Wednesday, September 6, 2017
முரசொலியில் வைகோ
முரசொலி..
முரசொலி பவளவிழாவில் திரு.வைகோ பேச்சை கேட்டிருப்பீர்கள்.. இன்னமும் தெளிவு பெறாதவராகதான் அவரின் பேச்சு இருந்தது.. மேடைப்பேச்சில் கடைப்பிடிக்கவேண்டிய சில விடயங்கள் குறித்து கலைஞர் சொல்ல கேட்டிருக்கிறேன்.. ஆளுமை என்பது சபையை கட்டுக்குள் கொண்டுவந்து நிறுத்துவது மட்டுமல்ல எந்த விடயத்திற்காக நிற்கிறோம் என்பதில் கவனம் தேவை.. எல்லாவற்றையும் போட்டு குழைப்பிக்கொள்வதை விட எதை தவிர்க்கவேண்டுமென அறிந்திருந்தல் வேண்டும் அதைவிட நிகழ்கால நிகழ்வுகளை கோர்த்து பேசவேண்டுமென்பார்..அது நேற்றைய உரையில் என்றில்லை வைகோவிடம் எப்போதும் இருப்பதில்லை.. உலக அரசியலை படித்தவர் உள்ளுர் அரசியலின் நம்பகதன்மையை மறந்துவிட்டார்..
..
திமுகவிலிருந்து பிரிந்து வந்து 25 ஆண்டுகளை கடந்தும் தெளிவான முடிவை இதுவரை எடுக்கவில்லையென்பதும்.. சரியான பாதையில் இதுவரை பயணிக்கவில்லையென்பதும் இவர் ஆதரித்தவர்கள் இவர் படித்து வளர்ந்த திராவிட சித்தாந்தத்தை சிதைக்க வந்தவர்கள் என்கிற யதார்த்ததை கூட உணராதவராகவே காலம் தள்ளிவிட்டார்..
..
மதிமுக தொடங்கி முதல் முறையாக தேர்தலை சந்தித்த போது நண்பர்களிடத்தில் சொன்னேன் வைகோ கூட வெற்றிபெற முடியாது இது அவருக்கே தெரியுமென்றேன் திமுக தேர்தல் பணிக்குழு செயலாராக இருந்தவர் அடிமட்ட தொண்டர்களின் அரவணைப்பில்லாமல் கிராமங்கள் தோறும் கட்சியை கொண்டு சேர்க்க முடியாதென்கிற உண்மை அறியாமல் போனார்..
நிஜத்திற்கும் நிழலுக்கும் பேச்சிற்கும் செயலுக்கும்,உள்ள வேறுபாட்டை உணராதவராகவே இப்போதுமிருக்கிறார்..
மதுராந்தகம் ஆறுமுகம் மதிமுகவிற்கு வந்தபோது லட்சம் தொண்டர்கள் வந்ததைப்போல உணர்கிறேன் என்றார்.. இதுதான் வைகோ..தினகரன் கந்தசாமி வந்தபோது திராவிட இயக்கத்தின் ஊடகப்பிரிவே வந்ததைப்போல பேசினார் ..
உண்மை நிலை அறியாதவராகவே இப்போதுமிருக்கிறார்.. ஜெயாவை மோடியை விஜயகாந்தை பின்துணைக்கிற போது ஒன்றை மறந்தார் தன் கால் நழுவுகிறதென்பதை..
..
திராவிட இயக்கத்தின் பின்ணணியில் வளர்ந்தவர் அதன் சித்தாத்தத்தோடே போட்டியிட்டார்.. தெரிந்தே தவறுகளை கொஞ்சமும் கூச்சமின்றி செய்தார்.. சற்றென்று நம்பிவிடும் அவரது இயல்பு அவசரகதியில் ஆனது.. இப்போதுகூட வலுகட்டாயமாக தளபதியைப்பற்றி பேசுவதை தவிர்த்து மீண்டும் தவறின் கோட்டில் நிற்கிறார்..
இவரால் திமுகவிற்கு பலமென்ற நிலை இல்லை மாறாக வைகோவின் அரசியல் இனி தளபதியின் அடியொற்றி இருக்கிறதென்பது தான் உண்மை.. காலம் அவருக்கு உணர்த்து போது வைகோ அரசியலிலிருந்தே கரைந்துப்போயிருப்பார் ..
..
தோழர். ஆலஞ்சி
Tuesday, September 5, 2017
ஆசான்..
#ஆசான்..
நிறைய பேரை எழுதவேண்டிவரும்.. என்னுள் அகரத்தை எழுதிய பூலாபாய் தொடங்கி..
..
ஒரு குழந்தையின் முதல் ஆசான் தாய்..
தாயிடமிருந்து 3000 சொற்களை பள்ளிக்கு செல்வதற்கு முன்பே கற்றுக்கொள்கிறது குழந்தை..
அறத்தை அன்பை அர்ப்பணிப்பை அக்கறையோடு நம்மில் விதைக்கிற தாயே நம் முதல் ஆசான்..
பள்ளிகளில் போதிக்காத நிறைய விடயங்களை தாய் தன் செய்கையில் போதித்துவிடுவாள்.
அன்பின் மிகுதியால் நம்மை வழிநடத்தி சரிசெய்ய மறந்து போவாள்..
..
#பள்ளி..
ஆரம்பத்தில் பயத்தையும் பின் அக்கறையும் அறிவுசுடர் கொண்டு நம்மில் விதைக்கிற.. இல்லையில்லை நடுகிற இடம்.. நாற்றை பிடிங்கி வேறிடத்தில் நடுவதைப்போல பாத்திக்கட்டி பயிரை காப்பது போல வீணான களைகளை களைந்து .. நம்முள் நம்மை அறியாமல் வந்துவிழும் கொல்லிகளை.. கெட்டவிடயங்களை கொன்று நம்மை செழிப்போடும் சிறப்போடும் வளர்த்தியெடுக்கும் நெடுவயல்..
..
#ஆசான்.
நம்முள் அறிவெனும் விதையை விதைக்கிறவர்கள்.. அது சரியாக விளைகிறதா என நம்மை கவனித்து அடுத்த நிலைக்கு கொண்டுபோகும் அறம் செய்பவர்கள்.. ஆசிரியர்பணி அறப்பணி.. கற்பித்தல் எனும் அரிய சேவையாற்றுகிறவர்கள்..
..
என் ஆசான்கள் அறிவில் சிறந்த சான்றோர்கள்..
அன்பை அறிவை பகுத்தாயும் திறனை சுயமரியாதையை..சோர்ந்துவிடாமல் இயங்கும் ஆற்றலை எனக்கு கற்றுதந்தவர்கள்..
மிகசிறந்த நல்லாசிரியர்களோடு நட்போடுபழகும் வாய்ப்பினை பெற்றிருக்கிறேன்.. அன்பிற்குரிய அறிவாசான்கள்..
..
இந்த ஆசிரியர் தினத்தில் என்னை செம்மைப்படுத்தி வாழும் வழிமுறையை அறத்தோடும் அன்போடும் ஈகை குணத்தோடும் கற்றுதந்த..
என் முதல் ஆசான்
எங்கள் தாயாரின் நினைவோடு..
..
தோழர். ஆலஞ்சி
Monday, September 4, 2017
சங்கத்தமிழ்..
பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
நாலும் கலந்துனக்கு நான்தருவேன் - கோலஞ்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீயெனக்குச்
சங்கத் தமிழ் மூன்றும் தா..
..
எங்க கிழவிக்கு எப்பவுமே குசும்புதான்..
தனக்கு தெரிந்த விசயம் அடுத்தவனுக்கு தெரியலேன்னு வையி வஞ்சியிலே தான் பாடுவா..
..
அதியமான் படையெடுக்க தயாரான போது இரு நான் போய் பாத்துட்டுவரேன்னு சொல்லி அங்கபோய் அதியமான் தளவாடங்களெல்லாம் கொல்லன் பட்டறையில இருக்கு உங்க கிட்ட உள்ளதெல்லாம் பளபளன்னு இருக்கேன்னு சொல்லி அவனுக்கு பேதி வரவழைச்சவ..
..
கணபதிபாபா கிட்ட போயி சங்கத்தமிழை கேட்டான்னா பாத்துக்கோயேன்..
..
#வஞ்சி..
..
விளக்கம்..
இப்பாடலை இன்னும் சிறிது நோக்கினால், "கோலஞ்செய் துங்கக் கரிமுகத்துத் தூமணியே" என்பது யாரை அல்லது எதனைக் குறித்தென்று ஒரு கேள்வி எழுகிறது. இதன் பரவலான விளக்கம் பிள்ளையார் என்பது. ஆனால் மணி என்பதைப் பலரும் பலவிதமாகப் பொருள் கொள்கின்றனர். மணி என்பதை நம் உள்ளத்தே உறைகின்ற ஞானத்தின் குவிய இடத்தைக் குறிப்பிடுவதாகக் கொள்ளலாம். ஞான மணியே, நன்மணியே, பொன்மணியே, நடராஜ மணியே என்பார் வள்ளலார். இந்த ஞானத்தையே "தூமணி" என்பதாகக் கொள்ள இடமிருக்கிறது. துங்கக் கரிமுகம், கண்களை மூடிக்கொண்டு புருவ மத்தியைப் பார்த்தால் தோன்றும் கோலம். தோன்றி மறைந்து விளையாடும் ஒரு காட்சி. ஒளியும் இருளுமாய்க் கலந்து காட்டும் கோலம். அதுவே ஞானத்தின் இருப்பிடமாகப் பலராலும் காட்டப்படுவது. திருமூலரிலிருந்து பல சித்தர்களும் சிந்தையைச் செலுத்துவது இவ்விடத்துக்கே. இக்காலத்து யோகாசன வியாபாரிகளுக்கும், மத வியாபாரிகளுக்கும்கூடப் புரிந்தோ புரியாமலோ இவ்விடத்தின்மீது ஒரு மயக்கமுண்டு. ஆக, அங்கே இருக்கின்ற ஞானத்தால் பலவற்றையும் உணர முடியும். மெய்யுணர்தல். மெய்யறிவு. மெய்ஞானம். இது ஓதாமலேயே வாய்க்கக்கூடியது என்பதாகப் புரிந்துகொள்ள முடியும். இந்தத் தூமணியிடமே ஔவையார் முச்சங்கத் தமிழையும் தரச்சொல்லி வேண்டுகிறார். சரி, முதல் வரியில் வரும் சாப்பாட்டுச் சரக்குகள் என்னத்துக்கு? "பால், தெளிதேன், பாகு, பருப்பு" என்ற நான்கும் மனிதர்கள் உயிரைக் கட்டிக் காத்துக்கொள்ளப் போதுமான அத்தனைச் சத்துக்களையும் கொண்டுள்ளன. இவற்றை மட்டுமே உண்டுகொண்டு வேறு உண்டியைத் தேடாது உயிர்வாழ்ந்துவிட முடியும். சாதகருக்கும் உண்டி தேவை. காற்றைக் குடித்து உயிர்வாழ எல்லோருக்கும் முடிந்துவிடுவதில்லை. அதே நேரத்தில் ஆடம்பரமான பெருவுணவுக்கும் நேரம் கூடுவதில்லை. எனவேதான் இந்த அடிப்படை உணவுப்பொருட்களை மட்டுமே கொண்டு உன்னைப் பேணிக்கொண்டிருக்கிறேன், எனக்கு வேண்டியதைக் கொடு என்கிறார்.
..
நிறைய ஔவையார் இருந்ததாக ஆய்வுகள் சொல்கிறது .. பாலும் தேனும் எனும் பாடலை பாடியவர் பிற்காலத்தை சேர்ந்தவர் என்றும் ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்
..
தோழர்.ஆலஞ்சி..
தமிழிசை
நிர்மலா சீதாராமனை ஏன் விமர்சனம் செய்கிறீர் தமிழகத்திலிருந்து ஒருவர் அதுவும் ஒரு பெண் பாதுகாப்புத்துறை அமைச்சராகியிருக்கிறார் பாராட்டவேண்டாமா என்கிறார்.. தமிழிசை கூடவே மோடியை விமர்சித்தால் பொறுத்துக்கொள்ள முடியாதென்கிறார்.
விமர்சனத்திற்கு அப்பாற்ப்பட்டவரென்று யாரும் இல்லை..
..
நிர்மலா தமிழக மக்களின் பேராதரவை பெற்றவரா ..மக்களின் பிரச்சனைக்காக போராடியிருக்கிறாரா.. தமிழகத்தில் இருந்து பாஜகவிற்கு பிராமணர் ஒருவர் தேவைபட்டார் அதனால் தான் ஆந்திராவிலிருந்து அழைத்துவந்தார்கள்.. மக்கள் செல்வாக்கோடு தன் தொகுதியில் யாருடைய ஆதரவுமில்லாமல் குறிப்பிட்டளவு வாக்குகளை பெற முடியுமென்கிற பொன்.ராதாவிற்கு இணை அமைச்சர் பதவி.. சமீபகாலம் வரை யாரென்றே தெரியாத நிர்மலாவிற்கு கேபினட் பதவி.. இதை ரோசமுள்ள நாடார் சமுதாயத்தை சார்ந்த தமிழிசை போன்றோர் எதிர்த்திருக்கவேண்டாமா.. அதை செய்யாமல் ஏன் எதிர்க்கிறீர் என்கிறீர்.. ஆம் எதிர்க்கப்படவேண்டியவர்தான்.. நேரடியாக கேள்வி கேட்டால் சிங்கப்பூரில் உங்களால் கேள்வி கேட்கமுடியுமா என திமிரோடு பதில் சொல்கிறவரை.. தமிழர் நலனுக்கு எதிராக செயல்படுபவரை.. கடைசி வரை நம்பவைத்து கழுத்தறுப்பவரை விமர்சிக்காமல் எப்படி.. இவர்களுக்கெல்லாம் ராஜகுருவான ராஜாஜியையே கேள்வி கேட்டவர்கள்.. நாங்கள்..
எந்தவொரு கேள்வியை எதிர்க்கொண்டாலும் பார்பன திமிரோடு பதில் சொல்லும் நிர்மலாவை விமர்சிப்பது எப்படி தவறாகும்..
..
திரு.மோடி.. இதுவரை பாராளுமன்றத்தில் கேள்விகளுக்கு பதில் தந்திருக்கிறாரா.. 64 நாடுகளுக்கு சென்று வந்தவர் அதுகுறித்து நாடாளுமன்ற சபைக்கு தகவல் சொன்னாரா.. என்னென்ன நல்ல திட்டங்களை நாடோடி.. நாடோடி கொண்டுவந்திருக்கிறேனென சொல்லவேண்டாமா..பாஜக எம்பிக்கள் கூட்டத்திலேயே எதிர்கேள்வி கேட்ட எம்பியை கேள்வியெல்லாம் கேட்ககூடாது பாஜக ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தை படித்துவிட்டு வாருங்கள் என்கிறாரே .. ஆனால் மக்கள் மன்றத்தில் மக்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லியே ஆகவேண்டும் .. சொல்லாதவரை விமர்சனங்களை எதிர்க்கொள்ளதான் வேண்டும்..
..
இதில் அனிதாவை ஏன் சுயநிதி கல்லூரியில் சேர திமுக உதவலாமே என தமிழிசை சொல்கிறார்.. அனிதா கேட்டது சலுகையல்ல உரிமை.. அதெல்லாம் கிட்டுக்களின் வேலை.. எதைவேண்டுமானாலும் பேசலாம் என்று தமிழிசைக்கு உரிமை வழங்கியிருக்கிற அரசியல்சாசனம் ..அதை விமர்சனம் செஸ்யும் உரிமையும் வழங்கியிருக்கிறது..
..
இது ஜனநாயகநாடு
..
தோழர். ஆலஞ்சி
Sunday, September 3, 2017
நாங்கள் இருக்கிறோம்
வெறிக்கொண்டு அலைகிறார்.. கிருஷ்ணசாமி..
தம்பி பிரசன்னாவை ஒருமையில் அழைத்து உனக்கெல்லாம் பதில் கூற தேவையில்லையென்றவர் பதில் பேச முடியாமல் தொடர்பை துண்டிக்கிறார்..
ஏன் மருத்துவம் தான் படிக்கவேண்டுமா வேறு படிப்பு படிக்கலாமே என்கிறார் இவர் வேறு தொழில் செய்வதை நாம் கேள்வி கேட்கிறோமா என்ன..? அனிதாவின் சாவில் மர்மம் இருப்பதாக கொச்சை படுத்துகிறார்.. தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை செய்து முடிக்க அதிக உணர்ச்சிவய படுகிறார். திமுகதான் தன்னை நாடி வந்ததாக சொல்வதிலிருந்தே இவர் எந்தளவிற்கு பாஜகவிடம் சரணடைந்திருக்கிறார் என்பது புரிகிறது..
..
வெறிப்பிடித்தால் தெருநாயின் சத்தம் அதிகமாகும் இவரை யாரை குற்றம் சாட்டுகிறார் தெரியுமா.. சிவசங்கரை.. அரசியலில் நேர்மையும் கீழ்தரமான அரசியலை எப்போதுமே விரும்பாத இந்த சமுதாயத்தின் மீது அக்கறைக்கொண்ட நல்லவரை.. எங்களுருக்கு நூலகம் வேண்டுமென கேட்ட 9வது படிக்கும் மாணவியை கொண்டே நூலகத்தை திறந்து வைத்தவர்..
அரசியலில் கிருஷ்ணசாமி போன்ற சாதியை முன்னெடுத்த உயர்ந்தபிறகு அதே ஜாதிய பகடையாக்கி தன்னை உயர்த்திக் கொள்ளும் ஈனத்தனம் கொண்டவரில்லை எங்கள் எஸ்.எஸ்.சிவசங்கர்..
..
இரண்டுநாளாக வருகிறவர்களையெல்லாம் குதறுகிறார் நெறியாளரை பொறியியல் படித்துவிட்டு ஏன் இந்த வேலை செய்கிறீர்கள் என கேட்கிறார்.. பாப்பானின் காலில் கிடக்கும் செருப்பாக கிருஷ்ணசாமி இருப்பதில் எங்களுக்கு கவலையில்லை ஆனால் சிவசங்கர் போன்ற நேர்மையானவர்களை கை நீட்டி குற்றம் சொன்னால் பொறுத்துக்கொண்டிருக்க முடியாது.. இனி ஒட்டபிடாரம் என்றில்லை எங்கு நின்றாலும் வெளக்கமாறு தான் வரும்..
இந்த கிருஷ்ணசாமியிடம் பதட்டம் வெளிப்படையாகவே தெரிகிறது என்பதை அவரது பேட்டி உணர்த்துகிறது வெளியில் இறங்கி நடமாட முடியாதென்பதறிந்து திசை திருப்பும் நாடகம் நடத்துகிறார்..
கிருஷ்ணசாமி அவர்களே உங்கள் எண்ணம் ஈடேறாது.. வரலாற்றில் நெடுக துரோகிகளை நிறைய கண்டிருக்கிறது ..தமிழினம்.. கேவலமான செயலை செய்கிறீர் அதை தமிழகம் அறிந்து ஒட்டுமொத்த வெறுக்கிற நபராக இருக்கிறீர்
..
தமிழகமே
சிவசங்கருக்கு பின்னால் நிற்கும் திசைதிருப்பும் ஆரிய சூழ்ச்சியை மக்கள் நன்கு அறிவர்..
..
#நாங்கள்_இருக்கிறோம்..
#StandwithSS..
..
தோழர். ஆலஞ்சி
Saturday, September 2, 2017
அறிவாலயத்து கிழவனை
அறிவாலயத்து கிழவனை நம்பாததால் நாடு எப்படி சீரழிகிறது பார்த்தீர்களா..
சில நூறுக்கு ஆசைப்பட்டதால் .. சிலரின் பொய்யுரையை நம்பியதால் நாடும் வீடும் சவகாடாய் போனதே புரிகிறதா..
எந்த நிலையிலும் சமூகநீதியை நிலைநாட்ட போராடிய பெருந்தலைவனை மதம் இனம் ஊழல் எனச்சொல்லி வீண் பழி சுமத்தி வீணர்களோடு கைகோர்த்தீர்களே .. இப்போது புரிகிறது கட்டுமரத்தை அருமை..
..
ஆம் கட்டுமரம்தான் உன்னை கரைசேர்க்கும் கட்டுமரம்..காங்கிரஸ் கொண்டுவந்ததாக சொல்லி திசை திருப்ப நினைப்போரே.. காங்கிரஸ் மாநிலங்கள் விருப்பப்பட்டால் தான் தேர்வு என்றதை மறந்தது பேசிகிறீர்.. காங்கிரஸை குற்றசாட்டுவதல்ல நோக்கம் மோடியை பாஜகவை பாப்பானை காப்பாற்ற மக்களின் கோவத்திலிருந்து திசைதிருப்ப முயற்சிக்கிறீர் ..இதற்கு பதில் வேறு வேலை செய்யலாம்..
..
நீட் குறித்து கருத்தரங்களும்.. போராட்டங்களும் திமுக எடுத்தபோது அரசியல் பேசுவதாக சொன்னவர்கள் தான் இன்று மனம் போன போக்கில் பேசுகிறீர்.. கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்த நிறைவேற்றிய மசோதாவை எங்கே இருக்கிறதென்றே தெரியவில்லை என்று திமிரோடு சொன்ன பாப்பாத்தியை என்ன செய்திருக்கவேண்டும் மீண்டும் தமிழகம் பற்றி பேச முடியாதவாறு எதிர்த்திருக்கவேண்டாமா.. ஜல்லிக்கட்டு போராட்டம் நடந்துக்கொண்டிருக்கும் போது சத்தமே இல்லாமல் நீட் தேர்விற்கு ஒப்புதல் அளித்த ஓபிஎஸ்ஸையும் கயவன் மாபா.பாண்டியனையும் ஓடஓட விரட்டியிருக்கவேண்டாமா..
இந்த பொம்மைகளை வைத்துக்கொண்டு நமது உரிமைகள் ஒவ்வொன்றாய் பறிக்கும் பாசிச பாஜகவை சேர்ந்தவர்களை .. அரசியலில் நேரடியாக களம்கண்டு வென்று வர முடியாதென அறிந்து கொள்ளைப்புறமாய் நுழைகிற .. பாப்பனர்களை வீழ்த்த ஓரணியில் திரண்டிருக்க வேண்டாமா..
..
நாம் செய்த தவறின் பலனை தான் அனுபவிக்கிறோம்.. திமுகவோடு கருத்துவேறுபாடுகள் இருக்கலாம் வரும்காலங்களிலும் அது தொடரலாம் ஆனால் கொள்கையில் உறுதியோடு சமூகநீதியை நிலைநாட்டுவதில் தமிழக நலன்களை விட்டுக்கொடுக்காமல் செயலாற்றுகிற ஒரே கட்சி திமுகதான்..மனகசப்புகளை சொல்லி விலக்கிவைக்க நினைத்ததால் இன்று அதன் விளைவு எவ்வளவு கொடூரமாக இருக்கிறதென்பதை உணர்கிறோம்..
..
இப்போதும் சொல்கிறேன்..
அறிவாலயத்து கிழவனை நம்புங்கள்..
..
#அறிவாலயமே_நம்_புகலிடம்
..
தோழர். ஆலஞ்சி
Friday, September 1, 2017
கோபம் படு
#கோபம்_படு
எத்தனை முறை எழுதினோம்.. எவ்வளவு முறை சொன்னோம்.. மாநில மக்களின் வரிப்பணத்தில்.. இங்கே பயின்ற மாணவர்களின் நலன் கருதி நுழைவு தேர்வென்பதே கிராமப்புற மாணவர்களின் கனவை தகர்த்தெறியும் குறிப்பாக ஏழைகளின் உயர்க்கல்வி கனவு தகர்க்கப்படுமென எவ்வளவு பேசியிருப்போம்.. மாநில பாடத்திட்டத்தில் பயின்றவனை மத்திய அரசு பாடத்திட்டத்தில் கேள்வி கேட்பது எவ்வளவு அயோக்கியத்தனம்.. அதுமட்டுமா.. ஒவ்வொரு மாநிலத்திற்கும் வெவ்வேறு கேள்விகள் என்கிற போதே ஒரே தகுதி என்பது கேள்விக்குறியாகும் என்றோம்..
..
இவ்வளவிற்கும் யார் காரணம்.. நீட்தேர்வை கலைஞரோ ஜெயலலிதாவோ இருந்த போது கொண்டுவர முடிந்ததா.. இந்த தலையாட்டி பொம்மைகளை வைத்துக்கொண்டு இவர்கள் ஆட்டத்தில் பலிகள் கேட்கிறார்கள்..
யாரெல்லாம் குற்றவாளிகள்.. மாபா. பாண்டியன் இந்த ஆர்எஸ்எஸ் அயோக்கிய நாய்தான் நீட்டிற்கு அங்கீகாரம் தந்தது ஏழைகளுக்கு இலவசக்கல்வி தரவேண்டுமென விரும்பிய காமராஜர் குலத்தில் பிறந்த சாத்தான்..
சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர்
எதற்குமே லாயக்கில்லாதவர்
முதல்வர் தலையாட்டி தலைமை பொம்மை.. இத்தோடு சுகாதாரத்துறை செயலர் ராதா கிருஷ்ணன்.. சம்பந்தமே இல்லாமல் இதில் கருத்து சொல்லி திசைதிருப்பிய பாப்பாத்தி நிர்மலா சீதாராமன் இவர்களெல்லாம் தான் இந்த கொடுமைக்கு காரணமானவர்கள்..
..
இனியும் பொறுத்துக்கொண்டிருந்தால் இனியும் நிறைய அனிதாக்களை காவு கேட்பார்கள்.. இனி கொடுக்க எங்களிடம் இல்லை.. இனி காவு கேட்போம்.. இந்த அரசை இந்த அரசு பின் இருந்து இயக்கும் பார்ப்பன சக்திகளை.. இதற்கு துணை போகும் கயமையே உருவான கிருஷ்ணன்களை .. அரசியலை விட்டே அப்புறப்படுத்துவோம்..
..
இந்த அரசை நம்பியிருந்தால் கடைசியில் கழுத்தறுப்பார்கள்.. கடைசி வரை நம்பிக்கொண்டிருக்க செய்து விட்டு கை கழுவிப்போனவர்கள்..
இவர்கள் நம்மை கேவலப்படுத்திருக்கிறார்கள்.. நமது பாடத்திட்டத்தை, நமக்கு பயின்று ஆசான்களை, நமது கொள்கைகளை .. 1170 மதிப்பெண் வாங்கினாலும் ஒரு மயிறும் புடுங்க முடியாதென நம் செவிட்டில் அறைந்து சொல்லியிருக்கிறார்கள்.. இவர்கள் இனியும் விட்டுவைப்பது சரியல்ல.. தமிழகத்தில் அரசியல் செய்ய வந்தால் தகுந்த முறையில் கவனிக்கவேண்டும் இனி எக்காலத்திலும் எழுந்திருக்கவே முடியாதவாறு ஆழ புதைக்கவேண்டும்.. இவர்களுக்கு வரும் தேர்தலில் தரும் பாடம் இனி ஆட்சிக்கு வருகிறவர்களுக்கு பாடமாக இருக்கவேண்டும்..
..
சில ரூபாய்க்கு விலை போனதால் நிறைய விலைக்கொடுக்க வேண்டியதாயிற்று.. இனியும் மதத்தை கையிலெடுப்போரை சாதியம் பேசும் கழிசடைகளை களையெடுப்போம்.. சமூகநீதியை காப்போரை கொண்டுவருவோம்..
..
#பொறுப்பதற்கில்லை_இனி..
..
தோழர். ஆலஞ்சி
Subscribe to:
Posts (Atom)