Friday, March 29, 2024

தமிழ்நாடு மக்கள் சோர்வாக இருப்பதாக பிரதம‌ர் தன் கட்சிகாரர்களிடம் சொல்கிறார்.. பாவம் பிரதமர் மோடி கலக்கமடைவது வெளிப்படையாக தெரிகின்றது  .. உண்மையில் தமிழ்நாட்டு மக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் .. தமிழ்நாட்டு மக்கள் தெளிவானவர்கள் பகுத்தறிவும் திறன் கொண்டவர்கள்.. பொய்யர்களை சட்டென அடையாளம் காணும் அறிவை கொண்டவர்கள் .. ஏன் என கேள்வி கேள் என்று எங்கள் பெருங்கிழவன் பயிற்றுவித்து செனறிருக்கிறான்  மூடர்களை , வேடதாரிகளை இனங்காணும் தெளிவை பெற்றிருக்கிறோம்..
.. 
பெட்ரோல் விலை உயர்கிறதே என்றால் ஜெய் ஸ்ரீராம் சொல்லி ஓடி ஒளிந்தாலும் பிடரியில் அடித்து கேள்வி கேட்போம்.. வட மாநிலங்களுக்கும் சேர்த்தே வரி கொடுக்கும் எங்களை பார்த்து சோர்ந்து விட்டதாக சொல்வது புரிகிறது ..தமிழ்நாட்டின் வளங்களை அறிவை மனிததிறனை.  ஆற்றலை கண்டு பொறாமையோடு பார்க்கிறீர்.. இன்னும் பல பத்தாண்டுகள் ஆனாலும் தமிழ்நாட்டைப்  போல குஜராத்தி உ.பியையோ உருவாக்க முடியாது காரணம் தமிழன் இயல்பாகவே அறிவில் சிறந்தவன் .. எதையும் எதிர்க்கொண்டு வெல்லும் ஆற்றல் கொண்டவன்.. அரசியல் அறிவுக் கொண்டவன் .. "இதனால் இதனை இவன் முடிக்கும்" என அறிந்தவன் அதனால் தான் பாசிசத்தை வளரவிடுவதில்லை..
..
மோடி அவர்களே வேறு எங்காவது வடமாநிலங்களில் வடை சுடுங்கள் இங்கே உங்கள் மகுடிக்கெல்லாம் மசியாது இந்த மண் .. உங்கள் நாடக வேசங்கள் சட்டென்று கலையும் இங்கே அரிதாரம் பூசி ராமனாக வேடங்கட்டினாலும் அந்திக்குள் வெளுத்துவிடும்.. உங்கள் பொய்கள் தோலூரிக்கப்படும்.. கடலுக்கடியில் தவமிருந்தாலும் நாடகம் என புரியும் உங்கள் மாயவித்தைகள் எடுபடாது
இங்கே நிழலையும் நிஜத்தையும் அறியும் விவேகம் உண்டு ..
..
#முத்துவேல்கருணாநிதிஸ்டாலின்  கையில் தமிழ் நாடு பாதுகாப்பாக இருக்கிறது ..அடிப்படை தேவையறிந்து கல்வி வேலைவாய்ப்பு பொருளாதார உயர்வு, என உலக பொருளாதார தன்னிறைவு நாடுகளோடு போட்டி போடும் வல்லமைப் பெற்ற தமிழ்நாடு சோர்வாக இருப்பதாக சொல்லும் போதே உங்களின் சோர்வும் பயமும் தெரிகிறது ..  திராவிடம் சிறப்பான வழிகாட்டுதலை இந்திய ஒன்றியத்திற்கு தருகிறது .. உங்கள் பொய் புரட்டு இதிகாச கதைகள், மாறுவேடம் இவையெல்லாம் தந்தை பெரியாரும் பேரறிஞர் அண்ணாவும் பேரருளாளன் கலைஞரும் கட்டமைத்த தமிழ் மண்ணில் காட்டவேண்டாம் வேறு இடத்தில் நாடக வசனங்களை பேசவும் .. 
..
இது அறிவுடையோர் பூமி ..ஆழ அறிந்து தெளிவோடு சமத்துவத்தை சமூகநீதியை எல்லோருக்கும் எல்லாம் என்ற இலக்கை நோக்கிய அரசியலை முன்னெடுத்து செல்லும் திமுக.. தமிழர் நலன் தமிழ்நாடு முன்னேற்றம் இதில் எந்த சமரசமும் இன்றி உழைத்துக் கொண்டிருக்கும் எங்கள் முதலமைச்சர் முத்துவேல்கருணாநிதிஸ்டாலின் ..
பாஜக ஆளும் மாநிலங்களில் அடிப்படை தேவைகளை கூட நிறைவேற்றாத நீங்கள் இங்கே குரல் உயர்த்தி பேசுவதே தவறு ..
முடிந்தால் எப்படி ஆட்சி நடத்துவது, எப்படி எதிர்க்கட்சிகளின் குரலை கேட்பது, சனநாயக மரபுகளை பேணுவது, என தளபதி மு.க.ஸ்டாலினிடம்
பாடம் படியுங்கள் மோடி அவரகளே!.. 
தமிழ்நாடு இந்தியாவிற்கு வழிகாட்டும் ,வெளிச்சம் தரும் உதயசூரியன் 
..
ஆலஞ்சியார் 
செம்மொழித் தமிழ்ப் பண்பாட்டுக் கூடல்

Monday, March 18, 2024

பாஜகவும் பாமகவும் சேர்ந்ததில் வியப்பொன்றுமில்லை.. வியாபாரி நல்ல விலைக்கு விற்பதை தான் விரும்புவான் .. வெற்றி பெற முடியாது என தெளிவாகத் தெரிந்தும் மகனுக்கு குறைந்தபட்சம் மாநிலங்களவை உறுப்பினராக ஏற்பாடு செய்து விட்டு நல்லாட்சி என உளறுவதும் எப்போதும் போல் திராவிடக் கட்சிகளை குறைகூற வாய்ப்பு கிடைத்திருக்கிறது.. 
..
ராமதாஸ் எப்போதும் தன் நலம் மட்டுமே பேசும் அரசியல்வாதி.. தன் சாதியினரை தவறான பாதையில் வழிநடத்தும் பேராசைக்காரர்.. ஒவ்வொருமுறையும் சத்தியம் செய்வதும் அதை மீறுவதும் வாடிக்கையானதுதான் .. ஆரம்பகாலக் கட்டத்தில் சமூகநீதி பேசி தன் இருப்பை நிலை நிறுத்தியவர்.. உள்ளில் இருந்த சாதிய நிலைபாடு அவரையும் பாமகவையும் கரைக்க வைத்தது.. 
..
கடைசியில் மகனுக்கு மகுடம் சூட்ட முடியாமல் போனாலும் தலைப்பாகையாவது கிடைக்காதா என பிற  கட்சிகளிடத்தில் ஏறி இறங்கி நாடகம் நடத்த வேண்டிய சூழல் .. 
வட மாவட்டங்களில் பெரிதாய் வரவேண்டிய கட்சியை சுய நலத்திற்காக விலை பேசியும் வியாபாரியாகிப்போனார்..  பாமக இருக்குமிடம் தான் வெல்லும் என்ற மமதையை வீழ்த்தி காட்டுகிறேன் என சொல்லியடித்து வீழ்ச்சிக்கு வித்திட்டவர் தளபதியார் ..அன்று தொடங்கி இன்றுவரை விரக்தியில் தங்களை காத்துக் கொள்ள நல்ல வியாபாரியாய் அரசியல் செய்கிறார்.. பாஐக மூன்றாமிடத்திற்கு வர உதவலாமே தவிர அதனால் பாமகவிற்கோ வன்னிய சமூகத்திற்கோ பலனில்லை/பயனில்லை..
..
வரும் காலங்களில் பாமக லெட்டர்பேட் கட்சியாக மாறும்.. 
விதைத்ததைதானே கிடைக்கும்
..
ஆலஞ்சியார் 

Sunday, March 17, 2024

தேர்தல் 2024.. 
இந்திய ஒன்றியம் மிகப்பெரிய சனநாயக நாடென நம்பபடுகிறது ஆனால் இங்கே சாதி,மதம்,பணம், அதிகார மமதை, இவைகள் தான் தீர்மானிக்கிறது.. இதையும் மீறி சில நேரம்  சனநாயகம் மலரும்.. 
..
2024 மிக முக்கியமானது .. ஒரு பொய்யனின் காலட்சேபத்தை நம்பி, சனநாயகத்தின் தூண்கள் என இன்னமும் நாம் நம்பிக்கொண்டிருக்கிற ஊடகங்கள் 2ஜி எனும் மாய பிம்பத்தை ஊதி பெருக்கி, மிகச் சிறந்த அறிவாளியை அகற்றி ஆகச் சிறந்த அறிவிலியை அறியணையேற்றியதற்கு நாமே காரணம் .. ,"ஒரு கோமாளி அரண்மனைக்குச் சென்றால் அவன் அரசனாகி விடுவதில்லை. அரண்மனைதான் சர்க்கஸ் கூடாரமாகிவிடும்" என்ற துருக்கிய பழமொழி தான் ஞாபகம் வருகிறது .. 
..
கடந்த பத்தாண்டுகளில் அனைத்து சனநாயக மரபுகளும் மீறப்பட்டு,ஒற்றை கட்சி ஆட்சியை நோக்கி இந்தியாயென்னும்  பன்முகத்தன்மையை சிதைத்து மத துவேசங்களுக்கு நீரூற்றி மக்கள் மனதில் மெல்ல நஞ்சை கலந்து வேற்றுமையில் ஒற்றுமையை இல்லாதாக்க எண்ணும் பாசிசத்தின் பிடியிலிருந்து நாட்டை மீட்க வேண்டிய பெரும் பொறுப்பு நமக்குண்டு.. நிறைய கருத்து வேறுபாடுகள் இருக்கலாம் நமக்கு இன்னும் சரியான உரிமைகள் கிடைக்கவில்லையே என கோபம் இருக்கலாம், நீண்டநாள் கோரிக்கைகள் இன்னும் பரிசீலனை செய்ய படவில்லை என்ற ஆதங்கம் உண்டு ஆனாலும் காலத்தின் தேவை கருதி நம் நியாயமான கோபங்களை தள்ளி வைத்துவிட்டு இந்த சனநாயக அறப்போரில் சரியான முடிவை எடுக்க வேண்டிய பொறுப்பு நமக்கிருக்கிறது..
..
ராகுல் எனும் மனிதநேய தலைவன், தன் கூடவே இருந்த, இருக்கிற பாசிச கைக்கூலிகளால் வீழ்த்தப்பட்டும் மக்களை நம்பி இன்னமும் சனநாயகத்தின் வேர்களில் ஈரமிருக்கிறது என்ற அசைக்க முடியாத நம்பிக்கையோடு மக்களை சந்திக்க பெரும் நெடும் பயணம் மேற்கொண்டு மக்களே மாபெரும் சக்திகள் என்ற நம்பிக்கையோடு சனநாயக சக்திகளோடு கைகோர்த்து வருகிறார்.. 
..
தமிழ்நாட்டிற்கு கிடைத்த விடியலைப் போல் இந்திய ஒன்றியமும் நல்லதொரு விடியலை பெற வேண்டும்,என்ற நல்ல நோக்கத்தில் 
"இந்தியா‌" அணியை உருவாக்கியதில் பெரும் பங்கு திமுகவிற்கே உண்டு .. #முத்துவேல்கருணாநிதிஸ்டாலின்  மிகச்சிறந்த அரசியல் ஞானி,எதை எப்படி கையாள வேண்டுமென தன் ஆழ்ந்த அனுபவத்தால் சரியாக வடிவமைத்து மிகப்பெரிய சனநாயக போரை நடத்தி வென்று காட்ட எடுத்த முயற்சியின் பலன் இன்று 
"I N D I A"அணி பலம் பொருந்தியதாக பாசிச சக்திகளுக்கு எரிச்சல் ஊட்டுகிறது.. அரசின் அத்தனை துறைகளையும் ஏவி எதிர்ககட்சிளையும்,மிரட்டி பணிய வைக்க நினைத்தும் எல்லாம் கடந்து 2024 தேர்தலை சந்திக்கிறது.. நீதிமன்றம்,தேர்தல் ஆணையம் எல்லாம் மக்களின் நம்பிக்கை மெல்ல இழந்திடுமோ என் அச்சம் வந்தாலும் ஒட்டிக்கொண்டிருக்கிய நம்பிக்கைகள் துளிர்விடும் என்ற இயற்கையின் தியதி நம்மை போராட வைக்கிறது.. 
..
நாம் நம் சனநாயக கடமையை செய்வோம்.. இந்தியா தன் பன்முகத்தன்மை எப்போதும் இழக்காது மீண்டும் ஆற்றல் கொண்டது..மக்கள் தெளிவான தீர்க்கமான முடிவோடு காத்திருக்கிறார்கள்.. கோமாளியை வீட்டிற்கு அனுப்பிவிட்டு அறிவுசார் தலைவனை நாட்டின் பொறுப்பில் அமர்ந்து வார்கள்
..
அண்ணா கண்ட மாபெரும் தமிழ்க் கனவு போல் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்ற மாபெரும் தலைவன் காணும் மாபெரும் இந்திய கனவு நிஐமாகும்..
வெல்லும் சனநாயகம்.. 
..
ஆலஞ்சியார் 
செம்மொழித் தமிழ்ப் பண்பாட்டுக் கூடல்
பெண் குழந்தைகள் இறைவனின் ஒளி என்றார் மௌலானா ரூமி.. 
பெண் குழந்தைகள் இயற்கையின் ஒளி பேரின்பத்தின் ஒளி 
அன்பின் ஒளி 
அறிவின் ஒளி 
வாழ்வின் பெரும் வெளிச்சம் வாழ்வின் நற்செய்தி.. 
..
பத்து நாட்களாய் பேசவும், எழுதவும் அழவும், மறந்து பேரின்ப
பெருமகிழ்வில் , ஆம் என் மகளுக்கு இரண்டு பெண்குழந்தைகள் .. வாழ்வின் அதிகப்பட்ச இன்பம் எது தெரியுமா தான் பெற்றெடுத்த மகள் பெற்றெடுப்பது.. 
காலம் தந்த பரிசு
பெரும் மகிழ்வில் நான்.. நற்செய்தியை பகிர்ந்துக் கொள்வதில் பேரின்பம் கொள்கிறேன்.. 
.. 
ஆலஞ்சியார் ..
கடந்த சில நாட்களாக திமுகவிற்கு அறிவுரை சொல்லும் பதிவுகள் அதிகம் தென்படுகின்றன.. அதிக விமர்சனங்களையும் அதிக அறிவுரைகளையும் இலவசமாக பெறும் இயக்கம் திமுகதான் என்று நினைக்கிறேன்.. 
..
பொதுவான ஆதங்கங்கள் அதீத அக்கறைப்போல தோன்றினாலும், அரசியல் அறிவின் குறைபாடாகவே தெரிகிறது.. திமுக தன் செயல்பாடுகளில் எந்தளவு வெளிப்படைத்தன்மையை காட்டுகிறது அதே போல் மிகச் சரியான கையாளுதலையும் நகரத்தையும் செய்யும்.. சில நேரங்களில் அது தவிர்த்திருக்கலாமோ என் தோன்றும் ஆனால் காலம் அதை சரியென நமக்கு உணர்த்திய பாடங்கள் உண்டு.. 
.. 
திமுக இந்திய ஒன்றியத்தின் ஆக சிறந்த அரசியல் வரலாற்றை தேர்தல் கால நிகழ்வுகளை பதிவு செய்திருக்கிறது.. கட்சி எப்படி நடத்த படவேண்டும் என்ற பாடமெடுத்திருக்கிறது..  எல்லா காலகட்டத்திலும் கரைந்து போகும் என்றெண்ணியவர்களின் ஆசையில் மண் அள்ளி போட்டுயிருக்கிறது..  இந்தியாவிற்கே அரசியல் இலக்கணத்தை தந்த கட்சிக்கு நாம் பாடமெடுக்க தேவை இல்லை..
..
திமுக தனக்கான தலைவனை தயார் செய்கிற போதும், காலத்தின் வலிமை அறிந்து சிறந்த பண்பட்ட தலைவனை தரும்.. அப்படி பண்பட்ட தலைவர்களால் இயக்கம் இயங்கிக் கொண்டே இருக்கும்.. 
காலம் காத்திருந்து வலிமையான தலைவனை தந்திருக்கிறது .. பொறுமை, தெளிவு, அடர்த்தியான சூழலில் நிதானம் தவறாத செயல்பாடு எதை எப்படி எங்கனம் செய்திட வேண்டும் என்ற அறிவு இவையெல்லாம் ஐம்பத்தைந்து ஆண்டு பொதுவாழ்வு தந்திருக்கிறது.. ஏற்றதாழ்வுகளை கண்டு கலங்காது அஞ்சாமல் நடைபோடும் ஆற்றல் மிகு தலைவன்..  இந்திய ஒன்றியத்தின் அரசியல் வரலாற்றை மாற்றியமைக்க .. இனி திராவிட இயக்கத்தின் வரைவுகள் தான் மானுடத்தின் வளர்ச்சிக்கு வழிகாட்டும், பாசிசத்தின் சூழ்ச்சிகள் வீழ்த்தபட்டு புதிய வரலாறு படைக்கப்படும்.. அதை நோக்கிய பயணத்தை ஆற்றல்மிகு என் தலைவன் நடத்தி காட்டுவார்..
#முத்துவேல்கருணாநிதிஸ்டாலின்  
..
அனுபவமும், ஆற்றலும்,அரசியல் தெளிவும், நம் தலைவருக்கு உண்டு "இதனை இதனால் இவன்முடிக்கும்"என்றறிந்து வெகுமக்கள் தந்த "பொறுப்பை"உணர்ந்து பாசிசத்தின் அடி வேரை அறுக்க வந்த தலைவரின் நகர்த்தல் சரியான பாதையில் வெற்றி எனும் இலக்கை அடையும்.. அதுவரை வாய்மூடி மௌனம் காக்கவும் 
..
ஆலஞ்சியார் 

Saturday, March 9, 2024

பெண் குழந்தைகள் இறைவனின் ஒளி என்றார் மௌலானா ரூமி.. 
பெண் குழந்தைகள் இயற்கையின் ஒளி பேரின்பத்தின் ஒளி 
அன்பின் ஒளி 
அறிவின் ஒளி 
வாழ்வின் பெரும் வெளிச்சம் வாழ்வின் நற்செய்தி.. 
..
பத்து நாட்களாய் பேசவும், எழுதவும் அழவும், மறந்து பேரின்ப
பெருமகிழ்வில் , ஆம் என் மகளுக்கு இரண்டு பெண்குழந்தைகள் .. வாழ்வின் அதிகப்பட்ச இன்பம் எது தெரியுமா தான் பெற்றெடுத்த மகள் பெற்றெடுப்பது.. 
காலம் தந்த பரிசு
பெரும் மகிழ்வில் நான்.. நற்செய்தியை பகிர்ந்துக் கொள்வதில் பேரின்பம் கொள்கிறேன்.. 
.. 
ஆலஞ்சியார்.. 

Tuesday, February 20, 2024

♦️தமிழ் நாட்டில் உள்ள அரசு துறைகள் மொத்தம் 83. 

♦️அவற்றில் 48 துறைகள் #கலைஞர் உருவாக்கியது. 

♦️அதாவது, ஏறத்தாழ 60 சதவீத அரசு துறைகளை உருவாக்கியது கலைஞர். 

⭕அதே சமயம், அதிமுக உருவாக்கிய ஒரே துறை டாஸ்மாக்.

கலைஞர் உருவாக்கிய துறைகள் - 

1) Tamil Nadu Tourism Development Corporation
2) TNACTCL
3) Tamil Nadu Textbook Corporation Limited
4) Tamil Nadu Dairy Development Corporation Limited
5) Tamil Nadu Ceramics Limited
6) Tamil Nadu State Farms Corporation Limited
7) Tamil Nadu Sugarcane Farm Corporation Limited
😎 Tamil Nadu Goods Transport Corporation Limited
9) Dharmapuri District Development Corporation Limited
10) Tamil Nadu Civil Supplies Corporation
11) Tamil Nadu Spirit Corporation Limited
12) Tamil Nadu Graphite Limited
13) Cheran Engineering Corporation Limited
14) Tamil Nadu Theater Corporation Limited
15) AGROFED
16) CMRL
17) Tamil Nadu Transmission Corporation Limited
18) TNERC
19) TASCO
20) TNSAMB
21) TNFDC
22) TAHDCO
23) TAMCO
24) TUFIDCO
25) Tamil Nadu Transport Development Finance Corporation Limited
26) Tamil Nadu Power Finance and Infrastructure Development Corporation Limited
27) TNUIFSL
28) TAFCORN
29) TANTEA
30) TNBCGS
31) SIPCOT
32) SIDCO
33) ELCOT
34) TIDEL
35) TANCEM
36) TNSC
37) TWAD
38) CMDA
39) TNSCB
40) TNRDC
41) The Tamil Nadu Handicrafts Development Corporation Limited (Poompuhar)
42) Tamil Nadu Textile Corporation Limited
43) Tamil Nadu Zari Limited
44) Tamil Nadu Co-operative Textile Processing Mills Limited
45) Tamil Nadu Maritime Board
46) State Express Transport Corporation
47) Poompuhar Shipping Corporation Limited
48) Tamil Nadu State Transport Corporation Limited 

🔴இந்த நிறுவனங்களால் பயன்பெறாத தமிழ் குடும்பங்கள் இருக்க முடியாது. 

இன்று தமிழ் நாடு அரசு ஊழியர்கள் மொத்தம் 12 லட்சம் பேர். அதில் பாதிபேர் பெண்கள். அதாவது, ஒவ்வொரு 60 தமிழர்களுக்கும் ஒருவர் அரசு ஊழியராக இருக்கிறார். 

இதுதான் தமிழ் நாட்டின் வாழ்வாதாரம். இந்த தமிழ் நாடு அரசு பணிகளைத்தான் பிஜேபி கபளீகரம் செய்யத் துடிக்கிறது.

தமிழ்நாடு என்றால் #கலைஞர்
கலைஞர் என்றால் #தமிழ்நாடு

#கலைஞர்100