Sunday, June 30, 2019
இஸ்லாமிய அமைப்புகள்
தமிழக முஸ்லீம்கள்/ இஸ்லாமிய அமைப்புகள்..
..
தமுமுக அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து ஹைதர் அலி
நீக்கபட்டார் இன்னுமொரு அமைப்பு உருவாகலாம்
..
முஸ்லிம்கள் சமீபகாலமாக அதிகம் பேசப்படுகிற விசயமாகிப்போனார்கள்..
முஸ்லிம்களிடத்தில் இரண்டு விடயங்கள் சுத்தமாக இல்லை.ஒன்று ஒற்றுமை மற்றொன்று நன்றியுணர்வு..
எனக்கு தெரிந்து 20 மேற்பட்ட அமைப்புகள் செயல்படுகின்றன ..
நீ..சரியல்ல நானே சரி என்பதில் தொடங்கி தங்களுக்குள் தெருச்சண்டையிட்டுக் கொள்கிற சராசரியாக தான் அமைப்புகள்..
எல்லாம் அமைப்புகளும் அரசியல் செய்கின்றன அரசியல் அறியாமலேயே..
..
ஒரு சின்ன விடயம் கிடைத்தால் போதும் அதை நானே முன்னெடுப்பேன் என ஆளாளுக்கு வரிந்து கட்டிக்கொண்டு களத்தில் இறங்கும் பலன் சூழியம்
..
இவர்களால் இஸ்லாமிய சமூகம் அடைந்த பயன் என்று சொல்லிக்கொள்ளும்படி இல்லை..
மாறாக சமூகம் அடைந்த பின்னடைவே அதிகம் ..
ஒற்றுமையில்லாமல் இருப்பதை அரசியல் கட்சிகள் திமுக உட்பட தங்கள் நலனுக்காக பயன்படுத்தும் அவலம்தான் நடக்கிறது..
..
தமிழக முஸ்லிம்கள் அரசின் சலுகைகளைப் பெற லெப்பை என அரசில் பதிவு செய்துக்கொள்வார்கள்..
மரைக்காயர் ராவுத்தர், போன்றவர்கள் கூட தங்களை லெப்பை என பள்ளிகளில் பதிவு செய்துக்கொள்வது வழக்கம்
(லெப்பை) பிரிவினர்களுக்கு மட்டுமே அரசு சலுகைகள் வழங்கியது ..
திராவிட ஆட்சி தமிழகத்தில் வந்த பிறகுதான் கலைஞர் ஆட்சிக்கு வந்த பிறகுதான் எல்லா பிரிவினரையும்
#BC ல் அதாவது பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்தார்..
ஒருவகையில் எல்லோரையும் ஒரே நிழலில் கொண்டுவந்தது கூட திராவிட ஆட்சிதான்..
..
முஸ்லிம்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் போதுமானதாக இல்லை இன்னும் நிறைய உரிமைகள் தரப்படாமலேயே இருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை..
என்றாலும் இதுவரை தமிழக முஸ்லிம்கள் அனுபவித்து வரும் எல்லா உரிமை (சலுகை) களும் இடஒதுக்கீடு உட்பட அனைத்தும் கலைஞர் செய்து தந்தது என்பதை..மறுக்கவோ மறைக்கவோ முடியாது..
..
இன்னும் முஸ்லிம்களின் உரிமைகள் மறுக்கப்பட்டு அல்லது வழங்கப்படாமல் இருக்கிறது என்பதும் கசப்பான உண்மை தான்..
..
முஸ்லிம்கள் ஒற்றுமை இல்லாமல் அது சாத்தியப்படாது..
முஸ்லிகள் ஒற்றுமை என்பது இன்றைய சூழலில் சாத்தியப்படுமா என்பது மிகப்பெரிய கேள்விக்குறி ..???
..
தமிழகத்தில்
மற்ற மதத்தவர்களுக்கு ஒன்றிரண்டு அமைப்புகள் தான் இருக்கிறது.
ஆனால் அவையாவும் பிரச்சனைகளை உருவாக்குவதே இல்லை மாறாக மதப்பிரச்சனைகளில் தங்கள் வேற்றுமையை மறக்கிறார்கள் ..
..
தாய்சபை என அழைக்கப்படும் முஸ்லிம்லீக்கில் கூட இவர்கள் இணைய மாட்டார்கள்..காரணம் தலைமையை குறைச்சொல்வார்கள் இஸ்லாத்திற்கு முரணான விடயங்களை முன்னெடுக்கிறதென்பார்கள்..
தங்களுக்குள் உள்ள கருத்துவேறுபாடுகளை கலையாதவரை...
இங்கே யார் பெரியவன் என்கிற..
யார் தலைவர் என்கிற நிலை மாறாத வரை..
எதுவும்
#சாத்தியமில்லை ..
..
ஆலஞ்சியார்
Wednesday, June 26, 2019
வேண்டும்..வேண்டும்
#என்ன_வேண்டும்..
நல் எண்ணம் வேண்டும்
ஆன்றோர்
சான்றோர்..
அறிவில் சிறந்தோர்
அறமுடையோர்..
நிழல் வேண்டும்..
..
அதிகம் பேசாத..
அளவு மீறாத..
சொல் வேண்டும்..
அகமும் புறமும்
நன்மையால்
நிறைதல் வேண்டும்..
..
அடுத்தவன் பசி
அறிதல் வேண்டும்..
இல்லாதோர்
யாசிக்கும் முன்
ஈகும் குணம் வேண்டும்..
..
மடமை நீங்கி
மதி பேசும் நிலைவேண்டும்..
அறிவின் சுடரொளியில்
அகம் காணவேண்டும் ..
..
பகையறிய வேண்டும்
போராடி வெல்ல
பயிற்சி வேண்டும்..
இடையிடையே தோல்வியும்..
இடைவிடாத முயற்சியும்
வேண்டும்.
..
நேர் நிற்கும்
பகைவர் வேண்டும்
நேரான வழியே
வேண்டும்..
..
கொஞ்சும் காதல்
கொஞ்சும் பொய்
கொஞ்சம் காமம்
கொஞ்சம் கலவி
வேண்டும் வேண்டும்..
..
புறம் சொல்லா ..
பிறர் பழி சொல்லா..
நிலை வேண்டும்..
..
நிறைய..வேண்டும்
நிறைய நிறைய அல்ல..
நிம்மதி தரும் நிலையே
வேண்டும்..
போதும் என்னும்
மனம் வேண்டும்
போதாது போதாது..
இன்னும் இன்னும்
அறிவு வேண்டும்..
..
மனதை அடக்கி
மமதை ஒடுக்கி
நன்மை பெருக்க
பயிற்சி வேண்டும்
..
அறிவின் சொல்லை
ஏற்கும் நிலை
எப்போதும் வேண்டும்..
..
இன்னும்
நிறைய.. வேண்டும்
அவையாவும் நல்லதாய்
வேண்டும்..
..
நிறைய..நிறைய
வேண்டாம்..
நிறைவான..
நேரான வழியில்
பொருள் வேண்டும்..
..
உழைப்பில் வரும்
உன்னதம் வேண்டும்..
உயர பறந்தாலும்
உண்மை மாறாது வேண்டும்.
..
அறம் தவறா
நெறி பிறழா..
நிலை வேண்டும்
இன்னும்..இன்னும்..
நல்லெண்ணம் ..
வேண்டும்..
நல் எண்ணம்..வேண்டும்..
..
#வேறென்ன_வேண்டும்..
..
ஆலஞ்சியார்
Tuesday, June 25, 2019
திமுக எம்பிக்கள்
பொறுப்பை உணர்ந்து செயல்படுகிறார் திமுக எம்பிக்கள் தொடக்கமே நல்லதாய் .. எதிரிகளுக்கு தீயென எரிவது தெரிகிறது .. மாநிலங்களவையில் நேற்று திருச்சி.சிவா நீட் தேர்விற்கெதிராக கிராமபுற மாணவர்களுக்கெதிரானது என ,நீட் கோட்சிங் சென்டரில் 2 லட்சம் பணம் செலுத்தி படிக்கவேண்டியிருக்கிறது நாடெங்கிலும் உள்ள 62 ஆயிரத்திற்கு மேற்பட்ட மருத்துவ படிப்புகளுக்காக பலகோடி கணக்கில் வியாபாரம் நடக்கிறது பணம் உள்ளவன் மட்டுமே இனி மருத்துவ நுழைவு தேர்வையே எழுத முடியும் என்கிற நிலை ஆபத்தானது ..அதோடு சட்டமன்றத்தில் ஒருமனதாக எடுக்கபட்ட தீர்மானத்தில் அடிப்படையில் தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் மறுப்பது கூட்டாச்சி தத்துவத்திற்கு எதிரானது என பேசினார் .. மக்களவையில் டி.ஆர்.பாலு இங்கிலாந்து போன்ற நாடுகளில் கூட நுழைவு தேர்வை ரத்தாக்கியதை குறிப்பிட்டு பேசினார் ..
இன்றைய தினம் தண்ணீர் பஞ்சத்தை குறித்து பேசும் போது திமுக கொண்டுவந்த கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை ஒழுங்காக செயல்படுத்தியிருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்காது தமிழக அதிமுக அரசு ஊழல் அரசு அதற்கு துணை போகிறது மத்திய பாஜக அரசு என்றவுடன் பாஜகவினருக்கு அடியெல்லாம் எரிவதை காண முடிந்தது ..
..
மாறனின் இன்றைய பேச்சு வரலாறு குறித்துக்கொள்ளும் எதற்காக இவருக்கெல்லாம் தொகுதி ஒதுக்கவேண்டுமென சிலநேரம் நான் எண்ணியதுண்டு இப்போது இவரின் பேச்சு நம்பிக்கையை தருகிறது இன்னும் நிறைய சீற்றங்களை பாஜக காண வேண்டியிருக்கும் அறசீற்றமாய் கலைஞரின் அடலேறுகள் அணிவகுத்திருக்கிறார்கள் தலையாட்டிகளையே கண்ட பாஜகவிற்கு கொள்கையாளர்களை தன்மான சுடரொளிகளை எதற்கும் அஞ்சா திராவிட திமிர்களை காணும் போது எரியதான் செய்யும்
..
தமிழகமும் இந்தியாவில் தானே இருக்கிறது என்ற பேச்சு பொருள் பொதிந்தது .. துக்ளக்கில் கூட குருமூர்த்தி பெரியார் பெயரை நாடாளுமன்றத்திலே பேச தொடங்கியிருப்பது கண்டு பொசுங்கியிருக்கிறார் பெரியாரை எதிர்த்தும் குரல்கள் என்ன செய்துவிட்டாரென கேள்வி எழுந்திருப்பதாக புளங்காகிதம் அடைகிறார்.. பெரியார் எனும் அறிவின் சுடரொளியில் எம் மக்கள் தெளிவில் இருப்பதால் தான் இன்னமும் எகத்தாளம் பேசிவிட்டு நடமாடமுடிகிறது.. இல்லையெனில் வடமாநிலங்களை போல கட்டிவைத்து உதைக்கிற காட்டுமிராண்டித்தனம் வந்திருக்கும் .. கருத்துரிமைக்கு காவலாய் இருப்பதால் தான் கண்டதையும் பேசமுடிகிறது ..
..
அதிமுக அரசை ஊழல் அரசென்று 2016 ல் பாஜகவின் அமிர்தா ஷா சொன்னதை தான் தயாநிதி சொல்கிறார் .. அதிமுகவை சொன்னால் பாஜக பதறுகிறது ஊழலுக்கு துணை போகிற கேடுகெட்ட நிலையை இந்த தலையாட்டிகளை வைத்துதான் பார்பனர்களை உயரத்திற்கு கொண்டுவர முடியுமென்பதால் இவர்கள் பதறுகிறார்கள் அதிமுக ஆட்சியில் இருக்கும்வரை தான் நினைத்ததை சாதித்து தமிழர்களுக்கு தமிழ் மண்ணிற்கெதிராக செயல்பட முடியும்..
இதுவரை நாடாளுமன்றத்தில் பாஜகவிற்கு ஜால்ரா போடுகிற கோழைகளை தான் கண்டிருக்கிறார்கள் இப்போதுதான் சரியான எதிரியை .. அறிவுக்கொண்டு வாதிடும் திணறடிக்கும் ஆளுமைகளை பார்க்கிறார்கள் ..
இன்னும் நிறைய இருக்கிறது
விடுவாதாயில்லை..
..
ஆலஞ்சியார்
Monday, June 24, 2019
சுதா..ரகுநாதன்
சுதா ரகுநாதனுக்கு பிராமண அமைப்புகள் பகிரங்க மிரட்டல்..
இசை அரசி எம்.எல்.வசந்தகுமாரியின் சிஷ்யை சுதா ரகுநாதன் .. அய்யங்கார் ஆத்து பெண் பிரபல கர்நாடக இசைக்கலைஞர் அவரின் மகள் ஒரு கிருஸ்துவரை மணக்கிறார் .. இதில் மற்றவர்களுக்கு என்ன வந்தது பார்பன அடிப்படைவாதிகள் வலைதளங்களில் மிக மோசமாக பதிவிட்டும் சுதாவின் தொலைபேசி எண்ணை வெளியிட்டு அவரை தொடர்ந்து "அர்ச்சனை" செய்கிறார்கள் .. எப்படி கலப்பு திருமணம் செய்யலாம் என சிலர் கூக்குரல் கேட்க சகிக்கவில்லை .. மனிதனும் நாயும் திருமணம் செய்தால் தான் அது கலப்பு.. மனிதன் மனுஷியை திருமணம் செய்வது எப்படி கலப்பாகும் என்பார் பேராசான் பெரியார் ..
..
இதுவரை பார்பன பெண்கள் வெளிநாடுகளில் பிற மதத்தவரை திருமணம் செய்ததில்லையா .. இசை கலைஞர்களில் பலர் செய்திருக்கிறார்கள் அப்போதெல்லாம் வராத எதிர்ப்பு இப்போது வர காரணம் என்ன..? ஒரு கருப்பர் இன ஆண் என்பதாலா .. Sudha Ragunathan with her son in law
மாடு free என சுதாவோடு அவரது மாப்பிள்ளை நிற்கும் போட்டோவை போட்டு கீழ்தரமாக எழுதியிருக்கிறார்கள் ..
மிலேச்சன் கலப்பு சண்டாள சாபம் ப்ராமண இழுக்கு
அவள் பேரனுக்கு பூணூல் அருகதை இல்லை சங்கீத ஞானம் சாக்கடையில் ..என கடுமையான விமர்சனங்கள் ..
..
சாதி மத மறுப்பு திருமணங்களை "சுயமரியாதை" என கண்ணியமாக அழைத்து பழகியிருக்கிறோம் .. ஆனால் சில சங்கிகள் ஹார்மோன் சுரப்பில் வந்த கோளாறு என கொச்சைபடுத்துகிறார்கள் .. எந்த மதமும் சாதியும் கலப்பில்லாமல் இல்லை நீங்கள் பிடித்து தொங்குகிற மத அடையாளங்களோ சாதிய திமிரோ ஆய்விற்குட்பட்டால் கடைசியில் நீர் நிஜத்தில் இல்லை என்கிற உண்மை அதிர்ச்சி தரும்
நீங்கள் கட்டிசுமக்கிற எந்த விதிகளும் ஆச்சாரங்களும் பாலின விடயத்தில் அடிபட்டு போகும் இயல்பாய் மனித உணர்வுகளில் ஏற்படும் மாற்றங்கள் எந்த கட்டுபாடுகளையும் உடைத்து சிதைத்துவிடும் எவரும் தன்னை ஒரு சமூகத்திற்கு அல்லது இனத்திற்கு அல்லது மதத்தை சார்ந்தவன் என்று சொல்லிவிட முடியாது ஏதோவொரு கலப்பு எங்கோ நடந்திருக்கும் ஆதம் தொட்டு கலப்பில் தான் மனித சமூகமே பரிணாம மாற்றம் அடைகிறது என்கிற உண்மை விளங்காமல் ஒரு சாதியை மதத்தை ஆச்சாரத்தை கோட்பாட்டை பிடித்துக்கொண்டு கதறுகிறீர்கள் .. தோண்டினால் அசிங்கபட்டுநிற்பீர் ஆச்சாரம் என்பதே இல்லை என்கிற உண்மை விளங்கும்
..
இப்படி பட்ட திருமணங்களை சங்கிகள் கடுமையாக எதிர்க்கிறவரை பெண்கள் பெருவாரியாக பெரியாரை தேடுவார்கள் .. சிவசங்கிரி சொன்ன ஒரு விடயம் ஞாபகம் வருகிறது எனக்கு விதிக்கபட்ட கட்டுபாடுகளும் அடக்குதலும் என்னை பெரியார் திடலுக்கு வரவழைத்தென்றார் .. முதலில் ஒருவரின் தனிபட்ட குடும்ப விடயங்களில் அவர்களது விருப்பு வெறுப்புகளில் மதம் சாதி கலாச்சாரம் பண்பாடு ஆச்சாரம் என சொல்லி தடைவிதிக்க எதிர்க்க செய்யாதீர்கள் ..
..
சுதா பாடிய பாடல் நினைவிற்கு வந்தது ..
எனை என்ன செய்தாய் வேங்குழலி..
உனக்கும் எனக்கும் வேறு பகையில்லையே..
..
ஆலஞ்சியார்
Sunday, June 23, 2019
சுமப்போம் சிலகாலம்
காங்கிரஸுக்கு இன்னமும் எத்தனை நாட்கள் பல்லக்கு தூக்குவது ..
திமுக அதிக இடங்களில் நிற்க வேண்டும் கே.என்.நேரு..
நேருவின் கூற்றில் ஒரு பகுதி வரை உடன்படுகிறேன் .. வெற்றிபெற்றவர்கள் காங்கிரஸ் என்றில்லை மற்ற கூட்டணி கட்சியினரும் ஏதோ தங்களால் மட்டுமே தங்களின் தனி செல்வாக்கால் மட்டுமே வென்றதாக மார்தட்டுவதும் திமுகவின் கொள்கைக்கெதிராக ஒருவகையில் திமுகவிற்கு சங்கடத்தை ஏற்படுத்தும் நோக்கில் செயல்படுவதை வாடிக்கையாக்குகிறார்கள் .. தேர்தல் கூட்டணி என்பது தேர்தலோடு முடிந்தபோன ஒன்று வெற்றி பெறும்வரை தான் திமுகவின் தயவு தேவை என்று செயல்படுவோரின் சுமையை ஏன் தொடர்ந்து சுமக்கவேண்டும் என்ற கேள்வியில் பொருள் இருக்கிறது. திருநாவுகரசர் தன் சொந்த செல்வாக்கில் வென்றதாக சொல்கிறார் அவரின் செல்வாக்கெல்லாம் பழைய கதை என்பதை மறந்து பேசுகிறார் பாஜக உட்பட பலகட்சிகளில் பயணித்து சொந்த ஊரில் கூட மதிப்பிழந்த நிலையில் தான் மீண்டும்,வாய்ப்பு கிடைத்ததை மறந்து பேசுகிறார் வெற்றி பெறுகிற அளவு செல்வாக்கிருக்கிறவர் முன்பே திமுகவின் ஆதரவு தேவையில்லை என்று சொல்லியிருக்கலாம் இந்த முறை மிக சாதூர்யமாக கூட்டணி அமைத்து அதை மிக சரியான பாதையில் கொண்டு சென்று வெற்றிபெற வைத்ததில் பெரும்பங்கு திமுகவிற்கு அதன் தலைவருக்கு உண்டு ..
..
இந்த முறை உள்ளாட்சியில் மட்டுமல்ல சட்டமன்றத்திலும் அதிக இடங்களில் திமுக போட்டியிட வேண்டும் அது கட்டாயம் ஒற்றை இலக்கில் காங்கிரஸுக்கு ஒதுக்கினால் போதும் பிற கட்சிகளுக்கும் விரலுக்குள் அடங்கும் எண்ணிக்கை போதும் இருநூறுக்கும் சற்று குறைவான இடங்கள் அல்லது இருநூறு இடங்களில் நிற்க வேண்டும் அதிக எண்ணிக்கையில் விட்டுதருவது திமுகவின் பலத்தை குறைக்கவே உதவும் நேருவின் கருத்தில் உடன்பட வேண்டியிருக்கிறது .. ஐந்து தொகுதிக்கு மாவட்ட செயலாளர் என அவர் தன்னை குறுக்கி கொண்டாலும் ஒட்டுமொத்த திமுகவினரின் குரலை தான் பதிவு செய்திருக்கிறார்.. வாக்குகள் சிதறாமல் ஒருங்கிணைக்க வேண்டும் என்பதில் மாற்று கருத்தில்லை ஆனால் தகுதிக்கு மீறி வாரி வழங்குவதென்பது நமக்கு நாமே குழிப்பறிப்பதை போன்றது .. தமிழகத்தில் சில கட்சிகள் லெட்டர்பேட் கட்சியை போல சுருங்கிவிட்டன .. சில வலைதள கட்சியை போல ஊடக தொடர்பில் மட்டுமே உள்ளன கம்யூனிஸ்ட்கள் நிலை பெரியளவில் தாக்கத்தை தரகூடியவையாக இல்லை சிறுத்தைகள் உட்பட பெரிய பலமென்று சொல்லிவிடமுடியாது ஆனாலும் சிறியளவில் அவர்கள் பங்கிருப்பதை மறுக்க இயலாது .. கலைஞர் சொல்வார் இரண்டு விழுக்காடு கூட இல்லாதவர்கள் பெரியளவில் பேரம் பேசுவார்கள் ஊடகங்கள் அதை பெரிதாக்கும் அதே வேளை அவர்களின் சமூகத்தையும் அரவணைக்கும் பெரும் பொறுப்பு நமக்கிருக்கிறது .. கம்யூனிஸ்ட்களின் வெற்றிபெற்று வரவேண்டியது மிக அவசியம் என்பார் ..
..
நேரு சொன்னதைப் போல முடிவெடுக்கும் அதிகாரம் தலைமைக்கு உண்டு இன்றைய சூழலில்
பாசிசத்தை வேரறுக்க .. காங்கிரஸை சற்று சுமக்கதான் வேண்டும் .. திமுக பிரிந்து அதிமுக உதயமானது ஒருவகையில் நல்லது தான் .. எதிரான இடத்தில் வேறு யாரும் வந்துவிடாமல் பிரதான எதிரிகள் அந்த இடத்தை நிரப்பாமல் நம்ம பங்காளியே அந்த இடத்தை நிரப்புவது மகிழ்ச்சி தான் என்றார் கலைஞர் ..ஆம் அதிமுக இல்லாமல் இருந்திருந்தால் காங்கிரஸை அழித்து அந்த இடத்தில் பார்பன ஜனதா வந்திருக்கும் .. அதே நோக்கில் பார்த்தால் காங்கிரஸை தூக்கி நிறுத்தவேண்டிய பொறுப்பும் நமக்கு இருக்கிறது பாசிச பாஜகவிற்கு இந்த மண்ணில் இடமளிக்காமல் இருக்க .. ஆசிரியர் வீரமணி சசிகலாவிற்கு ஆதரவாக பேசிய போது சிலர் கடிந்து கொண்டோம் ..பாசிசத்தை விரட்ட வேண்டிய பெரும் பொறுப்பை உணராமல் .. அது எந்தளவு தீங்கை தந்திருக்கிறதென பார்க்க முடிகிறது ..
ஆம்
..
சில காலம் காங்கிரஸை சுமப்போம் .. பாஜகவை பார்பனீயத்தை பாசிதத்தை வேரறுக்கும் வரை..
..
ஆலஞ்சியார்
Saturday, June 22, 2019
விஜயகாந்த்
விஜயகாந்தின் அசையா சொத்துகள் ஏலத்துக்கு வருகிறது .. கோடிகளில் கடன் பெற்று கல்லூரி மேம்பாட்டிற்காக செயல்பட்டதாகவும் வருவாய் ஏதுமில்லாததால் கடனை திரும்ப தர முடியவில்லை என பிரேமலதா சொல்கிறார் ..ஒருவர் வங்கியில் கடன் பெறுவதும் திருப்பி தராத போது வங்கி நடவடிக்கை எடுத்து பிணையாக பெற்ற சொதிதை ஏலம் விடுவதென்பது நடைமுறை
..
இதில் நமக்கென்ன இருக்கிறது
ஆனால் பிரபலமான ஒருநடிகர் அரசியல்வாதி என்கிற போது பேசபடுகிறார் ..
விஜயகாந்தின் பாதையை நாம் நோக்கினால் தெளிவற்றவராக எதையும் அவசரகதியில் உடனே கிடைத்திட வேண்டுமென்ற எண்ணம் உடையவராக தெரியும் அடிப்படை அரசியல் கூட அறியாதவராக தான் பொதுவாழ்விற்கு வந்தார் சினிமாவில் தனக்கு உறுதுணையாய் நின்ற இப்ராகிம் ராவுத்தரை கூட இன்னும் சொல்லபோனால் தன் வாழ்வையே விஜயகாந்திற்காக என்றவரை இவரின் திருமணத்திற்கு பிறகு முழுவதுமாக புறக்கணித்தார் .. நட்பின் இலக்கணமாக அப்போது பேசபட்டார்கள் கர்ணன் துரியோதனன் என்றெல்லாம் சிலர் சினிமா இதழ்களில் எழுதியது ஞாபகம் வருகிறது .. அப்போது தொடங்கிய சரிவின் தொடக்கத்தை இவர் கண்டுக்கொள்ளவில்லை ..
கல்யாண மண்டபத்தின் தூண் இடிபடுகிறதென்பதற்காக கலைஞரோடு பிணங்கி
அரசியல் கட்சியை தொடங்கியவர் ஆரம்பத்தில் ஒருவித மாய ஈர்ப்பு தெரியும் அதை சரியாக பயன்படுத்தினால் (உழைத்தால், சரியான தெரிவு செய்தால்)
தான் அரசியலில் வெற்றிபெற முடியுமென்ற யதார்த்த அரசியல் அறிவில்லாத காரணத்தால் மாயவலையில் சிக்கியவரை போல அரசியல் அந்திமத்தின் துவங்கத்தை குறித்துக்கொண்டார்.. ஜெயலலிதா சேர்ந்தது மிகப்பெரிய அரசியல் பிழை என்பதை தனித்தே களம் கண்டிருந்தால் காலபோக்கில் முன்னேற்றத்தை பெற்றிருக்கமுடியும்
..
வங்கிகடனை கட்ட அவருக்கு கிடைத்த தேர்தலின் போது பாஜக அதிமுகவால் பலகோடிகள் பேரபேசபட்டதாக செய்திகள் வந்ததே அதை வெள்ளையாக்க நடத்தபடும் சிறிய ஒரங்கநாடகம் இது என்கிறார்கள் .. கட்சி நிதியாக ₹20000 வரும் பணத்திற்கு வரி சலுகை உண்டென்ற விதியை காட்டி தொண்டர்களிடமிருந்து திரட்டி கடனை அடைத்ததாக செய்திகள் வரலாம் பெருந்தொகை கைமாறி வெளிநாடுகளில் முதலீடாய் இருப்பதாக உலவும் செய்திகளுக்கிடையில் இங்கே உள்ள கடனை அடைக்க மிக சிறந்தமார்க்கமாக இது இருக்கும்..
வருவாய்க்கு வழியில்லாமல் தின செலவிற்கே திண்டாடுகிற புதிய "ஏழ்மைதாயை" நாடு கண்டிருக்கிறது ..ஆனால் கொடுத்து சிவந்தவரென்ற பழைய பெயரை கெடுத்ததிலும் .. விஜயகாந்தை வியாபார பொருளாக்கி சந்தைபடுத்தியதிலும் அவரின் துணைவியாருக்கு பெரும் பங்குண்டு .. விஜயகாந்தின் உடல்நலிவும் இயலாமையும் பிரேமலதா சதீஷை பிழைக்க அரசியலை பயன்படுத்தாமென்ற முடிவிற்கு வரவைத்துவிட்டது .. விஜயகாந்த் ஒரு பாடம்.. அரசியல் தெளிவற்று.. எதையாவது செய்து எப்படியாவது பதவி சுகத்தை அனுபவிக்கலாம் எந்த மக்கள் பணியும் செய்ய தேவையில்லை நேரடியாக முதல்வர் என கனா காணும் கோமாளிகளுக்கு பாடம் .. அரசியல் உழைப்பவர்களுக்கு உன்னத குறிக்கோளோடு வருபவர்களுக்கு பொதுதொண்டில் நாட்டம் உள்ளவர்களுக்கு சாதி மதமென குறுகிய சிந்தனையற்றவர்களுக்கு நல்பெயரை நன்மதிப்பை தரும் ..மாறாக வியாபாரமாக எண்ணுவோர், உழைப்பின்றி உயரலாம் என நினைப்போர் பணம் பதவிக்காக வருபவர்களை காலம் குப்புறதள்ளி குழிதோண்டி விடும் ..
..
விஜயகாந்தின் நிலை
நட்பின் அருமையும் பொருளும் புரியாதவராக வாழ்வியல் அர்த்தம் தெரியாதவராக
அரசியல் இலக்கணம் அறியாதவராக .. கடைசியில்
பெயர்கெட்டு நன் மதிப்பிழந்த கதையாகிவிட்டது
..
ஆலஞ்சியார்
Thursday, June 20, 2019
அயோக்கியர்களின் கடைசி புகலிடம் தேசபக்தி
இந்தியாவிற்கு சுதந்திரமே வேண்டாமென்ற சொன்ன பெரியாரை பெயரை உச்சரித்ததற்காக கங்கை நீரை கொண்டு நாடாளுமன்றத்தை கழுவவேண்டும். அர்ஜூன் சம்பத்
கங்கையை சுத்தபடுத்த சில ஆயிரம் கோடி செலவு செய்தும் (செய்தார்களா என்பது வேறு விடயம்):
இன்னமும் பிணங்களும் பிணந்திண்ணிகளின் கழிவுகளுமாக தான் இருக்கிறது கங்கை நீரை கொண்டுவந்து நாடாளுமன்றத்தை அசுத்தபடுத்தாமல் இருந்தாலே நல்லது ..
..
பெரியார் ஏன் விடுதலை நாளை கறுப்பு நாள் என்றார் இன்னமும் சனாதனவாதிகளால் .. பாசிச பார்பன வர்க்கத்தால் அடிமைபட்டுகிடக்கிறவனின் ..
விடுதலை இல்லாமல் நாடு விடுதலை அடைந்ததாக சொல்வது ஏமாற்றுவேலை என்பதால் சொன்னார்
எல்லோருக்கும் சமஉரிமை பெறாத போது ஏற்றதாழ்வாய் நீதி.. ஒரு குறிப்பிட்ட வர்க்கத்தினர் மட்டுமே எல்லா பலனையும் அனுபவிக்கும் போது
கல்வி வேலைவாய்ப்பில் பார்பனர்கள் மட்டும் ஆதிக்கம் செலுத்தும் நிலையில் சமமான நீதி கிடைக்காதென்பதால் தாழ்த்தபட்டவருக்கும் பிற்படுத்தபட்டவருக்கும் இன்னமும் உரிமைகள் கிடைக்காத போது பெறும் விடுதலை பயனளிக்காதென்பதால் கறுப்பு தினம் என்றார்.. இன்னும் கொஞ்சகாலம் ஆங்கிலேயனிடத்தில் ஆட்சி இருந்தால் எல்லோருக்கும் சமஉரிமையை நிலைநாட்டி விடலாம் என்ற மானுடபற்றால் சொன்னார் .. இந்திய நாடாளுமன்றத்தில் அவர் பெயரை உச்சரிக்காமல் வேறு யார் பெயரை உச்சரிப்பது ..
..
விடுதலை போராட்டத்தில் ஈடுபடவேண்டாமென்றும் ஏன் உங்கள் சக்தியை வீணாக்குகிறீர்கள் முஸ்லிம்கள் கிருஸ்துவர்களுக்கெதிராக போராடவேண்டும் ஆங்கிலேயே ஆட்சி எதிராக அல்ல என்று சொன்ன சர்வாக்கர் என்ற தேசதுரோகியை .. நான் வேடிக்கை பார்க்கவந்தேன் என மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத்து மண்டியிட்ட "பாரத ரத்னா" வை (வாஜ்பாய்) ஆங்கிலேயனுக்கு பல்வேறு இழிவான காரியங்களை செய்து பயன்பெற்ற வர்க்கத்தினரை.. வீட்டு பெண்களை அம்மணமாய் ஓடவிட்டு ஊர்களை எழுதி வாங்கிய (கு.கா.பாளையம்) ஆச்சார்யர்களை எல்லாம் கொண்டாடுகிற தேசத்தில்... நாட்டின் மீதும் நாட்டின் மக்கள் மீதும் அவர்கள் உயர்வு பெற வேண்டுமென சதா சிந்தித்த உயர்மகன் பெரியார் .. எனக்கு மதப் பற்றோ சாதிப்பற்றோ இனப்பற்றோ மொழி பற்றோ இல்லை எனக்கிருப்பதெல்லாம் மானுடப்பற்றுதான் என்ற பெருமகன் பெரியாரை கொண்டாடாமல் வேறு யாரை கொண்டாடுவது .. பெரியார் பெயரை உச்சரிக்காமல் வேறு யாருடைய பெயரை உச்சரிப்பது ..
..
உண்மையில் அர்ஜூன் போன்றவர்கள் சொரணையோடு போராடவேண்டும் யாருக்கும் எதற்கும் அடிமையல்ல நீ என புரியவைத்தவர் இன்றைக்கு காஞ்சி சங்காசாரியாரை (கும்பகோணம் மடம் என்பது தான் சரி- சங்காராச்சாரி அல்ல) நீ போய் பார்க்க முடிகிறதே .. இதுவே பூரி சங்கராச்சாரியரை பார்த்துவிட முடியுமா உம்மால்.. மகாராஷ்ட்ராவில் குண்டியில் சுடுதண்ணீர்தான் வரும்.. நீயெல்லாம் இப்படி பேசுவதற்கு உரிமையை பெற்று தந்தவர் பெரியார்
பிராமணீயத்தை உடைத்து உன்னைப் போன்றோரை சுயமரியாதையோடு நடமாடவிட்டவர் இன்றைக்கு வாய்க்குவந்ததை எல்லாம் பேசி திரிகிறீர்களே அந்த கருத்துரிமையை பெற்று தந்ததும் பெரியார்தான் .. சுவாமி என கக்த்தில் வேட்டியோடும் கையில் செருப்பை சுமந்து நின்ற உன்னை மரியாதையோடு நடத்துகிறார்களே .. அதற்கெல்லாம் காரணம் இந்த கிழவன் தான்..
இந்த மண்ணை இந்த மக்களை நேசித்தவர் பெரியார் .. அனைவருக்கும் சமமான நீதி, உரிமை, கல்வி வேலைவாய்ப்பு கிடைக்கவேண்டுமென பாடுபட்ட .. தொலைநோக்கோடு கடமையாற்றிய பேராசான் பெரியாரை பற்றி பேசாமல் யாரை பற்றி பேசமுடியும் .. நாடாளுமன்ற மைய்ய மண்டபத்திற்கே பெரியாரின் பெயரை தான் வைக்கவேண்டும்.. நிச்சயம் ஒருநாள் அது நடந்தேறும்.. வடக்கிலும் மேற்கிலும் பெரியார் பேச தொடங்கியிருக்கிறார் .. எச்சரிக்கை வெத்துவேட்டுகளே வீழ்ந்து போவீர்கள் .. சனாதனம் வீழும் சமத்துவமே வெல்லும்..
..
பெரியார் வாழ்க!
அண்ணா வாழ்க!!
கலைஞர் வாழ்க!!!
தமிழ் வாழ்க!!!...
..
ஆலஞ்சியார்
Subscribe to:
Posts (Atom)