Saturday, February 9, 2019
திருப்பி போ
#GobackModi..
ராஃபேல் விவகாரத்தில் பிரதமர் மோடி மிக கடுமையான முறையில் சிக்கி கொண்டதாக இன்று அநேகமான நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. குறிப்பாக அன்றைய பாதுகாப்பு துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் எழுதிய கடிதத்தில் எந்த டீலிங்காக இருந்தாலும் மோடியிடம் பேசிக் கொள்ளுங்கள் என்பதே மிக முக்கியமானதாக பேசபடுகிறது..
தி இந்து பத்திரிக்கை ஆசிரியர் நிர்மலா மீது எந்த குற்றசாட்டும் இல்லாத போது ஏன் பிரதமரை காப்பாற்ற இவ்வளவு முயற்சிக்கிறாரென கேள்வி எழுப்பியிருக்கிறார் .. மோடிக்கு எதிராக குற்றசாட்டின் கைகள் நீள்வதால் மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டிருப்பதாக பத்திரிக்கைகள் எழுதுகின்றன ..இந்த பிரச்சினையில் இருந்து அவ்வளவு எளிதாக வெளியே வர முடியாது என்பது தான் உண்மையாகும்...ஏனெனில் ஆட்சி மாறும் நிலையில் மோடி விசாரணையை சந்திக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது ..
..
திரு.ராகுல் நேரடியாக திருடரென குற்றம்சாட்டி பேசிவருகிறார்.. நேற்றுவரை ஊழலுக்கெதிரானவராக இதே ஊடகங்களால் கட்டமைக்கபட்ட பிம்பம் தகர்ந்தெறி தொடங்கியிருக்கிறது வெற்று கூச்சலும் வீராப்பும்,பொய்பித்தலாட்டமும் வாய்சவடாலும் நீண்டநாள் நிலைத்துநிற்காதென்று நீண்டகாலம் தாங்கிபிடிக்கமுடியாதென்று ஊடகங்கள் தூக்கியெறிய தயாராகியிருப்பது ஊடக அறம் இன்னமும் மிச்சமிருப்பதை உணர்த்துகிறது ..
2019 தேர்தல் பாஜகவிற்கு பெரும் சவாலாக இருக்கும் ..
..
தென்னகத்தில் தமிழகம் கேரளாவை தொடர்ந்து ஆந்திராவில் GoBackModi என்ற பதாகைகளை பிரமாண்டமாக நிறுத்தியிருக்கிறார்கள் கறுப்புநாள் என ஆந்திர முதல்வர் பகிரங்கமாக அறிவித்திருக்கிறார்.. இந்திய வரலாற்றில் ஒரு பிரதமரை வராதே போ என எந்த மாநிலமும் சொன்னதில்லை .. எதிர்ப்புகள் இருந்திருக்கின்றன மிக மோசமான தோல்வியை தந்திருக்கிறார்கள் ஆனால் உள்ளே வராதே என்று கேவலபடுத்தியதில்லை தமிழ்நாட்டில் உணர்வுபூர்வமாகவே பாஜக மீதான சித்தாந்த எதிர்நிலை பாசிசத்தை விரட்ட வேண்டுமென்ற எண்ணம் தமிழக மக்களின் மனதில் பதிந்துபோன ஒன்று .. ஆனால் ஆந்திராவில் அப்படியில்லை இப்போது அங்கும் மோடி மீதான கோபம் பெருமளவில் கூடியிருப்பது பாஜக அரசின் செயல்பாடுகளும் ஆந்திராவிற்கான நலதிட்டங்களை கண்டுகொள்ளாமல் காலங்கிடத்தியதும் மோடி மீதான வெறுப்பை அதிகபடுத்தியிருக்கிறது .. மிக மோசமான எதிர்ப்பை வெறுப்பை சந்திக்கிற பிரதமராக மோடி இருக்கிறார் ..
..
தமிழகத்தில் தொடர்ந்து மோடியை கறுப்புகொடிகாட்டியும் பலூன்கள் பறக்கவிட்டும் விரட்டாத குறையாக மரியாதை செய்கிறார்கள் நாளை திருப்பூர் வருகிறார்.. திருப்பூரில் சிறுதொழிலை நசுக்கி அல்ல அழித்து பல்லாயிரணக்கான தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பை இழக்க செய்து முதலாளியாக வலம்வந்தவர்களை கூலி தொழிலாளிக்கிய பெருமை மோடி அரசையே சாரும் .. தமிழகத்தில் தனித்து நின்று நோட்டோவை மிஞ்ச முடியாதவர்கள் அதிக தொகுதிகளை ஒதுக்கும் நிலைக்கு அதிமுக வந்திருக்கிறதென்றால் அதிமுகவின் நிலை மிக பரிதாபகரமாக இருக்கிறதென்றே பொருள் .. பாஜகவின் பிடியில் சிக்கியிருக்கிறார்கள் இவர்கள் அடித்த கொள்ளையை கண்டுக்கொள்ளாமல் காப்பாற்றுகிற கேடுகெட்ட செயலை பாஜக செய்கிறது ..ஊழலுக்கு எதிரான இயக்கத்தை தொடங்குவதாக சொல்லி ஊழலில் திளைத்துநிற்கிற அதிமுகவினரை காப்பாற்றி .. அதிமுகவை அபகரிக்க செயலை மக்கள் புரிந்திருக்கிறார்கள் ...
..
தமிழகத்தை தொடர்ந்து கேரளம் ஆந்திரா என விரிவடையும் மோடிக்கெதிரான GobackModi கோஷம் ...வடமாநிலங்களில் வியாபிக்க தொடங்கியிருக்கிறது அரசியல் அறநெறியற்ற ஜனநாயக மரபுகளை காற்றில் பறக்கவிட்ட மக்களை பிரித்தாளும் சூழ்ச்சியை கையிலெடுத்து மதவெறியை தூண்டி நாட்டை குட்டிசுவராக்கிய மோடி அரசை.. பாசிச பாஜக அரசை.. ஆர்எஸ்எஸின் மறைமுக ஆட்சியை விரட்டிட இப்போதே தொடங்குவோம் ..
#ModiNeverAgain
#IndiaHatesModi
#GoBackModi
..
ஆலஞ்சியார்
Friday, February 8, 2019
தளபதிபடை தரணி ஆளும்
ஒரே மாதம்
12,167 கிராமங்கள்
ஒன்னரை லட்சம் திமுகவினர்
எழுபத்தி ஐந்து லட்சம் மக்களை நேரில் சந்தித்துப் பேசியிருக்கிறார்கள் ..இல்லை கலந்துரையாடியிருக்கிறார்கள் .. மிக சிறந்த களப்பணியாக இதை கருதுகிறேன் ஜனநாயகத்தின் வேர்களை தேடிய இந்த பயணம் மிக சிறந்த மக்கள் எழுச்சியை தரும் .. மாநில அரசாலும் மத்தியில் ஆளும் பாசிச அரசின் கொடுங்கையாலும் ஏமாற்றபட்டு சொல்லண்ணா துயரத்தில் சிக்கி தவிக்கும் மக்களின் இறுதி நம்பிக்கையாக திமுக இருப்பதில் மகிழ்ச்சி..
ஆனால் அதோடு முடிந்ததல்ல .. தேர்தல் களப்பணி என்பது வாக்குகளை ஒருங்கிணைத்து அதை சரியாக தேர்தல்நாளன்று திமுகவை நோக்கியதாக மாற்றும் பெரும்பணி நமக்கிருக்கிறது ..
எதிரிகள் சிரமபட்டு வாக்குகள் திமுகவிற்கு செல்வதை தடுக்க பெரும்முயற்சி எடுப்பார்கள் .. ஜாதிய வன்முறை மதவெறியை தூண்டுவார்கள்
பொய் பிரசாரங்களை நடிகர்களை கொண்டு புதியதொரு மாற்றத்தை தூய்மை தரபோவதாக கூட பேசிதிரிவார்கள் மக்களின் மனநிலையை துசை திருப்ப எதையெல்லாம் செய்யமுடியுமோ அத்தனையும் நெறியின்றி செய்ய துணிவார்கள் ..பொய்யும் பணமும் பேசுபொருளாக்கபடும் எப்படியேனும் திமுகவிற்கு செல்லும் வாக்குகளை மடைமாற்ற முடியாதா..? என செயல்படுவார்கள் அத்தனையையும் கடந்து வெற்றியொன்றே குறிக்கோளாய் செயல்பட வேண்டிய தருணம்,.. யார்யாரை கூட்டணியில் சேர்க்கலாமென்று சமூக வலைதளங்களில் விவாதிப்பதும் யாரை சேர்க்கலாமென பரிந்துரைப்பதும் தேவையில்லாதது தலைமைக்கும் கழக நிர்வாகிகளுக்கும் நம்மை விட துல்லியமாக கணிக்கும் ஆற்றல் உண்டு யாரோடு சேர்ந்து பயணிக்கவேண்டுமென்ற திறமைமிகு செயல்திட்டம் உண்டு கொள்கையில் பிறழாமல் கட்சியை வழிநடத்தும் பேராற்றல் தளபதிக்கு உண்டு .. இக்கட்டான காலகட்டத்தில் நாட்டை நல்லவர்களிடம் ஒப்படைக்க மக்கள் விரும்புகிறார்கள் ..மதவெறியை தூண்டி குளிரிகாய்கிற குள்ளநரிகளிடமிருந்து தேசத்தை மீட்க குறிப்பிட்ட வர்க்கத்தினருக்காக ஒட்டுமொத்த மக்களையும் நடுத்தெருவில் நிறுத்திய கேடுகெட்டவர்களை விரட்டிட இந்திய அரசை வழிநடத்தும் பேராற்றலை கண்டு அவர்களோடு இணைந்து நாட்டின் நாசசக்திகளை விரட்டிட
தளபதியை கையில் பெரும் வெற்றியை சேர்த்திட உழைக்கவேண்டும் ..
..
எங்கு திரும்பினாலும் திமுக கொடிகள், கூட்டங்கள் கிராமங்கள் தோறும் மக்களின் தன்னெழுச்சி.. இந்த பாசிசத்தின் காலடியில் மண்டியிட்டு கிடக்கும் மூடர்களை விரட்டவேண்டுமென்பதற்காக மக்களின் பேராதரவை திமுகவிற்கு வருவது கண்டு
எதிரிகளுக்குப் பயம் வரத்தானே செய்யும்..
புலம்பத்தானே செய்வார்கள்.. அதையெல்லாம் கணக்கில் கொள்ள தேவையில்லை ..
அதிமுக அணியில் நோட்டாவை தாண்ட முடியாத கட்சியான பாஜகவிற்கு இரட்டை இலக்கில் தொகுதி ஒதுக்குவதிலிருந்தே அதிமுகவினர் எந்தவளவிற்கு அவர்கள் பிடியில் இருக்கிறார்களென தெரிகிறது வசமாக மாடிடிக்கொண்ட விழிபிதுங்கி நிற்கிற கோழைகளாய் அதிமுகவினர் நிற்பது கண்டு தமிழகமே சிரிக்கிறது .. மிகப்பெரிய தோல்வியை அதிமுக அணி சந்திக்கும்
..
கீழ்வானம் சிவக்கும்
இருள் விலகும்
உதயசூரியன் மெல்லென சிரிப்பான்
தளபதிபடை தரணி ஆளும் ..
..
ஆலஞ்சியார்
Thursday, February 7, 2019
அழுக்கர்கள்
திமுகவுடன் கூட்டணி இல்லை திமுக ஊழல் கட்சி ..அழுக்குபொதியை சுமக்க மாட்டோம்..கமல்
..
கமலுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை ஆனால் பொதுவாக நவீன முற்போக்குவாதிகள் புதிதாய் கட்சி தொடங்குபவர்கள் அரசியல் கட்சிகள்
ஆரம்பித்தவுடனேயே திமுகவை தொடர்ந்து ஊழல்கட்சி என்பதைபோல பேசி சித்தரித்துவருவதை மறுக்கவேண்டியதிருக்கிறது..
இதுவரை எந்த வழக்கிலாவது திமுக தலைமையோ அல்லது பிரதான தலைவர்களோ நீதிமன்றத்தால் தண்டிக்கபட்டிருக்கிறார்களா .. திமுக மீது சுமத்தபபட்ட குற்றசாட்டுகளில் இந்த ஐம்பது ஆண்டுகளில் ஏதேனும் ஒருவழக்கில் ஊழல் குற்றசாட்டு நிரூபிக்கபட்டிருக்கிறதா.. கட்சி ஆரம்பிக்கறவனெல்லாம் திமுகவை ஊழல்கட்சி என்று சொல்வதின் சூட்சமம் இதுதான் .. திமுக எதிர்த்தால் தான் அறியபடுவோம் என்கிற அரசியல் அறிவு தெரிந்திருக்கிறது அவ்வளவுதான் ..
..
விடுதலை இந்தியாவின் முதல் ஊழல் குற்றசாட்டு
டி.டி கிருஷ்ணம்மாச்சாரி என்ற காங்கிரஸ்காரர் மீதுதான் நேரு அமைச்சரவையிலிருந்து பதவி விலக நேர்ந்தது பார்பனர் என்பதால் இதுவரை அந்த ஊழல்பற்றி யாரும் பேசுவதில்லை .. விடுதலை இந்தியாவில் முதல்வராக நீதிமன்றம் சென்று குற்றம் நிரூபிக்கப்பட்டு சிறைக்கு சென்ற பாப்பாத்தி ஜெயலலிதாவை பற்றி தியாக சீலர் அளவிற்கு பேசுகிறார்கள் அரசே மக்கள் வரிப்பணத்தில் நினைவுமண்டபம் அமைக்கிறது பாரத ரத்னா வழங்கவேண்டுமென கேட்கிற அவலமெல்லாம் நடக்கிறது தண்டிக்கபட்டு நிபந்தனை பிணையில் இருந்தவரை மத்திய அரசின் நிதியமைச்சரே நேரில் சந்தித்தார் .. அப்போதெல்லாம் வாய் திறக்காத முற்போக்கு பாப்பான் திமுகவை குறை கூறவேண்டுமென்பதற்காக ஊழல்கட்சி என்கிறார் ..
வாய்புளித்ததென்று சொல்லி திரிகிறவர்களுக்கு முடிந்தால் திமுக மீதான குற்றசாட்டை நிரூபியுங்கள் ..எந்த வழக்கையும் கண்டு அஞ்சியதில்லை ..வாய்தா வாங்கி ஓடியொளிந்ததில்லை நீதிமன்றத்தில் எனக்கு வியாதி இருக்கிறதென சலுகை கேட்கவில்லை சட்டப்படி எதிர்கொண்டு பொய்குற்றசாட்டை தவிடுபொடியாக்கி நெருப்பில் இட்ட பொன்னை போல மிளிர்கிறது திமுக ..
..
ஏதோ இவர்கள் மட்டும்தான் உத்தமசீலர்கள் போல பாவலா காட்டுகிறார்கள் கறுப்புபணம் அதிகம் புழங்கும் சினிமாதுறையில் இருந்து வந்து வாங்குகிற சம்பளத்தை கூட பாதி வெள்ளையாகவும் மீதி கறுப்பாகவும் பெறுகிறவர்கள் உத்தம நடிகனாய் வலம் வந்தால் நம்பிவிடுவார்களென காலம்போன காலத்தில் கதைத்து திரிகிறவர்களுக்கு .. அரசியல் புகலிடம் அல்ல என்பதை உணர்த்தவேண்டும் .. திமுக அழுக்காம் .. பழைமை கூட அழுக்காய்தான் தோன்றும் .. எம் பாட்டானின் அறிவு சுவடிகளை பழசை எரிக்க வேண்டுமென சொல்லி தீயிலிட்டு போகி கொண்டாடியவர்களின் வாரிசு தான் மீண்டும் அழுக்கென்று வருகிறது .. அரசியலில் கண்ட கழிசடைகளும் வரலாமென்ற எண்ணம் தாம் அழுக்கானது ..என்றாவது மக்களுக்காக போராடியோ பரிந்து பேசியோ அவரின் துயரங்களுக்காக வாதாடியோ அவர்களின் தேவைகளைப்பற்றிய அறிவோ இல்லாமல் சினிமா வாய்ப்பு குறைந்தவுடன் நேராக அரசியலுக்கு வந்து
திமுகவை திட்டினால் தான் அரசியலில் பிழைக்கமுடியுமென்ற பழைய யுக்தியை கையிலெடுக்கிறார்கள்.. எடுத்தவனெல்லாம் இருக்குமிடமே தெரியாமல் போனதாக தான் வரலாறு .. எச்சரிக்கை..
..
அழுக்கர்கள்
Wednesday, February 6, 2019
அதிமுக தலையில் தொங்கும் தூக்குகயிறு பாஜக
விகடன்
பா ஜ க வுடன் அ தி மு க கூட்டணி அமைத்து போட்டியிட்டால் நாங்கள் நிச்சயமாக நாங்கள் அ தி மு க விற்கு வாக்களிக்க மாட்டோம் என்பதே தமிழ் நாட்டில் பெரும்பாலானோர் கருத்தாக உள்ளது...
அதி மு க தனித்து போட்டியிட்டால் வாக்களிப்பீர்களா ?..என்ற கேள்விக்கு நிச்சயமாக நாங்கள் அ தி மு க விற்கும் வாக்களிக்க மாட்டோம். ஏனெனில் வெற்றி பெற்று பின்னர் மீண்டும் அவர்கள் பா ஜ க விற்குதான் ஆதரவு தெரிவிப்பார்கள் என்று தமிழ் நாட்டில் உள்ள பெரும்பாலான மக்கள் தங்களின் கருத்தை தெரிவித்ததாக விகடன் கருத்துகணிப்பு சொல்கிறது ..
..
மிகையில்லை
அதிமுகவிற்கு வாக்களிப்பதென்பது இன்றைய சூழலில் அது பாஜகவிற்கு மட்டுமே பலன்தரும் தமிழகத்தின் பாஜக செல்வாக்கென்பது ஏறக்குறைய பூஜ்யம் நிலையில்தான் இருக்கிறது ஆனால் அதை தூக்கிபிடிக்க வேண்டிய நெருக்கடியில் அதிமுக இருப்பதுதான் கொடுமை வேறு வழியில்லை .. அவர்கள் மீது இருக்கும் வழக்குகள் கொள்ளையடித்ததின் தெளிவுகள் வெளிப்படையாகவே ஊழல் இவையாவும் அவர்களை கைகட்டி சேவகம் செய்ய வைக்கிறது .. பாஜக தன்மையாகவெல்லாம் இல்லை மிரட்டுகிற தொனியில் தான் செயல்பாடுகள் இருக்கின்றன எந்த தொகுதி என்பதை கூட அவர்களே தீர்மானிக்க நிலை .. பாமகவை விட வாக்குவங்கி குறைவாக இருந்தபோதும் அதிக இடங்களை கேட்கிற துணிவு எங்கிருந்து வந்தது நேட்டாவை கூட தாண்ட முடியாத கட்சி பிரதான ஆளும்கட்சியிடம் எண்ணிக்கை அதிகமாக கேட்கிறதென்றால் காரணம் இவர்களின் குடுமி அவர்கள் கையில் வேறுவழியின்றி தலையாட்டுகிற கேடுகெட்டநிலை .. பேராசையில் பதவி மோகத்தில் கிடைத்த வாய்ப்பை வைத்து முடிந்தளவு சுருட்டிக்கொண்டு போய்விடவேண்டுமென்ற தவிப்பில் செய்த தில்லுமுல்லுகள் இப்போது நிற்க வக்கில்லாதவனை தோளில் சுமக்கவேண்டிய நிலை அதனால் தான் மக்கள் மிக தெளிவாக அதிமுகவிற்கு வாக்களித்தாலும் தேர்தலுக்கு பிறகு அவர்கள் பாஜகவோடு கூட்டணி வைப்பார்கள் என்று சொல்லியிருக்கிறார்கள் ..
..
அதிமுகவின் நிலை பரிதாபகரமாக இருப்பதையே இப்போதைய நிகழ்வுகள் காட்டுகிறது .. கொள்கைப்பிடிப்போ அரசியல் தெளிவோ இல்லாமல் கருணாநிதியை எதிர்க்கவேண்டுமென்ற ஒற்றை நோக்கத்திற்காக அதையே பலமாக எண்ணி தொடங்கபட்ட கட்சி எம்ஜிஆர் எனும் கவர்ச்சியும் அறுபது எழுபதுகளில் சினிமா மீதான மோகமும் நிழலை நிஜமென நம்பிய அறியாமையும் காலபோக்கில் ஏற்பட்ட தெளிவில் மெல்ல கரைய தொடங்கியது .. அதை பார்பனீய சக்திகள் தங்களின் நலனுக்காக கட்டிகாத்தார்கள் திமுக எதிர்க்க வேண்டிய நிர்பந்தத்தில் அதிமுகவின் செயல்கள் பாதகம் தருமென்றும் அறிந்து ஊடகத்தின் துணையோடு அதிமுகவை காத்தார்கள் .. அதிமுக என்பதே பாசிசத்தின் மற்றொரு வடிவமாகதான் காத்துநின்றார்கள் இடையிடையே துளிர்விட நினைத்தபோது மக்கள் தந்த மரண அடி .. அவர்களை வளரவிடாமல் தடுத்துநின்றது .. ஜெயலலிதா ஊழல் வழக்கில் சிக்கி குற்றம் நிரூபிக்கபட்டபின் .. தொடர்ந்து சிறை விடுதலை மேல்முறையீடென ஜெயலலிதாவை காத்து கட்சியை ஒட்டுமொத்தமாக குத்தகைக்கு எடுக்க தீட்டிய திட்டம் இப்போது கைகொடுக்கிறது .. ஆனால் களம் வேறுமாதிரியான உண்மை உணர்த்தும் போது புரியும் ..இன்னும் எத்தனை காலமானாலும் பாசிச பார்பன சக்திகள் இங்கே வேரூன்ற முடியாது எத்தனை மாறுவேடம் தரித்தாலும் கண்டு சின்னபின்னமாக்கி சிதறி ஓடவிடுவார்கள் தமிழர்கள் ..
..
தமிழுக்கு தமிழர்க்கு தமிழ் மண்ணுக்கு தமிழனின் கலாச்சாரத்திற்கு எதிரானவர்கள் இந்த பாசிச பார்பனர்கள் .. தமிழனை அடிமைபடுத்திட நினைக்கிற இவர்கள் இயல்பை எப்போதும் விரட்டுவார்கள் .. பாஜக என்பதே பார்பனர் நலனுக்கான கட்சி அதை தூக்கிவைத்து கொண்டாட நினைத்தால் அதிமுக அழிய தொடங்கும் .. எப்போதுமே பாஜகவை ஏற்காத தமிழக மக்களின் மனநிலையை தான் விகடன் கருத்துகணிப்பு சொல்கிறது ..
அதிமுக தலையில் தொங்கும் தூக்குகயிறு பாஜக
..
ஆலஞ்சியார்
Tuesday, February 5, 2019
அரசியல் பிழை
ராமதாஸ் ..
இன்றைக்கு சமூகவலைதளங்களில் அதிகம் பேசபட்டிருக்கிறார் முன்பு பேசியவைகளை எல்லாம் மீண்டும் மீண்டும் எடுத்து பதிவிடுகிறார்கள் ..
கார் உள்ளளவும் கடல் நீர் உள்ளளவும் ..
கிழக்கே உதிக்கிற சூரியன் மேற்கே உதித்தாலும்... என்று பேசிய வசனங்கள் மீண்டும் ஒளியிழையை எடுத்து போட்டு பாவம் பாமககாரர்களை நெளிய செய்கிறார்கள் .. திமுக அதிமுகவோடு கூட்டணி இல்லையென எழுதி கையெழுத்து போட்டுதரவா என்றெல்லாம் கேட்கிறார் .. நாமெல்லாம் மறந்து போனதை சமூகவலைத்தளங்களில் இட்டு ராமதாஸுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்துவதாக எண்ணினால் அது தவறு அவர் எப்போது அரசியலில் நேர்மையோடு நடந்திருக்கிறார் ..
ஜெயலலிதாவோடு பிணங்கி வெளியே வந்த போது அவர் சொன்ன வார்த்தை சுய தெளிவுள்ள எந்த மனிதனும் சொல்ல முடியாத வார்த்தை .. வன்னியர் சங்கமாக இருந்த போது தன் சமூக மக்களிடத்தில் நன்மதிப்பை நம்பிக்கையை பெற சத்தியம் செய்தார் .. நானோ என் குடும்பத்தினரோ சட்டமன்றத்திற்கோ நாடாளுமன்றத்திற்கோ செல்ல மாட்டோம் என்ற உறுதிமொழியை தந்தார் .. தன்னை நம்புகிற வன்னிய சொந்தகளிடமே பொய் பேசி தன் நலன் தன் குடும்ப நலன் மட்டுமே குறிக்கோளாய் செயல்படுபவர் .. பாமக என்பது வன்னியருக்கான கட்சி என்பது கூட தவறு .. அது ராமதாஸ் குடும்ப நலனுக்கான கட்சி அவ்வளவுதான் ..
..
திராவிட கட்சிகளோடு 102% விழுக்காடு கூட்டணி இல்லையென்றவர் திராவிட கட்சிகள் தமிழகத்தை சீரழித்துவிட்டன என்று மாற்றம் முன்னேற்றம் என்று வகுப்பதெடுத்தவர் ..தன்னை மட்டுமே அறிவாளியாக எண்ணிக்கொண்டு நேருக்கு நேர் விவாதிக்க தயாரா என்றவர் .. தனித்துவிடப்பட்ட நிலையில் யாருமே கண்டுக்கொள்ளாமல் போக வேறுவழியின்றி தனக்கு எம்பி பதவியாவது கிடைக்காதா என்ற நப்பாசையில் எதையும் இழக்க தயார் என கேவலபட்டுநிற்கிறார் .. ஆரம்பகாலங்களில் 6% விழுக்காடு வாக்குவங்கி குறைந்து குறைந்து வடமாவட்டங்களில் செல்வாக்கை இழந்து கட்டிவச்சகாசை (டெபாசிட்) கூட இழந்த நிலையில் கட்சியின் அங்கீகாரம் பறிக்கபடுகிற நிலைக்கு ஆளாகி நிற்கிறார் .. பாமகவின் வாக்கு வங்கியான வன்னியர்களிடையே சாதிவெறியை தூண்டி .. தாழ்த்தபட்ட மக்களின் மீதான தாக்குதல்கள் அவர்களின் குடிசைகளை கொளுத்துதல் என இளைஞர்களை வழிகெடுத்து கட்டமைக்கபட்டது .. சாதிவெறி நீண்டநாள் கைகொடுக்காது என்பதை உணரவே இல்லை .. எப்போதெல்லாம் தொய்வு ஏற்படுகிறதோ அப்போதெல்லாம் சாதிவன்மத்தை தூண்டி குளிர்காய்ந்ததின் விளைவு சொந்த சமூகமக்களாலேயே புறக்கணிக்கபடுகிற சூழல் வந்தது .. சாதியோ மதமோ அரசியல் சிலகாலம் நிற்க உதவுமே தவிர நீண்டநாள் பயனிக்க முடியாது
..
இன்றைய ட்விடில் ராமதாஸ்
https://twitter.com/drramadoss/status/1092679587027251201?s=19
நாடாளுமன்ற கூட்டணி குறித்து தவறான
தகவல்களை ஊடகங்கள் தருவதாக சொல்கிறார் யாரை திருப்திபடுத்த இதை செய்கின்றன என்கிறவர் ஊடகங்கள் தர்மத்தை கடைபிடிக்க வேண்டும் தரகுவேலை பார்க்க கூடாதென்று ட்விட் செய்திருக்கிறார் ..
அறமென்றால் என்னவென்று தெரியுமா .. இவர் இதுவரை அரசியலில் எடுத்த நிலைபாடுகளும் அதற்காக அவர் சொன்ன காரணங்களும் அறம் சார்ந்துதான் இருந்ததா ..? அரசியலில் நெறிகெட்ட ஈன செயலை கூட கொஞ்சமும் கூச்சமின்றி செய்தது யார் அரசியலில் குறைந்தபட்ச நம்பிக்கையையாவது இனி கடைபிடித்திருக்கிறாரா
அடுத்தவர்களை பிற கட்சிகளை கொள்கை ரீதியாக எதிர்ப்பதென்பதில் தவறில்லை மாறி மாறி கூட்டணி வைப்பது கூட சரியான காரணவிடயங்காக இருக்கவேண்டும் சமூகசார்ந்த அக்கறையும் .. நாட்டின் நலனும் மக்கள் விரோத ஆட்சியை எதிர்க்க இருக்கவேண்டுமே தவிர .. சுயநலனுக்கானதாக மாறி மாறி சவாரி செய்தல் எப்படி அரசியல் நெறியாகும்
மொத்தத்தில் ராமதாஸ் நெறிகெட்ட அரசியல்வியாபாரி அவ்வளவுதான்..
..
#ராமதாஸ்_ஓர்_அரசியல்பிழை ..
Sunday, February 3, 2019
மதவெறியை சாய்ப்போம்
இத்தனை காலம் மத்தியில் கூட்டாச்சியில் இருந்த திராவிட கட்சிகளால் என்ன பயனை தமிழகம் அடைந்தது .. நிர்மலா சீதாராமன்,..
அதுசரி .. மக்களோடு கலந்து மக்கள் தேர்தெடுத்து நாடாளுமன்ற உறுப்பினராகி மந்திரியாகியிருந்தால் தெரிந்திருக்கும் ..தமிழ் தெரிந்த பிராமணருக்கு மந்திரி பதவி வழங்க வேண்டுமென்பதற்காக.. மக்களால் தேர்வு செய்யபட்ட பொன்னருக்கு கூட தராமல் கேபினட் அந்தஸ்து கிடைத்தவருக்கு திமுக அமைச்சரவையில் இருந்தபோது தமிழகம் பெற்ற நலன்கள் என்னென்ன என்பதெல்லாம் தெரியாது ..
..
வி.பி.சிங் ஆட்சிகாலத்தில் பிராமணர்களின் கடும் எதிர்ப்பிற்கிடையே மண்டல்கமிஷன் பரிந்துரையை சட்டமாக்கி இன்றுவரை 27% விழுக்காடு பிற்படுத்தபட்டோர் இடஒதுக்கீடு கிடைக்கிறதே .. எரிச்சல் வரதான் செய்யும் .. தொலைதொடர்ப்பை எளிதாக்கி சாமானியன் கைகளிலும் தந்ததே .. பெரிய முதலாளிகளின் கொள்ளையை தடுத்து .. விளிப்பதற்கு ₹3.75 காசுகள் என்றிருந்ததை .50 காசுகள் என்றாக்கியதே அதனால் 2ஜி என்ற மாய எண்ணை வைத்து திமுகவை அழிக்க நினைத்து .. புடம்போட்ட தங்கமாய் திமுகவும் ராசாவும் மின்னுவது கண்டு எரிச்சல் வரதான் செய்யும் ..
இன்னுமிருக்கிறது
பொடா சட்டத்தை ரத்து செய்ய குரல் கொடுத்தது, சென்வாட் வரி ரத்து உறுதிமொழியை நிறைவேற்றியது, காவிரி நடுவர் மன்றம் அமைத்தது, காவிரி நதிநீர் தொடர்பான இடைக்காலத் தீர்ப்பைப் பெற்றது.
இடைக்காலத் தீர்ப்பின்படி காவிரி நதிநீர் ஆணையம் அமைத்தது..காவிரி இறுதித் தீர்ப்பைப் பெற்றது நீண்டகாலமாய் பல்வேறு அறிஞர்கள் வலியுறுத்தியும் பார்பனர்களால் தடுத்து நிறுத்திய தமிழை நீசமொழியென்று சொன்னவர்கள் வாயடைக்க எங்கள் தமிழை #செம்மொழி ஆக்கியது .. செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் அமைத்தது,
காமராஜர் எண்ணூர் துறைமுகத்தை நாட்டுக்கு அர்ப்பணித்தது, 3 ஆயிரத்து 276 கி.மீ. நெடுஞ்சாலைகளை 4 வழிச்சாலைகளாக மாற்றி, மேம்பாலங்கள் அமைத்து, விரிவாக்கம் செய்தது, சேலம் ரோலிங் மில் சர்வதேச தரத்திற்கு தரம் உயர்த்தியது, தாம்பரத்தில் தேசிய சித்த மருத்துவ ஆராய்ச்சி நிலையம் நிறுவியது, சேலத்திற்கென தனி ரயில்வே கோட்டம், சேலம் மோகன் குமாரமங்கலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டது, சென்னை துறைமுகம்-மதுரவாயல் பறக்கும் சாலை திட்டம், சேதுசமுத்திர திட்டம், நெம்மேலியில் கடல் நீர் சுத்திகரிக்கும் திட்டம், சென்னை மற்றும் எண்ணூர் துறைமுகங்களை இணைக்கும் சாலைகளை அகலப்படுத்தும் திட்டம், அனைத்து மீட்டர் கேஜ் ரெயில் பாதைகளையும் பிராட் கேஜ் பாதைகளாக மாற்ற ஒப்புதல் பெறப்பட்டது, 90 ரெயில்வே மேம்பாலங்கள் மற்றும் சுரங்கப்பாதைகள் அமைக்கப்பட்டது, சென்னை மெட்ரோ ரெயில் திட்டம், ஒகனேக்கல் குடிநீர் திட்டம், தேசிய கடல்சார் பல்கலைக்கழகம், திருவாரூரில் தேசிய பல்கலைக்கழகம், திருச்சியில் இந்திய மேலாண்மை கல்வி நிறுவனம், சென்னையில் மத்திய அதிரடிப்படை மையம் அமைத்தது..
மத்திய அரசின் மூலம் ரூ.72 ஆயிரம் கோடி விவசாயக் கடன் மற்றும் வட்டி தள்ளுபடி, மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் 27 சதவீத இட ஒதுக்கீடு உறுதி போன்ற சாதனை திட்டங்கள் எல்லாம் தி.மு.க. ஆட்சிகாலத்தில் மத்திய அரசின் மூலமாக நிகழ்த்தப்பட்டுள்ளன...
..
ஆனால் வளர்ச்சி திட்டங்களை கண்டு பாசிச சக்திகள் கோபம் கொள்ளவில்லை .. மத்திய கல்வி வேலைவாய்ப்பில் 27% விழுக்காடு பிற்படுத்தபட்டோருக்கு வழங்கியது .. தீக்குளித்தெல்லாம் தடுக்க பார்த்தார்கள் சமூகநீதிக்கு எதிரானவர்கள் .. திமுக ஆட்சிகிகு வந்தால் மத்திய அரசில் அங்கம் வகித்தால் தமிழர்கள் மேலும் மேலும் பலன்பெறுவார்களே.. இங்கே மதவாதத்தை சாதிவெறியை தூண்டி .. சூத்திரனை அடித்துக்கொள்ளவைத்து .. சத்தமில்லாமல் பார்பனர்களை உயர்பதவிகளுக்கும் பிற உயர்க்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு அமர்த்திட முடியாமல் போகுமே என்ற அச்சம் தான் உளறவைத்திருக்கிறது ..பாஜக அரசால் தமிழர்கள் தமிழ்நாடு அடைந்த பயன் ஒன்றுமில்லை .. நோட்டோவை தாண்ட முடியாத நிலையில் அடிமைகள் வைத்து ஏதேனும் நன்மையடைந்திட முடியாத என்ற நப்பாசையில் உலா வருகிறார்கள் ..
பாவம் புதைத்த சுடவே தெரியாமல் அழிய நேரிடும்
திராவிடம் எப்போதும் ஆரியத்திற்கு பாசிசத்திற்கு பிராமணீயத்திற்கு எதிரானது .. இங்கே பார்பனசூழ்ச்சி பலிக்காது வேறு இடம் பார்க்கவும் .. நிர்மலா சீதாராமன் .. யாரென்றே தெரியாதவர்களெல்லாம் பாஜக ஆட்சியில் இருப்பதால் துள்ளுகிறார்கள்.. நாட்கள்
எண்ணபடுகின்றன விரட்டியடிக்கபட்டு.. புதியதொரு அத்தியாயம் குறிக்கபடும் மதவெறியை சாய்க்க தமிழகம் என்றும் முன் நிற்கும் ..
..
ஆலஞ்சியார்
Saturday, February 2, 2019
திமுக மக்களுக்கான இயக்கம்
ஊராட்சி கூட்டமென்று ஊர் ஊராய் போகிறார் ஸ்டாலின் .. எடப்பாடி ..
மக்களை சந்திப்பதில் என்ன தவறு மக்களின் ஆட்சியில் மக்களே தீர்மானிக்கும் சக்தியாய் இருப்பவர்கள் ..ஜனநாயகத்தின் அடிப்படையே,மக்களின் தனிஉரிமையும் அவர்கள் யாரை தேர்வு செய்யவேண்டுமென்று சுயமாய் தீர்மானிக்கும் அதிகாரம் பெறுவதுதான் .. மக்களின் விருப்பு வெறுப்பு அவர்களுக்கு என்ன தேவை எது உடனடி தேவை என்பதறிந்து செயல்படுதல் இது தான ஜனநாயக ஆட்சியின் கடமை .. ஆளும் அரசும் முதல்வரும் அவர் சகாக்களும் மக்களை சந்திக்க துணிவின்றி தவிர்க்கிற நிலையில் எதிர்க்கட்சி தலைவராய் .. மிகப்பெரிய ஜனநாயக இயக்கத்தின் தலைவராய் அவரும் அவரின் சகாக்களும் தொண்டர்களும் மக்களை சந்திப்பது ஏன் முதல்வருக்கு எரிச்சலை தரவேண்டும் ..
..
உள்ளாட்சி தேர்தலை நடத்த வக்கில்லாமல் நீதிமன்றம் உத்தரவிட்டும் காலம் கடத்தி ஜனநாயகத்தின் உயிர்ஊற்று உள்ளாட்சி அதிகாரத்தில் இருக்கிறதென்ற உண்மைகூட அறியாமல் எங்கே உள்ளாட்சி தேர்தலை வைத்தால் மிகப்பெரிய தோல்வியை மக்கள் தந்துவிடுவார்களென அஞ்சி தொடர்ந்து ஏதேதோ காரணங்களை சொல்லி வரும் அதிமுக அரசு .. முன்பு அப்படிதான் எம்ஜிஆர் உள்ளாட்சி தேர்தலையே நடத்தாமல் தவிர்க்க .. கடைசியில் வேறு வழியின்றி நடத்தியதில் 98 நகராட்சிகளில் 90 இடங்களில் திமுக பிடித்ததும் வரலாறு .. மக்களே தங்கள் தேவைகளை கண்டு தீர்வு செய்துகொள்ள எதுவெல்லாம் அவர்களின் அடிப்படையென்பதை அவர்களே முடிவு செய்து தங்கள் வட்டத்திற்குள் முழு அதிகாரத்தோடு செயல்படவே உள்ளாட்சி அமைப்புகள் .. சிற்றூர்களின் (கிராமம்) வளர்ச்சி நலன் சுகாதாரம் போன்ற அடிப்படைகள் கவனிப்பாற்று அவசர தேவைகளுக்கு கூட அதிகாரிகளை நம்பி பின் செல்லகூடிய நிலை .. அதிகாரவர்க்கத்தில் பிடியில் உள்ளாட்சிகள் இருப்பது ஜனநாயகத்தையே கேலிபொருளாக்குகிற செயல் ..இவையெல்லாம் திடீரென்று ஒரு நாளில் சசிகலா சிறைசெல்ல நேர்ந்ததால் முதல்வர் பதவி கிடைத்த எடப்பாடிக்கு தெரியாது .. அன்று எடப்பாடிக்கு பதில் சசிகலா யாரை கைகாட்டியிருந்தாலும் அவர்தான் இன்று முதல்வராய் இருந்திருப்பார் .. எந்தவிதத்திலும் அருகதையற்ற அரசாய் விளங்குகிற அதிமுகவும் அதன் அமைச்சர்களும் தங்களின் ஊழலை மறைக்க
அதிலிருந்து தப்பிக்க பாஜகவின் உத்தரவிற்கு கட்டுபட்டு அடிமைகளாய் இருக்கிறார்கள் .. அவர்களுக்கு மக்களை சந்திக்கிற செயல் அதிர்ச்சியை தொந்தரவை தந்திருக்கிறது ..
..
ஊராட்சி சபை அனைத்து தரப்பினரும் கலந்து கொண்டு கேள்விகேட்கிறார்கள் திமுகவிற்கு வாக்களித்தவர்கள் மட்டுமல்ல வாக்களிக்காதோரும் எதிர்த்து வாக்களித்தோரும் கூட தங்களின் கேள்விகளை தங்கள் தரப்பு கோரிக்கைகளை நியாயங்களை எடுத்துவைக்கிறார்கள் தவறை சுட்டிகாட்டிகிறார்கள் எது எங்களின் தேவை எதிலெல்லாம் நாங்கள் பாதிக்கபட்டிருக்கிறோம் இந்த ஆட்சி செய்த துரோகங்கள் எதிர்க்கட்சியாய் திமுக செய்ய தவறியதென்ன என்பதையெல்லாம் மக்களே முன்வந்து கேட்கிறார்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்கிறார்கள் .. திமுக ஆட்சிக்கு வந்தவுடன் எதையெல்லாம் செய்யவேண்டும் எதுவெல்லாம் முதல் தேவை எதை தவிர்க்க வேண்டுமென்று மக்களிடமே கேட்டு தெரிந்து தெளிவுபெறுகிற நிகழ்வு ..மிக சிறந்த ஜனநாயகதன்மையோடு மக்களே மகேசன் என்ற உயர் தத்துவத்தின் உயிர்நாடியாய் ஊராட்சி சபை கூட்டங்கள் ..
எடப்பாடிக்கு என்றில்லை ஜனநாயகத்தில் நம்பிக்கை இல்லாதோருக்கு அரசியலை தங்கள் நலன் பதவிக்கு என செயல்படுவோருக்கும் சாதிமத அரசியல் செய்யும் அயோக்கியர்களுக்கு எரிச்சல் தரத்தான் செய்யும் ..
..
திமுக மிகசிறந்த பாதையில் பயணிக்கிறது மக்களிடமே சென்று அவர்களின் தேவைகளை அவர்களிடமிருந்தே அறிந்து பணியாற்று வாய்ப்பை பெறும் ஜனநாயக நெறியோடு செயல்படுகிறது .. எல்லாகாலகட்டத்திலும் வெற்றி தோல்வியிலும் மக்களிடமே செல்கிற இயக்கம் .. பணியாற்ற வாய்ப்பு கிடைக்கிற போதெல்லாம் நல்லாட்சியை தந்த.. தரபோகிற இயக்கம் ..விடுதலை இந்தியாவில் உட்சபட்ச ஜனநாயகநெறிகளோடு வெளிப்படைதன்மையோடு இயங்குகிற கட்சி திமுக மட்டும் தான் ..
..
திமுக மக்கள் இயக்கம் மக்களுககான இயக்கம்..
..
ஆலஞ்சியார்
Subscribe to:
Posts (Atom)