில்லை என அண்ணல் அம்பேத்கர் சொன்னதையாவது படித்திருக்கிறாரா.. இந்தியாவின் பூர்வகுடிகள் திராவிடர்கள் என மம்தாவிற்கு இருந்த புரிதல் கூட பழனிசாமிக்கு இல்லாமல் போனதேன்.. திராவிடம் என்ற சொல் தேசிய கீதத்திலேயே இருப்பது கூட இந்த அரைவேக்காட்டிற்கு தெரியாதா.. அண்ணாவிற்கு பிறகு அதிகம் படித்தவன் என பெருமைபேசிய பழனிக்கு திராவிடம் ஆரியம் என்றால் தெரியாதா.. அண்ணாவின் "ஆரியமாயை" யாவது தெரியுமா..
..
திராவிட இயக்க வரலாறு தெரியுமா.. இதெல்லாம் இவரைச் சொல்லி என்ன பயன்.. அதிமுக நிறுவனர் மகோரா எனும் எம்ஜிஆருக்கே தெரியாதே.. அடிக்கிற காற்றில் கோபுர உச்சியில் அமரும் இலைகள் .. கலசமாகாது.. ஆரிய திராவிட போர் ஈராயிரம் ஆண்டு வரலாறும் கொண்டது .. பழனி போன்றவர்கள் திராவிட இயக்க வரலாறு தொகுப்பை படிக்க வேண்டும் ..
வரலாறு தெரியாதவர்கள் விவரகேடுகள், வழிதவறிய பாதையில் இனியேனும் திராவிடம் குறித்து அறிந்துக்கொள்ளுங்கள் பழனிசாமி அவர்களே.. பெரியாரை பேரறிஞரை, திராவிட இயக்க முன்னோடிகள் படியுங்கள்.. இல்லையெனில் அண்ணாவின் பெயரை கட்சியிலிருந்து நீக்கிவிட்டு ஆரிய அடிவருடிகளாக இருங்கள்
..
ஆலஞ்சியார்
Saturday, October 7, 2023
Wednesday, October 4, 2023
Saturday, September 30, 2023
வழிநெடுக பார்க்கிறேன் உன்
அமைதி அர்த்தங்கள் பொதிந்ததாய்
ஆரவாரமற்ற மொழியில் கதைக்கிறது.. உன் விழிகளில் பெரு வெளிச்சம் தமிழகத்தின் சுடரொளியாய் ஜொலிக்கிறது.. எதையும் பகுத்தாயும் தெளிவு ஆசானை நினைவுபடுத்துகிறது ..
..
எத்தனை சதிகள், தொடர் இடையூறுகள்.. பாசிசத்தின் சூழ்ச்சிகள் , கூட இருப்பவரின் சனாதன சேட்டைகள், அதிகாரம் வந்தவுடன் தான் என்ற அகந்தையில் திரியும் அற்பர்கள் ..ஊடகம் என்ற பெயரில் உமிழும் வதந்திகள், பூச்சாண்டி காட்டும் ஒன்றிய ஏவல்கள்
இவையனைத்தும் உன் அழுத்தமான அமைதி முன் அடிப்பட்டு போகிறது..
..
உன் வெற்றிடத்தை நீயே செதுக்கியதென்பதை அறியாதோர் புலம்புகிறார்கள்.. உன் அடுத்த அடி எதுவென யோசிப்பதற்குள் நீ சதுரம் கட்டுகிறார..
உன் நிழலை கண்டாலே பதறுகிறது பகைவர் கூட்டம் உன் செயல்கள் மக்களை அடையும் ஒவ்வொரு நொடியும் எதிரிகளின் விலா எலும்பு ஒடிகிறது.. எனக்கு உன் எதிரிகளை கண்டு அச்சமில்லை எதை நீ உன் பீச்சாங்கையில் டீல் செய்வாய்..
..
உன் கூட இருப்பவர் நீ அதிகாரம் தந்து அழகுபார்த்தவர்கள் உன்னால் நியமனம் செய்யபட்டவரகள் செய்யும் அழிச்சாட்டியம் ஆரவாரம் உன் அமைதி முன் அகங்காரமாய் நிற்கிறது ..
பொறுப்புணராதவர்களின் செயல்கள் கழகத்தின் கொள்கையை கேள்வியாக்குகிறது.. தலித் என்பதற்காக நிற்கவைக்கும் குறியீடுகள் பாசிசத்தின் நிழலை காட்டுகிறது எவனும் உயர்ந்தவனில்லை எவனுக்கும் தாழ்ந்தவனில்லை என்ற கோட்பாடு சிதைகிறது தலைவா..
..
பொறுப்பென்பது எதுவென்று தெரியாதவர்களை அகற்றி நிறுத்தி திராவிடத்தை உணர்ந்த, சித்தாந்த தெளிவும் அறிவும் பெற்றவர்களை முன்னிறுத்த வேண்டும்..
திமுகவில் ஊடுறுவிற்கும் சனாதனவாதிகளை பதவிக்காக எதையும் செய்யும் பித்தர்கள் இனங்கண்டு "களையெடுத்தல்" அவசியம்
..
நல்லதை விதைத்தால் அறுவடையின மகிழ்ச்சி வரும்.. நாம் தீய "களை"களையும் கூடவே வளர்ப்பது தீங்கு தரும்
..
ஆலஞசியார்