Thursday, November 17, 2022

பெண் ஆளுமைகள்.
எதிர்கருத்தாக்கங்களை கொண்டவர்களை கவனித்துக்கொண்டிருக்கிறேன்.. நிறைய பெண்கள் குறிப்பிட வரையறைக்குள் தங்களின் பணி அல்லது கடமை முடிந்துவிட்டதாக நினைக்கிறார்கள்.. அவர்களுக்கென்று நிறைய தடைகளை அவர்கள் குடும்ப மற்ற சமூக பின்னணியே தருவதை பார்க்கலாம்..
..
அரசியலில் பெண்கள் மிக சொற்ப எண்ணிக்கையில்தான் பங்கேற்க முடிகிறது அதிலும் சில கட்டாயத்தின் பெயரில் இடஒதுக்கீடு போன்ற நிர்பந்தங்களால் சிலர் மீது திணிக்கப்படுகிறது..
சுயமாக எழ வாய்ப்புக்கள் மறுக்கபடுவதோடு மட்டுமல்லாமல் தடையிடவும் செய்கிறது இந்த சமூகம்..
என் உறவினர் கூட தன் துணைவியாரை உள்ளாட்சியில் நிர்வாகத்தில் சுயமாக பணி செய்ய விடவே இல்லை.. பெண்களின் சுயசிந்தனைகள் பங்களிப்புகள் திறமைகள் மறுக்கபட்டு/மறைக்கபடுகின்றன என்பதுதான் உண்மை.. கடைசிவரை அந்த சகோதரியை சேர்மன் என்று யாரும் அழைக்கவில்லை
அவரது கணவரைதான் சேர்மன் என்றழைத்தார்கள்..
..
பெரிய பதவிகளை வகிக்க அல்லது பகிர்ந்துக்கொள்ள கருத்தை கேட்க அரசியல் கட்சிகள் முன்வருவதில்லை..திராவிட சிந்தனை பேசும் பெரியாரியம் பேசும் கட்சிகளில் கூட மிக மிக குறைவான பங்களிப்பையே காணமுடிகிறது என்பதை  ஒப்புக்கொள்ளதான் வேண்டும்.. பகுத்தறிவு சமநீதி சமஉரிமை பேசும் திராவிட இயக்கங்களில் கூட இன்னமும் சரியான பிரதித்துவம் பெண்களுக்கு கொடுக்கபடவில்லை.
..
அத்திபூத்ததைப்போல சிலர் மட்டுமே அரசியலில் பொதுவாழ்வில் பங்களிக்கிறார்கள்  மாற்று கருத்தை கொள்கை முரண் கொண்டவர்களை கூட அவர்களின் பங்களிப்பிற்காகவே பாராட்ட போற்றவேண்டும்..
ஜெயலலிதா மாயவதி மம்தா தொடங்கி சுஷ்மா  என பட்டியல் நீளும்.. கோபம் முரட்டு பிடிவாதம் என நிர்வாகத்தில் படுமோசமாக நடந்துக்கொண்டபோதும் அவர்களின் அர்ப்பணிப்பை குறை கூறமுடியாது
..
சிலர் ஆபூர்வமாய் வருகிறார்கள் .. தன் கருத்தை உறுதியோடு அதேவேளை நாகரீகம் கெடாமல் எதிர்கருத்தாளர்களையும் மதித்து கடமையை செம்மையாக செய்கிற சிலர் அவர்களில் #கனிமொழிகருணாநிதி வியக்கதக்க வகையில் செயலாற்றுகிறார் 
வரும்போது தன் மீது விழுந்த நிழலின் படிமம் கூட தெரியாதவகையில் செயலாற்றுகிறார்
தன்னை தடுத்துநிறுத்தி விமானநிலைய பாதுகாவலரின் செயலை எதிர்த்து #இந்திதெரியாதுபோடா என தமிழகமே சொல்ல வைத்த ஆளுமை .. உதவி என கேட்போரை அக்கறையோடு அருகில் அழைத்து கேட்கும் தாயுள்ளம்.. சமூகநீதிக்கெதிராக கூடஇருந்த பொதுவுடமைவாதி ஆதரித்தபோது நாடாளுமன்றத்தில் கடும் கண்டனதை பதிவு செய்த வீரம் .. தன் நிலைபாட்டை மாற்றிக்கொள்ளாமல் தான் நாத்திகம் பேசுபவர் தான் என சொல்லும் நேர்மை  தன் மீது சுமத்தபட்ட பெரும்பழியை சட்டத்தால் வென்று "ஜெயிச்சுட்டோம்பா" என குழந்தையைபோல குதூகலித்த போது அவரின் இயல்பு பளிச்சிட்டது .. 2ஜி எனும் இமாலய கற்பனையை சொல்லி கழகத்தை வீழ்த்திவிடலாம் தலைவரை முடக்கிவிடலாமென கங்கணம்கட்டி செயல்பட்டோருக்கு "#அப்பனைப்போல" அறம்வெல்லும் என்ற நம்பிக்கையோடு வென்று காட்டிய போராளி.. மக்களை சந்திப்பதில் எப்போதும் சுணக்கம் காட்டாமல் 
கொடுந்தொற்று காலத்திலும் சிலர் முடங்கி கிடக்கும்வேளையில் நீண்ட பயணம் காரிலேயே பயணபட்டு தன் தொகுதிமக்களின் துயரில் பங்குகொண்ட அவரின் அர்ப்பணிப்போடு கூடிய பொதுவாழ்வு .. வியக்கதக்க போராளியாய் பெண்ணியம் பேசும் தலைவராய் மிளிர்கிறார்..
..
பெண்கள் பொதுவாழ்விற்கு வரும் போது வரும் விமர்சனங்கள் பாலியல்வதந்திகள் எல்லாவற்றையும் நேர்கொண்டு தன் கடமையை சரியாய் செய்தால் பொய்கள் விழுந்து போகும் உண்மை வென்று உன்னதம் தரும் .. நிறைய பெண்கள் பொதுவாழ்விற்கு வரவேண்டும் .. அதற்கான களத்தை முற்போக்கு சமதர்மம் சமூகநீதி பேசும் கட்சிகள் அமைத்திடவேண்டும்..
..
ஆலஞ்சியார்

Wednesday, November 16, 2022

அடிமையின் உடம்பில் இரத்தம் எதற்கு ..
அதிமுகவே டெல்லிக்கு காவடி தூக்குவதற்காக தொடங்கபட்டதுதான் ..
திராவிடத்தை எதிர்க்க "அவர்களுக்கு" ஒரு ஆள் தேவைபட்டார் .. அதற்காக அவசரநிலை காலத்தில் நேபாளத்தில் இருந்த எம்ஜிஆரை "ரெய்டு" பயம்காட்டி வருமானவரி சோதனைக்கு அஞ்சி கணக்கனே கணக்கு கேட்டு கதை தான் அதிமுக .. அவரை பார்பனீயம் சரியாக பயன்படுத்திக் கொண்டது ..  இடையிடையே  ஆசாரமான "ஐந்து பைங்கிளி"களை  வைத்து வடதேசத்து அதிகாரிகளை சரிகட்டி 
வள்ளல் கரைபடியாத கரமென பிம்பத்தை தொடர்ந்து உயரபிடித்து சமாளித்தது தான் சாதனையே தவிர வேறெதும் தமிழகத்திற்கு நன்மை உண்டா என்ன.. 
..
சத்துணவு கூட நீதிகட்சி செயல்திட்டம் அதை பெரியாரின் யோசனையில் மதிய திட்டமாய் காமராஜ் கொண்டுவந்த போது 
கஜானாவிலே பணமில்லை என்ற அதிகாரிகளின் பல்லவியை அடுத்து 
பணக்காரர்களிடம் நிலகிழார்களிடம் கேட்டு கடைசியில் சிறு குறு விவசாயிகளிடம் முதல் மரக்காயை கோவிலுக்கு தருவீர்கள் 
இரண்டாவது மரக்காய்  நெல் எனக்கு தாருங்கள் பசியோடிருக்கும் குழந்தை உணவளிக்கிறேன் என்றெதல்லாம் இன்றைய அதிமுகவினருக்கு தெரிய வாய்ப்பில்லை ..
..
சமூக அநீதி தான் அதிமுக ..
தொடர்ந்து ஜெயா மரணத்திற்கு பிறகு 
அவசர அவசரமாக நீட் தேர்விற்கு அனுமதி  வழங்கியதாகட்டும்  CAA  குடியுரிமை சட்டத்திற்கு எதிர்த்து வாக்களிக்காமல் ஒளிந்துக்கொண்டதாகட்டும் ஆர்எஸ்எஸ் பயிற்சிக்கு அனுமதியாகட்டும் பார்பனன் வீட்டுக்கு பால்பாக்கட் போடுவதாகட்டும் 
ஒரு நொடி கூட தாமதிக்காமல் விரைந்து ஆதரவை தந்து பிற்படுத்த ஒடுக்கபட்ட மக்களுக்கு அநீதி செய்தவர்கள் தான் .. EWS  10%  ஒதுக்கீட்டிற்கு நாடாளுமன்றத்தில் மௌனம் எனும் ஆதரவு தந்து அநீதி அளித்தவர்கள் இன்று வேறு வழியின்றி 
நேரடியாகவே ஆதரிப்பது வெளிச்சம் போட்டு நாங்கள் "எப்போதும் அடிமை " தான் என சொல்லியிருக்கிறார்கள் ..
..
தமிழகத்தில் அதிமுக ஏன் வேண்டும் என்பதற்கு கலைஞர் மிக அழகாக சொல்வார் அந்த இடத்தை காங்கிரஸ் நிரப்பிக்கொள்ளும் அதை தவிர்க்க அதிமுக தேவை என்பார் அதன் பொருள் நேரடியாக பார்பன சக்திகள் வருவதைவிட கொஞ்சமாகவது திராவிட வேசம் கட்டியாவது இவர்கள் இருக்கட்டும் என்பது தான்..  இப்போது வெளிப்படையாகவே பாஜக பாசிச பார்பனீய ஆதரவு என்கிற போது அந்த இடத்தை நிரப்ப தமிழகத்தின் 
சமூகநீதி பேசும் கட்சிகள் முன் வரவேண்டும் .. திமுக இனி எதிரியை நேரடியாகவே சந்திக்கிற காலம் என்பதும் 
திமுக மட்டுமே தமிழகத்தின் எதிர்காலம் தமிழர் நலன் சார்ந்து சமூகநீதியை நிலைநாட்டும் என்பதை உணர்ந்து பல்வேறு பிரிவுகளாக பிரிந்து நிற்கும் நாட்டின் நலன் விரும்பிகள்  மற்றும் சிறுபான்மையினர் பிற்படுத்தபட்ட ஒடுக்கபட்ட சமூகத்தின் கருத்தில் கொண்டாலே போதும் 
தமிழ்நாடு செழுமையடையும் 
#முத்துவேல்கருணாநிதிஸ்டாலின்  
நம்  நம்பிக்கை 
நமது காவல் 
நமது எதிர்காலம் 
..
ஆலஞ்சியார்
நன்றி! ..
தமிழன் மறந்துபோன உணர்வு /சொல் ..  சிலநேரம் என்ன செய்தாலும் இந்த மக்கள் ஏன் இவ்வளவு அலட்சியமாக பணமே பிரதானமாய் இருக்கிறார்கள் .. எல்லாவற்றுக்கும் ஒரு விலை பேசுகிறார்கள் என நினைப்பதுண்டு.. நன்றி என்றொன்று உறுத்துமானால் கலைஞரை இவர்கள் தொடர்ந்து அரியணையில் அல்லவா  வைத்திருக்க வேண்டும் 
..
ராஜீவ் கொலையாளிகள் நளினி உட்பட விடுதலையை நாம் மனிதாபிமானம் கொண்டு வலியுறுத்தினோமே தவிர நிரபராதி என்றல்ல .. மன்னிக்கும் மாண்பு அழிந்துவிட கூடாதென்பதும் நீண்டநாள் சிறைவாசம் தூக்கு தண்டனையைவிட கொடியதென்பதால் நாம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தோம் 
இவர்களை போராளிகளாக கருதியல்ல இவர்கள் #கூலிப்படைகள் அவ்வளவுதான் .. 
முதல் இலக்கு தவறினால் இவர்கள் அடுத்த குறியை சரியாக செய்திருப்பார்கள் .. தமிழர்கள் என்பதால் இவர்களை தியாகிகளாக கொண்டாட தேவையில்லை .. தோக்கு தான் தீர்வென்றால் இந்த பூமி கலவரமாகதான் இருக்கும் ..
..
நளினியின் தூக்கு தண்டனையை
ஆயுள் தண்டனையாக குறைத்தது கலைஞர் பெருமகன் .. அன்றைக்கு பாதிக்கபட்ட சோனியாவிற்கு எந்த ஆட்சேபனை இல்லை என்பதை சுட்டிகாட்டி அமைச்சரவையில் தீர்மானம் கொண்டுவந்து அதை கவர்னருக்கு அனுப்ப அப்போதைய கவர்னர் பாத்திமா பீவி ஆயுள்தண்டனை குறைப்பை ஏற்றுக்கொள்ள மறுத்த போது உயர்நீதிமன்றத்தை அணுகி  கேபினெட் முடிவிற்கு கவர்னர் கட்டுபட்டவரென தீர்ப்பை பெற்று தந்தவர் பேரருளாளன் கலைஞர் அவர்கள் இதெல்லாம் நன்றி "மறந்ததுகள்"அறியாமல் இல்லை 
..
ராஜீவ் கொலையுண்ட நேரத்தில் யாருமே வழக்கிற்கு ஆஜராக மறுத்த போது நளினிக்காக வாதாடியவர் துரைசாமி .. அவரை நியமித்ததில் கலைஞரின் பங்கை "சிலர்" அறிவார்கள் ..  அவரை யாரை வேண்டுமானாலும் பார்க்கட்டும் "ஈழத்தாய்" சமாதியில் அழுது புலம்பட்டும் தயைகூர்ந்து கலைஞர் நினைவிடத்தில் கால்பதித்துவிடாதீர் என்றே சொல்ல தோன்றுகிறது..
..
நன்றி உணர்வை எதிர்பார்ப்பவரில்லை கலைஞர் 
இங்கே கேடுகெட்டவர்களுக்கும் சேர்த்தே உழைத்த பெருமகன் அவர் .. நம் கடமையை செய்வோம் என்பதே அவரது இயக்கமாக  இருந்தது..
"இன்னா செய்தாரையும் ஒறுத்தல் " தான் கலைஞர் வாழ்வு ..
..
ஆலஞ்சியார்
எழுவரும் விடுதலையானது மகிழ்ச்சியளிக்கிறது.. உத்தரவு நகல் கிடைத்த உடனேயே அவர்களை விடுதலை செய்த 
காருண்யர்  #முத்துவேல்கருணாநிதிஸ்டாலின்  அவர்களுக்கு நன்றி ..
சொன்னதை செய்யும் தந்தையின் அதே குணம் .. அதோடு நீண்டநாள் சிறைவாசம் அனுபவிக்கும் இஸ்லாமியர்கள் உள்ளிட்டோரையும் விடுதலை செய்ய முனைப்பு காட்ட வேண்டும் என்ற கோரிக்கையையும்  வைக்கிறோம்
..
நண்பர் பிலால் அலியார் Bilal Aliyar 
 மிக தெளிவாக பதிவிட்டிருக்கிறார் அதில் இஸ்லாமிய அமைப்புகள் ஒருங்கிணைந்து சட்ட போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என்கிறார் அதில் உடன்படுகிறேன் ..  தெருக்களில் இறங்கி போராடுவதால் அமைப்பின் பலத்தை சமுதாய மக்களிடையே உறுதிபடுத்தலாமே தவிர வேறெந்த பயனுமில்லை .. அற்புதம்மாளின் நீண்ட சட்ட போராட்டம்  ஒருகட்டத்தில் தானாகவே நீதிமன்றமே தனிகவனம் செலுத்தியதும் மனிதநேய அமைப்புகளின் தன்னாதரவும் பல்வேறு கட்சி/ இயக்கங்களின் ஆதரவு தமிழ்நாடு அரசின் அக்கறை மற்றும் உறுதி, விடாமுயற்சியும் விடுதலையை சாத்தியமாக்கியது
..
இஸ்லாமிய அமைப்புகளின்
விவரமின்னையும், தலைவர்களாக 
தன்னை முன்னிலைபடுத்தி கொள்பவர்களின் கேடுகெட்ட பதவி ஆசையும் பல துகள்களாக சிதறி நிற்கும் சமுதாய இளந்தளிர்கள் .. சரியான வழிகாட்டல் இல்லாமல்  "எடுப்பார்கைப்பிள்ளை " போல வார்த்தை ஜாலத்தில் மயங்கி நிற்கிறார்கள் ..
..
கம்பீரமான தலைமையில் துவங்கி இயக்கம் ஆர்எஸ்எஸ் தோன்றிய அதே காலகட்டத்தில் தோன்றிய இயக்கம் வலுமையான முடிவுகளை இந்திய ஒன்றியத்தின் எடுத்தவர்கள் இன்று ஒரு "குற்றபரம்பரை" போல நடத்தபடும் அவலம் .. நன்மை பயக்கும் நல்லவைகளை விதைக்க தவறி 
மதம் தலைக்கேறியதும் தனித்தனி பிரிவாய் சிதறுண்ட தேங்காயைப்போல தேவையுள்ளவன் சட்னி அரைக்கும் அவலநிலை .. இன்னமும் நானே எல்லாம் அறிந்தவன் என சித்தம் கலங்கியவன் போல் பேசி திரிவதும் தான் சமுதாயத்தின் பின்னோக்கிற்கு காரணிகளாகும் 
..
இன்றைய தேதியில் முஸ்லிம்கள் வெகுமக்கள் ஆதரிக்கும் அதே வேளை தங்களுக்கு பாதுகாப்பானது எது என அறிந்து அந்த கட்சி/இயக்கத்தில்  பயணபட்டால் தான் எதிர்கால சந்ததியர்களுக்கு கொஞ்சமேனும் நன்மை புரிந்தவராவீர்கள் ..  
வீண்வம்பு பேசியும் வீராப்போடு திரிந்தால் சமுதாயம் இன்னும் பிளவுபடும் 
..
நீண்டநாள் சிறைவாசிகள் விடயத்தில் ஒருங்கிணைந்து சட்ட போராட்டத்தை முன்னெடுப்பு காலத்தின் அவசியம் .. பல்வேறு அமைப்புகளுக்கு பல நேரங்களில் இஸ்ஸாமிய சமுதாயம் பெரும் பொருளுதவியை செய்திருக்கிறது அதனால் பலனடைந்ததென்னவோ அமைப்புகளும் தலைவர்களும் தான் இனியாவது இந்த ஒரு விடயத்திலாவது சேர்ந்துநின்று சாதிக்க முயலுங்கள் ..
அனுசரணையான அரசு இருப்பதும் நல்ல சட்ட ஆலோசனை வழங்க திராவிட இயக்கத்தின் சட்ட வல்லுநர்களை தொடர்புகொண்டு சரியான நகர்வை செய்தால் நிச்சயம் விடுதலை சாத்தியப்படும் 
..
ஆலஞ்சியார்
வைகோ..
கலிங்கபட்டியில் வாக்களித்துவிட்டு வைகோ செய்தியாளர்களை சந்தித்தபோது அவர் குரலில் பழைய கம்பீரம் காணவில்லை வயது மூப்பு காரணமாக இருக்கலாம் ..ஆனாலும் அவர் தன் மகன் வையாபுரி அரசியலுக்கு வருவதை விரும்பவில்லை எனச் சொல்லி அதற்கான காரணத்தை சொன்னபோது எங்கே சறுக்கியதென்பதை உணர்ந்தவராக தெரிகிறார் ..55 ஆண்டு பொதுவாழ்வில் மதிமுக தலைமையேற்று 25 ஆண்டுகளில் எத்தனை பொதுகூட்டங்கள் நடைபயணங்கள் என விவரித்து நிறைய இழந்துவிட்டதைப் போல பேசினார் .. உண்மையின் வலி உணர்ந்து பேசுகிறார்..
..
எங்கே சறுக்கியதென்பதை உணர்ந்ததன் வெளிப்பாடு .. திமுக பொதுச் செயலாளர் திமுக துரோகிகளின் பட்டியலிட்டு வைகோ பெயரை குறிப்பிட்டபோது எதிர்வினையாற்றவில்லை .. திமுகவின் தலைமை பொறுப்பை அடைய விரும்பி அதற்கான காய்நகர்த்தல்கள் செய்தபோதும் .. குமரிகடற்கரையில் அடுத்து நீதான் என இதே துரைமுருகனும்,வீராசாமியும் சொன்ன போது பெரியாரைப்போல கலைஞரும் 95 வயதுவரை உயிரோடிருந்தால் என வினவ நிசப்தம் நிலவியதே அப்போதே அடிசறுக்கியதை உணராமல் போனார் ..  13 ஆண்டுகளுக்கு பிறகு  ஆட்சிவந்த உடன் கள்ளதோணியில் இலங்கை பயணம் அது எந்தளவு தலைவலியை திமுக அரசிற்கு தந்தது .. கலைஞர் உயிருக்கே ஆபத்தென RAW எச்சரித்தபோதும்  தம்பி அப்படியெல்லாம் செய்யமாட்டான் என நம்பிக்கை தந்தாரே அந்த தலைவரின் தலைமையை எதிர்த்து திமுகவை உடைத்து 9 மாவட்ட செயலாளர்களோடு நாங்கள் தான் திமுக என்றென்ற போது கலைஞர் .. அண்ணா தந்த இயக்கத்தை கட்டிகாக்க எப்படியெல்லாம் போராடினார் .. தஞ்சையில் பொதுக்குழு நடந்தால் தான் பாதுகாப்பென அண்ணன் கோ.சி.மணியிடம் சொல்ல பொதுக்குழுவும் தொடர்ந்து பொதுக்கூட்டமும் ஏற்பாடானது 980 பேர்களுக்குமேல் கலந்துக்கொண்ட பொதுக்குழு கூட்டம் கலைஞரின் குரலுக்காக காத்திருந்ததே தழுத்தழுத்த குரலில் என் தலைவன் பேசும் போது கண்ணீர்களில் நீர்வழிய கூட்டம் அமைதிகாத்ததே.. இரவு பொதுக்கூட்டத்தை எப்படி நடத்துகிறார்கள் பார்ப்போமென சிலர் கலவரத்தை ஏற்படுத்த போகிறார்கள் என அறிந்து என்ன மணி இதெல்லாம் என்ற போது இரு வருகிறேன் என புறப்பட்டு கூட்டம் நடைபெறும் இடத்திற்கு வந்து மடித்துகட்டிய வேட்டியோடு மாவீரனைப்போல கர்ஜித்தாரே அண்ணன் மணி.. யாராவது எதையாவது செய்ய நினைத்தால் நடப்பதே வேறு என எச்சரித்ததும் அதை தொடர்ந்து கலைஞர் பொதுக்கூட்டத்தில் பேசியதும் மறக்கமுடியுமா வைகோ அவர்களே.. அதே இடத்தில் எத்தனை முறை கழகத்தின் கம்பீரக்குரலாய் கலைஞரின் போர்வாளாய் முழங்கியிருப்பீர்கள்..
..
திராவிட இயக்கம் தன்னலமற்ற தொண்டர்களால் தலைமைத்துவம் கொண்ட பெருந்தலைவர்களால் ஏற்றுக்கொண்ட கொள்கை வெற்றிபெறவேண்டும் என்ற வேட்கையோடு பணியாற்றும் எண்ணற்றவர்களால் உருவானது ..காலம் தலைவனின் தீர்மானிக்கும் ஆம்.. ஒருமுறை தலைவர் கலைஞரிடம் சங்கம் ஹோட்டலில் வைத்து நண்பரோடு சேர்ந்து நேர்காணல் செய்தபோது நீண்டகால தலைமையும் ஆலமர நிழலில் எதுவும் வளராமல் போகுமே என்று சிறுப்பிள்ளைத்தனமாய் கேள்வி எழுப்பிய போது காலம் தீர்மானிக்கும் நல்ல தலைமையை உருவாக்கும்  மறைந்த போது யார் தலைவரென்று கட்சி தீர்மானித்தது அதேபோல காலம் சரியானவரை முன்னிறுத்தும் தேர்வுசெய்யும் என்றார் .. 
வைகோ தொடர்ந்து கட்சியில் இருந்திருந்தால் இன்று துரைமுருகன் இடத்தில் அவர்தான் இருந்திருப்பார் .. 
ஈழப்பயணமும் அதை தொடர்ந்து தொடர் சறுக்கலும் சிலரின் தூண்டுதலால் "மறுமலர்ச்சி "யை ஏற்படுத்தபோவதே சொல்லி கடைசியில் மறுபடியும் திமுக என்ற நிலைக்கு பலர் வந்து சேர்ந்ததும்.. அடையாளம் மறுக்கபடுகிற சூழலில் நிற்பதும் மாணவர் பருவத்திலிருந்தே வைகோவை கண்டு வளர்ந்து கட்சியில் பணியில் அலைந்துதிரிந்த காலம் நிழலாடுகிறது.. சிறந்த பார்லிமெண்டேரியனாக, நல்ல பேச்சாளராக, இளகியமனம்படைத்தவராக உலக அரசியலை உணர்ந்தவராக இருந்தவர் உள்ளூர் அரசியலை அறியாது போனதும்.. தனக்கு சற்றும் பொருந்தாத தலைமைத்துவம் மதிமுக கட்சியை பலவீனபடுத்தியதும் தான் தமிழகம் கண்டது .. தன் மகன் அரசியலுக்கு வருவதை விரும்பவில்லை என சொல்லும் போது பொதுவாழ்வில் காலம் தந்த கசப்பான உணர்வுகளும் வலியும் தெரிகிறது .. சிறந்த தலைவராக வரவேண்டியவர் காலமறியாது எடுத்த முடிவு பருவம் தெரியாது விதைத்தப்போல வீணாய் போனது .. தமிழக அரசியலில் தவிர்க்கமுடியாதவர்தான்.. ஆனால் துரோகம் என்ற சொல் பின்தொடர்ந்தே வரும் .. 
காலம் வலியது 
..
ஆலஞ்சியார்

Sunday, November 6, 2022

ஆர்எஸ்எஸ் பின்னணியே கலவரத்தை மையமாக கொண்டது .. நோக்கம் நாட்டை பதற்றமாக வைத்திருப்பதும் அதை வைத்து ஆரியர்கள் பலன் காண்பதும் மட்டுமே .. அவர்கள் பேசும் தேச நலன் என்பது பார்பனியர் நலன்  அவர்கள் சொல்லும் தேசபற்று பார்பனீயத்தை முன்னுறுத்துவது .. ஈராயிரமாண்டாய் மெல்ல மெல்ல இந்திய ஒன்றியத்தின் பல்வேறு குழுக்களின் பண்பாட்டில் ஊடுறுவி  மெல்ல அதை சிதைத்து பார்ப்பனீய "கலாச்சாரத்தை " புகுத்தி அதை இந்திய கலாச்சாரமாக (பண்பாடு) நிலைநிறுத்தியிருப்பது தான்  ..
அது சிதறும் என நிலை வரும் போது இதுவரை கட்டிய கோட்டை அடித்தளமே ஆட்டம்காணும் எனும் போது பதறுதல் இயல்பு அதை தான் சமீபகாலமாக காணமுடிகிறது 
..
நாடெங்கும் குறிப்பாக வடமாநிலங்களில் கூட எதிர்ப்பு பலப்படுகிறது .. இதுவரை மண்ணின் மைந்தர்களை அடிமைபடுத்தியதை உணர்ந்து இதோ தமிழ்நாட்டில் ஏற்பட்ட விழிப்புணர்வு ஏன் இதுவரை இங்கே ஏற்படாமல் போனது.. கடவுள் மதம் சாதி என்ற பெயரில் இதுவரை இவர்கள் சொன்ன "மாயை " கலைந்து மெல்ல வெளிச்சம் பரட தொடங்கியதும் அலறல் சத்தம் அதிகம் கேட்கிறது ..
அதிகாரத்தில் இருந்தும் அனைத்து  அரசு உயர்பதவிகளிலிருந்தும் நீதித்துறை ஏறக்குறைய தங்கள் கட்டுபாட்டிலிருந்தும் தங்கள் எண்ணம் ஈடேறவில்லை என கதறுகிறார்கள் .. 
..
தமிழ்நாட்டில் ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு கட்டுபாடுகள் விதித்து சில கேள்விகளை இந்திய ஒன்றியத்தின் பார்வைக்கு வைத்திருக்கிறது திராவிட அரசு .. யார் நீங்கள் ,முகவரி எது, வருபவர்களின் அடையாள அட்டை  இலக்கம் என்ன..
என கேள்வி எழுப்பி
அடையாளம் இல்லாத 
"கலவரகாரர்கள்" என தேசத்திற்கு அடையாளம் காட்டி முகவரி இல்லாதோரின் முகத்திரையை கிழித்து இதோ இவர்கள் தேசத்தின் பயங்கரவாதிகள் ஒற்றுமைக்கு ஊறுவிளைவிப்பவர்கள் என எச்சரித்திருக்கிறது.
..
ஆர்எஸ்எஸ் பதிவு செய்யபடாத இயக்கம் உறுப்பினர்கள் சேர்கை விபரம் அவர்கள் இணையவழி சேர்க்கையில் கூட இல்லை அந்தந்த பகுதி பொறுப்பாளர்கள் சந்தித்து செயல்படலாம் .. இங்கே குள்ளமணி அவர்களுக்கு கூட ரசிகர்மன்றம் அதுவும் பதிவு செய்யபட்டிருக்கும் இந்திய அரசியலை தீர்மானிக்கும் இவர்கள் தங்கள் இயக்கத்தை/தங்களை பதிவு செய்யமாட்டார்கள் 
கலவரமானால் யாரிடம் இழப்பு கேட்பதென்ற கேள்விக்கு பதில் இல்லை ..ஊடகங்களில் பகிரங்கமாக பேசுவார்கள் சட்டத்தின் முன் "ஜகா" வாங்குவார்கள் .. கலவரகாரர்களுக்கு எதற்கு முகவரி 
..
திராவிட இயக்கம்/கட்சி எப்போதும் சட்டத்தின் துணைக் கொண்டே வென்றிருக்கிறது .. சட்டத்தை திருத்தியுமிருக்கிறது .. ஜனநாயகத்தின்  அடித்தளத்தில் மிக கம்பீரமாக உண்மையை கொண்டும் அறிவை கொண்டு கட்டமைக்கபட்டது.. இங்கே போலித்தனமில்லை  அவதூறை பரப்பினால் கூட அதை சட்டத்தின் முன் நின்று வென்ற வரலாறே உண்டு ..   திமுக சட்டத்துறை மிக வலுவானது திறமையாக செயல்படும்..  ஊடகங்கள் நிர்வாகத்தில் புலி/ திறமைசாலி என போற்றி புகழ்ந்த ஜெயலலிதாவையே "களி" திங்க வைத்தவர்கள் .. நீண்ட சட்டபோராட்டத்தில் கடைசியில் முதல்வராக போய் ஜெயிலுக்கு போன வரலாறு நாடறிந்தது .. 
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள்
ஆர்எஸ்எஸ் எனும் பிம்பத்தை தன் சட்டத்துறையை கொண்டு கிழித்தெறிந்துவிட்டார் 
ஆம் திமுக வழக்கறிஞர் அணியின் திறமை  சட்டஅறிவு, திறமையான செயல்பாடு கொண்டு மதவெறியர்களின் நோக்கத்தை இல்லாதாக்கியிருக்கிறார் 
எச்.ராசா மிக துள்ளியமாக  கணித்தது சரிதான் 
Stalin is more dangerous than karunanidhi
#முத்துவேல்கருணாநிதிஸ்டாலின் 👏🔥❤️
..
ஆலஞ்சியார்

Wednesday, November 2, 2022

வணக்கம் சென்னை 
நலமா ..
இவன் முடிப்பான் என்று நீங்கள் நம்பியது வீண் போகவில்லை ..
வெள்ளகாடாய் வீட்டிற்குள் தண்ணீர் புகுந்ததெல்லாம் இனி பழங்கதையாய் பேசுவீர் ..
"பெருமழைக்காலம் " இனி வசந்தத்தோடு இணைக்கப்படும் 
நல்ல தலைவன் நமக்கு கிடைத்திருக்கிறார் .. ஓயாதுழைக்கும் தலைவனின் ஆட்சியில் சீர்மிகு சென்னை சிங்காரமாகிறது 
..
கடந்த ஆட்சியின் அவலங்கள் 
சரி செய்யவே பலகாலமாகும்.. ஆனால் இந்த போர்படைத்தலைவன் ஒவ்வொரு திட்டத்தையும் வல்லுநர்களை கொண்டு தீட்டி அதை  "போர்கால" வேகத்தில் செய்துமுடிக்கும் திறமை ..
இப்படியொரு தலைவன் தமிழ்நாட்டிற்கு கிடைத்து நாம்பெற்ற பேறு .. பெருமழையில் சென்னை மூழ்கவிட்ட "பெருமாட்டி" ஏனோ நினைவிற்கு வருகிறார்.. இரவோடிரவாக செம்பரம்பாக்கம் ஏரியை திறந்து கரையோர குடிகளை மூழ்கடித்ததும் .. சென்னையை கடலோடு இணைத்தும் இறுமாப்போடு கதைத்ததும் நினைவிற்கு வருகிறது ..  விடிய விடிய மழை வெள்ளகாடாகும் இன்று நம் பிழைப்பு போகும் என்றெண்ணி இருந்தவர்கள் விடிந்ததும் வடிந்ததை கண்டு வியந்து நிற்கிறார்.. அன்றாடங்காய்ச்சிகள் 
பிழைப்பு நடக்கிறது .. சென்னை மக்களுக்கு இதுவரை கண்டிராத காட்சிகள் நாடே வியக்கிறது எம் செயல் "தலைவனின்" திறமை கண்டு ..
..
தமிழ்நாடே ..
இந்த தலைவனை கரத்தை விட்டுவிடாதே ..
இன்னும் இன்னும் சிறந்து உயர..
உழைப்பால்  தமிழ்நாட்டை உயர்த்திடும் உன்னத தலைவனை நாம் கொண்டது 
காலம் நமக்கு தந்த சிறந்த அருட்கொடை ..
தங்கதமிழ் நாடே 
வணங்கி மகிழ்கிறது 
வாழ்க! தலைவர் முதலமைச்சர் 
#முத்துவேல்கருணாநிதிஸ்டாலின் 
Chief Minister of Tamil Nadu 
M. K. Stalin 
..
ஆலஞ்சியார்