Sunday, December 29, 2024

அதிகாரம் ஆள் பார்க்காது  வளர்த்தவனையே வெட்டி சாய்க்கும்.. அப்பன் மகன் என்ற கணக்கெல்லாம் அதிகாரத்தின் கோர முகத்திற்கு தெரியாது.. நாடகம் முடிந்தது.. இனி ராமன் தேவையில்லை..
..
நேற்று பொங்கியவர்கள் இன்று அட "சே" என்கிறார்கள்.. நாம் ஏற்கனவே உ.பி.யில் கண்டதுதான் முலாயம்சிங் என்ற கிழட்டு சிங்கத்தை ஓய்வெடுக்க சொன்னவர்தான் அகிலேஷ் அது தான் இங்கும்.. இனி ராமதாஸின் தயவு தேவையில்லை.. அன்புமணியின் பிடிக்குள் கட்சி வேண்டும்  எங்கே "அக்கா மகன்" உள்ளே புகுந்து விடுவான் என்ற அச்சம் நேற்று அவரின் பேச்சும் செயலும் காட்டியது.. மகளோ மகளின் மகனோ வாரிசாக முடியாதென சொல்லியடித்திருக்கிறார் அன்புமணி..
..
கொஞ்சம் ஒட்டிக் கொண்டிருக்கும் சாதி சொந்தங்கள் மெல்ல வெளியேறலாம்.. கொஞ்சமும் பச்சைபிடிக்காத நிலைதான் ..இனி பாமக எனும் அழுகிய பழம் விற்பனைக்கு உதவாது..  அரசியல் கட்சியில் வாரிசுகள் பின் தொடர்வது ஒன்றும் புதிதல்ல.. ஆனால் அது இயல்பாக எல்லோரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் இருக்க வேண்டும் .. ஆனால் பாமகவில் சௌமியா எப்படி திடீரென வந்தார் என்றெல்லாம் கேட்க கூடாது கடலூர் முகுந்தனுக்கு மறுக்கப்பட்டதில் அன்புமணி அழுத்தம் காரணமென செய்திகள் கசிகின்றன.. 
..
மொத்தத்தில் ராமதாஸ் அடங்கி ஒதுங்கி இருக்கவேண்டும்.. இனி எல்லாவற்றையும் அன்புமணியே பாரத்துக்கொள்வாரென என்ற "சமிக்ஞை" பெரிய அய்யாவிற்கு வழங்கப்பட்டிருக்கிறது..ராமதாஸ் எனும் "சாதிகாரன்" இனி வேண்டாம்.. அன்புமணியை பேச்சை கேட்டு பாஜகவுடனான அரசியல் உடன்பாடு காவு"வாங்க தொடங்கியிருக்கிறது ..
..
இனி வடமாவட்டங்களில் 
பாமக மெல்ல அஸ்தமனமாகும்..
வினை
..
ஆலஞ்சியார்

Saturday, December 7, 2024


ராமநாதபுர சமஸ்தானத்தின் மன்னர் சண்முக ராஜேஸ்வர சேதுபதி. மன்னர் மானியம் ஒழிக்கப்பட்ட பிறகும் மன்னராகவே இருந்தார். எப்படியெனில் சுதந்திர இந்தியாவின் முதல் பொதுத்தேர்தல் முதல் மூன்று தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றி பெற்று வந்தார். 

மன்னராக இருந்தவர் அந்தப் பகுதியில் வெற்றி பெறுவது பெரிதல்ல, அவர் மனுத்தாக்கல் செய்வோதோடு சரி. ஓட்டுக்கேட்டு வரமாட்டார்,கையெடுத்து கும்பிடமாட்டார். ஆனாலும் 1952 சுதந்திர இந்தியாவின் முதல் தேர்தல் தொடங்கி 57,மற்றும் 62 வரை அவர்தான் எம்.எல்.ஏ,வாக வெற்றி பெறுவார். திமுக 57ல் தேர்தல் களத்தில் இறங்கிவிட்டது. இருந்தாலும் 57லிலும் 62லிலும் திமுகவுக்கு வேட்பாளர் கிடைக்கவில்லை. இருந்த பொறுப்பாளர்களும் தயங்கினர். 

1967 தேர்தல் வருகிறது ராமநாதபுரம் தவிர்த்து ஒரு பட்டியலை அண்ணா தயாரிக்கிறார். கூட்டணிக் கட்சிகளும் திமுகதான் ராமநாதபுரத்தில் போட்டியிட வேண்டும் என ஒதுங்கிக்கொண்டன. ஒரு சட்டமன்ற உறுப்பினர் சீட்டு வீணாய்ப் போனது என்றபடி அண்ணா அடுத்த வேலையை பார்த்துக்கொண்டிருந்தார். 

கலைஞர் அண்ணாவிடம் போய் அண்ணா ஏன் ராமநாதபுரத்தை வாங்கிக்கொண்டு அன்னப்போஸ்டாக விட்டுக்கொடுக்கிறீர்கள் என்று கேட்டார். 

அண்ணா சொன்னார் “ விட்டுக்கொடுக்கவில்லை தம்பி..நம்பிள்ளைகள் யாரும் அங்கு தயாரில்லை. தென்னரசே சொல்லிவிட்டார் இனி என்ன இருக்கிறது’ என்றார்.

“வேட்பாளர் பெயர் தங்கப்பன், எனக்காக அவரை அறிவியுங்கள் அண்ணா, தென்னரசுவிடம் நான் பேசிக்கொள்கிறேன்” என்று கலைஞர் சொல்லிவிட்டார். தயக்கம் கொண்ட அண்ணா கலைஞர் சொன்ன வேட்பாளர் குறித்து விசாரிக்கிறார். 

“ஓ அந்தத் தங்கப்பனா? அவர் பெயர் குதிரை வண்டி தங்கப்பன். பேருந்து நிலையத்தில் குதிரை வண்டி ஓட்டுகிறார்” என்று செய்தி வருகிறது. 

கலைஞரின் மேலிருக்கும் நம்பிக்கையில் அண்ணாவும் அறிவித்துவிடுகிறார். கூட்டணிக்கட்சிகளுக்கும் நிம்மதி. 

மன்னர் விசாரிக்கிறார். இம்முறை திமுகவே போட்டியிடுகிறது என்று தகவல் வருகிறது. வேட்பாளர் பெயரைக் கேட்டதும் வெடித்து சிரிக்கிறார். “நம்ம அரண்மனை கிழட்டுக்குதிரைகளை கொடுத்த விலைக்கு வாங்கி பிழைக்கும் தங்கப்பனா என்னை எதிர்த்து நிற்பது..’’ என்று அரண்மனைக்குள் போனவர் வெளியே வரவேயில்லை.

கலைஞர் களத்துக்குப் போனார், தங்கப்பனுடன் வீடுவீடாகச் சென்றார், வீதி வீதியாய் சென்றார். முடிவாய் ‘குதிரை வண்டி’ தங்கப்பன் ராமநாதபுர சமஸ்தானா மன்னரை வென்றார். அதன் பின்னர் மன்னர் போட்டியிடவேயில்லை.இப்படி ஜனநாயக களத்திலும் மன்னர் தோரணையில் அதிகாரத்தை கைப்பற்றியிருந்த மன்னர்களின் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்து மக்களாட்சியை நிறுவியது திமுக என்கிற அரசியலியக்கம்.

யார் யாரை முடிப்பது என்பது இங்கு வேலையில்லை, யார் இறுதிவரை மக்களுடன் இருப்பது என்பதே வேலைத்திட்டம். ஒரே தேர்தல் முடிவுகளில் அரசியல் ஆசையை மூட்டைகட்டியவர்களின் முடிவுகளை கண்ட இயக்கம் திமுக. மன்னாதி மன்னர்களை வீட்டுக்குக்கு.. sorry அரண்மனைக்கு அனுப்பிய கட்சி இது. 

திமுக என்கிற இயக்கம், வெற்றுச் சலசலப்புக்கு அல்ல, காடு அதிரும் வேட்டோசைக்கே அசராமல்  நிலம்பாவி நிற்கும் பெருங்களிறு!
..
வரவனை செந்தில் 
ராமதாஸும் அன்புமணியும்..
தமிழ்நாட்டரசியலில் தேவையில்லாத சுமைகள்.. தங்கள் நலம் மட்டும் பிரதானமாய் கொண்டு நடக்கும் சில்லரைகள்..
தன்னை அறிவாளியாக எண்ணிக்கொள்ளும் அபத்தங்கள்.. 
..
தலை முழுக்க சாதிவெறியும் உள்ளில் மதவெறியும் கொண்டு அரசியலில் கால்நூற்றாண்டை கடந்து தேய்ந்துக்  கொண்டிருப்பவர்கள்.. தங்கள் சமுதாய மக்கள் கல்வியறிவு பெற்றால் சாணியை எறிவார்கள் என்றெண்ணி கலவரத்தில் சீவிவிட்டு அகங்காரமாய் அமர்ந்திருப்பவர்கள்..
..
பெற்ற தாயை கூட கேவலப்படுத்த அஞ்சாத கயமை, கொஞ்சமும் கூச்சமில்லாமல் மக்களை சந்திக்கிற இழிநிலையாளர்கள்.. முப்பதாண்டுகள் கடந்தும் மக்கள் இவர்களை நம்பவில்லை காரணம் சாதியை வைத்து காசு பார்க்கும் இவர்கள் நமக்கான அரசியல்வாதிகள் அல்ல என அவர் சார்ந்த சமூக மக்களே புறக்கணிததுவிட்டார்கள்..
..
மாண்பமை முதலமைச்சர் வேலைவெட்டி இல்லாதவர் என்றதும் தன் அடியாட்களை வைத்து போராட்டம் நடத்த பார்த்து கடைசியில் பிசுபிசுத்தது.. முதலமைச்சரை இவர் ஒருமை பேசுவார் ஆனால் இவரை வேறு வேலையில்லை இவருக்கெல்லாம் பதில் சொல்ல தேவையில்லை என்ற அரசியலிலிருந்து அடியோடு துடைத்தெறிந்து விட்டார் தளபதி அவர்கள்.. யாரும் கண்டுக்கொள்ளவில்லை என்றவுடன் எதையாவது பேசி இருக்கிறேன் என காட்ட நினைத்தவரை குழியில் இறக்கிவிட்ட கதையாகும போனது..  அதானி காப்பாற்ற முயற்சி செய்தால் பாஜகவின் கரிசனம் கிடைக்குமென்ற நினைப்பில் மண் விழுந்தது.. பாசிசத்தின் பிடியில் இனி மெல்ல அரசியல் அஸ்தமித்து காண்பார்..
..
ஏற்கனவே எழு இடங்களிலும் தோற்கடித்து காட்டுகிறேன் என்று பாமகவின் வீழ்ச்சிக்கு வித்திட்டவரிடம் கவனமாக இருக்க வேண்டாமா.. எச்.ராஜாவிற்கு உள்ள புரிதல் கூட இல்லையே! .. 
More dangerous..  சாதியும் மதமும் தமிழ்நாட்டு அரசியலில் ஒரு எல்லையை தாண்டி எடுபடாது.. சிலநேரம் திருப்பி அடிக்கும்.. எழ முடியாமல் செய்துவிடும்.. அதைதான் ராமதாஸின் அவரின் உன்னை நான் சந்திக்கணுமா என்ற பேச்சு உணர்த்தியது  விரக்தியின் விளிம்பில் நின்று கதறுகிறார்.. இனி எக்காலத்திலும் இவர்களின் அரசியல் நாடகம் அரங்கேறாது..
..
ஆலஞ்சியார்


மனு ஆட்சியா .. மனுவிற்கு எதிரானதா என விவாதிக்க வேண்டியதை மடைமாற்ற நினைத்து மன்னராட்சி என உளறி கடைசியில் வாங்கிகட்டிக் கொள்ள வேண்டியாதகிவிட்டது.. பாஜக செல்லப்பிள்ளைகள் வேடம்கட்டி வந்து அரிதாரம் கலைந்து நிற்கிற சோகம்.. தமிழ்நாடு மிக தெளிவான பார்வைக்காக கொண்டது.. வரும் ஓசை கண்டே வருகிறவர் யாரென அறியும் அறிவுண்டு நமக்கு.. பல்வேறு வழிகள் ஒவ்வொன்றாய் தடைப் போட்டுக்கொண்டே இருப்போம்.. 
..
ரஜினி வைத்து சலனம் ஏற்படுத்த நினைத்து அவர் சுதாரித்த நிலையில் பாவம் சின்ன பையனை இறக்கி சினிமா சூட்டிங் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.. வரும் போது கொஞ்சம் அரசியல் வரலாற்றை தெரிந்து கொண்டு வந்திருக்கலாம்.. ரெய்டுக்கு பயந்து வந்திருக்கலாம் கடந்தகால தமிழ்நாட்டின் அரசியலை , அதன் போக்கை தமிழ் மக்களின் தெளிவை அறிந்தோ எழுதிக் கொடுக்கும் நபர்களிடம் கேட்டு தெரிந்து காலடி வைத்திருக்க வேண்டும்..
..
எது ஆணவம் 200  வெற்றி பெறுவோம் என்பதா.. 75 ஆண்டுகால அரசியல் எல்லா காலமும் மக்களோடு கலந்து அவர்களின் துயரில் மகிழ்ச்சியில் பங்குகொண்டு இன்னல்படும் நேரத்தில் கரம் கோர்த்து அவர்கள் வாழ்வில் ஒளியேற்ற கல்வியொன்றே கைகொடுக்குமென அறிந்து வா..படிக்க வா எல்லாம் தருகிறேன் உன்னை புறக்கணித்தவன் முன்பாக உயர்ந்து காட்டு என திட்டங்கள் தீட்டி இன்று கல்வியில் பொருளாதாரத்தில் இந்திய ஒன்றியத்திலேயே தமிழ்நாட்டில் முதல் மாநிலமாய் உயர்த்தி காட்டியவர் 200  வெல்வோம் என்பது ஆணவம் அல்ல மக்களின் மீதான நம்பிக்கை தன் உழைப்பின் மீதான நம்பிக்கை ஒற்றுமையின் மீதான நம்பிக்கை..
..
பிறப்பால் உயர்ந்தவன்  என்பதெல்லாம் பழைய பாழ்படிந்த சிந்தை உழைப்பால், அறிவால் உயரலாம், கல்வி வெளிச்சம் காட்டும் என்பதுதான் திராவிட சித்தாந்தத்தின் மூலக்கரு .. எல்லோருக்கும் எல்லாம் இதைதான் திராவிடத் தலைவன் எங்கள் தளபதி ஸ்டாலின் M. K. Stalin  சொல்கிறார்..இதை கண்டுதான் பதறுகிறது பாசிசம்.. பல வழிகளில் லாட்டரி டிக்கெட்டையும் ப்ளாக் டிக்கெட்டையும் களம் இறக்கி வாய்க்கு வந்ததை உளறி அதை பேசு பொருளாக்கி "விகடகவி" சொல்லிக் கொண்டிருக்கிறது..  காஞ்சி தலைவனை பேச வேண்டுமே தவிர காஞ்சி பெரியவரை அல்ல புத்தகத்தில் என்ன இருக்கிறதென்றோ அம்பேத்கர் யாரை எதை,யாரை எதிர்த்தாரென்றோ அறியா பிள்ளைகளின் பிதற்றல் நூல் வெளியீடு..
 .
உலகில் எவ்வளவு மிக உயர்ந்த சோப்பை போட்டுக் குளித்தாலும் ஒரு சூத்திரன் பிராமணனாக முடியாது. வேலைக்குப் போகும் பெண்கள் ஒழுக்கம் உடையவர்களாக இருக்க முடியாது 
என்றவர்
காஞ்சி மகா பெரியவா
(நூல் ஆதாரம்)தெய்வத்தின் குரல்.. 
நடந்தது நூல்(புத்தகம்) வெளியீடல்ல (பூ)நூல் புகழ்ச்சிக்கான ஏற்பாடு.. 
..
தேர்தலில் நின்று வென்று வந்தவர்.. மக்களால் தேர்வு செய்யபட்டவர்.. அவரை அவரின் உழைப்பை,  வந்தால் நமது கோர்க்கைகளை,தேவைகளை, 
அவர்சொல்லாமலேயே செய்வார் என்றுணர்ந்து வெற்றிபெற செய்கிறார்கள்.. திருட்டு லாட்டரிவிற்பவனும் ப்ளாக் டிக்கட்டும் சமூகநீதி பேசுவதும் அதை  ஊடகங்கள் முன்னெடுப்பதும் சகிக்கவில்லை..
"மக்களை செல் " என்ற அண்ணனின் சொல்லை மந்திரமாய் கொண்டு சுழல்பவர்கள் நாங்கள்.. சூரிய ஒளியில் "வெளிச்சம்" காண்பவர்கள்
விட்டில் பூச்சிகளுக்காக கலங்க போகிறோம்.. போய் ஓரமாய் விளையாடு..
..
ஆலஞ்சியார்

Tuesday, November 26, 2024

உதயநிதி.. 
இளைஞர் ..
எதையும் சரியாக உள்வாங்கி எதற்கும் அஞ்சாமல் செயல்படும் துணிவுமிக்கவர்.. தெளிவான அரசியல் புரிதல், களமறிந்து எதிரியை திணறவைக்கும் சொல்லாற்றல், பணிவும் பக்குவமும் நிறைந்தவராய், நொடிக்குள் திணறடிக்கும் ஆற்றல் உடையவராய் பழுத்த பழங்கள் கூட தடுமாறும் நிலையில் செவ்வனே செயல்படும் செயல்வீரர்..
..
தாத்தனின் அறிவும் அப்பனின் உழைப்பும் பேராசான் பெரியாரின் வழியொற்றி தன் அரசியல் பயணத்தை அமைத்துக் கொண்டவர்.. திராவிட கருத்தியலை சரியாக அடையாளப்படுத்தி அரசியல் செய்கிறார் .. எல்லோருக்கும் எல்லாம் என்ற அரசியலை முன்னெடுக்கும் தலைவரின் படையோட்டத்தின் தளபதியாய் சுழன்று இவர் தமிழ்நாட்டின் இன்முகமாய் மாறி வருவது மகிழ்ச்சிக்குரிய விடயம்..
..
கலைஞரைப் போல நகைச்சுவை உணர்வு.. சட்டென்று சாய்த்துவிடும் நுணுக்கம்,அக்காவிற்கு வேலையில்லை என்ற ஒரே வரியில் தமிழிசையை தரைதட்டிய விதம் கேள்வி கேட்பவரே எதிர்பாராமல் பதிலளிக்கும் உத்தி சில நேரம் செவிட்டில் அறைந்தாற்போல் நிலைகுலைய செய்கிறார்.. எதிரிகள் தலைவர் ஸ்டாலினைவிட இவரிடம் தான் எச்சரிக்கையாக இருக்கவேண்டிவரும்.. 
..
இளஞ்சூரியன் உதயநிதி வளமான எதிர்காலத்தின் நம்பிக்கை திராவிட இயக்கத்தின் மற்றொரு பரிணாமம்.. நூற்றாண்டு கண்ட திராவிட இயக்கத்தின் மாபெரும் முன்னெடுப்பு.. சனாதனம் ஒழியும் வரை என் குரல் ஒலித்துக் கொண்டே இருக்கும் என்ற பிரகடனம் ஒன்றே போதும் யார் இவர் என்பதற்கு .. உண்மையில் பழைய கலைஞரை பார்த்த மகிழ்வு
..
உங்கள் வெற்று வார்த்தைகளும் வீண் சவால்களும் என் பயணத்தை தடுத்து நிறுத்திட முடியாது ..
இது  ஒன்றே போதும் வருங்காலம் தமிழ்நாடு சிறக்கும்  என்றும் கருப்பசிவப்பு பறக்கும்
வாழ்த்துகள் உதய்
..
ஆலஞ்சியார் 

Tuesday, November 5, 2024

அதிகாரம்..
சிலர் 
வந்தவுடன் நானே தலைவன் என்கிறார்கள்.. 
அடிப்படை புரிதல் இல்லாமல்
பதவி ஆசை திராவிடத்தை கிண்டல் செய்ய தூண்டுகிறது..
தலைவர் கலைஞரை, வசைபாடினால் 
அல்லது வசைபாடுபவனை கொண்டாடினால் கால் ஊன்றலாமென கனவு காண்கிறார்கள்..
கூட இருக்கும் கூட்டம் 
உன் உழைப்பை பார்த்து வந்ததில்லை கேளிக்கைகளில் வந்தவை.. 
சிலர் விரக்தியில் நிற்கிறார் 
பலர் அறியாமையில்.. கொள்கையோ,கோட்பாடோ 
அரசியல் அறிந்தோ இல்லை
 ..
பாசிசத்தை முதுகில் சுமந்து
"ஆபத்பாந்தவன்" வேடம் போடுகிறார்கள் நேர் நிற்க முடியாத
கோழைத்தனமானவர்கள்..
நிற்பது கூட அடுத்தவரின் ஊன்றுகோலில் ..
பலவீனமானவர்கள் தான் 
பரிந்துரைக்கு கால்கடுக்க நிற்பார்கள்..
பாவம் 
அரசு இயலும் தெரியவில்லை..
அரசியலும் தெரியவில்லை
..
அரிதாரம் பூசி 
ரட்சகன் வேடம் காட்டுபவன்.
அடித்தளமே இல்லாமல் அடுக்குமாடிக்கு ஆசைபடுகிறான்..
ஆசை வார்த்தைகளும் தன் விசிறிகளின் அறிவிலித்தனமும்  மூலதனமாய் கொண்டு ஆடுகிறான் கோணலாய்..
யதார்த்தம் என்ன வென்று அறியவில்லை..
அறியும் அறிவுமில்லை..
இவர்கள் எங்கள் எதிரிகள் அல்ல..
ஏனெனில் எங்களை எதிரியாய் நினைக்க கூட தகுதி வேண்டும்..
..
இங்கே அடிமட்ட தொண்டனுக்கு உள்ள அரசியல் தெளிவு கூட 
"தலைமை"பதவிக்கு ஆசைப்படும் 
குறைமதியாளனுக்கில்லை..
பாசிசத்தின் சூழ்ச்சி வலையில் விழுந்த மீன்.. 
கருவாட்டுக்கு கூட உதவாது..
அடுத்தவர் உழைப்பில்,
தயவில்,
திமிரில்,  
அதிகாரத்திற்கு ஆசைபட்டால் 
உள்ளதும் போகும்..
..
அரிதார திமிரில் ..
"ராஜா" வேஷம்
கலையும் போதும் தெரியும் சுயரூபம்.. 
ஏணிகள் நகர்ந்தால் விழ நேரிடும் போது அடி பலமாய் விழும்..
எழ முடியாமல் போகும்..
எங்கள் எதிரியாவதற்கு முன் 
தகுதியை வளர்த்துக்கொள்..
"கொள்ள" பேரை பார்த்துவிட்டோம்.. 
பூச்சாண்டி காட்டுவதை விடுத்து பிழைப்பை பார்.. 
ராஜாவாக முடியாது..
ஆகவே முடியாது..
..
நாங்கள் கலைஞரின் 
"பயமறியா" தம்பிகள்..
கொள்கை தெளிவும் உறுதியும் கொண்டவர்கள்..
கட்சியையோ எங்கள் தலைவரையோ சிறுமைபடுத்த நினைத்தாலே சினம் கொள்பவர்கள்.. எங்கள் பலம் 
எங்கள் நம்பிக்கையிலும்  உறுதியிலும் உழைப்பிலும்,நேர்மையிலும் இருக்கிறது.. 
பாசாங்கு செய்வோரை கண்டு "எள்ளல்" கொள்வோம் .. 
..
முதலில் ஊன்றுகோல் இல்லாமல் நடை பழகு!. 
பிறகு..
நீ .. எதிரியா என நாங்கள் முடிவு செய்கிறோம்..
 ஒரு திசைக்கே (கிழக்கு)
உம்மால் தாக்குபிடிக்க முடியாது..
எங்கள் 
"ஆறு" விசையை கண்டால் அவ்வளவுதான்..  மக்கள் முன்
"நடித்தது" போதும் நடையைகட்டு..
..
இனி உதயமாகும் இளஞ்சூரியன்
.. 
ஆலஞ்சியார்

Sunday, October 6, 2024

இன்னமும்கூட சிலர் சரியாக கணிக்க தவறுகின்றனர்.. நீங்கள் நகர்த்துகிற காய்கள் திசையறியாது நிற்கின்ற பரிதாபங்கள்.. திராவிட இயக்கத்தின் நான்காம் தலைமுறைத் தலைவன் #முத்துவேல்கருணாநிதிஸ்டாலின் அவர்களின் சிறிய அசைவுகள் உங்கள் அடித்தளத்தையே அசைத்துவிடுகிறது..  
.. 
அதிகாரம் வேண்டுமென்று தன் சகாக்களை பேச வைத்து உருட்டுகிறீர்..  செழியன்கள் வருகிறார்கள் .. ஐம்பதாண்டு வரலாற்றில் உயர்கல்வித்துறை அமைசசராக்கி வாயடைக்க வைக்கிறார்.. எதிர் முகாமில் கூட "வாழ்த்துபா" வாசிக்கிறாரகள்
உள்ஒதுக்கீட்டை எதிர்க்கிறீர்கள்.. யாருக்கு தரக்கூடாது உச்சநீதிமன்றத்தை நாடுகிறீர்களோ அந்த சமூகத்தின் பிரதிநியையை ஆதிதிராவிடர் நலத்துறையின் அமைச்சராக்கி அழகு பார்க்கிறார்.. நீங்கள் ஆட்டம் தொடங்கும் முன்பு அரண் அமைத்து "செய்வதறியாதுசெய்துவிடும்" ஆற்றல் மிகு தலைவன் தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருக்கிறார் ..
Chief Minister of Tamil Nadu  M. K. Stalin 
..
ராஜாஜி தூக்கிக் கொண்டு வருவதிலேயே உங்கள் கால்கள் ஆட்டம்காண தொடங்கிவிட்டதை உணர்த்துகிறது.. உங்களுக்கு தெரியும் திருமா அவர்களே! 1952 ஆண்டு நடந்த சலவை தொழிலாளர்கள் மாநாட்டில் எங்கள் குழந்தைகள் நான்காவது வரையாவது படிக்க அரசு உதவி செய்ய வேண்டும் என்ற கோரிக்கைக்கு பதிலளித்த மூதறிஞர்..? ராஜாஜி துறை சார்ந்த கோரிக்கைகளை கேளுங்கள் சவுக்காரம் துணி துவைக்க தண்ணீர் படித்துறை வேண்டுமென கேளுங்கள் என்றவர் தான் ராஜாஜி.. 
..
மதுவிலக்கு சாத்தியமா என மனசாட்சியை கேட்டு பாருங்கள்.. மதுவிலக்கு மாநாடு  அருகில் மூன்றுநாள் வியாபாரம் ஒரே நாளில் நடந்தது.. மது  ஒழிப்பு  விழிப்புணர்வு  பிரச்சாரங்களை மதுவால் ஏற்படும் தீமைகளை எடுத்துரைத்து பிரச்சாரங்கள் செய்யலாம் ..
..
தி.மு.கழகம் பவளவிழா கண்டு இன்னமும் நிமிர்நடை போடுகிறதே காரணம் தெரியுமா.. வசவுகளை கடும் கண்டனங்களை தொடர் துரோகங்களை சந்தித்தும் இன்னமும் மக்கள் பணியில் மற்ற கட்சிகளுக்கு வழிகாட்டியாய் திகழ்கிறதே! ஏன் தெரியுமா.. தெளிவான கொள்கை,  தீர்க்கமான சமூகப்பார்வை, நெஞ்சுறுதியோடும் நேர்மையோடும் அரசியல் செய்தல், தொலைநோக்குப் பார்வை இவைகள்.. இன்னமும் பல நூற்றாண்டுகள் கடந்தாலும் தி.மு.கழகம் செயலாற்றும்.. 
அருந்ததியர் உள்ஒதுக்கீட்டை எதிர்த்து உச்சநீதிமன்றம் சென்றபோதே உங்கள் "சமூகநீதி"பார்வை அநீதியானது ..
..
திமுக தமிழர்களுக்கான இயக்கம்  திமுக விளிம்புநிலை மக்களுக்கானது.. எல்லோருக்கும் எல்லாம் என்ற பொது கோட்பாட்டை கொண்டது.. குறுகிய வட்டத்திற்குள் அமைத்திட முடியாது.. தி.மு.கழகம் இயங்கிக் கொண்டே இருக்கும்..
..
ஆலஞ்சியார்