Thursday, September 29, 2022

அரசியல் செய்வது எங்களுக்கு பழகிப்போன செயல் .. நீங்கள் ஆரம்பபள்ளியில் எழுத்துகூட்டி படிக்க தொடங்குகிறீர் .. நாங்கள் பேரறிஞரிடம் பாடம் பயின்று, முத்தமிழறிஞரின் கைப்பிடித்து வளர்ந்தவர்கள் ..
..
ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு தடை கூடவே விசிக அமைதி பேரணிக்கும் .. எச்.ராசா சொன்னது தான்  #StalinIsMoreDangerous 🔥..
இப்போது அல்ல முன்பும் இப்படிதான் பதறினார்கள் .. கருணாநிதியிடம் ஜாக்கிரதையாக இருங்கள் என்றார் பார்பனர்கள் ராஜதந்திரி என கொண்டாடிய ராஜகோபால் ..
ஆனால் அரசியல் தெளிவற்ற "சமுதாய" அலப்பறைகள் ஸ்டாலினை வாய்க்கு வந்தபடி விமர்சித்து அரிப்பை தீர்த்துக்கொண்டார்கள் .. உண்மையில் இவர்களிடம் (முஸ்லீம்லீக் தவிர்த்து எல்லா அமைப்புகளிடம்) சமுதாயம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் ,புகழ் போதையும் பணமும்,அதிகார ஆசையும் சமூகம் மிகப்பெரிய பின்னடைவை சந்திக்க காரணமானவர்கள் .. இஸ்லாமிய நெறிகளின் படியும் இல்லை கோட்பாடும் புரியவில்லை 
ஒற்றுமை எனும் கயிற்றை பலமாக பற்றி பிடித்துக்கொள்ளுங்கள் .. யாருக்கோ சொல்லபட்டது போல நகர்கிறார்கள் ..
..
மற்றொரு விடயம் CNN NDWS18 
ஊடகங்களின் சார்பில் சென்னை – டவுன் ஹாலில் நடைபெற்று வரும் கருத்தரங்கில் நேற்று 'திராவிட மாடல் என்றால் என்ன என்பதை மிக தெளிவாக விளக்கினார்  மாண்பிமை தமிழ்நாடு முதலமைச்சர் 
#முத்துவேல்கருணாநிதிஸ்டாலின்

நூறு ஆண்டுகளுக்கு முன் அனைத்து சமூக மக்களும் கல்வி – வேலைவாய்ப்பில் பெற்றிருந்த நிலையையும், இன்று அடைந்துள்ள வளர்ச்சியையும் ஒப்பிட்டுப் பார்த்தால் திராவிட மாடல் சிந்தனையின் வெற்றி தெரியவரும். வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது எனும் ஒரு காலம் இருந்தது. ஆனால் இன்று வடக்கை விட தெற்கு பல்வேறு துறைகளில் முன்னேறி இருக்கிறது. இதுதான் திராவிட சிந்தனைகளின் வெற்றி!..

ஏற்றுமதியை கணக்கிடுவது வேறு மாடல்; மக்களின் ஏற்றத்துக்கு வித்திடுவது திராவிட மாடல்!
இறக்குமதியை கணக்கிடுவது வேறு மாடல்; இரக்கச் சிந்தனையோடு திட்டங்கள் தீட்டுவது திராவிட மாடல்!
ஒற்றை சிந்தனைக் கொண்டது வேறு மாடல்; பரந்த ஒருமைச் சிந்தனையைக் கொண்டது திராவிட மாடல்! என்றார் 
..
இது சிறப்பென்னவென்றால்
இந்தியஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம், “தமிழ்நாட்டின் முன்னேற்றத்துக்கு என்ன காரணம் என்பதை இங்கு பிறந்தவர் என்ற உணர்வுடனும், #மனசாட்சியோடும் கூறுங்கள்”, என நெறியாளர் கேள்வி எழுப்பினார்..
 தமிழ்நாடு 1960ஆம் ஆண்டுக்குப் பிறகு கல்வியறிவு – தொழில்சார் கொள்கை - ஆங்கில மொழியறிவு ஆகியவற்றில் மிகுந்த கவனம் செலுத்தி, தொழில்நுட்பத் துறை மற்றும் சேவைத்துறையில் மிகவும் முன்னேறியுள்ளது.

தமிழ்நாட்டில் ஏராளமான தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டிருக்கும் அதே நேரத்தில், விவசாயமும் பெருமளவு வளர்ச்சி பெற்றுள்ளது.
என்று தெரிவித்தார்..
..
எல்லா நேரமும் பொய் சொல்லிக்கொண்டிருக்க முடியாது என நிர்மலா அறிவார் .. ஏனெனில் அங்கே கேள்வியை எழுப்புகிறர் அனைத்து தரவுகளையும் கையில் வைத்திருக்கிறார் ஒட்டுமொத்தமாக மானம் கப்பலேறிவிடும் என்பதை அறிந்து 60 என துவங்குகிறார் .. 
..
 தளபதி ஸ்டாலின் ஆட்சி பொறுப்பிற்கு வந்ததற்கு பிறகு நிறைய இடையூறுகள், கவர்னர் முதல் தேடபடும் "நல்லவர்கள்" வரை எதையாவது உளறுவதும் அதை ஊடகங்கள் பெரிதாக ஊதி பெருக்குவதும் கடைசியில் ஊசியில் மாட்டிய பலூன் போல ஆவதும் வாடிக்கையாகிவிட்டது ..
பாஜக தலைவர் நட்டா அடிப்படை அறிவு கூட இல்லாதவராக இருக்கிறார்.. PFI தடை செய்தாகிவிட்டது இனி டாலர் மதிப்பு உயருமாம் .. முன்பெல்லாம் விபரம் தெரிந்த "முரளிமனோகர் ஜோஷி" அத்வானி வாஜ்பாய் போன்றவர்கள் பாஜகவில் இருந்தார்கள் அவர்கள் மதத்தை பிடித்துக்கொண்டு உயர எழும்ப நினைத்தார்கள் .. சில நேரமெங்கிலும் விபரமாக பேசினார்கள் இப்போது  எந்த கல்லூரியில் படித்தார் என தெரியாதவர் முதன்மை அமைச்சர் 
வரலாறு முழுக்க பொய்களால் கட்டமைக்கபடும் மாயை .. அதிகாரத்தை  கைப்பற்ற எந்தநிலைக்கும் போவோம் .. நீதிமன்றங்களும்  தனிஅதிகாரம் கொண்ட புலனாய்வு அமைப்புகளும், தேர்தல் ஆணையமும் போதும் நாடு எக்கேடு கெட்டால் என்ன என்கிற நிலை .. 
..
எல்லா அமைப்புகளுக்கும் தடை என்பதலிருந்து சட்டத்தின்/நீதிமன்றத்தின் மூலம் ஊர்வலம் நடத்தலாம் என திட்டமிட்ட பாசிச சூழ்ச்சியை "திருமா" எனும் காயை வைத்து மிக சரியாக தடுப்பாட்டம் ஆடியிருக்கிறார் ..சர்வதேச செஸ் ஆட்டத்தை நடத்திகாட்டியவர் .. மீண்டும் குறுக்குவழியில் யோசித்தால் "முன் எச்சரிக்கை" நடவடிக்கை வரும் ..
நாங்கள் இந்திய ஒன்றியத்திற்கு எப்படி கட்சி நடத்தவேண்டும் என சொல்லி தந்தவர்கள் .. கரை வேட்டி, தேர்தல் அறிக்கை, என இந்தியா அதுவரை அறிந்திராதவைகளை அறிமுகம் செய்தவர்கள் .. ஜனநாயகத்தோடு கட்சி நடத்தும் இந்தியாவில் ஒரே கட்சி உட்கட்சி தேர்தல் முதல் தலைவர் தேர்தல் வரை ஜனநாயகமாய் திகழ்பவர்கள் .. முன்பு தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன் இந்திய ஒன்றியத்தில் தேர்தலை சந்திக்க தகுதியுடைய ஒரே கட்சி திமுக தான் என்றார் காரணம் நியமனங்களில் கட்சி நடத்துவது கூட தேர்தல் விதிமுறைகளுக்கு  எதிரானது ..
..
திமுக எதை செய்தாலும் அதில் பொருள் பொதிந்திருக்கும் அவசரகாரர்களுக்கு இது புரியாது..
..
ஆலஞ்சியார்

Wednesday, September 28, 2022

 சுய பரிசோதனை செய்துக்கொள்ளுங்கள் ..
முதலில் பெட்ரோல் குண்டு வீசியது பாஜகவினராக தான் இருக்குமென பெரும்பாலானோர் நம்பினர் .. அவர்கள் வேலைதான் இதற்கு நிறைய சம்பவங்களில் தங்கள் உடமைகளை எரித்து நாடகமாடியவர்கள் என்பதால் பொது சமூகம் பாஜகவின் செயலாக இருக்குமென நம்பியது .. வரும் செய்திகளும் கைதும் SDPI சார்ந்த  முஸ்லிம் இளைஞர்கள் இதில் சம்பந்தபட்டிருப்பது தெரிகிறது  சும்மாவே முஸ்லிம் மீது "தீவிர"மனப்பான்மை கொண்டிருப்பவர்கள் இப்போது இதோ பார் என கேள்வி எழுப்புகிறார்கள் 
..
திமுக வந்தாலே முஸ்லிம்கள் ஆயுதம் எடுப்பார்கள் குண்டு வீசுவார்கள், ஜெயா இருந்தபோது  ஒன்பது துவாரங்களையும் பொத்திக்கொண்டிருப்பார்களென பேச தொடங்கியிருக்கிறார்கள் .. திமுக யாருக்கும் அணுசரனையாக இல்லை என்பதும் சட்டத்தின் நிழலில் நின்று எல்லோருக்கும் பாதுகாப்பு அளிப்பதும் தவறிழைத்தவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதும் என தன் கடமையை செய்கிறது .. ஆனால் 
பாஜக வந்துவிடும் என பயமுறுத்தி எங்களை திமுகவிற்கு வாக்களிக்க வைத்தீர்களென சிலர் அறியாமையில் உளறுவதும் கேட்க முடிகிறது ..
..
இஸ்லாமிய இயக்கங்கள் ஜனநாயகத்தில் நம்பிக்கை கொள்ளவேண்டும் .. பல பிரிவுகளாக இருப்பதும் எல்லாவற்றிக்கும் வன்முறை தீர்வாகும் என முட்டாள்தனமாக நம்புவதும் சங்கடத்தை தரும்..  பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை கண்காணிக்க வேண்டும் ..யாரோடு சேர்கிறார்கள் எங்கே சுற்றுகிறார்கள் .. யாரோடு சகவாசம் என அறிந்து அவர்களை நல்வழிபடுத்த வேண்டும் .. 
இல்லையெனில் பிள்ளைகள் சிறையிலும் குடும்பம் நீதிமன்ற படிக்கட்டுகளில் நிற்கவேண்டி வரும் .. நான்கு பேரின் செயல் மொத்த இஸ்லாமியர்களுக்கும் கெட்ட பெயரை பெற்று தரும் ..
அரசியல் வேண்டாம் என்பதல்ல.. அரசியலை அறிந்து ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையோடு சரியான வழியில் மக்களின் ஆதரவோடு ஒற்றுமையாக அரசை எதிர்த்தோ ஆதரித்தோ அரசியல் செய்ய பழகுங்கள் .. அரசியல் தெளிவு .. நம் சமுதாயம் எதில் பின்தங்கியிருக்கிறது.. கல்வியின் அவசியம்  இது போன்ற சமுதாய முன்னேற்றத்திற்கான பணிகளில் கவனம் செலுத்தவேண்டும் ..
..
பெட்ரோல் குண்டு வீசிய வழக்கு மற்றும் பஸ்கண்ணாடி உடைத்த வழக்கு என ஆறு வழக்குகளில் இரண்டில் "இருவர்" எஸ்டிபிஐ கட்சி பொறுப்பில் உள்ளவர்கள் கைதாகியிருக்கிறார்கள் .. பெட்ரோல் குண்டுதானே அதிக சேதாரமில்லை என நினைக்கவேண்டாம் .. சேதாரம் என்னவோ ஒட்டுமொத்த சமுதாயத்திற்கு .. இரண்டு முட்டாள்களின் செயல் .. இது தொடர்ந்தால் சமுதாயமே "குற்றப் பரம்பரை" கூட்டில் நிறுத்தப்படும்
..
அரசியல் தேவை அது ஒன்றுபட்ட சமூகநலன் சார்ந்ததாக இருந்தல் வேண்டும் ..எடுத்தேன் கவிழ்த்தேன் என்றல்ல..  எப்போது எப்படி பகைவரை வீழ்த்துவதென அறிந்து யார் வந்தால் நன்மை பயக்குமென அறிந்து யார் வரகூடாதென தெளிவாக உணர்ந்து ஜனநாயக முறையில் " வாக்கு"  எனும் பெரும் ஆயுதம் கொண்டு வீழ்த்தவேண்டுமே தவிர .. வன்முறையில் அல்ல..
..
புரிந்தால் நல்லது 
..
ஆலஞ்சியார்

Sunday, September 25, 2022

தங்களுக்கு  உடனே நீதி கிடைக்கவேண்டும் ..நாங்கள் சொல்வதை உடனே கேட்கவேண்டும்,.. பார்த்தாயா இவர் மெல்ல பாசிசத்திற்கு செவி சாய்கிறார்.. ஆர்எஸ்எஸ் பிடியில் திமுக அரசு.. விடிந்தும் விடியவில்லை என்றெல்லாம் சமுதாய அலப்பறைகள் .. இஸ்லாத்தின் நவீன பாசறை தம்பிகள் முனகுவதும் முழங்குவதும் முழுவதும் அறிந்தாற்போல் சமூக வலைதளங்கள் தீர்ப்பெல்லாம் எழுதுகிறார்கள் .. 
..
திமுக துரோகம் செய்துவிட்டது திமுக நமக்கான பாதுகாப்பை தரவில்லை திமுக நம்பி பலனில்லை என "தீர்க்கதரிசிகள்" வாய்மொழி தீர்ப்பளிக்கிறார்கள் ..
உண்மையில் பரிதாபகரமாக இருக்கிறது விடுதலைக்கு முன்பு தீர்மானிக்கும் இடத்திலிருந்த சமூகம் இன்று இந்த நிலையில் இருப்பதற்கு யார் காரணமென இப்போதும் சிந்திக்க நேரமில்லாமல் பழி சொல்வதிலேயே பகுதி வாழ்வை இழக்கிறார்கள் ..
இப்போதும் சொல்கிறோம் திமுகவை நம்பவேண்டும் என யாரும் சொல்லவில்லை.. உங்களுக்கு சௌகரியமான இடத்தில் சேர்ந்து  பயணிக்கலாம் அதற்கு முன்பு இப்போதிருக்கும் 
நிலையை நினைவில் கொள்ளுதல் நலம்..
..
சமுதாயம் ஏன் பிரிந்து கிடக்கிறது 
யார் காரணம், எதனால் இந்த பின்னடைவு, என சிந்திப்பதே இல்லை .. எது நம்மை தடுக்கிறது 
குற்ப்பாக இளைஞர்களை வழிகெடுத்து அவர்களை மூளைச்சலவை செய்து வழிகேட்டில் நிறுத்துவது யார் ..
எதை எப்படி அணுகுவதென்று கூட தெரியாது போனதா .. சமுதாய ஒருங்கிணைப்பு ஏன் சாத்தியமாகாமல் போனது ..  மண்ணெண்ணெய் பாட்டில் வீசினால் வீரனென யார் சொன்னார்கள்..  உணர்வை வெளிபடுத்த ஆயுதம் தூக்க சொல்லி யார் கற்றுதந்தது ..
உண்மையில் பரிதாபகரமாக நிலையை எண்ணி வருத்தம் மேலிடுகிறது ..
..
பாசிசம் விரும்புவது அதுதான்.. உம்மை குற்றவாளி கூண்டில் நிறுத்தி  வளர வேண்டும்.. இதோ பார் முஸ்லிம்கள் தீவிரவாதிகள், ஜிதாதிகள், அவர்கள் இரத்தத்திலேயே ஊறிபோன விடயம் .. இந்திய இறையாண்மைக்கு எதிரானவர்கள் என பரப்புரை செய்ய இது போதும் .. பகைவர்கள் கையில் இஸ்மாயில் என பச்சைகுத்திக்கொண்டு காந்தி கொலையையும் அதன் தொடர் கலவரத்தையும்  மதத்தின் பேரில் எழுதிவைக்க நினைத்ததும்  பெரியார் கூட அப்போது காந்தியை கொன்றது பார்ப்பான் என பகிரங்கமாக வானொலியில் பேசியதும் .. உத்தமர்காந்தியை கொன்றது ஊதாரி பார்ப்பான்  என கலைஞர் முரசொலியில் எழுதியதும் நினைவிற்கு வருகிறது இது அவர்களின் வரலாறு பழிகளை சுமத்த இஸ்லாமியன் வேண்டும் அதைச் சொல்லி கலவரம் நடத்த சூத்திரன் வேண்டும் கலவரத்தின் குளிர்காய வேண்டும் இதுதானே காலங்காலமாய் நடக்கிறது .. இப்போதும் அதே கட்டத்தில் தான் ..
எச்சரிக்கை..
..
மிக சாதூர்யமாக செயல்படவேண்டிய காலகட்டம் யார் பகைவர் என்பதை உணர்ந்து 
என்னவெல்லாம் சூழ்ச்சிவலை பின்னுகிறார்கள் .. இந்நாட்டில் தற்போதைய அவஸ்தை என்ன.. நெடுங்காலம் தீட்டிய திட்டத்தை நம் கைகளை கொண்டே நிறைவேற்றிட நேரம் பார்த்து காத்திருக்கிறார்கள் .. தொப்புள்கொடி உறவுகளை கூர்தீட்டுகிறார்கள் .. ஒவ்வொரு பாஜகவினரும் வாய்திறந்தாலே மதம்,வாய்கூசும் சொல், இஸ்லாமிய  வெறுப்பு .. பிற மதத்தை இப்படி பேசிவிட்டு உயிரோடு இருக்கமுடியுமா என தூண்டிவிட்டு வேடிக்கை பார்த்தல் 
இந்நாடு அறபாதையிலிருந்து விலகி வெகுகாலமாகிவிட்டது..
இப்போது வாழவே தகுதியற்றதாகி கொண்டிருக்கும் வேளையில் .. நல்வாய்ப்பாய் தென்னகத்தில் காலூன்ற முடியாதவாறு திராவிட சித்தாந்திகள் அறிவுக்கண்ணை திறந்து எதையும் யோசித்து செய் என அறிவூட்டியதால் இன்று கொஞ்சமேனும்  நிம்மதி பெருமூச்சு விடுகிறோம் ..அதையும் கெடுக்கதான் "பலி ஆடுகளை" கொண்டு பேயாட்டமாட நினைக்கிறார்கள் .. எரிகிற நெருப்பை அணைக்காவிட்டாலும் எண்ணெய்யாய் இல்லாமல் இருந்தால் போதும் 
..
தமிழ்நாட்டில் மிக பெரிய கலவரத்தை நடத்திட முயல்கிறார்கள் 
திமுக அரசு கவனத்தோடு செயல்படும் என்ற நம்பிக்கை இருக்கிறது .. நம்பிக்கையில்லாதோர் மாற்றுபாதையில் செல்லவும்..
ஜனநாயகத்தின் கண்கள் கூர்மையானது 
எல்லாவற்றையும் உள்வாங்கும் .. சரி செய்கிற நேரத்தில் சரி செய்யும் ஏனெனில் இங்கே வெகு மக்கள் விரும்புவது 
சமூக நல்லிணக்கம் .. சகோதரத்துவம், சமூகநீதி .. இவையாவும் தான் மனித சமூக மேன்மைக்கு வழிவகுக்கும் ..
தோக்கு தூக்க எம்மை பழக்கவில்லை 
அறிவு கொண்டு எதையும் வெல்  என்று தான் திராவிடம் சொல்லி தந்திருக்கிறது ..
நம் முதல்வர் 
நமக்கானவர் 
நன்மை நிறைந்தவர் ..இங்கே பாசிசத்திறேகும் பாசாங்கிற்கும் இடமில்லை கலவரம்  செய்வோர் மீது கருணைகாட்ட முடியாது  கடுமையான நடவடிக்கைதான் தேவை.. கசடுகளை களைவோம் ..  நல்லதை விதைப்போம்
..
இங்கே சாதி மத பிணி நீங்கி 
நல்லதொரு சமுதாயம் படைப்போம் ..
..
ஆலஞ்சியார்

Tuesday, September 20, 2022

நாராயணகுரு 
உயர்ஜாதியினருக்கான குளத்தில் குளித்துக்கொண்டிருந்தததை அறிந்து அவரை அடிக்க "சிலர்" வந்தனர் .. என்னை தொட்டு அடிப்பதால் தீட்டுபடாதா என கேட்டார் .. பொருள் விளங்க கொஞ்சம் நேரம் பிடித்தது அதே போல் இன்று ராசாவை திட்டுகிற 
கேவலமாக பேசுகிற சில மூத்திரம்குடிகளுக்கு புரிய சில காலம் தேவைபடும் ..
..
அடி தடி கலவரம் இவைகளை சொல்லி தமிழ் சமூகத்தை வளர்த்தெடுக்கவில்லை ..படி படி என எம்மை தலையில் கொட்டி புரிகிறமாதிரி பெரியாரும் பேரறிஞரும் பேரறிவாளனும் சொன்னதால் தான் இன்று கம்பெடுத்துவரும் காலி குடங்களை கண்டு கண் சிமிட்டி சிரிக்கிறோம் 
முதலில் மநுநீதியை படியுங்கள் ஏன் அப்படி எழுதினான் .. காலகாலமாக நம்மை சூத்திரனாக எப்படி அடிமைபடுத்தியிருந்தான் என விளங்கும். உடனே பெரியாரை தேடுவாய் அப்போது எப்படி அரணாய் நம்மை காத்து நின்றார் பார்பன கும்பலின் சதிராட்டத்திலிருந்து எப்படி மீட்டார் என புரியும் ..
..
படி என்றது திராவிடம் 
சிந்தி என்றது திராவிடம் 
எவன் சொன்னாலும் உன் அறிவேற்காததை ஏற்காதே என்றது திராவிடம் ..
எம் இனிய எதிரிகளே..
இடையில் வந்தவன் பணத்தாசையும் பதவி ஆசையும் காட்டி வழிகெடுக்கிறான் 
சிந்தி ..
நாளை நடுத்தெருவில் நிற்கும் போதும் உனக்கு திராவிடமே துணை நிற்கும் ..
..
ஆலஞ்சியார்

Saturday, September 17, 2022

எல்லோரும் பெண்களை 
"அழகு" பொருளாக்கி கவிதைபடித்து கொண்டிருந்தபோது 
இந்த "கிழவன் " மட்டும் 
உரிமை குறித்து பேசிக்கொண்டிருந்தான் 
"நீங்கள் ஏரோப்ளேன் ஓட்டவேண்டாமா .." 

எல்லோரும் 
பெண்களை சம்பளமில்லா வேலைக்காரியாக 
நினைத்த போது 
இந்த கிழவன் மட்டும் 
கரண்டியை பிடிங்கிக் கொண்டு 
புத்தகத்தை கொடு என்றான் 
..
இந்திய தர்மம் குற்றங்களால் ஆனது மநுநீதி உள்ளவரை ஒழுக்கம்  நியாயம் நேர்மை நீதி பெற முடியாது..  தமிழ் படித்தவனெல்லாம் சாமியாராய் போனான் என்றார் இந்து லாவில் 
பிராமணா சூத்திரா இரண்டுதான் உண்டு ..
நீங்கள் என்னை என்னதான் சொன்னாலும், என்னதான் செய்தாலும்,
உங்கள் ஒருவர் மீதும் தனிப்பட்ட முறையில்
ஒரு துளி கோபமோ, வெறுப்போ கொள்ள மாட்டேன். 
வலிக்குமென்று அஞ்சிக்கொண்டு இருக்காமல், ஒரு மருத்துவர் எப்படி உங்களுக்கு ஊசி போடுகிறாரோ, தேவைப்பட்டால் எப்படி அறுவைச் சிகிச்சை செய்கிறாரோ, அப்படியே நானும் அதிக உரிமை எடுத்துக் கொண்டு, உங்களை எல்லாம் விமர்சிக்கிறேன் என்று எடுத்துக் கொள்ளுங்கள். 
..
ராமசாமிக் கழுதை செத்துப் போய்விட்டது  ராமசாமியின் மனைவி நாகம்மாள் அவிசாரி என்றும் எழுதியிருந்தார்கள் அதற்கவர்
இராமசாமிப் பெரியார் சிரஞ்சீவியாய் இருக்க வேண்டும் என்று எழுதியிருந்ததைப் பார்த்து சந்தோஷப்பட்டிருந்தேனேயானால், இராமசாமிக் கழுதை செத்துப் போய்விட்டது என்பதற்கு நான் வருத்தப்பட வேண்டும். என்றார் .. பெரியார் எதைப்பற்றியும் கவலைபடாதவர் மனிதபற்றை தவிர வேறொன்றும் அறியார் எம் பெரியார்
..
பெரியார்..
இரண்டு விடயங்களை மிக கடுமையாக எதிர்த்தார் .. ஒன்று சாதிய அடுக்கு மற்றொன்று ஆணாதிக்கம்..  இரண்டுமே பெண்களுக்கெதிரானது .. சாதிய கொடுமை ஆண்களை மட்டுமல்ல பெண்களை மிக கடுமையாக கையாண்டது மதமெனும் போர்வையில் உயர்ஜாதி பெண்கள் கூட வரையறைக்குள் கொண்டுவந்து நிறுத்தியிருந்தது .. சாஸ்திரங்கள் என்ற பெயரில் பெண்களுக்கெதிரான செயல்களை நியாயபடுத்தியது .. ஜகத்குருக்கென்று தங்களை அடையாளபடுத்திக்கொண்டவர்கள் தெய்வத்தின் குரலாய் .. பெண்களின் மீதான அடக்குமுறையை சொன்னார்கள்.. வேலைக்கு போகும் பெண்களை விபச்சாரியென்று பேசினார்கள் மாதவிடாய் பெண்கள் வெளியே வருவதால் தான் லோகம் கஷ்டபடுகிறதென்று "மகாபெருசுகள்" உளறிவைத்தன.. பெண்களை போதை பொருளாகவே சமூகம் பார்த்தது .. ஆண்களை விட  எல்லாவற்றிலும் தகுதி குறைந்தவளென்றே "எல்லா மதமும்" சொன்னது ..
பெண்களை ஆண்களுக்காகவே படைக்க பட்டிருப்பதாக தெய்வ செய்திகளை கொண்டுவந்தவர்கள்..? கூட சொன்னார்கள் ..
சமைத்து போடுவதற்கும்  தங்களின் குல வாரிசை சுமைக்க.. களைத்துப்போய் வந்தால் கால் அமுக்கிவிட.. சம்பளமில்லாத வேலைக்காரியாக நினைத்தார்கள்..பெண்களை தங்களின் சுகத்திற்காக சந்தோசத்திற்காக படைக்கபட்டதாக நினைத்தார்கள்..
..
பெரியார் தான் பெண்களின் கல்வியின் அவசியத்தை சொன்னார் ..ஆண்குழந்தைகளை படிக்கவைக்காவிட்டாலும் பெண் குழந்தைகளை படிக்கவையுங்கள் அதற்கான வசதி உங்கள் ஊரில் இல்லையென்றால் வெளியூர் சென்று கூலி வேலை செய்தாவது படிக்கவையுங்கள் என்றார்.. பெண்களுக்கு ஆண்களுக்கு உள்ளதுபோல சகல உரிமையும் உள்ளதென்றார் 
பூர்வீக சொத்தில் பங்கு கொடுக்கவேண்டுமென்றார்... (இதே கருத்தை அண்ணல் அம்பேத்கர் சட்டமாக்க முற்பட்டு மசோதா தாக்கல் செய்தபோது
உயர்ஜாதியினர் கடுமையாக எதிர்த்து மசோதாவை தோற்கடித்தனர்.. பின்னர் கலைஞர்தான் இந்தியாவிற்கே வழிகாட்டி தமிழகத்தில் கொண்டுவந்து சட்டமியற்றினார் )..
பெண்களுக்கு சொத்து கொடுத்தால் குடும்ப உறவுகள் சீரழிந்துபோகுமென்று ஜகத்குருக்கள் சொன்னார்கள்..
..
பெண்கள் எல்லாதுறையிலும் வரவேண்டும் என்று ஆசைபட்டவர் ..ஆண்கள் செய்யும் அனைத்தும் பெண்களாலும் செய்யமுடியும் என்றார்.. ஆண்களை போல உடையணியுங்கள் 
பெண்கள் கையிலிருந்த கரண்டியை பிடிங்கிவிட்டு புத்தகத்தை கொடுங்கள் ..
மாற்றம் தானாய் வரும் .. எவ்வளவு தீர்க்கதரிசன பார்வை.. இன்றைக்கு  மருத்துவர் பொறியாளர் .. வழக்கறிஞர் அரசு ஊழியர்.. அரசு அதிகாரிகள்..இந்திய அரசுப்பணி.. உயரத்தில் பறக்கும் விமானி.. என்னைப்போன்ற சாமானியனின் வீட்டுப்பெண்கள் நீதிபதியாய் வர முடிந்தது இவையனைத்திற்கும் தொடக்கம் குறித்தவர் 
பெரியார்.. ஆம் பிள்ளையார் சுழியெல்லாம் போடாதீர்கள் மடமை..பெரியார் கைத்தடியை போடுங்கள் அதுவே அறிவுடைமை..
..
1938ல் பெண்களெல்லாம் ஒன்று கூடி "பெரியார்" என்றழைத்தார்கள் ..ஆம் பெண்களின் நலனுக்காகவே அதிகம் உழைத்தவர் .. பெண்களால் மட்டுமே சமூதாயத்தில் மாற்றத்தை புரட்சியை நடத்திக்காட்டமுடியும்.. என நம்பியவர் .. அவரின் முயற்சி எண்ணம் எல்லாம் 
திராவிட ஆட்சியால் நடந்தது ..
..
 இன்னமும் பெரியாரின் சிந்தனைகள் கருத்துகள் அவர் தந்த தெளிவான பாதையில் பகுத்தறிவு துணைக்கொண்டு மானுட சமுதாயம் மேம்பட சமதர்மசமுதாயம் அமைந்திட சமூகநீதியை நிலைநாட்டிட  தொடர்ந்து 
திராவிட மாடல் ஆட்சி செயல்படும் என உறுதி ஏற்போம் ..
வாழ்க! பெரியார் 
..
பெரியார்
The LEADER OF DRAVIDIAN SOIL
..
ஆலஞ்சியார்

Friday, September 16, 2022

ஜூன்3 ..
கொள்கைக்காரன் ..
பிடிவாதபோக்கு, சமசரமற்ற நோக்கு,
எவருக்கும் அஞ்சாத கொள்கை உணர்வு,
கட்சி,தலைவர் கொடி இவைதான் முக்கியம்
யாராக இருந்தாலும் சேர்ந்து பணியாற்றுவேன் என்ற உணர்வோடு  கட்டிதங்கமாய் மிளிரும் 
இயக்கத்தின் முன்னோடி 
கலைஞரின் 
#பயமறியாத_தம்பி
அன்பு உடன்பிறப்பு
பாப்பா தியாகராஜன் அவர்களுக்கு
பிறந்தநாள் வாழ்த்துகள்..
..
ஆலஞ்சியார்
ஆளுநர் மாற்றம் பாண்டேக்கள் குதூகலம் .. நடைமுறையில் வந்துபோகும் மாற்றங்களைக் கண்டு கொள்கையாளர்கள் மிரளுவதில்லை .. ஒரு முதியவர் போய் மற்றொருவர் அவ்வளவுதான்.. துணைநிலை ஆளுநர் பதவியல்ல இங்கே தமிழ்நாடு யூனியன் பிரதேசமும் அல்ல.. ஆட்டம் ஆரம்பம் என சிலர் தங்களுக்குள் சிரித்துகொள்கிறார்கள் திராவிடத்தின் நிஜஆட்டத்தை கண்டால் மிரண்டுபோவீர்கள்.   
ஆம் அவர்களுக்கே தெரியும்.. மிசாவைகாட்டி மிரட்டினால் தமிழ்நாட்டுக்கு வர விசா வாங்கவேண்டிவரும் என்றவர்கள் 
ஆட நினைத்தால் பிராமணர்கள் வாழ தகுதி இல்லாத தமிழ்நாடு என அவர்களே சொல்ல நேரிடுமென அறிவார்கள் இப்போதே திமுக ஆட்சிக்கு வந்தாலே பிராமணாள் எதிர்ப்பு வலுப்பதாக அவர்களே கலவரபடுவதும் தேவையில்லாத அச்சபடுவதும் அறிந்ததுதான் அதனால் தான் மனசாந்திக்காக ஆட்டம் ஆரம்பம் என திருப்தி அடைந்துக்கொள்கிறார்கள் .. எதிர்கட்சியாக இருந்த போதே ஆளுநரை ஆய்விற்கு சென்றதை அடக்கியவர்கள் பிரதமரே சுவரை உடைத்து வந்த சுவடே தெரியமால் ஓடியதும் வரலாறு பேசியது 
..
ஆட்டுக்கு தாடி எதற்கென்பதே எமது கொள்கை ஆனாலும் ஆளுநர் பதவி இருக்கிறவரை அவருக்கான மரியாதை உண்டு அவர் ரப்பர்ஸ்டாம்பை போல என்பதை அரசியலமைப்பு நமக்கு உறுதியளித்திருக்கிறது மக்களால் தேர்ந்தெடுக்க அரசிற்கே அதிகாரம்
ஏற்கனவே திமுக ஆட்சியில் உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்து ஓய்வுபெற்ற பாத்திமாபீவி ராஜீவ் கொலைவழக்கில் நளினிக்கு தூக்குதண்டனையை ரத்துசெய்து ஆயுள்தண்டனையாக மாற்றியதை ஏற்காதபோது உயர்நீதிமன்றம் கேபினெட் முடிவை ஏற்பதுமட்டுமே ஆளுநரின் அதிகாரவரம்பு என சுட்டிகாட்டி கடைசியில் கையெழுத்திட்டது அறிவோம் .. 
மக்களின் நலனுக்காக செயல்படும் அரசை மக்களால் தேர்ந்தெடுக்கபட்ட அரசை புறவழியில் கலைக்க முடியாதென்ற பொம்மை வழக்கின் தீர்ப்பையும் மாநில ஆளுநர் குறிப்பிட்ட வரம்பிற்குள் நின்று செயல்பட மட்டுமே முடியும் என்றும், அரசியலமைப்பு தெளிவாக விளக்குகிறது ..
..
வருவதற்கு முன்பே தமிழ்நாட்டில் அவரை கிழிக்க தொடங்கிவிட்டார்கள் ..
இரண்டு அரசு பங்களாவை காலி செய்ய மறுத்து, அதற்காக இருவரை மிரட்டி, அந்த இருவர் கொடுத்த புகாரின் பேரில்
கடந்த மாதம் வரை விசாரணை கமிட்டி சம்மன் அனுப்பியும், நேர்நிற்காதவர்.. இங்கே எதையும் பிரித்து மேய்ந்துவிடுவார்கள் .. 
..
தமிழ்நாடு "தனி" மாநிலம் இங்கே மிரட்டல் எடுபடாது பகுத்தறிவு பேசும் .. அதிலும் இங்கே ஆள்கிறவர் #முத்துவேல்கருணாநிதிஸ்டாலின் 
எதற்கும் அஞ்சாத படைத்தலைவன்
நேர்மை நன்னெறி அரசியல் இந்தியாவிற்கே எடுத்துகாட்டான செயல்பாடுகள் இந்திய ஒன்றியத்தின் பிற மாநிலங்கள் கண்டு வியந்து "இங்கிவனை யாம் பெறாமல் போனோமே" என ஏக்கம் கொள்கிறார்கள் .. ஒன்றிய அரசிற்கே வழிகாட்டி மரமாய் உயர்ந்து நிற்கிறார் வெளிப்படையான  அரசு மதவெறியர்கள் சாதிபித்தர்கள் கலங்குகிறார்கள்  இங்கே மதவெறியை தூண்டினாலோ பிறமதத்தை இழிவுபடுத்தினாலோ கட்டம் கட்டபடுவார்கள் என  அறிந்து அடக்கிவாசிக்கிறார்கள் 
உண்மையில் நல்லதொரு மக்களாட்சி நடைபெறுகிறது இடையூறு செய்ய நினைத்தால் இங்கே வேறுமாதிரியாகும் என்பதை நாக்பூர் அறியும் ..
..