Saturday, August 10, 2019
தமிழிசை இம்சை
திமுகவின் வெற்றியை ஏற்றுக் கொள்ள முடியாது
தமிழிசை.. சில நடுநிலைவாதி..? களும் இதே கருத்தை சொல்லி வருகிறார்கள் .. பாராளுமன்ற ஜனநாயகத்தில் ஒரு வாக்கு வித்தியாசம் என்றாலும் அது வெற்றிதான் .. அதிபர்முறை தேர்தலில் தான் 50% விழுக்காடு வேண்டுமென்று முதல் இரண்டு இடம் பிடித்தவர்களை மீண்டும் மக்களிடையே வாக்கு கேட்க செய்வார்கள் ஈரான் போன்ற நாடுகளில் இது நடைமுறையில் உள்ளது ..
வெற்றி தோல்வி இரண்டையும் ஏற்கும் மனபக்குவம் வேண்டும் ..குறைவான வாக்குகளில் தோற்றவர்களையும் வென்றவர்களை நாடு கண்டிருக்கிறது ..
..
சென்ற சட்டமன்ற தேர்தலில் 3000 வாக்குகள் வித்தியாசத்தில் 30 தொகுதிகளில் ஜெயலலிதா வெற்றிப்பெற்ற போது யாரும் அதை தோல்வி என்று சொல்லவில்லை .. எம்ஜிஆர் (ம.கோ.ரா) உடல் நலியுற்றிந்த போது 1000 வாக்குகள் வித்தியாசத்தில் தான் அறுபதுமேற்பட்ட இடங்களில் வென்றார்.. இதெல்லாம் அவசரகதியில் அரைகுறை தெளிவில் அரசியல் செய்பவர்களுக்கும் ஊடகவியலாளர் என்றால் என்னவென்றே தெரியாத நேர்மையாளர்களுக்கும் தெரியாது ..
தமிழிசை ஜெயகுமார் போன்றவர்கள் மைக் கிடைத்தால் எதையாவது உளறவது வாடிக்கையாகிவிட்டது தெளிவற்ற அரசியல் பார்வை கொண்ட நடுநிலையாளர்கள் கடந்தகால அரசியலைப்பற்றி அறிவற்றவர்களின் உளறல்கள் நிறைய கேட்க முடிகிறது ..
..
சென்ற தேர்தலை விட திமுக பெற்று இருக்கும் வாக்கு விகிதம் கூடுதல் என்பதும் ஏ.சி.சண்முகம் கடந்த தேர்தலில் தனி செல்வாக்கோடு பெற்ற வாக்குகள் எண்ணிக்கையோடு அதிமுக வாக்குகளை சேர்த்தால் சில லட்சம் வித்தியாசங்களில் வென்றிருக்கவேண்டும் .. அதே நேரம் திமுக இன்னும் அதிக வாக்குகளை பெற்று வென்றிருக்கவேண்டுமென்பதில் மாற்று கருத்தில்லை .. எங்கு தவறு நடந்ததென திமுக பரிசோதனை செய்யவேண்டியதும் அவசியம் ..
..
ஏதாவது ஒரு இடத்தில் வென்றுவிட்டு வந்து கருத்து சொல்லட்டும் என்ற கனிமொழியின் கருத்து கடந்து போக முடியவில்லை ஏனெனில் எதற்கெடுத்தாலும் தாங்கள் மட்டுமே தெளிவுள்ளவர்கள் தாங்கள் சொல்வது மட்டுமே சரி என்கிற மனபான்மையோடு மத்தியில் அதிகாரத்தில் இருப்பதால் எதைச் சொன்னாலும் ஊடகம் அதை வெளிச்சத்திற்கு கொண்டுவரும் என்பதால் உளறிவைக்க கூடாது ..
கருத்து சொல்வதற்கு உரிமை உண்டெனினும் பொய்களும் போலித்தனமும் உளறலும் கருத்தாக கொள்ளமுடியாது .. ஒருதலைபட்ச செயல்பாடுகள்
நடுநிலை என்பதும் அதை ஊடகங்கள் தொடர்ந்து செயல்படுவது ஜனநாயகத்திற்கு பேராபத்து ..
..
அரிசயல் தெளிவற்றவர்கள் அதிகரிப்பது கவலையளிக்கிறது .. தமிழகம் போன்ற நேர்கொண்ட அரசியல் பார்வை கொண்ட தமிழகத்தில் திட்டமிட்டே இது போன்று உளறல்களையும் அரைகுறைகளையும் உலவவிடுகிறார்களோ என்ற சந்தேகம் வருகிறது தொடர்ந்து இது போன்று திரும்ப திரும்ப பேசினால்
இது தான் அரசியல் என நம்ப வைக்கமுடியுமென எண்ணுகிறார்கள் .. ஆனால் அதற்கான இடம் இதுவல்ல என்பதும் தமிழிசை எச்.ராசா சர்மா பொன்னர் போன்றவர்களை நகைப்பிற்குரியவர்களாகவே தமிழகம் பார்க்கிறதென்பதும் தான் உண்மை..
பேராசான் பெரியாரின் பணி அப்படி ..
திராவிட இயக்கங்களின் செயல்பாடுகளும் தெளிவான அரசியலும் இதுபோன்ற அரைகுறைகளால் ஒன்றும் செய்திட முடியாது .. வேண்டுமானால் உளறி திரியலாம்
..
தமிழிசை இம்சை ..
..
ஆலஞ்சியார்
Friday, August 9, 2019
நன்றி வேலூர்
வேலூர்..
நம்மை நாமே பரிசோதனை செய்துக்கொள்ளவேண்டும் .. அலட்சியம் கவனகுறைவு வெற்றி கிடைத்துவிடுமென்ற திமிர்
உழைப்பவனை அரவணைக்க தவறுதல் இவையெல்லாம் வருங்காலங்களில் தவிர்க்கவேண்டியதை உணர்த்திய தேர்தல் இது பொது தேர்தலில்
மிகப்பெரிய வெற்றியை தந்துவிட்டார்கள் இதிலும் அது கிடைத்துவிடும் என்ற இறுமாப்பு சறுக்கலுக்கான காரணம் .. எதிரிகளின் பலம் செயல்பாட்டை கூர்ந்து கணிக்க தவறியதும் பெரும் பின்னடைவுக்கு காரணம்
..
உண்மையில் இதுபோன்ற ஒரு நிகழ்வு கட்சிக்கு தேவை உயர் பொறுப்பில் இருப்பவர்களின் அலட்சிய போக்கு தான் தோன்றித்தனம் எதிரியை எள்ளல் செய்வது தளபதி உழைப்பை சரியான திசையில் கொண்டு செல்லாதது யாரை புறக்கணிக்காமல் அரவணைத்து அழைத்து செல்லவேண்டியவர் அதீத நம்பிக்கை கொண்டிருந்தது இந்த நிலைக்கு காரணம் துரைமுருகனின் செயல்பாடுகள் அவ்வளவு திருப்திகரமாக இல்லை
தொண்டர்களை அரவணைக்கும் செல்லும் பழைய நிலையை மறந்து போனார் அலட்சியமாக எண்ணுகிற போக்கு.. தொண்டன் வந்து பொன்னாடை தந்தால் அதை உடன் சாரதியிடம் தருகிற நிலை உயரத்திற்கு வந்த பிறகு ஏற்பட்டது சென்ற தேர்தலில் வாக்குகளை விட அதிகவாக்குகளை பெற்றிருந்தாலும் ஏசிஎஸ் பெற்ற வாக்குகள் கடந்த தேர்தலில் தனித்து 3லட்சத்திற்கு மேல் வாங்கிருந்தார் அதிமுகவோடு சேரும் போது அது அதிகரிக்கும் என்ற யதார்த்ததை உணராமல் அதற்காக வழிகளை ஆராய தவறியதெல்லாம் ஆய்வு செய்திட வேண்டும் வேலூர் வாணியம்பாடி ஆம்பூர் சிறுபான்மையினரின் பேராதரவு நிலையை மெச்சபடுத்தி வெற்றிக்கு வழிவகுத்தது ..
..
தளபதி தனி கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தை உணர்த்தியிருக்கிறது வரும் காலங்களில் தேர்தலில் செயல்பாடுகளில் புதிய உக்தியை கையாளவேண்டும் வெற்றி பெறும் தொகுதிகள் இழுபறி தொகுதிகள் கைகொடுக்காதென்ற தொகுதிகள் சமமான தொகுதிகளென பிரித்து இப்போதிலிருந்தே பணியை தொடங்கிட வேண்டும் .. தொடர்ந்து காட்பாடியில் வெற்றி பெறும் துரை ஆரம்பத்திலிருந்தே தொகுதி நலனில் அக்கறையை கொண்டவராக இருந்ததைப்போல தன் முதல் வெற்றி பயணத்தை தொடர்ந்து நிலைநிறுத்த கடுமையாக உழைக்கவேண்டும் .. கழக உடன்பிறப்புகளோடு நல்லதொரு தொடர்ப்பை நட்பை தொடர்ந்தாலே நல்லது துரை மகன் என்ற தகுதி மட்டுமே கரைசேர்க்காது உழைப்பே மக்கள் சேவையே உயர்வை தருமென்ற சிந்தையோடு கடின உழைப்பை வழங்கிட வேண்டும் ..
தொடர்ந்து வெற்றியை தரும் தமிழக மக்களுக்கு நன்றி! தளபதியின் தலைமையில் நம்பிக்கை கொண்டிருக்கும் தமிழகம் .. நம்பிக்கை வீண்போகாதென்ற உறுதிமொழியை தருகிறோம்
..
நன்றி வேலூர்
..
ஆலஞ்சியார்
Wednesday, August 7, 2019
மு.க.
என்பதாண்டுகாலம்
எமை சூழ்ந்த
காரிருளை நீக்கிய சூரியனே
உழைத்து உழைத்து களைத்து போய்விட்டாயா
இனியேனும்..
தம்மை காத்துக்கொள்ள தம்பிகளே தயாராகிக்கொள்ளுங்களென சொல்லி
ஓய்வெடுக்கிறாயா..
நீச்சல் கற்று கொள்ளும் வரை தான்
கட்டுமரம்..
இனி..
எதிர்நீச்சல் போடு என
சொல்லாமல் சொல்லி போனாயா..
..
அய்யனே..
அமுதே..
அழகுகோனே..
அமிர்தமே..
அன்பே..
எமதருமை தமிழே
எமதாளுமையே..
ஆசானே
என்ன அவசரம்..
நூறை கடக்க இன்னும் சில ஆண்டுகள் தானே
அதற்குள்.. என்ன அவசரவேலை..
என் உயிரை யாராலும் பறிக்க முடியாதென்றாயே..
யாசித்து பெற்றால்தான் உண்டென்றாயே..
வாசில் நின்று அழுது யாசித்தானா..
கொடுத்துவிட்டாயா..
ஒராண்டாகிவிட்டதே
ஒருநாளும் உம்மை மறவாமல்
தமிழகம்
என்ன மாயம் செய்தாய்
தினம் தினம் அணிவகுக்கிறார்கள்
நன்றிகடன் செலுத்த..
..
தன் இறகை கொண்டே
கூடு கட்டும் பறவைப்போல
உன் நினைவுகளால்
கவிதை கட்டுகிறேன்..
பெரியாரின் பெருஞ்சீடனே..
ஆசானை மிஞ்ச கூடாதென்று
முப்பத்தி மூன்றுநாள் முன்னதாகவே
சென்றுவிட்ட மூப்பனே..
எம் இன காவலே..
தேன் மதுர சொல்லெடுத்து
எதிரியையும் மயக்கும் பேராற்றலே
ஏழைக்கும் இன்பவாழ்வளிக்க
எந்நாளும் சிந்தித்த செம்மலே..
..
எங்கள் சூரியனே..
எதிரிகளை சுட்டெரிக்கும் உன் பேச்சு..
உன் இருப்பு
எம் பகைவரை இருப்புகொள்ளாமல்
தவிக்க வைத்ததே..
இனி ..
நீ கற்று தந்ததை
நாங்கள் சுழற்றுவோம்..
பெரியாரின் சீடரே
பேரறிஞரின் தம்பியே..
எம் இனத்தின் காவலே..
நின் பணி தொடர்வோம்..
நீ..
வகுத்து தந்ததே எமது பாதை..
நீ..
மறையவில்லை
காலமாய்
எம்மோடு இருக்கிறாய்..
..
எங்கள் வானில்
நிரந்தர சூரியன்..
நீ..
அதன் ஒளி போதும்
எம்மை அண்டவரும்
கயமையை வேரறுப்போம்
உன் அடிச்சுவட்டில்
எமது பயணம் ..
அதுவே எமது பாதை
பாசிசம்
கண்டு அஞ்சும் பாதை
..
நீ..
தொடாத உச்சமில்லை.
இனி எவரும் உன் உயரத்தை
தொட போவதுமில்லை..
உன் உச்சம் இயற்கை தந்தது..
..
நன்றி!..
மு.க..
இத்தனை காலம்
காவலாய் நின்றெமை காத்தமைக்கு..
..
ஆலஞ்சியார்
#Thankyou_MK
#Thankyouகலைஞர்
Tuesday, August 6, 2019
எம் தலைவ..
கலைஞர் எனும் ஆளுமையை இரு கூறுகளாக பிரித்துபார்த்தால் அவர் ஆற்றிய தொண்டு சமூகநலன் கொண்டதாகவே இருக்கும் மற்றொன்று அவரின் அரசியல் சாணக்கியம்.. சமகாலத்தில் இந்திய துணைகண்டம் கண்டிராத அதிசயமாக அமையும், ஒவ்வொரு விடயத்திலும் பகுத்தறிவு துணைக்கொண்டு மிக சாதூர்யமான காய்நகர்த்தல் ..ஒரிரு வார்த்தைகள் ஒட்டுமொத்த கவனத்தை ஈர்த்து புதியதொரு பாதையை வகுத்து தந்துவிடும்.. காலம்கடந்தும் செயல்படுகிற தேவைபடுகிற திட்டங்களாக அமைந்திடும்..52 ல் திரைபடத்தில் மனிதனை மனிதன் இழுக்கலாமா என்று கேள்வி கேட்டு ..நீங்க சென்னை மேயரா வந்தவுடன் மாத்திடுங்க என்பார் .. ஆம் எழுபதுகளிலேயே மாற்றி சாதனை புரிந்தவர் இந்தியா நடப்பிலாக்க 30 ஆண்டுகள் ஆனது.. இதொரு எடுத்துக்காட்டுதான்..
..
தமிழக அரசியலை துல்லியமாக கணித்தவர்.. எந்தவொரு அமைப்போ கட்சியோ ஆரம்பிக்கும் போது சுருக்கமாக சிலர் வார்த்தைகளில் கருத்திடுவார்.. மதிமுகவிற்கு மறுபடியும் திமுக என்றார்.. அதிமுகவை பற்றி பேசும் போது.
நடிக்கருக்கான கட்சி சினிமா கவர்ச்சி கட்சி மேக்கப்பில் ஜொலுக்கிறது கொள்கை எனும் ஆணிவேர் இல்லை காலம் கடந்து நிற்காது கலைந்து மறைந்து போகும் என்றார் சிங்கத்திற்கு முன் "அ"சேர்த்தால் அசிங்கம் என்றார் .. அதிமுக அசிங்கபட்டு நிற்கிறது .. அவர் கடைசி வரை அண்ணா திமுக என்று அழைத்ததே இல்லை
அதிமுக என்றுதான் பேசுவார்..
..
எத்தனை நிதர்சனம் எவ்வளவு துல்லியமான கணிப்பு ஆம் எம்ஜிஆர் தனது அபிமானத்திற்காக தொடங்கபட்ட கட்சி அது கவர்ச்சியை மட்டுமே மூலதனமாக கொண்டிருந்தது எழுபதுகளில் சினிமாவின் தாக்கம் தமிழக மக்களை மையம் கொண்டிருந்த காலம்.. சினிமாவை பொழுபோக்காக காணாமல் வாழ்வியலாக நம்பிய ஜனங்கள் நடிப்பை நிஜமென்ற நம்பிய மக்கள் அரிதாரம் பூசியவன் ஆண்டவனாக நடித்தாலும் அவன் ஆண்டவனில்லை என்கிற யாதார்த்தத்தை புரிந்துக்கொள்ளாத காலமெடுத்தது.. வேசம் கலையுமென்பதை மக்கள் உணர்ந்தபோது மெல்ல கரைய தொடங்கியிருக்கிறது .. இப்போது கூட கவர்ச்சியை தேடுகிற தனிமனித மோகத்தை தலைமையேற்க கெஞ்சுகிற சூழல் வரலாம்
..
திமுகவின் கொள்கையெனும் ஆணிவேர் ..மக்களின் இதயங்களில் பதிந்ததால் தான்.. நிறைய வேறுபாடுகளிலும் திமுக தொடர்ந்து நிற்க முடிகிறது..எத்தனை விதமான எதிரிகள் அருகிலிருந்து அன்பாய் நடித்தவன் குரல்வளையில் கத்திவைக்கிற போதும் ஆணிவேர் வீழாது காத்துநின்றது..
அரசியலில் சமரசங்கள் தவிர்க்கமுடியாதென்றாலும் கொள்கையை விட்டுக்கொடுக்காமல் இயக்கம் ஒடுக்கபட்ட சமூகத்தை கை தூக்கிவிடவும் பிற்படுத்தபட்டவனின் உரிமைகளை காத்து ஆதிக்கம் செலுத்துவோரின் கோரபற்களை பிடிங்கி எறிந்தும்.. பாசிசத்தின் கோரதாண்டவத்தின் நிழல்கூட பாடாதவாறு காத்துநிற்க முடிந்தது.. தனிமனிதனை நம்பி அல்ல இயக்கம் இங்கே கொள்கை மறவர்கள் சமூகநீதியை பற்றிபிடித்துக்கொண்டு நிற்கிறார்கள் சரியான நபரை காலம் தேர்வு செய்கிறதே தவிர யாரையும் யாரும் இங்கே எடுத்தியம்ப முடியாது..
கருத்துசுதந்திரம் இங்கே பேணபடுகிறது அடிமைகளை வளர்த்துவிடவில்லை.. முரண்பட்ட கருத்தாயினும் இயக்கத்தில் பொதுவெளிகளில் விவாதங்களில் வைக்கமுடியும்.. தனிமனித விமர்சனங்கள் தவிர்த்து சுதந்திரமாக யாரும் கருத்திட முடியும்.. எதிராளிகளின் கருத்தை கூட காதோர்க்கும் கண்ணியம் இங்கே உண்டு அடக்குமுறை,திமிர்,அடிமைத்தனம், இவையெல்லாம் இங்கே காணமுடியாது..
காலங்கள் கடந்தும் திமுக வலிமையோடு இருப்பதற்கு அதிலும் தேர்தல் தோல்விகளின் போதும்.. அதே கம்பீரம் குறையாமல் நடைபோட .. சலவை செய்த கரைவேட்டியோடு வலம் வரமுடிகிறதென்றால் .. கலைஞர் சொன்னதைப்போல கொள்கையெனும் ஆணிவேர் அழியாமல் காத்துநிற்கிறது ..
..
அதிமுகவின் கவர்ச்சி கலைந்து மறைந்து போகிறது.. ஆனால் திமுக கொள்கையால் கட்டமைக்கபட்டது காலம் கடந்தும் நிலைத்துநிற்கிறது.. கலைஞர் மறைவு எங்களை கலங்க செய்யவில்லை.. இயற்கையின் நீதியை அறிவோம்.. எம்மோடு அவரின் சுவடுகள் எப்போதுமிருக்கும்.. எம் இனத்தை காக்கும்.. எதிரிகளே கனவுகாணாதீர்.. எம்மை வீழ்த்த முடியாது ஏனெனில் எமது சித்தாந்தம் இயற்கை/ பகுத்தறிவு, சமூகநலன்,இனத்தின் மானம் சார்ந்து நிற்பது .. பெரியாரும் பேரறிஞரும் பேரருளாளன் கலைஞரும் எம்மை வடிவமைத்திருக்கிறார்கள்.. எத்தனை நூற்றாண்டு பின்னிட்டாலும் எம் கொள்கை/இயக்கம் நிலைத்து நிற்கும் எம் இனத்தை காத்துநிற்கும்..
..
#வீழ்ந்துவிடமாட்டோம்..
..
முதலாம் ஆண்டு நினைவில்..
கலைஞரின்,
பயமறியாத தம்பி..
ஆலஞ்சியார்
Monday, August 5, 2019
கஷ்மீரின் அழுகுரல்
கஷ்மீர்...
பள்ளாக்கில் இனி பிண வியாபாரம் நடக்கும் ..
ஏரிக்கரைகளில் கார்ப்ரேட் வியாபாரிகள் ரிச்சர்ட்களை விலைக்குவாங்கி வியாபாரமாக்குவார்கள்.. கஷ்மீர் ஆப்பிள் மரப்பணுமாற்றுக்கு ஆளாகும் .. பண்டிட்கள் அதிகாரமிக்கவர்களாக வலம் வருவர் மறந்தும் கஷ்மீரீகள் தங்களின் பழந்கதையை பேசகூடாது ..
..
உண்மையில் கஷ்மீர் யாருக்கானது ..பெரியார் சொல்கிறார் கஷ்மீரிலிருந்து இந்தியாவும் பாகிஸ்தானும் வெளியேற வேண்டும் அவர்களே தீர்மானித்துக்கொள்ளட்டும் ..
விடுதலையின் போது பாகிஸ்தான் சொந்த கொண்டாட எண்ணி ..
ஜம்மு காஷ்மீர் இராச்சியம் தன்னாட்சியுடன் இருப்பதை தடுக்கும் நோக்கத்துடன், பாகிஸ்தான்ஆதரவுடன், வடமேற்கு எல்லைப்புற மாகாணத்தினர், ஜம்மு காஷ்மீரின் மேற்கு மாவட்டங்கள் மற்றும் வடக்குப் பகுதிகளில் தாக்குதல் நடத்தினர்.
இதனால் பயமுற்ற ஜம்மு காஷ்மீர் மன்னர் ஹரி சிங், ஜம்மு காஷ்மீரை இந்தியாவுடன் இணைக்க 26 அக்டோபர் 1947இல் இந்தியாவுடன் ஒப்பந்தம் செய்து கொண்டார் இந்த ஒப்பந்தப்படி, ஜம்மு காஷ்மீரில் ஊடுருவிய வெளிநாட்டவர்களை ஒடுக்க, இந்தியா அரசு இராணுவத்தை அனுப்பி வைத்தது.
பாகிஸ்தான் ஆதரவுப் படையினர்களால் கைப்பற்றப்பட்ட ஜம்மு காஷ்மீரின் பகுதிகள் ஆசாத் காஷ்மீர் மற்றும் ஜில்ஜிட்-பால்டிஸ்தான்என்று அழைக்கப்படுகிறது.. மீதமுள்ள பகுதிகளை உள்ளடக்கி நிலம் இந்திய கட்டுபாட்டுக்கள் வந்த போது மன்னர் இந்தியாவுடன் ஒப்பந்தம் செய்துக்கொண்டார் .. சிறப்பு பிரிவின் படி கஷ்மீரில் கஷ்மீரிகளை தவிர (பண்டிட் இஸ்லாமியர்கள்) யாரும் நிலம் வாங்க அனுமதியில்லை எந்தவொரு சட்டமும் கஷ்மீர் சட்டமன்றத்தில் ஒப்புதலுக்கு பிறகே நடப்பாக்கவேண்டும் ..தனி கொடி தனி சின்னம் ..இவையெல்லாம் உள்ளடங்கிய சிறப்பு பிரிவை தான் இன்று ரத்து செய்து பிற மாநில யூனியனை போல கஷ்மீருக்கும் பொருந்தும் ..
..
கஷ்மீரை போல நாகலாந்தில் 371A அஸ்ஸாமில் 371B மணிப்பூரில் 371C சிக்கிமில் 371F மிசோராம் 371 G பிரிவுகள் உண்டு நாகலாந்தில் மணிப்பூரில் அருணாச்சலத்தில் வெளி மாநிலத்தவர் நுழைய அனுமதி வேண்டும் இதிலெல்லாம் கைவைக்காத பாஜக அரசு கஷ்மீரை மட்டும் குறிவைப்பதின் பின்னணியில் மிக பெரிய வியாபார சக்தி இருக்கிறது மிக சிறந்த சுற்றுலாத்தளம் என்பதும் கவனத்தில் கொண்டால் பிடிகிட்டும்
..
No debate, no discussion, no dissent, and the Constitution is changed..
விவாதமின்றி மக்களிடம் கருத்துகேட்காமல் நாடாளுமன்றத்தில் விவாதிக்க கூட அனுமதிக்காமல்.. கஷ்மீர் அரசியல்வாதிகளை வீட்டுகாவலில் வைத்து விட்டு அவசரகதியில் சிறப்பு பிரிவை ரத்து செய்து சர்வாதிகார சூழலை உருவாக்கியிருக்கிறது .. கஷ்மீரிகள் தொடர்ந்து நாடாளுமன்ற தேர்தல்களில் பாஜக காங்கிரஸ் உட்பட மாநில கட்சிகள் என வாக்களித்து தங்களை இந்தியாவில் ஒரு அங்கமாகதான் நினைக்கிறார்கள் ஆனால் இந்த அரசு கார்ப்பரேட்களை உள்ளே அனுமதிக்க வேண்டி .. கஷ்மீர் நிலத்தை கூறு போடவே அன்றி இதனால் அம்மக்களுக்கு பலனில்லை ..
..
இன்று திருச்சி சிவா பேசியதை போல அரசியல் அமைப்பிற்கு எதிரானது தவறான முன்னுதாரணம்
சர்வதேச நீதிமன்றத்தை நோக்கி இந்த வழக்கு நகர்த்தபடலாம் இன்றைக்கு ஆதரிக்கிறவர்கள் உண்மையில் தங்கள் மாநில மக்களுக்கு எதிரானவர்கள் ப.சிதம்பரம் கூறியதைப்போல நாளை எல்லா மாநிலங்களுக்கு இது நடக்கும் .. அதிகபட்ச அதிகார அமைப்பான நாடாளுமன்றத்தில் அசுர பலத்தோடு இருப்பதால் எதை வேண்டுமானும் செய்யலாம் நடத்தலாம் என்ற சர்வாதிகார போக்கு வீழ்ச்சியிலேயே முடியும் .. உலகில் பலவேறு நாடுகளின் சரித்திரங்கள் நாம் காண்கிறோம் அடக்குமுறையும் தான்தோன்றிதனமும் .. திணிப்பும்
ஒற்றை கொள்கை கோட்பாடும் பிரிவினையில் தான் முடிவுற்றிருக்கிறது .. இனியும் இதுபோன்று தொடர்ந்தால் united India .. ஒருங்கிணைந்த இந்தியா சிதறுண்டு போகுமென்ற இன்றைய வைகோவின் பேச்சு மிகப்பெரிய உண்மை
..
ஏரிக்கரையின் அழுகுரல்..
..
ஆலஞ்சியார்
Sunday, August 4, 2019
பார்பனீயம்..
2016 இதே ஆகஸ்ட் மாதம்
திராவிடர் கழகம் உயர்சாதி எதிர்ப்பு இயக்கம் என குருமூர்த்தி சொன்னார் அதாவது ஜாதிகளில் உயர்ந்தோர் நாங்கள் என்பதை தான் அப்படி சொன்னார் அதுதான் இப்போது வைணவத்துறை பேராசிரியர் வெங்கட கிருஷ்ணன் வேறுவிதமாக இன்னும் கொஞ்சம் வெளிப்படையாக நாங்கள் தான் உயர்ந்தவர்கள் மற்றவர்கள் தாழ்ந்தவர்கள் என்கிறார்கள் .. சட்டபடியான நடவடிக்கை எடுக்க தகுந்த நிலையில் அரசு மூச்சுவிட காணோம் .. பார்பன பெண் கொல்லபட்டபோது வரிந்து கட்டி தாமாகவே வழக்கு பதிந்த உயர்நீதி மன்றம் அமைதிபெருங்கடலில்..
..
தங்களை உயர்ஜாதி என்று சொல்வதன் மூலம் மற்றவர்களை வேறு தட்டில் வைக்கிறார்..
இந்திய கட்டமைப்பே மதங்களை பிரித்து ஆள்வதால் அல்ல சாதிய கட்டமைப்பை ஏற்படுத்தி அதில் தாங்களே உயர்ந்தவர் எனும் பாசிசத்தில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது என்பது புரியும்..
பிற சிறுபான்மையினர்கள் குறிப்பாக இஸ்லாமியர்களுக்கு எதிரான தோற்றத்தை இந்துத்துவா அமைப்புகள் உருவாக்கினாலும் அடிப்படையில் அவர்களின் பிரதான எதிராளுமைகள் எல்லா மதங்களிலுமுள்ள பிற்பட்டுப்பட்டவர்களே என்பது இதிலிருந்து விளங்கும்.. நான் ஏற்கனவே சொன்னதைப்போல பிராமணீயம் என்பது இங்கே பிராமணீயர் அல்லாதோர் நலனுக்கெதிரானது..
..
ஐயர் சிக்கன் என்ற விளம்பரத்திற்கெதிராக இந்துமுன்னணி போராடுகிறது .. அத்தி வரதரை விமர்சித்ததாக சுகிசிவம் வீட்டை முற்றுகையிடுகிறார்கள்
ஆனால் தங்களை விட மற்றவர்கள் கீழானவர்கள் என்ற வைணவ பார்பானுக்கெதிராக மௌனம் காக்கிறார்கள் இந்த சூத்திரபயல்கள் .. எச்.ராசா இந்துக்கள் என்றால் பிராமணன் தான் மற்றவர்களை வேண்டுமானால் ஜாதி இந்து என்றழைக்கலாம் என்கிறார் .. இதற்கு பொன்னரும் தமிழிசையும் பதில் சொல்லவேண்டும் தங்களை பார்பனரை விட தாழ்ந்தவரவாக ஏற்றுக்கொள்கிறார்களா என்பதையும் விளக்கவேண்டும் ..
எங்கிருந்து வந்தது இவ்வளவு தைரியம் மத்தியில் அசுரபலத்துடன் ஆட்சிக்கு வந்ததால் மட்டுமா .. இல்லை இங்கே மறைமுகமாக பாசிச பார்பனர்களின் கைகளில் அதிகாரம் இருப்பதால் களவாடி மாட்டிக்கொண்டவனைப்போல இந்த இன துரோகிகள் எதற்கெடுத்தாலும் தலையசைத்து ஆர்எஸ்எஸ் ஊர்வலத்தையும் கூட்டங்களையும் இங்கே அனுமதித்து பார்பனன் வரம்புமீறி பேசினாலும் வழக்கு தொடுக்காமல் கைது செய்யாமல் நடுங்கி போய் கிடக்கிற அடிமைகளால் வந்தது ..
..
திராவிடத்தின் வேர் பாசிசத்திற்கெதிரானதென்பதை உணர்ந்து அதற்கெதிராக செயல்பட தொடங்கியிருக்கிறார்கள் குரு,வெங்கட் போன்றவர்களின் பேச்சு அதைதான் காட்டுகிறது..
சாதிகளுக்கெதிராக திராவிட இயக்கம்
போராடவில்லை என சிலர் பேச்சில்
உண்மையில்லாமல் இல்லை முழுமையாக கலைய முடியாதவாறு கடவுள் பெயரில் கட்டமைத்த
ஜாதீய அடுக்கை பிரித்தெறிய அவ்வளவு சீக்கிரம் முடியாது .. ஆனால் அதை மட்டம் தட்டி வைத்திருந்ததையும் பெரும் காவலாய் பெரியாரும் அண்ணாவும் கலைஞரும் இருந்தார்கள் என்கிற உண்மையை அறியமுடியும்.. திராவிட இயக்கங்களுக்கு இனிதான் நிறைய வேலைகள் இருக்கிறது .. தனித்தனியே பிரிந்து கிடந்தால் உள்ளதும் போகும் .. திராவிட "மும்மூர்த்திகள்" இல்லாதததின் எவ்வளவு பெரிய இடைஞ்சல்களை காத்திருந்த பகையால் தரமுடிகிறதென உணர்ந்தால் திமுகவை பலபடுத்த வேண்டியதின் அவசியம் புரியும் ..
..
இவர்கள் இன்னும் பல வழிகளில் வருவார்கள் இவர்களை தனிமைப்படுத்தினாலே இந்தியாவில் நிகழும் முக்கால்வாசி பிரச்சனைகள் தீர்ந்துவிடும்
இன்னும் வரும் பார்பனனின் புலம்பல்கள்..
ஒருமுறை திராவிடர் கழகத்தை
செத்த இயக்கம் என்று சொன்னார் குருமூர்த்தி இன்றளவும் பார்பனீய முகத்தை கிழித்து தொங்கவிடுவது உயிர்ப்போடு இயங்கும் திராவிடம் தான் .. திராவிடத்தை கண்டு அஞ்சுவதால் தான் இப்படி கதைக்கிறார்கள்..
அரசு அதிகாரத்திற்கு திமுக வரும் வரை இப்படி நிறைய புலம்பல்களை/சங்கடங்களை கேட்க நேரிடும்..
விரைந்து முடிவுகட்ட திராவிடத்தால் இணைவோம்
..
ஆலஞ்சியார்
Saturday, August 3, 2019
நாடு எங்கே போகிறது
நாடு மிக மோசமான பாதையில் சென்றுகொண்டிருக்கிறது .. சக மனிதனை மிக கீழ்த்தரமாக பேச முடிகிறது .. தொட்டால் தீட்டென்று தீண்டாமையை உயர்த்தி பிடிப்பது தவறென்று அறிந்தும் .. சட்டரீதியாக தண்டிக்க கூடிய செயல் என்று தெரிந்தும் வெளிப்படையாக பொதுவெளியில் மேடை போட்டு பேசிவிட்டு போகமுடிகிறது .. உயர்ந்த ஜாதி நாங்களென மத்த மனுஷாள் எல்லாம் கீழானவர் ..மிருங்களிடம் உயர்ந்த ஜாதி இல்லையா .. கலப்பென்பது அசிங்கமென கதைத்துவிட்டு தைரியமாக சுதந்திரமாக நடமாட முடிகிறது வழக்கு பதிவு செய்ய கூட அரசு தயங்குகிற கேவலமான நிலை .. அத்திரவரதரை தரிசப்பவரை தொட்டு பிரசாதம் கொடுக்காதீரென நம்மிடம் பிச்சையெடுப்பவர் கூறுகிறார் .. இந்த அவலநிலைக்கு தெரிந்தே நாமும் காரணம் ஆகிவிட்டோம்,..
..
இந்த ஆட்சியை விட்டுவைப்பது கூட பாவ செயல் மன்னிக்க முடியாதது தான் ஒரு கணம் நேர்மை நீதி வழியென்று பேசிக்கொண்டிராமல் அரசை வீழ்த்த வேண்டிய பெருங்கடமை நமக்கிருக்கிறது .. ஒவ்வொன்றாய் இழந்து வரும் சூழலில் கடைசியில் மனிதரையே தரம்தாழ்த்தி பேசும் சூழ்நிலை உருவாகி வருவது ஆபத்தானது எந்த சமூகநீதிக்காக நம் பாட்டனும் அப்பனும் போராடினானோ அந்த நிலைக்கு நம்மை தள்ளிவிட அதிமுக அரசு முயல்கிறது இனியும் பொறுப்பதென்பது அரசியல் மடமை ..
..
வடநாட்டில் இதைவிட மோசமான சூழல் உருவாகி
நாடு எதை நோக்கி போகிறதென்று நடுநிலையாளர்கள் கவலைக் கொள்கிறார்கள்..
ஜெமட்டோ விவகாரம் சூடுபிடித்த நிலையில் இந்நிலையில், இது தொடர்பான விவாதம் நியூஸ் 24 தொலைக்காட்சியில் நடைபெற்றுள்ளது. அந்த விவாத நிகழ்ச்சியில் கலந்துகொள்ள 'ஹம் ஹிந்து' என்ற அமைப்பின் நிறுவனர் அஜய் கௌதமும் அழைக்கப்பட்டுள்ளார். நிகழ்ச்சியின் நடுவில், 'கலித்' என்ற இஸ்லாமியத் தொகுப்பாளர் தோன்றி, குறிப்பிட்ட பகுதியைத் தொகுத்து வழங்கியுள்ளார். அப்போது அஜய் கௌதம், இஸ்லாமியத் தொகுப்பாளரைத் தான் பார்க்க மாட்டேன் எனக் கூறி, இரு கண்களையும் கைகளால் மூடிக்கொண்டார்.. இந்த செயல் அதிர்ச்சியை அளித்திருக்கிறது இஸ்லாமியன் கையில் உணவருந்த மாட்டேன் என்ற செயலை விட கொடூரமான மனபான்மை இது ..
அஜய் கௌதம் செயலுக்கு பதில் அளித்துள்ள "நியூஸ் 24" தொலைக்காட்சியின் செய்தி அறையில், அஜய் கௌதம் கண்டிக்கத்தக்க வகையில் நடந்துகொண்டதைப் பார்த்து நாங்கள் அதிர்ச்சியடைந்தோம். பத்திரிகை நெறிமுறையின்படி இத்தகைய செயலை அனுமதித்து ஆதரவளித்து மேடை அளிக்க முடியாது. அஜய் கௌதமை இனிமேல் அழைப்பதில்லை என நியூஸ் 24 முடிவு செய்துள்ளது" ..
..
நாம் செய்த தவறு .. குறிப்பாக எதிர்க்கட்சிகளிடையே ஒற்றுமையின்மை .. பதவி ஆசை எப்படியும் ஒருநாளாவது பிரதமர் பதவியில் அமர்ந்துவிட முடியாதா என்ற நப்பாசை இன்று இந்த நிலைக்கு காரணம்.. தான்தோன்றித்தனமாக எடுத்தேன் கவிழ்த்தேனென சர்வாதிகாரமாக செயல்படுகிற அரசு ..ஒருவித பதட்டத்தோடு நாட்டை வைத்திருக்கிறது .. காஷ்மீரில் என்ன நடக்கிறதென்று தெரியவில்லை படைகள் குவிக்கபட்டு அபாயகரமான சூழல் நிலவுகிறது காங்கிரஸ் எச்சரிக்கையை அரசு காதில் போட்டுக்கொள்ளவில்லை .. நம் அரசியல் தலைவர்களின் பேராசைகள் ஒற்றுமையையின்மை
யார் வரகூடாதென்ற தெளிவின்மை நாட்டை சுடுகாடாக மாற்றிக்கொண்டிருக்கிறது ..
..
சமூகநீதி பேசி வந்த தமிழகத்திலும் மெல்ல ஊடுறுவும் பாசிசம் தன் கையில் முறுக்க தொடங்கியிருக்கிறது பினாமி ஆட்சியாளர்களை வைத்துக்கொண்டு எதை செய்தாலும்/பேசினாலும் சட்டத்தால் எதுவும் செய்திட முடியாது அதற்கான துணிவு அடிமை அரசிடமில்லை என்று எண்ணி துணிந்து செயல்படுகின்றனர் .. இதற்கு விரைந்து முடிவுகட்டவேண்டிய கட்டாயம் பொறுப்பு திமுகவிற்கு இருக்கிறது .. தவறவிட்டால் காலம் மன்னிக்காது .. இந்த நேரத்தில் கலைஞர் எனும் ஒற்றை மனிதனை எண்ணி வியக்கிறேன் .. தனியொருவனாய் படை நடத்தி பாசிசத்தை நெருங்கவிடமால் செய்ய பேராளுமையை எண்ணும் போது விழிகளில் நீர் கோர்க்கிறது .. #பெருந்தலைவ..
..
#பெருங்காவலன்_கலைஞர்..
..
ஆலஞ்சியார்
Subscribe to:
Posts (Atom)