Tuesday, August 7, 2018
போய் வா.. ஆசானே
போய்விட்டாயா
என்பதாண்டுகாலம்
எமை சூழ்ந்த காரிருளை நீக்கிய சூரியனே
உழைத்து உழைத்து களைத்து போய்விட்டாயா
இனியேனும்..
தம்மை காத்துக்கொள்ள தம்பிகளே தயாராகிக்கொள்ளுங்களென சொல்லி போய்விட்டாயா..
நீச்சல் கற்று கொள்ளும் வரை தான்
கட்டுமரம்..
இனி.. எதிர்நீச்சல் போடு என
போய்விட்டாயா..
..
அய்யனே..
அமுதே..
அழகுகோனே..
அமிர்தமே..
அன்பே..
எமதருமை தமிழே
எமதாளுமையே..
என்ன அவசரம்..
நூறை கடக்க இன்னும் சில ஆண்டுகள் தானே
அதற்குள்.. என்ன அவசரவேலை..
என் உயிரை யாராலும் பறிக்க முடியாதென்றாயே..
யாசித்து பெற்றால்தான் உண்டென்றாயே..
வாசில் நின்று அழுது யாசித்தானா..
கொடுத்துவிட்டாயா..
..
எங்கள் சூரியனே..
எதிரிகளை சுட்டெரிக்கும் உன் பேச்சு..
உன் இருப்பு எம் பகைவரை இருப்புகொள்ளாமல் தவிக்க வைத்ததே..
இனி ..
நீ கற்று தந்ததை
நாங்கள் சுழற்றுவோம்..
பெரியாரின் சீடரே
பேரறிஞரின் தம்பியே..
எம் இனத்தின் காவலே..
நின் பணி தொடர்வோம்..
நீ..
வகுத்து தந்ததே எமது பாதை..
நீ.. மறையவில்லை
காலமாய் எம்மோடு இருக்கிறாய்..
..
எங்கள் வானில்
நிரந்தர சூரியன்..
நீ..
தொடாத உச்சமில்லை.
இனி எவரும் உன் உயரத்தை
தொட போவதுமில்லை..
உன் உச்சம் இயற்கை தந்தது..
..
நன்றி!..
மு.க..
இத்தனை காலம்
காவலாய் நின்றெமை காத்தமைக்கு..
..
போய் வா..எம் தலைவா..
..
ஆலஞ்சியார்
Monday, August 6, 2018
கலைஞரின் விழுதுகள் நாங்கள்
கலைஞர் எனும் ஆளுமையை இருவேறு கூறுகளாக பிரித்துபார்த்தால் அவர் ஆற்றிய தொண்டு சமூகநலன் கொண்டதாகவே இருக்கும் மற்றொன்று அவரின் அரசியல் சாணக்கியம்.. சமகாலத்தில் இந்திய துணைகண்டம் கண்டிராத அதிசயமாக அமையும், வெவ்வொரு விடயத்திலும் பகுத்தறிவு துணைக்கொண்டு மிக சாதூர்ய காய்நகர்த்தல் ஒரிரு வார்த்தைகள் ஒட்டுமொத்த கவனத்தை ஈர்த்து புதியதொரு பாதையை வகுத்து தந்துவிடும்.. காலம்கடந்தும் செயல்படுகிற தேவைபடுகிற திட்டங்களாக அமைந்திடும்..52 ல் திரைபடத்தில் மனிதனை மனிதன் இழுக்கலாமா என்று கேள்வி கேட்டு ..நீங்க சென்னை மேயரா வந்தவுடன் மாத்திடுங்க என்பார் .. ஆம் எழுபதுகளிலேயே மாற்றி சாதனை புரிந்தவர் இந்தியா நடப்பிலாக்க 30 ஆண்டுகள் ஆனது.. இதொரு எடுத்துகாட்டுதான்..
..
தமிழக அரசியலை துல்லியமாக கணித்தவர்.. எந்தவொரு அமைப்போ கட்சியோ ஆரம்பிக்கும் போது சுருக்கமாக சிலர் வார்த்தைகளில் கருத்திடுவார்.. மதிமுகவிற்கு மறுபடியும் திமுக என்றார்.. அதிமுகவை பற்றி பேசும் போது.
நடிக்கருக்கான கட்சி சினிமா கவர்ச்சி கட்சி மேக்கப்பில் ஜொலுக்கிறது கொள்கை எனும் ஆணிவேர் இல்லை காலம் கடந்து நிற்காது கலைந்து மறைந்து போகும் என்றார்
..
எத்தனை நிதர்சனம் எவ்வளவு துல்லியமான கணிப்பு ஆம் எம்ஜிஆர் தனது அபிமானத்திற்காக தொடங்கபட்ட கட்சி அது கவர்ச்சியை மட்டுமே மூலதனமாக கொண்டிருந்தது எழுபதுகளில் சினிமாவின் தாக்கம் தமிழக மக்களை மையம் கொண்டிருந்த காலம்.. சினிமாவை பொழுபோக்காக காணாமல் வாழ்வியலாக நம்பிய ஜனங்கள் நடிப்பை நிஜமென்ற நம்பிய மக்கள் அரிதாரம் பூசியவன் ஆண்டவனாக நடித்தாலும் அவன் ஆண்டவனில்லை என்கிற யாதார்த்தத்தை புரிந்துக்கொள்ளாத காலம் நேரமாக ஆக வேசம் கலையுமென்பதை உணர்கிற போது மெல்ல கரைய தொடங்கியிருக்கிறது .. இப்போது கூட கவர்ச்சியை தேடுகிற தனிமனித மோகத்தை தலைமையேற்க கெஞ்சிகிற சூழல் ..
..
திமுகவின் கொள்கை ஆணிவேர் மக்களின் இதயங்களில் பதிந்ததால் தான்.. நிறைய வேறுபாடுகளிலும் திமுக தொடர்ந்து நிற்க முடிகிறது..எத்தனை விதமான எதிரிகள் அருகிலிருந்து அன்பாய் நடித்தவன் குரல்வளையில் கத்திவைக்கிற போதும் ஆணிவேர் வீழாது காத்துநின்றது..
அரசியலில் சமரசங்கள் தவிர்க்கமுடியாதென்றாலும் கொள்கையை விட்டுக்கொடுக்காமல் இயக்கம் ஒடுக்கபட்ட சமூகத்தை கை தூக்கிவிடவும் பிற்படுத்தபட்டவனின் உரிமைகளை காத்து ஆதிக்கம் செலுத்துவோரின் கோரபற்களை பிடிங்கி எறிந்தும்.. பாசிசத்தின் கோரதாண்டவத்தின் நிழல்கூட பாடாதவாறு காத்துநிற்க முடிந்தது.. தனிமனிதனை நம்பி அல்ல இயக்கம் இங்கே கொள்கை மறவர்கள் சமூகநீதியை பற்றிபிடித்துக்கொண்டு நிற்கிறார்கள் சரியான நபரை காலம் தேர்வு செய்கிறதே தவிர யாரையும் யாரும் இங்கே எடுத்தியம்ப முடியாது..
கருத்துசுதந்திரம் இங்கே பேணபடுகிறது அடிமைகளை வளர்த்துவிடவில்லை.. முரண்பட்ட கருத்தாயினும் இயக்கத்தில் பொதுவெளிகளில் விவாதங்களில் வைக்கமுடியும்.. தனிமனித விமர்சனங்கள் தவிர்த்து சுதந்திரமாக யாரும் கருத்திட முடியும்.. எதிராளிகளின் கருத்தை கூட காதோர்க்கும் கண்ணியம் இங்கே உண்டு அடக்குமுறை,திமிர்,அடிமைத்தனம், இவையெல்லாம் இங்கே காணமுடியாது..
காலங்கள் கடந்தும் திமுக வலிமையோடு இருப்பதற்கு அதிலும் தேர்தல் தோல்விகளின் போதும்.. அதே கம்பீரம் குறையாமல் நடைபோட .. சலவை செய்த கரைவேட்டியோடு வலம் வரமுடிகிறதென்றால் .. கலைஞர் சொன்னதைப்போல கொள்கையெனும் ஆணிவேர் அழியாமல் காத்துநிற்கிறது ..
..
அதிமுகவின் கவர்ச்சி கலைந்து மறைந்து போகிறது.. ஆனால் திமுக கொள்கையால் கட்டமைக்கபட்டது காலம் கடந்தும் நிலைத்துநிற்கிறது.. கலைஞரின் சுணக்கம் எங்களை கலங்க செய்யவில்லை.. இயற்கையின் நீதியை அறிவோம்.. எம்மோடு அவரின் சுவடுகள் எப்போதுமிருக்கும்.. எம் இனத்தை காக்கும்.. வயது மூப்பு உடல் ஒத்துழையாமை எம்மை பதற செய்வது இயல்பு .. எதிரிகளே கனவுகாணாதீர்.. எம்மை வீழ்த்த முடியாது ஏனெனில் எமது சித்தாந்தம் இயற்கை/ பகுத்தறிவு சமூகநலன் இனத்தின் மானம் சார்ந்து நிற்பது .. பெரியாரும் பேரறிஞரும் முத்தமிழறிஞரும் எம்மை வடிவமைத்திருக்கிறார்கள்.. எத்தனை நூற்றாண்டு பின்னிட்டாலும் எம் கொள்கைகளின் வேர் ..ஆழ ஊடுறுவியிருக்கிறது..
..
வீழ்ந்துவிடமாட்டோம்
..
ஆலஞ்சியார்
Sunday, August 5, 2018
தளபதி படை இனி .. தமிழகம் ஆளும்
அதிமுகவில் மக்களை கவரக்கூடிய தலைவர்கள் இன்று இல்லை; ஏற்கெனவே இருந்த தலைவர்கள் கூறிய அறிவுரைகளின்படி நாம் நடந்து வருவதால் அதிமுக வெற்றிபெற்று வருகிறது"
மதுரை பொதுக் கூட்டத்தில் அமைச்சர் செல்லூர் ராஜூ பேச்சு
..
அவர்களுக்கு புரிகிறது இனி எழவே முடியாதென்று யாரையாவது இறக்குமதி செய்து காப்பாற்றிகொள்ளலாமென்ற சிந்தனை சமீபகாலமாக அதிமுக அமைச்சர்களிடையே நிலவுகிறது இதன் பின்னில் பாஜக இருப்பது அப்பட்டமாக தெரிகிறது.. மக்கள் செல்வாக்கென்று இவர்கள் நினைக்கிற சினிமா கவர்ச்சியை முன்னிறுத்த ரஜினியின்
வரவை/திணிப்பை செய்யலாமா என்றெண்ணுகிறார்கள்.. காலம்கடந்தபோய்விட்டது அறியாமல்..
ரஜினியை மட்டுமல்ல கமல்ஹாசனையும் கட்சியில் சேர்த்துக்கொண்டால் கூட கரைசேராது..
..
தமிழக மக்கள் எதிர்பார்த்து காத்திருப்பது ஆட்சிமாற்றம் ..அதிமுக முகவரியில் யார் வந்தாலும் கட்டியிருப்பதை அவிழ்த்துவிடுவார்கள் சரிந்த பலத்தை சரிசெய்ய தற்போதைக்கு முடியாது ..தொடர்ந்து அடிமைத்தனத்தோடு மத்திய அரசின் மக்கள் விரோத போக்கை கொஞ்சமும் லஞ்சையின்றி பாஜக கேட்பதற்கு முன்பே செயல்படுத்த துடிக்கிறார்கள் .. மக்கள் நலனைவிட எவ்வளவு கொள்ளையடிக்கலாமென்ற ஒற்றை சிந்தனையை தவிர வேறேதுமில்லை.. மக்களைப்பற்றியோ அவர்கள் படும் துன்பங்கள்பற்றியோ எள்ளளவேணும் கவலைபடாமல் நடக்கிற ஆட்சியை இதுவரை தமிழகம் கண்டதில்லை..
..
ரஜினியின் திணிப்பை பாஜக திட்டமிடுவதாக செய்திகள் வருகிறது ரஜினி அரசியல் ஆசையின் இறுதிசடங்கை செய்திட நல்ல வாய்ப்பு மக்களுக்கு கிடைத்திருக்கிறது தனித்துவத்தோடு வந்தால் கூட சில ரசிகமணிகளில் ஆதரவு கிடைக்கலாம்..இல்லையேல் படுபாதாளத்தில் விழுந்த கதையாக போய்விடும்,.. தமிழக அரசியல் முகம் வேறுமாதிரியானதென்பதை பாஜக மற்றும் ரஜினி அறிவார்கள் எங்கிருந்தோ வந்து திடீரென ஒருவர் தலைமையேற்பதா என சிலர் எதிர்க்க தொடங்கியிருக்கிறார்கள் .. அடிமட்டத்தில் இதன் சத்தம் அதிகம் கேட்க தொடங்கியிருக்கிறது அதன் வெளிபாடுதான் கவர்ச்சியான முகமில்லையென்ற அமைச்சரின் பேச்சு ஏற்கனவே பாஜகவின் ஊதுகுழல் மாபா.பாண்டியராஜன் கொண்டு மெல்ல நூல்விட்டு பார்க்கிறது அடிமை அமைச்சர்களை ரெய்டு வருமானவரி சோதனையென மிரட்டி வைக்கலாம் ஆனால் வெகுமக்களின் எதிர்ப்பை காரணமே இல்லாமல் ரஜினி சுமக்க நேரிடும்..
..
அதிமுக ரஜினியோடு கூட்டணி வைத்து போட்டியிட முடிவு செய்யலாம் எதுவானாலும் திமுகவின் வெற்றியையோ தளபதியை வளர்ச்சியையோ தடுத்திட முடியாது காரணம் மக்கள் விரும்புகிற நேசிக்கிற நல்ல தலைவராக மக்கள் மனங்களில் திகழ்கிறார்.. திமுகவின் வெற்றியை தடுக்க ஒருவகை திசைதிருப்பல் நாடகம் அரங்கேற்றுகிறார்கள்.. ரஜினி என்பது பாஜகவின் இன்னொரு முகம் என்பதை தமிழர்கள் அறிந்து வைத்திருக்கிறார்கள்..
இனி நிறைய கூத்து கட்டுவார்கள் அவர்கள் எண்ணம் ஈடேறாது..
..
#தளபதிபடையே_இனி_தமிழகம்_ஆளும்..
...
ஆலஞ்சியார்
Saturday, August 4, 2018
யாரிந்த சீமான்
முதலில் சீமானை நல்ல மருத்துவரிடம் காட்டுங்கள் .. கருணாநிதியை ஏன் பார்க்க போனேன் .. ஏனென்றால் நான் நல்லவன்.. சீமானின் தில்லுமுல்லுகள் நாடறிந்தது அவரை வளர்த்துவிட்டதில் பெரியார் தி.கவிற்கு பெரும் பங்கிருப்பதை மறுக்கமுடியாது ..யாரிவன் எங்கிருந்து வருகிறாரென்பது அறிவோம்..
ஈழப்போரில் பிரபாகரனின் இறுதி உறுதிசெய்யபட்டதும் சீமான் தன்னை ஈழ விடுதலையின் மொத்த குத்தகைகாரனைப்போல காட்டிக்கொள்கிறார்
கலைஞர் மற்றும் ஜெயலலிதா அரசு இருந்தபோது அடக்கிவாசித்து இப்போது ஆரியர்களின் கைக்கூலியாய் திராவிடத்தை ஒழிப்பதற்காக புறப்பட்டிருக்கிறார்.. முதலில் இவனுக்கெல்லாம் அதிக முக்கியத்துவம் கொடுக்க தேவையில்லையென்று தான் நினைத்தோம்.. கலைஞரை வந்து பார்த்துவிட்டு போய் மகா யோக்கியனைப்போல கலைஞரை துரோகி என்று சொல்லும் போது பேசாமல் இருக்கமுடியாது..
..
யார் தடுத்தாலும்/ நினைத்திருந்தாலும் விடுதலைப்புலிகளை கருவறுக்கவேண்டுமென்ற இலங்கை அரசின் முடிவை தடுத்து நிறுத்த முடியாது காரணம் சார்க் மாநாட்டில் எடுத்த / ஒப்புக்கொண்ட தீர்மானத்தின்படி இலங்கையில் நடக்கும் தீவிரவாதத்தை ஒழிக்க இந்திய உள்ளிட்ட ஏனைய நாடுகள் ஆதரவளிப்பளிதென்ற முடிவு..
காங்கிரஸ் என்றில்லை பாஜக ஆட்சியில் இருந்தாலும் இதுதான் நடக்கும் .. பிரபாகரின் தான்தோன்றித்தனமும், சரியான வழிகாட்டுதல் இல்லாமல் ஆண்டன் மறைவிற்கு பிறகு தடுமாறியதும்.. கூட இருந்தவர்களை ஒவ்வொருவராக கொன்று அதிகாரமமதையில் கடைசியில் கருணாவை கொல்ல நினைத்தது தப்பி சிங்களவனிடம் அடைக்கலம் புகுந்தபோதே தனக்கான நேரம் குறிக்கபட்டதை பிரபாகரன் அறிந்திருந்தார் அதனால்தான் முல்லிவாய்க்கால் நோக்கி மக்களை நகர்த்தி மனிதகேடயமாக மாற்றியதே இனத்தின் பேரழிவிற்கு காரணமானதே தவிர.. இதில் கலைஞரின் பங்கு/செயல் எங்கிருந்து வந்தது.. கலைஞரின் ஆலோசனையை எப்போதுமே ஏற்காததே பிரபாகரின் பின்னடைவிற்கு காரணம்.. எல்லாநேரத்திலும் தோக்கு(துப்பாக்கி) காக்குமென நம்புவது போராளிக்கு தகுந்ததல்ல ..எப்போது தோக்கை கீழே வைக்கவேண்டுமென்று அறிந்திருக்கவேண்டும்
..
ஈழ விடுதலை வரலாற்றில் நிறையபேர் பங்களிப்பதை செய்திருக்கிறார்கள்.. பல்வேறு பிரிவுகளாக இருந்தவர்களை ஒருங்கிணைக்க வேண்டுமென்ற கோரிக்கை நிராகரிக்கபட்டதோடு.. அவர்களை கொன்று ஒரு சர்வாதிகாரியைப்போல நடந்துக்கொண்டவர் பிரபா.. உமா மகேஸ்வரன் என்ன காரணத்திற்காக கொல்லபட்டாரென இன்றைய நவீன தமிழ்தேசிய பிள்ளைகளுக்கு தெரியுமா.. கல்யாணம் செய்துகொள்ள கூடாதென்ற விதியை மீறியதால் ..ஆனால் காலபோக்கில் விதிகள் மாற்றபட்டது.. பிரபாகரனின் மறுபக்கம் மிக மோசமானதாக இருந்ததை மறுக்கமுடியுமா.. எதிர் கருத்துடையவர்களை அவர்கள் ஈழப்போராளியாக இருந்தாலும் கொல்வதை தன்னை மீறி யாரும் வளர்ந்துவிட கூடாதென்றுதானே நினைத்தார்..
மலையக தமிழர்கள், கொழும்பு இஸ்லாமிய தமிழர்களையெல்லாம் எப்போதாவது அரவணைத்திருக்கிறாரா.. ஈழமக்களின் வளர்ச்சிக்காக ஏதாவது செய்திருக்கிறாரா..
போராளியாக இருந்தவர்களின் இன்றைய வாழ்க்கை எப்படியிருக்கிறதென்பதை இங்குள்ள தம்பிகள் அறிவார்களா..
..
ஒருவித பதட்டத்தோடு மக்களை வைத்திருந்து கடைசியில் கொன்று போட்டதுதான் மிச்சம் ..
இப்போது கூட துரோகம் என்ற சொல்லை பயன்படுத்துபோதுதான் நிறைய கிளறவேண்டியிருக்கிறது.. சீறிசபாரத்தினத்தை கொன்ற நிகழ்வு .. பச்சிளம் குழந்தையையும் திரும்ப வந்து கொன்றதெல்லாம் பேச ஆரம்பித்தால் பிரபாவின் தோற்றம் மாறிபோகும்..
மாத்தையா ஏன் கொல்லபட்டார்.. ஈழம் மலர்ந்தால் அவர்தான் முதல் ஜனாதிபதி என்று பேசியது யார்..? பிரபாவை போராளியாக காட்டி நின்றதில் பெரும்பங்கு திராவிட இயக்கத்திற்கே உண்டு நாடே பயங்கரவாதியாக சித்தரித்தபோதும் (ராஜீவ்படுகொலையின்போது) காத்து நின்றதும் மௌனமாய் பலி சுமந்ததும் திமுகவும் கலைஞரும் தான்..
..
உண்மையில் ஈழ தமிழ் மக்களுக்காக அதிகம் செய்ததும் அதிகம் துயரபட்டதும் அதிக விலைகொடுத்ததும்.. அதிகமாக இழப்பை சந்தித்ததும் திமுகதான் கலைஞர்தான்.. பிரபாகரனை எம்ஜிஆர் கைது செய்த போதுகூட சட்ட துணையை வழங்கியது திமுகதான்.. ஆனால் இன்றைக்கு சில விவரகேடுகள் ஈழத்தை வைத்து பிழைக்கும் .. சொகுசாய் வாழும் கேடுகெட்டவர்கள் கலைஞரை குறைகூறுகிறார்கள்..
கலைஞரை குறைகூற எவனுக்கும் தகுதியில்லை..
..
ஆலஞ்சியார்
Friday, August 3, 2018
விலைபோகும் ஊடகங்கள்
விலைபோகும் ஊடகங்கள்..
கொஞ்சம் ஆழ்ந்தோசித்தால் அவர்களின் நோக்கம் நமக்கு விளங்கும்.. மெல்ல மெல்ல ஊடகங்களை ஆக்கரமிக்கிறார்கள் ..
ஊடகவியலாளர்களை சந்திக்கவே அஞ்சுகிற மோடி.. தமிழக ஊடகவியலாளர்கள் சந்தித்து இருப்பதின் பின்னில் மிகப்பெரிய திட்டம் இருக்கிறது.. யாருமே கண்டுக்கொள்ளாத பாஜகவை முன்னிலைபடுத்த ஊடகங்கள் கேட்டுக்கொள்ளபட்டிருக்கிறது.. ஊடகவிவாதங்களில் பாஜக முகம் இல்லாமல் இருக்க கூடாதென்று அறிவுறுத்தபட்டிருப்பதாக தெரிகிறது.. பிரியாணி அண்டாவை தூக்கிகொண்டு ஓடிய பாஜகவினரை பற்றி வாய்திறக்காத ஊடகம் .. பாஜக இறக்குமதியின் பிரியாணி சண்டைக்கு திமுகதானென வரிந்துகட்டி விவாதம் நடத்துவதும் திமுகவினர் இல்லாதபோது நடத்துவதும் ஊடகஅறமா என்று விளக்கவேண்டும்..
..
அதுமட்டுமல்ல கருத்துசுதந்திரம் என்ற பெயரில் வன்மங்களை கொட்டிதீர்க்கிறார்கள்..
அவர்கள் மிக தெளிவாக சிறுபான்மையினர் மற்றும் தலித்விரோத போக்கை கையிலெடுத்து ஆடுகிறார்கள்..
அவர்கள் நோக்கம் திராவிடம் என்ற சொல்லை தமிழ்மண்ணிலிருந்து அகற்றவேண்டும் கொஞ்சம் கடினமான பணி ஆனால் அதற்கான துவக்கத்தை தொடங்கியிருக்கிறார்கள் ..
இரண்டுமூன்று ஆண்டுகளுக்கு முன் சமூகஆர்வலர்கள் என்ற பெயரில் வலம்வந்த கருத்துரையாளர்கள் முகமூடியை கழட்டிவிட்டு நேரடியாகவே தலித்விரோத போக்கை/குரோதத்தை வெளிபடையாகவே காட்டியிருக்கிறார்கள்..
ஊடகங்கள் வேண்டுமென்றே நடுநிலையாளர்களை, சமூகநீதியாளர்களை, புறக்கணிக்கிறது இதுநல்லபோக்கல்ல.. இவை எல்லாவற்றிக்கும் பின்னால் ஆர்எஸ்எஸ் எனும் இந்து தீவரவாத அமைப்பு பின்னில் இருப்பதும் அதை இயக்கும் பார்பனகும்பல் என்பது தெளிவாகதெரியும்..
திராவிட இயக்கங்கள் இன்னும் அதிகமாக பார்பனீய எதிர்ப்பை காட்டவேண்டிய நேரம்வந்துவிட்டது ..
முழுமூச்சாக எதிர்ப்பை ..மிகசத்தமாக கையிலெடுக்கவேண்டும் வெறுமனே பெரியார்மண் என்று சொல்லிக்கொண்டிருந்தால் காலம்கடந்த ஞானோதயமாக முடியும்..
..
இந்துத்துவாசக்திகள் குறிப்பாக இடைசாதிகாரர்களை தூண்டிவிட்டு அவர்கள் பின்னால் நின்று வேடிக்கைப்பார்பார்கள்..
இதை நீங்கள் கண்கூடாகவே காணலாம் எந்த பிராமணனைவது காவிதுண்டோடு ஊடகத்தில்/ வெளியில் தெரிவார்களா என்றால் இல்லை ஆனால் இடைசாதிகாரன் காவிதுண்டோடுதான் வருவான் ..
அவர்கள் மிக சதூர்யமாக நகர்ந்துக்கொள்வார்கள் ..,
..
திராவிட இயக்கங்கள் மிக சத்தமாக செயல்படவேண்டிய தருணம்..
தொடர்ந்து தாக்குதலை ..தமிழர்களின் தொலைகாட்சிகளில் ஆரியர்கள் புகுந்துக்கொண்டு நடத்திக்கொண்டிருக்கிறார்கள் குறிப்பாக ஆதித்தனைரின் தந்தி படும்பாடு நமக்கெல்லாம் கண்கூடாக தெரிகிறது..
இனியும் காலதாமதமின்றி எதிர்ப்பை அதிகதிகமாக வேகமாக,விவேகத்கோடு எடுத்தியம்பியவேண்டும்.. பாஜகவை தூக்கி நிறுத்த அல்லது அதைப்பற்றியே பேசவேண்டுமென்பதற்காக ஊடகங்களை ஒருவித மிரட்டலோடு அணுகுகிற முறை ஆபத்தானது .. இம் மண்ணில் சாதிய மோதலை மதவெறியை தூண்டுவதும் மெல்ல பாசிசத்தின் சித்தாந்தத்தை மண்டையில் ஏற்றுவது போன்ற பணிகள் நடைபெறுகிறது அதில் ஒன்றுதான் இந்தியை படிக்க ஆர்வம் காட்டுவதாக பொய்செய்தியை வெளியிடுகிறார்கள்.. திமுக ஆட்சிக்கு வரும் என்பதை உணர்ந்து அதற்கெதிரான கூட்டுசதியில் ஊடகங்களின் பங்கை விலை கொடுத்து வாங்கியிருக்கிறார்கள்.. ஏன் சந்தித்தோமென்று இவர்கள் வெளிப்படையாக சொல்லாதவரை இவர்கள் மீதான நம்பிக்கை சந்தேகத்திற்குரியதுதான்
நெருக்கடிகாலத்தில் கூட இவ்வாறு ஊடகங்கள் விலைபோனதாக தெரியவில்லை கருத்துசுதந்திரம் மறுக்கபட்டபோதுகூட ஆளும் கட்சிக்கெதிரான போக்கை ஊடகங்கள் கைவிடவில்லை.. இப்போதைய சூழல் ஜனநாயகத்தின் நான்காம்தூணை பாசிசம் எனும் கரையான் அரிக்க தொடங்கியிருக்கிறது ..
நிச்சயமாக மோடியுடனான இவர்களின் சந்திப்பிற்கு நாட்டுநலனுக்கானதில்லை.
..
ஆலஞ்சியார்
Thursday, August 2, 2018
நல்ல தலைவர்
தளபதி.. உயர்கிறார்..
ஒரு தலைவனுக்கான தகுதி எப்படி வரையறுக்கபடுகிறதென்பதை கவனிக்கவேண்டும் ..
சமகாலத்தில் இப்படியொரு தெளிவான வளரும் தலைவரை காணமுடியவில்லை நேர்மை.. எதுவும் முறையாக மக்கள் அங்கீகரிப்பில் வரவேண்டுமென்ற பிடிவாதம் பதவி மக்கள் அளித்ததாக வேண்டுமென்ற உயர்நோக்கு.. தளர்ந்து நிற்கும் நேரத்திலும் கடமையறிந்து செயலாற்றல்
தனிநபர் பகைமறந்த அரசியல் .. நாகரீக செயல்பாடு நல்ல தலைவராக திரு.ஸ்டாலினை நம்மில் நிறுத்தியிருக்கிறது..
..
தலைவர் உடல்நலியுற்று இருக்கிறார் அந்த நிலையிலும் மக்கள் மீது இந்த அரசு திணித்த சொத்துவரிக்கெதிராக போராட்டத்தை முன்னெடுக்கிறார்.. இயக்கத்திற்குள் புகுந்த கயவர்களால் பிரியாணி கடை அடித்து நொறுக்கபடுகிறது.. சம்பந்தபட்டவர் நீக்கபடுவதோடு பாதிக்கபட்ட கடை ஊழியரை/ முதலாளியை சந்தித்து தனது வருத்தத்தை பதிவு செய்வதோடு வேண்டிய உதவிகள் செய்யபடுமென்கிறார்.. தலைவர் மருத்துவமனையில் இருக்கும் போது கூட தா.பா உடல் நலிவுற்று மருத்துவமனையில் என்றவுடன் சென்று பார்க்கிறார்.. பகைமை அரசியல் என்பது எம்ஜிஆரெனும் கயமை கொண்டுவந்து நம்மிடையே விட்டது .. கலைஞரை யாரேனும்,சந்த்திதால் அவரை கட்சியில் கட்டம்கட்டி அவரது பதவியை பிடிங்கி.. ஒருவித சாடிஸ்ட் மனபான்மையோடு எம்ஜிஆர் நடந்துகொள்வார்.. அது பின்வரும் நாளில் அதே குரோத மனபான்மையோடு நடந்துகொள்ள வைத்தது பின் வந்த ஜெயலலிதா கேலி கிண்டல் செய்வதை ரசித்ததோடு அவர்களுக்கு பதவி வழங்க அது தொடர்கதையானது.. நாகரீக அரசியல் என்பது அதிமுகவிற்கு மட்டுமல்ல அவரோடு இணைபவர்களுக்கும் தொற்றிக்கொண்டது..
..
இப்போது தான் மெல்ல மெல்ல
நல்லதொரு அரசியல்களத்தை காணமுடிகிறது அதன் தொடக்கத்திற்கு காரணம் நிச்சயமாக தளபதி.ஸ்டாலின் காரணம் ஆவார்.. முதிர்ச்சியான அரசியலை .. களத்தில் கருத்தில் கொள்கையில் மட்டுமே எதிரியே தவிர.. தனிப்பட்ட விடயத்தில் இல்லை என்பதை உணர்த்தியிருக்கிறார்.. பெரியார் அண்ணா காமராஜர் கலைஞர் போன்றவர்களின் அரசியல் பண்பாட்டை மீட்டெடுத்திருக்கிறார்.. ஆம்.
எவ்வளவுதான் எம் இன எதிரியானாலும் ராஜாஜியோடு கொண்ட நட்பில் பேராசான் பெரியார் நேர்மையை கடைபிடித்தார்.. ராஜாஜியின் இளம் விதவை மகளை கண்டு குழந்தையை படிக்க வை என்று சொல்லி ..அவரின் மறுமணத்திற்கு காரணமாக இருந்தார்.. கலைஞரின் தாயார் அஞ்சகம் அம்மையார் மறைந்த போது முதல் ஆளாக கலைஞருக்கு முன்பே வீட்டுவாசலில் நின்றவர் காமராஜர் .. தன் மகன் திருமணத்தின் போது காமராஜர் வருவதற்காக மேடைவரை கார் வருவதற்கு ஏற்பாடு செய்து உடல் முடியாமல் இருந்த போதும் வந்து வாழ்த்தவேண்டுமென விரும்பியவர் கலைஞர்..
காமராஜர் மரணத்தின் போது மூத்த சகோதருக்கு அருகில் இருந்து கடமையை செய்வதுபோல செய்தவர் கலைஞர் ..
நல்ல ஆரோக்கியமான அரசியல்களத்தை காழ்ப்புணர்ச்சி காரணமாக குரோதத்தை தொண்டர்களிடையே இரண்டாம்கட்ட தலைவர்களிடையே வளர்த்து மகோரா எனும் எம்ஜிஆர்.. நம்மிடையே பிடித்த பிணி தொலைந்ததைப்போல .. ஜெயலலிதாவோடு காழிப்புணர்வு அரசியல் ஒழிந்து நல்லதொரு தொடக்கம் முளைத்திருக்கிறது.. பன்னீரும் எடப்பாடியும் கலைஞரை நேரில் காண வருவதும்.. தலைவரென விளிப்பதும் நல்ல அறிகுறிகள்..
..
நல்ல தொடக்கம் வந்திருக்கிறது நல்லவர். நம்பிக்கையானவர் முற்போக்கு சிந்தனையாளர்
நல்ல அரசியலை நேர்மையோடு கையாள்கிறவர் பகைமை பாராட்டாதவர் கிடைத்திருக்கிறார் .. ஆம் தளபதி மிக நேர்த்தியான அரசியலை எடுத்திருக்கிறார்.. நல்ல தொடக்கம் மக்கள் இவரை பின்துணைத்தால் நல்ல சூழல் உருவாகும்,தமிழகம் நலன் பெறும்..
..
#விடிகிறது..
..
ஆலஞ்சியார்
Wednesday, August 1, 2018
எழுந்து..வா..தலைவா
எழுந்துவா தலைவா..
காவேரி மருத்துவமனையில் திரண்டிருந்த கூட்டம் மட்டுமல்ல தமிழகத்தின் ஒ்வொரு மூலையிலும் இந்த வார்த்தை ஓங்கி ஒலித்தே கொண்டே இருக்கிறது..
எழுந்து வா தலைவா..
..
இந்த மனிதரை விமர்சித்தவர்கள்.. அரைகுறை தெளிவோடு கோபம் கொண்டவர்கள் புரிதலின் பிழையாய் நின்றவர்கள் .. கடந்த ஐந்து தினங்களாய் வியந்து நிற்கிறார்கள் .. இந்த மனிதரையா நாம் தவறாக பிரிந்துகொண்டு ஏசினோம் என்று ஒரு வித தவிப்போடு நிற்கிறார்கள்... ஆம் சாதனைகளை மட்டுமல்ல இவர் பயணித்த பாதையில் யார் பயணித்திருந்தாலும் இடறியிருப்பார்கள்.. இருக்குமிடமே தெரியாமல் புதையுண்டிருப்பார்கள் .. எத்தனை சூழ்ச்சிகள் கூட இருந்தவனே ..நண்பனாய் நம்பியவனே .. ஆரிய சூழ்ச்சியில் விழுந்து வளர்த்தகடா மார்பில் பாய்ந்த கதையாய் போனதும் ..கூட இருந்தவர்கள் முதுகில் குத்தியபோதும்.. பொய்வழக்குகள் .. அதுவும் மக்களை நம்பவைத்து தோல்வியை தந்ததும் .. எழவே முடியாதவாறு ஊழல் குற்றசாட்டை சுமத்தி வழக்குகளால் அலைகழித்த போதும் சறுக்கிவிடாமல் நிச்சயம் ஒருநாள் மக்கள் உணர்வர் என்ற நம்பிக்கையோடு தம்மோடு பயணித்தவர்களை அரவணைத்து ..அண்ணா கண்ட கட்சியை கட்டிகாத்து ஆலமர விருட்சமாய் நிற்கிறார்..
..
அப்பப்பா எத்தனை மனஉளைச்சல் சொந்த மகனை மிசாவில் கைதுசெய்து சிறையில் அடைத்தபோதும் மகளை 2ஜி வழக்கில் கைது செய்து திகாரில் அடைத்தபோதும் அறம் வெல்லும் என்று உண்மை எப்போதும் தோற்காதென்ற நம்பிக்கையோடு கழகத்தை காத்துநின்றவர்.. தமிழர்கள் வாழ்வில் இன்றைக்கு கொஞ்சமேனும் மெச்சபட்டதுண்டெனில் அது கலைஞரின் சிந்தனையில் உதித்தது.. இவரின் தொலைநோக்கு பார்வை இந்திய நாட்டிற்கே வழிகாட்டியாய் இருப்பதை இப்போதுதான் உணர தொடங்குகிறார்கள்.. எப்படி சாத்தியமாயிற்றென்று ஆச்சர்யமாய்(வியப்ப்போடு) பார்க்கிறார்கள் ஒரு அரசியல் தலைவன் எப்படி செயலாற்றவேண்டுமென்று கலைஞரை கண்டுபடிக்கவேண்டும் .. குடும்பமா கட்சியா என்றால் கட்சியே பிரதானமென்ற சூத்திரம் அறிந்திருந்தல் ..எழுந்ததிலிருந்து உறங்க செல்லும் வரை இயக்கத்தைப்பற்றிய சிந்தனை.. மக்களுக்கு என்ன செய்யலாம் எதை விரைந்து முடிக்கவேண்டும் எதுவெல்லாம் பாதகமாகும் எதை செய்யகூடாதென்ற விவரத்தோடு மிக தெளிவான அரசியல்பாதையை வகுத்து பின்தொடர்ந்து வருகிறவர்களுக்கு தெளிவை தந்தவர் ..
..
இதோ இந்த கிழவன் வயது மூப்பினால் தளர்ந்து படுக்கை கிடுக்கும் போது கூட எதிரிகள் பதறுகிறானென்றால் இவரின் இருப்பு அவனுக்கு எவ்வளவு பயத்தை தந்திருக்கும் .. ஆரியம் கண்டு மிரளும் சிம்மம் கலைஞர்.. உறவாடி பார்த்தார்கள்.. உற்றவனை பகைவனாக்கி பார்த்தார்கள் கூட இருந்தவனை கொண்டு கொலைவாளை தூக்க வைத்தார்கள்
அதிகாகத்தை பயன்படுத்தி அழிக்கபார்த்தார்கள்.. பொய்களை வழக்காக்கி பார்த்தார்கள் .. ஊடகத்தில் மூலம் சிறுமைபடுத்த நினைத்தார்கள்.. முடியவில்லை..
கலைஞர் நேர்வழிநின்று வெளிப்படையான ஒளிவுமறைவற்ற அரசியல் பயணத்தை ..நெஞ்சுரத்தோடு செய்தார்.. ஊளையிடுபவர்களின் இரைச்சலை புறந்தள்ளி பெரியாரின் பார்வையில் மக்களுக்கு என்ன செய்யலாம் என்று நாளும் சிந்தித்து செயல்படுத்தி.. மக்களின் முன்னேற்றம் ஒன்றே குறிக்கோளாய்..கிடைத்த வாய்ப்பை மிக சரியாக பயனபடுத்தி மக்களுக்கு நல்லதை செய்து அவர்கள் வாழ்வில் ஒளியேற்றி.. நல்ல சேவகனாய் உழைத்தார்.... மக்கள் வாழ்வு மேம்பட ஓயாத உழைத்தவரை..
மக்கள் ஒருமித்த குரலில் அழைக்கிறார்கள்
..
#எழுந்துவா_தலைவா..
..
ஆலஞ்சியார்
Subscribe to:
Posts (Atom)