Friday, December 31, 2021

இப்படியொரு முதலமைச்சர் கிடைத்ததற்கு கொண்டாடி தீர்க்கவேண்டும் ..
மனிதர் என்னமாய் உழைக்கிறார் எனும் குரல் ஓங்கியொலிக்கும்போதே கூடவே கவனம் முதல்வரே எனும் கரிசனம் கூட கேட்கிறது ..
..
தஞ்சையில் திருச்சியில் மூன்றுநாள் பயணம் முடித்து சென்னை வந்தவர் வீட்டிற்கு சென்று ஓய்வெடுக்காமல் அதிகாரிகளை நள்ளிரவில் அழைத்து சென்னை மழை குறித்து விவாதிக்கிறார் .. பாழாய் போன பத்தாண்டால் தொடரும் அவலம் குறித்து கவலைக் கொள்கிறார் .. அடுத்த பருவத்தில் நீர்தேங்கா சென்னை வேண்டுமென வல்லுநர்களை அமைத்து திட்டம் தீட்டுகிறார் .. 
சாதியை வைத்து அரசியல் செய்யலாமா, மதவெறியை தூண்டி பிறமதத்தவரை வம்பிக்கிழுத்து காலூன்றலாமா, இனம் தேசியம் மொழியென திசைதிருப்பலாமா என்கிற சிந்தனையில் சில அரசியல்வாதிகள் செயல்படும்போது இவரோ எதைப்பற்றியும் கவலையில்லை மக்கள் தந்த வாய்ப்பை சரியாக செய்தானிவன் என வரலாறு பேசவேண்டும் என உழைத்துக்கொண்டிருக்கிறார் 
..
அரசியல் செய்ய எதிரிகளை பழிவாங்க பகைவர்களை இல்லாதாக்க வழிகள் கிடைத்தும் சட்டமும் நேர்மையாய்  செயல்படவேண்டும் இங்கே யாவர்க்கும் நான் முதலமைச்சர் 
என நெறியோடு அரசியல் செய்கிறார்.. பகையை அறிந்திருக்கிறார் .. ஏற்ற கொள்கையில் தெளிவும் திராவிட தந்த கொள்கையில் பிறழாமல் சமூகநீதியை நிலைநாட்டி சமத்துவம் செய்திடவே இங்கு வந்திருக்கிறேன் .. ஒற்றைநாளில் கிடைத்திடவில்லை .. தோளால் நூலால் கிடைத்திடவில்லை ஒவ்வொரு அடியும் செதுக்கியது  திராவிடப் பேராசான்கள் வழிகாட்டி வளர்த்தெடுத்தவன் பயணத்தில் தெளிவுண்டு இலக்கு அறிவேன் .. இடர்களும் விமர்சனங்களும் மேம்படுத்தவே அன்றி திமுகவே அசைத்திட முடியாது அதன் தலைவன் என்கிற திமிர் உண்டு .. மக்கள் பணியில் எத்தனை துன்பங்கள் வந்தாலும் சகித்து கடமையாற்றுவேன் என 
எம் முதல்வர் 
#முத்துவேல்கருணாநிதிஸ்டாலின் செயல்படுகிறார் ..
பேரருளாளன் கலைஞர் சொன்னது தான் 
ஸ்டாலின் என்றால் 
உழைப்பு உழைப்பு உழைப்பு 
..
10 வருடமாக குட்டிசுவராக்கி வைத்திருக்கிறார்கள்
விமர்சனம் செய்ய தயாராக இல்லை  அடுத்த மழை சீசன் வருவதற்குள் சரிசெய்வோம் என்ற நம்பிக்கை இருக்கிறது என்கிறார் தமிழ்நாடு முதலமைச்சர் தளபதியார்..
சொல்வதை செய்வார் என்ற நம்பிக்கை மக்களுக்குண்டு விரைந்து செயல்படும் முதல்வர் தமிழகத்தின் விடிவெள்ளி 
இப்படியொரு முதலமைச்சர் கிடைத்ததற்கு நாம் கொண்டாடி தீர்க்கவேண்டும் ..
..
ஆலஞ்சியார்

Wednesday, December 22, 2021

 
பேச்சுரிமை பற்றி எங்களுக்கு பாடமெடுக்க வேண்டாம்..,
விமர்சனங்களும் வன்சொற்களையும் நிறைய கேட்டு பழகியவர்கள் .. விமர்சனம் என்ற பெயரில் கேடுகெட்ட தீய எண்ணங்களை கடும்சொற்களை நூற்றாண்டுகள் கடந்தும் கருத்து சுதந்திரம் என்ற பெயரில் இடது கையால் தள்ளியவர்கள் தான்..
ஆனால் .. எங்கள் கொள்கையை விமர்சிக்க எல்லோருக்கும் உரிமை உண்டு .. ஆனால் தனிநபர் தாக்குதலை கேவலமாக சித்தரிப்பதை தொடர்ந்தால் எங்களுக்கும் கம்பை கையிலெடுக்க தெரியும் என சொல்வந்ததை தான் நேற்றைய தினம் நாதக தம்பிகள் மீதான தள்ளுமுல்லு.. 
தம்பிகள் பேசியதில் சில..

தி.மு.க வுல ஒவ்வொரு மாவட்டச்செயலாளரும் கலைஞருக்குப் பிறந்தவனுகதான்..

நாப்கின் அட்டையை ராசாத்திக்கு குடுப்பியா..
ஒரு அப்பனாத்தாளுக்கு பொறந்திருந்தா.. அவர்களின் உடல்மொழி மிக கேவலமாக இருக்கும்.. இப்படி பேசியும் மௌனம் காத்தோம் .. இவர்கள் தகுதியற்றவர்கள் வீணான விந்தின் விளைச்சல்கள் என அறிவோம் .. ஆனால் செருப்பை தூக்கி காட்டியபிறகு அமைதியாக செல்ல இயலாது அவர்கள் நோக்கம் கலவரம் அதை பாஜக செய்யாது அதற்கு அடியாள்கள் தேவை அதை சரியாக செய்ய நாதக தம்பிகளால் முடியுமென நம்பி பொறுப்புதரபட்டிருக்கிறது .. ஆனால்  திமுக சரியாக அறியாததால் ஆடுகிறார்கள்..
..
ஒருவர் மீது அல்லது இயக்கத்தின் மீது விமர்சனம் என்ற பெயரில் எதைவேண்டுமானாலும் பேசலாம் எழுதலாம் என்றால் அது சிறந்த நடைமுறையாகாது .. தொடர்ந்து 'நாதக' சிலவண்டுகள் அறிவிலித்தனமாக பேச தொடங்கியவர்கள் ஆபாசமாக மாறி செருப்பை கழட்டி காட்ட தொடங்கியதும் களம் மாற தொடங்கியது ..
திமுக மீது தொடர்ந்து பொய்யான பரப்புரையை செய்து புலிகள் மீது பொதுவெளியில் வெறுப்பு வர காரணமானவர்கள் இவர்கள் .. திமுகவிற்கு  ஈழ துரோக பட்டத்தை சுமத்தி பிழைப்பு நடத்தும் இந்த கும்பலுக்கு ஈழ வரலாறும் தெரியாது
பிரபாகரனைப் பற்றியும் முழுமையாக அறிந்துமில்லை..
..
திராவிட இயக்கங்கள் ஈழத்திற்கு இழந்ததெல்லாம் கணக்கிட்டால் இன்னும் பலதலைமுறைக்கு ஈழத்தமிழர்கள் நன்றிகடன் பட்டிருக்கவேண்டும்.. எதையும் எதிர்பார்க்காமல் செய்தவர்கள் திமுகவினர்.. ஈழ இறுதிபோரில் திமுகவும் கலைஞரும் துரோகம் இழைத்ததாக சொல்லி திரியும் இவர்கள் அறியமாட்டார்கள் "இவர்களே தேடிக்கொண்ட அழிவு என்று ".. ஈழ மக்கள் இந்த நாதக கும்பலை அறிவார்கள் பணத்திற்காக பொய்பேசி திரியும் கயவர்கள் என்று .. வைகோ, கொளத்தூர் மணி போன்றவர்கள் பிரபாகரன் வைத்திருத்த நிலை என்ன.. ஒரே ஒரு போட்டோ வைத்துக்கொண்டு கற்பனைகதைகளை (ஆமைக்கறி தோளில் சாய்வார்) 
என தொடர்ந்து புளுகும் கயவன் சீமான்..
..
பழைய திமுகவைப் பற்றி தெரிந்துக்கொள்ள வேண்டும் 
ஒரேயொரு உதாரணம்
வை.கோபால்சாமி கட்சியிலிருந்து நீக்கபடுகிறார்.. அவரோடு ஒன்பது மாவட்ட செயலர்கள் தினகரன் கந்தசாமி போன்றவர்கள் செல்கிறார்கள் திமுகவிற்கு உரிமை கோருகிறார் வைகோ.. திமுக பொதுக்குழு தஞ்சையில் கூடுகிறது குருதயாள்சர்மா மண்டபத்தில் காலையில் பொதுக்குழு முடிந்து கலைஞர் ஓய்வெடுக்க வருகிறார் மாலையில் திலகர் திடலில் பொதுக்கூட்டம் .. நடத்தவிடமாட்டொமென  என வைகோ விசுவாசிகள் பேச கலைஞர் காதுக்கு செய்தி வருகிறது .. உடனே என்ன மணி(கோ.சி.மணி) உன்னை நம்பிதானப்பா வந்தேன் என்கிறார் .. இங்கே இரு வருகிறேன் என திடலுக்கு விரைகிறார்.. யார்றா .. அவன் இங்கே தான் கூட்டம் நடக்கும் எவனாவது கலாட்டா செஞ்சீங்க  இங்கேயே புதைச்சுருவேன் என கர்ஜித்தார் .. சத்தம் போட்டவனெல்லாம் பதுங்கிவிட்டார்கள் ..  திரும்ப வந்த மணி அண்ணன் "போய் பேசு போ" என சொன்னார் கலைஞரின் கண்களில் கண்ணீர் வந்தது .. அப்படிபட்ட
தளபதிகளும் தொண்டர்களும் உடன்பிறப்புகளை கொண்ட இயக்கம் .. அமைதியாகவே இருப்போமென கருதுவது சிறுப்பிள்ளைத்தனம் .. 
..
நாதக தம்பிகள் சீமானை நம்பி மாட்டிக்கொள்ளாதீர்கள்.. இளையாங்குடியில் எதுவும் நடக்கலாம் கலவரம் செய்ய திட்டமிடுகிறார்கள் கைது செய்து அசம்பாவிதம் நடக்காமல் காவல்துறை நடவடிக்கை எடுக்கவேண்டும் .. 
நாதக தம்பிகள் கவனம் .. 
..
ஆலஞ்சியார்


Sunday, December 12, 2021

கருத்து சுதந்திரம் 
ஒருவர் வாய்க்குவந்தபடி பேசுவதும் ஆதாரமற்ற அவதூறுகளை அள்ளிவீசுவதும் தனிநபர்களை கேவலபடுத்துவதும் தொடர்ந்து செயல்படும்போது அவர் கண்காணிக்கபடுகிறார் .. சரியான நேரத்தில் கைதுநடவடிக்கை என்றவுடன் பதறுகிறார்கள் ..
..
எது கருத்துசுதந்திரம் 
திமுக தேசதுரோக கட்சியென தொடர்ந்து குற்றம்சாட்டுவது தீவிரவாத அமைப்புகளோடு தொடர்பா..? என கேள்வி எழுப்புவது ஸ்டாலினை கடுமையாக விமர்சிப்பதென தொடர்ந்து பேசிவந்த மாரிதாஸ் 
முப்படைத்தளபதி மரணம் குறித்து சந்தேகம் என்ற பெயரில் ட்விட் செய்ய எலி பொறியில் மாட்டிக்கொண்டது ..
..
விமர்சனம் செய்வதற்குமுன் அதற்கான தகுதியை பெற்றிருக்கவேண்டும்.. "முற்போக்கு" பார்ப்பனர்கள் கூட மாரிதாஸின் வீடியோக்களை தொடர்ந்து இரண்டு நிமிடம் பார்க்க முடியாது என எழுதுகிறார்கள் .. அவரது பேச்சு செயலும் கழிசடைத்தனம் .. ஆனாலும் திமுக இதுவரை பொறுமைகாத்ததே தவறென்று நினைக்கிறேன் ..
..
கிஷோர் கல்யாணராமனுக்கு பதறாத பாஜக இப்போது பதறுவதன் நோக்கம் புரிகிறது மாரிதாஸை இயக்கியவர்கள் "குரு" உச்சத்திலிருந்தாலும் வளையத்திற்குள் வரநேரிடும் என அஞ்சுவதும் தொடர் கைதுகள் சரியான பாதையில் சென்றால் பாசிசக் கூட்டம் சிதறும், எண்ணிய எண்ணங்கள் ஈடேறாமல் போகுமென அறிவார்கள் ..அதனால் தான் பதற்றம் அதிகரிக்கிறது 
..
#முத்துவேல்கருணாநிதிஸ்டாலின் அரசு காத்திருந்து கொத்தும், ஆடவிட்டு அடிபலமாக  விழவேண்டுமென அமைதிகாக்கிறது .. இன்று கருத்து சுதந்திரம் என பொங்குகிறவர்கள் விமர்சனம் என்ற பெயரில் பொய்களை அள்ளிவீசும் போது எங்கே போனார்கள் .. சாக்கடைநீரை வீசும் போது நாறும் என அறியவில்லையா ..
இன்னமும் இருக்கிறது .. மதவெறி சாதிவெறியை தூண்டி, குற்றவாளிகளை ரௌடிகளை சேர்த்துக்கொண்டு மிகப்பெரிய கலவரம் செய்யவேண்டுமென திட்டமிடுவதும் அதை திமுக இடதுகை கொண்டு கையாள்வதும் நாம் காண்கிறோம் ..
..
எங்க பொறுமையை சோதிக்கவேணாம் என்கிறார் பாஜகவின் அண்ணாமலை .. 
"எங்க சங்கத்து ஆள அடிச்சவன் எவண்டா " எனும் வடிவேலு காமெடி நினைவிற்கு வருகிறது ..
ஆளுநரை பார்த்தாலும் வேலைக்கு ஆகாது .. அதுசரி பாஜக உறுப்பினரே அல்லாத  மாரிதாஸுக்காக பதறுகிறவர் பாஜக உறுப்பினரான கல்யாணராமனுக்கு இவ்வளவு வேகம் காட்டவில்லையே.. புரிகிறதா..
..
கடைசியாக..
பாசிசத்தை பாஜகவை எதிர்த்து பேசியதற்காக ஆனந்த டெல்டும்பே, கவுதம்,
நெல்லை கண்ணன் போன்றவர்களை சிறையில் அடைத்தும், பாஜக சித்தாந்தத்தை எதிர்த்தார்கள் என்பதற்காக கௌரிலங்கே கல்புர்கி, பன்சாரே போன்ற அறிஞர்கள் கொன்ற கூட்டம் "கருத்து சுதந்திரம்" பேசுவது தான் கொடுமை.. 
உயர்நீதிமன்ற நீதிபதி புகழேந்தி அவர்கள்.. 
ஒரு முதலமைச்சரால் எவ்வளவு  அதைவிட அதிகமாக தமிழ்நாடு முதலமைச்சர் உழைக்கிறார்  அவரை பாராட்டாவிட்டாலும் விமர்சிக்காதீர்கள்"  என்றார் ..
ஆனால் 
நாங்கள் விமர்சனம் செய்வதை கூட வரவேற்கிறோம், குறைகூறவில்லை ஆனால் அவதூறை பரப்பாதீர்கள் ..  
மீறும் போது  கைது என
கதறவேண்டிவரும் .. சரியான நடவடிக்கையை வரவேற்போம்.. 
..
ஆலஞ்சியார்

Saturday, November 27, 2021


அன்பின்,  
தமிழ்நாடு முதலமைச்சர்
முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களுக்கு 
கனிவோடு ஒரு மடல் 
..
இந்த கடிதம் சாமானியனின் எதிர்பார்ப்பும், கவலையும் அடங்கியது .. திராவிடச் சித்தாந்தத்தால் கவரபட்டு 
பெரியாரை அண்ணாவை கொண்டாடி, மானமிகு கலைஞரை கண்டும் படித்தும் வந்ததின் பலனாய், சமூக அக்கறையோடு எழுதுகிறேன் ..
..
சிறைவாசிகள் விடுதலை..
நீண்டகாலம் சிறையில் தங்கள் இளமையை தொலைத்துவிட்டு வாழ்வின் இனிமைகளை எல்லாம் சட்டென்ற உணர்ச்சி மிகுதியில் இழந்துவிட்டு குடும்பம் தன்னை நம்பியிருப்பவர்கள் என யாரையும் பொருட்படுத்தாமல் சதியில் விழுகிறோமென அறியாமல்,  நீண்ட சிறைவாசத்தை அனுபவிப்பவர்கள் .. சிறைதண்டனை என்பதே அவர்கள் தவறை திருத்திக்கொள்ளவேண்டும் என்பதற்காகவும் இனியேனும் சமுதாயத்தில் நல்லமுறையில் வாழவேண்டும் என்ற பயிற்சியாக அமைதலே அதன் நோக்கம் ..
..
பல்வேறு வழக்குகளில் சிறைதண்டனை பெற்றவர்கள் "அண்ணா" பிறந்தநாளில் விடுதலை செய்வதை நாம் வரவேற்றிருக்கிறோம்.. சிறைவாசிகள் விடுவிப்பதில் மதம் தடையாக இருப்பதும் மதகலவரங்களில் மதமோதலில்
மத வன்முறையில் ஈடுபடுபவர்களை விடுவிப்பதற்கு தடையாக இருப்பதாக சொல்வதை நாகரீக சமுகம் ஏற்காது .. குற்றம் எதுவாகினும் நீண்ட தண்டனைக்காலம் என்பது அநீதி ..
இந்திய நீதி சமத்துவதானதாக இ்ல்லை என்ற குற்றசாட்டும் குறிப்பாக இஸ்லாமிய சமுதாய மக்கள் சிறைதண்டனையை "தீவிரவாதம்" என்ற பெயரிலும் இறையாண்மைக்கு எதிராக சித்தரிப்பிலும் தொடர்ந்து அநீதி இழைக்கபடுவதும் .. அதற்கு சாட்சியாக பல்வேறு வழக்குகளில் நீதிபதிகளே வாய்மொழியில் உறுதிபடுத்தியதும் நாடறிந்து.. நீதிபதிகளை மிரட்டிய சம்பவங்களும் அதை மீறி நிலைநாட்ட முற்பட்டவர்கள் கொல்லபட்டதும் வரலாற்றில் கருப்பு பக்கங்களாக மாறியதல்லாம் அறிவீர்கள்
..
விசாரணை கைதியாக நீண்ட சிறைவாசம் என்பது அநீதி . ஒரு சமூகம் தொடர்ந்து "குற்றபின்னணி" யாக சித்தரிக்கபடுவதும், பொது சமூகத்தின் முன் "தீவிரவாதிகள்"
என புத்தியில் ஏற்றிவைத்திருப்பதின் பின்னின் அரசும் அரசியல்வாதிகளும்,ஊடகங்களும் சினிமாவும் 
பெரும்பங்காற்றி இஸ்லாமிய 
சமூகத்தை கூண்டில் ஏற்றி நிறுத்தியிருக்கிறது ..
தொடர்ந்து இஸ்லாமிய சமூகம் அச்சுறுத்தபடுவதும் அதை அரசியலாக்கி பாசிசம் வளர்வதும் தொடர் கதையாகிறது.. 
..
சமூக வலைதளங்களில் தொடர்விவாதங்கள் இச்சமூகம் தொடர்ந்து அதிகாரத்தால் அழுத்தபடுவதை பதிவு செய்து வந்திருக்கிறது ..
நீண்ட சிறைவாசிகள் அதிலும் இஸ்லாமியர்கள் விடுதலை குறித்த விழிப்புணர்வு பொது சமூகத்திலும், நீதிபரிபாலன சபையிலும் வந்திருப்பதும், சமூகஆர்வலர்கள் இஸ்லாமிய சமூகத்தினர் மீதான வன்மம் நிறைந்த செயல்திட்டங்களை கண்டிப்பதோடு ஒருதலைபட்சமாக செயல்படும் அரசஅதிகாரத்தையும் கேள்வி கேட்க தொடங்கியிருப்பது சற்று ஆசுவாசம்படுத்துகிறது ..
..
திமுக ஆட்சிக்கு வந்தவுடன் இஸ்லாமிய கைதிகள் விடுதலை குறித்து நிறைய பேச தொடங்கியிருப்பதே நல்லமுன்னேற்றம் .. அதிமுக ஆட்சியில் இந்தளவு சமூகம் அக்கறைகாட்டதற்கு அவர்களின் பாதையும் போக்கும் அறிந்ததும், அதிமுக மீதான அவநம்பிக்கையின்மையும்தான் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் எதிர்பார்ப்பு அதிகமாகிறது ..
..
மதத்தை முன்னுறுத்தி விடுதலை கேட்பதில் எனக்கு உடன்பாடில்லை ஆனால் 20, 30 ஆண்டுகள் சிறையில் கழிப்பவனை மனிதாபிமானம் கொண்டு விடுதலை செய்திட வேண்டும் .. என்ன குற்றம் எதற்காக என்பதை தாண்டி கருணையோடு பரிசிலிக்க வேண்டும் .. தண்டனைகாலம் தாண்டி சிறைவாசம் என்பது அநீதி .. எல்லோருக்கும் நீதி சமவாய்ப்பில் சமஉரிமையோடு வழங்குவதுதான் "செங்கோன்மை"க்கு அழகு ..
நிறைய நம்பிக்கையோடு எதிர்நோக்கும் ஒரு சமூகம் .. நிறைய அழுத்தபட்டு அநீதியோடு அழுதுநிற்கும் அவர்கள் குடும்பங்கள்.. குடும்பத்தின் வருவாய் இழந்து 20 ஆண்டுகள் சட்டபோராட்டம் என வாழ்வின் சுகங்களை இழந்து கடைசி நம்பிக்கையோடு நிற்போரை கருணையோடு 
#முத்துவேல்கருணாநிதிஸ்டாலின் விடுதலை செய்வாரென இஸ்லாமிய சமுதாயம் "பெரும்நம்பிக்கையோடு" காத்திருக்கிறது .. விடுதலையில் ஏற்படும் சட்டச்சிக்கலை தவிர்க்க இஸ்லாமிய சமுதாய தலைவர்களும் ஒருங்கிணைந்து ஆலோசனை செய்யலாம் .. திமுகவின் மீதும் தங்கள் மீதும் இஸ்லாமிய சமூகம் தரும் அழுத்தம் #நம்மவர் என்ற உரிமையில் ஏற்படுவதென்பதை அறிவோம் .. தொல்.திருமா சொன்னதை போல விடுதலை பெறும் தகுதிபட்டியலில் "மதம்" தடையாக இருப்பதை முதல்வர் அவர்கள் கவனத்தில் கொண்டு களைய முன்வரவேண்டும்.. 20 ஆண்டுகளுக்கு மேல் சிறைவாசம் அனுபவிப்பவர்களை விடுதலை செய்யபடுவார்கள் என தேர்தல் அறிக்கையில் சொன்னதை நினைவூட்டுகிறோம்.. இப்போது நிபந்தனைகள் விதிப்பது சரியல்ல.. கொடூர குற்றம் புரிந்தவன் கூட 20 ஆண்டுகளுக்கு மேல் சிறைவாசம் அனுபவித்து வெளியே வந்தால் எஞ்சிய காலத்தை நல்லமுறையில் வாழ தான் ஆசைபடுவான் என்பதை முதல்வர் ஸ்டாலின் கருத்தில் கொள்ளாதது கவலையளிக்கிறது என்ற  விமர்சனம் உண்டு..
இன்னமும் நம்பிக்கை இருக்கிறது முதல்வர் அவர்களே
இஸ்லாமிய சமூகத்தின் மீது அக்கறையும் அன்பு கொண்டவர்..
அவர்கள் படும் துயரம்,சந்திக்கும் இன்னல்கள் எல்லாம் 
மற்ற ஆட்சியாளர்களை விட 
அறிவீர்கள்.. நீண்ட சட்ட போராட்டங்களும், விசாரணை கைதியென்ற பெயரில் சிறைகூட்டில் நிற்பவர்களை கருணைக்கொண்டு விடுதலை செய்யுங்கள் .. பொது சமூகம் கூட கைதட்டி வரவேற்கும்..
முஸ்லிம் கைதிகள் விடுதலையில் உள்ள சட்டசிக்கல்களை களைந்து விரைந்து நடவடிக்கை வேண்டும்
எல்லா சமூககங்களும் இந்த அரசின் மீது கொண்டுள்ள நல்லெண்ணம் கெடாதவாறு விரைந்து நடவடிக்கையை எடுங்கள்..
..
யாருக்காகவோ விடுதலையை கேள்விக்குறியாக்கினால் பாதையில் தடுமாற்றம் என வரலாறு பேசும் ..  
நிரம்ப எதிர்பார்ப்போடு இஸ்லாமிய சமூகம் நிற்கிறது  என்பதை எடுத்து சொல்லும் கடமை எமக்குண்டு ..
..
அன்புடன்
திராவிடன்
ஆலஞ்சியார்

Sunday, November 21, 2021

இனி பாமக தலைமையில் தான் கூட்டணி .. 
எந்தகட்சியுடனும் கூட்டணி சேராது..

கடைசி நேரத்துல அய்யா யார்கிட்டயாவது போயிடுவார்னு நீ நெனச்சா,  நீ இருக்க வேண்டிய இடம் கீழ்பாக்கம் மருத்துவர். ராமதாஸ்..
பாவம் பாமக தொண்டர்கள் 
பார் உள்ளளவும்  என்றெல்லாம் பழந்தமிழ் பேசி கதை பழையதானது .. இப்போது கூட அதிமுக தயவில் தானே அன்புமணி எம்பியாக இருக்கிறார்.. ஒரு தீர்க்கமான முடிவெடுத்தபிறகு அதிமுக தயவில் வந்த பதவியை ராஜினாமா செய்து ராமதாஸ் சொல்லும் மானமுள்ளவராக நமக்கு காட்சி தருவார் ..
..
பேச்சில் நேர்மையில்லை அடிக்கடி மாறிமாறி சவாரி செய்ததை தளபதி நாசுக்காக கழட்டிவிட தனியாக என கோஷம் எழுப்பி மாற்றம் முன்னேற்றமென சொல்லி கடைசியில் அங்கும் இங்கும் கடைவிரிக்க மீண்டும் தளபதி கண்டுக்கொள்ளாமல் கடைசியில் மீண்டும் தனித்து என்கிறார்கள்.. வன்னிய பெருசமூகம் இவர்களை நம்புவதை விடுத்து வெகுகாலமாகிவிட்டது .. கட்சியில் ஊரக நிர்வாகத்திற்கு கூட ஆள் கிடைக்கவில்லையென ஒப்புதல் வாக்குமூலம் தருகிறார் ..
..
சமூகநீதி பேசுபவராக தன்னை அடையாளபடுத்தி நின்றவர் சாதிய குறியீட்டை சுமந்து சறுக்கிய வரலாறு அறிவோம் .. தன் மகனை முன்னிறுத்தி அரசியலை கையிலெடுத்ததும் ஏற்கனவே செய்த சத்தியத்தை ஊடகங்களும் வெகுஜனங்களும் ஞாபகம்படுத்த சரிவு தொடங்கியது .. சின்ன சின்ன விடயங்களுக்கு இளைஞர்களை தூண்டி வழிகேட்டில் நிறுத்தும் அரசியலை தவிர வேறெதும் ஆக்கபூர்வ செயல்பாடுகள் இல்லை .. வன்னிய இளைஞர்கள் கல்வி வேலைவாய்ப்பை உருவாக்கவோ அதற்கான கட்டமைப்பை செய்யவோ முயற்சிக்கவில்லை ..அரிவாளை தூக்கி வா நம் சாதியை குறை சொல்லிவிட்டான் என உணர்ச்சி விளிம்பில் நிறுத்தி புகழ்தேடும் கயமையை விட்டொழிக்கவேண்டும் .. 
..
ஒரு திரைப்படம் பேச வந்த கருத்தை உள்வாங்காமல் தன் சாதியை கேவலபடுத்திவிட்டான் என கம்பு சுத்துவது ..வன்னிய இளைஞர்களை தியேட்டரை கொளுத்துவோம் 5 பேர்தான் பாதுகாப்பிற்கு நாங்கள் ஆயிரம் பேர் திரண்டால் என பேசவைப்பது நீண்டகாலம் அரசியல் களத்தில் நிற்கும் ராமதாஸ் அய்யாவிற்கு அழகல்ல.. படத்தின் உள்நோக்கம் ஏதுவுமில்லை என தெளிவுபடுத்திய பிறகு அன்புமணி தேவர்படத்தை வைத்தால் சும்மா இருப்பார்களா என சாதி மோதலை உருவாக்க நினைப்பது அரசியல் அறிவிலித்தனம் .. தமிழக மக்கள் தெளிவானவர்கள் சாதி அடையாளத்தை மத அடையாளத்தை எங்கே பயன்படுத்த வேண்டும் என்ற நற்றறிவு உடையவர்கள் .. இயக்குநர் உள்நோக்கமில்லை வருடத்தை குறிக்கமட்டுமே பயன்படுத்தியதாகவும்
யார் மனமாவது புண்பட்டிருந்தால் வருத்தம் தெரிவிப்பதாக சொல்கிறார்
அனைத்து சமூகத்தினருக்கும் இடையே நல்லிணக்கம் ஏற்படுத்தும் கலைவடிவமே திரைப்படம் என்று நான் உறுதியாக நம்புகிறேன் என்கிறார்...இதை இத்தோடு முடித்து  நல்ல அரசியலை. முன்னெடுப்போம் ..
"ஜெய்பீம் " நிறைய விவாதங்களை கருத்துருவாக்கங்களை அரசின் அலட்சியத்தை அதிகாரவர்க்கத்தின் திமிரை பேச வைத்திருக்கிறது.. இதுபோல் நிறைய படங்கள் உலகதரத்தில்  உருவாக்கபடவேண்டும்
..
தமிழ் சினிமா இப்போதுதான் சாமானியர்கள் கையில் வந்து நல்ல திரைகாவியங்கள் வருகிறது மக்கள் பிரச்சனைகள் 
மண்சார்ந்த வலிகள் பேசபடுகின்றன ..
உலக தரத்திற்கென இது என புளுகியவர்கள் கூட இப்போது உலக தரத்திற்கு தமிழர்கள் திரைபடத்தை தருகிறார்கள் என்றவுடன் எரிச்சலடைய செய்திருப்பதே தமிழனின் கலைபடைப்பின் வெற்றி .. 
ஜெய்பீம் 
..
ஆலஞ்சியார்

Friday, November 19, 2021

சர்வாதிகாரம் பணிந்தது ..
வேளாண் சட்டத்தை திரும்ப பெற 600 பேர்கள் பலி கொடுக்க வேண்டியிருந்தது.. ஆளும் அரசு மக்களின் குரல் கேட்க நீண்ட போராட்டம் தேவையிருந்தது இது இன்னுமொரு சுதந்திர போர் .. உழவனை கார் ஏற்றி கொன்று இறுமாப்பாப்போடு இருந்தவர்கள் .. உ.பி.தேர்தல் வருவதை கவனித்தில் கொண்டு திரும்ப பெற்றிருக்கிறார்கள் ..
உயிர்நீத்த உழவர்களுக்கு வீரவணக்கம்..
..
மோடி அரசு இந்திய ஒன்றியத்தின் சாபம்.. அதீத பெரும்பான்மை வன்மத்தை கையிலெடுக்க தூண்டியது.. அமைச்சர்கள் முதல் அடிபொடிகள் வரை அகங்காரத்தில் பேசினார்கள் இப்போதும் வெங்காயம் சாப்பிடுவதில்லை என்ற குரலின் தொனி நமக்கு நிறைய உணர்த்தும் .. ஒரே நாடு ஒரே கொள்கை என்பதெல்லாம் ஒன்றியத்தை சிதறடிக்கும்  .. ஆணவக்காரர்கள் கற்று தேர்வதில்லை என்பார் கலைஞர் காலம் நமக்கு நல்ல பாடத்தை உணர்த்தி ஒன்றுபட்டு எதிரியை வீழ்த்துங்களென சொல்கிறது .. யார் பெரியவன் அதிகார ஆசை மதமும் சாதியும் தலையில் ஏற்றி வெறித்தனத்தை வேற்றுமையை விதைத்து நம்மால் எதையும் சாதிக்க முடியாதென்பதை நாம் உணரவேண்டும்.. பதவி நல்வாய்ப்பு மக்களுக்கு பணி செய்ய என்று எண்ணி செயல்படுபவனே சிறந்த தலைவனாய் காலம் கடந்தும் வரலாற்றில் பேசபடும் 
..
தேர்தல் 
ஜனநாயகத்தின் வலிமையான ஆயுதம் அதனால் தான் ஆட்சியாளர்கள் பிடிவாதமாக செயல்படுத்தும் மக்கள் விரோத செயல்களை  மறுபரிசிலினை செய்கிறார்கள்.. மக்கள் தங்கள் வலிமையை உணராமல் போனால் மோடியை போன்றவர்களும் பாசிசவாதிகளும் தான் ஆட்சியாளர்களாக வருவார்கள்.. தங்களின் பலத்தை வலிமையை உணர்ந்து மதம் ,சாதி, தற்பெருமை, புகழ் பதவி பணம் என அற்பங்களுக்கு துணைபோகாமல் வழங்கிநிற்காமல், வெறிகொள்ளாமல் நல்லவர்களை நாட்டை நல்வழியில் ஆள்பவர்களை  அதிகாரத்தை சேவை செய்ய மக்கள் நமக்கு தந்திருக்கும் வாய்ப்பாக கருதுபவர்களை கூப்பிட்ட குரலுக்கு செவிசாய்பவர்களை மக்களின் மீது பேரன்பு கொண்டவர்களை நாடும் மக்களும் தேர்வு செய்தால் இந்திய ஒன்றியத்தை கண்டு உலகே வியக்கும்..
மக்களிடம் செல் மக்களிடம் பழகு மக்களிடமே கற்றுக்கொள் என்ற பேரறிஞர் அண்ணாவின் அரசியல் இலக்கணத்தை உணரவேண்டும்.. மக்கள் காப்பாளன் காவலன் எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு 
இந்திய ஒன்றியத்திற்கு எடுத்துகாட்டாய் விளங்கும் தவைவர் 
#முத்துவேல்கருணாநிதிஸ்டாலின் .. 
அவரின் சிந்தனை செயல் எல்லாம் மக்களின் மீதான அக்கறையின் வெளிபாடாய் இருக்கிறது ஒரு உதாரணம் சாலை விபத்துகளில் 48 மணி நேர சிகிச்சையை அரசே ஏற்கும் என்பது சிறந்த எடுத்துகாட்டு மக்கள் அதிகாரம் தந்தது இதற்காகதான் .. 
இந்திய ஒன்றியம் கணக்கில் கொள்ளபடவேண்டிய தலைவர் 
ஸ்டாலின் 
..
காலம் சிறந்த ஆசான்..
..
ஆலஞ்சியார் 

Sunday, November 14, 2021

நான் ஆய்வுக்கு வருவது தெரிந்தே மழை நீர் அகற்றம் ..
எடப்பாடி.. 
தண்ணீரை இறைக்காதீர்கள் கமல் வந்து பார்த்துவிட்டு போகும் வரை தண்ணீரில் நிற்கட்டும் ..
போட்டோ ஷூட் நடத்தி மழைநீர் இன்ப சுற்றுலா .. 
மேம்பாலங்களே மழைநீர் தேங்க காரணம் ..
பாவம் எதிர்கட்சிகள் ..
..
துரித செயல்பாடு இந்திய ஒன்றியத்தில் இப்படியொரு முதல்வர் இதுவரை பார்த்ததில்லையென பெருமிதம் கொள்கிறார்கள்.. மக்கள் நம் முதல்வர் நிச்சயம் இடறுகளை களைவார் நம்பிக்கையோடு இருக்கிறார்கள் ஆம் ஒளிப்பதிவாளர்
பி.சி ஸ்ரீராம் முதல்வர் மீது நம்பிக்கை இருக்கிறது அரசியல் செய்யாதீர்கள் என்கிறார் ஆம் வெகுமக்களின் குரலும் அதுதான் ..
..
ஒரு ஆட்சியாளர் மக்களோடு தொடர்புடையவனாக மக்களோடு இரண்டற கலந்தவனாக கைநீட்டி அழைத்தால் கூப்பிட்ட குரலுக்கு  செவிசாய்ப்பவனாக இருக்கவேண்டும்.. முன்பெல்லாம் ஆட்சியாளர்களை சுற்றி துதிபாடிகள் இருப்பார்கள் மக்களின் குரல் மகேசன் காதுகளில் விழாதவாறு புகழோசை காதை கிழிக்கும் .. வெற்று மனிதனின் ஆதங்கம் அழுகுரல் மன்னவன் காதுகளில் விழாமலே போகும் .. ஆனால் இப்போது சன்னகுரலில் அழைத்தாலும் தனியொருவராய் கைநீட்டி  அழைத்தாலும் தலைவர் காரை நிறுத்தி காதுகொடுக்கிறார் .. 
சாமானியர்கள் குரல் கேட்டு அவர்கள் குறை தீர்க்கிறார் ..
..
எதிர்க்கட்சிகள் அரசியல் செய்ய முடியாதவாறு தலைவரின் செயல்பாடுகள் இரண்டே நாளில் இயல்புநிலை திரும்பியது மாநகராட்சி  நன்றி என பகைவர்கள் கூட வேறு வழியின்றி புகழ்கிறார்..கொரோனா தடுப்பில் முன்னிலை மாநிலமாய் நிறுத்தி நிம்மதி பெருமூச்சுவிட வைத்தார் .. அடிமைகள் உயிர்வளி (ஆக்சிஸன்) கூட கையிருப்பு இல்லாமல் வைத்த நிலையில் போர்காலமென அதிகாரிகளை தன்னார்வலர்களை துரிதபடுத்தி மெச்சும்நிலையில் நம்மை கொண்டுவந்து சேர்த்தார்..
நடிகர் பார்த்திபன் எதிர்க்கட்சிகளுக்கு வேலை தருவதே இல்லை என்கிறார் .. இரண்டுநாள் கழித்து வந்து பார்த்தால் ரோட்டில் தண்ணீரில்லை நான் வருவது தெரிந்து நீரை இறைத்துவிட்டார்களென புழுவை போல முண்டுகிறார்
..
எதிர்க்கட்சிகள் எதேதோ சொல்கிறார்கள் எதையும் காதில் வாங்குவதில்லை காழ்ப்புணர்ச்சியும் பொய்யும் எதையாவது பேசி உள்ளேன் அய்யா என பிலிம்காட்டுவதையும் கண்டுக்கொள்ளாமல் .. எனக்கு வாக்களிக்காதவர்களுக்கும் சேர்த்துதான்  ஓடிக்கொண்டிருக்கிறேன் என்கிறார் முதல்வர் ..
இங்கிவனை யாம் பெறவே என்ன தவம் செய்தோம்
..
வேலன்று வென்றி தருவது மன்னவன்
கோலதூஉங் கோடா தெனின்..
ஓர் அரசுக்கு வெற்றியைத் தருவது பகைவரை வீழ்த்தும் வேலல்ல; குடிமக்களை வாழவைக்கும் வளையாத செங்கோல்தான்..
..
ஆம் மக்களை வாழவைக்கும் வளையாத செங்கோல்
எங்கள் முதல்வர் 
#முத்துவேல்கருணாநிதிஸ்டாலின்..
..
ஆலஞ்சியார்