Tuesday, January 31, 2017
அவளும் நானும்..
அவளும் நானும்..
எப்படி சொல்வேன்..
அரும்புமீசை வளரும்காலம்
காதல் அரும்பிய பொன்நேரம்....
ஆசையா.. ஈர்ப்பா..
அது காதல்தானா..
அறியாமல் அரும்பிய
மனம் கவர்ந்த மல்லி..
..
ஆற்றங்கரையில்
விரல்உரசி..
நடந்ததெல்லாம்..
வரவை எண்ணி.
ஆற்றுபடுகையில்
புத்தகத்தால் முகம் மூடி
தவமிருந்த மணிதுளிகள்..
மழை நின்று
இலை சிந்தும் நீரில்
நனைந்து..
இதமாய் இதழ் பதித்த..
நான்..ரசித்த
ரசனைக்குரிய நாட்கள்..
..
முதல் காதல்..
முதல் முத்தம்..
முதல் ஸ்பரிசம்..
மறக்கமுடியாத..
காவிரிக்கரை..
அழகிய தென்னந்தோப்பு..
சிறிய குட்டை..
தாமரைக்குளம்..
அமைதியான..
அக்ரஹார கோவில் நிழல்..
சின்ன சிணுங்கல்..
பெரும் மூச்சு..
கருவிழி நாட்டியம்..
என்னை கொன்ற கவிதையது..
மறக்கமுடியுமா..
..
ஒற்றைவரியில்..
மனம் விரும்பிய #கவிதை அவள்..
..
அவளும் நானும்..
..
தோழர் ஆலஞ்சி
என்இனத்தின் தளபதி
தளபதி மிளிர்கிறார்..
மிகவும் பக்குவப்பட்ட உரையாடல்களும் நடத்தையும் அவரை மேலும் மேலும் உயரத்திற்கு கொண்டுவருகிறது..
நாங்கள் தவறுசெய்தால் அதே தவறை நீங்களும் செய்யவேண்டுமா.. என்று சட்டமன்றத்தில் கேட்கிறார்...
..
தளபதியாரின் சமீபத்திய நடவடிக்கைகள் கூர்ந்து கவனியுங்கள்.. மிகவும் கண்ணியமான நாகரீக அரசியலை வளர்த்தெடுக்க முற்படுகிறார்.. பேனர்கள் வைக்கவேண்டாமென கட்சியினருக்கு அவர் இட்டிருக்கும் கட்டளை ..
முதல்வர் காருக்கு வழிவிட்ட செயல் தீவிரவாத எதிர்ப்பு உறுதிமொழியில் எதிர்க்கட்சிதலைவராக கலந்துக்கொண்டது குடியரசுதின விழா..ஏன் ஜெயலலிதா பதவியேற்ப்பு என சொல்லிக்கொண்டே போகலாம்.. இவையாவும் முன்பு இல்லையா என கேட்கலாம்.. திரு மகோரா ஆட்சிக்கு பிறகு தான் எதிர்க்கட்சியினரை எதிரியாக பார்க்கும் பழக்கம் வந்தது.. தன் கட்சிகாரர்கள் கலைஞரை சந்தித்து தனிப்பட்ட விடயமாக பேசினால் கூட சந்தேகத்தோடு அவர்களை கட்டம் கட்டும் நடவடிக்கையை எடுத்தார் அதனால் கலைஞர் கூட.. வேணாய்யா..என்னை சந்தித்தால் உன் எதிர்காலம் கேள்விகுறியாகும் என எச்சரிப்பார்.. அந்தளவிற்கு அநாகரீக அரசியலை திரு.மகோரா (எம்ஜிஆர்) விதைத்துவிட்டுபோனார்.. நாளடைவில் அது தொடர்ந்து வெறுப்பை எதிர்கருத்தாளர்கள் மீது செலுத்தும் போக்கை வளர்த்துவிட்டது..
..
ஏதோ இன்றைக்கு தான் ஸ்டாலின் இந்த நல்ல போக்கை கடைப்பிடித்ததாக தோன்றும்..அவரை தொடர்ந்து கவனிக்கறவர்களுக்கு அவரின் பண்பு நன்கு விளங்கும்.. முதல்முதலில் இளைஞர் அணி செயலாளராக பொறுப்பேற்றவுடன் நடந்த முதல் கூட்டம் பாபநாசத்தில் ஏற்பாடு செய்திருந்தோம்.. ஒருமரத்தை நட்டு குடைபோல் மேடை அமைத்திருந்தோம்.. பேசும் போது ஸ்டாலின் என்னை நம்பி இளைஞர்அணி பொறுப்பை தந்திருக்கிறீர்கள் இந்த மேடையை கூட ஒற்றை மரகுடையில் வடிவமைத்து இருக்கிறீர்கள் இங்கு பேசிவர்கள் என்னிடம் பொறுப்பு வழங்கப்பட்டிருப்பதை சொன்னார்கள்..அவர்களுக்கு ஒன்றை சொல்லிக்கொள்கிறேன்..உங்கள் அனைவரின் ஆதரவு இல்லாமல் என்னால் தனித்து செயல்பட முடியாது உங்கள் துணைக்கொண்டு வெற்றிகரமாக
கலைஞரும் பேராசிரியரும் என்னை நம்பி ஒப்படைத்த பொறுப்பை செய்வேன் என உறுதியளிக்கிறேன் என்றார்.. அந்த தன்மைதான் இந்தளவிற்கு உயர்த்தியிருக்கிறது.. இதோ நான்தான் தலைவன் என்றவர்கள் விலாசம் தெரியாமல் போனதற்கு இந்த எளிய பண்பில்லாமல் போனதே காரணம்..
..
தமிழகத்தின் நம்பிக்கை இவர்..
எதிரிகளும் வாயடைத்து போய்நிற்கிற இவரின் செயல்பாடு சரியான தலைமையை காலம் உருவாக்கியிருக்கிறது.. இந்த நேரத்தில் கலைஞருக்கும் பேராசியருக்கும் நன்றிகள்..
மிகசரியான நபரை தேர்வு செய்து வார்த்தெடுத்து செதுக்கி ..இயக்கத்தின் நான்காம் தலைமுறை தலைவனாக்கி தந்திருக்கிறீர்..
நன்றி! நன்றி!!
..
#என்இனத்தின்_தளபதி....
..
தோழர் ஆலஞ்சி....
Monday, January 30, 2017
பனை தமிழச்சி..
போராட்டம் செய்த மாணவர்களால் பெண் போலீசார் பாலியல் தொந்தரவிற்கு ஆளானார்கள் தமிழிசை..
நாகரீகமான மொழியில் பதில் சொல்லவேண்டுமென என்னை கட்டுபடுத்திக்கொள்கிறேன்.. சாமியார்கள் லீலைகளை பார்த்து பார்த்து பழகிபோனதால் அவரின் கட்சியை சேர்ந்தவர்கள் சட்டமன்றத்திலேயே பலான படம் பார்க்கிறவர்கள் என்பதால் சிந்தனை அப்படியே இருக்கிறது..
..
மிக நாகரீகமாக நடந்துக்கொள்கிறவர்கள் நம் மாணவர்கள் இன்றைய இளைஞர்கள் மிக தெளிவாக இருக்கிறார்கள்.. போராட்டம் ஆரம்பம் முதலே பெண்கள் குழந்தைகள் என அதிகளவில் கலந்துக்கொண்டார்கள் விடியவிடிய மாணவிகளும் போராட்ட களத்தில் இருந்தார்கள்.. தமிழிசை சொல்வது போல அப்படியொரு சம்பவம் நடந்திருந்தால் அப்போதே வெளிச்சத்திற்கு வந்திருக்கும்.. எதையாவது சொல்லி பிழைக்கவேண்டி இருக்கிறதே இந்த #பனைதமிழச்சிக்கு என்பதை எண்ணும் போது வருத்தமுண்டு இலக்கியச்செல்வரின் #சிறந்தப்பிழை இவர்..
..
பாஜகவின் அஜந்தாவை நடப்பிலாக்க தமிழர்கள் மீதும் அவர்கள் வாழ்வியல்மீதும் கலாச்சார பண்பாட்டின் மீதும் தொடர்ந்து தாக்குதலை நடத்துகிற பாசிசம் அதற்கு தமிழர்களையே பயன்படுத்துகிற பழைய தந்திரத்தைதான் தொடர்ந்து செய்துவருகிறது.. அதில் சிக்கியவர்கள் நம்மை நம் கைக்கொண்டே கண்ணை குத்துகிறார்கள்..
..
பாஜக சங்பரிவார் ஆர்எஸ்எஸ்காரர்களின் காமகளியாட்டங்களை பார்த்து பார்த்து அதை நியாயபடுத்தும் தமிழசை போன்றவர்கள் இப்படிதான் பேசுவார்கள்... அவர்களின் மனம் எப்படியோ அப்படிதான் பார்வை இருக்கும்.. அதனால் அவரை குற்றம் சொல்லி பலனில்லை..
அவர்களுக்கு தெரிந்தவழி அதுமட்டும்..
தமிழிசையில் சுருதிபிழை இவர்..
..
#காமாலைகாரனுக்கு_காண்பதெல்லாம்_மஞ்சள்……
..
தோழர் ஆலஞ்சி....
Sunday, January 29, 2017
ஆர்எஸ்எஸ் பேரணிக்காக ஊரடங்கு உத்தரவு
144 தடை உத்தரவு..
இந்திய அரசிலமைப்பு தந்த உரிமைகளில் எழுத்துரிமை பேச்சுரிமை ஒன்று கூடி போராடும் உரிமை.. ஜனநாயகத்தில் போராட்டம் தவிர்க்க முடியாதது அரசாள்வோர்மீது அதிருப்தி வரும்போது மக்கள் போராடுவது தவிர்க்கமுடியாது.. எதிர்ப்பை அறவழியில் காட்டுவதென்பதும் கருப்புகொடி உண்ணாவிரதம் எதிர்ப்பு முழக்கம் இவையெல்லாம் எல்லா ஆட்சியாளர்கள் மீதும் தொடர்ந்து வந்ததை நாம் கண்டியிருக்கிறோம்.. பிரதமர் நேரு தொடங்கி மன்மோகன் சிங் வரை விமர்சனத்திற்கு ஆளாகதவர்கள் யாருமில்லை.. மாபெரும் போராட்டவடிவான ஒன்றுகூடலில் மோடிக்கெதிரான கோஷங்கள் ஆள்வோரை அச்சபடவைத்திருக்கிறது. அதனால் தேசவிரோதம் என்றெல்லாம் கதைகட்டி கடைசியில் மக்கள் நம்ப மறுத்தவுடன் வேறுவழியின்றி எங்கே மீண்டும் ஒன்றுசேர்ந்து போராட்டத்தை கடுமையாக்கிவிடுவார்களோ என அஞ்சிய அரசு..
கையாலாகாத பொம்மை/பினாமி அரசை வைத்துக்கொண்டு களியாட்டமாடுகிறது..அதில் ஒன்றுதான் பிப்ரவரி12 வரை மெரினாவில் யாரும் போராட தடை.. இது சட்டவிரோதமும் கூட..
..
ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு மட்டும் மெரினா சாலையில் அனுமதி அளித்தது ஏன்.. 144 அவர்களுக்கு பொருந்தாதா.. ஜனநாயக நாட்டில் ஊர்வலத்திற்கு அனுமதி எனில் நாங்களும் ஊர்வலமாய் செல்ல அனுமதிப்பதுதானே முறை.. இதற்கு அரசும் காவல்துறையும் பதில் சொல்லவேண்டும்.. காவிகள் காலூன்ற இந்த பொம்மை அரசு தலையாட்டுகிறது.. இந்த 144 கூட ஆர்எஸ்எஸின்/பாசிசத்தின் எதிர்ப்பாளர்கள் பெருமளவில் கூடிவிடுவார்கள் என்பதால் கூட இருக்கலாம்..
எத்தனை காலம் ஆடுவீர் ஆடுங்கள் ..
அடக்குமுறையும் பின்புறத்திலிருந்து இயக்குவதும் வெகுகாலம் நிலைத்திருப்பதில்லை.
சர்வாதிகாரமும் அடக்குமுறையும் உலகில் வென்றதில்லை..
#அடக்குமுறையால்எதுவும்_சாதிக்கமுடியாது..…
தோழர் ஆலஞ்சி...
Friday, January 27, 2017
எரிச்சல் ஏன்..
ஒரு வாரம் ஊடகங்கள் புறக்கணித்தால்/இருட்டடிப்பு செய்தால் ஸிடாலின் மறைந்து போய்விடுவார்..அன்புமணி..
இவர் இருப்பதே இப்போதுதான் ஞாபகம் வருகிறது.. இது பழைய டெக்னிக் அன்பு மணி வேறு ஏதாவது யோசித்திருக்கலாம்.. முன்பு கலைஞரைப்பற்றி ஏசியோ புகழ்ந்தோ பேசினால் தான் அரசியலில் இருப்பதே தெரியும் அதை அப்பன் சொல்லி மகன் கேட்டிருப்பாரென நினைக்கிறேன்..
..
திரு.ஸ்டாலின் நாளுக்கு நாள் வளர்ந்துக்கொண்டிருக்கிறார் மக்கள் மனதில் அசைக்கமுடியாத நிலையான இடத்தை தன் நடவடிக்கையின் மூலம் தினம் தினம் செய்துக்கொண்டிருக்கிறார்.. அவரின் அரசியல் நாகரீகம் எதிரிகளாலும் பாராட்டபடுகிறது.. நேற்றைய தினம் கூட முதல்வர் வாகனத்திற்கு வழிவிட்ட நேர்மையான அரசியல் எல்லாருடைய புருவங்களையும் உயர்த்தியிருக்கிறது..
இதெல்லாம் இந்த மாதிரியான சிறந்த நாகரீக அரசியல் தாங்கள் அறியாதது தெரிந்ததெல்லாம் இளைஞர்களிடத்தில் சாதி வெறியை வளர்த்து குளிர்காய்வதை தவிர வேறொன்று அறிந்திருக்கவில்லை சாதிவெறி என்ற பயிற்சியை தவிர நல்ல முன்மாதிரிகளை ஸ்டாலினை கண்டு படியுங்கள்..
..
முதலில் ஒருவரை விமர்சிப்பதற்கு முன் அவரின் நடவடிக்கைகள் மக்களிடம் நல்ல பாராட்டை பெற்றிருக்கிறாதா அல்லது விமர்சனத்திற்கு ஆளாகியிருக்கிறதா என்று பாருங்கள்.. அதற்கு முன் விமரிசிக்க தகுதி இருக்கிறதா என்று சுயம் பரிசோதித்து கொள்ளுங்கள்..
மக்களால் பெருவாரியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரதான மிகபிரமாண்டமான இதுவரையில்லாத அளவிற்கு எதிர்க்கட்சியாக இருக்கும் கட்சியின் செயல்தலைவரை.. டெபாசிட் கூட வாங்க வக்கியில்லாதவர் பேசலாமா..என்று எங்களாலும் கேட்க முடியும்... ஆனால் ஒன்று மட்டும் உங்கள் பேச்சினுடே புரிகிறது..
#எரிச்சல் .. வேறொன்றும் இல்லை..
..
#ஆதவனை_கரம்கொண்டு_மறைத்திடமுடியுமா..
..
தோழர் ஆலஞ்சி....
Thursday, January 26, 2017
குடியரசு..
#குடியரசு....
இன்றைய தினம் அண்ணல் அம்பேத்கரின் தினமாக கொண்டாடபடவேண்டும் இந்திய அரசியல் சாசனத்தை ஒழுங்குபடுத்தி வடிவமைத்து தந்தவர்..
சுதந்திர போராட்டத்தில் வெள்ளையருக்கு வெணிசாமரம் வீசியவர்கள்.. அவனை அடிதொழுதவர்கள் அதிகார மையத்தை கைப்பற்றிய பிறகும் அரசியல் சாசன சட்டத்தை வடிவமைக்க இந்த தாழ்த்தப்பட்டவர்தான் கிடைத்தார்.. ராமர்கதையை எழுத வால்மீகி தேவைப்பட்டதைப்போல..
..
இன்றைய தினம் பெருவாரியாக தமிழகமெங்கும் மக்கள் கலந்துக்கொள்ளாத குடியரசுதினமாக கழிந்துக்கொண்டிருக்கிறது.. சென்றவருடம் முகநூலில் தங்கள் ப்ரோபைலில் தேசிய கொடியை வரைந்தவர்களில் 90 விழுக்காடு மௌனமாய் கடந்துச்செல்கிறார்கள்.. குடிமக்களுக்கான அரசாக இல்லாமல் ஒருசில கார்ப்பரேட்களுக்கான அரசாகவும் அவர்களின் தேவைக்காக மக்களை பிழிந்தெடுக்கிற அரசாக அமைந்ததும்.. மத்திய அமைச்சர்கள் கூட மதசார்ப்பின்மைக்கு எதிராக வெளிப்படையாகவே குரல் கொடுப்பதும்..நாடெங்கும் குரங்குகையில் கிடைத்த பூமாலைப்போல திடீரென்று ஒரு இரவு கையில் உள்ள காசெல்லாம் செல்லாது என அறிவித்து நடுதெருவில் நாள்கணக்கில் நிற்கவைத்ததும். அமைதி வழி அறப்போராட்டத்தை தடிக்கொண்டு கலைத்து செயற்கையான ஒரு பதற்றத்தை உருவாக்கியதும் .. போராடினால் இதுதான் கிடைக்குமென..
காவலரே தீவைக்கிற காட்சிகளை கண்டு.. மக்கள் மனதில் மாறாக வடுவை தந்திருக்கிறது சிறிய பிள்ளைகளை கூட தீவிரவாதிகளை தாக்குவதைப்போலதாக்கி ரத்தம் சொட்டசொட்ட ஓட விட்டதும் தமிழர்களை இந்தியத்திலிருந்து சன்னமாய் அறுத்தெடுத்தது..
..
கோமாளிகளும் கூத்தாடிகளும் வீரவசனம் பேசவைத்து தேசபற்றை வளர்த்தெடுக்க அரும்பாடுபட்ட நிலை மிகபெரிய அவலமாய் திரும்பி தாக்குகிறது. இந்த குடியரசு தினம் தமிழர்கள் மனதில் ரணத்தை/கீறலை வரைந்திருக்கிறது. ஆட்சியாளர்கள் அதை சரிசெய்ய வேண்டும் சிறிய கீறல் என விட்டால் அது மிகபெரிய அழிவைதரும்.. அதிகாரமும் பலமும் அடக்குமுறையும் நீண்டநாள் நிலைத்திருந்ததாக வரலாற்றில் எங்குமில்லை..இந்தியா நாடல்ல துணைகண்டம் பல்வேறு இனத்தின் மொழியின் வேர்களால் நிற்கிறது சில வந்தேறிகளின் கலாச்சாரத்தை தொடர்ந்து திணிக்க முற்பட்டால் அது வீங்கிவெடிக்கிற நிலையை ஏற்படுத்தும்..
அண்ணல் அம்பேத்கர் அரசியல்சாசன சட்டத்தை எழுதிமுடித்துவிட்டு சொன்னார் என் கைகளை பிடித்துக்கொண்டு சிலர் எழுதினார்கள்.. இதை கொளுத்தவேண்டுமென்றால் முதல் ஆளாக நான்தான் கொளுத்துவேன் என்றார்..
ஒருசாரராருக்கு மட்டுமே வளைந்து கொடுக்கிற சட்டம் .. ஒற்றுமையை சிதைக்கும்..
..
கொஞ்சமேனும் மற்றவர்களும் வாழ வகைசெய்த
சட்டவடிவை தந்த
அண்ணல் அம்பத்கரை இந்நாளில் நினைவு கூர்வோம்..
..
குடிமக்களுக்கான அரசாய்
#ஒருகுடியரசுவேண்டும்..
..
தோழர் ஆலஞ்சி..
Monday, January 23, 2017
நீறுபூத்த..நெருப்பாய்
அலங்கோலமாய்..
தலைமையில்லா போராட்டம் எதைநோக்கி போகும் என்பதற்கும்.. யாரை நம்பலாம் யாரை நம்பகூடாது என்பதற்கும், திடீரென மாறும் வழிகாட்டிகள் யாரென புரிந்துக்கொள்ளவும் #மெரினா கதை சொல்லியிருக்கிறது..
நாயை கொல்ல முடிவெடுத்துவிட்டால் அதற்கு வெறிப்பிடித்திருக்கிறது என சொல்வதுதான் ராஜீய தந்திரம்.. நேற்றுவரை போராளியாக இருந்தவன் இன்று நக்சலாய், தீவிரவாதியாய் போனான்..
..
தொடர்ந்து ஒரு போராட்டம் எதுவரை சாத்தியமாகுமென அறிந்திராதவர்கள் யாருடைய ஆலோசனையையும் ஏற்க மறுக்கிற செயலும் கரைசேராதே போகும்.. எந்தயொரு போராட்டமும் அரசியலாக்கப்படாமல் போனால் அது சரியான பலனை தராது என்பதை உணருங்கள்.. கையாலாகாத ஆளும் கட்சிக்கு இருக்கிற நிர்பந்தம் மிகப்பெரிய வன்முறைக்கு வழிவகுத்தது..
இந்த நிலையிலும் நிதானம் தவறாமல் இதை ஊதிபெருக்க வழிசெய்யாமல் அமைதிகாத்ததற்கு திமுகவை பாராட்டலாம்..
காலையில் நான் உட்பட சிலர் மெரினாவை நோக்கி ஸ்டாலின் விரைந்திட வேண்டுமென பதிவிட்டோம்.. ஆனால் அப்படி சென்றிருந்தால் கலவரத்தை எதிர்க்கட்சி தூண்டுவதாக அரசுதரப்பு கதைகட்டிவிடும்.. மெரினாவிலிருந்து திருவல்லிக்கேணியை நோக்கி நகர்த்தியதின் பின்னில் சதியிருப்பதாக சொல்லபடுவதிலேயே .. இன்னும் சில ஆர்எஸ்எஸ் காரர்கள் ஐஸ்ஹவுஸ் போலீஸ்நிலையம் எரிக்கப்பட்டதின் பின்னில் தாலிபான் என கதைக்கட்ட தொடங்கியதிலிருந்தே பாசிசம் தமிழகத்தில் மிகப்பெரிய கலவரத்தை தூண்ட எண்ணியிருந்ததும்.. குஜராத் மாடல் போர்களத்தை தமிழகத்தில் நடத்திட எண்ணியதும் அறிந்தே பிரதான அரசியல்கட்சிகள் நிதானம் காத்தன.. திமுக தலைவர் மாணவர்கள் மீது ஏன் தடியடி நடத்தினீர்கள் என சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பினார்.. இதோடு முடிந்துவிடவில்லை இன்னமும் போராட்டமிருக்கிறது என்பதை அரசிற்கு உணர்த்தியிருக்கிறார்..
..
மாணவர்கள் இளைஞர்கள் பெண்கள் மீதான கட்டவழித்துவிடப்பட்ட அராஜகத்திற்கு இந்த பொம்மை அரசு பதில் சொல்லியே ஆகவேண்டும்..கலைந்து செல்ல அவகாசம் கேட்டும் வாய்ப்புதராமல் தடியடி நடத்தியதிலிருந்தே #வைத்திகளின் ஆசை நிறைவேறியிருப்பது கண்கூடாக தெரிகிறது..மிகப்பெரிய கலவரமாக மாற்ற நினைத்து பரிவார்களின் எண்ணம் ஈடேறவில்லை.. எங்கள் இளைஞர்களை அடைக்கி ஒடுக்கிவிடலாமென்ற பாசிசம் என்ணுமேயானால் தவறிழைக்கிறீர்.. எச்சரிக்கை.. தமிழர் நெஞ்சில்
ஆம்....
எங்கள் உள்ளின் உள்ளில்..
#நீறுபூத்திருக்கிறது_நெருப்பு…
..
ஆலஞ்சி மன்சூர்...
Subscribe to:
Posts (Atom)