Monday, March 30, 2026

திருமாவளவன்..
வேட்பாளர் அறிவிப்பின் ஊடாக ஒரு செய்தியைச் சொல்கிறார்  இனி வரும் காலங்களில் வேட்பாளர் தேர்வை நான் செய்ய போவதில்லை அந்தந்த மாவட்ட பிரதிநிதிகளே தேர்வு செய்யும் முறையை நடைமுறைப்படுத்த போவது சொல்கிறார்.. அதிக இடம் கிடைக்கவில்லை கிடைத்த இடத்திற்கு யாரை நிறுத்துவது என்பதில் ஏற்பட்ட மனகசப்பை அவரது மொழியில் புரிந்துக்கொள்ள முடிகிறது..
..
சிலநேரங்களில் சிலருக்கு தொடர்ந்து வாய்ப்பை வழங்கவேண்டியிருக்கும் சிலரை மாற்றி வேரொருவருக்கு அந்த வாய்ப்பை நல்க வேண்டியிருக்கும் இத்தனை காலம் நான்தானே இருந்தேன் என்னை ஏன் மாற்றவேண்டும் என்று கேட்போர் எல்லா கட்சிகளிலும் காணமுடிகிறது.. தலைமை எடுக்கும் முடிவை ஏற்பதுதான் நீங்கள் ஏற்ற கொள்கைக்கும் கட்சிக்கும் தலைமைக்கும் கட்டப்படுவதாக அமையும் ..
..
திருமா மிக உடைந்துப் போய் இருப்பது தெரிகிறது.. மாநில அரசியலுக்கு அவர் வருவது கூட கட்டமைப்பின் பிடி நழுவுகிறதோ என்ற அச்சத்தின் வெளிப்பாடாக கணக்கில் கொள்ள வேண்டியிருக்கிறது.. உள்கட்சி சனநாயகம் என்பது கருத்தை செவிமடுத்தல் உள்வாங்கல் அவர்களின் பங்களிப்பை மதித்தல்,
முடிவெடுக்கும் முன்பு கலந்தாலோசித்தல் ஆனால் முடிவை எடுக்கும் அதிகாரமும் எது வருங்காலத்தில் கட்சிக்கு நலம் பயக்கும் என அறிந்து செயல்படுதலும் தலைமைக்கு மிக அவசியம்.. சில நேரங்களில் கடுமையும் தேவை.. 
..
திமுக எழுபதாண்டுகளாக சனநாயகத்தின் அடிநாளம் கெட்டுவிடாமல் காத்துநிற்கிறது.. தேர்தல் தோல்வி தொகுதி பங்கீட்டில் பிடிவாதம் நம்பிக்கை துரோகம் குழிபறிப்பு திரைமறைவு வேலைகள் சிரித்தே கெடுக்கும் குணங்கொண்டவர்கள் என எல்லாவற்றையும் கடந்து இன்றும் மக்களிடையே பேசும் பொருளாய் திகழ்கிறது.  திமுகவை மறுத்தே சேர்த்தோ தான் அரசியல் செய்ய இயலும் என்ற நிலையே உருவாக்கி இருக்கிறது..புதிதாக அரசியல் தொடங்குவோர்  ஏற்கனவே அரசியல் செய்வோர்  அரசியல் பழகுவோர் யாராயினும் திமுகவை தவிர்த்து அரசியல் செய்ய இயலாது.. 
..
திமுகவில் எல்லாகட்டங்களிலும் வேட்பாளர் தேர்வில் அதிருப்தியும் பிணக்குகளும் ஏற்பட்டிருக்கிறது ஆனால் எது சரியானதாக இருககும் என தலைமை முடிவெடுக்கும் அதில் உறுதியாக நிற்கும்..  இப்போது கூட தாம்பரத்தில் சலசலப்பு கேட்டது அது உரிமையோடு கேட்டும் விளங்கங்களை பெற்றும் கழகப்பணி செய்ய புறப்பட்டனர் நிர்வாகிகள்.. மன புழுங்கங்கள் மறையும் கழகம் வெல்ல வேண்டும் என்ற ஒற்றை எண்ணமே மேலோங்கும்.  
..
திருமா சொல்லும் மற்றொரு செய்தி தேர்தலுக்கு பிறகான நிலை சூழல் மாறபோகிறது என்பதை புரிந்துக் கொள்ள முடிகிறது.. 
கயிற்றை பலமாக பற்றிக் கொள்ளாவிட்டால் பாமகவிற்கு நேர்ந்த நிலை வரும் என கணிக்கிறாரென எண்ணுகிறேன்..
இரட்டை இலக்க தொகுதி கிடைக்காமல் போனதிலிருந்து அவரின் உடல்மொழி தரும் சேதி எப்படி இதைக் கொண்டு சமாளிப்பது என்பதாக இருந்தது..
மூன்று சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது குறிப்பிடும் போது இருவரை தம்பி என்று ஒருவரை நம்மவர் என்று சொல்கிறார்.. அப்படி சொல்பவரல்ல, பதற்றம் இயலாமை தெரிந்தது..
ஆளூராருக்கு ஏன் கிடைக்கவில்லை என்ற கேள்விகள் சமூகங்களில் பிரதிபலிப்பதும் கட்சிக்குள்ளேயே சிலருக்கு வாய்ப்பு வழங்கமுடியவில்லை என்ற ஆதங்கமும் தெரிகிறது.  
வி.ச.க  போன்ற கட்டமைப்பு பலமாக உள்ள கட்சியில் தலைமைத்துவம் கனிவாகவும் சிலநேரம் கடுமையாகவும் இருக்கவேண்டும்.. இல்லயெனில்
 அது மிகப்பெரிய கேள்விக்குறியாகிவிடும்..
..
திமுக போன்ற மிகப்பெரிய 
வலுவான சனநாயக கட்டமைப்பை  கொண்ட கட்சியில் கூட இதுபோன்று நடந்திருக்கிறது ஆனால் தலைமை கனிவோடு கண்டிப்பும் காட்டி கண்ணியத்தை பேணியிருக்கிறது.. விசிக போன்ற கட்சி ஒடுக்கபட்டவர்களுக்காக மட்டுமல்லாது பொது சமூகத்திற்கும் சனாதனத்தை வேரறுக்கவும் இன்றைய நிலையில் தேவை.. மிகவும் பக்குவப்பட்ட தலைமை சிலநேரங்களில் தளர்வு நேரிடும் அதை காலம் தந்த பரிட்சையாக நினைத்து கடந்துச் செல்லவேண்டும்.. சாதிய நிலைபாட்டை மீறி பொதுவெளியில் பரவலாக நேசிக்கபடுகிற தலைவர்களில் ஒருவராக திருமா திகழ்கிறார்..
..
ஆலஞ்சியார்