Saturday, June 30, 2018

நாத்திகம்

ஸ்ரீரங்கம் கோவில் தீட்டாகிவிட்டதாம் அதற்கு கோவிலுக்கு பரிகாரம் செய்யவேண்டும் அதாவது தீட்டுகழித்து சுத்தம் செய்யவேண்டும்.. சொல்வது யார்.. மந்திரியென்றும் பாராது மந்தியைப்போல காலடியில் அமர்ந்து .. சென்றவுடன் பழைய கும்பகோணமடமாகிய காஞ்சி மடத்தை சுத்த செய்து தீட்டு கழித்தார்களே அந்த பொன்னர் சொல்கிறார்.. ஆதிதிராவிட சகோதரன் கை பட்டால் தான் தீட்டு ஆனால் பார்த்தாலே தீட்டென்று .. பனைமரத்தில் ஏறி நிற்கிறவனின் நிழல் கூட படகூடாதென்று அந்த வழியே அந்தணன் (பாப்பான்) போனால் மட்டை தட்டி ஓசை எழுப்பவேண்டும் இவர் சொல்கிறார்.. ஸ்டாலினால் நாத்திகன் வந்து போனதால் ஸ்ரீரங்கம் கோவிலை சுத்தம் செய்யவேண்டும்.. .. ஆத்திகர்களின் அயோக்கியத்தனங்கள் மதமென்ற பெயரில் ..இந்து கிருஸ்துவ இஸ்லாமிய மத குருக்களின் காமலீலைகள் நாடு கண்டு சிரிக்கிறது.. துறவி வேசம் போடுகிறவன் மத போதகன் வேசம் கட்டி சோக்காலி வாழ்க்கை வாழ்கிறான்.. இதில் சங்கராச்சாரியார் ஜகத் குரு என்று சொல்லி ஜெயேந்திரர் ஆடிய ஆட்டத்தை அந்த சமூகத்து எழுத்தாளரே ..பகிரங்கமாக குற்றம்சாட்டியதும்.. பி.ஜே எனும் நவீன இஸ்லாமிய போதகன் காமகளியாட்ட ஒலிநாடா வும்..பாவமன்னிப்பு கேட்க வந்த பெண்ணை மிரட்டி பாலியல் தொல்லை தந்ததும்.. ஆன்மீகத்தின் உண்மைதன்மையை .. ஆன்மீகம் என்ற பெயரில் அடிக்கிற கூத்திற்கு license உரிமம் வழங்கபட்டதைப்போல நாடே காரி உமிழ்கிறது.. மதபோதை மக்களின் சிந்தனை திறனை மழுங்கடித்து செய்யும் கேடுகெட்ட செயல்களை நியாயபடுத்த வைக்கிறது.. பி.ஜேவின் அடிவருடிகள்.. தனிநபரின் தவறுக்காக அவரின் தவறிய நிலையில் முன் போதித்த நல்லவகைகளை மறக்க கூடாதென்று பேசுகிற நிலை இதுவொருவகை மூளைச்சலவை ...நம்பியவரின் நடத்தைகளை நியாயபடுத்தி சுக்கான் பிடிக்கும் அயோக்கியத்தனம்.. அது ஜெயேந்திரர் விடயத்திலும் நடந்தது.. ஒருசிலரின் தவறை எப்படி ஆன்மீகத்தோடு சேர்ப்பதென்ற கேள்வி எழாமல் இல்லை.. அவர்களை பின்தொடர்கிற கூட்டத்தையும் சேர்த்து வழிகெடுப்பதைதான் எதிர்க்கிறோம்.. .. ஸ்டாலின் பொட்டை அழித்தாரென்று புலம்பி தீர்க்கும் பொன்னர்.. இந்தியாவின் முதல் குடிமகனை காவலாளி கைப்பிடித்து கோவிலுக்கு நுழையவிடாமல் தடுத்தது குறித்து பேச மறுக்கிறார்.. தொடர்ந்து ஸ்டாலினைப் பற்றியே பேசிக்கொண்டிருந்தால் மோடியின் எட்டுவழிச்சாலை துரோகத்தை மக்கள் மறந்துவிடுவாரென நினைக்கிறார்.. இதே கோவிலுக்கு யாரென்றே தெரியாத ஒரு பாப்பான் பூணூலோடு வந்தால் காலலாளி தள்ளிவிடுவானா..? .. தேசத்தின் முதல் குடிமகனுக்கே இந்த நிலை.. இங்கே நீயாராக இருந்தாலும் பூணூல் இல்லையென்றால் அதுவும் தாழ்த்தபட்டவனென்றால் அடி உதை மிதிதான்.. எந்த கொம்பனாக இருந்தாலும் .. இதுதான் மதம் ஆன்மீகம்.. இவர் வேண்டாமென்கிற நாத்திகம் .. மனிதனை சகமனிதனாக பார்க்க சொன்னது ஏற்றதாழ்வில்லை.. உன்னைப்போலவே அவனுக்கு சகலஉரிமைகளும் உண்டு.. அதேபோல பாலின வேறுபாட்டைச்சொல்லி கூடுதல் குறைவென்று பிரிப்பதை எதிர்த்தது.. பொன்னரும் எச்சையும் சமமானவர் என்றது.. எல்லோருக்கும் கல்வி ... அவனவன் விருப்பபடி உண்ண உடுத்த .. வாழ உரிமை ஒரே வார்த்தையில் சொன்னால் நல்லதை சொல்லும் நாத்தீகம்.. .. பொய் புரட்டு ஏமாற்று ஏற்றதாழ்வென ஆன்மீகத்தோடு வாழ்வதைவிட.. நாத்திகன் எனும் சொல் நல்லது பொன்னரே.. .. ஆலஞ்சியார்

Friday, June 29, 2018

மோடி ஆட்சி படிப்பினை

முற்றிலுமாக தோல்வியடைந்த மத்திய அரசு.. காரியம் தப்பா கணக்கன் தப்பா .. இங்கே இரண்டுமே தப்பாகி போனது. வாய்சொல் வீரரின் உணர்ச்சி மிகு உரையை நம்பி சிறந்த தலைமையை வீட்டுக்கு அனுப்பியதன் விளைவை அனுபவிக்கிறோம்.. காங்கிரஸ் ஆட்சியை (மன்மோகன் ஆட்சி என்பதே சரி) வேண்டாமென கூற நம்மிடையே சொன்ன பிரதான காரணம் 2ஜியில் இந்தியா அதுவரை கண்டிராத ஊழலென ஊடகமும் பார்பனீயமும் சேர்ந்து ஒருவித மாயதோற்றத்தை நிறுத்தி.. மோடியால் மட்டுமே நாட்டை சீர்படுத்த முடியும் குஜராத்தை முன்னேற்றியதைப்போல இந்தியாவும் நவீனமாகுமென நம்பவைத்தார்கள்... அதுவரை குஜராத்தின் உண்மைநிலையை நாடு அறிந்திருக்கவில்லை.. 2ஜி என்பது கட்டிசமைத்த பொய் என்பதை அறிய நிறைய இழக்க வேண்டியதாயிற்று நம்பி மோசம்போனோம் என்பதைப்போல இன்று நாடு சீரழிவில்.. எல்லாதுறையிலும் சரிவை நோக்கி போய்கொண்டிருக்கிறது.. .. சுவிஸ் பேங்கில் இந்தியர்கள் பதுக்கிவைத்திருக்கும் பணத்தை மீட்டு ஒல்வொரு இந்தியன் கணக்கிலும் ₹15 லட்சம் வரவு வைப்பேன் என்றார்.. பணமதிப்பிழப்பை செய்து இதோ கருப்புபணத்தை ஒழித்துவிட்டேன் இனி கருப்பே இல்லை என்றதை பொய்யாகி எப்போதுமில்லாத அளவு சுவிஸ் பேங்கில் 50% கூடுதலாக கருப்புபணம் .. பணத்தை மீட்பேன் என்றதை நாம் தான் தவறாக புரிந்து கொண்டுவிட்டோம்.. நம்மிடமுள்ள பணத்தை மீட்டு சிலருக்கு வழங்கி அதை கருப்பாய் கொண்டு சேர்த்திருக்கிறார்.. ஒரே வாரத்தில் 8000 கோடிவரை அமிர்ஷா மாற்றி கொடுத்திருக்கிறார்.. அவர் தலைவராக உள்ள கூட்டுறவு வங்கியில் மட்டும் 749 கோடி கருப்பு வெள்ளையாகியிருக்கிறது.. டாலர்க்கு இணையான இந்திய ரூபாய் ₹69 ... .. ₹480 ரூபாய்க்கு கேஸ் இருந்தபோது போராடிய பாஜக ‍.. மோடி ஆட்சியில் ₹800 ஆக உயர்த்தியிருக்கிறது.. .. கல்வியில் ஒரு சிலரை மட்டுமே கற்பிக்க வைக்கும் நிலையை உருவாக்கி குலத்தொழிலை நோக்கி நகர்த்த திட்டம் .. மக்கள் வேண்டாமென்கிற திட்டங்களை வம்படியாய் திணிக்கும் செயல்.. நாடாளுமன்ற ஜனநாயகம் படுகேவலமாய்.. என்ன நடந்தாலும் 41 நாடுகளை சுற்றி வருவதில் எந்த வருத்தமும் இல்லை மக்கள் வரிப்பணத்தில் இன்பசுற்றுலா..செலவு ₹356 கோடி.. எதை அணிய வேண்டும் எதை உண்ண வேண்டும் என்ன படிக்கவேண்டுமென்று கூட தீர்மானிக்கும் அதிகாரம் மக்களுக்கு இல்லை.. தீண்டாமை தலைவிரித்தாடுகிறது.. வடமாநிலங்களில் நிர்வாணமாய் நிற்கிறது எமது தேசம்.. குடியரசு தலைவரையே வெளியே பிடித்து தள்ளுகிற கொடுமை.. அதிகாரிகள் கூட தாழ்த்தபட்டவரென்பதால் வணக்கம் சொல்ல மறுக்கிற அவலம்.. நாட்டின் முதல் குடிமகனுக்கே இந்த நிலை.. பிரதமர் அமைச்சர்கள் எல்லாம் அதிகார தொனியில் பேசுகிறார்கள் .. சுவிஸில் பணமிருந்தால் அது கருப்புபணம்தானா என்கிறார் அமைச்சர்.. முறையாக பணபரிவர்த்தனை செய்திருந்தால் அதை வெளிகாட்டி தங்களின் புனிததன்மையை நிரூபிக்கலாமே.. .. மொத்தத்தில் நாடு கேடுகெட்டவர்கள் சிக்கி சின்னாபின்னமாகி கிடக்கிறது.. இவர்களுக்கு தெரிந்தது ஒன்றுதான்.. ஒரே குடும்ப ஆட்சி ராகுலுக்கு என்ன தெரியும்.. பாகிஸ்தான் ஊடுறுவல்.. ராமர்கோவில்.. போ்டோஷாப்.. இதைவைத்து இனி நடக்காது காரணம் மக்கள் உணர தொடங்கிவிட்டார்கள்.. பார்பனபுரட்டை தெளிவற்ற வறட்டு சிந்தனையை நம்ப தயாரில்லை.. டீக்கடையும், படித்தாக சொல்லி போலி சான்றிதழையும் தாண்டி இவர்கள் சாதனையென்று ஏதுமில்லை..ஒருவகையில் இவர்களை மக்கள் புரிந்துக்கொள்ள பேருதவியாக இருந்தது மோடியின் ஆட்சி.. .. வீழ்த்தபடவேண்டும் விரட்டபடவேண்டும் .. ஆலஞ்சியார்

Thursday, June 28, 2018

காதல் செய்வோம்

அடை மழையில் நனைந்து வயல்வெளியில் .. வரப்பில் நின்று கூத்தாடி மரத்தடியில் ஒதுங்கி.. மழை நின்று போகலாம்.. சின்ன பெருமூச்சு.. சூடாய் தோள்பட்டு கிளர்ந்தெழும்.. காமம்.. மழை நின்று.. இலை சிந்தும் நீர்பட்டு உடல் சிலிர்க்க.. இறுக அணைத்து கதைப்பதெல்லாம்.. வெறும்காமம் இல்லை.. .. தை குளிரில்.. எழ எண்ணும் போது இழுத்தணைத்து இதழ் முத்தம் தந்து இன்னுமொரு முறை மெல்லிய ஒலியில் காதில் கிசுகிசுத்து களவாணிபயலே.. எழுந்திருடா.. என்பதெல்லாம்.. பேரமுதம்.. .. ஒரு மழைகால காலைநேரத்தில். சுட சுட தேநீர் கோப்பையோடு டவல் சுற்றிய தலை.. கொஞ்சம் ஈரத்தோடு புடவை மெல்லிய கொலுசொலியில் அருகில் வந்து நின்று மயக்கும் விழியால் பேசி புன்னகைக்கும் பேரரசி.. இதைவிட காணாத சொர்க்கம் பெரிது .. காதல்.. தேன் தடவிய பலா அல்ல திகட்டாத தேனமுது அல்ல.. தித்திக்கும் தெள்ளமுதல்ல.. கசப்பும் வியர்ப்பும்.. துன்பநிலையும் ஆழ முழ்கி அர்த்தம் பொதிந்து. நின்று நிலைத்து.. அன்பெனும் பெருமழையிலும் அமைதியாய் ஓடும் நதிப்போல.. விழும்போது கைகொடுத்து.. விழாதிருக்க துணைநின்று.. கலந்துநின்று காக்கும் பேரருள்.. காமம் கலவி கருணை கலந்த பேரூற்று.. அன்பெனும் வற்றாத ஊற்று.. #காதல்.. .. ஆலஞ்சியார்

கனிமொழி

ஆர்எஸ்எஸை தமிழகத்தை விட்டு ஒழிந்தாலே மதவாதம் ஒழியும் ..திமுக ஆட்சிக்கு வந்தால் ஆர்எஸ்எஸை அகற்றிவிடுவோம்.. #மானமிகு_கனிமொழி.. .. இப்போதுதான் சரியான பாதையில் செல்கிறது மிகவும் ஆபத்தான தேசத்தின் ஒருங்கிணைப்பை வெட்டி சாய்க்கும் இயக்கமாய்.. இந்தியர்களின் ஒற்றுமைக்கு இடைஞ்சலாய் .. ஒருசாரார் வெளிப்படையாகவே சொல்ல வேண்டுமெனில் பார்பனர்களின் இயக்கமாய் .. சாதிய வெறியை தூண்டி மக்களை கலவரத்தோடு வைத்து ...மதவெறியை தூண்டி அதில் தங்கள் மட்டுமே பயனடைய வேண்டுமென்ற நோக்கோடு செயல்படும் இயக்கம்.. தொடங்கபட்ட காலத்திலிருந்தே.. அது இடைசாதி கடைசாதியினருக்கெதிராக இருந்தது.. சூத்திரன் கல்வியை கேட்டால் அவன் காதில் ஈயத்தை காய்ச்சி ஊற்று என வெளிப்படையாகவே சொல்லி திரிந்தவர்கள்.. ஒரு குறிப்பிட்ட இனத்தவருக்காக .. இந்த மண்ணின் பூர்வகுடிகளை தாழ்ந்தவனாய் காட்டி சமுக ஏற்றதாழ்வை மனதில் ஆழமாக பதித்ததில் ஆர்எஸ்எஸின் பங்கு அதிகம்.. .. ஆரியம் அஞ்சுகிற ஒரே சொல் திராவிடம்.. ஆரியத்தை வேரறுக்க நீங்கள் எதை கொண்டுவந்தாலும் அதை ஆரம்பத்திலேயே கிள்ளியெறிந்துவிடுவார்கள் அல்லது முனை மழுங்கிய கதையாகும் ..இன்றைக்கு நடக்கிற அவலங்களுக்கெல்லாம் காரணியான பாசிசத்தை நம் மீது திணிக்க நாமே காரணமென்றால் அது உண்மையும் கூட.. மதம் சாதி என மெல்ல கடித்து குதறும் விடயங்களில் ஆரியர்கள் அடிக்கடி அரவணைத்து நம் குரல்வளையை கடித்து குதறுகிற போது நம்மவரை கொண்டே நம் கைகளை கட்டி போடுகிறார்கள்.. கல்வியில் நமக்கான உரிமையை பறித்து .. நாமே நமக்காக உண்டாக்கிய மருத்துவ கல்லூரிகளில் அவர்களினி குழந்தைகள் படிக்க வைக்க நம்மை கொண்டே சொல்லவைத்திருக்கிறார்.. இன்னும் நிறைய வரும் வராதுவந்த வாய்ப்பினை மிக கெட்டியாக பிடித்துக்கொண்டு இனியொரு வாய்ப்பு கிடைக்காதென்பதால் அரியகிட்டிய அடிமைகளை வைத்து கூத்தாட்டம் நடத்துகிறார்கள்.. அது தப்பாட்டம் என தெரிந்தும் காலம் கடத்த வேண்டியிருக்கிறது.. .. அளவிற்கு அதிகமாக பார்பனர்கள் பொதுவெளியில் ..விவாதங்களில் திமிரோடு பேச தொடங்கியிருக்கிறார்கள்.. மௌனமாய் இருந்ததால் நம்மீது கத்திவீச தொடங்கியிருக்கிறார்கள்.. எங்கு அடித்தால் இவர்களின் ஆட்டம் அடங்குமென அறிந்து வீசியடிக்கிறார் கனிமொழி.. .. என்வீட்டில் எல்லோருமே திமுக ..கனிமொழி மட்டும் திராவிடர் கழகம் .. ஆசிரியரின் மாணவியாய் இருப்பதில் எனக்கு மகிழ்ச்சி என்றார் கலைஞர் .. ஆம் இந்த துணிவு பெரியார் திடலோடான தொடர்பில் வந்தது ஆரியத்தை வீழித்த பார்பனர்களின் ஆட்டத்தை அடக்க திராவிடத்தை ..அதன் சித்தாந்தத்தை பற்றிபிடித்து கொள்ளுங்கள்.. வெல்லலாம்.. நிச்சயமாக பாசிசவாதிகள் அஞ்சுகிற ஒற்றைச் சொல் .. திராவிடம்.. குலைநடுங்க செய்கிற ஒரு பெயர் உண்டெனில் இது பெரியார் தான்.. பெரியாரை முன்னெடுக்கிற.. பெரியாரை கொண்டு நடந்தால் மட்டுமே இலக்கை அடைய முடியும் அதுவே .. தமிழகத்திற்கு விடிவை தரும் தமிழர்க்கு நிம்மதியை தரும்.. வாழ்த்துகள் கனிமொழி.. .. சரியான பாதையில் .. ஆலஞ்சியார்

Wednesday, June 27, 2018

காலம் தந்த தலைமை

திரும்பவும் அதே இடத்திற்கு வருகிறேன் என சிலர் எண்ண கூடும்.. ஆம்.. சிலர் தங்கள் தகுதியை மறந்து ஏதோ தாங்கள் தான் காப்பாத்த வந்த ரட்சகன் போல பேசி திரிகிறார்கள்.. அரசியலில் சிலர் மிக திறமையாளர்களாக தன்னை எண்ணி படுகுழியில் விழுந்த கதைகள் ஏராளம்.. ம.பொ.சி.. சி.பா.ஆதித்தன் .. சம்பத்.. ஏன் நாவலர்.என பட்டியல் நீளும்.. ...இவர்களெல்லாம் ஏதோவொரு வகையில் தங்கள் திறமைகளை பறைசாற்றினார்கள்.. ஆனால் அது மட்டுமே போதுமானதாக இல்லை .. மிக சிறந்த தலைவர்கள் வரிசையில் இடம்பெற முடியாததுமட்டுமல்ல வெகுமக்களின் ஆதரவில்லாமல் போனார்கள்.. குறிப்பிட்ட காலத்திற்கு அவர்களில் சிலர் கொண்டாடபட்டாலும் தொடர்ந்து தங்களின் திறமையை நிலைநாட்ட அவர்களால் இயலவில்லை..சிலர் அடிபணிந்து போனார்கள் .. உதிர்ந்த ரோமங்களாய் போனவர்களும் உண்டு.. உருப்படாமல் போனவர்களும் உண்டு.. இதை ஏன் இப்போது சொல்கிறேனெனில்.. இன்றைக்கு திடீர் திடீரென முளைக்கும் போராளிகள் முதல்நாள் சமூகசேவை செய்துவிட்டு மறுநாள் கட்சி தொடங்கும் தலைவர்கள்..? தங்களால் மட்டுமே முடியுமென சொல்லி திரிவதை பார்க்கிற போது நமக்கு நகைக்க தோன்றுகிறது.. உடனே ஜனநாய நாட்டில் யார் வேண்டுமானாலும் வரலாம் என கேள்வி எழும்.. வரவேண்டும் அதற்குமுன் மக்களோடு மக்களாக இணைந்து போராட கலந்து காரியமாற்றவேண்டும்.. .. சிலர் தனக்கே தகுதியென கருதி எதைவேண்டுமானாலும் பேசலாம் என எண்ணுவது .. தூரத்தில் இருந்து சூரியன் ஒளிபட்டு இலையில் தங்கிவிட்ட நீர் மின்னும்.. அது தன்னால்தான் ஒளி பிறந்ததென நினைப்பதைப் போல சிலர் தங்களால் தான் என எண்ணுகிறார்கள் ஏதோ தாங்கள் மட்டுமே சிறந்த தலைமையை தருவோமென உளறுகிறார்கள்.. சீமான் அன்புமணி .. தமிழிசை எடப்பாடி தினகரன்..ரஜினி கமல் என.. இந்த கூட்டம் எண்ணிக்கையில் அதிகம் எதற்கும் உதவாதவர்கள் .. இவர்களின் பலம் சாதி மதம் மொழி.. கவர்ச்சி சினிமா.. இதைதாண்டி இவர்கள் பூஜ்யம் ஒரு குறிப்பிட்ட சமூகமோ ..மதமோ.. கவர்ந்தழுக்கும் கலையோ.. இவர்களை பின்துணைக்கலாம் அது நீடிக்காது காரணம் அந்தந்த சமூகமே அவர்களை தூக்கியெறிந்துவிடும் காரணம்.. அந்த சமூகத்திற்கு கூட அவர்களால் கெடுதியே இவர்களால் வந்து சேர்ந்திருக்கும் .. தலைவர்கள் உருவாக வேண்டும் காலம் ஒவ்வொருமுறையும் தனக்கான தலைவனை தேர்வு செய்திருக்கிறது மக்கள் நலன்.. ஓயாத உழைப்பு சமூக சிந்தனை நற்செயல் இந்த மண்ணையும் மக்களையும் நேசிக்கிற நேர்மை.. சாதி மதம் இனம் மொழி கடந்த மனிதாபிமானம் .. சமூகநீதியில் உரத்து நின்று அதை சமன் செய்கிற வல்லமை.. எள்ளளவும் ஜனநாயக மரபுகளை மீறாமை.. எதிர்கருத்தையும் உள்வாங்கும் அரசியல் தான் ஏற்ற கொள்கையை .. நிமர்ந்துநின்று பறையும் பேராற்றல் ..துணிந்து செயல்படுதல் ..வேகத்தோடு கூடிய விவேகம் அனைவரையும் இணைத்து/இணைந்து செல்லும் தலைமை ...இவையெல்லாம் கணக்கில் கொண்டு நல்ல தலைவனை காலம் தேர்வு செய்து தரும்.. தற்குறிகளை அரைகுறைகளை தான்தோன்றித்தனமாய் பேசிதிரியும் அபத்தங்களை தானெனும் மமதையோடு திரியும் வெத்துவேட்டுக்களை காலம் கைவிட்டுவிடும் மட்டுமல்ல மறந்துபோகும்.. ஆழ குழிதோண்டி புதைத்துவிடும்.. .. ஆம்.. காலம் தந்த தலைவர்களாய்.. காலம் செதுக்கியவர்கள் .. பெரியார் பேரறிஞர் அண்ணா ..கலைஞர்...அந்த வரிசையில் காலம் தனித்துவத்தோடு மெல்ல மெல்ல செதுக்கி தருகிறது.. தங்கமாய் தனிநிகர் தளபதியாய் காலம் தந்த கொடையாய் நிமிர்ந்து நிற்கிறார்.. தளபதி.ஸ்டாலின்.. நான் சொல்வது இன்றைக்கு இது மிகையாக தோன்றும் .. ஆனால் காலம் நமக்கு உணர்ந்தும் ..அரசியலில் நேர்மையும்.. கொண்ட கொள்கையில் உறுதியும் அரவணைத்து செல்லும் தலைமையும்.. நிதானமும் எதையும் நேர்வழியில் பெறவேண்டும் மக்கள் தரவேண்டுமென என எண்ணுகிற உயர்குணமும் .. அதையெல்லாம் மக்களின் நம்பிக்கையும் சொல்லும் .. காலம் செதுக்கிய தலைவன் என்று .தளபதி தமிழகத்தின் தலைவன்.. .. ஆலஞ்சியார்

Tuesday, June 26, 2018

நெரிக்கபடும் ஜனநாயகம்

அவசரநிலை இருண்டகாலமென்கிறார் மோடி.. மறுப்பதற்கில்லை ஆனால் அப்போது கூட பத்திரிக்கைகள் சுதந்திரமாய் முழு வலிமையோடு எதிர்த்தன .. கட்டுபாடுகள் விதித்த போதும் மறைமுக தாக்குதல் தர தயங்கியதில்லை.. எந்த ஊடகத்தையும் இந்திராவால் தடுத்திட முடியவில்லை கெடுபடிகள் கடுமையான போதும் ஊடகம் அறத்தை மீறி செயல்படவில்லை சில ஊடகங்கள் கட்சி சார்பில் இந்திராவை பின்துணைத்தபோதும் அடிமைசாசனம் எழுதி தரவில்லை.. சட்டத்தை கடுமையாக்கி கைது மிரட்டல் சிறை என்று MISA வில் ஜனநாயக குரல்வளையை நெரித்தார்.. அதற்கும் சற்றும் குறைவில்லாமல் இருண்டகாலமாக ஜனநாயக மரபுகளை குழித்தோண்டி புதைத்துவிட்டு தான்தோன்றித்தனமாக செயல்படுகிறது மோடி அரசு.. .. மிசா நாட்கள் இந்தியாவின் கருப்புபக்கங்கள் தான் அதற்கு சற்றும் குறையாத கருப்பு நாட்களாய் இப்போதைய ஆட்சி நடக்கிறது.. எதை உண்ணவேண்டுமென அவசரநிலையில் கூட யாரையும் கொன்றதில்லை .. கருத்து சுதந்திரத்திற்கான தடை ஏறக்குறை மிரட்டபடுகிற அவலநிலை .. தனக்கு பிடிக்காதவர்கள் தன் கருத்தில் கொள்கையில் உடன்படாதவரை அச்சுறுத்தும் நிலை.. இந்தியர்களின் கடைசி நம்பிக்கை என நம்படுகிற நீதிமன்றங்களில் நேரடியாக தலையீடு.. நீதிபதிகளை மிரட்டல் கொலை .. சிறையென ஒருவித பீதியோடு இந்திய நீதிமன்றங்கள் .. மனசாட்சியோடு கதைப்பதாக சட்டத்தை காவு கேட்கின்ற நிலை.. தேர்தலில் இந்திராவையே தோற்கடித்த ஜனநாயக நாட்டில் வாக்குபதிவு இயந்திர தில்லுமுல்லுகள்.. தணிக்கத்துறை..புலனாய்வுத்துறை என எல்லாவற்றிலும் காவிய சிந்தனை.. யாரை கும்பிட வேண்டுமென கட்டளையிடாததுதான் பாக்கி.. தனிமனித சுதந்திரத்தை மதமென்று சொல்லி தலையிடும் அயோக்கியத்தனம்.. இதையெல்லாம் விட பணமதிப்பிழப்பு என்று அறிவிகெட்டத்தனமாக நடுஇரவில் மக்களை நடுத்தெருவில் நிறுத்தி கருப்புபணத்தை ஒழித்தேன் பாரென்று கடைசியில் 480 % விழுக்காடு அதிகமாக கருப்புபணம் புழங்கியதும்.. ஒரே வாரத்தில் அமிர்ஷா 470 கோடி கருப்பை வெள்ளையாக்கியதும் தான் இதெல்லாம் மிசாவில் இல்லை .. ஒரு சிலரின் நலனுக்காக 97% விழுக்காடு இந்தியர்களையும் சமூகவிரோதியென கொக்கரிக்கும் திமிர்.. கல்வியில் குறிப்பாக ஒரு சமூக நலனுக்காக மற்றவர்கள் மீது தொடுக்கபட்ட போர்.. எளியவர்களின் உயர்கல்வி இனி எட்டாக்கனியாக்கி.. இயற்கை வளங்களை யாரையும் கேட்காமல் சுரண்ட.. ஒரு சில முதலாளிகளுக்காக சாமானியனின் உயிரை உடைமையை எடுக்கிற சர்வாதிகாரபோக்கு ..மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் பிரதம மந்திரி நாடாளுமன்றதிதில் நான்காண்டுகளில் 29 நாட்களே கலந்து கொண்டிருப்பதும்.. அதுவும் எதிர்கட்சிகளின் கேள்விக்கு பயந்து கோர்வையாக பேசிவிட்டு விவாதத்தில் கலந்துக்கொள்ளாமல் போவதும் .. ஊடகவியலாளர்களை சந்திக்காத பிரதமர் என்ற நிலை.. .. தன்னை சர்வாதிகாரியைப்போல நினைத்த இந்திரா தன் தவறுக்காக மக்களிடம் மன்னிப்பு கேட்டார்.. கொலை கலவரம் எரிப்பு என புதியதொரு பாதையை வகுத்தவர்களைால் மதவெறியை தூண்டி இடைசாதி கடைசாதிகார்களை மோதவிட்டு ஒருவித பதட்டத்தோடு தேசத்தை வைத்திருப்பவர்கள் .. அவசரநிலைப்பற்றி கவலைபடுவது வேடிக்கையாக இருக்கிறது .. ஜனநாயக நாட்டின் பட்டியலில் 17 இடத்திலிருந்து 42 வது இடத்திற்கு கொண்டுபோனது தான் (ஐநாஅறிக்கை) இவர்களின் லட்சணம்.. காங்கிரஸ் ஐம்பதாண்டுகளில் செய்யாத சாதனையாக பெண்களுக்கு பாதுகாப்பில்லாத நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடம்.. உலகிலேயே அதிக GST வசூலுக்கும் நாடு.. இதுதான் மோடி அரசின் சாதனை.. ஜனநாயக நெறிமுறைகளை மதிக்காத அரசு.. வீழ்த்தபடவேண்டியது அவசியம்.. .. ஆலஞ்சியார்

Monday, June 25, 2018

இன்றைய கூத்து..

தமிழிசை.. அபசுரமாய் பேசிக்கொண்டு திரிந்தவர் இன்று மணியாட்டிவிட்டார்.. அவரின் கருத்தோடோ கொள்கையோடு நமக்கு உடன்பாடில்லை எனினும் சில விடயங்களுக்கு அவரை ஆமோதிக்கலாம்.. பெண் அரசியல்வாதி ஆண் அரசியல்வாதி என்றெல்லாம் இல்லை எதையும் சந்திக்க தயார் என்ற துணிவை பாராட்டியே ஆகவேண்டும்.. பெண்கள் அரசியலுக்கு வருவது மிகவும் குறைந்த விழுக்காடெனினும் அதில் ஆணாதிக்க திமிர் தடைபோடுவதும்.. கிண்டல் கேலி என பாலினத்தை குறித்து பேசுவதும் தொடர்ந்து அங்கீகாரம் தர மறுப்பதும் .. தடைகளை மீறி வந்தால் ஆணோடு சரிசமமாக அரசியல் செய்ய முடியாது என ஏளனம் செய்பவர்களுக்கு மத்தியில் தொடர்ந்து துணிவோடு பேசியும் அது ஏற்புடையதல்ல எனினும் தைரியமாக போராடுகிற துணிவை பாராட்டுவோம்.. தமிழிசை அவர்களே ..இதைதான் பெரியார் சொன்னார் பெண்கள் அடுப்படிக்கு என்ற நிலை மாறி ஆணுக்கு நிகராக வேலைவாய்ப்புகளில் பொதுவாழ்வில் வரவேண்டும்.. இன்று உங்களை போன்றோர் அரசியல் பிழையாய் நிற்கும் போதும் (ஜெயலலிதாஉட்பட) வரவேற்கிறோம் சில அபத்தங்களை கூட மௌனமாய் கடந்து போகிறோம்.. .. அன்புமணி.. தன் அரசியல் வரலாற்றை சாதிய தீயில் வளர்த்தவர் அவரும் அவரது தந்தை ராமதாஸூம் சமூகநலன் என்ற பெயரில் சாதீய மோதலை .. குறிப்பாக இளைஞர்களை வெறியோடு போராட தூண்டியவர்கள் என்ற தமிழிசையின் குற்றசாட்டை சட்டென்று மறந்து கடந்து போய்விட முடியாது.. அப்படி என்ன சொன்னார் மரம் வெட்டுவதைப்பற்றி அன்புமணி பேச கூடாதென்றார்.. அதில் தவறு இருப்பதாக தெரியவில்லை.. இன்றைக்கு கூட சமூக வலைதளங்களில் மருத்துவர் ராமதாஸை மரம்வெட்டியாக தான் பார்க்கிறார்கள் .. தன் சமூக மக்களின் பிரச்சனைக்காக நாடே திரும்பிபார்க்க வைக்க அவருக்கு அப்போது தேவைபட்டது .. தொடர்ந்து அரசியல் தொய்வு ஏற்படுகிற போதெல்லாம் தன் சமூக மக்களை உணர்வோடு விளையாடுவார்.. சாதியை தாண்டிய அரசியலை அன்புமணியால் செய்ய முடியாது அதேபோல தமிழிசையும் பாஜகவின் அடிப்படை சித்தாந்தத்தை மீறி .. சாதிய மோதலை மதவெறியை தூண்டி அதில் குளிர்காய்வார்கள் அதிலிருந்து மீண்டுவர முடியாமல் ஒத்தூதுவது மட்டுமே நடக்கும்.. .. போகிற போக்கில் பாஜகவை நாட்டிற்கு நல்லது செய்வதைபோல பேசிவிட்டு போகிறார்.. மத்தியரசிற்கு எதிராக போராடுபவர்களை சமூக விரோதியைப் போல சித்தரிக்க முயலும் பாசிசத்தின் குரலாக ஒலிக்கிறார் .. தொடர்ந்து கைது செய்யபட்டுவரும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்களை பயங்கரவாதிகள் போல பேசிவிட்டு போவதை ஏற்க முடியாது.. இதில் ஒரு உண்மை ஒளிந்திருக்கிறது .. சிறு சிறு உதிரிகளாக செயல்படுவோர் அல்லது குறுகிய வட்டத்திற்குள் நிற்போரை பயமுறுத்தும் எச்சரிக்கை இது ..எந்தவொரு போராட்டமும் பெரிய அரசியல் கட்சிகளின் துணையோடு இன்றி செயல்பட்டால் கடைசியில் பிசுபிசுத்துபோகும் அல்லது மிரட்டல் கைது போன்ற நடவடிக்கை காட்டி எச்சரிப்பார்கள் .. தொடர்ந்து போராட வலுவில்லாமல் போகும்.. இல்லையெனில் சீமானை போல சரண்டர் ஆகி அந்தர்பல்டி அடிக்கும் வித்தை தெரிந்திருக்கவேண்டும்.. பாசிசம் மிக இலகுவாக இருபிரிவினருக்கிடையே மோதலை உருவாக்க பார்க்கிறது இன்று வலைதளங்களில் அதை காண முடிகிறது.. சாதியை மதத்தை கொண்டாடுகிறவர்கள் கடைசி புகலிடம் ஆயுதம் ..தாக்குதல் அது நடந்தேற தொடங்கியிருப்பது ஆபத்தானது.. .. கருத்தை கருத்தால் எதிர்கொள்ளும் ஆற்றல் இல்லாதவர்களே .. தாக்குதலுக்கு வருவார்கள் .. தமிழிசையை தாக்க முயற்பட்ட செயல் கண்டிக்கதக்கது .. அவரின் சொல்லில் செயல்பாடுகளில் நமக்கு சலிப்பை தந்தாலும் அவரின் மீதான தனிப்பட்ட விமரிசனம் ஏற்புடையதே அல்ல.. யார் அறிவாளியென விவாதிக்க தயாரா என தமிழிசை கேட்பது சிறுப்பிள்ளைதனமானது.. அதையை அன்புமணிக்கு சொல்வோம்.. எல்லாம் தெரிந்தவரை போல பேசி திரிவதும்..சில மாவட்டங்களில் சிறியதொரு ஆதரவை வைத்துகொண்டு தம்மை உயர்ந்தவனென காட்டிக்கொள்ள நினைப்பதும்.. ஆட்சியில் இருக்கிறோமென்ற தைரியத்தில் பேசும் பேச்சில் ஏகத்தாளமிடுவதும் திமிரோடு நடந்து கொள்வதும் இருசாரருக்கும் நல்லதில்லை... தன் பலம் அறியாது உளறுவோர் கரை சேர்வதில்லை .. ஆலஞ்சியார்