Sunday, July 31, 2022

முதல்வர் ஸ்டாலின் ..
மிகச் சரியாக கணித்திருக்கிறது பகைமை .. அதனால்தான் stalin is more dangerous than karunanidhi என கதற முடிந்தது ..  மிக துல்லியமாக நுட்பமான அரசியல் செய்கிறார்.. வெறும் வாய்சவடால்கள் இல்லை பகட்டு இல்லை ..ஜாலவித்தைகள் இல்லை ஆனால் எடுத்துவைக்கும் ஒவ்வொரு அடியும் பாசிசத்தை கதறவைக்கிறது 
..
செஸ் 
சாதாரணமாக இதெல்லாம் இவ்வளவு பிரமாதபடுத்த முடியுமா என நினைத்தவர்கள் தலைவரின் தனித்திறனால் நிர்வாக திறமையால் எதை எப்படி நேர்த்தியாக செய்யவேண்டுமென்று அனைவரும் வியக்கும் வண்ணம் செய்துகாட்டியதோடு அழைத்துவந்து "எங்கள் பெருமையை பார் " என பாடம் நடத்தி நாங்கள் திராவிடர்கள் அறிவார்ந்த சமூகம் என விளக்கம் தந்து அனுப்பியிருக்கிறார் ..
"மோடி" யின் படமில்லை என்றவர்களுக்கு நீதிமன்றத்தை வைத்தே குட்டுவைத்து .. நாங்கள் சரியான பாதையில் செல்கிறோமென உணர்த்தியிருக்கிறார்..
..
மோடி வருவதற்கு முன்பே விழா தொடங்கியதும் .. தமிழன் பெருமையை கீழடியாய் தந்ததும், கருப்பை  முன்னிலைபடுத்தியதும் பிரதமர் நமஸ்தே என்ற போது நிசப்தமாய் அரங்கிருந்ததும், கவர்னரை பொம்மையாக்கியதும், கருப்புகாய்களை தந்து திராவிட இனத்தின் நிறத்தை உணர்த்தி வரலாற்று நிகழ்வை நடத்திக்காட்டியிருக்கிறார்..
..
பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் திராவிட மாடல் குறித்து பிரதமரை வைத்துக்கொண்டே கவர்னருக்கு அறிவுரை கூறி கல்விதான் நமக்கான சொத்து என பொட்டில் அடித்திருக்கிறார்..அதோடு விட்டாரா மலையாள மனோரமா விழாவில் ஒரே மொழி ஒரே தேசம் என்பவர்கள் நாட்டின் எதிரிகள் என வெளிச்சம் போட்டுகாட்டி.. ஆளுநரை கொண்டு இரட்டை ஆட்சி நடத்த நினைக்கிறதென 
முகமூடியை கிழித்தெறிந்திருக்கிறார்..
..
கலைஞர் பதில் சொல்லியே நகர்த்துவார்.. தளபதி பேசுவதில்லை செயல்தான் .. 
சொல்லி அடிப்பது கலைஞர் .. சொல்லாமலேயே அடித்தமர்த்துவது தளபதிக்கு கைவந்தகலை.. எதிரிகள் தீர்மானிப்பதற்கு முன்பு அடிவிழுகிறது.. சிலரை போல வலைதளத்திலோ,கத்திகூச்சலிட்டோ, பெருமைபேசியோ காய்களை நகர்த்துவதில்லை .. ஆனால் தளபதி காய்களை நகர்த்தினால் டெல்லிக்கே ராசாவானாலும் குப்புறவிழ வேண்டியதுதான் .. 
தளபதி ஆடும் "அரசியல் சதுரங்கம்" நவீன கோமாளிக்கு ஒவ்வாமையை தரும் .. 
..
நல்ல தலைவனை தமிழ்நாடு பெற்றிருக்கிறது .. 
#முத்துவேல்கருணாநிதிஸ்டாலின் வலிமையான தலைவர் .. இந்திய ஒன்றியத்தை வழிநடத்தும் ஆற்றலும் திறனும் தகுதியும் மிக்க தலைவர் ..
..
ஆலஞ்சியார்

Friday, July 29, 2022

பானு இக்பால் மறைந்தார் ..
நெஞ்சம் பதறுகிறது ..
முற்போக்கு சிந்தனையாளர் ,சிறந்த பேச்சாளர் .. யதார்த்தமாக எழுதும் ஆற்றலுடையவர் பழகுவதற்கு எளிமையாகவும் எதையும் துணிந்து செய்யும் ஆற்றல் கொண்டவர் .. கல்வி ஒன்றே ஆக சிறந்த பாதை என அடிக்கடி சொல்வார் .. திராவிட இயக்கத்தின்பால் மாறாத பற்றக்கொண்டவர் ..
..
அவரோடான முதல் சந்திப்பே வியப்பை தந்தது ..நண்பர் சித்தார்த்தன் நூலக நிகழ்வில் கலந்துக்கொள்ள வைக்கவேண்டுமென ஆசான் செல்லபெருமாள் அவர்களிடமும் என்னிடமும் சொன்னார் .. உடன் தொடர்புக்கொண்டு உலகத் தத்துவஞானி தந்தை பெரியார் நூலக நிகழ்விற்காக பேசியதிலிருந்து ஏற்பட்ட நட்பு சில தினங்களுக்கு முன் முடியவில்லை தோழர் என்கிற வரை உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளலாய் இருந்தது ..
ஒரு முறை முழுக்க பெண்களை கொண்டே மணியம்மையார் நூற்றாண்டு தொடர் நிகழ்வு ஒன்று பங்கேற்ற செய்தோம் .. சொல்ல நினைப்பதை துணிவோடு  சொல்வார் 
குவைத் திமுக வின் நிகழ்வுகளில் அவரில்லாமல் இல்லை என்கிற நிலை உருவாக்கினார் .. இஸ்லாமிய பெண்கள் பொதுவெளியில் அரசியல் பேசுவது ஆபூர்வங்களில் ஆபூர்வமான நிகழ்வு ..
மிக தெளிவாக தன் கருத்தை சொல்வதிலும் 
"இஸ்லாமிய ரோஜா"  என்ற வட்டத்தில் சுருங்கிவிடாமல் இருந்தவர்
கடவுள் மறுப்பு மேடையாக இருந்தபோதும் சொல்ல நினைப்பதை சொல்ல தயங்குவதில்லை .. பெண்கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்து சாட்சியாய் நின்றவர் ..
..
கேன்சர் தன்னை பாதித்தபோது அதை துணிவோடு எதிர்க்கொண்டு  அது குறித்த விழிப்புணர்வு தரும் வகையில் "மனப்பொழிவின் மாயவாசனை"புத்தகம் எழுதினார் .. கடும் அவதிக்குள்ளான போதும் எதிர்கொண்ட பெண்மணி..
இயற்கையின் மாயவலைகள் ..
..
தன்னை சமூகசீர்த்திருத்தவாதியாக நிலைநிறுத்தி தன் செயல்களை வடிவமைத்தவர் பானு ..
இன்று நம்மிடையே இல்லை அவரின் லட்சியங்கள், பெண்கள் கல்வி, வேலைவாய்ப்பில் முன்னேற்றகாண வேண்டும் தற்சார்போடு நிற்க வேண்டும்.. யாருக்காவும் எதற்காகவும் தங்கள் இலக்கிலிருந்து பின்மாற கூடாது .. சாதிக்க வேண்டுமென்ற வெறி .. கல்வி மட்டுமே துணை நிற்கும் அதற்கான தடைகள் மதம் சமுதாயம் சமூகம் ஆணாதிக்கம் பேதம் எதையும் பொருட்படுத்தாமல் முன்னேறு ..
எல்லாம் வசபடும் என வாழ்ந்துகாட்டிய பெண்மணி ..
..
நல்ல தோழியை இழந்திருக்கிறேன்.. 
சக செயல்பாட்டாளரை, 
ஒரே சிந்தனை கொண்டவரை 
இழந்திருக்கிறேன் .. 
அவரது இறுதி பயணத்தில் கலந்துக்கொண்டு 
அவரை மண் மூடும் போது கரைந்துபோனேன் .. நண்பர் 
அப்பாஸ் தான் என்னை கரம்பிடித்து அழைத்துச் சென்று இறுதியாக பார்க்க வைத்தார் ..
அடக்கம் செய்ய குளிப்பாட்டி கபனிட்டபிறகு பிற ஆண்களை அனுமதிப்பதில்லை நானறிவேன் .. ஆனால் என்னை  பார்க்க அனுமதித்தார்கள் .. சடங்கு சம்பிரதாயங்களை களைந்த பெண்மணியின் இறுதி ஊர்வலத்தில் எண்ணற்றவர்கள் கலந்துக்கொண்டனர் .. "பட்டாளத்தார் மகள்" புத்திசாலி மட்டுமல்ல தைரியசாலி என பேசுவதை கேட்க முடிந்தது ..
அவரின் புகழ் நிலைத்து நிற்கும்
..
போய்வாரும் தோழர் கண்ணீரோடு விடைதருகிறோம்..
..
ஆலஞ்சியார்

Tuesday, July 26, 2022

திருக்குவளை..
நீண்டநாட்களாக போக வேண்டுமென நினைத்து நேரம் அமையாமல் தள்ளிப்போனது .. நீண்ட இடைவெளிக்கு பிறகு 26.07.22 அன்று வாய்ப்பு கிட்டியது.. தோழர் மன்னை ரபீக் Mannai Rafik 
அவர்களை சந்திக்க மன்னார்குடி சென்றபோது திருக்குவளை செல்ல வேண்டுமென தீர்மானித்து காலை கிளம்ப தயாரான போது பெரும்மழை ..
விடுவதாயில்லை நானும் போயே தீரவேண்டுமென .. கடைசியில் மழை விட டூவிலரில் தொடங்கியது பயணம் .. 
மாங்குடி வழியே சென்ற போது இருபுறமும் இயற்கை எழில் மலைநாட்டில் பயணிப்பதைப்போல அத்தனை எழில்.. இத்தனை காலம் அருகிலிருந்தும் அகரமாங்குடி- திருக்கருக்காவூர் சாலையில் செல்லாமல் போனது வியப்பு ..
..
கலைஞர் இல்லம் நிறைய மாற்றங்களோடு முன்பு வீட்டின் முன் இருந்த தென்னை இல்லை 
செல்லும் சாலைகள் தரத்தோடு இருக்கிறது .. இங்கே ஒன்றை குறிப்பிட வேண்டும் .. தமிழகத்தின் சாலைகள் தரத்துடனும் எங்கும் செல்ல எளிமையாக சின்ன சின்ன பாதைகள் கொண்ட சாலைகள் கூட சிறந்ததாய் விளங்குகிறது 
கச்சனம் - மன்னார்குடி குறுக்குவழி ஆற்றங்கரை சாலை கூட முன்பெல்லாம் செல்லவே முடியாதவாறு இருக்கும் இப்போது தார் சாலை .. சிலதினம் முன்பு கல்லணை சென்றபோது கூட  இளகுவாக பயணிக்கமுடிந்தது ..
..
கலைஞர் இல்லத்தில் அஞ்சுகதம்மையார் சிலை.. அதன் வரலாறு சுவராஸ்யமானது .. தஞ்சை அப்பர் ஸ்டுடியோவிலும் பின் சினிமா துறையிலும் பணிபுரிந்த ஒரத்தநாடு பாப்பா ஸ்டுடியோ  உரிமையாளர் 
V.  கோவிந்தராஜ் அவர்கள் ஒரத்தநாடு பாப்பா தியாகராஜன் Thiyagarajan Pappa 
தந்தையார்
ஒருமுறை திருக்குவளை சென்றபோது அஞ்சுகம் அம்மையாரை காலை நீட்டி வெற்றிலையை இடிப்பதை போட்டோ பிடித்தார் .. அது சிலகாலத்திற்கு பிறகு கலைஞருக்கு தெரியவர ஒரத்தநாடு பாப்பா கோவிந்தராஜை அழைத்து அந்த போட்டோ கொண்டுவாயா பார்ப்போம் என்க அதன்படி கலைஞரிடம் தர அது பிடித்துபோக அதுவே அம்மையாரின் நினைவுசின்னமானது .. இன்று கலைஞரின் கோபாலபுரத்திலும் திருக்குவளையிலும் அந்த நிழற்படம் சிற்பமாய் நம்மை மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறது ..
..
கலைஞர் வாழ்ந்த இல்லம் புதுபொழிவோடு இருப்பதும் அருகில் கார்களை நிறுத்த வசதியும்,எதிரே பூங்கா என சிறப்புபெறுகிறது .. தமிழகத்தில் நிறைய நினைவு இல்லங்கள் அரசே ஏற்று நடத்தினாலும் இது அஞ்சுகம் அறக்கட்டளை நிர்வகிக்கிறது .. நீண்டதூரம் பயணித்து வருகிறவர்கள் அது பூட்டிகிடந்தால் வருந்த நேரிடும் அதற்கு காலநேர அட்டவணையை வெளியே எழுதி பூட்டியிருந்தால் யாரை தொடர்பு கொள்ளவேண்டுமென அவர் பெயர் தொலைபேசி எண்ணை எழுதி வைத்தால் பயன்படும் 
அறங்காவலர்கள் குழுவில் இருக்கும் அன்பில் மகேஷ் பொய்யாமொழி Anbil Mahesh Poyyamozhi 
இதில் கவனம் செலுத்தவேண்டும்..
..
மாபெரும் தலைவர் இந்திய ஒன்றியத்தையே தன்னை சுற்றி பேச வைத்த, ஆரியத்தை ஆட்டுவைத்த, அரசியல் இலக்கணமாய் , உலகின் மிகச் சிறந்த ஜனநாயகவாதியாய்  இந்திய ஒன்றியத்திற்கே வழிகாட்டியாய் என்பதாண்டுகால பொதுவாழ்வு நாயகனாய், பள்ளத்தில் கிடந்தோரை கைதூக்கி உயரத்தை வசபடுத்தி தந்த சமூகநீதி காவலனாய், "வல்லோர்கள்" வகுத்த நீதியை உடைத்து சமநீதி சமைத்த பேரறிவாசன் சீடனாய் 
திராவிடமாடலின் முன் முகமாய், முத்தமிழறிஞராய், மூடம் நீக்கி பகுத்தறிவு துணைக்கொண்டு பாடம் நடத்திய ஆசானாய்  திகழ்ந்த கலைஞர் பிறந்த இல்லம் நீண்டநாள்களுக்கு பிறகு கண்டதில் மகிழ்ச்சி!..
..
ஆலஞ்சியார்

Sunday, July 24, 2022

கலைஞருக்கு நினைவுச்சின்னம்
..
வழக்கம் போல மயிலாப்பூர் கதறுகிறது .. கடற்கரையில் இடம் தரகூடாது என பகிரங்கமாக பேசிய குருமூர்த்தி வகையறாவிற்கு எரிகிறது .. வீண்விரயமென நடுநிலைநாய்கள் ஊளையிடுகிறது இவர்களெல்லாம் ₹3000 கோடியில் படேலுக்கு சிலைவைத்தபோதும் கிரிமினல் A1 குற்றவாளி (தண்டிக்கபட்டவர்) ஜெயலலிதாவின் வேதா இல்லம் அரசுடமையாக்க ₹140 கோடி செலவு செய்தபோதும் எல்லா பொந்தையும் பொத்திக்கொண்டிருந்தவர்கள் 
..
யார் இந்த கருணாநிதி(கலைஞர்)
இந்திய அரசியலின் ஒப்பற்ற தவைவர்.. இந்தியா சனாதனப்பிடியில் சிக்கி சீரழிந்தது கண்டு அதை செப்பனிட முனைந்தவர் .. ஒடுக்கபட்ட மக்களின் உயர்வே சமநீதியின் அச்சாரமென தொடர்ந்து பேசியும் வாய்ப்பு வந்தபோதெல்லாம் அவர்களை உயர்த்தியும் இந்திய துணைக்கண்டத்தில் தொலைநோக்கு சிந்தனையோடு தமிழ்நாட்டை கொண்டு சென்றவர் .. இந்திய ஒன்றியம் இப்போது பேசும் "முன்னேற்ற பாதை"யை 70 களிலேயே செய்துகாட்டியவர் .. உண்மையான பொதுவுடமைவாதி ..  இந்திய ஜனநாயகத்தின் பாதுகாவலன், அவசரநிலையை துணிந்து எதிர்த்து இந்திய தலைவர்களுக்கு பாதுகாப்பு அரணாய் நின்றவர் .. சமூகநீதி காவலன்,  பெண்களுக்கு சொத்துரிமையை வழங்கி இந்திய ஒன்றியத்திற்கே முன்மாதிரியாய் திகழ்ந்தவர் .. முதல் பட்டதாரிக்கு கல்வி கட்டணமில்லை என உத்தரவிட்டு லட்சகணக்கானவர்களை "கரைசேர்த்தவர்"
..
இந்திய அரசியலின் இலக்கணம் .. எதிர்க்கும் போதும் உறவின் போதும் நியாயத்தின் பக்கம் நின்று அரசியல் செய்தவர் .. தொடர்ந்து இனப்பகைவரால் பழி சுமத்தபட்டபோதும் "அறம்வெல்லும்" என நம்பியவர்.. எண்ணற்ற துரோகிகள், எதிரிகள், பகைவர்கள் அனைவருக்கும் அரசியல் வாழ்வளித்த "சூரியன் ".. 
80ஆண்டு பொதுவாழ்வில் ஏற்றம் இறக்கம் என கண்டாலும் மக்கள் பணியில் சளைக்காமல் தொண்டாற்றியவர் .. இவர் எழுத்து புதிய நடையை தமிழுக்கு தந்தது .. வடமொழிக் கலப்பை தமிழென்று நம்மீது திணித்த பார்ப்பனர்கள் நாள்/வார ஏடுகளில் கூட அவா பாஷையை முன்னெடுத்தபோது, திரையில் சமஸ்கிருதம் தாண்டவமாடிய காலகட்டத்தில் 'அம்பாள் எந்தகாலத்திலடா பேசினாள் " கேள்வி எழுப்பி செந்தமிழால் அழகு செய்தவர் .. 
..
எதிரிகள் கூட இவர் எழுத்தை ரசித்தார்கள்.. அரசியலை விமர்சித்தவர்கள் கூட இவர் எழுத்தில் மயங்கி நின்றார்கள்.
"எண்ணல்லவோ எழுத்தல்லவோ, எழுதாத பண்ணல்லவோ, என விளித்திட்ட வார்த்தைகள் அருவி மலர்ச்சோலை அழகு மலர்க்கூட்டமென  சங்கத்தமிழ் பாட முடிந்தது .. "நல்லவனுக்கோ நீதி இங்கே வல்லவனுக்கே நீதி" என அரசியல் பேச முடிந்தது ..
எழுத்தில் மயக்கும் வித்தை அறிந்தவர் .. ஒவ்வொரு சொல்லிலும் தன் சார்ந்த சிந்தாந்தத்தின் பொருள் பதிந்திருக்கும் ..
..
மூடம் பேசாதா பேனா அது .. அவரது பேனா தலைகுனிந்த போதெல்லாம் 
தமிழன் தலைநிமிர்ந்தான்..
அவன் பேனா காலையில் என்ன செய்தியோடு வரும் என எதிரிகள் பதற்றத்தோடுதான் கண்விழித்தான் ..
இந்திய அரசியலின் போக்கை இந்த பேனா தான் வடிவமைத்து இயக்கியது .. இந்த பேனா தான் லட்சக்கணக்கான குடும்பங்களை பட்டதாரி குடும்பமாக்கியது .. அறம் பேசிய பேனா ..சிலநேரம் அதிர்ந்தும் பேசும் .. பகைவர் குலைநடுங்க வைக்கும், பேசாமடைந்தையாக்கும் எளியவரின் குரலாய் ஒலிக்கும் சமத்தும் பேசும் சமூகநீதியை பறைசாற்றும் .. பொங்கிவரும் ஆற்றின் தண்ணீரைப்போல் வாடிய பயிர்காக்கும் .. தன்மானம் பேசிய பேனா அது தமிழர் வீரம் பேசியது ..தமிழனின் கலையை பண்பாட்டை உலகுக்குணர்த்தியது .. தமிழர்க்கு அரணாய் நின்ற பேனா ..
ஆரியத்தை ஆட்டிவைத்த பேனா 
அந்த பேனா தான் நினைவு சின்னமாய் .. வழக்கம் போல் பகைவர் பதறுவர் ஆரிய அடிவருடிகள் புலம்புவர் ஆனாலும் 
தமிழர் வாழ்வை வளமாக்கிய இந்த பேனாவை 
நினைவாய் அருங்காட்சி படுத்துவோம் 
ஏனெனில் அது 
#முத்துவேல்கருணாநிதி க்கு நாம் செலுத்தும்
#நன்றிக்கடன்..
..
ஆலஞ்சியார்

Friday, July 22, 2022


#கலைஞர்கருணாநிதி..
..
தமிழகத்தின் தாரக மந்திரம்
எல்லா பண்ணைகளிலும்
விளைச்சல் தரும் வீரியவிதை
எதிரிகளின் ஜீவாதாரம்
உரக்க 
உச்சரிக்கவில்லையெனினும்
உதட்டால்  
முணுமுணுக்கவாவது
செய்கிறார்கள்
மவுனமாய் மனதுக்குள் 
திரும்ப திரும்ப
உச்சரிக்கிறார்கள்
உச்சரித்தால்
சிலருக்கு
சோர்வு போய்
சோறு கிடைக்கிறது..

உரக்க உச்சரித்தவனும்
உள்ளத்தில் பூஜித்தவனும்
கொடூரமாய் கொறித்து
கொட்டியவனும்..
யாராயினும்
சோறு உண்டு ..
..
தமிழகத்தின்
கலை இலக்கியத்தில்
அரசியலில் ..
ஆன்றோர் சபையில்..
கல்வியாளர்கள் ..
கருத்தாளர்கள்..
மறுப்பாளர்கள்..
மதியாளர்கள்..
மகான்மார்..மத்தியில்
இப்பெயர் பிரசித்தம் ..
..
இந்த கிழட்டு சூரியனின்
சுழற்சிதான்..
வக்கற்றவனுக்கு.
அரசியலில்
வக்கற்றவனுக்கும்
வாழ்வு தந்தது
..
எத்தனை அம்புகள்
அத்தனையும்
மாலையாய் கழுத்தில் விழுந்தது
பாவம் எதிரிகள்
சிலர் மூர்ச்சையாகி போனார்கள்
மரித்த பின்னும்
சிலருக்கு நடுக்கம்
இவர் பெயரை கேட்டால் 
..
அரைகுறைகள்..
அறியாதுபோய்..
ஆணியடிக்க நினைக்கிறார்கள்
அடித்தபிறகுதான்..
அவர்களுக்கே புரிகிறது..
தன் கை மாட்டிக்கொண்டது..
பாவம் அறிவிலிகள்
உணர்ச்சியின்..
கொந்தளிப்பில்..
வாய் உளறுகிறார்கள்
..
எங்கிருந்து வந்தது
இவ்வளவும் என்கிறார்கள்
மந்திரிகுமாரியிலேயே..
சில ஆயிரங்களை கண்டவர்..
விமர்சனம் செய்வோர் அறிக
திருட்டுரயிலேறி வந்தாய்
சொல்கிறீர்..
கலைஞரே சொல்கிறார்..
பக்கத்தில் என்னோடு
பயணம் செய்தவன் போல் பேசுகிறார்
பட்டாமிராசு இல்லையென்றாலும்
பரதேசியில்லையென்றார்
போதிய வருவாய் இருந்ததென்றார் 
..
தமிழகம்...
கலைஞர் பெயரை
உச்சரிக்காமல்
விடிவதேயில்லை..
மறைந்ததாய் 
பொய் சொல்கிறார்கள் 
தினம் தினம் 
விடியல் தருவதே 
இவர் தானே
இவர் பெயரைதான் ..
இந்தியாவே உச்சரிக்கிறது ..
தொலைநோக்கோடு தீட்டியதெல்லாம் 
இந்தியாவே கடைபிடிக்கிறது 
அரசியலின் அரிச்சுவடியும் 
அரசியல் இலக்கணமும் இவன்தான்..
புதியதொரு இந்தியாவை 
கட்டமைப்பதாய் சொல்வோரே ..
கலைஞர் 70 களில் கட்டமைத்ததைதான் 
இன்று .. கடைபிடிக்கிறீர்
..
கலைஞரே..
எங்கள் கவியே 
காவியமே ..
எங்கள் மூச்சே 
திராவிடப் பெருவுடையே
நவீன தமிழகத்தின் தந்தையே
சமூகநீதியின் போர்வீரனே..
பெரியாரின் பெருஞ்சீடனே..
பேரறிஞரின் தம்பியே 
எம் தலைவ..
உன்புகழ் நிலைத்துநிற்கும்
உன்னைப்போலொருவனை 
தமிழகம் கண்டதில்லை 
தொட்டதெல்லாம் 
தூயபார்வையும் தொலைநோக்கும்
பகுத்தறிவும் பண்பாட்டு சிறப்பும் 
கருணையும் கருத்தும் 
கண்ணியமும் ஏழைகள்பால் கவலையும் 
விளிம்பில் நிற்போரை காத்துநிற்கும் அரணும் 
கடைக்கோடி மக்களுக்கும் சென்றடையவேண்டும் உரிமையென ஓயாது உழைத்தமையும் ..
ஒவ்வொரு தனிமனிதனும் 
உன்னால் உயர்ந்தான் 
உன் உழைப்பால் 
உன் திறனால் 
உன் திட்டத்தால் உயர்ந்தான் 
நீரின்றி உலகில்லையென்றார்
நீ யின்றி தமிழகத்தின் உயர்வில்லை 
பேராற்றலே 
பேரன்பே..
பேரருளே ..
வாழ்க ..நீ..
உன் புகழ் வாழ்க!!
..
ஆலஞ்சியார்

Sunday, July 17, 2022

பள்ளி கல்வித்துறை ..
மாணவ மாணவியரின் கல்வியில் மட்டும் அக்கறை செலுத்துவதோடு நின்றுவிடாமல்
அவர்களின் பாதுகாப்பு ஒழுக்கம் ஆசிரியர்கள் நடத்தை ஒழுங்கு தனியார் பள்ளிகளில் ஏற்படும் விரும்பதகாத செயல்கள் குற்றங்கள் இவைகள் கண்காணிக்கபடவேண்டும் ..
பள்ளியில் புகுந்துள்ள சாதி மத அரசியல், சாதீய மத வெறியை தேசபக்தி என்ற பெயரில் நுழைக்கும் நாட்டின் தீய சக்திகளை இனங்கண்டு ஆரம்பத்திலேயே கிள்ளியெறிய வேண்டும்.. அமைச்சர் சின்னவர் "புகழ்" பாடுவதை குறைத்துக்கொண்டு துறையில் கவனம் செலுத்த வேண்டியது கட்டாயம் ..
..
கள்ளகுறிச்சி மாணவி ஸ்ரீமதி மரணத்தை தொடர்ந்து நடந்தேறிய சம்பவங்கள் திட்டமிடபட்டவை என சந்தேகம் வலுக்கிறது .. பள்ளி வளாகத்தில் தடயங்களை எரிக்க வேண்டுமென்றே கலவரம் செய்திருப்பதும்  மாணவியை மருத்துவமனைக்கு  அழைத்து சென்ற பஸ் எரிக்கபட்டிருப்பதும் 
வகுப்பறைகளை கொளுத்தபட்டிருப்பதும் மிகுந்த சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது .. கலவரம் நடத்துவதற்கு முன்பு வாட்ஸ்ஆப் குரூப்பில் தகவல் பறிமாறபட்டிருப்பதும் விசாரிக்கபடவேண்டும்.. PSBB பள்ளியில்  விருப்பதகாத சம்பவங்கள் நடந்தபோது அமைதி காத்தவர்கள் இன்று கலவரத்தில் ஈடுபடுவதின் பின்னணி என்ன.. இதுகுறித்தெல்லாம் விரிவான விரைந்து விசாரணை வேண்டும்
..
தமிழகத்தை கலவரபூமியாக்க காரணத்தை தேடிக்கொண்டிருக்கும் மதவாத சக்திகளும் பாஜகவும் இதன் பின்னில் இருப்பதற்கான குறியீடுகள் தெரிகிறது .. "ஆர்எஸ்எஸ் சாகா " பள்ளியில் பயிற்சியளிக்கபட்டிருக்கிறது 
பள்ளி நிறுவனர் "சங்கி" யாக தன்னை பாதுகாத்துக்கொள்ள முயல்வதும், பள்ளியின் முன்னாள் ஆசிரியர் மிக மோசமான நிர்வாகம் என கூறியிருப்பதும் நடந்த கலவரம் திட்டமிடபட்டதா..? என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது ..
..
நல்லரசாய் இருத்தல் நலம் .. ஆயினும் சிலநேரம் கம்பை சுழற்றவேண்டியதும் அதைவிட முக்கியம்.. எல்லோருக்கும் நல்லதை செய்திட முடியாது தீயவர்கள் கயவர்கள் கொடுமதியாளர்கள்,மதவெறியை தூண்டுவோர் மக்களை பீதியில் நிறுத்தி குளிர்காய நினைப்போர் இரும்புகரம் கொண்டு அடக்கவேண்டும் .. இனி எவனும் கலவரம் செய்ய மனதால் கூட நினைக்க கூடாது 
மென்மையான போக்கு சிலநேரம் பலன்தராது ..
மெட்ரிக் பள்ளிகள் அரசு எச்சரிக்கையை மீறி அடைத்திருப்பது அரசு ஒன்று செய்யாது என்ற "மென்மைபோக்கே " காரணம்.. 
கடும் நடவடிக்கை தேவை 
..
"ஓர்ந்துகண் ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும்
தேர்ந்துசெய் வஃதே முறை" ..(குறள்)

குற்றம் இன்னதென்று ஆராய்ந்து எந்தப் பக்கமும் சாயாமல் நடுநிலை தவறாமல் வழங்கப்படுவதே நீதியாகும்.. 

மாணவியின் மரணத்திற்கு நீதி கிடைப்பது அவசியம் அது விரைந்து கிடைப்பதும் சம்பந்தபட்டவர்கள் எவ்வளவு உயரத்தில் இருந்தாலும், எத்தனை பாதுகாப்போடு இருந்தாலும் தண்டிக்கபடவேண்டும் 
..
ஆலஞ்சியார்

Saturday, July 16, 2022


பேசு..
காற்று 
தென்னங்கீற்றின் 
காதோடு 
கதைப்பதைப்போல..
மலரின் 
இதழில் 
வண்டமர்ந்து 
ரீங்காரமிடுவதைப்போல
மரக்கிளையில் 
தொங்கும் 
மாம்பழத்தை
அணில் கொறிப்பதைப்போல
மெல்லிய ஓசையில் 
பேசு ..
..
காவிரிப் படுகையில் 
மயில் தோகைவிரித்தாட
மேகம் 
தராத மழைப்பொழுதில் 
(இருண்ட வானம்)
தென்னமரத்தில் 
அணில் குதித்தேறும் 
அழகிய தருணம் ..
சின்ன சின்ன குரலில் 
கிளிகளும் குருவிகளும் 
இசைபாட
மெய்மறந்து நான் நிற்கையில் 
பழங்கதைகள் 
நெஞ்சில் நிழலாட 
பூமி அதிராமல் 
நடைபோட்டு வந்து
காதருகில் 
ஏதோ சொன்னாய்..
..
பேசாத மொழியில் 
பேசி தீர்க்க 
எண்ணமெல்லாம் 
வழிந்தோடும்
எண்ணற்ற சொற்கள் 
சுவைகூடிய நளினம் 
அகந்தையற்ற அன்பு
காவிரி பெருவெள்ளத்தில் 
மிதந்துவரும்  
ஒற்றை இலையைப்போல
தனிந்திருந்தேன் 
உன் கரம் ஏந்தாதா என..
பூவரசம்பூ நிறத்தில் 
ஒற்றை ரோசா
உன் கூந்தலுக்கு அழகுதான் 
ஆனால் 
மல்லிகை சரம் 
உன் நெஞ்சில் 
தொங்குமழகுபோலில்லை..
சத்தமில்லா கொலுசு 
எனக்கு சுத்தமாய் பிடிக்கவில்லை 
வருமொசை அறிவிக்காமல் 
அதென்ன ..
..
கரம்கோர்த்து 
கரையோரம் 
நடந்ததெல்லாம் 
கனவாகிப்பேனாலும்
மழை நின்று 
இலை சிந்தும் துளியில்
மரத்தில் சாய்ந்து 
தந்த முத்தம்
நெஞ்சில் 
வரைபடமாய் ..
லோலாக்கின் 
நடனத்தில்
பித்தனைப் போல்
கவிதை பேசியதும்
கைநீட்டி காற்றையளந்து 
விரல்கொண்டு முகத்தில் வரைந்த ஓவியம் 
நதியோரமர்ந்து 
ஓடும் நீரில் 
காலடித்து 
சன்னகுரலில் 
பாடி மகிழ்ந்தது 
எப்போது 
குடமுருட்டி வந்தாலும் 
நிழலாடுகிறதே
..
வா..
வந்து பேசிவிட்டு போ
வேண்டாவெறுப்பாய் 
சிலவார்த்தையெனினும்
அது 
தென்றலைப்போல சுகம்தருமே
உன் குரலில் 
சிலவரிகள் 
அது இசையாகுமே..
புத்தகப்புழு என
கிண்டல் 
செய்ததைையெல்லாம் 
மறு பதிப்பு செய்துவிட்டு போ
காதல் 
எத்தனை இனிமை ..
..
ஆலஞ்சியார்