Thursday, February 6, 2025

சீமான் ..
ஆரம்பம் தொட்டே நாங்கள் சொல்லிக் கொண்டிருப்பதுதான்..
பொய்யன் .. விடுதலைப்புலித்தலைவனை கண்ட நொடி முதல் இவனின் செயல்களை கண்டும் கணாதிருந்தவர்கள் இன்று கைதேசப்படுகிறார்கள்..  ஒரு புகைப்படம் ஒராயிரம் கதைச்சொல்லி தமிழ் சமூகத்தை மலடாக்கியிருக்கிறது.. கத்தி பேசினால் சொல்வது உண்மையென நம்பியவர்களை கண்டு "நகை" தோன்றுகிறது.. 
..
இன்னமும் இவன் பின்னால் நிற்பவர்கள் போதை தெரியாத பேதைகள்.. பெரியாரை தொட்டவுடன் அடி நாலாபக்கமும் விழ பெரியாரை விட "பெரியவா" வை நம்பியிருந்தால் தமிழகம் முன்னேறியிருக்கும் என்ற நிலைக்கு வந்திருக்கிறார்.. இடையில் பேரறிஞர் எச்.ராசா என்ற புகழ்மாலை வேறு.. சீமானனை நம்பி நிற்கிறார்கள் நிலை தான் பரிதாபம்.. சீமான் தெளிவாக யாரால் உருவாக்கபட்டாரோ அவர்களுக்காக வெளிப்படையாக உழைப்பதை சொல்லியிருப்பது நல்லது..
..
சீமான் தமிழ் சமூகத்தின் விஷம்.. நல்லொழுக்க அரசியலில் இவன் ஒரு கழிசடை.. அரசியலை தனி நபர் விமர்சனத்தை கொஞ்சமும் கூச்சமில்லாமல் பொய்யாய் பேசி திரிவதும் மறுப்போ அல்லது எதிர்வினையோ வந்தால் அப்படிதான் நான் ஒரு பைத்தியக்காரன்  என சொல்லி சிரிப்பதும் தமிழ் நாடு அரசியலில் களங்கமாய் நிற்கிறான்.. 
பெரியாரை மட்டுமல்ல  இவன் எல்லோரையும் வசைபாடுவதும், வாய்க்கு வந்ததை சொல்லி மடைமாற்றுவதும் அரசியல் வேசித்தனம்.. 
..
தமிழ் சமூகம் இவனை இப்போதாவது இனங்கண்டதே.. பொதுவாழ்வில் ஒழுக்கமில்லாத பாசிசத்தின் வளர்ப்பில் வந்த நாய் எஜமானின் சொல் கேட்டு அதிகம் குலைக்கிறது .. வெறிப்பிடித்த நாயை பட்டியில் அடைக்கவேண்டும்.. தமிழ் தேசியம் பேசுகிறவர்களை காலம் சரியான முறையில்  போதிக்கிறது ..முன்பு 
மா.பொ.சி ஆதித்தனார் என சிலர் வந்தார்கள் ஆனால் அவர்களுக்கு திராவிடம் கருணைக் காட்டியது ஆனால் இந்த கயவனை காலம் கொடூரமாய் தாக்கும்..
..
கனிமொழியும் அருள்மொழியும் கர்ப்பப்பையை அறுத்தெறிந்து விட்டார்களா என கேட்கிறான் மூடன்.. 1930ல் பெரியார் பேசியபோது கருத்தடை என்ற ஒன்றில்லை அப்போது குழந்தைகள் பெறுபவது மட்டுமே பெண்கள் வேலை என்றிருந்தது.. மாமியாரும்,மருமகளும் கர்ப்பமாக இருப்பதெல்லாம் சாதாரணமாக நடந்தது.  அப்போதுதான் பெரியார் பெண்களை குழந்தை பெறும் மிஷினாக பார்க்கிறார்கள் கர்ப்பப்பையை அகற்றக் கொள்ள பெண்கள் முன்வர வேண்டும் என்றார்  இப்போது பெண்கள் தெளிவாக இருக்கிறார்கள் தேவையென்றால் பெற்றுக்கொள்ளவும்  வேண்டாமென்றால் தள்ளிப் போடவும் தடைசெய்துக் கொள்ளவும் அவர்களுக்கு தெரியும்.. சீமான்  (வாயை)வாடகைக்கு விடாமல் இருக்கவும்
..
இன்று 
இந்த மண்ணில் எல்லோருக்கும் எல்லாம்  எல்லோரும் சமம் ஏற்றதாழ்வற்ற சமூகம் தழைக்க சமூகநீதி நிலைபெற திராவிட சித்தாந்தமே சரியென புரிதல் வரும்..  
..
கந்தனா சிக்கந்தரா என பாஜக பெரும் பாடுபடுகிறது.. ஆனால் பாருங்க மக்கள் தெளிவாக கந்தனோ கர்த்தரோ கந்தரோ எல்லாம் ஒன்றுதான
 இங்கே உங்கள் மதவெறி வேலைக்காதெனபுரிய வைக்கிறார்கள்.. ஒருபக்கம் சீமான் உவேசாவை விட யார் தமிழன் என்கிறான்  ஆனால் உ.வே.சா வின் மறுபக்கம் அறியாதவன்.. என்னதான் கத்தினாலும் இங்கே அண்ணன் தம்பியாய் அழகுற வாழும் மக்கள் தெளிவுமிக்கவர்கள்.. பக்தி பழமாக நிற்பவை கூட பெரியாரை நேசிக்கிறார்  அது தெரியாமல்தான் பாசிச சக்திகள் பதறுகிறார்கள்.. பல்வேறு வழிகளில் பல்வேறு நபர்களை முன்னிறுத்தி பார்க்கிறார்கள் கடைசயில்
அரிதாரம் கலைந்து அசிங்கபட்டுபோகிறார்கள்.. திரும்பவும் சொல்கிறோம் இது பெரியார் மண்.. இங்கே தமிழிசையின் கூச்சல்களோ,  அண்ணாமலையின் உளறல்களோ சீமானின் உருட்டுகளோ சினிமாக்காரனின் நடிப்போ செல்லாது போகும்.. கேளிக்கைகளுக்கும் பொதுபோக்கிற்கும் பயன்படுமே தவிர மக்களின் தெளிவும் முன் அடிப்பட்டு போகும்.. 
ஆய்ந்தறியும் தெளிவும் புரிதலும் உள்ள தமிழ்நாடு வீணர்களை இடது கையால் புறந்தள்ளும் இது பெரியார் செப்பனிட்ட மண்.. 
..
ஆலஞ்சியார்

Sunday, December 29, 2024

அதிகாரம் ஆள் பார்க்காது  வளர்த்தவனையே வெட்டி சாய்க்கும்.. அப்பன் மகன் என்ற கணக்கெல்லாம் அதிகாரத்தின் கோர முகத்திற்கு தெரியாது.. நாடகம் முடிந்தது.. இனி ராமன் தேவையில்லை..
..
நேற்று பொங்கியவர்கள் இன்று அட "சே" என்கிறார்கள்.. நாம் ஏற்கனவே உ.பி.யில் கண்டதுதான் முலாயம்சிங் என்ற கிழட்டு சிங்கத்தை ஓய்வெடுக்க சொன்னவர்தான் அகிலேஷ் அது தான் இங்கும்.. இனி ராமதாஸின் தயவு தேவையில்லை.. அன்புமணியின் பிடிக்குள் கட்சி வேண்டும்  எங்கே "அக்கா மகன்" உள்ளே புகுந்து விடுவான் என்ற அச்சம் நேற்று அவரின் பேச்சும் செயலும் காட்டியது.. மகளோ மகளின் மகனோ வாரிசாக முடியாதென சொல்லியடித்திருக்கிறார் அன்புமணி..
..
கொஞ்சம் ஒட்டிக் கொண்டிருக்கும் சாதி சொந்தங்கள் மெல்ல வெளியேறலாம்.. கொஞ்சமும் பச்சைபிடிக்காத நிலைதான் ..இனி பாமக எனும் அழுகிய பழம் விற்பனைக்கு உதவாது..  அரசியல் கட்சியில் வாரிசுகள் பின் தொடர்வது ஒன்றும் புதிதல்ல.. ஆனால் அது இயல்பாக எல்லோரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் இருக்க வேண்டும் .. ஆனால் பாமகவில் சௌமியா எப்படி திடீரென வந்தார் என்றெல்லாம் கேட்க கூடாது கடலூர் முகுந்தனுக்கு மறுக்கப்பட்டதில் அன்புமணி அழுத்தம் காரணமென செய்திகள் கசிகின்றன.. 
..
மொத்தத்தில் ராமதாஸ் அடங்கி ஒதுங்கி இருக்கவேண்டும்.. இனி எல்லாவற்றையும் அன்புமணியே பாரத்துக்கொள்வாரென என்ற "சமிக்ஞை" பெரிய அய்யாவிற்கு வழங்கப்பட்டிருக்கிறது..ராமதாஸ் எனும் "சாதிகாரன்" இனி வேண்டாம்.. அன்புமணியை பேச்சை கேட்டு பாஜகவுடனான அரசியல் உடன்பாடு காவு"வாங்க தொடங்கியிருக்கிறது ..
..
இனி வடமாவட்டங்களில் 
பாமக மெல்ல அஸ்தமனமாகும்..
வினை
..
ஆலஞ்சியார்

Saturday, December 7, 2024


ராமநாதபுர சமஸ்தானத்தின் மன்னர் சண்முக ராஜேஸ்வர சேதுபதி. மன்னர் மானியம் ஒழிக்கப்பட்ட பிறகும் மன்னராகவே இருந்தார். எப்படியெனில் சுதந்திர இந்தியாவின் முதல் பொதுத்தேர்தல் முதல் மூன்று தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றி பெற்று வந்தார். 

மன்னராக இருந்தவர் அந்தப் பகுதியில் வெற்றி பெறுவது பெரிதல்ல, அவர் மனுத்தாக்கல் செய்வோதோடு சரி. ஓட்டுக்கேட்டு வரமாட்டார்,கையெடுத்து கும்பிடமாட்டார். ஆனாலும் 1952 சுதந்திர இந்தியாவின் முதல் தேர்தல் தொடங்கி 57,மற்றும் 62 வரை அவர்தான் எம்.எல்.ஏ,வாக வெற்றி பெறுவார். திமுக 57ல் தேர்தல் களத்தில் இறங்கிவிட்டது. இருந்தாலும் 57லிலும் 62லிலும் திமுகவுக்கு வேட்பாளர் கிடைக்கவில்லை. இருந்த பொறுப்பாளர்களும் தயங்கினர். 

1967 தேர்தல் வருகிறது ராமநாதபுரம் தவிர்த்து ஒரு பட்டியலை அண்ணா தயாரிக்கிறார். கூட்டணிக் கட்சிகளும் திமுகதான் ராமநாதபுரத்தில் போட்டியிட வேண்டும் என ஒதுங்கிக்கொண்டன. ஒரு சட்டமன்ற உறுப்பினர் சீட்டு வீணாய்ப் போனது என்றபடி அண்ணா அடுத்த வேலையை பார்த்துக்கொண்டிருந்தார். 

கலைஞர் அண்ணாவிடம் போய் அண்ணா ஏன் ராமநாதபுரத்தை வாங்கிக்கொண்டு அன்னப்போஸ்டாக விட்டுக்கொடுக்கிறீர்கள் என்று கேட்டார். 

அண்ணா சொன்னார் “ விட்டுக்கொடுக்கவில்லை தம்பி..நம்பிள்ளைகள் யாரும் அங்கு தயாரில்லை. தென்னரசே சொல்லிவிட்டார் இனி என்ன இருக்கிறது’ என்றார்.

“வேட்பாளர் பெயர் தங்கப்பன், எனக்காக அவரை அறிவியுங்கள் அண்ணா, தென்னரசுவிடம் நான் பேசிக்கொள்கிறேன்” என்று கலைஞர் சொல்லிவிட்டார். தயக்கம் கொண்ட அண்ணா கலைஞர் சொன்ன வேட்பாளர் குறித்து விசாரிக்கிறார். 

“ஓ அந்தத் தங்கப்பனா? அவர் பெயர் குதிரை வண்டி தங்கப்பன். பேருந்து நிலையத்தில் குதிரை வண்டி ஓட்டுகிறார்” என்று செய்தி வருகிறது. 

கலைஞரின் மேலிருக்கும் நம்பிக்கையில் அண்ணாவும் அறிவித்துவிடுகிறார். கூட்டணிக்கட்சிகளுக்கும் நிம்மதி. 

மன்னர் விசாரிக்கிறார். இம்முறை திமுகவே போட்டியிடுகிறது என்று தகவல் வருகிறது. வேட்பாளர் பெயரைக் கேட்டதும் வெடித்து சிரிக்கிறார். “நம்ம அரண்மனை கிழட்டுக்குதிரைகளை கொடுத்த விலைக்கு வாங்கி பிழைக்கும் தங்கப்பனா என்னை எதிர்த்து நிற்பது..’’ என்று அரண்மனைக்குள் போனவர் வெளியே வரவேயில்லை.

கலைஞர் களத்துக்குப் போனார், தங்கப்பனுடன் வீடுவீடாகச் சென்றார், வீதி வீதியாய் சென்றார். முடிவாய் ‘குதிரை வண்டி’ தங்கப்பன் ராமநாதபுர சமஸ்தானா மன்னரை வென்றார். அதன் பின்னர் மன்னர் போட்டியிடவேயில்லை.இப்படி ஜனநாயக களத்திலும் மன்னர் தோரணையில் அதிகாரத்தை கைப்பற்றியிருந்த மன்னர்களின் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்து மக்களாட்சியை நிறுவியது திமுக என்கிற அரசியலியக்கம்.

யார் யாரை முடிப்பது என்பது இங்கு வேலையில்லை, யார் இறுதிவரை மக்களுடன் இருப்பது என்பதே வேலைத்திட்டம். ஒரே தேர்தல் முடிவுகளில் அரசியல் ஆசையை மூட்டைகட்டியவர்களின் முடிவுகளை கண்ட இயக்கம் திமுக. மன்னாதி மன்னர்களை வீட்டுக்குக்கு.. sorry அரண்மனைக்கு அனுப்பிய கட்சி இது. 

திமுக என்கிற இயக்கம், வெற்றுச் சலசலப்புக்கு அல்ல, காடு அதிரும் வேட்டோசைக்கே அசராமல்  நிலம்பாவி நிற்கும் பெருங்களிறு!
..
வரவனை செந்தில் 
ராமதாஸும் அன்புமணியும்..
தமிழ்நாட்டரசியலில் தேவையில்லாத சுமைகள்.. தங்கள் நலம் மட்டும் பிரதானமாய் கொண்டு நடக்கும் சில்லரைகள்..
தன்னை அறிவாளியாக எண்ணிக்கொள்ளும் அபத்தங்கள்.. 
..
தலை முழுக்க சாதிவெறியும் உள்ளில் மதவெறியும் கொண்டு அரசியலில் கால்நூற்றாண்டை கடந்து தேய்ந்துக்  கொண்டிருப்பவர்கள்.. தங்கள் சமுதாய மக்கள் கல்வியறிவு பெற்றால் சாணியை எறிவார்கள் என்றெண்ணி கலவரத்தில் சீவிவிட்டு அகங்காரமாய் அமர்ந்திருப்பவர்கள்..
..
பெற்ற தாயை கூட கேவலப்படுத்த அஞ்சாத கயமை, கொஞ்சமும் கூச்சமில்லாமல் மக்களை சந்திக்கிற இழிநிலையாளர்கள்.. முப்பதாண்டுகள் கடந்தும் மக்கள் இவர்களை நம்பவில்லை காரணம் சாதியை வைத்து காசு பார்க்கும் இவர்கள் நமக்கான அரசியல்வாதிகள் அல்ல என அவர் சார்ந்த சமூக மக்களே புறக்கணிததுவிட்டார்கள்..
..
மாண்பமை முதலமைச்சர் வேலைவெட்டி இல்லாதவர் என்றதும் தன் அடியாட்களை வைத்து போராட்டம் நடத்த பார்த்து கடைசியில் பிசுபிசுத்தது.. முதலமைச்சரை இவர் ஒருமை பேசுவார் ஆனால் இவரை வேறு வேலையில்லை இவருக்கெல்லாம் பதில் சொல்ல தேவையில்லை என்ற அரசியலிலிருந்து அடியோடு துடைத்தெறிந்து விட்டார் தளபதி அவர்கள்.. யாரும் கண்டுக்கொள்ளவில்லை என்றவுடன் எதையாவது பேசி இருக்கிறேன் என காட்ட நினைத்தவரை குழியில் இறக்கிவிட்ட கதையாகும போனது..  அதானி காப்பாற்ற முயற்சி செய்தால் பாஜகவின் கரிசனம் கிடைக்குமென்ற நினைப்பில் மண் விழுந்தது.. பாசிசத்தின் பிடியில் இனி மெல்ல அரசியல் அஸ்தமித்து காண்பார்..
..
ஏற்கனவே எழு இடங்களிலும் தோற்கடித்து காட்டுகிறேன் என்று பாமகவின் வீழ்ச்சிக்கு வித்திட்டவரிடம் கவனமாக இருக்க வேண்டாமா.. எச்.ராஜாவிற்கு உள்ள புரிதல் கூட இல்லையே! .. 
More dangerous..  சாதியும் மதமும் தமிழ்நாட்டு அரசியலில் ஒரு எல்லையை தாண்டி எடுபடாது.. சிலநேரம் திருப்பி அடிக்கும்.. எழ முடியாமல் செய்துவிடும்.. அதைதான் ராமதாஸின் அவரின் உன்னை நான் சந்திக்கணுமா என்ற பேச்சு உணர்த்தியது  விரக்தியின் விளிம்பில் நின்று கதறுகிறார்.. இனி எக்காலத்திலும் இவர்களின் அரசியல் நாடகம் அரங்கேறாது..
..
ஆலஞ்சியார்


மனு ஆட்சியா .. மனுவிற்கு எதிரானதா என விவாதிக்க வேண்டியதை மடைமாற்ற நினைத்து மன்னராட்சி என உளறி கடைசியில் வாங்கிகட்டிக் கொள்ள வேண்டியாதகிவிட்டது.. பாஜக செல்லப்பிள்ளைகள் வேடம்கட்டி வந்து அரிதாரம் கலைந்து நிற்கிற சோகம்.. தமிழ்நாடு மிக தெளிவான பார்வைக்காக கொண்டது.. வரும் ஓசை கண்டே வருகிறவர் யாரென அறியும் அறிவுண்டு நமக்கு.. பல்வேறு வழிகள் ஒவ்வொன்றாய் தடைப் போட்டுக்கொண்டே இருப்போம்.. 
..
ரஜினி வைத்து சலனம் ஏற்படுத்த நினைத்து அவர் சுதாரித்த நிலையில் பாவம் சின்ன பையனை இறக்கி சினிமா சூட்டிங் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.. வரும் போது கொஞ்சம் அரசியல் வரலாற்றை தெரிந்து கொண்டு வந்திருக்கலாம்.. ரெய்டுக்கு பயந்து வந்திருக்கலாம் கடந்தகால தமிழ்நாட்டின் அரசியலை , அதன் போக்கை தமிழ் மக்களின் தெளிவை அறிந்தோ எழுதிக் கொடுக்கும் நபர்களிடம் கேட்டு தெரிந்து காலடி வைத்திருக்க வேண்டும்..
..
எது ஆணவம் 200  வெற்றி பெறுவோம் என்பதா.. 75 ஆண்டுகால அரசியல் எல்லா காலமும் மக்களோடு கலந்து அவர்களின் துயரில் மகிழ்ச்சியில் பங்குகொண்டு இன்னல்படும் நேரத்தில் கரம் கோர்த்து அவர்கள் வாழ்வில் ஒளியேற்ற கல்வியொன்றே கைகொடுக்குமென அறிந்து வா..படிக்க வா எல்லாம் தருகிறேன் உன்னை புறக்கணித்தவன் முன்பாக உயர்ந்து காட்டு என திட்டங்கள் தீட்டி இன்று கல்வியில் பொருளாதாரத்தில் இந்திய ஒன்றியத்திலேயே தமிழ்நாட்டில் முதல் மாநிலமாய் உயர்த்தி காட்டியவர் 200  வெல்வோம் என்பது ஆணவம் அல்ல மக்களின் மீதான நம்பிக்கை தன் உழைப்பின் மீதான நம்பிக்கை ஒற்றுமையின் மீதான நம்பிக்கை..
..
பிறப்பால் உயர்ந்தவன்  என்பதெல்லாம் பழைய பாழ்படிந்த சிந்தை உழைப்பால், அறிவால் உயரலாம், கல்வி வெளிச்சம் காட்டும் என்பதுதான் திராவிட சித்தாந்தத்தின் மூலக்கரு .. எல்லோருக்கும் எல்லாம் இதைதான் திராவிடத் தலைவன் எங்கள் தளபதி ஸ்டாலின் M. K. Stalin  சொல்கிறார்..இதை கண்டுதான் பதறுகிறது பாசிசம்.. பல வழிகளில் லாட்டரி டிக்கெட்டையும் ப்ளாக் டிக்கெட்டையும் களம் இறக்கி வாய்க்கு வந்ததை உளறி அதை பேசு பொருளாக்கி "விகடகவி" சொல்லிக் கொண்டிருக்கிறது..  காஞ்சி தலைவனை பேச வேண்டுமே தவிர காஞ்சி பெரியவரை அல்ல புத்தகத்தில் என்ன இருக்கிறதென்றோ அம்பேத்கர் யாரை எதை,யாரை எதிர்த்தாரென்றோ அறியா பிள்ளைகளின் பிதற்றல் நூல் வெளியீடு..
 .
உலகில் எவ்வளவு மிக உயர்ந்த சோப்பை போட்டுக் குளித்தாலும் ஒரு சூத்திரன் பிராமணனாக முடியாது. வேலைக்குப் போகும் பெண்கள் ஒழுக்கம் உடையவர்களாக இருக்க முடியாது 
என்றவர்
காஞ்சி மகா பெரியவா
(நூல் ஆதாரம்)தெய்வத்தின் குரல்.. 
நடந்தது நூல்(புத்தகம்) வெளியீடல்ல (பூ)நூல் புகழ்ச்சிக்கான ஏற்பாடு.. 
..
தேர்தலில் நின்று வென்று வந்தவர்.. மக்களால் தேர்வு செய்யபட்டவர்.. அவரை அவரின் உழைப்பை,  வந்தால் நமது கோர்க்கைகளை,தேவைகளை, 
அவர்சொல்லாமலேயே செய்வார் என்றுணர்ந்து வெற்றிபெற செய்கிறார்கள்.. திருட்டு லாட்டரிவிற்பவனும் ப்ளாக் டிக்கட்டும் சமூகநீதி பேசுவதும் அதை  ஊடகங்கள் முன்னெடுப்பதும் சகிக்கவில்லை..
"மக்களை செல் " என்ற அண்ணனின் சொல்லை மந்திரமாய் கொண்டு சுழல்பவர்கள் நாங்கள்.. சூரிய ஒளியில் "வெளிச்சம்" காண்பவர்கள்
விட்டில் பூச்சிகளுக்காக கலங்க போகிறோம்.. போய் ஓரமாய் விளையாடு..
..
ஆலஞ்சியார்

Tuesday, November 26, 2024

உதயநிதி.. 
இளைஞர் ..
எதையும் சரியாக உள்வாங்கி எதற்கும் அஞ்சாமல் செயல்படும் துணிவுமிக்கவர்.. தெளிவான அரசியல் புரிதல், களமறிந்து எதிரியை திணறவைக்கும் சொல்லாற்றல், பணிவும் பக்குவமும் நிறைந்தவராய், நொடிக்குள் திணறடிக்கும் ஆற்றல் உடையவராய் பழுத்த பழங்கள் கூட தடுமாறும் நிலையில் செவ்வனே செயல்படும் செயல்வீரர்..
..
தாத்தனின் அறிவும் அப்பனின் உழைப்பும் பேராசான் பெரியாரின் வழியொற்றி தன் அரசியல் பயணத்தை அமைத்துக் கொண்டவர்.. திராவிட கருத்தியலை சரியாக அடையாளப்படுத்தி அரசியல் செய்கிறார் .. எல்லோருக்கும் எல்லாம் என்ற அரசியலை முன்னெடுக்கும் தலைவரின் படையோட்டத்தின் தளபதியாய் சுழன்று இவர் தமிழ்நாட்டின் இன்முகமாய் மாறி வருவது மகிழ்ச்சிக்குரிய விடயம்..
..
கலைஞரைப் போல நகைச்சுவை உணர்வு.. சட்டென்று சாய்த்துவிடும் நுணுக்கம்,அக்காவிற்கு வேலையில்லை என்ற ஒரே வரியில் தமிழிசையை தரைதட்டிய விதம் கேள்வி கேட்பவரே எதிர்பாராமல் பதிலளிக்கும் உத்தி சில நேரம் செவிட்டில் அறைந்தாற்போல் நிலைகுலைய செய்கிறார்.. எதிரிகள் தலைவர் ஸ்டாலினைவிட இவரிடம் தான் எச்சரிக்கையாக இருக்கவேண்டிவரும்.. 
..
இளஞ்சூரியன் உதயநிதி வளமான எதிர்காலத்தின் நம்பிக்கை திராவிட இயக்கத்தின் மற்றொரு பரிணாமம்.. நூற்றாண்டு கண்ட திராவிட இயக்கத்தின் மாபெரும் முன்னெடுப்பு.. சனாதனம் ஒழியும் வரை என் குரல் ஒலித்துக் கொண்டே இருக்கும் என்ற பிரகடனம் ஒன்றே போதும் யார் இவர் என்பதற்கு .. உண்மையில் பழைய கலைஞரை பார்த்த மகிழ்வு
..
உங்கள் வெற்று வார்த்தைகளும் வீண் சவால்களும் என் பயணத்தை தடுத்து நிறுத்திட முடியாது ..
இது  ஒன்றே போதும் வருங்காலம் தமிழ்நாடு சிறக்கும்  என்றும் கருப்பசிவப்பு பறக்கும்
வாழ்த்துகள் உதய்
..
ஆலஞ்சியார் 

Tuesday, November 5, 2024

அதிகாரம்..
சிலர் 
வந்தவுடன் நானே தலைவன் என்கிறார்கள்.. 
அடிப்படை புரிதல் இல்லாமல்
பதவி ஆசை திராவிடத்தை கிண்டல் செய்ய தூண்டுகிறது..
தலைவர் கலைஞரை, வசைபாடினால் 
அல்லது வசைபாடுபவனை கொண்டாடினால் கால் ஊன்றலாமென கனவு காண்கிறார்கள்..
கூட இருக்கும் கூட்டம் 
உன் உழைப்பை பார்த்து வந்ததில்லை கேளிக்கைகளில் வந்தவை.. 
சிலர் விரக்தியில் நிற்கிறார் 
பலர் அறியாமையில்.. கொள்கையோ,கோட்பாடோ 
அரசியல் அறிந்தோ இல்லை
 ..
பாசிசத்தை முதுகில் சுமந்து
"ஆபத்பாந்தவன்" வேடம் போடுகிறார்கள் நேர் நிற்க முடியாத
கோழைத்தனமானவர்கள்..
நிற்பது கூட அடுத்தவரின் ஊன்றுகோலில் ..
பலவீனமானவர்கள் தான் 
பரிந்துரைக்கு கால்கடுக்க நிற்பார்கள்..
பாவம் 
அரசு இயலும் தெரியவில்லை..
அரசியலும் தெரியவில்லை
..
அரிதாரம் பூசி 
ரட்சகன் வேடம் காட்டுபவன்.
அடித்தளமே இல்லாமல் அடுக்குமாடிக்கு ஆசைபடுகிறான்..
ஆசை வார்த்தைகளும் தன் விசிறிகளின் அறிவிலித்தனமும்  மூலதனமாய் கொண்டு ஆடுகிறான் கோணலாய்..
யதார்த்தம் என்ன வென்று அறியவில்லை..
அறியும் அறிவுமில்லை..
இவர்கள் எங்கள் எதிரிகள் அல்ல..
ஏனெனில் எங்களை எதிரியாய் நினைக்க கூட தகுதி வேண்டும்..
..
இங்கே அடிமட்ட தொண்டனுக்கு உள்ள அரசியல் தெளிவு கூட 
"தலைமை"பதவிக்கு ஆசைப்படும் 
குறைமதியாளனுக்கில்லை..
பாசிசத்தின் சூழ்ச்சி வலையில் விழுந்த மீன்.. 
கருவாட்டுக்கு கூட உதவாது..
அடுத்தவர் உழைப்பில்,
தயவில்,
திமிரில்,  
அதிகாரத்திற்கு ஆசைபட்டால் 
உள்ளதும் போகும்..
..
அரிதார திமிரில் ..
"ராஜா" வேஷம்
கலையும் போதும் தெரியும் சுயரூபம்.. 
ஏணிகள் நகர்ந்தால் விழ நேரிடும் போது அடி பலமாய் விழும்..
எழ முடியாமல் போகும்..
எங்கள் எதிரியாவதற்கு முன் 
தகுதியை வளர்த்துக்கொள்..
"கொள்ள" பேரை பார்த்துவிட்டோம்.. 
பூச்சாண்டி காட்டுவதை விடுத்து பிழைப்பை பார்.. 
ராஜாவாக முடியாது..
ஆகவே முடியாது..
..
நாங்கள் கலைஞரின் 
"பயமறியா" தம்பிகள்..
கொள்கை தெளிவும் உறுதியும் கொண்டவர்கள்..
கட்சியையோ எங்கள் தலைவரையோ சிறுமைபடுத்த நினைத்தாலே சினம் கொள்பவர்கள்.. எங்கள் பலம் 
எங்கள் நம்பிக்கையிலும்  உறுதியிலும் உழைப்பிலும்,நேர்மையிலும் இருக்கிறது.. 
பாசாங்கு செய்வோரை கண்டு "எள்ளல்" கொள்வோம் .. 
..
முதலில் ஊன்றுகோல் இல்லாமல் நடை பழகு!. 
பிறகு..
நீ .. எதிரியா என நாங்கள் முடிவு செய்கிறோம்..
 ஒரு திசைக்கே (கிழக்கு)
உம்மால் தாக்குபிடிக்க முடியாது..
எங்கள் 
"ஆறு" விசையை கண்டால் அவ்வளவுதான்..  மக்கள் முன்
"நடித்தது" போதும் நடையைகட்டு..
..
இனி உதயமாகும் இளஞ்சூரியன்
.. 
ஆலஞ்சியார்

Sunday, October 6, 2024

இன்னமும்கூட சிலர் சரியாக கணிக்க தவறுகின்றனர்.. நீங்கள் நகர்த்துகிற காய்கள் திசையறியாது நிற்கின்ற பரிதாபங்கள்.. திராவிட இயக்கத்தின் நான்காம் தலைமுறைத் தலைவன் #முத்துவேல்கருணாநிதிஸ்டாலின் அவர்களின் சிறிய அசைவுகள் உங்கள் அடித்தளத்தையே அசைத்துவிடுகிறது..  
.. 
அதிகாரம் வேண்டுமென்று தன் சகாக்களை பேச வைத்து உருட்டுகிறீர்..  செழியன்கள் வருகிறார்கள் .. ஐம்பதாண்டு வரலாற்றில் உயர்கல்வித்துறை அமைசசராக்கி வாயடைக்க வைக்கிறார்.. எதிர் முகாமில் கூட "வாழ்த்துபா" வாசிக்கிறாரகள்
உள்ஒதுக்கீட்டை எதிர்க்கிறீர்கள்.. யாருக்கு தரக்கூடாது உச்சநீதிமன்றத்தை நாடுகிறீர்களோ அந்த சமூகத்தின் பிரதிநியையை ஆதிதிராவிடர் நலத்துறையின் அமைச்சராக்கி அழகு பார்க்கிறார்.. நீங்கள் ஆட்டம் தொடங்கும் முன்பு அரண் அமைத்து "செய்வதறியாதுசெய்துவிடும்" ஆற்றல் மிகு தலைவன் தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருக்கிறார் ..
Chief Minister of Tamil Nadu  M. K. Stalin 
..
ராஜாஜி தூக்கிக் கொண்டு வருவதிலேயே உங்கள் கால்கள் ஆட்டம்காண தொடங்கிவிட்டதை உணர்த்துகிறது.. உங்களுக்கு தெரியும் திருமா அவர்களே! 1952 ஆண்டு நடந்த சலவை தொழிலாளர்கள் மாநாட்டில் எங்கள் குழந்தைகள் நான்காவது வரையாவது படிக்க அரசு உதவி செய்ய வேண்டும் என்ற கோரிக்கைக்கு பதிலளித்த மூதறிஞர்..? ராஜாஜி துறை சார்ந்த கோரிக்கைகளை கேளுங்கள் சவுக்காரம் துணி துவைக்க தண்ணீர் படித்துறை வேண்டுமென கேளுங்கள் என்றவர் தான் ராஜாஜி.. 
..
மதுவிலக்கு சாத்தியமா என மனசாட்சியை கேட்டு பாருங்கள்.. மதுவிலக்கு மாநாடு  அருகில் மூன்றுநாள் வியாபாரம் ஒரே நாளில் நடந்தது.. மது  ஒழிப்பு  விழிப்புணர்வு  பிரச்சாரங்களை மதுவால் ஏற்படும் தீமைகளை எடுத்துரைத்து பிரச்சாரங்கள் செய்யலாம் ..
..
தி.மு.கழகம் பவளவிழா கண்டு இன்னமும் நிமிர்நடை போடுகிறதே காரணம் தெரியுமா.. வசவுகளை கடும் கண்டனங்களை தொடர் துரோகங்களை சந்தித்தும் இன்னமும் மக்கள் பணியில் மற்ற கட்சிகளுக்கு வழிகாட்டியாய் திகழ்கிறதே! ஏன் தெரியுமா.. தெளிவான கொள்கை,  தீர்க்கமான சமூகப்பார்வை, நெஞ்சுறுதியோடும் நேர்மையோடும் அரசியல் செய்தல், தொலைநோக்குப் பார்வை இவைகள்.. இன்னமும் பல நூற்றாண்டுகள் கடந்தாலும் தி.மு.கழகம் செயலாற்றும்.. 
அருந்ததியர் உள்ஒதுக்கீட்டை எதிர்த்து உச்சநீதிமன்றம் சென்றபோதே உங்கள் "சமூகநீதி"பார்வை அநீதியானது ..
..
திமுக தமிழர்களுக்கான இயக்கம்  திமுக விளிம்புநிலை மக்களுக்கானது.. எல்லோருக்கும் எல்லாம் என்ற பொது கோட்பாட்டை கொண்டது.. குறுகிய வட்டத்திற்குள் அமைத்திட முடியாது.. தி.மு.கழகம் இயங்கிக் கொண்டே இருக்கும்..
..
ஆலஞ்சியார்

Saturday, September 28, 2024

சினிமாவிலிருந்து வந்தவர் துணை முதலமைச்சராகும் போது திருமா ஏன் ஆக கூடாது.. கட்சியில் சேர்ந்த உடன் துணைப் பொதுசெயலாளரான விசிகவின் ஆதவ் அர்ஜூனா சொல்கிறார் .. வட மாவட்டங்களில் விசிக தயவில்லாமல் திமுக வெற்றிப் பெற முடியாது ..
எங்கேயோ கேட்ட குரலாக தெரிகிறதா.. இதே தொனியில் தான் பாமகவும் பேசியது இன்று தங்கள் "பெல்ட்" என்றவர்கள் நிலை ஊரறிந்தது.. 
..
சாதிய நிலைபாட்டிலிருந்து தன்னை மீட்க நினைக்கும் திருமாவிற்கு இது 'திருச்சடியை' தரும்.. கூட்டணி தர்மம் என்பதெல்லாம் ஒரு எல்லை வரைதான் தேர்தல்கால கூட்டில் எண்ணிக்கையை அதிகரிக்க பயன்படுமே தவிர கொள்கையோடு இணைந்து செயல்படுவதாக எண்ணுவதே மடத்தனம்.. விசிகவின் பொதுச் செயலாளர் விளக்கம் அளித்திருக்கிறார் அதுவும் ஆ.ராசா எதிர் குரலை தொடர்ந்து.. இதை முளையிலேயே கிள்ளியெறிந்தால் நலம்..
..
விசிகவின் அடிப்படை பலமே தங்கள் சமூக கட்டமைப்புதானே தவிர பொது சமூக நீரோட்டத்திற்கானதல்ல .. தங்கள் கொள்கை ஒடுக்கபட்டவர்களுக்காக அவர்களின் முன்னேற்றத்திற்காக தங்களின் அங்கீகாரத்திற்காகதான்.. ஆனால் அதை நீண்டகாலம் திராவிட இயக்கங்கள் செய்துக் கொண்டுதானிருக்கிறது..
..
விசிக போனால் திமுகவிற்கு இழப்பாகும் என்ற நினைப்பை தூக்கி தூர எறியுங்கள்.. இதே குரலில் ஏற்கனவே பேசிய கட்சிகள் இருக்குமிடம் தெரியவில்லை.. திமுக தமிழ் மக்களின் உணர்வுகளுக்கும் உரிமைகளுக்கும் உயர்வுக்கும் உழைப்பை பாதுகாப்பை, உறுதி செய்து பயணிக்கிறது.. திமுக கட்சி அல்ல இயக்கம் என்பதை அறிந்துணர்ந்தால் ஏன் பாசிச சித்தாந்தவாதிகள் திமுகவை மட்டும் எதிர்க்கிறார்கள் அறிந்தால் பதில் கிடைக்கும்..
..
75ஆண்டு வரலாற்றில் நிறைய பார்த்தாயிற்று ஆனாலும் எல்லாவகை சூழ்ச்சிகளையும் வீழ்த்தி தொடர்ந்து இயங்கிக் கொண்டே இருக்கிறது.. ஏனெனில் தெளிவான பாதையில் பகுத்தறிவு துணைக்கொண்டு இந்த இயக்கம் மக்கள் பணியாற்றுகிறது..  இடைச்செருகல் (itaiccerukal) வரும் போகும் .. தி.மு.கழகத்தின் பயணம் தொய்வின்றி தொடரும்.. நிறைய எழுதலாம் எங்களுக்கு வேறு பணிகள் இருக்கிறது.. 
..
அதைப்போல மதுவிலக்கு சாத்தியமற்ற விடயம்.. மது பாவம் நரகம் தருமென நம்புகிற சமுதாய ஆட்சியாளர்கள் கூட கடை திறந்து நாளாகிவிட்டது.. கட்டுபாடுகள் விதிக்கலாம்.. ஆனால் முழுவதற்குமான தடை நடைமுறை சாத்தியமற்றது.. தனிமனித கட்டுபாடு மதுவால் வரும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு செய்யலாம் அரசியலுக்காக பேசுவதில் அர்த்தமில்லை.. திருமா பொதுவான அரசியலை முன்னெடுத்தாலும் தலித் அடையாளம் அவரை விடாது அதுவே அவரின் முகவரியாக காணப்படுகிறது.. 
..
திமுக தலைவர் முத்துவேல்கருணாநிதிஸ்டாலின் பலம் பலவீனம் அறிந்தவர் அவரின் காய் நகர்த்தல் நிலைகுலைய செய்துவிடும்..
..
ஆலஞ்சியார்

Monday, September 23, 2024

அறிஞர் அண்ணா திமுகவுக்கு வைத்த பெயர் DPF.. இது எப்படி DMK ஆனது? மாற்றியது யார்?

அறிஞர் அண்ணா திமுகவுக்கு ஆங்கிலத்தில் வைத்த பெயர் என்ன தெரியுமா? அந்தப் பெயர் எப்படி மாறியது என்பது தெரியுமா? இன்றைக்கு உள்ள திமுகவினருக்கே இந்த வரலாறு தெரியுமா என்பது சந்தேகம்தான்.

திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்து வந்த அறிஞர் அண்ணா தனிக்கட்சி தொடங்க முடிவு செய்தார். அதற்கு என்ன பெயர் வைப்பது என்று பல குழப்பங்கள் இருந்தன. அவர் தனது தம்பிகளான, இரண்டாம் கட்டத் தலைவர்கள் என்று பிற்காலத்தில் திமுகவினரால் கருதப்பட்ட நெடுஞ்செழியன், மதியழகன், என்.வி நடராசன், ஈவெகி சம்பத், கலைஞர் ஆகியோரிடம் கலந்தாலோசித்தார்.

அவர்கள் கட்சிக்குப் பலவிதமான பெயர்களைச் சுட்டிக் காட்டினர். அன்று என்ன நடந்தது? திமுக என்ற பெயர் எப்படி உருவானது? அதை ஆங்கிலத்தில் டிஎம்கே எனச் சுருக்கியவர் யார் எனப் பல சந்தேகங்களுக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் மூத்த தலைவர்களில் ஒருவரான இராம அரங்கண்ணல் அவரது சுயசரிதையில் சிறப்பாக எழுதி இருக்கிறார்.

அவரது நூலில், "கட்சி ஆரம்பிக்கின்ற சூழ்நிலை வந்தாச்சு, அதுதானே உங்கள் எண்ணம்? அரங்கண்ணல், பேட் ஐ கொண்டுவா. கட்சிக்கு ஒரு பெயர் சொல்லுங்கப்பா" என்றார் அண்ணா. அங்கே அமர்ந்திருந்த வேலாயுதம் என்ன வாணன், உடனே முதல் நபராக 'தமிழ்நாடு சோஷியலிஸ்ட்கட்சி' என்று சொன்னார். அதைக் கேட்ட அறிஞர் அண்ணா 'நாம் புதியதாகக் கட்சி ஆரம்பிப்பதாக இருந்தால் அதில் திராவிடர் என்ற சொல் இருக்க வேண்டும். அது முக்கியம்' என்றார்.

அடுத்ததாக திராவிட சோசலிஸ்ட்டுக் கழக, திராவிட சமதர்மக் கழகம், திராவிட தீவிரவாதிகள் கழகம் என வரிசையாகப் பல பெயர்கள் வந்து கொட்டின. அனைத்தையும் கையிலிருந்த அட்டையில் எழுதிக் கொள்ளப்பட்டது. அடுத்ததாக தமிழ்ப் பெயர்களைத் தாண்டி ஆங்கிலத்தில் சில பெயர்கள் முன்வைக்கப்பட்டது. Dravidian Forward Block, Dravidian Progressive Association, Dravidian vanguard Party எனப் பல பெயர்கள் சூட்டிக்காட்டப்பட்டன.

உடனே அங்கே அமர்ந்து கேட்டுக் கொண்டிருந்த அறிஞர் அண்ணா, "Dravidian Progressive Federation என்றார். அதில் Dravidian என்ற சொல்லும் இருந்தது. Federation என்று வருகிறது. அதை அப்படியே தமிழில் எழுதிப் பார்ப்போம் என்று எழுதினார்கள். திராவிடர் முன்னேற்றக் கழகம் என வந்தது. உடனே அங்கே இருந்த அனைவரும் ரொம்ப நல்லா இருக்கு என்றனர். ஒருமித்த கருத்தாக அது ஒலித்தது.

அதிலும் சின்ன திருத்தம் செய்ய ஒரு யோசனையை வைத்தார் அண்ணாதுரை. Dravidian என்பதை திராவிடர் என்று எழுதலாமா? திராவிட என்று எழுதலாமா? என்று கேட்டார் அவர். திராவிடர் என்றால் குறுகிய வட்டமாக இருக்கும் என யோசித்த மதி, "நாம் எல்லோரும் சோஷியலிஸ்ட்டுகள். பகுத்தறிவுக் கொள்கைகளை யார் ஒத்துக்கொண்டாலும் நம் கட்சியில் இருக்கலாம். பெரியாருக்கும் நமக்கும் ஒரு வித்தியாசம் வேண்டும். திராவிட என்பது நிலப்பகுதியைக் குறிக்கிறது. இதுவே பொருத்தமாக உள்ளது' என்றார்.

அங்கே அமர்ந்து இருந்த இராம அரங்கண்ணல், தன் கையில் வைத்திருந்த அட்டையில் 'திராவிட முன்னேற்றக் கழகம்' என்று முதன்முதலாக எழுதிப்பார்த்தார். இந்தப் பெயரை ஆதரவாளர்களிடம் சொல்லி ஒரு முடிவு எடுப்போம். அதுவரை இதுவே கட்சி பெயர் என்று யாரும் முடிவு செய்துவிட வேண்டாம் என்றார் அண்ணா. அதன்பின்னர் 'மாலை மணி' பத்திரிகை ஆபீசில் உள்ள ஆதரவாளர்களிடம் இந்தப் பெயரைக் காட்டி ஒப்புதல் கேட்டார் அண்ணா. அதைப் பலரும் ஏற்றனர்.

ஆரம்பக் காலத்தில் திமுக என்ற தமிழ் வார்த்தையைச் சுருக்கு DPF என்றே எழுதி வந்தார்கள். அதாவது Dravidian Progressive Federation என்பதன் சுருக்கம். இது எப்படி DMK ஆனது என்பதுதான் சுவாரஸ்யம். திமுகவை எதிர்த்து எழுதி வந்த 'தி இந்து' பத்திரிகை தான். திமுக ஆரம்பக் காலத்தில் நடத்திய டால்மியாபுரம் போராட்டம், இந்தி எதிர்ப்பு போராட்டம் என மும்முனைப் போராட்டங்களை நடத்தியது. அதைப் பற்றிய செய்தியை வெளியிட்ட இந்து, திமுகவைச் சுருக்கி ஆங்கிலத்தில் டிஎம்கே என்று எழுதியது. அது அப்படியே நீடித்து நிலைத்து நின்றுவிட்டது" என்று எழுதி இருக்கிறார் அரங்கண்ணல்.

ஒரு காலத்தில் ஆங்கில பத்திரிகை DPF என அண்ணா கட்சிக்கு வைத்த பெயரை மாற்றி DMK என்று எழுதியதால் காலப் போக்கில் இதுவே நீடித்து நிலைத்து நின்றுவிட்டது. அதனால் கட்சிக்கு ஆங்கிலத்தில் வைக்கப்பட்ட Dravidian Progressive Federation என்ற வார்த்தையும் மறைந்துவிட்டது. தமிழில் திராவிட முன்னேற்றக் கழகம் என்று எழுதுவதை அப்படியே ஆங்கிலத்தில் Dravida Munnetra Kazhagam எழுத வேண்டிய நிலை உருவானது.

Saturday, September 14, 2024

அண்ணா ..
எங்கள் அறிவுச் சுடரே
உன் ஒளியில் தான் 
நாங்கள் பயணிக்கிறோம் ..
எங்கள் 
கலங்கரை விளக்கே 
திசை தெரியாது நின்ற 
தமிழினத்தை கரை சேர்த்தது நீ
தம்பி படிக்கவா என்றாய் 
ஆளவே வந்துவிட்டோம் ..
ஒன்றியமே நம்மை எதிர்நோக்கிறது 
..
அண்ணா 
நீ..
எங்களுக்கு சுயமரியாதையை மட்டுமல்ல 
சுயமாய் எழவும் கற்றுதந்ததாய் 
உன் தமிழ் 
வீணை மீட்டிய இசை 
உன் சொற்களால் ஆடிய தாண்டவம்
ஆரியத்தை அதிரவைத்தது
திராவிட தருவே 
உன் நிழலில் தான் 
தமிழகம் இப்போதும் 
நிம்மதியாய்  நிற்கிறது 
..
"கடவுள் இல்லையென்றோ 
இருக்கிறாரென்றோ 
நான் சொல்லவில்லை அறிவோடு ஆற்றலோடு ஆபாசமற்ற கடவுள் இல்லென்று தான் கூறுகிறேன்",
எவ்வளவு தெளிவு..
ஆயுதம் கொண்டு இன்று சிலர் கலவரம் செய்ய துணியும் போதும் 
நீ கற்று தந்த அறிவாயுதம் கொண்டே வெல்கிறோம் ..
..
தமிழ்படித்தவனெல்லாம் சாமியாராய் போனான் என்றாார் பெரியார்.. அதைதான் எமக்கு
மாசுமறுவற்ற மதமில்லை, நமக்கு
இனப்பற்று மிக்க இலக்கியமில்லை நமக்கு 
அன்பு தரும்,அறிவூட்டும்
சமுதாயம் இ்ல்லை நமக்கு  மனிதர்கள் மனிததன்மையோடு வாழ சுதந்திரமில்லை என விளக்கம் தந்தாய்.. ஆட்சிகட்டிலில் ஏறியவுடன் 
தமிழ்நாடு தந்தாய் ..
நாடு கேட்கிறார் ஜாக்கிரதை என ராஜகோபால் டெல்லிக்கு சொன்னபோது 
இந்தியா நாடே அல்ல அதுவொரு துணைகண்டம் என புரியவைத்தாய் .. சுயமரியாதை திருமணத்தை தகாத உறவென உச்சநீதிமன்றம் சொன்னபோது 
அதை சட்டமாக்கி சரித்திரம் படைத்தாய் ..
..
உன் வழியில் தான் தமிழகம் செல்கிறது..திராவிட மாடல் நீ தந்தது தான் ..
திராவிட போர்வையில் ஒளிந்திருந்த மகோரா(எம்ஜிஆர்) கூட உன் நாமத்தை சொல்லிதான் பிழைக்க முடிந்தது .. உன் தமிழ் கேட்டு தமிழகம் சொக்கிநின்றது .. உன் தம்பிமார்கள் படைகஞ்சா போர்வீரர்கள் .. 
நீ மாபெரும் ஜனநாயக வாதி
மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணமுண்டு என்றாய்
..
தமிழ் தேசியம் பேசி திரியும் சின்ன தம்பிகளே .. திராவிடம் என்றால்  கசக்கிறதா ..
இதோ எம் அண்ணா சொல்கிறார்

"திராவிடர் என்ற சொல் கற்பனையுமல்ல,கனவுலக கண்டுபிடிப்பும் அல்ல.
காவியத்தில் உள்ள சொல்..
வரலாற்றில் வருகிற பெயர்.
ஒரு சிறந்த இனத்தவரின் அரிய திருநாமம்.அந்தப் பெயரைத்தான் கூறுகிறோம் நாம்.
இந்தியன் என்பது போன்ற அரசியல் சூதாட்டப் பெயரையல்ல? எவ்வளவு தீர்க்கமான விளக்கம்..
..
இன்றைக்கு பாசிசத்தின் செயல்பாடுகளும், அவர்களின் தத்துபிள்ளைகளின் கூச்சல்களும் எமக்கு துருக்கிய பழமொழிதான் ஞாபகம் வருகிறது
"நரியிடமிருந்து மதத்தைக் கற்றுக் கொண்டவனுக்கு கோழியைத் திருடுவது தொண்டாகத் தோன்றும்".. ஆம் மதத்தை கையிலெடுத்து கலவரம் செய்ய முடியாத அமைதியாய் வாழும் தமிழகத்தை இரத்தபூமியாக்கி முடியாதா ..கலவர செய்து குளிர்காய முடியாதா என நினைக்கிறார்கள்  ஆனால் நாமோ அண்ணாவின் தம்பிகள் 
கலைஞரின் உடன்பிறப்புகள் அறிவாலயத்தில் வளர்ந்தவர்கள்
ஆம்
எம் அண்ணா எம்மை அறிவுக்கொண்டு வளர்த்தெடுத்தார் இப்போதும் 
சில கழிசடைகள் செய்யும் கீழ்தரமான செயல்கள் கண்டும் அமைதியாய் அறிவின் துணைக்கொண்டு வீழ்த்த நினைக்கிறோமே இதில் தான் அண்ணா வாழ்கிறார் ..
..
அண்ணா என்றால் 
தமிழ் 
அண்ணா என்றால் 
தமிழகம் 
அண்ணா என்றால் 
சுயமரியாதை
அண்ணா என்றால் 
வாசிப்பு 
அண்ணா தமிழர்களின் நாளம் 
..
வாழ்க! அண்ணாவின் புகழ் 
..
ஆலஞ்சியார்

Friday, September 13, 2024

ஒன்றிய அமைச்சரின் உடல்மொழியும், கேள்வி கேட்பவரை அற்பமான ஜீவனாக காணும் திமிரும் எல்லாம் தெரிந்தததைப்போல் பேசும் அறிவிலித்தனமும் தொடர்கிறது..
எப்போதெல்லாம் தமிழகம் வருகிறாரோ அப்போதெல்லாம் அலட்சிய மனப்பான்மையோடு அதிகாரத் தோரணையில் நடந்துக்கொள்கிறார்..
..
காரணம் அவர் மக்களை சந்திக்க போவதில்லை அதிகாரம் தேடி வரும் என்பதுதான்.  
எளிய கேள்வி கேட்டவர் தன் வியாபாரத்தில் ஏற்படும் சிக்கலை சொல்கிறார் இதில் எங்கிருந்து தவறு வந்தது மனம் வருந்தி மன்னிப்பு கேட்க இதில் என்ன அவ்வளவு தப்பை கண்டீர்கள்..
எதிர் குரலே இருக்க கூடாதென்கிறீரகளா.. எப்படி நாடாளுமன்றத்தில் "பொய்" "ஊழல்" (unparliament word)பேச கூடாத வார்த்தையாக்கி ஊழலை ஒழித்துவிட்டோம் என்கிறீரீகளே அதைப்போலவா.? 
..
கோவை சட்டமன்ற உறுப்பினர் வானதி அவர்கள் அறிக்கை அவர்களின் சுயரூபத்தை வெளிச்சம் போட்டு காட்டுகிறது.. அன்னபூர்ணா முதலாளி தவறாக பேசிட்டேன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றாராம் அப்படியே இருக்கட்டும் அதை படம்பிடித்து பொதுவெளியில் காட்டி எங்கள் எதிர்த்தால் இதுதான் கதி என எச்சரிக்கை விடுகிறீரகளா.. களம் தவறாக தேர்வு செய்துவிட்டீர்.. வட மாநிலம் அல்ல இது தமிழ்நாடு..
இன்று உலகமே உங்களின் செயலைக் கண்டது . உங்களின் தனி நிறத்தை மக்கள் அடையாளம் கண்டார்கள்.. தமிழகத்தில் கேள்வி கேட்கிற மன உறுதியை திராவிடம் விதைத்திருக்கறது ..
..
1892ல் விக்டரி மஹாலில் ஆங்கிலேயர் ஆட்சிக்கு பரிநதுரைப்பதற்காக நடந்த கூடடத்தால் தஞ்சை ராமசாமி அய்யங்காரிடம் கேள்வி கேட்ட அறிவும் அனுபவமும் உண்டு..  ஆனால் எளியவரின் தலையை வெட்டி சந்தையில் வைக்கும் பழைய அகங்காரச் சிந்தனைதான் 
இன்னும் தொடர்கிறது..ஆனால் அதிகாரம் கை விட்டுப்போனால் மன்னிப்பு என்கிற ஆயுதம் இருக்கிறது.. 
வல்லவனுக்காக வளைந்து கொடுக்க முடிகிற உங்களால் சிறு தொழில் முனைவோரின் குரலுக்கு செவி சாய்க்க மனமில்லை..
..
அன்னபூர்ணா "அதிபர்" ஆர்எஸ்எஸ்காரராம் இருக்கட்டும் பாதிக்கபடுகிறவன் பின்னால் நிற்பதும் குரல் கொடுப்பதைதான் எங்கள் பெருஙகிழவன் செய்தது, செய்ய பழக்கியது.. மாண்பமை அமைச்சர் அவர்களுக்கு தெரிந்தோ அல்லது தெரியாமல் நடந்திருத்தாலும்
வருத்தம் தெரிவிப்பதுதான் சரி ..
..
பாசிசத்தின் பற்கள் கொடூரமானது என்பதற்கு மற்றொரு அடையாளம் மன்னிப்பு கேட்கும் காணொளி
..
ஆலஞ்சியார்
என்ன நடக்கிறது .. 
94 வயதுவரை கிழவன் ஊட்டிய அறிவும் அவனின் உழைப்பும் வீணாகிவிடுமோ என அச்சப்பட வைக்கிறது .. கலைஞர் எனும் மகத்தான தலைவன் செதுக்கிய கொள்கைவிளக்க கோட்பாடு, செயல்கள் விவர போதாமைகளால் என்னாகுமோ என கவலை வருகிறது..
..
அரசுப் பள்ளியில் அறிவிற்கொவ்வாத செயல்கள் எப்படி அரங்கேறுகின்றன.. மெல்ல மெல்ல சிதைக்கும் வேலைகளின் பின்னில் யாரெல்லாம் இருக்கிறார்கள்.. அரசு அதிகாரிகள் யாருக்காக வேலை செய்கிறார்கள்.. இளம் மாணவர்களை மூளைச்சலவை செய்கிற செயல்களுக்கு யார் அனுமதி தந்தது.. அமைச்சருக்கு  தெரியாமல் தான் நடக்கிறதா.. எல்லாவற்றையும் முதலமைச்சர் பார்த்துதான் "திருத்த" வேண்டுமா.. உங்கள் உள் அரசியலில் கால்கள் வழுவிலக்காமல் அதில் கவனம் செலுத்துகின்ற நீங்கள் கொள்கை உறுதியோடு தன் துறை சார்ந்த விடயங்களில் அதிகம் கவனம் செலுத்த வேண்டாமா..
..
மாண்பமை அன்பில் மகேஷ் அவர்களே ..
Anbil Mahesh Poyyamozhi  உங்கள் தாத்தாவும் அப்பனும் சிந்திய வியர்வை துளிகள் கொள்கை கோட்பாட்டின் உறுதி,   கட்டுகோப்பாய் வழிநடத்திய பேராற்றல் இவையெல்லாம் கண்டு படித்தவர் உங்கள் செயல்களில் சரிவு வராமல் பார்த்துக் கொள்ளுங்கள்.. புனைவு கதைகளை அறிவு ஏற்காதவற்றை பள்ளி மாணவர்களிடத்தில் 
திணிக்கிறார்கள் .. பள்ளிக்கல்வித்துறையில் திராவிட சிந்தாந்தவாதிகளை, அறிவாளிகள் திமுக அனுதாபிகளை அழைக்க கூடாதென்பதை உறுதியாகவும்  ஆன்மீகம் என்ற பெயரில் அறிவை மழுங்கடிக்கும் சொற்பொழிவாளர்களை அதிகம் அனுமதிக்கிறார்களோ என்ற அச்சம் ஏற்படுகிறது இதில் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள் 
..
மகாவிஷ்ணு போன்ற அறிவிலிகளைப் பற்றி பேச வேண்டியதில்லை.. நிறைய மகாவிஷ்ணுகளை தயார் படுத்தி வைத்திருக்கிறார்கள்.. மந்திரத்தால் நெருப்பு மழை பெய்யும் என்றவனை அங்கேயே கேள்வி கேட்க சாமானியர்கள் நிறைய வருவார்கள்,அச்சம் தவிர்த்து அறிவுசார்ந்த கருத்துக்களை சொல்லிக் கொண்டே இருப்பார்கள்.. ஆனாலும் துறை ரீதியான கடும் உத்தரவுகளும்,  கண்காணிப்பும் வழிகாட்டும் நெறிமுறைகளும் அவசிய தேவையாகிறது.. அறிஞர்கள் முற்போக்காளர்கள் பண்பாளர்களைக் கொண்டு இளம்தலைமுறையினரிடம் குறிப்பாக பதின் பருவத்தினரிடம் நல்ல கருத்துகளை அறிவார்ந்த விடயங்களை அறிவியல் தெளிவுகளை விளக்க வேண்டிய பெரும் பொறுப்பு இருக்கிறது.. 
..
பெருங்கிழவனும் பேராசானும் முத்தமிழறிஞரும் செதுக்கிய தமிழ்நாட்டை சிதிலமடையாமல் காக்கும் பொறுப்பு இருக்கிறது.. பதவி பகட்டிற்கில்லை.. நெஞ்சுரத்தோடும் நேர்மையோடும் கொள்கை தெளிவோடும்செயல்படுவதற்கு.. 
தங்களின் நடவடிக்கைகள் சமாதானபடுத்துகிறது.. திருப்திபடுத்த வேண்டும்..
..
சொல்ல இரண்டிருக்கிறது

ஒன்று:

கண்மூடி மௌனம் காத்தவர்கள் மத்தியில் அறிவுக்கண்ணை திறந்த ஆசிரியர் சங்கர் அவர்களுக்கு நன்றி!.. 
..
இரண்டாவது
20.08.1970 விடுதலையில் அய்யா எழுதியதை நினைவூட்டுகிறேன் 
"பள்ளிக்கூடத்தில் சிறிது நேரம் ஒதுக்கி பகுத்தறிவை சொல்லித் தர வேண்டும்"..
..
ஆலஞ்சியார்

Friday, September 6, 2024



  " அரசியல்வாதிகள் இடையில் மறைந்து விடலாம் ;ஆனால், எழுத்தாளராக- மனிதத் தன்மையுள்ளவராக- இருக்கும் முதல்வர்
மு.கருணாநிதி அவர்கள் என்ன நேர்ந்தாலும் சரித்திரத்திலிருந்து மறைய மாட்டார்கள்.

  தமிழ் உணர்ச்சிகளின் எழுச்சி உருவாய் 
மு.கருணாநிதி அவர்கள் இருக்கிறார்கள். அதே நேரத்தில் பொறுப்புகள் வரும்போது மிகவும் நேர்த்தியோடு உணர்ச்சிகளுக்கு இடம் கொடாமல் நாட்டு நலன் பேணி காத்து வருகிறார்.

  இத்தகைய அருமையான இலக்கிய ஆற்றலுக்கும் அருஞ் செயலுக்குமாகத்தான் அண்ணாமலை பல்கலைக்கழக கழகம்  அவர்களுக்கு டாக்டர் பட்டம் தந்து சிறப்பித்திருக்கிறது.

    -தமிழக ஆளுநர் மேதகு கே.கே. ஷா.

Saturday, August 17, 2024

கலைஞர் நாணயம்.. 
நா நயத்தோடு சிலம்பமாடிய
தலைவனுக்கு 
இந்திய ஒன்றியம் நாணயத்தை வழங்கி சிறப்பிக்கிறது..
ஒரு தலைவன் எப்படி இருக்க வேண்டும் ஒரு ஆட்சியாளன் எப்படி செயல்பட வேண்டுமென வாழ்வின் இறுதிவரை எப்படி போராட வேண்டுமென போதித்த பெருந்தலைவன்.. 
..
அரசியலில் பொதுவாழ்வில் புதிய இலக்கணம் படைத்து புதிதாய் வருவோருக்கு பாடமாய் அமைந்து வரலாறாய் திகழும் மகத்தான மனிதன்.. எதிரிக்கும் பகைமை கொண்டு அலைந்தோர்க்கும் சேர்த்தே உழைத்தவன்.. சிலரின் வசைகளும் திசைமாறி சென்ற பறவைகளின் எச்சங்களும் இவனை அசிங்கபடுத்த நினைத்து அவமானப்பட்டு நின்றதை காலம் நமக்கு கணக்கிட்டு காட்டியது ..  இறந்து கிடந்தபோதும் கூர்வாளோடு திரிந்த பாசிசத்தை வென்றவன்.. 
..
தமிழ்நாடு கண்ட சிறந்த தலைவர்களில் "தகைசால்" தலைவன்.. 
பகையும் அஞ்சியது 
இவன் படையோட்டம் கண்டு 
புயலாய் தென்றலாய் 
ரீங்காரமிடும் குயிலாய் 
தேன்மதுரத் தமிழில் இவன் பாடியது கண்டு ஆடியது தமிழர் கூட்டம்..
பகை மறந்து ஆடிவரும் உண்டு.. 
பஞ்சமாபாதகனும் இவன் 
மகுடிக்கு மயங்கியதுண்டு..
..
பொதுவாழ்வில் இவன் ஆட்டம் கண்டு
பதறியது எதிரிகள் கூடாரம்
எந்த கல்லூரியில் படித்தான் ராமன் என்ற வீச்சில் விழுந்தது  மொத்தமும் ..
நேர் நின்றால் மயங்கிவிடுவேன்  என பாதை மாற்றியவர்கள் உண்டு 
இந்த வசீகரனை கண்டு..

பசித்தவன், பாமரன், நடுங்கியவன் ,
நாதியற்றவன், நசுக்கப்பட்டவன்,
நிலை உயர நா நயத்தோடும் நாணயத்தோடும் (honest) உழைத்தவனுக்கு இந்திய ஒன்றியம் நன்றிக்கடன் செலுத்துகிறது..
#கலைஞர்நாணயம்
#தமிழ்வெல்லும்
..
ஆலஞ்சியார்
நான்..
யார் என்பதை 
நான் தான் சொல்ல வேண்டும் 
ஊர் சொல்ல தொடங்கும் போது
அழ நேரிடும்
..
என் உயரம் எனக்கு தெரிய வேண்டும்.. 
இல்லையெனில் 
வீழ்ச்சி தொடங்கும் ..
படைவீரர்களின் கால் நரம்பை துண்டித்துவிட்டு 
"ராஜா" படையோட்டம் நடத்த முடியாது..
கூட இருந்தவர்களை ஒவ்வொன்றாய் இழந்தால் 
பலவீனப்படும்
..
குறைகள் இல்லா எதுவுமில்லை 
குறைகளை உணராதவன் 
உயர்வதில்லை 
அகந்தையும் கர்வமும் 
அழிவின் தொடக்கம்..
நீ.. 
யாரென்று நீதான் தீர்மானிக்க வேண்டும்
..
ஓடும் பாதை மட்டுமே 
கண்ணில் தெரிந்தால் 
வெற்றி எளிதாகும் 
கூட 
ஓடுகிறவனை 
பார்த்துக்கொண்டே இருந்தால் பயம் வரும்.. 
தோல்வி வரும்
நடுக்கம் வரும்..

..
அடுத்தவன் திமிரில் 
முறுக்கி திரிந்தால் 
கால் நடுங்கதான்  செய்யும் 
உன் பலமறிந்து விளையாடினால் 
"பக்கபலம்" தானாய் வரும்..
நான் யாரென்பதை 
நான் தான் தீர்மானிக்க வேண்டும்..
..
நான் யார் என்பதை 
நானே முடிவு செய்து
என்
பலமறிந்து விளையாடினால் 
ஜெயிக்கிறனோ,இல்லையோ 
ரசிக்கும்படியாக இருக்கும்..
நீயே 
ரசிக்கும்படியாக இருக்கும்
..
சூழ்ச்சிகள் புத்திசாலித்தனமில்லை 
அழுகை வீரமில்லை..
அகந்தை வாழ்வதில்லை
அடக்கம் தாழ்வதில்லை 
அன்பு  வீழ்வதில்லை 
நீ..
யாரென்று..
..
அது சரி நான் யார்..?
காலம் சொல்லும்
..
ஆலஞ்சியார் 

 


Tuesday, August 6, 2024

கலைஞர்..
என்பதாண்டு பொதுவாழ்வு..
கண்டு மிரண்டவனும் 
கண்டு படித்தவனும் உண்டு..
இவரை நினைக்காமல் 
இங்கே..
எவனுக்கும் அரசியல் இல்லை 
எதிர்த்தோ அருகாமையில் அமர்ந்தோ 
ஆரத்தழுவியோ தான் அரசியல் செய்யமுடியும்..
..
இவன் ஆடியதுதான் அரசியல் 
எவரை எங்கே நிறுத்தவேண்டும்
என்றறிந்த சூத்திரதாரி..
பகைவனுக்கும் அருளிய பேருபகாரி..
துரோகிக்கும் வாழ்வளித்த பெருந்தனக்காரன்..
அரசியலில் அறம் வளர்த்த ஞானபண்டிதன்.. 
சொல்லும் எழுத்தும் சுவைமாறாமல் எதிரியை வீழ்த்தும் 
பகைவரும் இவன் சொல்லில் மயங்கி நிற்பர்..
..
இவன் தொட்டதும் இட்டதும் தான் அரசியலின் அடிப்படை இலக்கணம்..
இவனை படிக்காமல்  இங்கே யாருக்கும் வாழ்வில்லை ..
பழக இனியவன் 
பழிதீர்க்காத பெருமைக்குரியவன் 
பக்கத்தில் போனால் போதும் மயங்கி நிற்பர் 
..
இயலாதோர்க்கும் இல்லாதோர்க்கும் எளியவர்க்கும் 
வெறுக்கபட்டவர்களுக்கும் 
வழி தெரியாதோர்க்கும் 
ஒளியேற்றிய கதிரவன்..
இவன் சொல் தமிழ்நாட்டு அரசியலதிகாரம்
இவன் செயல் தமிழ்நாட்டை வடிவமைத்தது
..
பள்ளத்தில் கிடத்தவனை 
படிகளில் ஏற்றியவன் ..
ஒடுக்கபட்டவனின் குரலாய் ஒலித்தவன் 
கல்லாமை எனும் இருளகற்றி
படி.. எல்லாம் வருமென்றவன் 
படிப்பே  வராதென்றவன் முன் 
உயரத்திற்கு வா.. 
உலகம் அண்ணாந்து பார்க்கும் என வழி திறந்தவன்..
பெண்கள் படித்தால் பாவமென்ற 
சாஸ்திரப் புரட்டை உடைத்து 
கற்க வா எல்லாம் தருகிறேன் உயர்கல்வி வரை கட்டணமில்லை என்றவன் 
..
இந்திய ஒன்றியம் இப்போது செயல்படுத்தலாமா என எண்ணுவதை  முப்பதாண்டுகளுக்கு முன்பு நடப்பிலாக்கி தமிழகத்தை தலைநிமிர செய்தவன் .. 
பொதுவாழ்வில் 
வீணர்களில் சூழ்ச்சியை வீழ்த்தி அறம் காத்த பெருவுடைச்சோழன் 
14 வயது முதல் 94 வயது வரை விடாமல் துரத்திய பாசிசவாதிகளை நெருங்கவிடாத நெருப்பாய் ஜொலித்தவன்  ..
..
உயர்நோக்கு, நற்சிந்தனை இனமானம்,மொழிப்பற்று 
ஓயாத உழைப்பு 
எதிரியை ஆடவிட்டு ரசிக்கும் பாங்கு 
எதிர்கருத்திற்கும் மதித்து ஜனநாயக விளிம்புகளில் நின்று அரசியலை போதித்த பேராசான்..
பகைமை பாராட்டியவனையும் 
புறமிருந்து குத்தியவனையும் 
மன்னித்தருளிய மானுடம்..
இவனைப் போலொருவன் பிறப்பதறிது..
..
இவன் வாழ்ந்த காலத்தில்  வாழ்ந்தோம்  
இவன் சுவாசித்த காற்றை நுகர்ந்தோம்..
என்பதே பெரும்பேறு..
எழுதி எழுதி தீர்த்தாலும் பட்டகடன் தீராது தலைவா..
இன்று நிம்மதியாய் தமிழகம் இருக்கிறது ..
பாசிசத்தின் கோரதாண்டவம் ஒன்றியத்தை கடித்து குதறும்போதும் 
நிம்மதியாய் தமிழ்நாடு..
சாதி மத ஓலமின்றி அன்பொழுக அரவணைத்து செல்கிறது .
எல்லாம் நீ போட்ட பாதை தான்
நீ செப்பனிட்டது தான்
என்றும் நன்றியோடு ..
..
ஆலஞ்சியார் 
செம்மொழித் தமிழ்ப் பண்பாட்டுக் கூடல்
கலைஞர்..
என்பதாண்டு பொதுவாழ்வு..
கண்டு மிரண்டவனும் 
கண்டு படித்தவனும் உண்டு..
இவரை நினைக்காமல் 
இங்கே..
எவனுக்கும் அரசியல் இல்லை 
எதிர்த்தோ அருகாமையில் அமர்ந்தோ 
ஆரத்தழுவியோ தான் அரசியல் செய்யமுடியும்..
..
இவன் ஆடியதுதான் அரசியல் 
எவரை எங்கே நிறுத்தவேண்டும்
என்றறிந்த சூத்திரதாரி..
பகைவனுக்கும் அருளிய பேருபகாரி..
துரோகிக்கும் வாழ்வளித்த பெருந்தனக்காரன்..
அரசியலில் அறம் வளர்த்த ஞானபண்டிதன்.. 
சொல்லும் எழுத்தும் சுவைமாறாமல் எதிரியை வீழ்த்தும் 
பகைவரும் இவன் சொல்லில் மயங்கி நிற்பர்..
..
இவன் தொட்டதும் இட்டதும் தான் அரசியலின் அடிப்படை இலக்கணம்..
இவனை படிக்காமல்  இங்கே யாருக்கும் வாழ்வில்லை ..
பழக இனியவன் 
பழிதீர்க்காத பெருமைக்குரியவன் 
பக்கத்தில் போனால் போதும் மயங்கி நிற்பர் 
..
இயலாதோர்க்கும் இல்லாதோர்க்கும் எளியவர்க்கும் 
வெறுக்கபட்டவர்களுக்கும் 
வழி தெரியாதோர்க்கும் 
ஒளியேற்றிய கதிரவன்..
இவன் சொல் தமிழ்நாட்டு அரசியலதிகாரம்
இவன் செயல் தமிழ்நாட்டை வடிவமைத்தது
..
பள்ளத்தில் கிடத்தவனை 
படிகளில் ஏற்றியவன் ..
ஒடுக்கபட்டவனின் குரலாய் ஒலித்தவன் 
கல்லாமை எனும் இருளகற்றி
படி.. எல்லாம் வருமென்றவன் 
படிப்பே  வராதென்றவன் முன் 
உயரத்திற்கு வா.. 
உலகம் அண்ணாந்து பார்க்கும் என வழி திறந்தவன்..
பெண்கள் படித்தால் பாவமென்ற 
சாஸ்திரப் புரட்டை உடைத்து 
கற்க வா எல்லாம் தருகிறேன் உயர்கல்வி வரை கட்டணமில்லை என்றவன் 
..
இந்திய ஒன்றியம் இப்போது செயல்படுத்தலாமா என எண்ணுவதை  முப்பதாண்டுகளுக்கு முன்பு நடப்பிலாக்கி தமிழகத்தை தலைநிமிர செய்தவன் .. 
பொதுவாழ்வில் 
வீணர்களில் சூழ்ச்சியை வீழ்த்தி அறம் காத்த பெருவுடைச்சோழன் 
14 வயது முதல் 94 வயது வரை விடாமல் துரத்திய பாசிசவாதிகளை நெருங்கவிடாத நெருப்பாய் ஜொலித்தவன்  ..
..
உயர்நோக்கு, நற்சிந்தனை இனமானம்,மொழிப்பற்று 
ஓயாத உழைப்பு 
எதிரியை ஆடவிட்டு ரசிக்கும் பாங்கு 
எதிர்கருத்திற்கும் மதித்து ஜனநாயக விளிம்புகளில் நின்று அரசியலை போதித்த பேராசான்..
பகைமை பாராட்டியவனையும் 
புறமிருந்து குத்தியவனையும் 
மன்னித்தருளிய மானுடம்..
இவனைப் போலொருவன் பிறப்பதறிது..
..
இவன் வாழ்ந்த காலத்தில்  வாழ்ந்தோம்  
இவன் சுவாசித்த காற்றை நுகர்ந்தோம்..
என்பதே பெரும்பேறு..
எழுதி எழுதி தீர்த்தாலும் பட்டகடன் தீராது தலைவா..
இன்று நிம்மதியாய் தமிழகம் இருக்கிறது ..
பாசிசத்தின் கோரதாண்டவம் ஒன்றியத்தை கடித்து குதறும்போதும் 
நிம்மதியாய் தமிழ்நாடு..
சாதி மத ஓலமின்றி அன்பொழுக அரவணைத்து செல்கிறது .
எல்லாம் நீ போட்ட பாதை தான்
நீ செப்பனிட்டது தான்
என்றும் நன்றியோடு ..
..
ஆலஞ்சியார் 
செம்மொழித் தமிழ்ப் பண்பாட்டுக் கூடல்

Thursday, August 1, 2024

ஆந்திரம் இஸ்லாமியர்களுக்கு 5% விழுக்காடு தந்தது உச்சநீதிமன்றம் செல்லாது என்றது.. தமிழ்நாடு இஸ்லாமியர்களுக்கு 3.5% விழுக்காடு தந்தது உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டது..  அதிமுக வன்னியர்களுக்கு 10.5% விழுக்காடு உள் ஒதுக்கீடு தந்தது உச்சநீதிமன்றம் ரத்து செய்தது.. அருந்ததியர்களுக்கு 3% உள்விழுக்காடு திமுக தந்தது உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டதோடு மட்டுமல்லாமல் பிற மாநிலங்களும் பின்பற்றலாம் என தீர்ப்பை தந்திருக்கிறது.. பீகாரில் இட ஒதுக்கீட்டை 65%ஆக உயர்த்தியதை ரத்து செய்தது.. 
..
காரணம் திராவிடம் எதையும் சரியாக அலசி ஆராய்ந்து சட்டத்தின் நிறை குறைகளை ஆய்ந்து எதுவெல்லாம் சட்டத்திற்கு உட்படும் என்ற தெரிந்து வரையறுத்து சட்டவடிவை தயாராக செய்து சம்பந்தபட்ட துறையின் அனுமதியைப் பெற்று சடட்மியற்றும் அதனால் தான் கலைஞர் கொணடு வந்த சட்டங்கள் செல்லுபடியாகின்றன.. ஏனோதானோ என்று எடுத்தேன் கவிழ்த்தேன் என செயல்பட்டால் அதிமுக அவசரகதியில் கொணடுவந்த "நாடக ஒதுக்கீடு" போல் ரத்து செய்ய நேரிடும்..
..
ஆந்திராவில் 5% விழுக்காடு ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதற்கு இதுதான் காரணம் ஆனால் தமிழ்நாட்டில் கலைஞர் முஸ்லிம்களுக்கு தந்தபோது சிறுபான்மையினர் இஸ்லாமிய கிருஸ்துவ,ஜெயின் சமூகத்தை இணைத்து பிற்படுத்தப்பட்ட நலத்துறைக்கு பரிந்துரைக்கு அனுப்பி 8%விழுக்காடு வரை தரலாம் என்ற பரிந்துரையை பிற்படுத்தப்பட்ட நலத்துறை வழங்க இஸ்லாமியர்களுக்கு 3.5% கிருஸ்துவர்களுக்கு 3.5% ஜெயின் சமுகத்திற்கு 0.5% என ஒதுக்கினார் உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டதோடு மட்டுமல்லாமல் வியந்தது .. OBCஇட ஒத்க்கீட்டில் வன்னியர்களோடு இன்னும் 19 பிரிவினரை சேர்த்து வழங்கிய போது நீதிமன்றம் ஏற்றுக்கொண்டதை கவனிக்க வேண்டும் 13%முதல்15.5% வரை வன்னியர்கள் பயனடைந்தார்கள்..
எதையும் ஆய்ந்தறிந்து திறம்பட செய்வதில் கலைஞரை மிஞ்சிய எவரும் இல்லை.. அதனால் அவர் தொட்டதெல்லாம் வென்று நிற்கிறது .. எந்தவொரு  சமூகத்திற்கு தரும் இட ஒதுக்கீடாக இருந்தாலும் முதலில் எதிர்ப்பது பாஜக தான் நேரடியாகவே மறைமுகமாகவோ அதை எதிர்ப்பார்கள் .. முஸ்லீம்கள் உள் ஒதுக்கீட்டிற்கு ஒப்பாரியே வைத்தார்கள் அருந்ததியர் இட ஒதுக்கீட்டிற்கு சிலரை தூண்டிவிட்டும் நேரடியாகவும் எதிர்த்தவர்கள் பாஜகவினர் ஆனால் இன்று "ஜெய்சிரிராம்" புகழ் முருகன் பிரதமர் சமூகநீதி காவலர் என சொல்கிறார் சொந்த புத்தியோ நன்றியுணர்வோ இல்லாதவர் தான் சார்ந்த அருந்ததியர் இனத்தின் விடியலுக்கு காரணியாக ஆனவர் கலைஞர் என்று தெரிந்தும் அதை மறைத்து தமிழ்நாடு தந்த உள் ஒதுக்கீடென கடந்து போகிறார் ..இவர் அதிகம் விரும்பும் "மீனாட்சியே" இதை கண்டு நகைப்பாள்..
..
தலையிலும் கையில் மலத்தை அள்ளும் இவர்களுக்கு உள்ஒதுக்கீட்டை தலையில் தூக்கி ஆடுகிறேன் பள்ளத்தில் கிடப்போரை படிகளில் ஏற்றிட தொடர்ந்து பாடுபடுவோம் "பகுத்தறிவு" துணைக்கொண்டு என்ற பேரருளாளன் கலைஞரை இந்த நேரத்தில் ஆதி தமிழர் அருந்ததியர் மட்டுமல்ல அனைவரும் கொண்டாட வேண்டும்.. எத்தனை உன்னதமான சிந்தனை செயல் தமிழர்கள் நலன் ஒன்றே குறிக்கோளாய் வாழ்ந்து ஒடுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட விளிம்புநிலை மக்களின் உயர்விற்கு காலமெல்லாம் உழைத்த உன்னத தலைவர் கலைஞர் ..
..
இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன்கண் விடல். என்ற குறளின் பொருளாய் விளங்கிய "பெருமானை" இந்த நேரத்தில் நினைவு கூர்வோம்.. 
..
வாழ்க! எம்மான் கலைஞர் 
வாழிய !! கலைஞர் புகழ் !!! ..
..
ஆலஞ்சியார்

Sunday, July 28, 2024

" தம்பி , ஆரியம், அனந்தாச்சாரியிடம் மட்டும் இல்லை, அம்பலவாண முதலியாரிடமும் இருக்கிறது; ஆதிசேஷ செட்டியாரிடமும் இருக்கிறது. நெய்யாடிவாக்கம் முதலியாரிடமும் இருக்கிறது. குன்னியூர் ஐயரிடமும் இருக்கிறது! விநாயகம் எடுத்துக் காட்டியபடி, உச்சிக் குடுமியும் பூணூலும் கூட ஆரியரிடம் மட்டுமல்லவே, படையாச்சிகளிடம் இருக்கிறது, நாயுடுகளிடம் இருக்கிறது; ஏன்  நாடார் சமூகத்தில் கூட பழமை விரும்பிகளிடம் இருந்திடக் காண்கிறோம். 

எனவேதான் ஆரியரை ஒழிப்பது என்பது நமது திட்டமாகாமல், ஆரியத்தை ஒழிப்பது நமது திட்டமாக இருக்கிறது. இதிலே நமக்குத் தெளிவும் நம்பிக்கையும் ஏற்படும் வகையில் பெரியார் அறிவுரை கூறியிருக்கிறார். நாம் அந்தப் பாதையில் செல்கிறோம்.
ஆரியம், ஆரியரிடம் மட்டுமல்ல, திராவிடரிடமும் புகுத்தப்பட்டிருக்கிறது; அதைப் புகுத்தி, பாதுகாத்துவரும் பணியில், ஆரியர், ஆரியக் கோலத்தில் இல்லாவிடினும்கூட ஈடுபடக் காண்கிறோம். எனவே, ஆரியம் களையப்படுவதற்கான அறிவுப் பிரச்சாரத்தைத் திறம்பட நடத்துவதுதான் முறையே தவிர அக்ரகாரத்தில் தீ மூட்டுவதல்ல என்று கூறுகிறோம்.

எனவே தம்பி! நாம் ஆரியத்தை, அறிவுச் சுடரால் அழித் தொழிக்க வேண்டும் - அந்த ஆரியம் அக்ரகாரத்தில் மட்டுமில்லை!

எட்டிப் போடா சூத்திரப் பயலே! - என்று ஐயர் பேச்சும் ஆரியம்தான்!

கிட்டே வராதே சேரிப் பயலே என்று பேசும் முதலியார் முடுக்கும் ஆரியம்தான்!

படையாச்சிக்கு இவ்வளவு உயர்வா? என்று கேட்கும் பேச்சும் ஆரியந்தான்!

மறவர் முன்பு மட்டு மரியாதையோடு நட! தேவர் வருகிறார், எழுந்து நில்! நாடார் அழைக்கிறார், ஓடிவா! செட்டியார் கேட்கிறார், தட்டாமல் கொடு! - என்று ஆரியம், பலப்பல முறைகளிலே தலைவிரித்தாடுகிறது, தம்பி, பல முறைகளில்

     -அறிஞர் அண்ணா ,( 9 - 10 - 1955 , திராவிடநாடு )