Thursday, May 30, 2024

 "தமிழன் உறவுமுறை"
..
கோவில் கட்ட நிலம் தருகிறான் இஸ்லாமியன்.. புதுப் பள்ளிவாசல் திறந்தால் சீர் வரிசை  கொண்டு வருகிறான் இந்து என அறியப்படும் தமிழன்.. எப்படி இங்கே மட்டும் இப்படி.. மாமனாய் மச்சானாய் உறவாட முடிகிறது.. இங்கே  சாதியோ  மதமோ பெரும் தாக்கத்தை கொண்டுவராது.. காரணம் எளிது இவன் மீது திணிக்கப்பட்டதுதான் சாதியும் மதமும்.. 
..
குமரியில் தியானத்திற்கு  வருகிறார் மோடி அவர்கள்.. தன்னை இந்துத்துவவாதியாக அடையாளப்படுத்திக் கொண்டவர்
 இவர் தமிழகத்தின் வரலாற்றையோ மக்களின் பண்பாட்டையோ மொழியையோ அறியமாட்டார்.. விவேகானந்தர் குமரி பாறையில் தியானம் இருந்த போது மனோன்மணியம் சுந்தரனாய் சொன்ன வார்த்தையை நாமும் சொல்கிறோம்.. தமிழர்கள் இந்துக்கள் இல்லை (நாங்கள் இந்துக்கள் இல்லை என்றார்) ..
..
தமிழர்கள் மீது திணிக்கப்பட்ட "கோடபாடுகள்" மதமேறியதால் அதை கொண்டாட்டமாய் கொண்டாடும் மனநிலைக்கு தள்ளபட்டாலும் இயல்பாய் அவனின் பண்பாடு அவனை சுயம் "திரிச்சறிய" செய்கிறது.. அதனால் எல்லை மீறாமல் உறவுகளைச் சொல்லி மத வேற்றுமையை மறந்து இணைந்து நிற்கிறான்.. இங்குதான் "மதம் கொணடோர்" பதறுகிறார்கள்.. 
..
எங்கள் பெரிய தந்தை இருந்தவரை அவருக்குதான் கோவில் முதல் மரியாதை தந்தார்கள் அவரை "மதம்" கொண்டு வேறுபடுத்தி பார்க்வில்லை.. இது எல்லா இடங்களிலும் நடந்தது தான் நடப்பதுதான்.. திருமண அழைப்பிதழில் தாய்மாமன் மச்சான்,சித்தப்பா பெரியப்பா என்று அச்சிட்ட வரலாறு இரு மதத்தினரிடையே நடந்ததுதான் இப்போதும் உண்டு .. அப்படி ஒன்றுபட்டு வாழ்ந்த சமூகங்கள் இன்று "வெறியாட்டம்" கொள்கிறதோ என்ற அச்சம் எழாமல் இல்லை.. 
..
இங்கே தமிழ் மண்ணில் எத்தனை சதி செய்தாலும் உறவுமுறை மாறாது..மச்சானாய் மாமனாய் அப்பனாய் வாழும்.. சில விரும்பதகாதவைகள் கணக்கில் கொள்ள தேவையில்லை.. அவை கால விழுமங்களில் கரைந்துபோய்விடும்.. தமிழ் மண் சாதி மத கோட்பாடுகளை கடந்து மனிதத்தை, உலகுக்கு சொல்லும்.. அறிவின் நிழலில் சமுகம் மேம்படும், ஏனெனில் தமிழனின் பண்பாடும் பழக்கவழக்கமும் வழிகாட்டும் ஒளிவிளக்கு..  மொழியும் இலக்கியங்களும், வாழ்வியல் முறையும், இயற்கையானது 
..
மதங்களை கடந்த உறவுமுறையை யாராலும் எதுவும் செய்திட முடியாது.. தமிழ் மண்ணில் மதமேறியவர்களின் ஆசை நிறைவேறாது என்பதை தான் மேற்கண்ட நிகழ்வுகள் உணர்த்துகின்றன.. அண்ணன் தம்பியாய், வாழும் சமூகம் .. 
இதற்கு வேட்டுவைக்க யாராலும் இயலாது .. மகிழ்வோடு வாழ்வோம் ..
..
 மதம் = கர்வம், ஆணவம் 
மாச்சரியம்=பொறாமை ..
..
மத மாச்சரியம் கடந்து வாழ்வோம்..
..
ஆலஞ்சியார் 


Tuesday, May 7, 2024

இசையா?.. வரிகளா?.. சினிமா பாடல்களை முணுமுணுத்தவன் பாடல் வரிகளுக்கு தான் கைதட்டி நின்றான்.. இசை என்பது வரிகளை கொண்டு சேர்க்கும் படகு..
ஊஞ்சல் கட்டி ஆட இசை உதவும் பொருளுணர்ந்து சிரிக்கவும் கோபப்படவும் ,ஆர்ப்பரிக்கவும், லயிக்கவும், ஆசுவாசபடவும் இசை பெரும் பங்கை வகிக்கும்.. 
..
மொழியில்லாத இசை என்ன செய்யும்?.. அறிவை,சிந்தனையை தருமா.. எழுத்து இதயத்தை கிழித்து ஆழ பதிவிடும்.. 
"ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை".. 
"முட்டா பயல எல்லாம் தாண்டவக்கோனே  காசு முதலாளி ஆக்குதடா தாண்டவக்கோனே".. 
"போனால் போகட்டும் போடா".. 
"அந்திமழை பொழிகிறது"..
"காமன் கோவில் சிறை வாசம் 
காலை எழுந்தால் பரிகாசம்" ..  சொல்லிக் கொண்டே போகலாம்.. இசை அதற்கு கூடுதல் பலம் சேர்க்கும் பூமாலையாக்கும் 
..
கவிதைகள் தனியொருவனின் ஆக்கம்.. 
இசை பலரின் பங்களிப்பை சரியாக ஒருங்கிணைப்பதாகும்.. மொழி அறிவைத் தரும், 
இசை லயிக்க, மெய்மறக்க, கண்மூட,  மனதை இலகுவாக்க, மறக்க செய்யும், ..
இசையை சில நேரம் ரசிக்கலாம் 
மொழியோடு கூடிய இசை எப்போதும் ரசிக்கலாம்.. 
இசை ஆற்றுப்படுத்துவது 
மொழி அறிவுபடுத்துவது..
..
இசை மயக்கம் தரும்..
பாடலற்ற இசை ஒரு கட்டத்திற்கு மேல் ரசிக்க இயலாது புழுக்கம் தரும்..
எழுத்து எப்போதும் நின்று பேசும் ,அறிவைத் தரும் ..
..
ஆலஞ்சியார்


Monday, April 29, 2024

 சனநாயகத்தின் மீது நம்பிக்கையில்லாமல் வேடபாளர்களை விலைபேசுவதும் மிரட்டுவதுமாய் தன் நம்பிக்கையை இழந்து கொண்டிருக்கிறது  பாஜக..
..
மிரட் தொடர்ந்து இந்தூர் .. காங்கிரஸ் வேட்பாளர் வாபஸ் இதில் காங்கிரஸும் பாடம் படிக்க வேண்டியிருக்கிறது.. வேட்பாளர் தேர்வில் அதீத எச்சரிக்கையோடு செயல்படவேண்டும்.. தேர்தல் தொடங்கிய போது 400 என்றவர்கள் மெல்ல உண்மை நிலை அறிந்து பதறுவதும் தன்நிலை மறந்து செயல்படுவதும் அரசியல் சூதாட்டத்தில் இறங்குவதும் அப்பட்டமான பயத்தின் வெளிபாடு..
..
இரண்டாம் கட்ட தேர்தல் முடிந்தவுடன் ஸ்டாலின் பிரதமராவார் என உள்துறை அமைச்சரே சொல்ல தொடங்கியிருப்பது கள நிஜம் பயமுறுத்தியிருக்கிறது.. எத்தனை சனநாயக வழிகளை அடைத்தாலும் புதிய வழியே உருவாக்கி சனநாயகம் மலரும் காரணம் மக்கள் சக்தி என்பது மகுடத்தை காலில் போட்டு மிதிக்கும் வலிமை கொண்டது .. விரல் கொண்டு புதிய புரட்சியை செய்யும் ஆற்றல் உண்டு .. மக்கள் மௌனமாய் அதிகார மோகத்தில் ஆடுவோரை சாய்த்து விடுவார்கள்.. 
..
எத்தனை தில்லுமுல்லு அதிகார மிரட்டல்கள், ஆட்சியாளர்களின் கோபம், அனைத்து அரசுதுறையும் வசப்படுத்தி எதிர்க்கட்சிகளை குற்றவாளிக் கூண்டில் நிறுத்தினாலும் சனநாயகம் உயிர்த்தெழும்.. காரணம் இந்திய ஒன்றியம் சனநாயக வல்லமைக் கொண்டது .. சாமானியனே இங்கே அதிகாரம் கொண்டவன் அவனை அடித்தமர்த்த முடியாது .. பத்தாண்டுகள் தந்த வாய்ப்பை பாழாக்கிவிட்டு புதிய வேஷம் கட்டினால் நம்ப மாட்டார்கள் .. 
..
பாஜகவின் வீழ்ச்சி தொடஙகிவிட்டது.. இது அவர்களே ஏற்படுத்திக் கொண்டது .. தனிமனித துதிப்பாடல் எதிர்க்கட்சிகளை முடக்கும், மிரட்டல், சர்வாதிகாரம் தோரணையில் கதைப்பது மதத்தை கையில் எடுத்தாடியது, பிற மதத்தின் நம்பிக்கையை ஒடுக்க முயன்றது, எதை உடுத்த வேண்டும் உண்ண வேண்டும்  எழுதப்படாத சட்டமியற்றியது  என தொடர்ந்து அதிகார அச்சுறுத்தல்கள் மக்களை வேறு பாதை தேட செய்தது.. 
..
இனி சனநாயகம் மலரும்
..
ஆலஞ்சியார் 
தேர்தல் 2024 ..
மிகப் பெரிய சனநாயக நாட்டின் அதிகாரத்திற்கான போட்டி.. ஒவ்வொரு சாமானியனும் தன் வலிமையை உணர்த்துகின்ற தேர்தல்.. உங்கள் உரிமையில் தலையிடுவதல்ல நோக்கம் மாறாக சிலவற்றை ஞாபகபடுத்துவது தேவை என்பதால் இந்த பதிவு ..
..
கடந்த பத்தாண்டுகள் சனநாயக மரபுகள் மீறபட்டும் சர்வாதிகார எல்லையில் நின்று திமிரோடு தோள் உயர்த்தி இங்கே நானே யோக்கியன் என கூவும் மனிதர் மிகப் பெரிய பொய்யர்.. தன் கல்வி சான்றிதழிலேயே அவரின் முகம் நமக்கு தெரிந்துவிட்டது .. மக்களை மூளைச்சலவை செய்தால், மக்கள் மனதில் மதத்தை ஏற்றி வைத்தால், அவதார புருசரென புழுகினால் நம்பிவிடுவார்கள்  என்ற பழைய பாட்டை திரும்ப திரும்ப பாடி வரும் 
ஏமாற்றுக்காரன் ..
..
மக்கள் தரும் வரிப்பணம் சிலருக்கான தள்ளுபடியில் கரைவதும் தொடர்ந்து மக்கள் பிழியபடுவதும் உலகிலேயே இந்தியாவில் தான் பெட்ரோல் விலையில் கொள்ளை நடப்பதும் கண் கூடாக பார்க்கிறோம்.. சில முதலாளிகளுக்காக சிறு தொழில் முனைவோர் நடுரோட்டில் நிறுத்தப்பட்டு முதலாளியாக இருந்தவன் ஆட்டோ ஓட்டி குடும்பம் நடத்தும் அவலத்தை உருவாக்கியவன் நல்லவன் வேஷம் கட்டுகிறான்.. இங்கே ரௌடிகள் நல்லவனாகவும், கொள்ளையடித்தவன் பாஜகவில் சேர்ந்தால் புனிதராகவும் நொடியில் மாற்றபடும் விந்தை வேறெங்கும் கேட்டிராது, கண்டிராதது.. 
..
நமக்கானவர் யார்.. பலவேஷம்கட்டி பொய்யில் மூழ்கி பழங்கதை புரட்டைபேசி கடைசியில் சாதிமதவெறியை தூண்டும் அயோக்கியர்கள் அல்ல..மாறாக எளிமையாய் அனைத்து மக்களுக்காக பரிந்துபேசி துயர் துடைக்க ,அல்லல்படுவோர் ஆதிக்கத்தால் நசுக்கபடுவோர் விளிம்புநிலையோர், ஏழை எளியவர் வாழ்க்கை தரத்தை உயர்த்த சனநாயக மாண்புகளை மதிக்கும் நல்ல தலைவர் வேண்டும்.. நானிருக்கிறேன் என்ற நம்பிக்கையை நம்மில் விதைக்கும் நல்லவர் வேண்டும்.. 
..
பாசிசத்தின் கோரப்பிடியிலிருந்து 
தேசத்தை காக்க நம் விரல் கொண்டு போர் செய்வோம்.. பொய்யர்களை, PMCare என்ற பெயரில் நவீன கொள்ளையை, ஊழல் செய்தோரை புனிதபடுத்தி ஊழலை ஒழிக்கும் "மாமனிதரை" வீட்டுக்கு அனுப்புவோம்.. குடியரசு தலைவரையே நிற்க வைக்கும் தீண்டாமையை விரட்ட.. இந்திய ஒன்றியத்திற்கே வழிகாட்டும் உதயசூரியனுக்கு வாக்களிப்போம் 
I N D I A கூட்டணியை அரியணையேற்றுவோம்..  
..
சூன் 4ல் விடியும்..
..
ஆலஞ்சியார் 

Monday, April 15, 2024

இஃப்தார்.. Iftar..
நோன்பு திறக்கும் நிகழ்ச்சி இப்போதெல்லாம் தற்பெருமை பேசும் நிகழ்வாய் மாறிப்போனது.. இயலாதோர்,  பணிச்சுமையில் சமைக்க முடியாதோர்,வழிப்போக்கர், வழியில்லாதோருக்கானது  இப்போது தங்களின் பொருளாதார பலத்தை தங்கள் இறுப்பை அகந்தையை காட்ட ஒரு ஏற்பாடாக மாறிவிட்டது .. ஒவ்வொரு தங்கள் கூட்டத்தை கூட்டி நடததும் நாடகம் ரசிக்க முடியாத காட்சிகளால் இயல்பை இழக்கிறது..
 ..
அரசியல் களமாய், தங்கள் அமைப்புகளின் பலத்தை காட்டவும் நானும்/நாங்களும் இருக்கிறோம் என்பதை பறைசாற்றிய ஒரு வாய்ப்பு அது அவ்வளவுதான்..  "துதி"பாடவும், பழங்கதை பேசவும், இறுமாப்பில் தலைநிமிரவும் தங்கள் பிரசாரக் கூடமாய், தங்களை விளம்பரபடுத்திக் கொள்ளவும், பலத்தை காட்டவும் இப்போது கடும் போட்டி நிலவுகிறது.. 
..
எளியோர்க்கும்,  வழிப்போக்கர்களுக்கும் வழங்கப்பட வேண்டிய உணவு, புளிச்சேப்பகாரனுக்கு தரப்படுகிறது.. உண்மையில் இவர்களுக்கு "பக்தி" எல்லாம் இல்லை.. தற்பெருமை பேசவும் தங்களின் அடிவருடிகளின் புகழ்மாலையை கேட்டு ரசிக்கவும் பெருந்தொகை செலவு செய்து "புகழ்" மாலையை அணிந்துக் கொள்கிறார்கள்.. இதில் அறிஞர் பெருமக்களும் ஆன்றோரும் சேர்நது ஒத்தூதும் நிகழ்வுகள் காதுகளுக்கு எரிச்சலூட்டுகிறது..
..
எளிமையான மார்க்கம் ஆடம்பர, அடாவடிகளின் தற்சார்ப்பு குரலை ஓங்கி ஒலித்து நோன்பின் மகிமையை கேலிக்கூத்தாக்கிறது..
தொழிலதிபர்கள் அரசியல்வாதிகள், "சமூக" அமைப்புகளின் குஸ்தி சண்டை களமாக மாறிவிட்டது .. யார் பலம் பொருந்தியவர் என்பதை கணக்கீடு செய்யும் "களமாய் மாறிப்போனது ..
..
"பெருங்கூத்து"
..
ஆலஞ்சியார்



Friday, March 29, 2024

தமிழ்நாடு மக்கள் சோர்வாக இருப்பதாக பிரதம‌ர் தன் கட்சிகாரர்களிடம் சொல்கிறார்.. பாவம் பிரதமர் மோடி கலக்கமடைவது வெளிப்படையாக தெரிகின்றது  .. உண்மையில் தமிழ்நாட்டு மக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் .. தமிழ்நாட்டு மக்கள் தெளிவானவர்கள் பகுத்தறிவும் திறன் கொண்டவர்கள்.. பொய்யர்களை சட்டென அடையாளம் காணும் அறிவை கொண்டவர்கள் .. ஏன் என கேள்வி கேள் என்று எங்கள் பெருங்கிழவன் பயிற்றுவித்து செனறிருக்கிறான்  மூடர்களை , வேடதாரிகளை இனங்காணும் தெளிவை பெற்றிருக்கிறோம்..
.. 
பெட்ரோல் விலை உயர்கிறதே என்றால் ஜெய் ஸ்ரீராம் சொல்லி ஓடி ஒளிந்தாலும் பிடரியில் அடித்து கேள்வி கேட்போம்.. வட மாநிலங்களுக்கும் சேர்த்தே வரி கொடுக்கும் எங்களை பார்த்து சோர்ந்து விட்டதாக சொல்வது புரிகிறது ..தமிழ்நாட்டின் வளங்களை அறிவை மனிததிறனை.  ஆற்றலை கண்டு பொறாமையோடு பார்க்கிறீர்.. இன்னும் பல பத்தாண்டுகள் ஆனாலும் தமிழ்நாட்டைப்  போல குஜராத்தி உ.பியையோ உருவாக்க முடியாது காரணம் தமிழன் இயல்பாகவே அறிவில் சிறந்தவன் .. எதையும் எதிர்க்கொண்டு வெல்லும் ஆற்றல் கொண்டவன்.. அரசியல் அறிவுக் கொண்டவன் .. "இதனால் இதனை இவன் முடிக்கும்" என அறிந்தவன் அதனால் தான் பாசிசத்தை வளரவிடுவதில்லை..
..
மோடி அவர்களே வேறு எங்காவது வடமாநிலங்களில் வடை சுடுங்கள் இங்கே உங்கள் மகுடிக்கெல்லாம் மசியாது இந்த மண் .. உங்கள் நாடக வேசங்கள் சட்டென்று கலையும் இங்கே அரிதாரம் பூசி ராமனாக வேடங்கட்டினாலும் அந்திக்குள் வெளுத்துவிடும்.. உங்கள் பொய்கள் தோலூரிக்கப்படும்.. கடலுக்கடியில் தவமிருந்தாலும் நாடகம் என புரியும் உங்கள் மாயவித்தைகள் எடுபடாது
இங்கே நிழலையும் நிஜத்தையும் அறியும் விவேகம் உண்டு ..
..
#முத்துவேல்கருணாநிதிஸ்டாலின்  கையில் தமிழ் நாடு பாதுகாப்பாக இருக்கிறது ..அடிப்படை தேவையறிந்து கல்வி வேலைவாய்ப்பு பொருளாதார உயர்வு, என உலக பொருளாதார தன்னிறைவு நாடுகளோடு போட்டி போடும் வல்லமைப் பெற்ற தமிழ்நாடு சோர்வாக இருப்பதாக சொல்லும் போதே உங்களின் சோர்வும் பயமும் தெரிகிறது ..  திராவிடம் சிறப்பான வழிகாட்டுதலை இந்திய ஒன்றியத்திற்கு தருகிறது .. உங்கள் பொய் புரட்டு இதிகாச கதைகள், மாறுவேடம் இவையெல்லாம் தந்தை பெரியாரும் பேரறிஞர் அண்ணாவும் பேரருளாளன் கலைஞரும் கட்டமைத்த தமிழ் மண்ணில் காட்டவேண்டாம் வேறு இடத்தில் நாடக வசனங்களை பேசவும் .. 
..
இது அறிவுடையோர் பூமி ..ஆழ அறிந்து தெளிவோடு சமத்துவத்தை சமூகநீதியை எல்லோருக்கும் எல்லாம் என்ற இலக்கை நோக்கிய அரசியலை முன்னெடுத்து செல்லும் திமுக.. தமிழர் நலன் தமிழ்நாடு முன்னேற்றம் இதில் எந்த சமரசமும் இன்றி உழைத்துக் கொண்டிருக்கும் எங்கள் முதலமைச்சர் முத்துவேல்கருணாநிதிஸ்டாலின் ..
பாஜக ஆளும் மாநிலங்களில் அடிப்படை தேவைகளை கூட நிறைவேற்றாத நீங்கள் இங்கே குரல் உயர்த்தி பேசுவதே தவறு ..
முடிந்தால் எப்படி ஆட்சி நடத்துவது, எப்படி எதிர்க்கட்சிகளின் குரலை கேட்பது, சனநாயக மரபுகளை பேணுவது, என தளபதி மு.க.ஸ்டாலினிடம்
பாடம் படியுங்கள் மோடி அவரகளே!.. 
தமிழ்நாடு இந்தியாவிற்கு வழிகாட்டும் ,வெளிச்சம் தரும் உதயசூரியன் 
..
ஆலஞ்சியார் 
செம்மொழித் தமிழ்ப் பண்பாட்டுக் கூடல்

Monday, March 18, 2024

பாஜகவும் பாமகவும் சேர்ந்ததில் வியப்பொன்றுமில்லை.. வியாபாரி நல்ல விலைக்கு விற்பதை தான் விரும்புவான் .. வெற்றி பெற முடியாது என தெளிவாகத் தெரிந்தும் மகனுக்கு குறைந்தபட்சம் மாநிலங்களவை உறுப்பினராக ஏற்பாடு செய்து விட்டு நல்லாட்சி என உளறுவதும் எப்போதும் போல் திராவிடக் கட்சிகளை குறைகூற வாய்ப்பு கிடைத்திருக்கிறது.. 
..
ராமதாஸ் எப்போதும் தன் நலம் மட்டுமே பேசும் அரசியல்வாதி.. தன் சாதியினரை தவறான பாதையில் வழிநடத்தும் பேராசைக்காரர்.. ஒவ்வொருமுறையும் சத்தியம் செய்வதும் அதை மீறுவதும் வாடிக்கையானதுதான் .. ஆரம்பகாலக் கட்டத்தில் சமூகநீதி பேசி தன் இருப்பை நிலை நிறுத்தியவர்.. உள்ளில் இருந்த சாதிய நிலைபாடு அவரையும் பாமகவையும் கரைக்க வைத்தது.. 
..
கடைசியில் மகனுக்கு மகுடம் சூட்ட முடியாமல் போனாலும் தலைப்பாகையாவது கிடைக்காதா என பிற  கட்சிகளிடத்தில் ஏறி இறங்கி நாடகம் நடத்த வேண்டிய சூழல் .. 
வட மாவட்டங்களில் பெரிதாய் வரவேண்டிய கட்சியை சுய நலத்திற்காக விலை பேசியும் வியாபாரியாகிப்போனார்..  பாமக இருக்குமிடம் தான் வெல்லும் என்ற மமதையை வீழ்த்தி காட்டுகிறேன் என சொல்லியடித்து வீழ்ச்சிக்கு வித்திட்டவர் தளபதியார் ..அன்று தொடங்கி இன்றுவரை விரக்தியில் தங்களை காத்துக் கொள்ள நல்ல வியாபாரியாய் அரசியல் செய்கிறார்.. பாஐக மூன்றாமிடத்திற்கு வர உதவலாமே தவிர அதனால் பாமகவிற்கோ வன்னிய சமூகத்திற்கோ பலனில்லை/பயனில்லை..
..
வரும் காலங்களில் பாமக லெட்டர்பேட் கட்சியாக மாறும்.. 
விதைத்ததைதானே கிடைக்கும்
..
ஆலஞ்சியார்