Tuesday, October 31, 2017

கிறுக்கர்கள் கையில் நாடு

மழை பெய்தால் நீர் தேங்கதான் செய்யும் ஜெயகுமார்.... மழை நீர் தேங்காதவண்ணம் அமெரிக்கா லண்டனை விட சிறப்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எஸ்.பி.வேலுமணி.. .. இரண்டு அமைச்சர்களுமே தான் தோன்றித்தனமாக பேசி மக்களை கேவலபடுத்தியிருக்கிறார்கள் ஒருவர் மிகைப்படுத்தி பேசி அரசு செயல்படுகிறதென்ற தோற்றத்தை உருவாக்க முயற்சித்தும் ஜெயகுமாரோ முடியாதென முன்னெச்சரிக்கையாக சொல்லி தப்பித்துக்கொள்கிறார் .. .. அரசுஇயந்திரம் செயல்பட்டு பல மாதங்களாகிறது அதிகாரிகளோ யார் பேச்சை கேட்பதென தெரியாமல் விழிக்கிறார்கள் .. இவர்களுக்கு(அமைச்சர்கள்) இப்போதைய கவலையெல்லாம் எத்தனை காலம் தாக்குபிடிக்கும் அதுவரை எவ்வளவு சேர்க்கமுடியுமென விரைந்து செயல்படுகிறார் காசொன்றே குறியாய்.. எப்படியும் யாருமே நம்மை திரும்ப சட்டமன்றம் அனுப்ப போவதில்லை ஏன் காரியமாய் செயல்படவேண்டுமென நினைத்து ஆளுக்கொரு கருத்தை சொல்லி திசை திருப்புகிறார்கள்.. .. தமிழகம் விவரகேடுகளின் கையில் சிக்கி தத்தளிக்கிறது ஒருவர் கூட அறிவார்ந்து பேசாவிட்டாலும் யதார்த்த உணர்ந்தாவது பேசலாம் எல்லோரையும் சுழியமாகவே வைத்திருந்த ஜெயலலிதா எண்ணி கோபமே வருகிறது.. எல்லோரையும் அடிமைகளாக குனிய வைத்தே பழக்கியதால் நிமிர்ந்து பார்க்கவே அவர்களால் இயலவில்லை.. தமிழகத்தின் உண்மையான நிலையென்ன .. மக்களின் என்னென்ன அவதிக்குள்ளாகிறார்கள் என்றெல்லாம் சிந்திக்கவே இவர்களால் முடியவில்லை.. .. அமெரிக்காவை விட சாலை வசதிகள் உள்ளதாக மத்திய பிரதேச முதல்வர் சொன்னதும் நாங்களென்ன இலுச்சவாயர்களா என்று நம்ம அமைச்சர்களும் உளற ஆரம்பித்துவிட்டார்கள்.. பொய்யர்களின் அடிமைகளால் உண்மை பேசமுடியாது.. .. #கிறுக்கர்கையில்_நாடு .. Aalanci Spm

Monday, October 30, 2017

ப.சிதம்பரம்..

ப. சிதம்பரம் ஒரு பிரிவினைவாதி, தேசத் துரோகி -- பா ஜ க கடுமையான தாக்குதல் .. இதை எதிர்பார்த்ததுதான்.. பாசீசத்தை விரும்புகிறவர்கள் மத்தியில் இங்கே மற்றவர்கள் தேசதுரோகிகள் தான்.. அப்படி என்ன சொன்னார்.. மிக தெளிவாக எப்படியெல்லாம் சட்டம் மீறபட்டிருக்கிறது.. மரபுகளை மதிக்காமல் தான் தோன்றித்தனமாக செயல்பட்டார்களென சாதாரணமானவர்களும் புரிகிற மாதிரி விளக்கினார்.. மேதாவித்தனமில்லாத எளிய மொழியில் எல்லோரும் விளங்கிக்கொள்ளவேண்டுமென்று தெளிவாக அமைதியாக ஒர் ஆசிரியர் மாணவர்களுக்கு புரிகிறமாதிரி பாடமெடுப்பாரே/சொல்லி தருவாரே அப்படி மோடியின் ஆட்சி அவலங்களை விளக்கியதுதான் இந்த கோபத்திற்கு காரணம்.. .. திடீரென்று ₹500 மற்றும் ₹1000 நோட்டுக்களை திரும்ப பெற வேண்டுமென்ற முடிவு ரிசர்வ் வங்கி மீது திணிக்கப்பட்டது .. சட்டப்படி ரிசர்வ் வங்கி தான் அரசுக்கு பரிந்துரை செய்யவேண்டும் இங்கே எல்லாம் தலைகீழ் .. காபினெட் கூட்டத்தை கூட்டி அனுமதி வாங்கிவிட்டு அமைச்சர்களை வெளியேவர விடாமல் அவர்களது தொலைப்பேசிகளை பிடிங்கிக்கொண்டு பிரதமரை தொலைக்காட்சி உரையை கேட்க வைத்தெல்லாம் புட்டுபுட்டு வைத்து மோடி.. சர்வாதிகாரியைப்போல என்றார்.. மொத்ததில் குரங்கு கையில் பூமாலை.. .. நிச்சயமாக பணமதிப்பிழப்பு தொடர்பாக என்றாவது ஒருநாள் அரசு அதிகாரிகள் அமைச்சர்கள் வங்கி அதிகாரிகள் விசாரிக்கப்படுவார்கள் என்றது அவர்களுக்கு கோபத்தை அதிகமாக்கியிருக்கிறது அதனால் தான் ப.சிதம்பரத்தை தேசவிரோதியென சொல்கிறார்கள் ஒட்டுமொத்த மக்களை நடுத்தெருவில் நிறுத்தி கருப்புபணத்தை ஒழிப்பதாக சொன்னவர்கள்.. கருப்புப்பணம் வெள்ளைபணமானதுதான் மிச்சம்.. சேகர் ரெட்டியிடம் ₹2000 கோடி எப்படி வந்ததென ரிசர்வ் வங்கியாலேயே சொல்லமுடியவில்லையாம்.. சாதாரண குடிமகன் தான் சேமித்த பணத்தை மொத்தமாக எடுக்க ஆதார் அவசியமென சொல்கிற அரசும் வங்கியும் மொத்தமாக சென்றது தெரியாதாம் ..எந்த மையத்திலிருந்து சென்றதென்பதை பணத்தின் சீரியலை வைத்து எளிதாக கண்டுபிடிக்கமுடியும் என்கிற போது சேகர் ரெட்டி சென்றது தெரியாதென்கிற கயமைத்தனத்திற்கு ஊழல் இல்லாமல் வேறென்ன.. மூன்று கண்டெய்னர் பணத்தை ஆவணம் ஏதுமில்லாது வாகன பதிவு தவறாக இருந்தும் நகர்த்த முடிகிறது இதற்கு பெயர் பித்தலாட்டமில்லையா.. மோடி அரசின் அவலத்தை தோலுரிக்க தொடங்கியிருக்கிறது காங்கிரஸ்.. .. ப.சிதம்பரம் தேசதுரோகி என சொல்வோருக்கு ஆங்கிலேயனிடம் வேடிக்கை பார்க்க வந்தேனென மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்த வாஜ்பாயெல்லாம் பாரத ரத்னங்களாக தெரிவார்கள்.. இந்தியாவில் ஆன்டி இந்தியன்கள் அதிகம் துரோகிகளின் கண்களுக்கு தேசத்தை நேசிப்பவர்கள் வேறெப்படி தெரிவார்கள்.. #நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும், வாய்நாடி வாய்ப்பச் செயல்" தெரியாமல் போனதால் வந்த விளைவு.. .. #துரோகத்தின்_கைகளில்_எமது_இந்தியா.. .. Aalanci Spm

Sunday, October 29, 2017

விசமேறிய..

திண்டுக்கல் சீனிவாசன்.. பாரதபிரதமர் மன்மோகன் சிங்.. என்று கூறி நம் முன் கோமாளியாய் நிற்பதாக தோன்றும்.. பாவம் அவரது அறிவு அவ்வளவுதான்.. சுதா ரகுநாதனை பெயர் மாற்றி சொன்னபோதே புரிந்ததுதான் ஒரு நாள் இல்லையென்றால் மற்றொரு நாள் தன்னையே யாரென்று கேட்பார் திரு.ஸ்டாலின் எழுச்சிப்பயணத்தை அது அவரின் இறுதி பயணம் என்கிறார்.. .. நகைச்சுவையாக கடந்து போக முடியவில்லை வரலாற்றில் நெடுக தன்னை காமடியனாக காட்டிக்கொண்டவர்கள் தான் கொடூரமான செயல்களில் ஈடுபட்டிருக்கிறார்கள் ஆம்.. திடீரென துப்பாக்கியால் சுட்டதும் நடந்தது.. தன்னை வெகுளியைப்போல ஏதும் அறியாதவனைப்போல காட்டி நின்றால் அறியாமையை நம்பிவிடுவார்களென செயல்படுகிறார்.. ஆனால் உள்ளக்கிடைக்கில் வன்மம் குடிகொண்டிருப்பதும் அது சட்டென்று எட்டிப்பார்க்கிறது.. அதை கேலியாக எடுத்துக்கொள்ள முடியாது.. .. நிறைய பேர் இதே வன்மத்தோடு அலைகிறார்கள் இது அவர்களின் அரசியலின் இறுதி அத்தியாயம் என அறிந்து இனி எப்போதுமில்லை வருங்காலத்தில் தளபதியை மைய்யபடுத்தியே தமிழக அரசியல் இயங்குமென்பதை புரிந்துக்கொண்டதால் அவர் மீதான கோபம் வார்த்தைகளில் வந்து விழுகிறது.. நேரடியாக தாக்குதல் நடத்தவும் தயங்காத வார்த்தை பிரயோகங்கள் பொதுவெளியில் தெரிகிறது ..இனி கவனத்தோடு செல்லவேண்டும்.. .. சிலர் காமெடியனாக தெரியலாம் உள்ளின் உள்ளில் விசமேறி கிடக்கிறது.. அது வெப்பம் தாங்காமல் வெடித்து சிதறுவதை தான் கடும் வார்த்தைகளில் காண்கிறோம்.. கோபமல்ல ..எச்சரிக்கை இது இனியும் சிலர் வரகூடும் .. .. #கவனம்தேவை .. Aalanci Spm

Saturday, October 28, 2017

கைநாட்டு

#கைநாட்டு.. கைநாட்டுக்களின் மீது அலாதி நம்பிக்கை/ பிரியம் எனக்குண்டு .. காரணம் படிப்பறிவில்லாவிட்டாலும் யாரையும் ஏமாற்ற தெரியாத வெள்ளந்தி மனிதர்கள்.. மிகவும் நம்பிக்கையானவர்கள்..யாரையும் வஞ்சிக்கத்தெரியாத உயர்குணம் கொண்டவர்கள் .. ஜெயலலிதாவின் கைநாட்டு பெரும் சந்தேகத்தை தந்தது.. மேதாவித்தனம் என்ற இமேஜை சுக்குநூறாக்கிய சம்பவம் ஜெயலலிதா சுயநினைவோடு இருந்திருந்தால் கைநாட்டு வைத்திருப்பாரா என்ற சந்தேகம் இருந்தது.. அவர் சுயநினைவோடில்லை என்ற நிலையை மறைத்து 90 சதவிகிதம் குணமடைந்து விட்டதாக சொன்ன சில மணி நேரத்திற்குள்ளாக அவரிடம் கைநாட்டு பெற பட்டதாக மற்றொரு செய்தி இட்லி சாப்பிடுகிறாரென்று சொன்னவர்களின் பொய் இப்போது அம்பலமாக தொடங்கியிருக்கிறது.. ஜெயலலிதாவை வைத்து இவர்கள் களித்த களி ..இப்போது உடைபடுகிறது.. திருப்பரங்குன்றம் திமுக வேட்பாளர் டாக்டர் சரவணன் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் டாக்டர் பாலாஜியை நீதிமன்றத்தில் (ஆஜராக) நேர்நிற்க உத்தரவிட்டது.. .. டாக்டர் பாலாஜி உயர் நீதிமன்றத்தில் நேர்நின்று சாட்சியம் அளித்தார் அதில் நிறைய உளறல்கள்.. 20 இடங்களில் தான் கைநாட்டு வாங்கவேண்டும் ஆனால் 28 படிவங்களில் வாங்கியிருக்கிறீர்கள் எட்டு படிவம் என்னானது என்ற கேள்விக்கு பதில் இல்லை.. கைரேகை பற்றி அனுபவம் இருக்கிறதென்கிறீர் உயிரோடு இருப்பவரின் கைரேகையில் உயிரோட்டமிருக்கும் ஆனால் ஜெயலலிதா கைரேகை புள்ளி புள்ளியாக தானே இருந்தது அவர் இறந்தபிறகு எடுக்கபட்டதா என்ற கேள்விக்கும் டாக்டர் பாலாஜியிடம் பதில் இல்லை தமிழக அரசிடம் முறையான அனுமதி பெறபட்டதா என்ற கேள்விக்கு இல்லையென பதில் அளித்தார்.. உங்கள் முன்னால் யார் படிவத்தில் கைநாட்டு வாங்கினார்கள் என்ற திமுக வேட்பாளர் டாக்டர் சரவணன் வழக்கறிஞரின் கேள்விக்கு வாங்கியது யாரென தெரியாதென்று பதில் சொல்லியிருக்கிறார். மருத்துவமனையில் சென்று கைநாட்டு பெற்றதற்கு ஆதாரமாக வீடியோவோ புகைப்படமோ இல்லை மருத்துவமனை லாக் சீட்டில் பதிவு இல்லை கைநாட்டு பெற்ற படிவத்தை அப்பலோ மருத்துவரிடம் கொடுத்ததற்கான ஆவணமோ அவர்கள் பெற்றுக்கொண்டதற்கு ஆதாரமோ இருக்கிறதா என்ற கேள்விக்கு என்னிடம் எந்த ஆதாரமும் இல்லை என்றார் டாக்டர் பாவாஜி... இவையெல்லாம் உயர்நீதிமன்றத்தில் நடந்த விசாரணையின் போது கூறியவை.. .. மெல்ல வெளிச்சத்திற்கு வருகிறது ஜெயலலிதா வின் மரணம் பற்றிய செய்திகளும் அவரை வைத்து பித்தலாட்டம் ஆடிய கூத்தும்.. இவையெல்லாம் நீண்ட விவாதங்களுக்கு வழிவகுக்கும்..ஆனால் உண்மை வெளிவந்தே தீரும். .. #கைநாட்டு.. .. Aalanci Spm

Friday, October 27, 2017

சிறுபகையே.. சீண்டாதே..

பெரியாரியம் பேசுகிற கறுப்புச்சட்டைகாரர்களும் பொதுவுடமை பேசும் சிவப்பு சட்டைகாரர்களும் பட்டியலினத்தில் இருக்கிறார்கள் ஆனால் நில நிறம் அணிந்த அம்பேத்கரிஸ்ட்கள் பிற்படுத்தவராக. இருக்கிறார்களா..? என்கிறார். பா.ரஞ்சித் .. அம்பேத்கரை முன்னெடுப்பதில் தவறேதுமில்லை ஆனால் பெரியாரியவாதிகளும் காம்ரேட்களும் அம்பேத்கரை மதிக்கவில்லை என்ற தோற்றத்தை உருவாக்க முயற்சிக்கிறார்.. முதலில் அம்பேத்கர் சரியாக படித்துவிட்டு வந்திருக்கலாம்.. பெரியாரை மிகவும் மதித்தவர் மட்டுமல்ல இங்கே பெரியார் போன்ற ஒரு தலைவர் கிடைக்கவில்லையே என வருத்தியவர் .. வடநாட்டில் பெரியாரை போன்ற ஒருவர் பிறந்திருந்தால் இந்த இழிநிலை வடமாநிலங்களில் வந்திருக்காது தலித்கள் மீசை வைத்துக்கொள்ள கூட அனுமதிக்க மறுக்க சமூகபார்வையில் இருக்கிறது இந்திய மாநிலங்கள் தமிழகத்தில் தான் திமிரோடு கூட பேசமுடியும் நான் இந்த திமிரோடு என்ற வார்த்தையை புண்படுத்த பயன்படுத்தவில்லை மாறாக அடங்க மறு அத்துமீறு என உரக்க சொல்லமுடிகிற சூழலை நினைவூட்டுகிறேன்.. நிறைய தலைவர்கள் அண்ணல் அம்பேத்கரை பின்பற்றியிருக்கிறார்கள் இன்னும் சொல்லபோனால் இடைசாதிகாரர்கள் அம்பேத்கரை முன்னெடுத்ததைப்போல பட்டியலின தலைவர்கள் கூட முன்னெடுக்கவில்லை.. .. அம்பேத்கரை முன்னெடுத்தால் மட்டும் மாற்றத்தை தந்திடும் என்றால் வடமாநிலங்களில் பட்டியிலனத்தவர்கள் வாழ்வு மேம்பட்டிருக்கவேண்டும்.. அதனால் அம்பேதேகரிஸம் தேவையில்லை என்பதல்ல பொருள் .. அதிகம் படித்த மேட்டுத்தனம் அம்பேத்கரிடமிருந்ததால் .. எளியவனும் புரிகிற மொழியில் பேச மறந்ததால் பெரியாரை போல அண்ணலால் வெற்றிப்பெற முடியவில்லை..சாமானியனுக்கு உரைக்கிற மாதிரி பேசினார் செயல்பட்டார் #பெரியார் அதனால்தான் அவரால் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டுவர முடிந்தது.. அங்குதான் அம்பேத்கர் தோற்றுப்போனார் அதனால் அவரின் கருத்துக்கள் தவறென்று பொருளல்ல.. சாமானியனை சென்றடையாத எந்த சீர்திருத்தமும் வெற்றிபெறாது .. .. பெரியாரால் ஒரு பட்டியலனத்தவரை அறநிலையத்துறை அமைச்சராக பரிந்துரைக்க முடிந்தது... பரமேஸ்வரன் என்ற தாழ்த்தப்பட்டவர்(இரட்டைமலை சீனிவாசன்பேரன்) அறநிலைய துறை அமைச்சரான போது.. அம்பேத்கர் சொன்ன வாசகம் ஒன்றே போதும்.. என் சாதியில் பட்டவனை குளிக்கவும் விடமாட்டேன் என்கிறான் குளத்தில் குனிந்து அள்ளி குடிக்கவும் விடமாட்டேன் என்கிறான்.. ஆனால் தமிழகத்தில் அறநிலைய துறை அமைச்சராக்கி கருவரைக்குள்ளே செல்லும் அதிகாரத்தை பெற்று தந்திருக்கிறார் பெரியார் என்றார்.. .. அம்பேத்கரை முன்னெடுப்பாத சொல்லி திராவிடத்தை பொதுவுடமையை குறைச்சொல்ல நினைப்பதிலிருந்தே..புரிகிறது.. எங்கிருந்து இயக்கபடுகிறீர்கள் என்று.. பெரியாரை மீறிய எதுவும் எந்த பயனும் தராது.. நீங்கள் தைரியமாக பேசுகிறீர்களே.. அனிதா நினைவேந்தல் நிகழ்வில் மைக்கை பிடித்து கலாட்டா செய்ய முடிந்ததே இந்த கருத்து சுதந்திரமெல்லாம் நாங்கள் (பெரியாரியவாதிகள்) பெற்று தந்தது.. நீங்கள் சொல்கிற அம்பேத்கரால் வடமாநிலங்களில் பேசும் உரிமையை கூட பெற்றுதர முடியவில்லை.. .. யாரையும் குறைவாக மதிப்பிடும் பழக்கத்தை விடுங்கள் அம்பேத்கர் போன்ற மாமேதைகளை தந்த சமூகம் என்பதில் எப்போதும் மரியாதை உண்டு.. எல்லா சமூகங்களிலும் சில புல்லுறுவிகள் வருவார்கள். ஆனால் அந்த சமூகமே அவர்களை புறந்தள்ளும்.. பா.ரஞ்சித் போன்றவர்கள் இதுபோன்ற பிரித்தாளும் சூழ்ச்சிக்கு இரையாமல் இருந்தால் சரி.. இல்லையெனில்.. புறக்கணிக்கபடுவீர்.. .. கொடும்பகைகள் கண்ணுக்கு தெரியும் ஆனால்.. சில சிங்காரித்து வரும் சிறுபகைகள் .. வேரறுக்க முயற்சிக்கும் #எச்சரிக்கை. .. Aalanci Spm

Thursday, October 26, 2017

கடவுள் நம்பிக்கை

தளபதி தலைமையில் .. புதிய தமிழகத்தை உருவாக்குவோம் ... .. நாத்திகம் பகுத்தறிவு ‍ ... பெரியார் சொல்கிறார் எனக்கு கடவுள் மீதெல்லாம் கோபமில்லை .. இந்த சமுதாயத்தின் ஏற்றதாழ்வுகளை கலைய வேண்டும் என எண்ணினேன்.. அது ஜாதீய கட்டமைப்புக்குள் என்றார் ஜாதியை ஒழிக்கலாமென்றேன் அது மதத்திற்குள் என்றார் மதத்தை புறக்கணிப்போம் என்றேன் அது கடவுளின் செயல் என்றார்.. அதனால்தான் நான் கடவுளை எதிர்க்கிறேன் என்றார்.. இங்கே இந்துமத கடவுளை மட்டும்தானே பெரியார் எதிர்த்தார் என்கிறார்கள்.. பிற மத கடவுள்கள் மனிதர்களாக வாழ்ந்தார்கள் என்பதற்கு ஆதாரம் உண்டு இங்கே எல்லாம் கற்பனையாக பாத்திரங்கள் என்றார்... அதே நேரம் எல்லா மதத்திலும் உள்ள மூடவழக்கங்களை எதிர்த்தார் எது அறிவு ஏற்றுக்கொள்ளவில்லையோ அதை நீ ஏற்றுக்கொள்ளாதே என்றார் அது மதம் கடவுள் கற்பனை இத்யாதி... .. ஆனால் திமுக அப்படியல்ல.. தி க விலிருந்து பிரிந்துவந்த பேரறிஞர் அண்ணா ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்றார்.. கடவுள் மறுப்பு அல்ல திமுகவின் கொள்கை ... .. திமுக கடவுள் மறுப்பை பிரதானமாக்கி செயல்படும் இயக்கமல்ல இங்கு நாத்திகனும் உண்டு கடவுள் நம்பிக்கை உள்ளவனும்,உண்டு... காரணம் தனிநபரின் செயல்பாடுகளில் விருப்புவெறுப்புகளில் இயக்கம் தவையிடுவதில்லை.. திமுகவின் பிரதான கொள்கைகளிலிருந்து மீறாமல் இந்த சமூகத்தில் நடக்கும் ஏற்றதாழ்வுகளுக்கு எதிராக ஒரு சிலரே எல்லா வாய்ப்பையும் தட்டிப்பறிக்கிற செயல்களுக்கெதிராக ..சமூகநீதியை நல்லிணக்கத்தை கட்டிகாக்க. நாட்டின் நலன் இன,மொழி கொள்கை கோட்பாட்டிலிருந்து மாறாத சமூகத்தில் அனைவருக்குமான உரிமைகளை பெற்று தர போராடிக்கொண்டிருக்கிறது.. .. இங்கே சிலர் ஸ்டாலின் கோவிலுக்கு போகிறார் ..ராசாத்தி அம்மாள் போகிறாரென்கிறார்கள் கவிஞர் கனிமொழியே எனக்கு கடவுள் நம்பிக்கையில்லை ஆனால் என் தாயார் கடவுள் நம்பிக்கை உள்ளவரென்றார் .. திமுகவில் நிறைய #பழங்கள் உண்டு..அவர்கள் அண்ணாவை கலைஞரை ஏற்றவர்கள்.. அவர்களையே பின்தொடர்பவர்கள் கொள்கை உறுதியானவர்கள்.. திராவிட சித்தாந்தத்தை ஏற்கிறவர்கள்.. கடவுள் மறுப்பை தவிர.. .. எனக்கு கடவுள் மீதான நம்பிக்கை இல்லையென்பதற்காக அவரை ( தளபதி) போகவேண்டாமென்று சொல்ல முடியாது.. அவரின் அவரை சார்ந்தவர்களின் தனிப்பட்ட விரும்பங்களை தடைபோட முடியாது..திமுக கடவுள் மறுப்பை மட்டுமே முன்னெடுக்கிற இயக்கமல்ல.. யாரையும் கட்டுபடுத்தாத அதே வேளை திமுகவின் பிரதான கொள்கையிலிருந்து விலகி செல்வாரே ஆனால் அப்போது மிகவும் கடுமை விமர்சிப்போம்..அதில் மாற்றுகருத்தே இல்லை.. .. இனத்தின் மொழியின் மீதான தாக்குதலை தொடுக்க முடியாதவர்கள் தொடுத்து தோல்வியுற்றவர்களின் கூப்பாடு இது. தமிழர்களின் கலாச்சார பண்பாட்டை சிதைக்க எண்ணி தங்களின் தேவைகளை மட்டுமே புகுத்தும் சிலரின் கையாலாகாததனம் தான் இந்த ஏன் ஸ்டாலின் கடவுளை கும்பிடுகிறார் என்பது.. எதிரிகள் செயலற்று நிற்கும் போதுதான் தனிநபரின் செயல்பாட்டை விமர்சிப்பார்கள்.. அது இயலாமை.. கருணாநிதியோடு திமுகவின் செல்வாக்கு முடிந்தது என எண்ணிக்கொண்டிருந்தவர்களில் எண்ணங்களில் பேரிடியாக விழுந்ததுதான் திரு.ஸ்டாலின் அவர்களின் வளர்ச்சி.. அண்ணனை கொம்பு சீவினார்கள்.. அதெல்லாம் நடக்காமல் போய் கடைசியில் தனிநபர் செயல்பாடுகளை தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை கதைக்கிறார்கள்.. .. திரு.ஸ்டாலின் அவர்களோடு அரசியல் செய்யுங்கள் விமர்சனம் செய்யுங்கள் எதிர்கருத்தை சொல்லுங்கள்.. கடுமையான கண்டனத்தை கூட பதிவு செய்யுங்கள் அது அவரது அரசியலாக மட்டும் இருக்கவேண்டும் .. #காலத்தின்தேர்வு_தளபதி... .. Aalanci Spm.. மீள்

Wednesday, October 25, 2017

ஸ்பெக்டரம்

2ஜி.. இந்திய நீதிமன்ற வரலாற்றில் அதிமுக்கியத்துவம் வாய்ந்த வழக்க ாக கருதப்பட்டது.. 1.75 லட்சம் கோடி இழப்பென்றவுடன் நாடே அதிர்ச்சியாகியது மிகைப்படுத்த தொகை என்று ஒரு சிலர் சொல்லியும் நாடாளுமன்றத்தை தொடர்ந்து முடக்கி அதுவும் மூன்று வருடம் கழித்து தமிழகம் தேர்தலை சந்திக்கும் நேரம் பார்த்து நாடாளுமன்றம் அமளிப்பட்டது.. உச்சநீதிமன்றம் தாமாகவே முன்வந்து எங்களை கேட்காமல் சம்பந்தப்பட்டவர்களுக்கு பிணை (ஜாமீன்) வழங்ககூடாதென்றவுடன் ஆஹா பார்த்தாயா திமுகவை துடைத்தெறிந்துவிடலாமென சிலர் கங்ஙனம் கட்டி வேலை செய்தனர்.. அப்போதிலிருந்தே திமுக தரப்பு மிக அமைதியாக ஆனால் உறுதியாக இருந்தது.. நீதிமன்றத்தில் மீது நம்பிக்கை இருப்பதாக சொன்னதோடு வழக்கை அதன் போக்கிலேயே எதிர்க்கொண்டது.. .. இழப்பு அது ஊழல் அல்ல இப்போது பேசுகிற ஊடகங்கள் அப்போது எங்கே அவ்வளவு பணம் போனது .. எத்தனை கண்டெய்னர்கள் எரித்தால் கூட 21 நாட்களாகுமென்றல்லாம் கதை கட்டியது.. உண்மை நீண்டநாள் உறங்காதென்பதில் அசைக்கமுடியாத நம்பிக்கை கொண்டிருந்ததால் வாய்தா வாங்காமல் ஒவ்வொரு முறையும் நேர்நின்று வழக்கு போகும் போக்கை உன்னிப்பாக கவனித்து திரு.ராசா அவர்கள் இறுதி வாதத்தில் அதிர்ஷ்டம் இருந்தால் வெற்றி பெறட்டும் என சிபிஐ வழக்கறிஞர் சொன்னபோது.. சட்டத்தை நம்பிகிறவன் அதிர்ஷ்டத்தை அல்ல முடிந்தால் ஆதாரங்களை தாருங்களென சொன்னார் .. ஆதாரம் இதுவரை வந்தபாடில்லை.. அதற்கு பிறகு 3ஜி யிலும் 4ஜியிலும் அதைவிட இழப்பை சொன்னபோது நிதியமைச்சர் அருண்ஜெட்லி சிஏஜி அறிக்கையை அரசியலாக்காதீர்களென நாடாளுமன்றத்தில் சொல்கிறார் இதே சிஏஜி அறிக்கையை வைத்து நாடாளுமன்றத்தை நடக்கவிடாமல் செய்த பாஜகவினர் இப்போது அரசியலாக்காதீர்களென வசனம் பேசுகிறார்கள்.. .. ஊழல் நடைபெறவில்லை முறைகேடாக ஒதுக்கினார் ராசா என்பதற்கு முன்பு பாஜக செய்த முறையைதான் (அருண்ஷோரி) பின்பற்றியதாகவும் இது காபினெட் முடிவு தன்னிச்சையாக முடிவெடுக்கும் அதிகாரம் தமக்கில்லை என்ற பிறகு வழக்கு நிலைகுலைந்து போனது ஆவணங்களை சேர்க்கவேண்டுமென வாய்தா வாங்கிக்கொண்டிருக்கிறார் நீதிபதி ஷைனி அவர்கள்.. குற்றம் சாட்டப்பட்டவர்கள்தான் அவகாசம் கேட்கவேண்டுமே தவிர குற்றம் சாட்டிய அரசோ புலனாய்வுத்துறையோ .. ஏன் நீதிபதியோ கேட்க கூடாது.. நவம்பர் 7 முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதவேண்டியிருக்கிறது #நவம்பர்8 மோடியின் தான்தோன்றித்தனமான பணமதிப்பிழப்பை மக்களுக்கு நினைவூட்டும் விதமாக நாடே ஆர்பார்ட்டமென அறிவித்த நிலையில் இதில் சூது இருப்பதாக சந்த்கிக்கவேண்டியிருக்கிறது. .. திரு.ஷைனி கைகளை பிடித்து தீர்ப்பு எழுதபோகிறார்களா.. ஷைனியே எழுதுவாரா என மக்கள் மனதில் இப்போதே சந்தேகநிழலாடுகிறது.. அண்ணல் அம்பேத்கரே .. அரசியல்சாசன சட்டத்தை வடிவமைக்கும் போது எனது கைகளை கொண்டு அவர்கள் எழுதினார்கள் என்றார்.. எதுவும் நடக்கலாம் அதனால் திமுக பாதிப்படைய போவதில்லை .. நிறைய தடைகளை கடந்துதான் திராவிட இயக்கம் வளர்ந்திருக்கிறது. நீதித்துறையில் குமாரசாமிகளும் உண்டு..எனினும் நீதி வெல்லுமென்ற நம்பிக்கை நமக்கிருக்கிறது. .. #ஸ்பெக்ட்ரம்_ராசா .. Aalanci Spm