Monday, March 30, 2026

திருமாவளவன்..
வேட்பாளர் அறிவிப்பின் ஊடாக ஒரு செய்தியைச் சொல்கிறார்  இனி வரும் காலங்களில் வேட்பாளர் தேர்வை நான் செய்ய போவதில்லை அந்தந்த மாவட்ட பிரதிநிதிகளே தேர்வு செய்யும் முறையை நடைமுறைப்படுத்த போவது சொல்கிறார்.. அதிக இடம் கிடைக்கவில்லை கிடைத்த இடத்திற்கு யாரை நிறுத்துவது என்பதில் ஏற்பட்ட மனகசப்பை அவரது மொழியில் புரிந்துக்கொள்ள முடிகிறது..
..
சிலநேரங்களில் சிலருக்கு தொடர்ந்து வாய்ப்பை வழங்கவேண்டியிருக்கும் சிலரை மாற்றி வேரொருவருக்கு அந்த வாய்ப்பை நல்க வேண்டியிருக்கும் இத்தனை காலம் நான்தானே இருந்தேன் என்னை ஏன் மாற்றவேண்டும் என்று கேட்போர் எல்லா கட்சிகளிலும் காணமுடிகிறது.. தலைமை எடுக்கும் முடிவை ஏற்பதுதான் நீங்கள் ஏற்ற கொள்கைக்கும் கட்சிக்கும் தலைமைக்கும் கட்டப்படுவதாக அமையும் ..
..
திருமா மிக உடைந்துப் போய் இருப்பது தெரிகிறது.. மாநில அரசியலுக்கு அவர் வருவது கூட கட்டமைப்பின் பிடி நழுவுகிறதோ என்ற அச்சத்தின் வெளிப்பாடாக கணக்கில் கொள்ள வேண்டியிருக்கிறது.. உள்கட்சி சனநாயகம் என்பது கருத்தை செவிமடுத்தல் உள்வாங்கல் அவர்களின் பங்களிப்பை மதித்தல்,
முடிவெடுக்கும் முன்பு கலந்தாலோசித்தல் ஆனால் முடிவை எடுக்கும் அதிகாரமும் எது வருங்காலத்தில் கட்சிக்கு நலம் பயக்கும் என அறிந்து செயல்படுதலும் தலைமைக்கு மிக அவசியம்.. சில நேரங்களில் கடுமையும் தேவை.. 
..
திமுக எழுபதாண்டுகளாக சனநாயகத்தின் அடிநாளம் கெட்டுவிடாமல் காத்துநிற்கிறது.. தேர்தல் தோல்வி தொகுதி பங்கீட்டில் பிடிவாதம் நம்பிக்கை துரோகம் குழிபறிப்பு திரைமறைவு வேலைகள் சிரித்தே கெடுக்கும் குணங்கொண்டவர்கள் என எல்லாவற்றையும் கடந்து இன்றும் மக்களிடையே பேசும் பொருளாய் திகழ்கிறது.  திமுகவை மறுத்தே சேர்த்தோ தான் அரசியல் செய்ய இயலும் என்ற நிலையே உருவாக்கி இருக்கிறது..புதிதாக அரசியல் தொடங்குவோர்  ஏற்கனவே அரசியல் செய்வோர்  அரசியல் பழகுவோர் யாராயினும் திமுகவை தவிர்த்து அரசியல் செய்ய இயலாது.. 
..
திமுகவில் எல்லாகட்டங்களிலும் வேட்பாளர் தேர்வில் அதிருப்தியும் பிணக்குகளும் ஏற்பட்டிருக்கிறது ஆனால் எது சரியானதாக இருககும் என தலைமை முடிவெடுக்கும் அதில் உறுதியாக நிற்கும்..  இப்போது கூட தாம்பரத்தில் சலசலப்பு கேட்டது அது உரிமையோடு கேட்டும் விளங்கங்களை பெற்றும் கழகப்பணி செய்ய புறப்பட்டனர் நிர்வாகிகள்.. மன புழுங்கங்கள் மறையும் கழகம் வெல்ல வேண்டும் என்ற ஒற்றை எண்ணமே மேலோங்கும்.  
..
திருமா சொல்லும் மற்றொரு செய்தி தேர்தலுக்கு பிறகான நிலை சூழல் மாறபோகிறது என்பதை புரிந்துக் கொள்ள முடிகிறது.. 
கயிற்றை பலமாக பற்றிக் கொள்ளாவிட்டால் பாமகவிற்கு நேர்ந்த நிலை வரும் என கணிக்கிறாரென எண்ணுகிறேன்..
இரட்டை இலக்க தொகுதி கிடைக்காமல் போனதிலிருந்து அவரின் உடல்மொழி தரும் சேதி எப்படி இதைக் கொண்டு சமாளிப்பது என்பதாக இருந்தது..
மூன்று சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது குறிப்பிடும் போது இருவரை தம்பி என்று ஒருவரை நம்மவர் என்று சொல்கிறார்.. அப்படி சொல்பவரல்ல, பதற்றம் இயலாமை தெரிந்தது..
ஆளூராருக்கு ஏன் கிடைக்கவில்லை என்ற கேள்விகள் சமூகங்களில் பிரதிபலிப்பதும் கட்சிக்குள்ளேயே சிலருக்கு வாய்ப்பு வழங்கமுடியவில்லை என்ற ஆதங்கமும் தெரிகிறது.  
வி.ச.க  போன்ற கட்டமைப்பு பலமாக உள்ள கட்சியில் தலைமைத்துவம் கனிவாகவும் சிலநேரம் கடுமையாகவும் இருக்கவேண்டும்.. இல்லயெனில்
 அது மிகப்பெரிய கேள்விக்குறியாகிவிடும்..
..
திமுக போன்ற மிகப்பெரிய 
வலுவான சனநாயக கட்டமைப்பை  கொண்ட கட்சியில் கூட இதுபோன்று நடந்திருக்கிறது ஆனால் தலைமை கனிவோடு கண்டிப்பும் காட்டி கண்ணியத்தை பேணியிருக்கிறது.. விசிக போன்ற கட்சி ஒடுக்கபட்டவர்களுக்காக மட்டுமல்லாது பொது சமூகத்திற்கும் சனாதனத்தை வேரறுக்கவும் இன்றைய நிலையில் தேவை.. மிகவும் பக்குவப்பட்ட தலைமை சிலநேரங்களில் தளர்வு நேரிடும் அதை காலம் தந்த பரிட்சையாக நினைத்து கடந்துச் செல்லவேண்டும்.. சாதிய நிலைபாட்டை மீறி பொதுவெளியில் பரவலாக நேசிக்கபடுகிற தலைவர்களில் ஒருவராக திருமா திகழ்கிறார்..
..
ஆலஞ்சியார்


Wednesday, February 11, 2026

காங்கிரஸ்..
கழுதை தேய்ந்த கதையாக..
ஆட்சி அதிகாரத்தில் பங்கு என கேட்க தொடங்கியிருக்கிறார்கள்.. நன்று.. 
முதலில் தன் பலம் அறிதல் நன்று!.. 
..
முன்பெல்லாம் சிற்றூர்களில் நிலக்கிழார்களும் செல்வந்தர்களும் காங்கிரஸ் பேரியக்கத்தில் இருந்ததும் அவர்கள் பண்ணையாட்களோடு அதிகார தொனியில் நடந்துக்கொண்டு காங்கிரஸை நடத்தி வந்தார்கள்.. தேர்தல் காலக்கட்டத்தில் மொத்தமாக விலைபேசி வாக்குகளை வாங்கி வென்றவர்கள் திராவிட இயக்கம் வளர தொடங்கிய போது மெல்ல மறைய தொடங்கினார்கள்..
..
1967 க்கு பிறகான அவர்களது அரசியல் திராவிடக்கட்சியான திமுக மற்றும் அதிமுக என சார்ந்தே நின்று வென்றவர்கள் நாளடைவில் கரைந்து சிலர் பாசிசத்தின் பிடியிலும் சிலர் வேண்டாவெறுப்போடு அரசியல் செய்கிறார்கள்.. இன்று காங்கிரஸ் யாராவது கைதாங்கலாக பிடித்தால்தான் நடக்கவே முடியும் என்கிற நிலை.. காங்கிரஸ் சீரழிவு என்பது இயல்பாக நடப்பதைப்போல தோன்றினாலும் அதன் பின்னால் ஆர்எஸ்எஸின் வலை பின்னப்பட்டிருக்கும் அது மிக சிரத்தையோடு மெல்ல விழுங்க செய்யும்.. 
..
மாண்பமை மன்மோகன்சிங் பிரதமராகாமல் ஆர்எஸ்எஸ் பிரணாப் முகர்ஜி பிரதமராகிருந்தால் அமைதியாக இருந்திருப்பார்கள் .. ஆர்எஸ்எஸ் சித்தாந்தவாதிகளை  தவிர்த்த காங்கிரஸை இனியும் விட்டுவைப்பதில் பலனில்லை என அறிந்து காய்ந்த நகர்த்துகிறார்கள்.. இப்போதும் காங்கிரஸ் உள்ளே ஆர்எஸ்எஸின் "கைகள்" இருப்பது காங்கிரஸ் மேலிடம் அறியாமலா இருக்கும்..
.. 
தமிழ்நாட்டில் ஊருக்கு 10 வாக்குகள் கூட இல்லாத வெற்றுச்சுமையை தோளில் சுமக்க வேண்டுமா என்ன.. தமிழ்நாட்டிலும் கேரளாவிலும் கொஞ்சம் உயிர்ப்போடு இருக்கும் காங்கிரஸை சாகடிக்க வெளியிலிருந்து யாரும் தேவையில்லை அவர்களே அவர்களுக்கு ஆர்எஸ்எஸ் இட்ட கட்டளையை செவ்வனே செய்து "காரியம்" நடத்திடுவார்கள்  அதைதான் சிலர் ஆட்சியில் பங்கு என பழைய பல்லவியை புதிய சுரத்தில் பாடுகிறார்கள்.  
..
சிறிய கட்சிகள் கூட தங்கள் பலத்தை நிரூபிக்க தனியாக மாநாட்டை நடத்தி வலிமையை காட்டுகிறார்கள்.. எத்தனை விழுக்காடு கிடைக்குமென அறிந்து அதற்கேற்ப பங்கீட்டை கேட்கிறார்கள் ஆனால் கூட்டம் நடத்தவே வக்கில்லாமல் பழைய நினைப்போடு வலம் வருவது "ஏட்டுச் சுரைக்காய்" தான்..
.. 
கடந்த தேர்தலில் இரட்டை இலக்கில் தொகுதி ஒதுக்கியதே காங்கிரஸ் "பேரியக்கம்" என்பதால் தானே தவிர பலமான கட்சி என்பதால் அல்ல அதை காங்கிரஸ்காரர்கள் புரிந்துக்கொள்வார்கள்.. ஆனால் ஆர்எஸ்எஸ் அடிவருடிகள் கூட்டணியை கலைக்க வாய்ப்பிருக்கிறதா என்றுதான் பார்ப்பார்கள்.. அதை தெளிவாக அறிந்ததால்தான் தலைவர் ஸ்டாலின் 
M. K. Stalin  ஆட்சியில் பங்கு இல்லை என தெளிவாக பிரகடனம் செய்துவிட்டார்.. 
ஊளையிடுவோர் சத்தம் குறையலாம்.   காஙகிரஸ் கடந்த தேர்தலைவிட குறைவான எண்ணிக்கையில் தொகுதிகளை ஒதுக்க வேண்டும்..
 வெற்றுச்சுமையை ஏன் சுமக்க வேண்டும்.. 
..
காங்கிரஸ் வெளியேறுவதால் காங்கிரஸிற்கு இழப்பே தவிர திமுகவிற்கல்ல .  
பிற மாநிலங்களைப்போல தமிழ்நாட்டிலும் காணாமல் போகும். 
நல்லதே நடக்கும்..
..
ஆலஞ்சியார்
அதிமுக வரலாறே அப்படிதான்.. ஆர்எஸ்எஸ் திராவிடச் சித்தாந்தத்தின் எழுச்சியைக் கண்டு பதறி எப்படியேனும் அதை முடக்கிய வேண்டுமென திட்டம் தீட்டி மகோரா (எம்ஜிஆர்) எனும் கைப்பாவையை களமிறக்கியது.. திமுக மீது ஊழல் குற்றசாட்டை ஊடகங்களும் இந்திய வரலாற்றிலேயே முதன் முறைப்போல எழுதி தீர்த்தன..முதல் ஊழல்வாதி டி.டி.கிருஷ்ணமாச்சாரி எனும் பார்ப்பனர் என்பதை எல்லாம் மறந்து பேசின.. ஆனால் கடைசிவரை திமுக மீதான குற்றசாட்டுகள் நிரூபணம் செய்ய முடியாமல் போனது.. ஆனால் திமுகவை தோற்கடிக்க பெரும் பயன்பட்டதென்பது உண்மை..
நியாயவான் சுத்தம் என்றெல்லாம்
காமராஜர் மீது எங்களுக்கு இருக்கும் மதிப்பும் மரியாதையும் கொஞ்சம் கூட குறையவில்லை.. எதிர்கட்சியாக இருந்த போது எங்கள் கடமையை சரியாக செய்தோம் அரசியலைத் தாண்டி அந்த மனிதர் மீதான பார்வை கண்ணியம் மிக்கதாக இருந்தது.. ஆனால் காமராஜர் காங்கிரஸிருந்து விலகிச் சென்ற பின் அவரை மிக கரிசனத்தோடு திமுக தலைவர்கள் காத்தார்கள் என்பதுதான் உண்மை..
..
இன்றைய காங்கிரஸ்காரர்களுக்கு (இப்போதெல்லாம் காங்கிரஸ்காரர் இருக்கிறார்களா என கேட்க வேண்டாம்) காமராஜை கூட சரியாக படிக்காமல் அல்லது புரியாமல் வந்திருக்கிறார்கள்..
ராஜாஜி குலக்கல்வித் திட்டத்தை செயல்படுத்த முனைந்த போது இனியும் அவரை விட்டு வைத்தால் தமிழ்நாட்டை காப்பாற்ற முடியாதென தீர்மானித்த பெரியார் குடியாத்தத்தில் நிறுத்தி வெற்றி பெற செய்தார் தி.க விலிருந்து பிரிந்து தி.மு.க  துவங்கிய காலமது ஆனால் அண்ணா குணாளா,குலக்கொழுந்தே சென்று வா குடியாத்தம் வென்று வா கோட்டைக்கு என்றார்.. இன்றைக்கு சாதிக்குள் அடைக்க நினைக்கும் நாடார்களுக்கு தெரியுமா.. பெரியார் குடியாத்தத்தில் நிற்க சொன்ன போது காமராஜர் அங்கே முதலியார்களும் முஸ்லிமானகளும் தானே அதிகம் என்னைப்போல மிகவும் பிற்படுத்தப்பட்பவனை தேர்வு செய்வார்களா என்றார் எப்படி ஜெயிக்க வேண்டுமென எனக்கு தெரியும் என்றவர் பெரியார்..
..
இஸ்லாமியர்களின் வாக்கு வங்கி..
..
தொடர்ந்து தமிழ்நாட்டில் விவாதிக்கப்படும் விடயமாக இருக்கிறது.. உண்மையில் இஸ்லாமியர்கள் ஒட்டுமொத்தமாக திமுகவிற்கு வாக்களிக்கிறார்களா என்றால் பதில் பரிகாசமாக வரும்.. 
அவர்களின் "தலைமை" போதை என்னைச் சுற்றியே இயங்க வேண்டும் என்ற பேராசை தனித்"தவில்" ஆக ஓசை கேட்க வேண்டுமென்ற பேராவல் ஒற்றுமையை சிதைத்து தனி ஆவர்த்தனம் செய்கிறார்கள் ஆனால் முஸ்லிம்களின் ஒற்றுமையின்மைக்கு திமுகதான் காரணம் என்று ஒப்பாரி வைப்பார்கள்.. தங்களுக்குள் அதிகாரம் வேண்டுமென்ற எண்ணம், தானே "ராஜாவாக" வலம் வரவேண்டும் ஒட்டுமொத்த இஸ்லாமியர்களின் பிரதிநிதியாக தானே அடையாளப்படுத்தப்பட வேண்டுமென்ற பேராசை இந்த சமூகத்தின் சாபக்கேடு..
..
IUML கொஞ்சம் கொஞ்சமாக கரைய தொடங்கியது ஏன் என யாருமே யோசிப்பதில்லை.. ஏன் எல்லோரும் ஒரு குடையின் கீழ் நிற்க வேண்டுமென எண்ணுவதில்லை.. யார் தலைமை ஏற்பது என்பதில் தான் தலையாய பிரச்சனை இருக்கிறது.. இன்றைய முஸ்லிம்கள் புதிதாக யார் கட்சி தொடங்கினாலும் தொப்பியோடு போய் முன் வரிசையில் நின்ற கூவுகிற நிலை  எப்படி வந்தது..  ஆளுக்கொரு அமைப்பை ஏற்படுத்தி அந்த வட்டத்தில் ஆதிக்கம் செலுத்துவதால் என்ன பயன்..  யாருக்கும் இதனால் எந்த பயனுமில்லை/பலனுமில்லை என்பதை உணராத சமுதாய தலைவர்கள்.. கொடுமை
..
காலங்காலமாக திமுகவிற்குதான் வாக்களித்தோம் என்பதெல்லாம் பழங்கதை.. இப்போதெல்லாம் பல்வேறு பிரிவுகளில் பல்வேறு குழுக்களில் பயணிக்கிறார்கள் .. நாளைக்கு ஒரு அமைப்போ கட்சியோ தொடங்கினால் முதல் துண்டு இஸ்லாமியனுதாக இருக்கும்.. இதில் குறைகூற இவர்களுக்கு "திராவிடம்" இருக்கிறது.. மாண்பமை A.K.A .அப்துல் சமது காலத்திலிருந்தே காண்பதுதான் பன்மொழிப்புலவர் அப்துல் லத்தீப் சாஹிப் பிரிந்த போது திமுகதான் காரணம் என்று சொன்னவர்கள் அதற்கு முன்பே அப்துல் ஜப்பார் பிரிந்து எம்ஜிஆரோடு சென்றதை கணக்கில் கொள்ளவில்லை.. முஸ்லிம் லீக்கும் அதிமுக திமுக என்று மாறி மாறி சவாரி செய்தது..
..
இப்போதும் ஒன்றும் குறைந்துவிடவில்லை அனைத்து இஸ்லாமிய கட்சிகள்/அமைப்புகள் ஒருங்கிணைத்து ஒரு கட்சியாக செயல்பட முடியாவிட்டாலும் இணைந்து  தனித்து களம் கண்டு எத்தனை விழுக்காடு வாக்கு என்பதை உறுதி செய்தால் வரும் காலங்களில் உங்களுக்கான அதிகாரம் கைக்கூடும்.. இல்லையெனில் ஒரு தொகுதி இரண்டு தொகுதிகளுக்குள் முடங்கி போகும் சமுதாயமாக பரிதாபகரமான நிலைதான் வரும் காலங்களில் கிடைக்கும்.. 
ஒற்றுமை எனும் கயிற்றை 'பற்றி' பலமாக பிடித்துக் கொள்ளுங்கள் என்பதெல்லாம் "கிதாப்" களில் மட்டுமே காணலாம்..
..
இளைஞர்களில் வழி கெடுத்ததில் இன்றைய தலைவர்களுக்கும் கணிசமாக பங்குண்டு.. உணர்ச்சி மேலிட பேசி கோப தணலில் நிறுத்தியது தவிர வேறொன்றும் பெரிதாக இல்லை.. ஆளுக்கொரு கொடியோடு போராட்டம், அரசிற்கெதிராக நிறுத்தல் இவை தவிர வேறென்ன கண்டீர்.. பொது சமூகத்தோடு கரம் சேரத்து கரை சேர்வது இன்றைய காலக்கட்டதில் அவசியம்.. யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதல்ல .. நாம் யாரை தீர்மானிக்கிறோம் யாரை முன்னிறுத்துகிறோம் நமது பங்களிப்பில்லாமல் எதுவுமில்லை எதுவும் நடக்காது என்ற நிலை எப்போது உருவாக்க போகிறீர்கள்..
..
சிலர் இப்போதும் திமுக வஞ்சித்துவிட்டது என்ற குரலில் மெல்லிதாய் முணுமுணுக்கலாம் .. ஏன் அதிகார பகிர்வு தரவில்லை என கேள்வி கேட்கலாம் .. எந்த அரசியல் கட்சியும் எத்தனை விழுக்காடு என கணக்கு பார்க்கும் என்பதை எப்போது உணர போகிறீர்.. "நெஞ்சில் இடமிருக்கு" என்பதில் கோபம் கொள்ள என்ன இருக்கிறது.. உங்கள் பலத்தை நீங்கள் நிரூபிக்காத வரை எதுவும் நடந்துவிட போவதில்லை..
..
இந்தியா முழுக்க இதுதான் நிலை.. கேரளத்தில் மெச்சதக்க  வகையில் இஸ்லாமிய இயக்கத்தின் செயல்பாடு இருக்கிறது.. மற்றபடி இந்திய ஒன்றியம் முழுவதும் காங்கிரஸைப் போல தேய்ந்துக்கொண்டிருக்கிறது.. இந்திய அரசியலையே தீர்மானிக்கும் சக்தியாக விளங்கிய IUML இன்றைய நிலைமை...?
கும்பகோணத்தில் நடந்த அனைத்து முஹல்லா மாநாடு எத்தனை ஜமாத் புறக்கணித்தது.. ஏன் உங்களால் பெரும்படையை திரட்ட முடியவில்லை.. தவ்ஹீத் ஜமாத், தமுமுக,  ம.ஜ.க ஏன் வரவில்லை.. முதலமைச்சரை அழைத்து கூட்டம் நடத்தினால் போதுமா.. அரங்கில் திமுகவினர் தானே அதிகம்..  ஏன் அனைவரையும் அழைத்து அரவணைத்து முன்னெடுத்திருந்தால் வழி திறந்திருக்குமே.. செய்ய மாட்டீர்கள்.. உங்களுக்குள் பிரிவினை என்பது ஊறிப்போன விடயம்.. காலங்காலமாய் புரையோடிப் போய் சீழ் பிடித்த மனம் .. என்ன செய்துவிட்டீர்  இட ஒதுக்கீட்டை உயர்த்தி கேட்டீரா என கேட்கிறீர்.. ஏற்கனவே பலமுறை சொன்னதுதான்.. ஆந்திர முஸ்லிம் இட ஒதுக்கீட்டை ரத்து செய்த உச்சநீதிமன்றம் பிற்படுத்தப்பட்ட ஆணையத்தின் பரிந்துரை இல்லாமல் உள் ஒதுக்கீடு வழங்கியது செல்லாது என்றதை கணக்கில் கொண்டுதான் கலைஞர் பிற்படுத்தப்பட்ட ஆணையத்தின் பரிந்துரையோடு சிறுபான்மையினருக்கு (கிருஸ்துவம்,இஸ்லாம்,ஜெயின்)
வழங்கினார் ..  அதாவது 8% விழுக்காடு வழங்கலாம் என்ற பரிந்துரையில் கிருஸ்துவர்கள் 3.5% முஸ்லிம்களுக்கு 3.5% ஜெயின் சமூகத்திற்கு 0.5% என தந்தார்.. 
ஆனால் கிருஸ்துவர்கள் நாங்கள் பிற்படுத்தப்பட்ட மற்றும் பொது பிரிவில் இதைவிட அதிகமாக பெறுகிறோம் எனச் சொல்லி வேண்டாம் என்றனர்.. ஆனால் அதை நாம் கேட்க முடியாது.. மீறி தந்தால் உள்ளதும் போகும்..  பாமக உள்ஒதுக்கீட்டு நிலை அறிந்தது தான் தீடீரென அறிவித்துவிட்டு தேர்தல் முடிந்தவுடன் உச்சநீதிமன்றம் ரத்து செய்ததே அதைப்போல நடக்கும்..
..
முதலில் உங்கள் பலத்தை நீங்கள் நிரூபியுங்கள்.. வானத்தை தொட ஆசை தான்.. ஆனால் "ஏணி"கூட நம்மிடமில்லை.. இரவலில் நாம், ஊர்ந்து செல்லும் நிலை .. நம் பலம் நாமே அறியாமல் இருக்கிறோம் என்ற புரிதல் கூட இல்லை.. எத்தனை அமைப்புகள் (48).. ஆனால் அவரவர் தன்சுயத்திற்காக சமுதாயத்தை கூறு போடுகிறார்கள் .. "ஒற்றுமை" சமுதாய தலைவர்களுக்கு ஒவ்வாமை.. ஆனால் இதற்கும் திமுக தான் காரணம் என்பார்கள்
..
சாதாரண வீடுகளின் கதவை தட்டாதீர்கள்.. உங்கள் கைகள் சொர்க்கத்தின் கதவை தட்டும் அளவிற்கு நீளமானது ..என்ற "#மௌலானா_ரூமியின்" வரிகள் ஞாபகம் வருகிறது.. நீங்கள் ஒற்றுமையோடு ஒருங்கிணைந்து ஒரு குடையில் நின்றால் உங்கள் எண்ணம் நிறைவேறும்.. நீங்கள் சுயத்திற்காக பலமறியாது நிற்கிறீர்கள்.. "சாதாரண கதவுகளை" தட்டிக் கொண்டே காலம் கடத்திக் கொண்டிருக்கிறீர்.
ஒருங்கிணைந்தால் உங்கள் கைகள் நீளமானவை.. 
..
குருதியைக் கொண்டு காயத்தை கழுவாதீர்கள் (ரூமி)..
..
ஆலஞ்சியார்


Saturday, September 27, 2025

கல்வியில் சிறந்த தமிழ்நாடு..
ஒரு தலைவன் ஆட்சியாளன் எப்படி இருக்க வேண்டும் எப்படி செயல்படவேண்டும் என்று உலகிற்கே படமெடுக்கும் தகுதியை கொண்டிருக்கிறார்.. எம் முதலமைச்சர்..
..
கல்வியை எப்படி நம்மிடமிருந்து பிரிக்கலாம் என்று ஒன்றிய பாசிச அரசு திட்டங்கள் சட்டங்கள் என கூர்தீட்டிய வாளைக் கொண்டு அறுக்க பாரக்கிறதோ.. அதே வாளைக் கொண்டு கூர் தீட்டி வரைய கற்றுக்கொள் நானிருக்கிறேன்.. இந்த அரசு இருக்கிறது  எத்தனை தடைகள் வந்தாலும் உழைப்பும் வா..படி..படி.. படிப்பது மட்டுமே உன் வேலை மற்றதை நான் பார்த்துக்கொள்கிறேன் என தாயுமானவனாய் தமிழ் நாட்டு முதலமைச்சர் நின்று வென்று காட்டியிருக்கிறார்..
..
ஆயிரம் ரூபாய் என்ன செய்யும் என்றவனும் பிச்சை காசு ஆயிரம் ரூபாய் யாரு கேட்டா என்றவனும் நேற்றைய தினம் அவனையும் அறியாமல் அவன் கண்களில் நீர்கோர்த்திருக்கும்..  காது கேட்காத தன் தாய் தன் மகள் மேடையேறி பேசியதை கேட்டு கண்களில் நீர் வழிந்ததே அதுவே  இந்த அரசின் நன்னெறி செயல்பாட்டிற்கு பாராட்டு பத்திரம்..
..
காலை உணவுத் திட்டம் பசியால் பள்ளிக்கு வருகிற குழந்தையின் சக்தயை நினைவாற்றலை உற்சாகத்தை அதிகரிக்க செய்கிறது என்ற மருத்துவர்கள் சான்றிதழ் தருகிறார்கள்.. என் வீட்டல் சாப்பாடு இல்லையா என ஏளனமாய் பேசிய சீமான்களும் பெண்களுக்கு எதற்கு ஆயிரம் ரூபாய் என பேசிய சௌமிகளும் இந்த நிகழ்ச்சியைக் கண்டு உள்ளுக்குள் வருந்துவார்கள்.. 
..
கல்வி அது ஒன்றுதான் நம்மை கரை சேர்க்கும் என்று கிழவன் சொன்னார், ஆசைப்பட்டான்.. எப்பாடுபட்டாவது படி என்றான்.. அந்த திராவிட கருத்தியலை முன்னெடுத்து அண்ணா,கலைஞர் என தொடங்கி தொடர்ந்து ஐம்பதாண்டுகளாக கல்விக்கு முக்கியத்துவம் தந்து சிறந்து விளங்கியது கண்டு ஆத்திரம் கொண்ட "மூத்திரகுடிகள்" புதிய கல்விக் கொள்கை என்ற பெயரில் பல்வேறு தடைகள் நமக்கு வரவேண்டிய நிதியை கூட நிறுத்தி வைத்த கொடுமை  அதையெல்லாம் நான் முதல்வன் புதுமைப்பெண்  என திட்டங்கள் மூலம் தகர்த்தெறிந்து எங்கள் குழந்தைகளின் கல்விக்கு தடையாக எது இருந்தாலும் அரசோ,அதிகாரமோ, பணமோ பயிற்சியோ எது இருந்தாலும் அதை எதிர்கொண்டு நல்ல சூழலை உருவாக்கி பயிற்சி வாய்ப்பு செலவு எல்லாவற்றையும் தந்து கல்வியில் சிறந்த தமிழ்நாடு என புரிய வைத்த தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றி!
"அம்மையப்பன்"
..
மேலே ஏறி வாறம்
..
ஆலஞ்சியார்

Thursday, February 6, 2025

சீமான் ..
ஆரம்பம் தொட்டே நாங்கள் சொல்லிக் கொண்டிருப்பதுதான்..
பொய்யன் .. விடுதலைப்புலித்தலைவனை கண்ட நொடி முதல் இவனின் செயல்களை கண்டும் கணாதிருந்தவர்கள் இன்று கைதேசப்படுகிறார்கள்..  ஒரு புகைப்படம் ஒராயிரம் கதைச்சொல்லி தமிழ் சமூகத்தை மலடாக்கியிருக்கிறது.. கத்தி பேசினால் சொல்வது உண்மையென நம்பியவர்களை கண்டு "நகை" தோன்றுகிறது.. 
..
இன்னமும் இவன் பின்னால் நிற்பவர்கள் போதை தெரியாத பேதைகள்.. பெரியாரை தொட்டவுடன் அடி நாலாபக்கமும் விழ பெரியாரை விட "பெரியவா" வை நம்பியிருந்தால் தமிழகம் முன்னேறியிருக்கும் என்ற நிலைக்கு வந்திருக்கிறார்.. இடையில் பேரறிஞர் எச்.ராசா என்ற புகழ்மாலை வேறு.. சீமானனை நம்பி நிற்கிறார்கள் நிலை தான் பரிதாபம்.. சீமான் தெளிவாக யாரால் உருவாக்கபட்டாரோ அவர்களுக்காக வெளிப்படையாக உழைப்பதை சொல்லியிருப்பது நல்லது..
..
சீமான் தமிழ் சமூகத்தின் விஷம்.. நல்லொழுக்க அரசியலில் இவன் ஒரு கழிசடை.. அரசியலை தனி நபர் விமர்சனத்தை கொஞ்சமும் கூச்சமில்லாமல் பொய்யாய் பேசி திரிவதும் மறுப்போ அல்லது எதிர்வினையோ வந்தால் அப்படிதான் நான் ஒரு பைத்தியக்காரன்  என சொல்லி சிரிப்பதும் தமிழ் நாடு அரசியலில் களங்கமாய் நிற்கிறான்.. 
பெரியாரை மட்டுமல்ல  இவன் எல்லோரையும் வசைபாடுவதும், வாய்க்கு வந்ததை சொல்லி மடைமாற்றுவதும் அரசியல் வேசித்தனம்.. 
..
தமிழ் சமூகம் இவனை இப்போதாவது இனங்கண்டதே.. பொதுவாழ்வில் ஒழுக்கமில்லாத பாசிசத்தின் வளர்ப்பில் வந்த நாய் எஜமானின் சொல் கேட்டு அதிகம் குலைக்கிறது .. வெறிப்பிடித்த நாயை பட்டியில் அடைக்கவேண்டும்.. தமிழ் தேசியம் பேசுகிறவர்களை காலம் சரியான முறையில்  போதிக்கிறது ..முன்பு 
மா.பொ.சி ஆதித்தனார் என சிலர் வந்தார்கள் ஆனால் அவர்களுக்கு திராவிடம் கருணைக் காட்டியது ஆனால் இந்த கயவனை காலம் கொடூரமாய் தாக்கும்..
..
கனிமொழியும் அருள்மொழியும் கர்ப்பப்பையை அறுத்தெறிந்து விட்டார்களா என கேட்கிறான் மூடன்.. 1930ல் பெரியார் பேசியபோது கருத்தடை என்ற ஒன்றில்லை அப்போது குழந்தைகள் பெறுபவது மட்டுமே பெண்கள் வேலை என்றிருந்தது.. மாமியாரும்,மருமகளும் கர்ப்பமாக இருப்பதெல்லாம் சாதாரணமாக நடந்தது.  அப்போதுதான் பெரியார் பெண்களை குழந்தை பெறும் மிஷினாக பார்க்கிறார்கள் கர்ப்பப்பையை அகற்றக் கொள்ள பெண்கள் முன்வர வேண்டும் என்றார்  இப்போது பெண்கள் தெளிவாக இருக்கிறார்கள் தேவையென்றால் பெற்றுக்கொள்ளவும்  வேண்டாமென்றால் தள்ளிப் போடவும் தடைசெய்துக் கொள்ளவும் அவர்களுக்கு தெரியும்.. சீமான்  (வாயை)வாடகைக்கு விடாமல் இருக்கவும்
..
இன்று 
இந்த மண்ணில் எல்லோருக்கும் எல்லாம்  எல்லோரும் சமம் ஏற்றதாழ்வற்ற சமூகம் தழைக்க சமூகநீதி நிலைபெற திராவிட சித்தாந்தமே சரியென புரிதல் வரும்..  
..
கந்தனா சிக்கந்தரா என பாஜக பெரும் பாடுபடுகிறது.. ஆனால் பாருங்க மக்கள் தெளிவாக கந்தனோ கர்த்தரோ கந்தரோ எல்லாம் ஒன்றுதான
 இங்கே உங்கள் மதவெறி வேலைக்காதெனபுரிய வைக்கிறார்கள்.. ஒருபக்கம் சீமான் உவேசாவை விட யார் தமிழன் என்கிறான்  ஆனால் உ.வே.சா வின் மறுபக்கம் அறியாதவன்.. என்னதான் கத்தினாலும் இங்கே அண்ணன் தம்பியாய் அழகுற வாழும் மக்கள் தெளிவுமிக்கவர்கள்.. பக்தி பழமாக நிற்பவை கூட பெரியாரை நேசிக்கிறார்  அது தெரியாமல்தான் பாசிச சக்திகள் பதறுகிறார்கள்.. பல்வேறு வழிகளில் பல்வேறு நபர்களை முன்னிறுத்தி பார்க்கிறார்கள் கடைசயில்
அரிதாரம் கலைந்து அசிங்கபட்டுபோகிறார்கள்.. திரும்பவும் சொல்கிறோம் இது பெரியார் மண்.. இங்கே தமிழிசையின் கூச்சல்களோ,  அண்ணாமலையின் உளறல்களோ சீமானின் உருட்டுகளோ சினிமாக்காரனின் நடிப்போ செல்லாது போகும்.. கேளிக்கைகளுக்கும் பொதுபோக்கிற்கும் பயன்படுமே தவிர மக்களின் தெளிவும் முன் அடிப்பட்டு போகும்.. 
ஆய்ந்தறியும் தெளிவும் புரிதலும் உள்ள தமிழ்நாடு வீணர்களை இடது கையால் புறந்தள்ளும் இது பெரியார் செப்பனிட்ட மண்.. 
..
ஆலஞ்சியார்