Wednesday, December 13, 2023
Friday, December 8, 2023
Thursday, November 2, 2023
Sunday, October 29, 2023
திராவிடம்..
திராவிடம் என்னவென்று தெரியாதவரெல்லாம் அ.தி.மு.கவின் பொதுச்செயலாளராக இருப்பது எவ்வளவு அசிங்கம் .. அதிமுக ஆரம்பித்தபோது கலைஞர் சொன்னது தான் ஞாபகம் வருகிறது.. சிங்கத்திற்கு முன் "அ" சேர்த்தால் வருவதுதான் ..
..
அறிவுடை இயக்கமாய் ஆரம்பிக்கப்பட்ட கட்சி மகோரா எனும் சாயபூச்சுகாரனின் அலங்கோலத்தால் மக்களின் கேளிக்கை மயக்கத்தில் மதியிழந்து நின்றதால் இன்றைய அவலங்களுக்கு நாமும் சாட்சியாகிறோம்.. இனப்பகைவர்கள் கூட நம் அறிவின் முன் மதிமயங்கி நின்றதெல்லாம் காலம் நமக்கு போதித்திருக்கிறது.. எதையும் அறிவுக்கொண்டு பார் எனச் சொல்லி வளர்ந்த தமிழர்கள் இன்று அறிவிலிகளால் தலைக்குனிவை நேரிடும் அவலம். திராவிடம் ஆரியம் அதெல்லாம் புராணத்தில் வரும் என உளறிவைத்து தன்னை தற்குறியாய் அடையாளப்படுத்தியிருக்கிறார் பழனிசாமி
..
திராவிடம் இந்த மண்ணின் இனம்.. இந்தியாவிற்கு உரிமை கொண்டாட வேண்டுமெனில் தமிழர்களை தவிர யாருக்கும் தகுதியில்லை என அண்ணல் அம்பேத்கர் சொன்னதையாவது படித்திருக்கிறாரா.. இந்தியாவின் பூர்வகுடிகள் திராவிடர்கள் என மம்தாவிற்கு இருந்த புரிதல் கூட பழனிசாமிக்கு இல்லாமல் போனதேன்.. திராவிடம் என்ற சொல் தேசிய கீதத்திலேயே இருப்பது கூட இந்த அரைவேக்காட்டிற்கு தெரியாதா.. அண்ணாவிற்கு பிறகு அதிகம் படித்தவன் என பெருமைபேசிய பழனிக்கு திராவிடம் ஆரியம் என்றால் தெரியாதா.. அண்ணாவின் "ஆரியமாயை" யாவது தெரியுமா..
..
திராவிட இயக்க வரலாறு தெரியுமா.. இதெல்லாம் இவரைச் சொல்லி என்ன பயன்.. அதிமுக நிறுவனர் மகோரா எனும் எம்ஜிஆருக்கே தெரியாதே.. அடிக்கிற காற்றில் கோபுர உச்சியில் அமரும் இலைகள் .. கலசமாகாது.. ஆரிய திராவிட போர் ஈராயிரம் ஆண்டு வரலாறும் கொண்டது .. பழனி போன்றவர்கள் திராவிட இயக்க வரலாறு தொகுப்பை படிக்க வேண்டும் ..
வரலாறு தெரியாதவர்கள் விவரகேடுகள், வழிதவறிய பாதையில் இனியேனும் திராவிடம் குறித்து அறிந்துக்கொள்ளுங்கள் பழனிசாமி அவர்களே.. பெரியாரை பேரறிஞரை, திராவிட இயக்க முன்னோடிகள் படியுங்கள்.. இல்லையெனில் அண்ணாவின் பெயரை கட்சியிலிருந்து நீக்கிவிட்டு ஆரிய அடிவருடிகளாக இருங்கள்
..
ஆலஞ்சியார்